மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.3.10

கண்ணதாசனின் இறையுணர்வு+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணதாசனின் இறையுணர்வு

கவியரசர் வாழ்ந்தது மொத்தம் 54 வருடங்கள், 3 மாதங்கள், 23 நாட்கள். அந்த நாட்களில், உணர்வு தெரிந்தது முதல்,அவர் இறையுணர்வோடு தான் வாழ்ந்தார்

ஆமாம், அதுதான் உண்மை!

அதை அவருடைய பல நூல்களிலும், பாடல்களிலும் காணலாம்.

24.06.1927ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல் பட்டி என்னும் அழகிய கிராமத்தில் பிறந்த அவர், அமெரிக்க மண்ணில், (சிகாகோவில்) 17.10.1981ஆம் தேதியன்று சிவபதவி அடைந்தார்.

எங்கள் பகுதியில் ஒருவரை, அவர் காலமாகி விட்டால், இறந்து விட்டார் என்று சொல்வதில்லை. சிவபதவி அடைந்து விட்டார் என்றுதான் சொல்வார்கள்.

தன் கவிதைகளாலும், எழுத்துக்களாலும்,மேடைப் பேச்சுக்களாலும் தமிழக மக்களை மொத்தமாக ஈர்த்து அவர்களுடைய மனதிற்குள் இடம் பிடித்து விட்ட அவர், தன்னைப் பற்றிச் சொல்லும் போது இப்படிச் சொல்வார்.

"நான் சரியாகச் சிந்திப்பேன்: ஆனால் தவறாகச் செய்து முடிப்பேன். சுபாவம் இதுதான். பழக்கமும் இதுதான்"

அவர் ஈடுபட்டிருந்த திரையுலகமும், அரசியல் உலகமும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

அவர் இறையுணர்வு மிக்கவர். முத்தையா என்ற தன் பெயரை, அவர் தான் அதிகமாக வணங்கும் அந்த மாயக் கண்ணனின் நினைவாகத்தான் கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்டார்.அந்தப்பெயரில்தான் பெரும் புகழும் பெற்றார்.

அந்த மாயக் கண்ணன், அவர் பாடல்களில் பல இடங்களில் வெளிப்பட்டுள்ளான். அதைப் பின் வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

இடையில் ஒரு பத்தாண்டு காலம் ஒரு அரசியல் இயக்கத்தில் இருந்த காலத்தில் தன்னுடைய இறையுணர்வை தன்னோடு மட்டுமே வைத்திருந்தார். தான் பேசிய இடங்களில் அவர் அதை வெளிப்படுத்தியதில்லை.

அதுவும் சினிமாவில் வருவதைபோன்ற ஒரு சூழ்நிலைதான்!

அதைப் பற்றி அவரே ஒரு நூலில் குறிப்பிட்டும் எழுதியுள்ளார். இயக்கக் கூட்டங்களுக்குப் போய்வந்து விட்டு, வீட்டில் உணவு சாப்பிட அமரும் போது, விட்டகுறை தொட்ட குறையாக, விபூதியை எடுத்துப் பூசிக் கொண்டு தான் சாப்பிட உட்காருவேன் என்று எழுதியுள்ளார்.

அந்த இறையுணர்வுதான் அவரைப் பல அற்புதமான பாடல்களை எழுத வைத்தது.

"இறைவன் என்பவன் ஒருவன்தான், நாம்தான் அவனைப்பல வடிவங்களில், பல விதங்களில் வணங்குகின்றோம். ஆறுகள் பலவாக இருந்தாலும் அவை அனைத்தும் சேருமிடம் கடல்தான். கடல்கள் பலவாக இருந்தாலும் அவை
அனைதிற்கும் நீர் என்று தான் பெயர்" என்று அவர் வலியுறுத்திக் கூறுவார்.

அதுபோல இறைவழிபாடு பல விதமாக இருந்தாலும், மதங்கள் பலவாக இருந்தாலும் இறைவன் ஒருவன்தான் என்ற கொள்கையுடையவர் அவர்.

அதைவலியுறுத்தி அற்புதமான பாட்டு ஒன்றை அவர் எழுதினார்.

