மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.3.10

பெயருக்கு அரிதாரம் பூசுவது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெயருக்கு அரிதாரம் பூசுவது எப்படி?

அபரிதமான வெற்றி அல்லது அபரிதமான தோல்வி!

சனீஷ்வரனின் எண் 8 என்பதை அனைவரும் அறிவோம். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 8

இந்த எட்டாம் எண்ணிற்கு ஒரு விஷேசம் உண்டு. அந்த எண்ணை உடையவர்கள் வாழ்க்கையில் அதீத வெற்றியை அடைவார்கள் அல்லது அதீதமான தோல்வியை அடைவார்கள்.

எண் ஜோதிடத்தில் மட்டுமல்ல, ஜாதகத்திலும் அதே பலன் உண்டு.

சனி, மகரம் மற்றும் கும்ப லக்கினங்களுக்கு அதிபதி. அதில் கும்பலக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, லக்கினாதிபதியும் சனிதான், விரையாதிபதியும் (12th Lord) சனிதான்.
அந்த லக்கினக்காரர்களுக்கு, சனீஷ்வரன் ஜாதகத்தில் உச்ச, கேந்திர, கோணங்களில் இருந்தால் மட்டுமே வாழ்க்கை சிறக்கும்.

இல்லையென்றால் அவர்கள் படாதபாடு படவேண்டியதிருக்கும். வாழ்க்கை முழுவதும் போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.

ஒருவருடைய பெயர் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயர் 8 அல்லது
26 என்று வந்தால் அது சிறப்பாக இருக்காது. இரண்டு எண்களுமே
மோசமான எண்களாகும். ஆனால் 17 என்று வரும் எண் பெரிய
வெற்றியைத் தரக்கூடிய எண்ணாகும்

உதாரணம்: B O M B A Y = 2 7 4 2 1 1 = 17

17ஆம் எண்ணிற்கான பலன்: It is a highly spiritual and fortunate number

அதை 15 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை என்று மாற்றினார்கள்.

M U M B A I = 4 6 4 2 1 1 = 18 (இது நல்ல எண் அல்ல) மாற்றிய பிறகு பம்பாய் பல பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. மாற்றியவர்கள் இதை அறிந்தார்களா? அல்லது உணர்ந்தார்களா?

தெரியவில்லை!

நம் மெட்ராஸ் சென்னையாக மாறியதும் அறிந்த கதைதான்.
M A D R A S = 4 1 4 2 1 3 = 15 (இது சூப்பரான எண்) மாறிய பிறகு, அதாவது
C H E N N A 1 = 3 5 5 5 5 1 1 = 25 (இது சுமாரான எண்தான். ஆனால் மோசமில்லை)

எல்லா வளங்களுடன் இருக்கும் எங்கள் ஊரின் எண்:
C O I M B A T O R E = 3 7 1 4 2 1 4 7 2 5 = 36
----------------------------------------------------------------------
தனிப்பட்ட பெயர்களின் கூட்டல் எண் சரியாக உள்ளதா என்று எப்படித் தெரிந்துகொள்வது?

சிம்ப்பிள். ஜாதகனின் பிறந்த எண்ணும் (birth number) பெயரின் கூட்டல் எண்ணும் ஒன்றாக இருந்தால் போதும். சரியாயாக உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம்.

1, 10, 19, 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 1
2, 11, 20, 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 2
3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 3
4, 13, 22, 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 4
5, 14, 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 5
6, 15, 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 6
7, 16, 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 7
8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 8
9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் = 9
---------------------------------------------------------------------
எழுத்துக்களுக்கான எண்கள்:

A = 1, B = 2, C = 3, D = 4, E = 5, F = 8, G = 3, H = 5,

I OR J = 1, K = 2, L = 3, M = 4, N= 5, O = 7, P = 8

Q = 1, R = 2, S = 3, T = 4

U = 6, V = 6, W = 6

X = 5, Y = 1, Z = 7

=========================================================================
இதை எல்லாம் எப்படி வடிவமைத்தார்கள் என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். கேள்வி கேட்டுக் கொண்டி ருந்தால் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாது.

