மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.5.10

கற்பனையால் வந்த கற்சிலையா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கற்பனையால் வந்த கற்சிலையா?

புகழ்பெற்ற பாடல்கள் - அதாவது இறைவனின் புகழைச் சொல்லும் பாடல்களின் வரிசையில் அடுத்த பாடலை இன்று பதிவாக இடுவதில் மகிழ்வு கொள்கிறேன்!
----------------------------------------------------------------------
கவிஞர் வாலி அவர்கள், திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைக்கும் முன்பாகப் பல பக்திப்பாடல்களை எழுதிப் பிரபலமானார். கருத்துக்களாலும், மனதைக் கிறங்கவைக்கும் சொல்லாடல்களாலும், அப்பாடல்கள்
காலத்தாலும் அழியாத பாடல்களாயின என்றால் அது மிகையல்ல!

உன்னைக் கற்பனை என்று கதைக்கட்டும் அல்லது கற்சிலை என்று உரைப்போர் உரைக்கட்டும், கந்தா, நீதான் என் தெய்வமடா, நான் நிற்பதும், நடப்பதும், இன்னபிற செயல்களும் உன் கருணையால்தான் என்று பாடிய
அவருடைய வரிகளை எப்படி மறக்க முடியும்?

அதை இன்று பதிவிடுகிறேன். படித்து மகிழுங்கள்.

’காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே’ என்று சொன்னார் பாருங்கள். அதுதான் இந்தப்பாடலின் முத்தாய்ப்பான வரியாகும்!
--------------------------------------------------------------------------------
பாடல்: கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
பாடலைப் பாடியவர்: டி எம் சௌந்தரராஜன்
பாடல் வரிகள்: கவிஞர் வாலி
ராகம்: ஹிந்தோளம்
தாளம்: ஆதி

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ

(கற்பனை)

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ

(கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

(கற்பனை)
-------------------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்வாழ்க வளமுடன்!

28 comments:

 1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  கவிஞர் வாலி அவர்கள் எழுதி,
  டி எம் சௌந்தரராஜன் அவர்கள்
  பாடிய,இறைவனின் புகழைச் சொல்லும்,

  "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
  கந்தனே உனை மறவேன் "
  இந்தப் பாடல் என்றும் மனதில் நிலத்து நிற்கும் பாடல்; இதனை நினைவூட்டிய

  தங்களுக்கு மிக்க நன்றி.

  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-05-29

  ReplyDelete
 2. Dear Sir

  Karpanai Endralum Karchilayendralum Kandhane Unai maravel...

  "KUMARAN Enrdal Azhagan Endru Tamil Mozhi Koorum..."--- Idhuvum Arumayana Varigal Sir...

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 3. ரெங்கராஜன் என்ற பெயருடன் திருஅரஙத்திலும் தஞ்சையிலும் உலாவியவர்
  கவிஞர் வாலி அவ்ர்கள்.ஒரு சமயத்தில் மக்க்ள் திலகத்தின் லட்சியப் பயண‌த்திற்கு வாலியின் கவிதை வரிகளே ஆதரவாக அமைந்தன.

  ReplyDelete
 4. ellorum eppadi irukindreergal (vaathiyaaraium serthu). holidayku ooruku sendru ....lightaga rest eduthuvitu vanden....

  ReplyDelete
 5. ////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  கவிஞர் வாலி அவர்கள் எழுதி, டி எம் சௌந்தரராஜன் அவர்கள் பாடிய,இறைவனின் புகழைச் சொல்லும்,
  "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
  கந்தனே உனை மறவேன் " இந்தப் பாடல் என்றும் மனதில் நிலத்து நிற்கும் பாடல்; இதனை நினைவூட்டிய
  தங்களுக்கு மிக்க நன்றி.
  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி/////

  நல்லது. எல்லாம் உங்களுக்காகத்தான் நண்பரே!

