மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.5.10

நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள்?

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்
--------------------------------------------------------------------------------
நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள்?

புகழ்பெற்ற பாடல்கள் - அதாவது இறைவனின் புகழைச் சொல்லும் பாடல்களின் வரிசையில் அடுத்த பாடலை இன்று பதிவாக இடுவதில் மகிழ்வு கொள்கிறேன்!
---------------------------------------------------------------------------
”நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள்?” என்று சிலரைக் கேட்டால், ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒருவிதமான பதில் வரும்! மனதில் உள்ள ஆசாபாசங்கள் அல்லது அபிலாஷைகள் வெளிப்படும். அனேகமாக சுயநலம் உடையதாகவே இருக்கும். அதைப் பற்றி எழுதினால் பல பக்கங்களுக்கு எழுதலாம். அனைவருக்கும் அது தெரிந்ததே: அதனால் எழுதவில்லை!

இங்கே ஒருவர் என்னவாக ஆகவேண்டும் என்று அருமையாக எழுதியதைக் கொடுத்துள்ளேன். அதை ஒருவர் அற்புதமாகப் பாடியும் கொடுத்துள்ளார். இறைவனின் புகழைச் சொல்லும் அந்தப் பாடலும் மிகவும் பிரபலமான பாடலே!
-------------------------------------------------------------------------
ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்
ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்

க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன்
க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன்
ப‌சும் புல்லானாலும் முருக‌ன் அருளால் பூ ஆவேன்
நான்...

ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்

பொன்னானாலும் வ‌டிவேல் செய்யும் பொன்னாவேன்
ப‌னி பூவானாலும் ச‌ர‌வ‌ண‌ப்பொய்கை பூவ‌வேன்
பொன்னானாலும் வ‌டிவேல் செய்யும் பொன்னாவேன்
ப‌னி பூவானாலும் ச‌ர‌வ‌ண‌ப்பொய்கை பூவ‌வேன்

த‌மிழ் பேச்சானாலும் திருப்புக‌ழ்விள‌க்க‌ பேச்சாவேன்
த‌மிழ் பேச்சானாலும் திருப்புக‌ழ்விள‌க்க‌ பேச்சாவேன்
ம‌ன‌ம்பித்தானாலும் முருக‌ன் அருளால் முத்தாவேன்
நான்...

ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
ப‌ழ‌ச்சுவையான‌லும் ப‌ஞ்சாமிர்த‌ச் சுவையாவேன்
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
ப‌ழ‌ச்சுவையான‌லும் ப‌ஞ்சாமிர்த‌ச் சுவையாவேன்

அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன்
அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன்
த‌னி உயிரானாலும் முருக‌ன் அருளால் ப‌யிராவேன்
நான்...

ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்
க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன்
ப‌சும் புல்லானாலும் முருக‌ன் அருளால் பூ ஆவேன்
நான்...

ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்

முருகா முருகா முருகா முருகா முருகா...

பாடலை எழுதியவர்: தமிழ்நம்பி
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
-------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

26 comments:

 1. i feel really happy to see the lyrics of famous devotional songs.really great job sir!!!thank you

  ReplyDelete
 2. //////govind said...
  i feel really happy to see the lyrics of famous devotional songs.really great job sir!!!thank you/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 3. "செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
  நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
  அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
  படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே"
  ‍‍.............குலசேகர ஆழ்வார்!

  தாங்கள் குறிப்பிட்டுள்ள பாடலின் முன்னோடிப் பாடல் இதுதான்.இன்னும் 9 பாடல்கள் உண்டு.ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அசையாப் பொருளாக இருக்க‌
  ஆவல் கொள்கிறார் ஆழ்வார்.

  ReplyDelete
 4. வாத்தி (யார்) ஐயா!

  வணக்கம்.

  என்னப்பப்பன் சுப்ரமணியனின்
  அரு படை வீடுகளில்
  இயற்கையின் சொந்த வீட்டில் இருப்பது

  'பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்'!

  மட்டும் என்றால் அது மிகை அல்ல. ஐயா!

  ReplyDelete
 5. Dear Sir

  Padal Arumai sir.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 6. manidhana aaganumnu mattum aasaiye illayama avaruku?

