மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.5.10

விஸ்வநாதா வேலை வேண்டும்!

-----------------------------------------------------------------------------
விஸ்வநாதா வேலை வேண்டும்!

House of Profession
தலைப்பு - பத்தாம் வீடு!

ஜோதிடத்தின் முக்கியமான பகுதி இதுதான். அதுபோல கடினமான பகுதியும் இதுதான்.

பத்தாம் வீடு, ஒருவரின் ஜாதகத்தில், ஜாதகர் தன் வாழ்க்கையில் செய்ய இருக்கும் தொழிலை அல்லது வேலையைக் குறிப்பிடுவதாகும். அந்த இடத்தை, அதன் இயற்கைத் தன்மையை, அதன் அதிபதியை, அவர் சென்று அமர்ந்திருக்கும் இடத்தை, அந்த இடம் பெருகின்ற பார்வைகளை, அந்த அதிபர் பெறும்
பார்வைகளை, அந்த இடத்தில் வந்தமரும் கிரகங்களை, அதிபருடன் சேர்கின்ற அல்லது கூட்டணி போடுகின்ற கிரகங்களை, அதேபோல கர்மகாரன் சனீஷ்வரனின் நிலைமை ஆகியவற்றைப் பொறுமையாக அலசுவதன் மூலம் ஒருவரின் ஜீவனத்திற்கான வழியை அறியலாம். இதில் அஷ்டகவர்க்கம் பெரும் உதவியாக இருக்கும்.

முதலில் ஒருவனுக்கு வேலை உண்டா இல்லையா அல்லது தொழில் செய்வானா என்று பார்ப்பதற்கும், அல்லது தொழில் ஸ்தானம் முழுமையாகக் கெட்டிருந்தால் வேலை வெட்டிக்குப் போகாமல் ஊரைச் சுறிவிட்டு வந்து வீட்டில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கும் சுகவாசியாக இருப்பானா என்று பார்ப்பதற்கு இந்த வீடு உதவி செய்யும். உத்தியோகத்தில் அல்லது வேலையில் எந்த அளவிற்கு ஒருவன் உயர்வான் என்று பார்ப்பதற்கும், எந்த வயதில் உயர்வான் என்று பார்ப்பதற்கும் இது உதவும். எந்த தசா புத்தி காலத்தில் மேன்மை அடைவான் அல்லது கீழே விழுவான் என்று பார்ப்பதற்கும் உதவும்.

இந்த ஜோதிடக் கலையை நிர்மானித்த முனிவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த வேலை வாய்ப்புக்களும், தொழில்களும் மிகச் சிலவே. பின்னாட்களில் வந்த ஜோதிட மேதைகள் தங்கள் அனுபவத்தால் எழுதி வைத்து விட்டுப்போன ஏராளமான குறிப்புக்களும் உள்ளன. அவை அனைத்தையும் ஒருவன் கற்றுத் தேர்ந்திருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் உள்ள வேலை வாய்ப்புக்களை வைத்து ஒரு குறிப்பிட்ட வேலையை, ஜாதகனுக்காகச் சொல்வது இயலாது.

ரயில்வேயில் வேலை கிடைக்கும் என்று ஒருவனுக்கு எப்படிச் சொல்ல முடியும்? அல்லது நீ கனரக வாகனம் ஓட்டும் வேலைக்குச் செல்வாய் என்று எப்படிச் சொல்ல முடியும்? அரசு வேலை என்று சொல்லலாம். அவ்வளவுதான் அரசுத்துறையில், ஆயிரம் வேலைகள் உள்ளன!.

உடல் உழைப்பு வேலை என்று சொல்லலாம். உடல் உழைப்பிலும் ஆயிரக்கணக்கான வேலைகள் உள்ளன.

நீ வியாபாரம் செய்து பொருள் ஈட்டுவாய் என்று சொல்லலாம். எந்த வியாபாரம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

மருத்துவத் துறையில் வெற்றி பெறுவாய் என்று சொல்லாம். மருத்துவத் துறையில்தான் எத்தனை பிரிவுகள் உள்ளன? டாக்டரும் மருத்துவத் துறைதான், மருந்து உற்பத்தி செய்பவரும் மருத்துவத் துறைதான், மருத்துவமனை வைத்திருப்பவரும், மருந்துக் கம்பெனி விற்பனைப் பிரநிதியும் மருத்துவத் துறைதான்.

கலைத்துறையில் எத்தனை பிரிவுகள் உள்ளன? சுக்கிரனும் ராகுவும், அல்லது சுக்கிரனும், புதனும் அல்லது ராகுவும், புதனும் எந்த ஜோடி சம்பந்தப்பாட்டாலும் கலைத் துறையில் சிறப்படைய முடியும். ஆனால் கதை வசனம், இயக்கம், இசை, நடிப்பு என்று அதில் எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன இல்லையா?

ஆகவே உயர்வைச் சொல்ல முடியுமே தவிர உயர்வு அடையும் காலத்தைச் சொல்ல முடியுமே தவிர, வேலையை மிகத்துல்லியமாகக் குறிப்பிட முடியாது. அதை நினைவில் வையுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீட்டு அதிபதி மற்ற இடங்களில் சென்று அமர்வதால் ஏற்படும் பொதுப் பலன்கள்

பத்தாம் வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் ஜாதகன் தான் ஈடுபடும் தொலில் வெற்றிமேல் வெற்றியைக் காண்பான். பத்தாம் வீட்டு அதிபதி நீசம் பெற்றிருந்தாலோ அல்லது தீய வீடுகளில் (6,8,12ஆம் வீடுகளில்) அமர்ந்திருந்தாலோ சிரமப்படுவான். போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். மூன்றடி ஏறினால் நான்கடி சறுக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1.
Tenth lord placed in the lagna or 1st house

லக்கினத்தில் அமர்ந்திருந்தால்:
தீவிரமாக தொழில் செய்வான். கடின உழைப்பாளி. தன் முயற்சியால் மேன்மை அடைவான். சுய தொழில் செய்வான். தன்னிச்சையாகச் செய்யக்கூடிய வேலையில் இருப்பான்.தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வான். மற்றவர்களால் போற்றப்படுவான். மெதுவாக, நிதானமாக, தன்முனைப்புடன் முன்னேற்றம் காண்பான்.
இது அரசியலுக்கு ஏற்ற அமைப்பு. அரசியலில் நுழைந்தால், சக்தி வாய்ந்த பலரின் தொடர்பு அவனுக்குக் கிடைக்கும். அவனும் அதில் வெற்றி பெற்றுச் சிறப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.
Tenth lord placed in the 2nd house

இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகன் அவனுடைய வேலையைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ஷ்டமானவன். இரண்டாம் வீடு என்பது 10ஆம் வீட்டிற்கு ஐந்தாம் வீடு. தொட்டதெல்லாம் துலங்கும் கை நிறையப் பொருள் ஈட்டுவான். தன்னுடைய குடும்பத் தொழிலையே பெரிய அளவில் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். குறுக்கிடும் தடைகளைத் தாண்டி வெற்றிப் படிக்கட்டில் ஏறி ஒரு உச்ச நிலையை ஜாதகன் அடைவான். உணவு விடுதி, பெரிய ரெஸ்டாரண்ட் போன்றவற்றை நடத்தும் தொழிலும் சிலர் ஈடுபடுவார்கள்.

பத்தாம் வீடு கெட்டிருந்து, பத்தாம் அதிபதி மட்டும் இங்கே வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் பெரும் நஷ்டங் களைச் சந்திப்பதோடு, தனது குடும்பத் தொழிலையும் தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு ஆளாகித் தவிப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Tenth lord placed in the 3rd house

மூன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகனின் பகுதி நேர வாழ்க்கை பயணங்களில் கழியும்.அப்படிப்பட்ட வேலை அமையும். பேச்சாளனாகவோ, எழுத்தாளனாகவோ இருந்தால் அந்தத்துறையில் பிரகாசிப்பார்கள். புகழடைவார்கள். தொழிலில் உடன்பிறப்புக்களின் பங்கும் இருக்கும் அதாவது அவர்களின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். எல்லோராலும்
விரும்பப்படும் நிலை கிடைக்கும். அதனால் வேலைபார்க்கும் இடங்களில் கூடுதல் மதிப்பு இருக்கும். 3ஆம் வீடு பத்தாம் வீட்டிலிருந்து ஆறாவது வீடாக அமைவதால் இந்த அமைப்பினருக்கு இயற்கையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் அல்லது தீர்க்கும் திறமை இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.
Tenth lord placed in the 4th house

நான்காம் வீட்டில் அமர்ந்திருந்தால்:
ஜாதகர் ஒரு உதாரண மனிதராக இருப்பார். எல்லா விஷயங்களிலும் அறிவுடையவராக இருப்பார்.(person with knowledge in various subjects) இந்த அறிவாற்றலால் பலராலும் மதிக்கப்படுபவராக இருப்பார். இடம் வாங்கி விற்கும் அல்லது கட்டடங்களைக் கட்டிவிற்கும் தொழிலை மேற்கொண்டால் அதில் முதன்மை நிலைக்கு
உயர்வார். அரசியல் அதிகாரமுடையவர்களுடன் தொடர்புடையவராக இருப்பார். தூதுவராக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டாகும். வசதியான வீட்டையும், வாகனங்களையும் உடையவராக இருப்பார். தலைமை ஏற்கும் சிறப்புடையவர்களாக இந்த அமைப்புக்காரர்கள் விளங்குவதால் இவர்களுக்குப் பல சீடர்களும், உதவியாளர்களும் கிடைப்பார்கள். பொது வாழ்க்கைக்கு இந்த அமைப்பு சக்தி வாய்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
Tenth lord in the 5th House

ஐந்தாம் வீட்டில் இருந்தால்
வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்பை ஆசீர்வதிக்கப்பெற்ற அமைப்பு எனச் சொல்லலாம். தொட்டதெல்லாம் துலங்கும். மண்ணும் பொன்னாகும். பங்கு வணிகத்தில் ஈடுபட்டால் பணம் கொழிக்கும். இறைவழிபாடு, தியானம் என்று எளிமையாகவும் இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள பலர் இவர்களுக்கு நண்பர்களாகக் கிடைப்பார்கள்.அதோடு ஐந்தாம் வீடு, பத்தாம் வீட்டிற்கு எட்டாம் வீடாக இருப்பதனால், இவர்களுக்கு மறைமுக எதிரிகளும் இருப்பார்கள். இவர்களுடைய முன்னேற்றத்திற்கு அவர்கள் தடைகள் ஏற்படுத்த முயல்வார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
Tenth lord in the 6th House

ஆறாம் வீட்டில் இருந்தால்:
நீதித்துறை, மருத்துவத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகள் சார்ந்த வேலையில் இருந்தால், அதில் பிரகாசிப் பார்கள். அடுத்தடுத்துப் பதவி உயர்வு பெற்று மேன்மை அடைவர்கள். பொறுப்பான பதவிகள் வந்து சேரும். நடுநிலையாளர் என்று பெயர் பெறுவதுடன், பலரின் மதிப்பையும் பெறுவார்கள். அடிக்கடி இடம் மாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். ஆறாம்வீடு பத்தாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடு ஆகையால், அதிர்ஷ்டம் இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கூடவே வரும்.இவர்கள் வேலையில் உயர்வதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7
Tenth lord in the 7th House

ஏழாம் வீட்டில் இருந்தால்:
பத்தாம் அதிபதி இந்த இடத்தில் இருந்தால் ஜாதகரின் தொழில் அல்லது வேலை மிகவும் சக்தி வாய்ந்ததாக அமையும். அவர்களுடைய அறிவு சராசரிக்கும் அதிகமானதாக இருக்கும். பலவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்து கொண்டதை அற்புதமாக வெளிப்படுத்தும் திறமையுடன் இருப்பார்கள். தொழிலில் சிறந்த பங்குதாரர் அல்லது கூட்டாளி கிடைப்பார்.அதுவே அவருடைய வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக அமையும். தொழில் நிமித்தமாக அடிக்கடி தூர தேசங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புக் கிடைக்கும். நிர்வாகத்திறமைகள்
உடையவராக இருப்பார். தங்களுடன் வேலைப்பார்ப்பவர்களை நம்புவார்கள், அதோடு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் கையில் எடுத்துச் செய்யும் எல்லாச் செயல்களுமே வெற்றி பெறும். பலனைத்தரும். இந்த இடம் 10ஆம் வீட்டிற்குப் பத்தாம் இடமாகும். அதனால் அவர்களுடைய
வெற்றி எல்லைகளைக் கடந்து நிற்கும். கடந்து செல்லும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8
Tenth lord in the 8th House

எட்டாம் வீட்டில் இருந்தால்:
இந்த வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு அவருடைய தொழிலில் அல்லது வேலையில் பல இடைஞ்சல்களும், இடமாற்றங்களும் உண்டாகும். திறமைசாலி களாக இருந்தாலும் பலரால் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். தங்கள் வழியில்தான் செல்வார்கள். நீண்ட ஆயுளை உடையவராக இருப்பார்கள். பெருந்தன்மை உடையவர்களாகவும், உயர்ந்த கொள்கைகளை உடையவர்களாகவும் இருப்பார்கள். தங்களுடன் வேலை செய்பவர்களால் பாராட்டப் படுபவர்களாகவும், விரும்பப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இந்த 8ஆம் இடம் பத்தாம் வீட்டிற்குப் 11ஆம் இடம் ஆதலால், நல்ல லாபம் கிடைக்கும் தொழில் அல்லது நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைகள் அமையும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9
Tenth lord in the 9th House

ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
துறவு மனப்பான்மை, ஏகாந்த உணர்வு கொண்டவராக ஜாதகர் இருப்பார். பரம்பரைத் தொழிலில் நாட்டம் உடையவராக இருப்பார். போதகர். ஆசிரியர் என்பதுபோன்றவேலைகளை விரும்பிச் செய்வார்.ஆன்மீக வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார். அதிர்ஷ்டமுடையவராகவும். வசதி உடையவராகவும் இருப்பார். இவர்களுக்கு இவர்களது தந்தையின் உதவியும் வழிகாட்டுதலும் நிறைந்திருக்கும். தர்மசிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். மனவள மேம்பாட்டுத்துறையில் (psychological counseling) நுழைந்தால் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்து மேன்மை பெறுவார்கள். தங்களுடைய திறமையால் பலரது போற்றுதலுக்கும் உரியவர்களாகத் திகழ்வார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10
Tenth lord in the Tenth House