  ReplyDelete
 6. ////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Karpanai Endralum Karchilayendralum Kandhane Unai maravel.
  "KUMARAN Enrdal Azhagan Endru Tamil Mozhi Koorum..."--- Idhuvum Arumayana Varigal Sir...
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman//////

  இறைவனின் புகழைச் சொல்லும் தனிப்பாடல்கள் எல்லாமே எழுதப்பெற்ற பிறகு ஒலிவடிவம் பெற்றன. ஆகவே அனைத்துமே நன்றாக இருக்கும்!

  ReplyDelete
 7. /////kmr.krishnan said...
  ரெங்கராஜன் என்ற பெயருடன் திருஅரஙத்திலும் தஞ்சையிலும் உலாவியவர்
  கவிஞர் வாலி அவ்ர்கள்.ஒரு சமயத்தில் மக்க்ள் திலகத்தின் லட்சியப் பயண‌த்திற்கு வாலியின் கவிதை வரிகளே ஆதரவாக அமைந்தன.//////

  ”மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.....”
  ”நான் ஆனையிட்டால், அது நடந்துவிட்டால்.......” ஆகிய இரண்டு பாடல்களே போதும்!
  நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 8. ///Jack Sparrow said...
  ellorum eppadi irukindreergal (vaathiyaaraium serthu). holidayku ooruku sendru ....lightaga rest eduthuvitu vanden..../////

  நானும் லைட்டாக ரெஸ்ட் எடுத்துவிட்டு வரலாமா?:-)))))))

  ReplyDelete
 9. கவிஞர் வாலி எழுதி டி.எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு
  இசை அமைத்த இசை அமைப்பாளர் யாரோ அவரையும் நாம் மறக்காமல்
  பாராட்டியே ஆக வேண்டும் அய்யா(இசை அமைப்பாளர் பெயர்தெரியவில்லை)
  அரசு.

  ReplyDelete
 10. ayya vanakkam,

  intha padalukku isai amaiththu padalaium paadiathu thru T.M.S. avargalthan.endru sollikolgiren.

  ReplyDelete
 11. Ayya Vanakkam! Naan thangalin pudhiya maanavan! kadantha silavaarangalaaga thangalin vagupparai paadangalai padithuvarugiren(ithuvarai 130 paadangal) Paadangal thalikeezhaaga irupathaal mudhalil satru siramamaaga irunthathu! ippozhuthu pazhagi vittathu! Anaithum arputham! koodave Thiru Kooduthurayaarin vagai paduthappatta padangalai refer seithukolgiren!
  Vaigaasi visaagathil Aarupadai Muruganai azhagiya thamizhil kavingar vaaliyin paadalaal paamaalai sootiyathu poruthame! Nandri!

  ReplyDelete
 12. Naan tharpothu UAe Abu Dhabiyil irukkiren, ingu SAIBABA bakthargal silaridam classroom @ astrology patri eduthu solli padithuvittu nanbargal iruvar payanullathaaga paaraattinar! Yaan petra inbam peruga Ivvayagam! ezhutharivithavan Iraivanaavaan!

  ReplyDelete
 13. அருமையான பதிவு ஆசிரியரே,

  திரைபடத்திருக்கு முன்னாடி வாலி எழுதிய பக்தி பாடல்கள் அவரை பிரபலபட்திக்க இல்லை, அது தான் அவரை இந்த உலகிற்கு காட்டிய அடையாளம். கன்னதாசறை போல இவருக்கும் கடவுள் கொஞ்சம் வரம் தந்திருக்கலாமொனு தோணுது ஆசிரியரே :)))))
  இன்றைய பாடல் கேசட்டில கேட்டப்ப கடைசியாக முடிந்தது "காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே" அல்ல "கற்பனை என்றாலும் கர்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்
  கந்தனே உனை மறவேன் நான் கந்தனே உனை மறவேன்யென்ற" வரிகளே.

  ReplyDelete
 14. அண்ணா!!!