பாடலின் பெருமை கருதி அதை அப்படியே கொடுத்துள்ளேன்.
----------------------------------------------------
"ராமன் என்பது கங்கை நதி
அல்லா என்பது சிந்து நதி
யேசு என்பது பொன்னி நதி
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
எல்லா நதிகளும் கலக்குமிடம் கடலாகும்.

தேவன் வந்தான், தேவன் வந்தான்
குழந்தை வடிவிலே - என்னைத்
தேடித் தேடி காவல் கொண்டான்
மழலை மொழியிலே!

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

அன்னை மேரி தெய்வ பாலன்
எங்கள் யேசு தேவ தூதன்
ராஜசபை ஜோதி கண்டேன்
ஞானக் கோயில் தீபம் கண்டேன்.

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

அல்லாஹ¥ அக்பர் என்றேன்
ஆண்டவனே அடிமை என்றேன்
பிள்ளை ஒன்றைப் பேசச் சொன்னான்.
எல்லாமும் இதுதான் என்றான்.

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

வேணுகான ஓசை கேட்டேன்
விஜயன் கேட்ட கீதை கேட்டேன்
நேரில் வந்த கண்ணன் கண்டேன்
கண்ணனென்னும் ராமன் கண்டேன்

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

(படம் - குழந்தைக்காக - வருடம் 1968)
------------------------------------------------------------------
ஆனால் திரைப் படங்களில், பக்திப் பாடல்களை கேட்டவர்களுக்குக் கேட்டபடி அவர் எழுதி கொடுத்தார். பல சிறந்த பாடல்கள் உள்ளன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
இயற்கையும் இறைவனும்.

ஒரு பன்னிரெண்டு வயதுச் சிறுவன், தன் தந்தையிடம் கேட்டான்.

"அப்பா இது என்ன?"

'இது ஒரு மலர்!"

"எல்லா மலர்களுமே ஒரே வகைதானா?'

"இல்லை அதனதன் தன்மையால் ஒவ்வொன்றும் மாறுபடும்"

"இந்த மலரின் பெயர் என்ன?"

"இதை ரோஜா என்று சொல்வோம்!"

அவன் தன் கையில் வைத்திருந்த இரண்டு ரோஜாக்களில் ஒன்றைக்காட்டி, "இந்த ரோஜாவின் நிறம் என்ன?"

"இது சிவப்பு ரோஜா"

மற்றொன்றைக் காட்டினான்.

"இது மஞ்சள் ரோஜா"

"இவற்றிற்கு எங்கிருந்து நிறம் கிடைக்கிறது?"

"பூமியில் இருந்துதான் அவற்றிற்கு நிறம் கிடைக்கிறது"

"இவற்றை நம் வீட்டுத் தோட்டத்திலிருந்து பறித்தேன்.இரண்டுமே நம் தோட்டத்து மண்ணில்தான் வளர்ந்தது. அப்படியிருக்க ஒன்று சிவப்பாகவும் ஒன்று மஞ்சளாகவும் இருப்பது ஏன் - இரண்டும் ஒரே நிறத்தில் அல்லவா
இருக்க வேண்டும்? அதே போல அவற்றின் தண்டுப் (ஸ்டெம்) பகுதிகளும், இலைகளும் ஏன் வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன? பூக்களுக்கு
மணம் எங்கிருந்து கிடைக்கிறது?"

அவன் தந்தை திகைத்து விட்டார். அதற்குமேல் அவரால் சரியான பதிலைச் சொல்ல இயலவில்லை.

ஆனாலும் இப்படிச் சொன்னார், "கண்ணா, நம் அறிவிற்கு எட்டாத விஷயங்கள் பல உள்ளன.அதில் இதுவும் ஒன்று. விஞ்ஞானிகளைக் கேட்டால் நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என்று பொதுப் படையாகச் சொல்வார்கள். ஆனால் அவை இயற்கையின் படைப்பு.இயற்கையைப் படைத்தவர் இறைவன்.இயற்கை வடிவில் இறைவன் பூமி எங்கும் உள்ளார்."

ஆமாம் இயற்கையென்பது என்பது வேறு, இறைவன் என்பது வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். பூமியெங்கும் அவர் வியாபித்திருக்கின்றார்.

அதனால்தான், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்
என்று இறைவனை நாம் குறிப்பிடுகின்றோம்.