பத்தம் வீட்டு அதிபதி 10ல் இருந்தால் தங்கள் தொழிலில் அல்லது வேலையில் பிரகாசிப்பார்கள். இந்த அமைப்பு கெட்டிக்காரத்தனத்தை, புத்திசாலித்தனத்தை வெளிபடுத்தும் அமைப்பாகும். தங்களுக்கு மேலாளர்களை மதிக்கும் மனப்பக்குவம் உடையவர்களாக இருப்பார்கள். அதனால் மதிப்பும் பெறுவார்கள்.மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள். அரசியல் தொடர்பும், அரசுத் தொடர்பும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த வீடு நல்ல கிரகங்களின் சேர்க்கை, பார்வைகளைப் பெற்றிருந்தால் செய்யும் தொழிலில் அதீத மேன்மை பெறுவார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
11
Tenth lord in the 11th House

பத்தாம் அதிபதி 11ல் இருந்தால், ஜாதகருக்குப் பணத்துடன், மதிப்பும், மரியாதையும் சேரும். மகிழ்வுடன் இருப்பார்கள். பெரு நோக்குடையவர்களாக இருப்பார்கள். பொதுத்தொடர்புகள் உடையவராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு உடையவர்களாக இருப்பார்கள். இதன் மூலமும் இவர்களுக்குப் பல தொடர்புகள் உண்டாகும். பலராலும் விரும்பப்படுவார்கள். இந்த வீடு பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடமாகும். இதனால், இவர்களுக்கு செல்வத்துடன், புகழும், மரியாதையும் சேர்ந்து கிடைக்கும். தொழில் மேன்மை
உடையவர்களாக இருப்பார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.
Tenth lord in the 12th House

பத்தாம் அதிபதி 12ல் இருந்தால்.
வேலையில் அல்லது தொழிலில் பல பிரச்சினைகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். சிலர் வெளி நாட்டிற்குச் சென்று அங்கு பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். வருமானவரி, விற்பனை வரி போன்ற செயல்பாடுகளில் முறையற்று நடந்தால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆகவே அந்த விஷயங்களில் இந்த அமைப்பினர் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அரசியலிலோ அல்லது அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்தால் பெரும் நஷ்டத்தை மட்டுமே சந்திக்க நேரிடும். எதிரிகள் பலர் ஏற்படக்கூடும்
அவற்றிற்கெல்லாம் அப்போதப்போதைக்குத் தீர்வுகளை இவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
.................................................................................

கீழே உள்ளது உபரித் தகவல்கள். வேறு ஒரு குறிப்பில் இருந்து சேர்த்துள்ளேன். இதையும் உங்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். சில மேலே உள்ளது போலவே இருக்கும். மறந்துவிட்டு எழுதியதாக நினைக்க வேண்டாம். வேறு ஒரு குறிப்பில் இருந்ததை அப்படியே கொடுத்துள்ளேன். இதில் உள்ள புதிய செய்திகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்

பத்தாம் வீட்டு அதிபதி அமரும் இடத்தை வைத்துப் பலன்கள்

1
பத்தாம் அதிபதி முதல் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் கடுமையான உழைப்பாளி. தன் உழைப்பால் முன்னேற்றம் அடையக்கூடியவர். சிலர் சொந்தத் தொழில் செய்பவ்ர்களாக இருப்பார்கள். பொருளாதாரச் சுதந்திரம் இருக்கும்( அதாங்க எப்போதும் கையில காசு இருக்கும்)

2
பத்தாம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் அதிர்ஷ்டமானவன். தேர்ந்த மற்றும் தேர்வு செய்த, தனக்குப் பிடித்த தொழிலைச் செய்து அபரிதமான செல்வத்தை அடைபவனாக இருப்பான். (எக்கச்செக்கமாக சம்பாரிக்கிற ஜாதகமுங்க!) சிலர் சிரமமின்றித் தங்கள்
குடும்பத்தொழிலையே செய்து, அபரிதமான பொருள் ஈட்டுவார்கள். சிலர் உணவு அல்லது உணவு சம்பந்தப்பட்ட துறைகளில் நுழைந்து பெரும் வெற்றி பெறுவார்கள் (அதாங்க ஹோட்டல் இண்டஸ்ட்ரி)

3
பத்தாம் அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் சிறந்த பேச்சாளனாக இருப்பான். தன் வேலையின் காரணமாக அடிக்கடி பயணிப்பவனாக இருப்பான். அல்லது பயணம் சம்பந்தப்பட்ட துறையில் அவனுடைய வேலை அல்லது தொழில் அமையும். ஜாதகனுக்கு அவனுடைய வேலையில் அல்லது தொழிலில் அவனுடைய சகோதரர்களின் பங்களிப்பு/உதவி இருக்கும்.

4
பத்தாம் அதிபதி நான்காம் வீட்டில் இருந்தால்:
ஜாதகனுக்குப் பலதுறைகளிலும் மேம்பட்ட அறிவு இருக்கும். அதிர்ஷ்டகரமானவனாக இருப்பான். பல சாதனைகளைப் புரிவான். மற்றவர்களுக்கு உதவும் (சேவை) வேலைகளைச் செய்து புகழ் பெறுவான்.விவசாயம், தோட்டக்கலை, வாகனங்கள், அசையா சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வணிகம் ஆகியவற்றில் ஒன்றைச் செய்து
பெரும் பொருள் ஈட்டும் வாய்ப்புக் கிடைக்கும். சிலர் அரசியலில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டுவார்கள்.

5
பத்தாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால்:
பங்கு வணிகம் போன்ற திடீர் பணவரவு உள்ள துறைகளில் அல்லது நிதி சம்பந்தப்பட்ட துறைகளில் (பொருள் ஈட்டும் வாய்ப்பு உள்ள தொழில்களில்) ஜாதகன் ஈடுபடுவான். அதிர்ஷ்டமுள்ளவன். நல்ல வாழ்க்கை அமையும். பல நற்பண்புகளுக்கு உறைவிடமாகச் ஜாதகன் திகழ்வான்.

6.
பத்தாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் நீதித்துறை, சிறைச்சாலைகள், மருத்துவ மனைகள் ஆகிய ஒன்றில் பணி செய்ய நேரிடும். இந்த அமைப்பு அதாவது பத்தாம் வீட்டு அதிபதி ஆறில் வந்து அமர்வது - சொந்தத் தொழிலிற்கும், வணிகம் செய்வதற்கும் ஏற்றதல்ல. ஜாதகன் வேலைக்குச் செல்வது உத்தமம். அதில் அவன் வளர்ச்சியடைவான். உங்கள் மொழியில் சொன்னால் வெற்றி பெறுவான்


7
பத்தாம் அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால்:
கூட்டுத் தொழில் செய்வதற்கு ஏற்ற ஜாதகம். ஜாதகனுக்குக் கூட்டுத் தொழிலால் வெற்றி கிட்டும். சிலருக்கு மனைவி மூலம் தொழில் செய்வதற்குப் பொருள்/பணம் கிடைக்கும் (அதாங்க மாமனார் வீட்டுப் பணம்) சிலருக்கு வெளி நாட்டில் நல்ல வேலை கிடைக்கும். அல்லது வெளி நாட்டுடன் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். சிலருக்கு வெளி நாட்டுத் தூதுவராக அல்லது தூதரகங்களில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைக்கும்

8
பத்தாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் ஒரே வேலையில் இருக்க மாட்டான். பல இடங்களில், பல வேலைகளில் அமரும் அமைப்பு இது.இடம் விட்டு இடம் தாவிக் கொண்டிருக்க நேரிடும் (many breaks in the career) இந்த அமைப்பு வலுவான சனியின் பார்வை பெற்றால், ஜாதகன் கீழான வேலைகளைச் செய்ய நேரிடும் ( என்னென்ன கீழான வேலைகளை நீங்கள் யோசித்துப் புரிந்து கொள்ளுங்கள்) இதே அமைப்பு ராகு அல்லது கேதுவின் பார்வை பெற்றால் ஜாதகன், மனித சக்திக்கு அப்பாற்பட்ட வேலைகளில் (occult pursuits and spirituality) ஈடுபட்டிருப்பான்

9
பத்தாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
இது ஆன்மீகம், அறச் செயல்கள் போன்ற செயல்களுக்கு உகந்த அமைப்பு. ஜாதகன் பலராலும் போற்றப்படும் மேன்மை பெற்றிருப்பான். அனைவராலும் அறியப்பட்டவனாக இருப்பான். ஜாதகன் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் காப்பவனாக இருப்பான். தன் தந்தைக்குக் கட்டுப்பட்டவனாக ஜாதகன் இருப்பான்.

10
பத்தாம் அதிபதி பத்திலேயே இருந்தால்:
பத்தாம் அதிபதி இங்கே வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு உயர்ந்த பதவிகளைப் பெற்றுத்தருவார். நல்ல தொழில் அல்லது வேலையைப் பெற்றுத்தருவார். அனைவராலும் மதிக்கப்படும் நிலைக்கு ஜாதகன் உயர்வான். எல்லா வளங்களையும் பெறுவான்.

11
பத்தாம் அதிபதி பதினொன்றில் இருந்தால்:
மிகவும் அருமையான அமைப்பு (An excellent placement) ஜாதகன் பெரிய தொழில் அதிபராக இருப்பான் /உயர்வான். பலருக்கும் வேலை கொடுக்கும் நிலையில் இருப்பான். தனக்குக் கீழே வேலை செய்பவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வான். நல்ல சமூகத் தொடர்புகளும் கிடைக்கும். அதிகாரத்தில் உள்ள பலரது நட்பு அவனுக்குக் கிடைக்கும்.

12
பத்தாம் அதிபதி பன்னிரெண்டில் இருந்தால்:
ஜாதகன் தூர தேசங்களில் அல்லது சொந்த ஊரைவிட்டுத் தொலைவான இடங்களில் வேலை செய்ய நேரிடும். அவனுடைய திறமைக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காது. சிலருக்கு, அவர்களால் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும்
===========================================================
இந்த வீட்டைப்பற்றி அடுத்தடுத்த பகுதிகள் உள்ளன. அவற்றையும் படித்துவிட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்.

இப்போது சாதம் போட்டுப் பருப்பு, நெய் மட்டும்தான் ஊற்றி உள்ளேன். சாம்பார், வற்றக்குழம்பு, மோர்க்குழம்பு, தயிர், பாயாசம், வடை, அப்பளம் எல்லாம் இனி வரும். முழுச்சாப்பாடையும் சாப்பிடாமல், உங்களுக்குச் சொந்த ஜாதகத்திற்குத் தாவி குழம்பிக்கொள்ளாதீர்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீடு - பகுதி 2

மனித வாழ்க்கையில் பல அவலங்கள். ஒரு குழந்தை தன் தாய் வயிற்றில் 280 நாட்கள் இருந்துவிட்டு வெளியே வருகிறது. பிறக்கும் முறையில் வித்தியாசம் இல்லை. பிறந்த உடனேயே - அந்தக் கணமே வித்தியாசம்
உருவாக ஆரம்பித்து விடுகிறது. அது செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்தால் எல்லாச் சீராட்டுக்களையும் பெறுகிறது. அன்றாடம் சோற்றுக்கு அல்லாடும் ஒரு ஏழை வீட்டில் பிறந்திருந்தால், தாய் அதை வெய்யிலில் தூக்கிக்
கொண்டு தான் வேலை செய்யும் இடங்களுக்குப் போகின்றாள். ஒரு மரத்தில் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலோ அல்லது ஒரு வீட்டின் உத்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் தொட்டிலிலோ அதைக் கிடத்திவிட்டுத் தன் வேலையைக் கவனிக்கிறாள். அவள் தன் வயிற்றுப்பாட்டையும் பார்க்க வேண்டும் தன்னுடைய குழந்தையின் பசியையும் போக்க வேண்டும்.

குழந்தைகள் வளரும் சூழ்நிலையிலும் பல அவதிகளைச் சந்திக்கின்றன. சில கிராமங்களில் ஆரம்பப் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிடையாது. தினமும் மூன்று அல்லது ஐந்து கிலோ மீட்டர் தூரம் அந்தப் பிஞ்சுக்கால்கள் நடந்து சென்று படிக்க வேண்டும்.

"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று முண்டாசுக் கவிஞன் சொல்லி விட்டுப்போய் விட்டான். நாட்டில் ஜாதிகள் எல்லா நிலைகளிலும் பேயாட்டம் போடுகிறது. எந்தப் பள்ளிக்கூடத்திலாவது ஜாதியைக் கேட்காமல் இடம் கொடுக்கிறார்களா சொல்லுங்கள்? அங்கேயே ஜாதி அக்குழந்தையின் தோளின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு விடுகிறது.

வெள்ளைக்காரன் செய்த சதியால் மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டு போட்டுக் கொடுக்க நேர்ந்தது. துண்டு போட்டுக்கொண்டு சென்ற நாட்டை விட, துண்டு போடக்காரணமாக இருந்த அந்த மதத்தினரின் எண்ணிக்கை,
இப்போது அந்த நாட்டில் இருப்பவர்களைவிட இங்கே அதிகம். பிறகு ஒரு பெரியவர், மொழியின் பெயரால் நாட்டைப் பல மாநிலங்களாகப் பிரித்துக் கொடுக்கும் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்துப் பிரித்துக் கொடுத்தார்.
பூகோள அடிப்படையில் பிரித்திருந்தால் பல அவதிகள் இன்று இருக்காது. உதாரணம் காவிரி கன்னடர்களுக்கு மட்டும் என்ற நிலைப்பாடு. பிறகு பல பெரியவர்கள் சேர்ந்து பொருளாதார அடிப்படையில், கல்வி வேலை
வாய்ப்புக்களை உருவாக்காமல் ஜாதிகளின்/ இனங்களின் அடிப்படையில் கல்வி வேலை வாய்ப்புக்களில் சீர் திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள்.