  சொன்னால் நம்ப மாட்டீர்கள்...என்னுடைய 11 வது வயதிலிருந்து 14 வயது வரை என்ன இந்த பாடல் தன் எழுப்பி விடும்....இன்றும் எனக்கு இந்த வரிகள் மனப்பாடமே...ம்ம்ம்ம்...அதெல்லாம் ஒரு காலம்...ஆனால் இது நாள் வரையில் இதை யார் எழுதியது என்று தெரியாது.....அது எனக்கு புது தகவல்...இது மட்டுமல்ல ..tm சௌந்தரராஜன் இந்த cassette முழுவதும் பாடி இருப்பார்....அதனை பாடல்களுமே எனக்கு பரிட்சயம்....என்ன செய்வது ,,,,,மாந்தி இருக்கும் இடத்தின் ராசிநாதன் திசை முடிவதற்குள் எங்கள் வீட்டில் தெய்வ படங்கள் அனைத்தையும் எடுக்க வைத்துவிட்டது....பெரிய கதை அண்ணா!!!!!!!!

  ReplyDelete
 15. /////ARASU said...
  கவிஞர் வாலி எழுதி டி.எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு
  இசை அமைத்த இசை அமைப்பாளர் யாரோ அவரையும் நாம் மறக்காமல்
  பாராட்டியே ஆக வேண்டும் அய்யா(இசை அமைப்பாளர் பெயர்தெரியவில்லை)
  அரசு.//////

  ஆமாம். அவரும் பாராட்டிற்கு உரியவரே! ஹி..ஹி...யாரென்று எனக்கும் தெரியவில்லை. நன்றி!

  ReplyDelete
 16. /////cs said...
  ayya vanakkam,
  intha padalukku isai amaiththu padalaium paadiathu thru T.M.S. avargalthan.endru sollikolgiren.////

  அப்படியா? உங்களுடைய தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 17. ///Sai Gokula Krishna said...
  Ayya Vanakkam! Naan thangalin pudhiya maanavan! kadantha silavaarangalaaga thangalin vagupparai paadangalai padithuvarugiren(ithuvarai 130 paadangal) Paadangal thalikeezhaaga irupathaal mudhalil satru siramamaaga irunthathu! ippozhuthu pazhagi vittathu! Anaithum arputham! koodave Thiru Kooduthurayaarin vagai paduthappatta padangalai refer seithukolgiren!
  Vaigaasi visaagathil Aarupadai Muruganai azhagiya thamizhil kavingar vaaliyin paadalaal paamaalai sootiyathu poruthame! Nandri!/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. ////Sai Gokula Krishna said...
  Naan tharpothu UAe Abu Dhabiyil irukkiren, ingu SAIBABA bakthargal silaridam classroom @ astrology patri eduthu solli padithuvittu nanbargal iruvar payanullathaaga paaraattinar! Yaan petra inbam peruga Ivvayagam! ezhutharivithavan Iraivanaavaan!/////

  அடடா, நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள். ஆனால் நான் சாதாரண வாத்தியார்தான் என்பதைப் பணிவடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

  ReplyDelete
 19. /////யமகண்டன் said...
  அருமையான பதிவு ஆசிரியரே,
  திரைபடத்திருக்கு முன்னாடி வாலி எழுதிய பக்தி பாடல்கள் அவரை பிரபலபட்திக்க இல்லை, அது தான் அவரை இந்த உலகிற்கு காட்டிய அடையாளம். கன்னதாசறை போல இவருக்கும் கடவுள் கொஞ்சம் வரம் தந்திருக்கலாமொனு தோணுது ஆசிரியரே :)))))
  இன்றைய பாடல் கேசட்டில கேட்டப்ப கடைசியாக முடிந்தது "காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே" அல்ல "கற்பனை என்றாலும் கர்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்
  கந்தனே உனை மறவேன் நான் கந்தனே உனை மறவேன்யென்ற" வரிகளே.///////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 20. /////Nattu said...
  அண்ணா!!!
  சொன்னால் நம்ப மாட்டீர்கள்...என்னுடைய 11 வது வயதிலிருந்து 14 வயது வரை என்ன இந்த பாடல் தன் எழுப்பி விடும்....இன்றும் எனக்கு இந்த வரிகள் மனப்பாடமே...ம்ம்ம்ம்...அதெல்லாம் ஒரு காலம்...ஆனால் இது நாள் வரையில் இதை யார் எழுதியது என்று தெரியாது.....அது எனக்கு புது தகவல்...இது மட்டுமல்ல ..tm சௌந்தரராஜன் இந்த cassette முழுவதும் பாடி இருப்பார்....அதனை பாடல்களுமே எனக்கு பரிட்சயம்....என்ன செய்வது ,,,,,மாந்தி இருக்கும் இடத்தின் ராசிநாதன் திசை முடிவதற்குள் எங்கள் வீட்டில் தெய்வ படங்கள் அனைத்தையும் எடுக்க வைத்துவிட்டது....பெரிய கதை அண்ணா!!!!!!!!/////