பூமியின் தட்ப வெட்ப நிலை இடத்திற்கு அதன் உயரத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடுகின்றது. கடல் மட்டத்திலிருந்து ஒவ்வொரு ஆயிரம் அடி
உயரத்திற்கும். ஒரு டிகிரி உஷ்ணம் குறைகிறது.

ஆனால் காற்றில் உள்ள 'ஆக்சிஜென்' அளவு மட்டும் 21% சதவிகித அளவில் மாறுபடாமல் இருக்கிறது. இறைவன் தான் படைத்த ஜீவராசி களின் சுவாசத்திற்காக அதை மட்டும் கட்டுப் படுத்தி வைத்திருக்கின்றார்!

அதே போல ஒரு பறவை சைபீரியாவிலிருந்து வேடந்தாங்கலுக்கு வந்து
விட்டுத் திரும்பிப் போய் விடுகிறது. அதற்கு விமானங்களுக்கு இருப்பது
போல வழிகாட்டும் கருவிகள் எங்கே இருக்கிறது.?

தென்னை மரங்கள் நீரை உறிஞ்சி அதைத்தன் உச்சியில் இருக்கும் காய்களில் சேர்த்து வைத்து நமக்கு இளநீராகத் தருகின்றது. அதற்குப் பூமியில் இருந்து
நீரை உறிஞ்சித் தன் காய்களுக்குள் சேர்க்க குட்டி மோட்டார் இருக்கிறதா
என்ன?

இதைப்போன்று பல வினோதங்கள் இயற்கையில் உள்ளன. கவியரசர் அனைத்தையும் உணந்ததோடு, தன்னுடைய பாடல்களிலும் அவற்றைக் குறிப்பிட்டு எழுதினார்.

காலம், இடம் கருதி, ஒரே ஒரு பாட்டை மட்டும் உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்.

முழுப்பாடலையும் கீழே கொடுத்துள்ளேன். முக்கியமான வரிகளை மட்டும் இப்போது பார்ப்போம்.

இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை.

"இறைவன் வருவான். அவன் என்றுமே நமக்கு நல்வழி யைத்தான் காட்டுவான். அவனுடைய அன்பு ஒன்றுதான் நாம் தேடிப் பெற வேண்டிய கருணை!" என்று பொருள் பட இந்த வரிகளை எழுதினார் அவர்.

அதோடு மட்டுமா.?

இறைவன்தான் வண்ண வண்ணப் பூக்களைக் கொடுத்தவர். அந்தப் பூக்கள் மூலமாகக் காய்களையும், கனிகளையும் கொடுத்தவர். சின்னச்சின்ன குழந்தைகளின் நெஞ்சங்களில் பாசத்தை வைத்தவர். அந்தப்பாசத்தைப்
பேச வைத்துக்குழந்தைகள் மூலம் நமக்கு இந்த உலக வாழ்க்கையின் மீது
ஒரு பிடிப்பை ஏற்படுத்தியவர்.

வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்.

சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்.

என்ன நண்பர்களே இது நீங்கள் அறிந்த பாடல்தான். இந்த எளியவன் அந்த மேதையின் பாடலுக்குச் சொன்ன விளக்கம் எப்படியுள்ளது? ஒரு வரி பின்னூட்டத்தில் எழுதுங்கள்.
-----------------------------------------------------
இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான்
படம் - சாந்தி நிலையம்
பாடியவர் - பி சுசீலா குழுவினர்

பி எஸ்.
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

ஒன்றுகூடி
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை

ஒன்றுகூடி
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு

ஒன்றுகூடி
பாசம் என்பது வீடு
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்கள் அவனைக் காண
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க

ஒன்றுகூடி
கைகள் அவனை வணங்க
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
______________________________________வாழ்க வளமுடன்!