பிறகு 1970ற்குப் பிறகு அரசியல் கட்சிகள் ஜாதி அடிப்படையில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகமாக உள்ள ஜாதிக்காரகளின் பிரதிநிதிகளை நிற்க வைத்து வெற்றி காணும் யுக்தியைக் கண்டு பிடித்தன. அரசியலில் ஜாதி
வேரூன்றி நிற்க ஆரம்பித்தது. பிறகு பத்தாண்டுகள் கழிந்து ஜாதிக் கட்சிகள் இனக் கட்சிகள் உருவாகின. இப்போது எல்லா மட்டத்திலும், ஜாதிகள், இனங்கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை. அது என் வேலையும் அல்ல. பொதுவாக உள்ள அவலங்களைத் தான் குறிப்பிடுகிறேன்.

இன்று சமுதாயத்தில், முற்பட்டவர்கள், பிற்பட்டவர்கள், அதிகம் பிற்பட்டவர்கள், பழங்குடியினர், ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் என்று பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒதுக்கீடுகள் போதாது என்கிறார்கள். எல்லா நிலையிலும் ஒதுக்கீடுகள் வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு வேண்டும் என்று தெரியவில்லை? எத்தனை காலத்திற்கு என்று தெரிய வில்லை? எப்படிக் கொடுப்பது என்று தெரியவில்லை? எப்படிக் கொடுத்தால் அனைவரும் திருப்தியடைவார்கள், மகிழ்ச்சி கொள்வார்கள் என்பதும் தெரியவில்லை!

கல்வியில் ஒதுக்கீடு, மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விகளில் ஒதுக்கீடு, வேலைகளில் ஒதுக்கீடு, வேலை உயர்வுகளில் ஒதுக்கீடு என்று எங்கே பார்த்தாலும் கூச்சல் குழப்பம்.

தினமும் இதை வைத்து பத்திரிக்கைகளில் எழுதுபவர்களும், மேடைகளில் பேசுபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றார்கள். பிரச்சினைகளும் தீர்ந்த பாடாக இல்லை. வேண்டுகோள்களும் குறைந்த
பாடாக இல்லை.

ஏன் இதை வைத்துத் தினமும் இரண்டு பதிவுகள் போடும் பதிவர்களும் இருக்கிறார்கள்.

எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எல்லோருடைய கோரிக்கைகளும், எண்ணங்களும் நிறைவேறட்டும். என்னுடைய விருப்பமும் அதுதான்.

நான் சொல்லவந்தது அதுவல்ல!

ஜோதிடத்தில் அந்தப் பிரச்சினையே கிடையாது. இங்கே எந்தப் பிரிவினைகளும், உயர்வு தாழ்வும் இல்லை. 100/100 அனைவரும் சமம். எப்படியென்றால் எல்லோருக்கும் மொத்த மதிப்பெண்கள் 337 தான். யாராக
இருந்தாலும் இங்கே சமம்.

ஒடுக்கப்பட்டவர்களும், ஒடுக்குபவர்களும் இல்லாத உலகம் ஜோதிட உலகம்தான்!

இந்த ஒரு காரணத்திற்காகத்தான் எனக்கு ஜோதிடத்தை மிகவும் பிடித்துப்போய் ஜோதிடத்தைக் கற்க ஆரம்பித்தேன்.

இந்த மதிப்பெண் எப்படி உண்டாகிறது என்பதை முன் பதிவுகளில் எழுதியுள்ளேன்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கும் 337 பரல்கள்தான். அவருடைய மெய்க்காப்பாளருக்கும் 337 பரல்கள்தான்
முகேஷ் அம்பானிக்கும் 337 பரல்கள்தான். அவருடைய வாகன ஓட்டுனருக்கும் 337 பரல்கள்தான்
இயக்குனர் மணி ரத்தினத்திற்கும் 337 பரல்கள்தான். அவருடைய உதவியாளருக்கும் 337 பரல்கள்தான்
இசைஞானி இளையராஜாவிற்கும் 337 பரல்கள்தான். அவருடைய குழுவில் தபேலா வாசிப்பவருக்கும் 337 பரல்கள்தான்

இப்படி யாரை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் எவருக்கும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது.துல்லியமாக 337 மட்டுமே இருக்கும்.

ஒருவருக்கு ஒன்று இருந்தால், ஒன்று இருக்காது. மொத்த பாக்கியங்கள் 36ல் 18தான் ஒருவருக்கு இருக்கும், 18 இருக்காது. எந்த பதினெட்டு என்பதில் எல்லாம் அடங்கி விடுகிறது. (உ.ம்:Those who are having wealth will not
have health.)

பிறகு உலகில் உள்ள 700 கோடி மக்களுக்கும் ஜாதகம் எப்படி வேறு படுகிறது? ஜோதிடத்தின் பிரம்மாண்டம் என்று அதையும் முன் பதிவுகளில் எழுதியுள்ளேன்.

இதையெல்லாம் கடவுளா போட்டு அனுப்புகிறார்? இல்லை!

கருணை மிக்கவர் கடவுள். அவருக்கு எல்லா ஜீவராசிகளும் ஒன்றுதான் அவருடைய வேலையல்ல இது !

நாம் முற்பிறவிகளில் செய்த நல் வினைகள் தீவினைகளுக்கேற்பத் தானியங்கி முறையில் நமது அடுத்த பிறவி தீர்மானிக்கப்பட்டு நாம் பிறக்கிறோம்.

முன் ஜென்மத்தில் அடுதவன் பணத்தில் உண்டு கொழுத்துத் தூங்கி வாழ்க்கையைக் கழித்தவன் அடுத்த பிறவியில் தினமும் 12மணி நேரம் உடலால் உழைத்து வாழ்க்கையை நடத்தும்படி ஆகி விடுகிறது.

முன் ஜென்மத்தில் பொதுப் பணத்திலும் கோவில் சொத்துக்களிலும் குடும்பம் நடத்தியவன், அடுத்த பிறவியில் கோவில் வாசலில் தட்டோடு உட்காரும்படி ஆகி விடுகிறது.

முன் பிறவியில் வயதான பெற்றோர்களைத் தவிக்க விட்டவன், இந்தப் பிறவியில் பெற்றோர்கள் இன்றி அனாதையாகத் திரிய நேரிடுகிறது.

இப்படி பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஒவ்வொரு பிறவிக்கும், அவன் ஜீவனம் செய்வதற்காகப் பிழைப்பதற்கும் ஒரு பலமான அர்த்தம் இருக்கும். அதை உணர்பவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

புரிந்தவர்களுக்குப் புரியட்டும், பரியாமல் விதண்டாவாதம் செய்பவர்களுக்குப் புரியாமலேயே போகட்டும்.

இந்தக் கர்ம தர்ம நியதிகளைத் தீவிரமாக படிக்க விரும்புபவர்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள 'அர்த்தமுள்ள இந்து மதம்' நூலின் பத்துப் பாகங்களையும் படிக்குமாறு வேண்டுகிறேன்.
.....................................................................
இதே விதிமுறைகள்தான் பத்தாம் வீட்டிற்கும். பத்தாம் வீடு மிகவும் நன்றாக அமைந்திருந்தால் நல்ல வேலையில் சேர்ந்து அபரிதமாகப் பொருள் ஈட்டுவீர்கள் அதே நேரத்தில் ஜாதகத்தில் வேறு ஏதாவது வீட்டில் குறை இருக்கும்.

ஜாதகத்தில் பத்தாம் வீடு நன்றாக இல்லாமல் இருந்து ஜீவனத்திற்குப் போராட்டமாக இருந்தால் வேறு ஒரு வீட்டில் அது நிறை செய்யப்பட்டிருக்கும்

எல்லாம் அந்த 18/36 அளவில், 337 பரல்களின் எண்ணிக்கைக் கணக்கில் அடங்கிவிடும்.

ஆகவே யாரும் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். எல்லோர் ஜாதகமும் ஒருவிதத்தில் நன்றாகவே இருக்கும். உட்கார்ந்து அலசிப்பார்த்தால் அது தெரியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கை சென்னையில் பயிராக்கிப் பயன்பெற முடியாது. காஷ்மீரில் விளையும் ஆப்பிள் சேலத்தில் விளையாது. அதற்கு அடிப்படையான காரணம் அதனதன் மண் வளமும், சீதோஷண நிலையும்

அதுபோல ஒரு ஜாதகம் சிறப்பாக இருந்து ஜாதகருக்கு நல்ல பலன்களைத் தர, முக்கியமான மூன்று அடிப்படை விஷயங்கள் உள்ளன.

1
முதலில் ஜாதகரின் லக்கினாதிபதி நன்றாக இருக்க வேண்டு. அவர் தனது சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால் மட்டுமே நன்றாக இருக்கிறார் என்று பொருள். That position will give the
native a good standing power in any situation.

2.
பெர்சனலிட்டி எனப்படும் ஜாதகரின் தோற்றம் மற்றும் உடல் வலிமை, அத்துடன் மனவலிமை ஆகியவைகள் முக்கியமாகும். அவற்றைத்தருபவை முறையே சூரியனும், சந்திரனும் ஆகும். அவைகளும் ஜாதகத்தில் வலுவாக
இருக்க வேண்டும். அதாவது சூரியனும், சந்திரனும் ஜாதகத்தில் தங்களது சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால் மட்டுமே நன்றாக இருக்கிறார்கள் என்று பொருள்

இம்மூன்றும் இல்லாவிட்டால், பத்தாம் வீடும், பத்தாம் வீட்டின் அதிபதியும் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் ஜாதகர் அதன் பலனை முழுமையாகப் பெற முடியாது. அதை அனைவரும் மனதில் கொள்ளவும். அதை வலியுறுத்திக் கூறத்தான் மேலே உருளைக்கிழங்கை உதாரணப் படுத்திக் கூறியுள்ளேன்

ஒருவர் தான் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் சிறக்க அம்மூன்றும்தான் அடிப்படை அம்சங்கள்.

புரிகின்றதா கண்மணிகளே?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Careers by sign
ராசிகளை வைத்து அமையும் வேலைகள் (பொதுப் பலன்) அதாவது கீழ்க்கண்ட ராசிகள் உங்கள் பத்தாம் இடமாக இருக்குமென்றால் அதற்குரிய பொதுப்பலன்கள்

1. மேஷம் (Aries)
ராணுவம், காவல்துறை, அறுவை சிகிச்சை நிபுனர், மெக்கானிக், உருக்கு மற்றும் இரும்புத் தொழில், தீயணைக்கும்படை அல்லது தீயனைப்புக் கருவிகள் சம்பந்தமான தொழில், தொழிற்சாலை
அதிபர்கள், விளைளயாட்டுத்துறை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.ரிஷபம்:
ஏர்கண்டிஷனர் போன்ற சொகுசு சாதனங்கள் (luxury goods) நகைகள், சோப்பு, முகப்பவுடர், சென்ட் போன்ற 'காஸ்மெடிக்' பொருட்கள். நடிப்பு, இசை, தையற்கலைஞர்கள். ஆயத்த ஆடைகள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.மிதுனம்:
ஊடகங்கள் (செய்தி நிறுவனங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, வானொலி) நிறுவனப் பிரதிநிதிகள். எழுத்தாளர்கள். கணக்கர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.கடகம்:
கடல் வணிகம். மீன் வியாபாரம், செவிலியர்கள், உணவு. உள் அலங்கார வேலைகள். பெட்ரோலியம் சார்ந்த துறைகள். சரித்திர ஆய்வாளர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.சிம்மம்:
அரசுப் பணிகள். அரசியல், மத அமைப்புக்கள். தூதரங்கள், முதலீட்டு வேலைகள் (investing)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.கன்னி:
மருத்துவர்கள், கணக்காளர்கள், கணக்கு ஆய்வாளர்கள், ஜோதிடம், கணினி சம்பந்தப்பட்ட துறைகள், ஊடகங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.துலாம்:
நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், கலைஞர்கள்,விளம்பரத்துறை, அலங்காரப்பொருட்கள்,ஆடை, அணிகலன்கள், வரவேற்பாளர்கள் உள் அலங்கார வேலைகள் (interior decorators)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.விருச்சிகம்:
இரசாயனப் பொருட்கள், மருந்துகள், திரவப் பொருட்கள், காப்பீட்டுத் தொழில் (insurance) மருத்துவர்கள், செவிலியர்கள் காவலர்கள்,
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
9.தனுசு:
சட்டம், நீதி, மதங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய தொழில்கள் துணிமணிகள், காலணிகள், விளையாட்டுத்துறை, விளையாட்டு வீரர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
10.மகரம்:
சுரங்கம், கனிமங்கள் உற்பத்தி, பதனிடுதல் போன்றவைகள் மூலப் பொருட்கள் உற்பத்தி, மூலப் பொருட்கள் விற்பனை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
11.கும்பம்:
தத்துவஞானிகள், ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள், ஜோதிடர்கள்,பொறியாளர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.மீனம்
மருத்துவர்கள், கடல் சார்ந்த தொழில்கள் அல்லது வேலைகள், இரசாயனங்கள், எண்ணெய், ஓவியர்கள், மருத்துவமனைகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வீடுகளை வைத்து வேலைகள்:
Careers by house (if the 10th lord is placed in the following houses)
1
First:
self-employment, politics or the public at large, work concered with the body (example. health club)

2.
Second:
banking, investments, accountants, restaurants, teaching, consultants, psychologists,

3
Third:
communication, arts, sales, advertising, computing, writing, publishing

4.
Fourth:
agriculture, building trades, real estate, vehicles, water, geology and mining

5.
Fifth:
politics, stockbrokers, religious rituals, entertainment, authorship

6
Sixth:
lawyers, military, police, labour, health related professions, food, waiters.

7.
Seventh:
business, trade, merchant, foreign business.

8.
Eighth:
insurance, research, death-related, metaphysics (e.g. astrology), sex industry.

9.
Ninth:
law, university teaching, travel, religious professions, work in foreign countries.

10
Tenth:
government jobs, dealing with public and the masses, managers, politics.

11
Eleventh:
trade and business, accountants, financial institutions, group work. sports

12
Twelfth:
foreign, jobs requiring secrecy, travels, hospitals, prisons, charities, advocacy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++

Careers by planet (10th Lord)
பத்தாம் இட அதிபதியை வைத்துப் பலன்கள் (எல்லாம் பொதுப் பலன்கள்)
1. Sun:
authority, politicians, scientists, leaders, directors, government employees, doctors, jewelers