  11ஆம் அதிபதியின் இடத்து திசை வந்து மறுபடியும் அத்தனை படங்களையும் மீண்டும் மாட்டவைக்கும். கவலையை விடுங்கள்!

  ReplyDelete
 21. Panivum, vanakkamum, pirarai madhikkum gunamum entha gragham jaathagathil enge irunthaal enbatharkku oru padhivu podavum!
  nammidam irukkum panathai ellorukkum kodukka naam vallal illai! namakku therinthavatrai pirarukku solli kodukkavum manasirunthaalum thangalai pondra dedication vendum(Perumbalum neramiruppathilai, piragu paarkalaam enum sombal), akkarayodu bathilalikum paangu, perunthanmai -kku Nandri!
  vankathudan Gokulakrishnan

  ReplyDelete
 22. Azhgendra sollukku muruga!, Murugaa nee vara vendum, Ayyan muruganai kumbittu murayitta perukku, Murugaa endrazhaikavaa? muthukkumara endrazhaikavaa??, Mannaanaalum Thiruchendooril Mannaaven! kallaanaalum thanigai malayil kallaaven,kanthan kaladiyai vananginaal kadavular yavaraiyum vanaguthal pole!, kanthan thiru neeraninthaal kanda pini odi vidum ippadi Tamizh kadavul Muruganai padiyathil Muruga bakthar TMS padalgal,kural kalathaal nilaithu nirkum!

  ReplyDelete
 23. /////Sai Gokula Krishna said...
  Panivum, vanakkamum, pirarai madhikkum gunamum entha gragham jaathagathil enge irunthaal enbatharkku oru padhivu podavum!
  nammidam irukkum panathai ellorukkum kodukka naam vallal illai! namakku therinthavatrai pirarukku solli kodukkavum manasirunthaalum thangalai pondra dedication vendum(Perumbalum neramiruppathilai, piragu paarkalaam enum sombal), akkarayodu bathilalikum paangu, perunthanmai -kku Nandri!
  vankathudan Gokulakrishnan//////

  அது பலகிரகங்களின் கூட்டு முயற்சியால் ஏற்படுவது. நேரம் கிடைக்கும்போது அது பற்றி எழுதுகிறேன். நன்றி!

  ReplyDelete
 24. ////Sai Gokula Krishna said...
  Azhgendra sollukku muruga!, Murugaa nee vara vendum, Ayyan muruganai kumbittu murayitta perukku, Murugaa endrazhaikavaa? muthukkumara endrazhaikavaa??, Mannaanaalum Thiruchendooril Mannaaven! kallaanaalum thanigai malayil kallaaven,kanthan kaladiyai vananginaal kadavular yavaraiyum vanaguthal pole!, kanthan thiru neeraninthaal kanda pini odi vidum ippadi Tamizh kadavul Muruganai padiyathil Muruga bakthar TMS padalgal,kural kalathaal nilaithu nirkum!/////

  அதை சந்தேகமில்லை! அவர் பாடல்கள் மனதை அள்ளும் தனித்தன்மை வாய்ந்தது!