24 comments:

 1. arumai...
  ayya, nan oru tamil patthirikkai tuvangi ullen
  neram kidaikum poluthu padithu karutthu kooravum
  http://vezham.co.cc

  ReplyDelete
 2. ஆசிரியருக்கு கோசாரத்திலே குரு கேது combination ஏதோ வொர்க் அவுட் ஆனாப்போலே தெரியுது..சமீப பதிவுகளிலே ஒரே இறையுணர்வு கலந்த தத்துவ மடல்களா இருக்கு...
  ///கார் பெட்ரோல்லேதான் ஓடும் ///
  ///தொலை தூரப் பேருந்துக்கு இரண்டு வாகன ஓட்டிகள் இருந்து மாற்றி மாற்றி அந்தப் பேருந்தை இயக்குவது போலே ஒரு நல்ல உள்ளத்தை இயக்குவது மனித நேயமும் சமூகப் பார்வையும்தான்..///
  ///ஆடு, மாடு, மான் இவைகளுக்கு கொம்பை கொடுத்த இறைவன் குதிரைக்கு மட்டும் ஏன் கொம்பை கொடுக்கவில்லை?///
  if the horse power is coupled with the horn power what will be the effect?---------good question..
  கழுதையிடம் உதை வாங்கினவனுக்குத்தான் கால் பவர் தெரியும்..ஆஹா...///
  ////அதே போல ஒரு பறவை சைபீரியாவிலிருந்து வேடந்தாங்கலுக்கு வந்து
  விட்டுத் திரும்பிப் போய் விடுகிறது. அதற்கு விமானங்களுக்கு இருப்பது
  போல வழிகாட்டும் கருவிகள் எங்கே இருக்கிறது.?///
  ////தென்னை மரங்கள் நீரை உறிஞ்சி அதைத்தன் உச்சியில் இருக்கும் காய்களில் சேர்த்து வைத்து நமக்கு இளநீராகத் தருகின்றது. அதற்குப் பூமியில் இருந்து
  நீரை உறிஞ்சித் தன் காய்களுக்குள் சேர்க்க குட்டி மோட்டார் இருக்கிறதா
  என்ன?////எப்பிடி சார் இப்பிடி..? கலக்குறீங்க சார்..கலக்குறீங்கோ...
  (மிகவும் பழைய பாடல்களை அதிகம் நான் கேட்டதில்லை..அதனால் சும்மா சுவாரஸ்யத்துக்காக கலாய்த்தேன்..so ..cool .....)

  ReplyDelete
 3. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இறையுணர்வு மிக்கவர்
  என்பதற்கு அவரின் பாடலும், அந்த பாடலுக்கு தாங்கள்
  சொல்லியுள்ள விளக்கமும் மிகவும் அருமையாக உள்ளது.
  நன்றி!

  வணக்கம்.

  தங்களன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-03-27

  ReplyDelete
 4. good evening sir,
  very very nice lessons sir. Thanks for ur lessons sir. i love all the songs.Thanks for ur valuable service sir.
  sundari.

  ReplyDelete
 5. Dear sir,
  I m reading ur lessons right frm beginning ;itz gud to learn astrology in tamil with a way of ur sharing ur ideas ,knowledge & exp

  ReplyDelete
 6. ஒரு அருமையான கவிஞரின் வரலாற்றை அருமையாக சொன்னீர்கள் !
  நல்ல பதிவு!!
  பகிர்வுக்கு நன்றி!!

  ReplyDelete
 7. அய்யா,

  கவியரசு கண்ணதாசன் ஒரு கலையுலக சச்சின் ஏன் என்றால் சச்சினும் கவியரசரும் பிறந்தது ஒரே தினத்தில். அதாவது 24 தேதி.
  எனக்கு இருவரையும் பிடிக்கும்

  நன்றி

  ஸ்ரீதர்

  ReplyDelete
 8. சாந்தி நிலையம் படம் "பீஸ் சால் பாத்" என்ற ஹிந்தி படத்தையும்,"சவுண்ட் ஆஃப் ம்யூஸிக்"என்ற ஆங்கிலப் படத்தையும் கலந்து எழுதப்பட்ட கதை அம்சம்
  கொண்டது.எனக்குத் திருமணம் ஆன பின்னர் முதல் முதலாக, என் மனைவியை அழைத்துச் சென்ற படம். வண்ணம், படப்பிடிப்பு,காஞ்சனாவின் இளமை துள்ளூம் நடிப்பு,ஜெமினி கணேஷின் பண்பட்ட நடிப்பு,இனிமையான பாடல்கள் என்று பல அம்சங்களும் முதல் தரமானவை.டெக்னிகல் விஷயங்க‌ளில் தமிழ் சினிமா "டேக் ஆஃப்" ஆன படம் "சாந்தி நிலையம்"!!