2. Moon
nursing, the public, traveling, marine, cooks, restaurants, import/export.

3. Mars
fire, energy, metals, initiative, weapons, construction, soldiers, police, surgeons, engineers.

4. Mercury
intellect, writing, teaching, merchandise, clerks, accountants, editors, transport, astrologers.

5. Jupiter
finance, law, treasury, scholars, priests, politicians, advertising, psychologist, humanitarian.

6. Venus
pleasures, luxuries, beauty, art, music, entertainment industry, sex industry, hotels.

7. Saturn t
real estate, labour, agriculture, building trades, mining, monk.

8. Rahu
researchers, engineers, physicians, medicine/drugs, speculators, aviation, electricity, waste.

9. Ketu
idealism, enlightenment, religion, secret affairs, poisons, metaphysics.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Various planets in the 10th house produce the following results in regard to occupation
பத்தாம் வீட்டில் வந்து அமரும் கிரகங்களை வைத்துப் பலன்கள்
Result by planets placed in the 10th house
1.
பத்தாம் வீட்டில் சூரியன் இருந்தால்:
அரசாங்க வேலை
அரசில் உயர் அந்தஸ்தில் வேலை/ ஆட்சியாளர்கள்/ அமைச்சர்கள் நவரத்தினங்கள் விற்பனையாளர்,மர வியாபாரம், சுரங்கங்களில் வேலை

2.
பத்தாம் வீட்டில் சந்திரன் இருந்தால்: கப்பல்கள், துறைமுகங்களில் வேலை. கடற் பொருட்கள் விற்பனையாளர்கள்
மீன் வளர்ப்பு, மீன் வியாபாரம் நீர் வழி, கடல் வழி, போக்குவரத்து மருத்துவமனைகளில் வேலை, குறிப்பாக நர்ஸ் வேலை

3.
பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
ராணுவம், காவல்துறை, தனியார் பாதுகாப்புத்துறைகளில் வேலை விளையாட்டு வீரர்கள். அறுவை சிகிச்சை நிபுணர்கள். வெடி மருந்துகள், தீப்பெட்டி, பட்டாசு உற்பத்தி, உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் வேலை கசாப்புக் கடை, மாமிச உணவு உற்பத்தி செய்து பதப்படுத்தும் தொழில்
அமிலங்கள், ரசாயனங்கள் உற்பத்தி செய்யும் தொழில் அல்லது தொழிற்சாலைகளில் வேலை

4
பத்தாம் வீட்டில் புதன் இருந்தால்:
வங்கிகளில் வேலை, நிதித்துறைகளில் வேலை. கணக்கப்பிளைகள், கணக்காய்வாளர்கள், காசாளர்கள்
(Accountants, auditors, cashiers) அலுவலங்களில் குமாஸ்தாக்கள், தட்டச்சுபவர்கள் (clerks, typist)
கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஜோதிட வல்லுனர்கள், வானவியல் வல்லுனர்கள். பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள். அச்சுத்தொழில் (Printing Press) நிதி நிறுவனங்கள், சீட்டு நிறுவனங்கள் (Chit Funds) கான்ட்ராக்டர்ஸ், சூப்பர்வைசர்கள், தபால், தந்தி, தொலைத்தொடர்புத் துறைகளில் வேலை கணினி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜித் துறைகளில் வேலை

5
பத்தாம் வீட்டில் குரு இருந்தால்:
சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள், விஞ்ஞானத்தில் தேர்சி பெற்றவர்கள், மதக்குருக்கள், துறவிகள், பாதிரியார்கள், பயிற்சியாளர்கள், வலிமையுள்ள அமைச்சர்கள். அல்லது இவை சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள்

6
பத்தாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால்:
ஒப்பனைப் பொருட்கள், ஆபரங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் அல்லது அது சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை செய்பவர்கள். நாடக, திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மேடைப் பேச்சாளர்கள்,
உணவகங்கள் (hotels food business) Bars & restaurents cold storage and ice factory owners.Models பேக்கரித் தொழில்கள் வாகனங்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் பராமரிப்புத் தொழில்கள் (dealers of automobiles and vehicles)

7
பத்தாம் வீட்டில் சனி இருந்தால்:
எண்ணெய் வியாபாரிகள், க்ரூட் ஆயில் வியாபாரிகள் (பெட்ரோலியப் பொருட்கள்), ஒயின் மற்றும் ஆல்கஹால் சம்பந்தப்பட்ட பொருட்கள், ஸ்பிரிட்ஸ், காலணி வியாபாரிகள், கட்டுமானப் பொருட்களான, இரும்பு, மரங்கள், ஜல்லிக் கற்கள் விற்பனையாளர்கள், மருந்து, மூலிகைகள் வியாபாரம், வேலைவாய்ப்பு அமைப்புக்கள், கூலி வேலைக்காரர்கள், தேயிலைத் தோட்டங்களில் வேலை - இவை சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை.
அல்லது அவற்றை நடத்தும் அமைப்பிலான வேலைகள்

8.
பத்தாம் வீட்டில் ராகு இருந்தால்:
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், விண்வெளிப் பயணிகள், மந்திரதந்திர நிபுணர்கள், மனவசியக் கலைஞர்கள், மது விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், அல்லது அத்துறையில் வேலை செய்பவர்கள். சர்க்கஸ் கலைஞர்கள், கம்பியில்லாத் தொலைத் தொடர்பு வேலைகளில் உள்ளவர்கள்.

9
பத்தாம் வீட்டில் கேது இருந்தால்:
வெளிநாட்டு வர்த்தகம், மனோதத்துவ நிபுனர்கள், மனோதத்துவத் துறைகளில் மருத்துவர்கள், கைரேகைக் கலை நிபுனர்கள், மனித சக்திக்கு அப்பாற்பட்ட துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள் (Occult science or hidden wisdom)

இவற்றைத் தவிர, ஜாதகத்தில் 10ஆம் வீட்டுடன் தொடர்புள்ள மற்ற கிரக நிலைகளையும் அலசி ஒரு முடிவிற்கு வரவேண்டும். வெவ்வேறான கிரகங்கள், வெவ்வேறான ராசிகளில் வித்தியாசமான பலன்களை (தொழில்களை) ஜாதகனுக்குக் கொடுக்கும். உதாரணத்திற்கு, கன்னி ராசி பத்தாம் வீடாக இருந்து அங்கே புதனும், சுக்கிரனும் இணந்திருந்தால், அது ஜாதகனுக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும். அதாவது வேலையில் அல்லது தொழிலில்
அபூர்வ யோகத்தைக் கொடுக்கும். ஜாதகன் மிக உயர்ந்த நிலைக்கு வருவான். ஆகவே ஓரிரண்டு விதிகளை மட்டும் வைத்து எந்த முடிவிற்கும் வர வேண்டாம். அதை மனதில் வையுங்கள்
------------------------------------------------------------------
இந்தப் பாடத்தை இரண்டாகப் பிரித்துள்ளேன். முதல் பகுதி இது. அடுத்த தொடர்ந்து உள்ளது. பொறுமையாக அதையும் படித்த பிறகு முடிவிற்கு வாருங்கள்
-----------------------------------------------------------------
பத்தாம் வீடு - பகுதி 2

எல்லாம் பொதுப்பலன்கள். அவரவர்கள் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைமைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

எங்கள் பகுதியில் - அதாவது காரைக்குடிப் பகுதியில் ஒரு சொல் உண்டு; ஆனால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. அந்தப் பகுதி மக்கள் - அந்தப்பகுதியில் உள்ள 4 நகரங்கள், மற்றும் 72 கிராம மக்கள் - பேசும் போது
அந்த சொல்லை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.

ஒருவனைத் திட்டுவதற்கும் அந்தச் சொல்தான். அதேபோல் ஒரு குழந்தையை அல்லது இளைஞனைக் கொஞ்சு மொழியில் விளிப்பதற்கும் அந்தச் சொல்தான்.

’பட்டுக்கிடப்பான்' என்பதுதான் அந்தச்சொல். எங்கள் பகுதியைச் சேர்ந்தவரான நடிகை மனோரமா அவர்கள் அந்தச் சொல்லை லாவகமாக - அனாசயமாகப் பயன்படுத்துவார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் தன் கணவனாக நடிக்கும் நாகலிங்கம் என்பவரைக் குறிப்பிடும் போது - "ஆமா, அந்தப் பட்டுக்கிடப்பான் தான்" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாகக் கூறுவார்.

பட்டுக்கிடப்பான் - என்ற சொல் அடிபட்டுக் கிடப்பவன் அல்லது கிடக்க வேண்டியவன், நோய்பட்டுக் கிடப்பவன் அல்லது கிடக்க வேண்டியவன் என்ற பொருளைக் கொடுக்கும்

அதே வார்த்தையை வீட்டில் உள்ள பெரிசுகள் தங்கள் பேரனைத் தூக்கிக் கொஞ்சும் போதும் சொல்லிக் கொஞ்சுவார்கள். அதேபோல இளவயதுக் காளையாகத் திரியும் தங்கள் பேரனைக் கூப்பிடுவதற்கும் அந்தச் சொல்லைத் தான் பயன் படுத்துவார்கள்,"அட பட்டுக் கெடப்பா(ய்) - இங்கின வந்து கேட்டுப் போடா" என்பார்கள்

இங்கே அந்தச் சொல்லிற்குப் பெயர். பட்டில் கிடப்பவன் - பட்டுத் துணியில் கிடப்பவன் அல்லது பட்டுத்துணியில் கிடந்து வளர்ந்தவன் என்று பொருள்படும்.
---------------------------------------------------------------------
இதை எதற்காகச் சொன்னேன் என்றால், ஜோதிடத்திலும் இந்த இரட்டைப் பொருள் உள்ள வேலைகளைச் சில கிரகங்கள் செய்யும்!

உதாரணத்திற்கு சனி தீய கிரகம். ஆனால் அதே சனி பத்தாம் வீட்டிற்குக் காரகன். அவன் கையெழுத்துப் போட்டால்தான் பத்தாம் வீட்டின் சட்ட திட்டங்கள் பாஸாகும். ஆகவே பத்தாம் வீட்டைப் பொறுத்தவரை அவன் நல்லவன். பட்டில் கிடக்கும் "பட்டுக்கிடப்பான்' அவன்! இதை மனதில் வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்துப் பொதுப்பலன்!

1.சூரியன்
இங்கே சூரியன் தனியாக நல்ல நிலையில் இருந்தால் - உதாரணம் கடகம் ஒருவருக்கு லக்கினமாக இருந்து, பத்தாம் வீடாகிய மேஷத்தில் சூரியன் இருந்தால், அவர் அங்கே உச்சம் பெற்றிருப்பார். அதே போல பத்தில்
இருக்கும் சூரியன், குருவின் பார்வை பெற்றிருப்பதும் நல்ல நிலைமைதான். இந்த அமைப்பால் ஜாதகருக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும். ஜாதகருக்கு அவர் தொட்டதெல்லாம் துலங்கும். தெலுங்குக்காரர்கள் சொல்வதுபோல மட்டி (மண்) கூட பங்காரம் (தங்கம்) ஆகிவிடும். எடுத்துச் செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி பெரும். செழிப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். அது பத்தாம் இடத்தின் அதிபதி மற்றும் சூரியனுடைய தசா அல்லது புத்திகளில் அபரிதமாகக் கிடைக்கும்.

நுண்ணறிவு, பணம், பதவி, அதிகாரம், புகழ், செல்வக்கு என்று எல்லாம் கிடைக்கும். சொந்த வீடு, வாகனம், வேலையாட்கள் என்று ஜாதகன் செளகரியமாக வாழ்வான்.

அரசாங்க உத்தியோகம் அல்லது பதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். இசை ரசிகராக ஜாதகர் இருப்பார்.

மற்றவர்களை ஈர்க்கக்கூடிய சக்தி உடையவராக இருப்பார். (இவ்வளவு இருக்கும்போது ஈர்க்கமுடியாதா என்ன?)

பத்தில் சூரியனுடன், செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகர் குடி மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் அபாயம் உண்டு!

பத்தில் சூரியனுடன், புதன் சேர்ந்தால், ஜாதகருக்கு விஞ்ஞானத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். பிரபல விஞ்ஞானியாக உருவெடுப்பார். அதே நேரத்தில் பெண் பித்து (மயக்கம்) ஏற்படும் அபாயமும் உண்டு.

பத்தில் சூரியனுடன், சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகருடைய மனைவி, பெரும் செல்வந்தர் வீட்டுப்பெண்ணாக இருப்பாள். அவள் மூலம் அவருக்குப் பெரும் சொத்துக்கள் கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் சூரியனுடன், சனி சேர்ந்திருந்தால், அது நல்லதல்ல. ஜாதகருக்குப் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். இறுதியில் வாழ்க்கை வெறுத்துப்போகும் நிலைமைக்கு ஆளாகி விடுவார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.சந்திரன்
பத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகர் இறைவழிபாட்டில், ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் கொள்வார். புத்திசாலியாக இருப்பார். துணிச்சல் மிக்கவராக இருப்பார். செய்யும் செயல்களில் வெற்றி காண்பராக இருப்பார்.உதவி செய்யும் மனப்பான்மையும், தர்ம சிந்தனையும் மேலோங்கியவராக இருப்பார். பல கலைகளில் தேர்ந்தவராக இருப்பார். மொத்தத்தில் சகலகலா வல்லவராக இருப்பார்.

இதே பத்தில் சந்திரனுடன், சூரியனும், குருவும் சேர்ந்திருந்தால், ஜாதகர் வேதாந்தங்களிலும், ஜோதிடத்திலும் விற்பன்னராக இருப்பார்.