  ReplyDelete
 25. சாய் கோகுலகிருஷ்ணாவுக்கு! வகுப்பு அறை முகப்புப் பக்கத்தில் வலது பக்கக் கடைசியில் "தமிழ் எழுதி" என்ற சுட்டி உள்ளது. அதனை அழுத்தினால் http://tamileditor.org
  திற‌க்கும். அதில் உள்ள‌ க‌ட்ட‌த்தில் தாங்கள் இப்போது த‌மிழை ஆங்கில‌த்தில் transliterate ப‌ண்ணி எழுதுவது போல‌வே எழுதினால் அது தமிழிலேயே எழுத‌ப்ப‌டும். அதனை செலெக்ட் செய்து காப்பி செய்து கொண்டு,பேக் ப‌ட்ட‌னை அழுத்தி மீண்டும் வ‌குப்ப‌றை முக‌ப்புக்குச் சென்று"போஸ்ட் கமெ‌ன்ட்"ஐ அழுத்தி த‌ற்போது க‌மென்ட் எழுதும் வ‌ழ‌க்க‌ப்ப‌டி
  அத‌ற்குரிய‌ ‌kaட்ட‌த்தில் "பேஸ்ட்"செய்யுங்க‌ள்.
  அப்புற‌‌ம் பிர‌சுரிக்க‌ச் சொன்னால்
  த‌மிழிலேயே உங்க‌ள் பின்னூட்டம் வெளியாகும்.

  ReplyDelete
 26. ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.
  க‌விஞர் வாலி அவர்களின் இந்த பக்திப் பாடலுக்கு இசை அமைத்ததும் பாடலைப் பாடியதும் டி.எம்.எஸ் அவர்களே என்னும் தகவல்,இது வரை
  தெரியாமல் இருந்துள்ளேன் அய்யா. இதை அறியச் செய்த தஙகளுக்கும்
  நண்பர் சிஎஸ் அவர்களுக்கும் நன்றி அய்யா.
  அரசு

  ReplyDelete
 27. ////kmr.krishnan said...
  சாய் கோகுலகிருஷ்ணாவுக்கு! வகுப்பு அறை முகப்புப் பக்கத்தில் வலது பக்கக் கடைசியில் "தமிழ் எழுதி" என்ற சுட்டி உள்ளது. அதனை அழுத்தினால் http://tamileditor.org
  திற‌க்கும். அதில் உள்ள‌ க‌ட்ட‌த்தில் தாங்கள் இப்போது த‌மிழை ஆங்கில‌த்தில் transliterate ப‌ண்ணி எழுதுவது போல‌வே எழுதினால் அது தமிழிலேயே எழுத‌ப்ப‌டும். அதனை செலெக்ட் செய்து காப்பி செய்து கொண்டு,பேக் ப‌ட்ட‌னை அழுத்தி மீண்டும் வ‌குப்ப‌றை முக‌ப்புக்குச் சென்று"போஸ்ட் கமெ‌ன்ட்"ஐ அழுத்தி த‌ற்போது க‌மென்ட் எழுதும் வ‌ழ‌க்க‌ப்ப‌டி
  அத‌ற்குரிய‌ ‌kaட்ட‌த்தில் "பேஸ்ட்"செய்யுங்க‌ள்.
  அப்புற‌‌ம் பிர‌சுரிக்க‌ச் சொன்னால்
  த‌மிழிலேயே உங்க‌ள் பின்னூட்டம் வெளியாகும்./////

  நன்றி சார். உங்கள் அறிவிப்பை முகப்பில் நிரந்தரமாக ஒட்டிவிட்டேன். பலருக்கும் உதவட்டும் அது!

  ReplyDelete
 28. ////ARASU said...
  ஆசிரியர் அய்யாவுக்கு வணக்கம்.
  க‌விஞர் வாலி அவர்களின் இந்த பக்திப் பாடலுக்கு இசை அமைத்ததும் பாடலைப் பாடியதும் டி.எம்.எஸ் அவர்களே என்னும் தகவல்,இது வரை தெரியாமல் இருந்துள்ளேன் அய்யா. இதை அறியச் செய்த தஙகளுக்கும்
  நண்பர் சிஎஸ் அவர்களுக்கும் நன்றி அய்யா.
  அரசு////

  நல்லது. நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com