  "பூமியில் இருப்ப‌தும் வான‌த்தில் ப‌ற‌ப்ப‌தும்
  அவ‌ர‌வ‌ர் எண்ண‌ங‌ளே..."
  என்ற பா‌ட‌லும் அருமையான‌து.
  You brought out the nostalgic memories of my younger days.Thank you!

  ReplyDelete
 9. //அவர் இறையுணர்வு மிக்கவர். முத்தையா என்ற தன் பெயரை, அவர் தான் அதிகமாக வணங்கும் அந்த மாயக் கண்ணனின் நினைவாகத்தான் கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்டார்.அந்தப்பெயரில்தான் பெரும் புகழும் பெற்றார்.//

  ஐயா,
  கீழ் கண்டவை 10 .02 .2010 இல் 'ஆனந்த விகடன் ' இதழில் 'கண்ணதாசன் 25 ' என்னும் பகுதியில் வெளியாகியுள்ளது.. எது மிகச் சரி !! எம் கருத்து தவறெனில் திருத்தவும் ....

  "கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. 'அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்' என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா."

  ReplyDelete
 10. ///R.Ravichandran said...
  excellent sir////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 11. ///////LK said...
  arumai...
  ayya, nan oru tamil patthirikkai tuvangi ullen
  neram kidaikum poluthu padithu karutthu kooravum
  http://vezham.co.cc////

  படித்துப் பார்க்கிறேன். நன்றி!

  ReplyDelete
 12. /////minorwall said...
  ஆசிரியருக்கு கோசாரத்திலே குரு கேது combination ஏதோ வொர்க் அவுட் ஆனாப்போலே தெரியுது..சமீப பதிவுகளிலே ஒரே இறையுணர்வு கலந்த தத்துவ மடல்களா இருக்கு...
  ///கார் பெட்ரோல்லேதான் ஓடும் ///
  ///தொலை தூரப் பேருந்துக்கு இரண்டு வாகன ஓட்டிகள் இருந்து மாற்றி மாற்றி அந்தப் பேருந்தை இயக்குவது போலே ஒரு நல்ல உள்ளத்தை இயக்குவது மனித நேயமும் சமூகப் பார்வையும்தான்..///
  ///ஆடு, மாடு, மான் இவைகளுக்கு கொம்பை கொடுத்த இறைவன் குதிரைக்கு மட்டும் ஏன் கொம்பை கொடுக்கவில்லை?///
  if the horse power is coupled with the horn power what will be the effect?---------good question..
  கழுதையிடம் உதை வாங்கினவனுக்குத்தான் கால் பவர் தெரியும்..ஆஹா...///
  ////அதே போல ஒரு பறவை சைபீரியாவிலிருந்து வேடந்தாங்கலுக்கு வந்து
  விட்டுத் திரும்பிப் போய் விடுகிறது. அதற்கு விமானங்களுக்கு இருப்பது
  போல வழிகாட்டும் கருவிகள் எங்கே இருக்கிறது.?///
  ////தென்னை மரங்கள் நீரை உறிஞ்சி அதைத்தன் உச்சியில் இருக்கும் காய்களில் சேர்த்து வைத்து நமக்கு இளநீராகத் தருகின்றது. அதற்குப் பூமியில் இருந்து
  நீரை உறிஞ்சித் தன் காய்களுக்குள் சேர்க்க குட்டி மோட்டார் இருக்கிறதா
  என்ன?////எப்பிடி சார் இப்பிடி..? கலக்குறீங்க சார்..கலக்குறீங்கோ...
  (மிகவும் பழைய பாடல்களை அதிகம் நான் கேட்டதில்லை..அதனால் சும்மா சுவாரஸ்யத்துக்காக கலாய்த்தேன்..so ..cool .....)///

  நானும் ஒரு சுவாரஸ்யத்திற்குக் காகத்தான் அப்படி எழுதுகிறேன்! நன்றி மைனர்!

  ReplyDelete
 13. /////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இறையுணர்வு மிக்கவர்
  என்பதற்கு அவரின் பாடலும், அந்த பாடலுக்கு தாங்கள்
  சொல்லியுள்ள விளக்கமும் மிகவும் அருமையாக உள்ளது.
  நன்றி!
  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 14. ///sundari said...
  good evening sir,
  very very nice lessons sir. Thanks for ur lessons sir. i love all the songs.Thanks for ur valuable service sir.
  sundari.////

  நல்லது.நன்றி சகோதரி!