பத்தில் சந்திரன் இருந்து, அவர் சூரியனுடைய பார்வையையும், சனியினுடைய பார்வையையும் பெற்றிருந்தால், ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக இருப்பார். அச்சுத்தொழில் அல்லது பதிப்பகத் தொழில் துவங்கிப் பெரும்பொருள் ஈட்டுவார். அவருக்கு அனேக நண்பர்கள் இருப்பார்கள்.வாழ்க்கை வசதியானதாக
இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். பல அறக்கட்டளைகளைத் தலைமை தாங்கி நடத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.செவ்வாய்
பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், ஜாதகருக்கு ஆளும் திறமை இருக்கும். பெரிய பதவிகள் கிடைக்கும். இதே செவ்வாய், சனி அல்லது ராகுவுடன் கூட்டணி போட்டிருந்தால் கடுமையான ஆட்சியாளராக இருப்பார். துணிச்சலாக ஆட்சி நடத்தும் திறமை இருக்கும். பாராட்டுகளுக்கு மயங்குபவராக இருப்பார். எதிலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று வேகம் உடையவர்களாக இருப்பார்

பத்தில் செவ்வாயுடன், புதனும் சேர்ந்தால், நிறைய செல்வங்கள் சேரும். சொத்துக்கள் குவியும். சிலர் மதிப்புமிக்க விஞ்ஞானியாக உருவெடுப்பார்கள்.சிலர் கணிதத்தில் பண்டிதராக விளங்குவார்கள். பத்தில் செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் பல ஏழை மக்களின் துயர் தீர்க்கும் தலைவனாக ஜாதகன் விளங்குவான். அதே பத்தில் செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் ஜாதகன் தூரதேசங்களுக்குச் சென்று வணிகம் செய்து பொருள் ஈட்டுவான். பத்தில் செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் ஜாதகன் அதிரடியாக வேலைகளைச் செய்யும் திறமை பெற்றிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4 புதன்
ஜாதகன் நேர்மையனவனாகவும், மகிழ்ச்சியுடையவனாகவும் இருப்பான். எல்லாக் கலைகளிலும் வித்தகனாக இருப்பான். அதோடு அறிவுத்தேடலில் ஈடுபாடு கொண்டிருப்பான்.புகழ் பெற்று விளங்குவான். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பவனாக இருப்பான். கணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பான். அதே இடத்தில் புதனுடன் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் ஜாதகன் அழகான மனைவியையும், செல்வத்தையும் பெற்றவனாக இருப்பான். அதே இடத்தில் புதனுடன், குரு சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு இருக்காது. வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இருக்காது, ஆனால் அரசு வட்டாரங்களில் மிகுந்த தொடர்பு உடையவனாக இருப்பான். இந்தப் பத்தாம் இடத்தில் புதனுடன் சனி சேர்ந்திருந்தால் ஜாதகன் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அச்சுத்தொழில் அல்லது ப்ரூஃப் ரீடர் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5. குரு
ஜாதகன் அரசாங்கத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியாக விளங்குவான். செலவந்தானாக, தர்ம சிந்தனை உடையவனாக, இறை நம்பிக்கையாளனாக, மத விஷயங்களில் ஈடுபாடு உடையவனாக, புத்திசாலித்தனம் மிக்கவனாக, மகிழ்ச்சி உடையவனாக ஜாதகன் விளங்குவான். உயர்ந்த கொள்கைகள் அவனுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும். குருவுடன் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் அரசில் முக்கியமான பொறுப்பில் இருப்பான்.
குருவுடன் ராகு சேர்ந்திருந்தால் ஆசாமி குசும்பானவன். மற்றவர்களுக்குத் தொல்லைகளைக் கொடுப்பவனாக இருப்பான். ஒவ்வொரு செயலிலும் தொல்லையாக இருப்பான். பத்தில் இருக்கும் குருவை செவ்வாய் பார்த்தால், கல்விக் கேந்திரங்களுக்கும் ஆராய்ச்சிக்கூடங்களுக்கும் தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பில் இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.சுக்கிரன்
ஜாதகன் இடம், வீடுகளை வாங்கி, கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவான். செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான். நிறையப் பெண்களுக்கு வேலை கொடுப்பான். அல்லது நிறைய பெண்கள் வேலை செய்யும் இடங்களில் வேலை பார்ப்பன். நட்புடையவனாக, பலராலும் அறியப்பட்டவனாக இருப்பான். யதார்த்தவாதியாக இருப்பான்.

இங்கே சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் உடல் வனப்புப் பொருட்களை உற்பத்தி செய்பவனாக அல்லது விற்பவனாக இருப்பான். பெண்களுக்கான அலங்காரப் பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுவான். யாரையும் வசப்படுத்தக்கூடிய சக்தி இருக்கும். தனது திறமையால் வியாபாரத்தில் சிறந்து விளங்குவான். சுக்கிரனும், சனியும் சேரும் இந்த அமைப்பினால் ஜாதகனுடைய கல்வி தடைப்படும். தெய்வ சிந்தனை மிக்கவனாகவும், தெய்வ வழிபாடு மிக்கவனாகவும் இருப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.சனி
ஜாதகன் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச் சமமான பதவியிலோ சென்று அமர்வான். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களின் கூட்டணியால், விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில் சிறந்து விளங்குவார்கள். துணிச்சல் மிக்கவனாக இருப்பான். செல்வம், புகழ்
இரண்டும் தேடிவருபவனாக இருப்பான். அடித்தட்டு மக்களுக்குப் பாடுபடுபனாக இருப்பான். கோவில், குளம் என்று அடிக்கடி பயணம் செல்பவனாக இருப்பான் ஒரு கட்டத்தில் மிகுந்த பக்திமானாக மாறிவிடுவான்.

பத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும் இறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்

சனி எட்டாம் அதிபனுடன் சேர்ந்து நவாம்சத்தில் தீய இடங்களில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்கு எப்போதும் தொழிலில் அல்லது வேலையில் மோதல்கள் இருந்து கொண்டேயிருக்கும். தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும். சனியுடன் பத்தாம் வீட்டதிபனும் சேர்ந்திருந்து, ஆறாம் அதிபனின் பார்வை பெற்றால் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரம் அமையும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.ராகு
காம இச்சை அதிகம் உடையவானாக ஜாதகன் இருப்பான். சிலர் அந்தக் காம இச்சையிலும், தன்னைவிட விட வயதில் மூத்த பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பார்கள்.

(இது பொதுவிதி. இதைப்படித்துவிட்டு, எனக்குப் பத்தாம் இடத்தில் ராகு உள்ளது. ஆனால் நான் அப்படிப்பட்ட ஆசாமி இல்லையே என்று யாரும் சொல்ல வேண்டாம். வேறு சுப கிரகங்களின் பார்வையால், அது இல்லாமல்
இருக்கலாம். அதற்காக சந்தோஷப்படுங்கள்)

ஏன் சந்தோஷப்பட வேண்டுமா?
மண், பெண், பொன் ஆகிய மூன்றின் மீதும் ஆசைவைத்தவன் திருப்தியடைந்ததாக சரித்திரம் இல்லை. உருப்பட்டதாகவும் சரித்திரமில்லை!

இந்த அமைப்பினர் (அதாவது 10ல் ராகு இருக்கும் அமைப்பு) கை தேர்ந்த கலைஞர்களாக இருப்பார்கள். எல்லாக் கலைகளையும் சுலபமாகக் கற்றுக்கொண்டு விடுவார்கள்.இலக்கியங்களிலும், கவிதைகளிலும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.

அதிகமாக ஊர் சுற்றுபவர்களாக இருப்பார்கள். சிலர் கற்றவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சிலர் சுய தொழில் செய்து மேன்மை அடைவார்கள். கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள். தைரியம் உடையவர்களாக, சாதனைகள் படைப்பவர்களாக இருப்பார்கள்

சிலர் அந்தரங்கமாக பல பாவச்செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9. கேது
ஜாதகன் தன் தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஜாதகன் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருப்பான். பத்தாம் இடத்துக் கேது சுபக் கிரகங்களின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால்
ஜாதகன் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பத்தாம் வீட்டில் இரண்டு கிரகங்கள் கூட்டாக இருந்தால், ஏற்படும் பலன்கள்.
இவை அனைத்தும் பொதுப்பலன்கள்.

சூரியன் + புதன் கூட்டணி:
மதிப்பும், மரியாதையும் உள்ள உயர் பதவிகள்
நிதி சம்பந்தப்பட்ட துறைகள்,
பொருளாதாரம் சம்பந்தப்பட்ட துறைகள்,
அரசு பதவிகள், அரசாங்க உத்தியோகம்
அரசியல் துறை
...................................................
சனீஷ்வரன் + புதன் கூட்டணி::
சுற்றுலாத்துறை
முகவர் பணி
புத்தகம், பதிப்பகத்துறை, அச்சகத் தொழில்
சுங்கவரி, உற்பத்திவரி போன்ற அரசு வரித்துறைகள்
காப்பீட்டுத்துறை
...................................................
சுக்கிரன் + புதன் கூட்டணி:
கவிஞர்கள், படைப்பாளிகள் (எழுத்தாற்றல் மிக்க எழுத்தாளர்கள்)
இலக்கியத்துறை, பத்திரிக்கை ஆசிரியர்கள்
நாடக எழுத்தாளர்கள்
தூதுவர்கள்
வெளியுறவுத்துறை
நிர்வாகிகள்
மருத்துவப் பிரதிநிதிகள்
..................................................
சந்திரன் + புதன் கூட்டணி:
கண்காட்சி அமைப்பளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள்
......................................................
செவ்வாய் + புதன் கூட்டணி:
அறுவை சிகிச்சை நிபுணர்கள்
ரசாயனத்துறை
மருந்து உற்பத்தியாளர்கள், மருந்து விற்பனையாளர்கள்
கணக்காய்வாளர்கள்
......................................................
குரு + புதன் கூட்டணி:
ஆராய்ச்சியாளர்கள்
விஞ்ஞானிகள்
மதபோதகர்கள்
வழக்குரைஞர்கள், நீதிபதிகள்
நகரமன்ற உறுப்பினர்கள், நகரத்தந்தைகள்
.........................................................
ராகு + புதன் கூட்டணி:
மல்யுத்த வீரர்கள்,
புகைப்படக் கலைஞர்கள்
கடிகார வியாபாரிகள்
தகவல் தொடர்பு சாதனங்கள் (உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள்)
ஒலிபரப்புத்துறை சாதனங்கள் (உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள்)
..........................................................
சூரியன் + குரு கூட்டணி:
அறநிலையங்களின் தலைவர்கள்
இறைச் சேவை அமைப்புக்களின் தலைவர்கள்
மத குருமார்கள்.
சிந்தனையாளர்கள்,
மக்களை நெறிப்படுத்துபவர்கள், அதில் பிரபலமானவர்கள்
மாநில, மற்றும் தேசிய அளவில் பிரபலங்கள்
.............................................................
சனி + குரு கூட்டணி:
மனித சக்திக்கு அப்பாற்பட்ட துறைகளில் ஈடுபாடு உள்ளவர்கள்
(Occult science or hidden wisdom), அறக்கட்டளைகள், அதுபோன்ற
அமைப்புக்களை நடத்துபவர்கள் அல்லது அவற்றில் பணி செய்கின்றவர்கள்.
மனோவசியம் சம்பந்தப்பட்ட பணிகள். சிலர் தங்கள் வசம் கூலி ஆட்களை
அமர்த்திப் பலவிதமான ஒப்பந்தப் பணிகளைச் செய்பவர்கள். உங்கள்
மொழியில் சொன்னால் contractors
...............................................................
சந்திரன் + குரு கூட்டணி:
பத்திரிக்கை நிருபர்கள். தின, மாத, வார இதழ்கள் ஆகியவற்றில் பணி
செய்கின்றவர்கள். பெண்களுக்கு சேவை செய்யும் அமைப்புக்கள். அல்லது
பெண்களுக்கென்று இருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், கலைக் கூடங்கள்
ஆகியவற்றில் பணி புரிபவர்கள். திருமண சேவை அமைப்புக்கள்
..................................................
சுக்கிரன் + குரு கூட்டணி:
கவிஞர்கள், பொது சேவையாளர்கள். சுயவாழ்க்கைமுறைகளை ஆதரிக்கும்
அமைப்புக்கள் (Theosophical Society) போன்றவற்றில் ஈடுபாடுகொண்டு
பணியாற்றுகிறவர்கள்
..........................................................
சுக்கிரன் + சந்திரன் கூட்டணி:
பெண்களை வைத்து நடத்தும் தொழில்கள், உணவு விடுதிகள், ஹோட்டல்கள்,
மதுக்கடைகள், பார்கள், ஒப்பனைப் பொர்ட்கள், வாசனை திரவியங்கள்,
அலங்காரப் பொருட்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட தொழில்கள் அல்லது வேலைகள்.
கடல் சார்ந்த தொழில்கள், கப்பல்களில் வேலை
.............................................................
சுக்கிரன் + புதன் கூட்டணி:
நுன்கலை வித்தகர்கள், பயிற்சியாளர்கள் teachers of fine arts and dance,
நடிகர்கள், நடிகைகள், சுண்ணாம்பு, நிலக்கரி, விற்பனையாளர்கள், காலணிகள்
உற்பத்தியாளர்கள் விற்பனையளர்கள், பதனிடப்பட்ட தோல்கள் தோல்களால்
செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள்
............................................................
சுக்கிரன் + செவ்வாய் கூட்டணி:
சூதாட்டக்கூடங்கள், செக்ஸ் வியாபாரிகள், வாகன ஓட்டிகள், நுன் தொழில் கலைஞர்கள்
.........................................................
சுக்கிரன் + சனி கூட்டணி:
இசைக் கருவிகள் விற்பனையாளர்கள். புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பவர்கள்.
.......................................................
ராகு + சந்திரன் கூட்டணி:
விமானங்களில், பைலட், ஏர்ஹோஸ்டஸ் அல்லது விமானப் பயணம் சார்ந்த
துறைகளில் வேலை
........................................................
ராகு + செவ்வாய் கூட்டணி:
வாகன ஓட்டிகள், அரிய சாதனைகளைச் செய்பவர்கள். வின்வெளி ஆராய்ச்சிக்
கூடங்கள்
.......................................................
ராகு + சுக்கிரன் கூட்டணி:
பிண்ணனிப் பாடகர்கள், கள் போன்ற போதைப் பொருட்களை விற்பவர்கள்,
பெண்களை வைத்து வணிகம் (அல்லது இன்னபிற வேலைகளைச்) செய்கிறவர்கள்
.......................................................
ராகு + சனி கூட்டணி:
உதிரி பாகங்களைச் செய்கிறவர்கள், விற்கின்றவர்கள். மின்னனு சாதனங்களை
விற்கின்றவர்கள், சர்க்கஸ் கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்கள், குத்துச் சண்டை வீரர்கள்.
..........................................................................
இவற்றில் இல்லாத கூட்டணிக்காக தலையைச் சொறியாதீர்கள். என் குறிப்பில் உள்ளவற்றை மட்டும் கொடுத்துள்ளேன்.