  ReplyDelete
 7. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

  பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் கோபுரத்தில் உள்ளவற்றில்,
  நாவல் மரத்தடியில் முருகன் ஒளவையாரை
  சுட்ட பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?என்று கேட்டதை நினைவுபடுத்தி அமைத்துள்ளதையும்,மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகன் இருப்பதையும்,சேர்த்து ரசிக்கும் படி படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் நன்கு அமைந்துள்ளது.

  தமிழ்நம்பி அவர்களால் எழுதி,

  டி.எம்.சௌந்தரராஜன் அவர்களால்
  பாடப்பெற்ற,
  "ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்", என்று தொடங்கி இறைவனின் புகழைச் சொல்லும் இந்தப் பாடலை படிக்க ஆரம்பிக்கும் போதே,அந்தப் பாடலின் ஒலி மனதில் அதே ராகம்,மெட்டுடன் கேட்க முடிகிறது.அந்த அளவுக்கு ரசித்த அந்த பாடல் இன்று தங்களால் நினைவூட்டப்பெற்று மேலும் சிறப்படைகிறது.

  தங்களுக்கு மிக்க நன்றி.

  வணக்கம்.

  தங்களன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-05-22

  ReplyDelete
 8. ஆளுக்கொரு ஆசை . .
  சின்ன சின்ன ஆசை . ..

  ஆடும் போது அரவா உன் அடியில் இருக்க வேண்டும் எனப் பாடிய காரைக்கால் அம்மை பாடினார்

  பிறக்காமல் இருக்கும்
  வரம் தான் வேண்டும். . .
  (வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என வள்ளுவப் பெருமான் சொன்ன பிறகு என்ன வேண்டும் இந்த உயிர்க்கு . . .)

  பாடலை மாற்றியமைக்கு நன்றி . .

  கலையும் மேகத்தைப் போல . .
  கரையும் சோகங்கள் என்ற வரி

  நெஞ்சைத் தொடுகிறது . . .

  நன்றி ஆசானே . . .

  ReplyDelete
 9. உள்ளேன் ஐயா...

  Keep goin...

  ReplyDelete
 10. Thanks a lot for giving me an opportunity to remember the grand old song of TMS

  You are great indeed, Vathiyar sir.

  subbu rathinam.

  ReplyDelete
 11. /////kmr.krishnan said...
  "செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
  நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
  அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
  படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே"
  ‍‍.............குலசேகர ஆழ்வார்!
  தாங்கள் குறிப்பிட்டுள்ள பாடலின் முன்னோடிப் பாடல் இதுதான்.இன்னும் 9 பாடல்கள் உண்டு.ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அசையாப் பொருளாக இருக்க‌ ஆவல் கொள்கிறார் ஆழ்வார்.//////

  அருமை! முடிந்தால் மற்றபாடல்களையும் பிடித்துக்கொடுங்கள் கிருஷ்ணன் சார்.!

  ReplyDelete
 12. ////kanna said...
  வாத்தி (யார்) ஐயா!
  வணக்கம்.
  என்னப்பப்பன் சுப்ரமணியனின் அறுபடை வீடுகளில் இயற்கையின் சொந்த வீட்டில் இருப்பது
  'பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்'! மட்டும் என்றால் அது மிகை அல்ல. ஐயா!/////

  நன்றி கண்ணன்!

  ReplyDelete
 13. /////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Padal Arumai sir.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman/////

  நன்றி ராஜாராமன்!

  ReplyDelete
 14. /////siva said...
  manidhana aaganumnu mattum aasaiye illayama avaruku?//////

  பிறவியே வேண்டாம் என்பதுதான் அடியார்களின் முதல் சிந்தனை சுவாமி! மீண்டும் பிறந்து துன்பங்களில் உழல அவர்களுக்கு மனமில்லை!

  ReplyDelete
 15. /////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் கோபுரத்தில் உள்ளவற்றில்,
  நாவல் மரத்தடியில் முருகன் ஒளவையாரை சுட்ட பழம் வேண்டுமா?சுடாத பழம் வேண்டுமா?என்று கேட்டதை நினைவுபடுத்தி அமைத்துள்ளதையும்,மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகன் இருப்பதையும்,சேர்த்து ரசிக்கும் படி படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் நன்கு அமைந்துள்ளது.
  தமிழ்நம்பி அவர்களால் எழுதி,
  டி.எம்.சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்ற,
  "ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்", என்று தொடங்கி இறைவனின் புகழைச் சொல்லும் இந்தப் பாடலை படிக்க ஆரம்பிக்கும் போதே,அந்தப் பாடலின் ஒலி மனதில் அதே ராகம்,மெட்டுடன் கேட்க முடிகிறது.அந்த அளவுக்கு ரசித்த அந்த பாடல் இன்று தங்களால் நினைவூட்டப்பெற்று மேலும் சிறப்படைகிறது.
  தங்களுக்கு மிக்க நன்றி. வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி/////

  நல்லது. நன்றி தட்சினாமூர்த்தி!