  ReplyDelete
 15. /////karthikeyan said...
  Dear sir,
  I m reading ur lessons right frm beginning ;itz gud to learn astrology in tamil with a way of ur sharing ur ideas ,knowledge & exp/////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி! வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 16. ////♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  ஒரு அருமையான கவிஞரின் வரலாற்றை அருமையாக சொன்னீர்கள் !
  நல்ல பதிவு!!
  பகிர்வுக்கு நன்றி!!////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 17. ////Sridhar Subramaniam said...
  அய்யா,
  கவியரசு கண்ணதாசன் ஒரு கலையுலக சச்சின் ஏன் என்றால் சச்சினும் கவியரசரும் பிறந்தது ஒரே தினத்தில். அதாவது 24 தேதி. எனக்கு இருவரையும் பிடிக்கும்
  நன்றி
  ஸ்ரீதர்////

  இருவரையும் எனக்கும் பிடிக்கும். எண் 24 = 6 = சுக்கிரனின் எண்! அதனால்தானோ என்னவோ இருவரும் பலருடைய மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்!

  ReplyDelete
 18. /////kannan said...
  Dear Sir!
  Gd eg
  thanks./////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 19. kmr.krishnan said...
  சாந்தி நிலையம் படம் "பீஸ் சால் பாத்" என்ற ஹிந்தி படத்தையும்,"சவுண்ட் ஆஃப் ம்யூஸிக்"என்ற ஆங்கிலப் படத்தையும் கலந்து எழுதப்பட்ட கதை அம்சம்
  கொண்டது.எனக்குத் திருமணம் ஆன பின்னர் முதல் முதலாக, என் மனைவியை அழைத்துச் சென்ற படம். வண்ணம், படப்பிடிப்பு,காஞ்சனாவின் இளமை துள்ளூம் நடிப்பு,ஜெமினி கணேஷின் பண்பட்ட நடிப்பு,இனிமையான பாடல்கள் என்று பல அம்சங்களும் முதல் தரமானவை.டெக்னிகல் விஷயங்க‌ளில் தமிழ் சினிமா "டேக் ஆஃப்" ஆன படம் "சாந்தி நிலையம்"!!
  "பூமியில் இருப்ப‌தும் வான‌த்தில் ப‌ற‌ப்ப‌தும்
  அவ‌ர‌வ‌ர் எண்ண‌ங‌ளே..."
  என்ற பா‌ட‌லும் அருமையான‌து.
  You brought out the nostalgic memories of my younger days.Thank you!/////

  ஆகா, உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 20. /////'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...
  //அவர் இறையுணர்வு மிக்கவர். முத்தையா என்ற தன் பெயரை, அவர் தான் அதிகமாக வணங்கும் அந்த மாயக் கண்ணனின் நினைவாகத்தான் கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்டார்.அந்தப்பெயரில்தான் பெரும் புகழும் பெற்றார்.//
  ஐயா,
  கீழ் கண்டவை 10 .02 .2010 இல் 'ஆனந்த விகடன் ' இதழில் 'கண்ணதாசன் 25 ' என்னும் பகுதியில் வெளியாகியுள்ளது.. எது மிகச் சரி !! எம் கருத்து தவறெனில் திருத்தவும் ....
  "கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. 'அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்' என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா."//////

  தாசன் என்று பெயர்வைத்துக்கொள்வது ஒரு தாக்கமாக இருந்தகாலம். உதாரணம் பாரதிதாசன். அதுபோல இவரும் வைத்துக்கொண்டார். நான் கேள்விப்பட்டது. ஒரு மேடைப் பேச்சில். இரண்டுமே நன்றாக இருக்கிறது. உண்மையைச் சொல்ல அவர் இல்லை. ஆகவே எதை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்

  ReplyDelete
 21. மேலும் ருத்திராக்ஷ மரங்கள் பற்றி மிக்க தெளிவான விளக்கத்துடன் :-

  Kauai Island's Sacred Rudraksha Forest

  ReplyDelete
 22. ////Shyam Prasad said...
  மேலும் ருத்திராக்ஷ மரங்கள் பற்றி மிக்க தெளிவான விளக்கத்துடன் :-
  Kauai Island's Sacred Rudraksha Forest////

  மேலதிகத்தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com