ராசிக் கட்டத்தில், லக்கினத்தில் இருந்து 10ஆம் வீடு முக்கியமானது. ஜாதகனின் தொழில் அல்லது வேலை, அவற்றால் கிடைக்கவிருக்கும் மேன்மைகள், மற்றும் மதிப்பு, சுய மரியாதை ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள உதவும். அதோடு அது கேந்திர வீடுகளில் ஒன்றாகும். அதையும் மனதில் வையுங்கள்!

பத்தாம் வீட்டின் பலன் தொடர்பாக கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்கள்:
இரண்டாம் வீடு (செல்வத்திற்கான வீடு. House of finance and house of wealth)
ஏழாம் வீடு (கூட்டு வியாபாரம், வியாபாரக் கூட்டாளிகள் business partnerships)
பதினொன்றாம் வீடு (பணம் வருவதற்கான வழி. பாதை. உங்கள் மொழியில்
சொன்னால் pipe.income sources and avenues

பத்தாம் வீடு, பத்தாம் வீட்டின் அதிபதி, அவர் சென்று அமர்ந்திருக்கும் இடம் ஆகியவை முக்கியமானது.
The house, it's lord and its placement, signification of the house, planets aspecting
the house need to be analyzed in addition to the sign present in the house and it's
characteristics to arrive at the correct conclusion.
சரி பத்தாம் வீட்டிற்குரிய பலன்கள் எப்போது கிடைக்கும்?

1.பத்தாம் வீட்டின் அதிபதி
2.பத்தாம் வீட்டில் அமர்ந்தவன்
3.பத்தாம் வீட்டைப் பார்க்கும் கிரகம்
2.பத்தாம் வீட்டு அதிபதியைப் பார்க்கும் கிரகம்

ஆகிய கிரகங்களின் தசா (Major Dasa) அல்லது புத்திகளில் (Sub period)
பலன்கள் கிடைக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அஷ்டகவர்கத்தில் 10ஆம் வீட்டில் 30 பரல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகனுக்கு உரிய வேலை அல்லது தொழில் உரிய காலத்தில் கிடைக்கும். கிடைத்த வேலையில் அல்லது தொழிலில் உயர்ச்சி/ வளர்ச்சி இருக்கும்.

அதேபோல பத்தாம் வீட்டு அதிபதி, கர்மகாரகன் சனீஷ்வரன், பத்தாம் வீட்டில் வந்து அமர்ந்துள்ள கிரகங்கள் ஆகியவற்றின் சுயவர்க்கப் பரல்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டு இருக்க வேண்டும். இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

அஷ்டகவர்க்கம்தான் பலன்பார்ப்பதற்கான குறுக்கு வழி. அதை நினைவில் வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=========
தலை சுற்றுகிறதா? சுற்றும். ஜோதிடம் என்றால் சும்மாவா? கடலில் பயணிப்பதைப் போன்றது முதல் முதலாகக் கடல் பயணம் செய்பவர்களுக்கு தலை சுற்றல். வாந்தி எல்லாம் வரும் என்பார்கள். பழகப் பழக சரியாகிவிடும். ஜோதிடமும் அப்படித்தான். பொறுமையாகப் படித்தால் அனைத்தும் பிடிபடும்!

இத்துடன் 10ஆம் வீட்டின் முக்கியமான பகுதிகள் நிறைவுறுகின்றது.

இந்தப் பாடம், ஸ்கீரின் ஷாட்டில் மொத்தம் 41 பக்கங்கள். உங்களுக்கு உரிய pointsகளை மட்டும் 10 நிமிடங்களில் படித்துவிட்டு வந்து, சார், அடுத்த பாடம் எப்போது என்று யாரும் கேட்காதீர்கள். அடுத்து வரும் 2 நாட்களுக்கு இந்தப் பாடத்தைத் திரும்பத் திரும்ப மனதில்பதியும் வரை படியுங்கள். 4 பகுதிகளாகப் பதிய வேண்டியபாடங்கள். அதன் தன்மை கருதி ஒட்டு மொத்தமாக ஒரே பதிவில் தந்திருக்கிறேன்.

அடுத்த பாடம் 26.5.2010 புதனன்று வரும்!
------------------------------------------------------------------------------------
முடிந்தவரை கொடுத்திருக்கிறேன். போதுமா சாமிகளா?

இந்தப் பாடம் கிடைத்த மறு நிமிடம், தங்கள் ஜாதகத்தை வைத்து யாரும் கேள்விகள் கேட்டு எழுத வேண்டாம். மலைபோல வந்து குவியும் கேள்விகளுக் கெல்லாம் பதில் எழுத எனக்கு நேரமில்லை. உங்களைப் போல எனக்கும் இருப்பது 24 மணி நேரம்தான்.

என் தொழில் ஜோதிடம் அல்ல! ஒரு ஆர்வத்தில் ஜோதிடத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் கற்றது பலருக்கும் பயன்படட்டும் எனும் நோக்கத்தில் எனது அரிய நேரத்தைச் செலவு செய்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அனைவரும் அதை உணர்ந்தால் நல்லது!

உணர்ந்தவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

49 comments:

 1. அய்யா அவர்களே . . .

  இன்றைய கால சூழலில் கீழ்கண்ட இந்த ஐந்தும் கூட தொழிலாக அறிவிக்கப்பட்டபின்னர் அவைகளை விட்டுவிடுவது நியாயம் இல்லை தானே . . .

  இந்த குறிப்பினையும் சேர்த்தக் கொண்டு தொழில் ஸ்தான பகுதி அமையட்டடுமே . .

  1) போலி சாமியார்கள்
  2) கோவில் அர்ச்சகர்ள்
  3) சூதாடிகள் (ஷேர் மார்க்கெட் கமாடிட்டி மற்றும் ஃபார்எக்ஸ், குதிரை ரேஸ் மற்றும் சீட்டு, வீடியோ கேம்ஸ்)
  4) sex workers
  5) தீவிரவாதிகள்

  அது சரி . . .

  இத்தனை விளக்கமாக ஆழமாக தெளிவாக சோதிட பாடம் சொல்லும் நீங்கள் . . .

  ஏன் சோதிடத்தையே தொழிலாக வைத்துக் கொள்ளக் கூடாது . . .

  நீங்கள் செய்யும் தொழிலுடன் சேர்த்து
  1) ஆசிரியர்
  2) சோதிடர்
  3) கவிஞர்
  4) எழுத்தாளர்

  இன்னும்.. இன்னும்.. இன்னும் . .

  பன்முக வித்தகரே . .
  பலமுறை வணக்கங்கள் . .

  ReplyDelete
 2. VERY FINE,Your explanation about individual work with Lagna,Sun,Moon is realy good.

  ReplyDelete
 3. Once again nice post sir!
  The houses 1st, 3rd, 4th, 6th, 10th, 11th have more than 32 points for me.
  Particularly the 4th house has 35 and 6th has 36.
  I was afraid of sun dasa which is the next dasa for me.
  Even though the 10th lord (Mercury) placed in 6th house along with Sun, Now I feel relax as both the planets are having more than 5 parals.
  Hope the Sun dasa will provide me the good results.

  Please let us know sir, what would be the benefit, if the 6th house has more than 35 points?

  Thank you sir.

  ReplyDelete
 4. ////visu said...
  அய்யா அவர்களே . . .
  இன்றைய கால சூழலில் கீழ்கண்ட இந்த ஐந்தும் கூட தொழிலாக அறிவிக்கப்பட்டபின்னர் அவைகளை விட்டுவிடுவது நியாயம் இல்லை தானே . . .
  இந்த குறிப்பினையும் சேர்த்தக் கொண்டு தொழில் ஸ்தான பகுதி அமையட்டடுமே . .
  1) போலி சாமியார்கள்
  2) கோவில் அர்ச்சகர்கள்
  3) சூதாடிகள் (ஷேர் மார்க்கெட் கமாடிட்டி மற்றும் ஃபார்எக்ஸ், குதிரை ரேஸ் மற்றும் சீட்டு, வீடியோ கேம்ஸ்)
  4) sex workers
  5) தீவிரவாதிகள்///////
  1,5ஐ எப்படித் தொழிலாகக் கொள்ளமுடியும்?
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  /////அது சரி . . .
  இத்தனை விளக்கமாக ஆழமாக தெளிவாக சோதிட பாடம் சொல்லும் நீங்கள் . . .
  ஏன் சோதிடத்தையே தொழிலாக வைத்துக் கொள்ளக் கூடாது . . .
  நீங்கள் செய்யும் தொழிலுடன் சேர்த்து
  1) ஆசிரியர்
  2) சோதிடர்
  3) கவிஞர்
  4) எழுத்தாளர்
  இன்னும்.. இன்னும்.. இன்னும் . .
  பன்முக வித்தகரே . .
  பலமுறை வணக்கங்கள் . ./////

  ஆசிரியர்பணி, சோதிடக் கட்டுரைகளை எழுதுவது ஆகியவற்றை சேவையாகச் செய்து வருகிறேன். சேவையைத் தொழிலாக மாற்ற மனம் வரவில்லை!

  ReplyDelete
 5. ///////SUBBIAH said...
  VERY FINE,Your explanation about individual work with Lagna,Sun,Moon is realy good.//////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 6. /////Subbaraman said...
  Mikka magizhchi, aiyaa..Nandri!////

  நல்லது. நன்றி சுப்பாராமன்!

  ReplyDelete
 7. /////சிங்கைசூரி said...
  Simply Superb!/////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 8. //////Naresh said...
  Once again nice post sir!
  The houses 1st, 3rd, 4th, 6th, 10th, 11th have more than 32 points for me.
  Particularly the 4th house has 35 and 6th has 36.
  I was afraid of sun dasa which is the next dasa for me.
  Even though the 10th lord (Mercury) placed in 6th house along with Sun, Now I feel relax as both the planets are having more than 5 parals.
  Hope the Sun dasa will provide me the good results.
  Please let us know sir, what would be the benefit, if the 6th house has more than 35 points?
  Thank you sir.//////

  ஆறாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால், உங்களுக்கு எதிரிகள், நோய், கடன் ஏற்படாமல் அது ஒரு வளமையைத்தரும் சுவாமி!

  ReplyDelete
 9. பத்தாம் வீடு - பட்டையை கெளப்பிடீங்க அய்யா. நன்றி....

  ReplyDelete
 10. எட்டாம் வீட்டைப் பற்றி நீங்கள் விரிவாக எழுதவில்லையா? நான் பார்க்கவில்லையே? கூடுதுறையில் கூட இல்லை, எட்டாம் வீட்டுப்பாடம்.

  ReplyDelete
 11. 10ம் வீட்டைப் பற்றிய மகா (mega) பாடம் நன்று. ஆச்சாரியர்கள், ஆசிரியர்கள் இவர்களுக்கும் குருதான். அமைச்சர் போன்ற பதவி வகிப்பவர்க்கும் குருதான் (அதாவது அவரது அனுகிரகம் வேண்டும்) யாருக்கு எது அமையும் என்பது அவருக்கு கிடைக்கும் ஆதிப்பத்தியம் மற்றும் எந்த ஆதிபத்தியத்தைக் கொண்ட கிரகத்தோடு சேர்க்கையில் இருக்கிறார் என்பதைப் பொருத்தது. எல்லாவற்றையும் பொருமையாக ஆராய்ந்துதான் பலன் காண வேண்டும். ஜோதிடம் எனக்கு ஓரளவுக்காவது கைவருகிறது.

  பொதுவாக கேந்திர கோணாதிபதிகள் 3,6,8,12 அதிபதிகளோடு சேரக் கூடாது என்பார்கள். சேர்ந்தால் பலன் இல்லை என்று அர்த்தமல்ல. அதற்குரிய பலனை அனுபவிக்க வேண்டும் என்றுதான் அர்த்தம்.

  ReplyDelete
 12. தொழில்கள் அதன் பிரிவுகள் பல இருக்கலாம். எந்த பிரிவு தொழிலாக இருந்தால் என்ன. கடை நிலை ஊழியர், உத்தியோகத்தில் clerk, Executive நிலையில் இருப்பவர், முதலாளியாக இருப்பவர், தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர்ந்தவர், அல்லது முதலாளியாக இருந்து தொழிலாளியாக தாழ்ந்து போனவர், அலைந்து திரிந்து நொந்து நூலான பின்பு வேலை கிடைக்குமா அல்லது சும்மா போய் நின்றாலே வேலை கிடக்குமா, இப்படி எந்த பிரிவில் நம் ஜாதகம் அல்லது நாம் யாருக்கு பார்க்கிறோமோ அவர் ஜாதகம் வருகிறது என்று தெரிந்தாலே போதும். இது என் கருத்து.

  இன்னொன்று. இதுவும் என் கருத்தாகத்தான் சொல்கிறேன். தங்கள் பாடத்தை எந்த வகையிலும் குறை சொல்வதற்காக அல்ல. 10ம் அதிபதி புதனாக இருந்து கணக்கர் வேலை செய்து கொண்டிருக்கும் போது அரசியலில் பெரும் பதவி தேடி வந்தால் யார் ஐயா ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க போகிறார்கள். என் ஜாதகத்திற்கு இதுதான் உகந்த வேலை என்று யாரும் எதிலும் எப்போதும் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை.

  ReplyDelete
 13. 10 ம் இடத்தைப்பற்றிய பாடம் புதியவர்களுக்கு நல்லதொகுப்பு. பழைய மாணவர்களுக்கு நல்ல் மீள்பார்வை. நன்றி.

  ReplyDelete
 14. மிக மிக மிக அருமையாக விளக்கி இருக்கின்றீர்கள் sir .

  ReplyDelete
 15. Hello sir,
  My Lagna is meenam,both laknathipathi and 10th athipathi are same,positioned in 4th house with suyavarga 6 parals,but saturn(vakra) is in 10th house with 2 parals.
  Is tat Saturn,who is vakra also with 2 parals harm me more or that will be canceled by aspect of guru in 4th with 6 parals?
  Also,I ve completed BE and still searching for a job,my career is a big question mark???...Will i get a job,if so,what sort of job is mine..??
  Thanks & regards
  Prithvi Raj

  ReplyDelete
 16. simply superb அண்ணா!! கலக்கி விட்டீர்கள்...
  ஒரு சந்தேகம்...நீங்கள் பத்தாம் இடது அதிபதி சென்று அமரும் இடங்கள், பத்தில் அமரும் கிரகங்கள் அமைப்பு, மற்றும் பத்தாம் இடத்தில கூட்டணி கிரகங்கள் பற்றி விளக்கியுள்ளீர்கள், உதாரணம் சனி + குரு கூட்டணி:
  இப்பொழுது பத்தாம் இடம் அதிபதி சனி என்று வைத்துக்கொண்டால் இதே கூட்டணி மற்ற இடங்களில் இருந்தால் என்ன பலன் என்று கூறவில்லையே?