  ReplyDelete
 16. ////visu said...
  ஆளுக்கொரு ஆசை . .
  சின்ன சின்ன ஆசை . ..
  ஆடும் போது அரவா உன் அடியில் இருக்க வேண்டும் எனப் பாடிய காரைக்கால் அம்மை பாடினார்
  பிறக்காமல் இருக்கும்
  வரம் தான் வேண்டும். . .
  (வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என வள்ளுவப் பெருமான் சொன்ன பிறகு என்ன வேண்டும் இந்த உயிர்க்கு . . .)
  பாடலை மாற்றியமைக்கு நன்றி .
  கலையும் மேகத்தைப் போல . .
  கரையும் சோகங்கள் என்ற வரி
  நெஞ்சைத் தொடுகிறது . .
  நன்றி ஆசானே . . .////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 17. /////சீனு said...
  உள்ளேன் ஐயா...//////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. ////sury said...
  Thanks a lot for giving me an opportunity to remember the grand old song of TMS
  You are great indeed, Vathiyar sir.
  subbu rathinam.////

  நல்லது. உங்களின் ரசனை உணர்வு வாழ்க!

  ReplyDelete
 19. ayya vanakkam.

  thiruchenthoor muruganai patri

  solvatharkku mun nan engal

  ooril irukkum thirumuruganpoondiyai

  patri ungalukku solla vendum.

  en maganukku urine tube il

  operation seiya vendum endru

  doctorgal theermanamaga

  sollivittargal.veru vazhiyum illai

  endrum,engalal ondrum seiya

  iyalathu endrum sonnargal.

  enakku therinthathellam muruganin

  pathangalthan.thirumurugan

  poondikke chendru emperumanin

  pathangalil en maganai padukka

  vaithu kanneer malga vendinen.

  piragu maganai azhaiththu kondu

  kovail ulla oru periya

  kuzhanthaigal hosphitalukku chendru

  engal oor maruththuvarin reports

  ellam koduthen.avargalum en maganai

  niraiya checkupgal seithargal.

  nanum pathtrathodu kaathuk kondu

  irunthen.pinbu ennai avargal ulle

  azhaiththargal.bayaththudanchendren

  enna oru athisayam?avargal solla

  kettu ennnal namba mudiyavilla.

  enna sonnargal theriyuma?

  ungal magan paripoorana arogyamaga

  ullan.operation thevai illai endru.

  appozhuthuthan nan muzhumaiyaga

  muruganin deiveega sakthiyai

  unarnthen.muruganai ennai thavira

  yaarum unarnthu irukka maattargal

  endru naan uruthiyaga kooruven.

  en magan peyar enna theriyuma?

  SOUNDARYAN

  endru azhgana muruganin peyarai

  vaiththullen.avanum ithu nal

  varaiyulum avan arulal nandraga

  irukkiran.ithai padippavargal

  ellorum thirumurugan poondi vanthu

  avan arul perumaru kettukolgiren.

  ethavathu thagaval vendum endral

  9345312346 endra numberukku call

  pannungal.nandri vanakkam.

  by arjunchandarsingh@gmail.com.

  ithai publish seiyungal ayya.

  muruganai patri matravargalum

  therinthu kollattum.

  ReplyDelete
 20. ////cs said...
  ayya vanakkam.thiruchenthoor muruganai patri solvatharkku mun nan engal ooril irukkum thirumuruganpoondiyai patri ungalukku solla vendum.
  en maganukku urine tubeil operation seiya vendum endru doctorgal theermanamaga sollivittargal.veru vazhiyum illai endrum,engalal ondrum seiya iyalathu endrum sonnargal. enakku therinthathellam muruganin
  pathangalthan.thirumurugan poondikke chendru emperumanin pathangalil en maganai padukka vaithu kanneer malga vendinen. piragu maganai azhaiththu kondu kovail ulla oru periya kuzhanthaigal hosphitalukku chendru
  engal oor maruththuvarin reports ellam koduthen.avargalum en maganai niraiya checkupgal seithargal.
  nanum pathtrathodu kaathuk kondu irunthen.pinbu ennai avargal ulle azhaiththargal.bayaththudanchendren
  enna oru athisayam?avargal solla kettu ennnal namba mudiyavilla.
  enna sonnargal theriyuma?ungal magan paripoorana arogyamaga ullan.operation thevai illai endru.
  appozhuthuthan nan muzhumaiyaga muruganin deiveega sakthiyai unarnthen.muruganai ennai thavira
  yaarum unarnthu irukka maattargal endru naan uruthiyaga kooruven.
  en magan peyar enna theriyuma?
  SOUNDARYAN endru azhgana muruganin peyarai vaiththullen.avanum ithu nal varaiyulum avan arulal nandraga irukkiran.ithai padippavargal ellorum thirumurugan poondi vanthu avan arul perumaru kettukolgiren.
  ethavathu thagaval vendum endral 9345312346 endra numberukku call pannungal.nandri vanakkam.
  by arjunchandarsingh@gmail.com.
  ithai publish seiyungal ayya.
  muruganai patri matravargalum
  therinthu kollattum.////////

  உங்களுடைய தகவல்களுக்கு நன்றி நண்பரே! திருமுருகன்பூண்டியைப்பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவனாசியில் இருந்து மங்களம் செல்லும் வழியில்தானே இருக்கிறது? அதைச் சொல்லவில்லையே நீங்கள்?

  ReplyDelete
 21. திருவேங்கடமுடையான்

  தரவு கொச்சகக் கலிப்பா

  ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்*
  ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்*
  கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து*
  கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. 1

  ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ*
  வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்*
  தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்*
  மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே. 2

  பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்*
  துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்*
  மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்*
  பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே. 3

  ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்*
  கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு*
  பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து*
  செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே. 4

  கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*
  இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*
  எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்*
  தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே. 5

  மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்*
  அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்*
  தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்*
  அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்த னானவனே. 6

  வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ்* மன்னவர்தம்
  கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்*
  தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்*
  கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே. 7

  பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்*
  முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்*
  வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்*
  நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே. 8

  செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!*
  நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்*
  அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்*
  படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே. 9

  உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ்* உருப்பசிதன்
  அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்*
  செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்*
  எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே. 10

  மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன்*
  பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி*
  கொன்னவிலும் கூர்வேல் குலசே கரன்சொன்ன*
  பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே. 11

  குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்

  ReplyDelete
 22. ayya vanakkam.
  thirumurugan poondi,

  avinasiyilirunthu tirupur sellum

  paathaiyil sumaar 4 km dhooraththil

  ullathu enbathai theriyap

  paduththugiren.

  nandri .vanakkam.

  ReplyDelete
 23. ////////Blogger kmr.krishnan said...
  திருவேங்கடமுடையான்
  தரவு கொச்சகக் கலிப்பா

  ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான்வேண்டேன்*
  ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்*
  கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து*
  கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. 1

  ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ*
  வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்*
  தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்*
  மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே. 2

  பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்*
  துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்*
  மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்*
  பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே. 3

  ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்*
  கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு*
  பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து*
  செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே. 4

  கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*
  இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*
  எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்*
  தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே. 5

  மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்*
  அன்னவர்தம் பாடலொடும் ஆடலவை ஆதரியேன்*
  தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்*
  அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்த னானவனே. 6

  வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ்* மன்னவர்தம்
  கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்*
  தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்*
  கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே. 7

  பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்*
  முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்*
  வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல்*
  நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே. 8

  செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!*
  நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்*
  அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்*
  படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே. 9

  உம்பர் உலகாண்டு ஒருகுடைக்கீழ்* உருப்பசிதன்
  அம்பொற் கலையல்குல் பெற்றாலும் ஆதரியேன்*
  செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்*
  எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனு மாவேனே. 10

  மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்தன்*
  பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி*
  கொன்னவிலும் கூர்வேல் குலசே கரன்சொன்ன*
  பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே. 11

  குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்!////////

  பாடல்கள் அனைத்தும் அருமை. இங்கே அவற்றைப் பகிர்ந்துகொண்ட மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 24. வணக்கம் அய்யா,

  இறைமீது காதல், இறைவனை பெற்றோராகவோ, இறைவனை நண்பனாகவோ, இறைவனை குழந்தையாகவோ பாவித்து இறைவனை நாடும் மனங்களில் இது ஒரு வகையாக நான் எண்ணுகின்றேன். எப்படியாவது, எதாவது ஒரு உருவில் நான் உன்னுடுன், உன்னுடயவனாகமாட்டேனா என ஏங்கி எழுதப்பட்ட பாடலாகவே நான் இதை நினைக்கின்றேன். இது வெறும் வார்த்தை வரிகளை மட்டுமோ, இசையை மட்டுமோ ரசிக்க வந்த பாடலாக தோன்றவில்லை. எழுதியவர் மனம் போல உணர்ந்து பாடி, இசை அமைத்து நமக்கு வழங்கி உள்ளனர். இறைமீது கொண்ட காதல் அதுவும் அதிக படியான காதலை இது காட்டுகின்றது என்பதுவும்,

  இவுலகில் பிறந்த எல்லா ஜீவ ராசிகளும் வேண்டும் ஒரே வேண்டுதல், பிறவி இல்லா பெரும்பயனாகவே இருக்கும் என்பதுவும் எனது தாழ்மையான கருத்து.

  சுவையான பாடலை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிகள் அய்யா.

  தங்களின் பொன்னான நேரத்தின் இடயே, இவ்வாராக வகுப்பில் பேசினால் சில பட்டம் கொடுத்து நீங்களும் வீட்டிற்கு "ப்ரோக்ரேஸ் கார்டு" அனுப்ப மாட்டிர்கள் என நம்புகின்றேன். :-)  இப்படிக்கு தங்கள் கீழ்படிந்த மாணவர்கள்
  1000 இல் ஒருவன்.

  ReplyDelete
 25. ////cs said...
  ayya vanakkam.
  thirumurugan poondi,avinasiyilirunthu tirupur sellum paathaiyil sumaar 4 km dhooraththil ullathu enbathai theriyap paduththugiren.
  nandri .vanakkam.//////

  தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 26. //Blogger Sabarinathan TA said...
  வணக்கம் அய்யா,
  இறைமீது காதல், இறைவனை பெற்றோராகவோ, இறைவனை நண்பனாகவோ, இறைவனை குழந்தையாகவோ பாவித்து இறைவனை நாடும் மனங்களில் இது ஒரு வகையாக நான் எண்ணுகின்றேன். எப்படியாவது, எதாவது ஒரு உருவில் நான் உன்னுடுன், உன்னுடயவனாகமாட்டேனா என ஏங்கி எழுதப்பட்ட பாடலாகவே நான் இதை நினைக்கின்றேன். இது வெறும் வார்த்தை வரிகளை மட்டுமோ, இசையை மட்டுமோ ரசிக்க வந்த பாடலாக தோன்றவில்லை. எழுதியவர் மனம் போல உணர்ந்து பாடி, இசை அமைத்து நமக்கு வழங்கி உள்ளனர். இறைமீது கொண்ட காதல் அதுவும் அதிக படியான காதலை இது காட்டுகின்றது என்பதுவும்,
  இவுலகில் பிறந்த எல்லா ஜீவ ராசிகளும் வேண்டும் ஒரே வேண்டுதல், பிறவி இல்லா பெரும்பயனாகவே இருக்கும் என்பதுவும் எனது தாழ்மையான கருத்து.
  சுவையான பாடலை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிகள் அய்யா.
  தங்களின் பொன்னான நேரத்தின் இடயே, இவ்வாராக வகுப்பில் பேசினால் சில பட்டம் கொடுத்து நீங்களும் வீட்டிற்கு "ப்ரோக்ரேஸ் கார்டு" அனுப்ப மாட்டிர்கள் என நம்புகின்றேன். :-)
  இப்படிக்கு தங்கள் கீழ்படிந்த மாணவர்கள்
  1000 இல் ஒருவன்.////////

  எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? கீழ்ப்படிந்த என்னும் பதம் எல்லாம் மறந்துவிட்ட காலம் இது!யாரும் அதை எதிர்பார்ப்பதும் இல்லை!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com