  ReplyDelete
 17. /////Pugazhenthi said...
  பத்தாம் வீடு - பட்டையை கெளப்பிடீங்க அய்யா. நன்றி..../////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி புகழேந்தி!

  ReplyDelete
 18. //////பாபு said...
  எட்டாம் வீட்டைப் பற்றி நீங்கள் விரிவாக எழுதவில்லையா? நான் பார்க்கவில்லையே? கூடுதுறையில் கூட இல்லை, எட்டாம் வீட்டுப்பாடம்./////////

  எட்டாம் வீட்டைப்பற்றிய பாடத்தை ஒரு காரணத்திற்காக நிறுத்திவைத்திருக்கிறேன். பின்னால் வரும்!

  ReplyDelete
 19. //////////பாபு said...
  nanRi/////

  நல்லது நண்பரே!

  ReplyDelete
 20. /////ananth said...
  10ம் வீட்டைப் பற்றிய மகா (mega) பாடம் நன்று. ஆச்சாரியர்கள், ஆசிரியர்கள் இவர்களுக்கும் குருதான். அமைச்சர் போன்ற பதவி வகிப்பவர்க்கும் குருதான் (அதாவது அவரது அனுகிரகம் வேண்டும்) யாருக்கு எது அமையும் என்பது அவருக்கு கிடைக்கும் ஆதிப்பத்தியம் மற்றும் எந்த ஆதிபத்தியத்தைக் கொண்ட கிரகத்தோடு சேர்க்கையில் இருக்கிறார் என்பதைப் பொருத்தது. எல்லாவற்றையும் பொருமையாக ஆராய்ந்துதான் பலன் காண வேண்டும். ஜோதிடம் எனக்கு ஓரளவுக்காவது கைவருகிறது.
  பொதுவாக கேந்திர கோணாதிபதிகள் 3,6,8,12 அதிபதிகளோடு சேரக் கூடாது என்பார்கள். சேர்ந்தால் பலன் இல்லை என்று அர்த்தமல்ல. அதற்குரிய பலனை அனுபவிக்க வேண்டும் என்றுதான் அர்த்தம்.//////

  ஆமாம்! பலவற்றையும் ஆராய்ந்துதான் ஒரு முடிவிற்கு வரவேண்டும். நன்றி ஆனந்த்!

  ReplyDelete
 21. /////ananth said...
  தொழில்கள் அதன் பிரிவுகள் பல இருக்கலாம். எந்த பிரிவு தொழிலாக இருந்தால் என்ன. கடை நிலை ஊழியர், உத்தியோகத்தில் clerk, Executive நிலையில் இருப்பவர், முதலாளியாக இருப்பவர், தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர்ந்தவர், அல்லது முதலாளியாக இருந்து தொழிலாளியாக தாழ்ந்து போனவர், அலைந்து திரிந்து நொந்து நூலான பின்பு வேலை கிடைக்குமா அல்லது சும்மா போய் நின்றாலே வேலை கிடக்குமா, இப்படி எந்த பிரிவில் நம் ஜாதகம் அல்லது நாம் யாருக்கு பார்க்கிறோமோ அவர் ஜாதகம் வருகிறது என்று தெரிந்தாலே போதும். இது என் கருத்து.
  இன்னொன்று. இதுவும் என் கருத்தாகத்தான் சொல்கிறேன். தங்கள் பாடத்தை எந்த வகையிலும் குறை சொல்வதற்காக அல்ல. 10ம் அதிபதி புதனாக இருந்து கணக்கர் வேலை செய்து கொண்டிருக்கும் போது அரசியலில் பெரும் பதவி தேடி வந்தால் யார் ஐயா ஜாதகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க போகிறார்கள். என் ஜாதகத்திற்கு இதுதான் உகந்த வேலை என்று யாரும் எதிலும் எப்போதும் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை.//////

  அப்படிச் செல்வதற்கும் ஜாதகத்தில் (யோக) அமைப்பு இருக்கும்!

  ReplyDelete
 22. /////kmr.krishnan said...
  10 ம் இடத்தைப்பற்றிய பாடம் புதியவர்களுக்கு நல்லதொகுப்பு. பழைய மாணவர்களுக்கு நல்ல மீள்பார்வை. நன்றி.//////

  நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்

  ReplyDelete
 23. /////SUPRIYAATHIYAGU said...
  மிக மிக மிக அருமையாக விளக்கி இருக்கின்றீர்கள் sir .////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 24. //////prithvi said...
  Hello sir,
  My Lagna is meenam,both laknathipathi and 10th athipathi are same,positioned in 4th house with suyavarga 6 parals,but saturn(vakra) is in 10th house with 2 parals.
  Is tat Saturn,who is vakra also with 2 parals harm me more or that will be canceled by aspect of guru in 4th with 6 parals?
  Also,I ve completed BE and still searching for a job,my career is a big question mark???...Will i get a job,if so,what sort of job is mine..??
  Thanks & regards
  Prithvi Raj//////

  லக்கினாதிபதி/பத்தாம் அதிபதி குரு நன்றாக உள்ளார் அல்லவா? எதற்குக் கவலை? கூடிய சீக்கிரம் வேலை கிடைக்கும். கவலையை விடுங்கள்!

  ReplyDelete
 25. /////media said...
  simply superb அண்ணா!! கலக்கி விட்டீர்கள்...
  ஒரு சந்தேகம்...நீங்கள் பத்தாம் இடது அதிபதி சென்று அமரும் இடங்கள், பத்தில் அமரும் கிரகங்கள் அமைப்பு, மற்றும் பத்தாம் இடத்தில கூட்டணி கிரகங்கள் பற்றி விளக்கியுள்ளீர்கள், உதாரணம் சனி + குரு கூட்டணி:
  இப்பொழுது பத்தாம் இடம் அதிபதி சனி என்று வைத்துக்கொண்டால் இதே கூட்டணி மற்ற இடங்களில் இருந்தால் என்ன பலன் என்று கூறவில்லையே?//////

  அதிபதி பொறுப்பையும் சேர்த்து அதிகமான நன்மைகளையே அவர் செய்வார்!

  ReplyDelete
 26. வாத்தியாரே..

  இதனை மூன்றாக பிரித்துப் போட்டிருக்கலாம்..!

  உங்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். படிப்பவர்களுக்கும் ஏதுவாக இருக்கும்..!

  அடுத்துக் கொஞ்சம் மூச்சுவிட நேரம் கொடுங்கள்.. நீங்களும் தயவு செய்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்..!

  மாணாக்கர்களுக்காக உழைப்பதே உங்களது கிரகப் பலனாகிவிட்டது போலும்..!

  வாழ்க வாத்தியார்..!

  ReplyDelete
 27. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  வாத்தியாரே..
  இதனை மூன்றாக பிரித்துப் போட்டிருக்கலாம்..!
  உங்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். படிப்பவர்களுக்கும் ஏதுவாக இருக்கும்..!
  அடுத்துக் கொஞ்சம் மூச்சுவிட நேரம் கொடுங்கள்.. நீங்களும் தயவு செய்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்..!
  மாணாக்கர்களுக்காக உழைப்பதே உங்களது கிரகப் பலனாகிவிட்டது போலும்..!
  வாழ்க வாத்தியார்..!/////

  நான் மகர ராசிக்காரன். உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டது. அடுததவர்களுக்காக உழைக்கும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் தொடர்ந்து பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
  வாத்தியாரின்மேல் உங்களுக்கு உள்ள அக்கறை வாழ்க! நன்றி ஊனாதானா!

  ReplyDelete
 28. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  ஜாதகத்தில் பத்தாம் வீடு பற்றிய பாடம் மிகவும் தெளிவாகவும்,நிறைய விபரங்கள் அடங்கியதாகவும் உள்ளது.பலமுறைகள் படித்து ஞாபகத்தில் வைக்க வேண்டிய குறிப்புகள் நிறைந்து உள்ளது.
  தங்களுக்கு மிக்க நன்றி.
  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-05-25

  ReplyDelete
 29. Dear Sir

  10th Lord is in 10th Place(SUN-Simmam-4 Suyaparal with Sukkiran).

  Viruchiga Lagnam.

  Lengthy and Very Nice Lesson Sir.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 30. Vankkam sir..
  Of late i am reading your blogs regularly ,cant stop myself from learning
  this good science,all because of your excellent writing skills ..

  I read your lesson on lagna,lagna lord .
  I found this concept very confusing ...
  lagna lord in 12th is weak ,I took up my chart..
  For me its kanya lagna ,mercury+sukra in 12th in simha ..
  But lagna has 6 parals,mercury has 5 parals ..
  How does this happen ?mercury is clearly weak as it is in 12th ..

  Idhu strong lagnama illa romba weak positionaa?

  ReplyDelete
 31. /////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  ஜாதகத்தில் பத்தாம் வீடு பற்றிய பாடம் மிகவும் தெளிவாகவும்,நிறைய விபரங்கள் அடங்கியதாகவும் உள்ளது.பலமுறைகள் படித்து ஞாபகத்தில் வைக்க வேண்டிய குறிப்புகள் நிறைந்து உள்ளது.
  தங்களுக்கு மிக்க நன்றி.
  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி////////

  நல்லது. நன்றி தட்சிணாமூர்த்தி

  ReplyDelete
 32. ////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  10th Lord is in 10th Place(SUN-Simmam-4 Suyaparal with Sukkiran).
  Viruchiga Lagnam.
  Lengthy and Very Nice Lesson Sir.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman////

  நல்லது. நன்றி ராஜாராமன்!

  ReplyDelete
 33. /////Sowmya said...
  Vankkam sir..
  Of late i am reading your blogs regularly ,cant stop myself from learning
  this good science,all because of your excellent writing skills ..
  I read your lesson on lagna,lagna lord .
  I found this concept very confusing ...
  lagna lord in 12th is weak ,I took up my chart..
  For me its kanya lagna ,mercury+sukra in 12th in simha ..
  But lagna has 6 parals,mercury has 5 parals ..
  How does this happen ?mercury is clearly weak as it is in 12th ..
  Idhu strong lagnama illa romba weak positionaa?///////

  ஜோதிடத்தில் ஒரு குறிப்பிட்ட விதி என்று இல்லை!பல விதிகள் உள்ளன! 12ஆம் இடத்தில் இருந்தாலும் இருவரும் சுயவர்க்கத்தில் நல்ல பரல்களுடன் உள்ளார்கள். ஆகவே அவர்கள் நன்மையைச் செய்வார்கள். தங்களுடைய தசா/புத்திகளில் செய்வார்கள்!

  ReplyDelete
 34. வாத்தியார் ஐயா!
  அந்நிய தேசத்தின் மாலை வணக்கம்.

  எமது தாய், தெய்வமாக என்னை காக்கும் எனது தந்தை மற்றும் முன்னோர்களின் புண்ணியத்தால் இன்று நல்ல நிலைமையில் உறவினர்களை போன்ற சுற்றம் மற்றும் நண்பர்களின் துணையுடன் உள்ளேன் ஐயா.

  காலகிரகம் மற்றும் கெட்ட நேரங்கள் அனைத்தும் கானல் நிறைபோல் மாறி விட்டது

  சூரிய திசையில், சூரிய புத்தியால் துன்பங்கள் அனைத்தும் மாறி நல்ல தோர்! தாங்கள் கூறியுள்ளது போல் அரசு மருத்துவத்துறையில் எனக்கும் மற்றும் என்னை சார்த்து உள்ள ஜீவன்களுக்கு வேண்டி அரசு உஸ்தியோகத்தில் மிகவும் நல்ல முறையில் உள்ளேன் ஐயா

  ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் என வாழ வேண்டி சகல கலைகளை தந்துகொண்டு இருக்கும் ஐயா அவர்களுக்கு மனதார நன்றி ஐயா!

  ஆன்மிகம் மற்றும் ஜோதிடம், புண்ணியம், தர்மம், நற்செயல் கலை, பண்பாடு, ஒழுக்கம், உயர்ந்த மனப்பான்மை , சகிப்பு தன்மை என நல்ல சகல கலைகளை தந்துகொண்டு இருக்கும் ஐயா அவர்களுக்கு மனதார நன்றி ஐயா!


  இறைவனின் அருளால் நல்ல தோறு துணைவியை, பெற்றவர்கள் தேடிக்கொண்டு உள்ளனர்

  காலகிரகம் மாறிவிட்டதால் கல்யாணம் நன்றாக பெற்றவர்களின் முன்னிலையில் எல்லாம் வல்ல எம்பெருமான் திருவருளால் நடைபெறும். வகுப்பறையில் உள்ள அனைத்து நல்ல உள்ளங்கள் வாழ்த்து கூற வேண்டும்

  சுற்றம் சூழ! அதுவெம் நன்றாக நடைபெற இப்பாலகனை ஆசிர்வதிக்க வேண்டும்.

  வாழ்கவளமுடன்!
  வாழ்கவளமுடன்!
  வாழ்க வளமுடன் >>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<

  பத்தாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால்:

  மருத்துவ மனைகள் ஆகிய ஒன்றில் பணி செய்ய நேரிடும். இந்த அமைப்பு அதாவது பத்தாம் வீட்டு அதிபதி ஆறில் வந்து அமர்வது - சொந்தத் தொழிலிற்கும், வணிகம் செய்வதற்கும் ஏற்றதல்ல. ஜாதகன் வேலைக்குச் செல்வது உத்தமம். அதில் அவன் வளர்ச்சியடைவான். உங்கள் மொழியில் சொன்னால் வெற்றி பெறுவான்.

  ***********************************

  நன்றி ஐயா மற்றும் மிகவும் சரியாக உள்ளது அடியேனுக்கு


  **********************************************************************

  எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எல்லோருடைய கோரிக்கைகளும், எண்ணங்களும் நிறைவேறட்டும். என்னுடைய விருப்பமும் அதுதான்.

  கருணை மிக்கவர் கடவுள். அவருக்கு எல்லா ஜீவராசிகளும் ஒன்றுதான்!


  >>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<

  அடியவனின் எண்ணம் போல் தங்களின் மனது மற்றும் சிந்தனை ஐயா

  வாத்தியாரின் வகுப்பறையில் எழுத்து பிழை, சொல்லு பிழை, விபரம் மற்றும் கருத்து தெரியாமல் எதையேனும் வரைந்து இருந்தால் தங்களின் பிள்ளை போல் மன்னிக்க வேண்டும் ஐயா

  ஆசிரியருக்கு அனைத்து உரிமையும் உண்டு!

  ReplyDelete
 35. ஐயா! இருக்கும் ஜீவனை மேற்கண்டது மாதிரியாக வரைந்து கொண்டு போகி விடுவீர்கள் போல்!
  இப்படி எல்லாம் எழுதுவது நீயமா ஐயா


  அருமை! அருமை! அருமை!
  அத்தனையும் அருமை!

  சத்தியமாக அதிலொரு பரம திருப்தி உள்ளது என்பது நூறு சதமானம் உண்மை ஐயா!

  போகும் போது ஒன்றும் கொண்டு போவது இல்லை புண்ணியத்தை தவிர!


  *********************************

  SP.VR. SUBBAIYA said...
  ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  வாத்தியாரே..
  இதனை மூன்றாக பிரித்துப் போட்டிருக்கலாம்..!
  உங்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். படிப்பவர்களுக்கும் ஏதுவாக இருக்கும்..!
  அடுத்துக் கொஞ்சம் மூச்சுவிட நேரம் கொடுங்கள்.. நீங்களும் தயவு செய்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்..!
  மாணாக்கர்களுக்காக உழைப்பதே உங்களது கிரகப் பலனாகிவிட்டது போலும்..!
  வாழ்க வாத்தியார்..!/////

  நான் மகர ராசிக்காரன். உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டது. அடுததவர்களுக்காக உழைக்கும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் தொடர்ந்து பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
  வாத்தியாரின்மேல் உங்களுக்கு உள்ள அக்கறை வாழ்க! நன்றி ஊனாதானா!
  Tuesday, May 25, 2010 10:36:00 அம

  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  ReplyDelete
 36. kanna said..
  வாத்தியார் ஐயா!
  அந்நிய தேசத்தின் மாலை வணக்கம்.
  எமது தாய், தெய்வமாக என்னை காக்கும் எனது தந்தை மற்றும் முன்னோர்களின் புண்ணியத்தால் இன்று நல்ல நிலைமையில் உறவினர்களை போன்ற சுற்றம் மற்றும் நண்பர்களின் துணையுடன் உள்ளேன் ஐயா.
  காலகிரகம் மற்றும் கெட்ட நேரங்கள் அனைத்தும் கானல் நிறைபோல் மாறி விட்டது
  சூரிய திசையில், சூரிய புத்தியால் துன்பங்கள் அனைத்தும் மாறி நல்ல தோர்! தாங்கள் கூறியுள்ளது போல் அரசு மருத்துவத்துறையில் எனக்கும் மற்றும் என்னை சார்த்து உள்ள ஜீவன்களுக்கு வேண்டி அரசு உஸ்தியோகத்தில் மிகவும் நல்ல முறையில் உள்ளேன் ஐயா
  ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் என வாழ வேண்டி சகல கலைகளை தந்துகொண்டு இருக்கும் ஐயா அவர்களுக்கு மனதார நன்றி ஐயா!
  ஆன்மிகம் மற்றும் ஜோதிடம், புண்ணியம், தர்மம், நற்செயல் கலை, பண்பாடு, ஒழுக்கம், உயர்ந்த மனப்பான்மை , சகிப்பு தன்மை என நல்ல சகல கலைகளை தந்துகொண்டு இருக்கும் ஐயா அவர்களுக்கு மனதார நன்றி ஐயா!
  இறைவனின் அருளால் நல்ல தோறு துணைவியை, பெற்றவர்கள் தேடிக்கொண்டு உள்ளனர்
  காலகிரகம் மாறிவிட்டதால் கல்யாணம் நன்றாக பெற்றவர்களின் முன்னிலையில் எல்லாம் வல்ல எம்பெருமான் திருவருளால் நடைபெறும். வகுப்பறையில் உள்ள அனைத்து நல்ல உள்ளங்கள் வாழ்த்து கூற வேண்டும்
  சுற்றம் சூழ! அதுவெம் நன்றாக நடைபெற இப்பாலகனை ஆசிர்வதிக்க வேண்டும்.
  வாழ்கவளமுடன்!
  வாழ்கவளமுடன்!
  வாழ்க வளமுடன்
  >>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<
  பத்தாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால்:
  மருத்துவ மனைகள் ஆகிய ஒன்றில் பணி செய்ய நேரிடும். இந்த அமைப்பு அதாவது பத்தாம் வீட்டு அதிபதி ஆறில் வந்து அமர்வது - சொந்தத் தொழிலிற்கும், வணிகம் செய்வதற்கும் ஏற்றதல்ல. ஜாதகன் வேலைக்குச் செல்வது உத்தமம். அதில் அவன் வளர்ச்சியடைவான். உங்கள் மொழியில் சொன்னால் வெற்றி பெறுவான்.
  ***********************************
  நன்றி ஐயா மற்றும் மிகவும் சரியாக உள்ளது அடியேனுக்கு
  **********************************************************************
  எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எல்லோருடைய கோரிக்கைகளும், எண்ணங்களும் நிறைவேறட்டும். என்னுடைய விருப்பமும் அதுதான்.
  கருணை மிக்கவர் கடவுள். அவருக்கு எல்லா ஜீவராசிகளும் ஒன்றுதான்!
  >>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<
  அடியவனின் எண்ணம் போல் தங்களின் மனது மற்றும் சிந்தனை ஐயா
  வாத்தியாரின் வகுப்பறையில் எழுத்து பிழை, சொல்லு பிழை, விபரம் மற்றும் கருத்து தெரியாமல் எதையேனும் வரைந்து இருந்தால் தங்களின் பிள்ளை போல் மன்னிக்க வேண்டும் ஐயா
  ஆசிரியருக்கு அனைத்து உரிமையும் உண்டு!//////

  திருமணம் நிச்சயம் ஆனவுடன் தெரியப்படுத்துங்கள். நேரில் வருகிறேன்.வாழ்த்தைச் சொல்கிறென். எம்பெருமான் பழநியப்பன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. ///////kanna said...
  ஐயா! இருக்கும் ஜீவனை மேற்கண்டது மாதிரியாக வரைந்து கொண்டு போகி விடுவீர்கள் போல்!
  இப்படி எல்லாம் எழுதுவது நியாயமா ஐயா
  அருமை! அருமை! அருமை!
  அத்தனையும் அருமை!
  சத்தியமாக அதிலொரு பரம திருப்தி உள்ளது என்பது நூறு சதமானம் உண்மை ஐயா!
  போகும் போது ஒன்றும் கொண்டு போவது இல்லை புண்ணியத்தை தவிர!
  *********************************
  SP.VR. SUBBAIYA said...
  ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  வாத்தியாரே..
  இதனை மூன்றாக பிரித்துப் போட்டிருக்கலாம்..!
  உங்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். படிப்பவர்களுக்கும் ஏதுவாக இருக்கும்..!
  அடுத்துக் கொஞ்சம் மூச்சுவிட நேரம் கொடுங்கள்.. நீங்களும் தயவு செய்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்..!
  மாணாக்கர்களுக்காக உழைப்பதே உங்களது கிரகப் பலனாகிவிட்டது போலும்..!
  வாழ்க வாத்தியார்..!/////
  நான் மகர ராசிக்காரன். உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டது. அடுததவர்களுக்காக உழைக்கும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் தொடர்ந்து பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
  வாத்தியாரின்மேல் உங்களுக்கு உள்ள அக்கறை வாழ்க! நன்றி ஊனாதானா!//////////


  போகும்போது அறியாமல் செய்த பாவங்களும் உடன் வரும் சுவாமி!:-))))))))

  ReplyDelete
 38. Vanakam sir,

  The tenth house paadam muthalla padithaalum thriumba vanthu padika puthusavum interestingavum iruku sir...enaku rendu kelvi iruku .......ashtavarka veedin paralum? suya varga paralum evalu mukiyam....ondu vanthu nirya irunthu mathathu kuranju iruntha enna effect sir? second sir guruvum budhanum patham veedil iruntha vanthu happiness poivdum endu iruku? avangolada suryanum senthu iruntha will this cancel out sir?

  Thanks
  Thauja

  ReplyDelete
 39. Good Morning Sir..
  Pardon me if my doubts are silly/confusing/annoying .

  (I am not trying to do a personal reading ,rather i want to know
  astrologer's way of looking at things)

  Based on placement on planets ,we tend to arrive at a decision.
  But if we look at Sarva AshtaVarga rating for a house ,it contradicts
  the conclusion we arrived at ..


  For example ,if at look at my 4th house its dhanus ,its lord guru(along with ketu) is
  in 3rd in vrischika with 3 parals (so my happiness,mother ,primary education
  are weak).When the 4th house and its significations are weak ,the
  SarvaAshtaVarga rating for that house is 31 .(quite contradictory to
  the weak lord of 4th).
  So,which one has a greater say ,the lord of a house ,its position,
  parals or the parals gained by the house in SarvaAshtavarga ?

  I am puzzled and confused .

  ReplyDelete
 40. //////Thanuja said...
  Vanakam sir,
  The tenth house paadam muthalla padithaalum thriumba vanthu padika puthusavum interestingavum iruku sir...enaku rendu kelvi iruku .......ashtavarka veedin paralum? suya varga paralum evalu mukiyam....ondu vanthu nirya irunthu mathathu kuranju iruntha enna effect sir? ///////

  சர்வ அஷ்டகவர்கா என்பது நீங்கள் சொல்லும், வீடுகள், அதன் அதிபதி, அவர் அமர்ந்திருக்கும் இடம் ஆகியவற்றிற்கெல்லாம் மதிப்பெண்கள் கொடுக்கபெற்று வரும் கூட்டல் தொகையாகும். ஆகவே அதை நீங்கள் கணக்கிற்கு எடுத்துக்கொண்டால் போதும்.
  வீட்டிற்கு அதிகப் பரல்கள் வருவதால், வீட்டின் அதிபதிக்கும் அவருடைய சுயவர்க்கப்பரல்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை! 10ஆம் வீட்டில் அதிகப்பரல்கள் இருந்தால் அதற்குத் தனிப்பலன். பத்தாம் அதிபதியின் சுயவர்க்கப்பரல் குறைந்திருந்தால் அதற்குத் தனிப்பலன். அதிபதியின் பரல்களையும் மீறி வீட்டின் ஒட்டுமொத்தப் பரல்களால் ஜாதகனுக்கு நன்மைகள் உண்டாகும்.

  செல்வமுள்ள குடும்பம். அப்பா நோயாளி. அதுதான் கணக்கு! (புரிந்ததா இல்லையா?)
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  ////second sir guruvum budhanum patham veedil iruntha vanthu happiness poivdum endu iruku? avangolada suryanum senthu iruntha will this cancel out sir?
  Thanks
  Thauja/////

  ஒரு வீட்டில் மூன்று பேர்கள் இருந்தால் அது கிரகயுத்தக்கணக்கில் வரும். தலைவலி, முதுகுவலியுடன் காய்ச்சலும் வந்தமாதிரி. specialist Doctorதான் வந்து பார்க்க வேண்டும்!:-))))))

  ReplyDelete
 41. /////////Sowmya said...
  Good Morning Sir..
  Pardon me if my doubts are silly/confusing/annoying .
  (I am not trying to do a personal reading ,rather i want to know
  astrologer's way of looking at things)
  Based on placement on planets ,we tend to arrive at a decision.
  But if we look at Sarva AshtaVarga rating for a house ,it contradicts
  the conclusion we arrived at ..
  For example ,if at look at my 4th house its dhanus ,its lord guru(along with ketu) is
  in 3rd in vrischika with 3 parals (so my happiness,mother ,primary education
  are weak).When the 4th house and its significations are weak ,the
  SarvaAshtaVarga rating for that house is 31 .(quite contradictory to
  the weak lord of 4th).
  So,which one has a greater say ,the lord of a house ,its position,
  parals or the parals gained by the house in SarvaAshtavarga ?
  I am puzzled and confused///////

  சர்வ அஷ்டகவர்கா என்பது நீங்கள் சொல்லும், வீடுகள், அதன் அதிபதி, அவர் அமர்ந்திருக்கும் இடம் ஆகியவற்றிற்கெல்லாம் மதிப்பெண்கள் கொடுக்கபெற்று வரும் கூட்டல் தொகையாகும். ஆகவே அதை நீங்கள் கணக்கிற்கு எடுத்துக்கொண்டால் போதும்.

  வீட்டிற்கு அதிகப் பரல்கள் வருவதால், வீட்டின் அதிபதிக்கும் அவருடைய சுயவர்க்கப்பரல்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை! 4ஆம் அதிபதி அந்த வீட்டிற்குப் 12ல் மறைந்தாலும், நான்காம் வீட்டில் நல்ல பரல்கள் எனும்போது, ஜாதகனுக்கு 4ஆம் வீட்டிற்கான பலன்கள் கிடைக்கும்.
  விளக்கம்போதுமா?

  ReplyDelete
 42. Thanks a lot ,sir .
  For answering both my questions .
  Have a Good Day !

  ReplyDelete
 43. /////Sowmya said...
  Thanks a lot ,sir .
  For answering both my questions .
  Have a Good Day !/////

  நல்லது. நன்றி சகோதரி!

  ReplyDelete
 44. ஜோதிடம் பற்றி அறிவியல் பூர்வமான விளக்கத்துடன் படித்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் ப்ளாக் வழியாக ...மிகவும் நன்றி உங்கள் சேவை இந்த உலகத்திற்கு தேவை ...வாழ்த்துக்கள் .....
  தர்மா
  "துன்பங்களை நீக்கி இன்பங்களை பெருக்கும் தேவார பாடல்கள் - புதிய வெளியீடு"
  www.devarathirumurai.blog.com

  இங்கு தேவாரம் & திருமுறை பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் கேட்கலாம்.

  ReplyDelete
 45. respected Guruji

  One of the very best explained lesson,required in today's competitive world and one can fix their professional GOAL accordingly,so has to avoid their mental agony and stress in life.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com