நம்பிக்கை இருந்தால், கடைப்பிடிக்கலாம், நம்பிக்கை இல்லாவிட்டால் கடாசி விட்டு (உதறிவிட்டு) அடுத்த வேலையைப்பார்க்கலாம். நமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காக, ஆதாரம் கேட்டு, அடுத்தவன் தலையை உருட்டக்கூடாது:-)))

நம் பெயர் நம்மைக்கேட்டு வைக்கப்படவில்லை. அதுதான் பரிதாபம். அதுதான் அவலம். நாம் ஆசைப்படும் பெயரை நாம் மாற்றிக்கொள்ளலாம் என்றால் முடியாது. Birth Certificate, College certificates, Employment order,
Marriage certificate, Bank account, Bank Deposit, Share certificates, Property Deeds, Passport, Ration Card, Voters Card, PAN Card என்று பல விஷயங்கள் அதற்குத்
தடையாக இருக்கும். குறுக்கே நின்று கழுத்தை அறுக்கும்

ஒரு சகோதரி கேட்டுள்ளார். வைத்த பெயரை எப்படி சார் மாற்றிக்கொள்வது?

இளையாராஜாவின் பாடல்களைக் கவனித்தீர்கள் என்றால் தெரியும். நகாசு வேலைகள் செய்திருப்பார். சில பாடல்களில் Fluteன் ஒலி , சிலபாடல்களில் Guitarன் ஒலி, சில பாடல்களில் சாக்ஸஃபோன் ஒலி என்று இடையிடையே சில இசைக்கருவியை அதிகமாக ஒலிக்கவிட்டுப் பாடலை கேட்பவர்கள் மயங்கும்படி செய்திருப்பார்.

அதுபோல நீங்களும் ஏற்கனவே உள்ள உங்கள் பெயரில் ஒரிரெண்டு எழுத்துக்களைக் கூட்டி, உங்கள் பிறப்பு எண்ணுடன் அது இசைந்து ஒலிக்கும்படி செய்துவிடுங்கள்.

பெயர் என்றவுடன், வெளி நாட்டுக்காரனுக்கெல்லாம் First Name, middle name, last name என்றும், நம் வட இந்தியப் பகுதி மக்களுக்கெல்லாம் Sur Name என்று பெயரில் இரண்டு அல்லது மூன்று பகுதிகள் இருக்கும் (உதாரணம் Sachin Tendulkar, Sarath Pavar, Lallu Prasad Yadav )

அதனால் நாம் நமது இன்ஷியலுடன் பெயரை எடுத்துக்கொள்ள வேண்டும் (அப்படித்தானே சுவாமி உங்கள் பள்ளிச் சான்றிதழ்களில் இருக்கும் ?)

சரி இசைந்து ஒலிக்கும்படி எப்படிச் செய்வது?

உதாரணங்கள் வேண்டுமா?

கீழே கொடுத்துள்ளேன்

இருக்கும் பெயருக்கு அரிதாரம் பூசுவது அல்லது மேக்கப் போடுவது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஓக்கேயா?

அதிகப்படியான எழுத்துக்களுடன் மாற்றிக்கொண்ட பெயரை எப்படி நடைமுறைக்குக் கொண்டுவருவது?

அதை அடுத்த பாடத்தில் சொல்லித்தருகிறேன்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++
கீழே உள்ள க்ளிப்பிங்கின் தேதியைப்பாருங்கள். 2.11.1989 என்று உள்ளதா? இருபது வருடங்கள் கழித்துப் பயன்படும் என்று சேர்த்து வைக்கவில்லை. இதுபோன்று, இலக்கியம், சினிமா, ஜோதிடம் சம்பந்தப்பட்ட பேப்பர் கட்டிங்குகள் என்னிடம் நிறைய உள்ளன. வீட்டில் உள்ள மூத்தவர்கள் அவற்றைக் குப்பை (waste) என்பார்கள். நான் சொத்து (wealth) என்பேன். பலருக்கும் பயன்படுவதால் அதை சொத்து என்று சொல்வதில்
தவறில்லை!:-)))))

படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்திப்பாருங்கள். படம் பெரிதாகத் தெரியும்!+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

54 comments:

 1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

  எண்ஜோதிடம் மிக பிரமாதம் . நன்றி

  வணக்கம்.

  தங்கள் அன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-03-02

  ReplyDelete
 2. சிறப்பான பதிவு அய்யா !
  நன்றி !
  by
  ஸ்ரீதர்

  ReplyDelete
 3. வாத்தியார் ஐயா!!!

  சிரசு தாழ்ந்த வணக்கம் .

  ReplyDelete
 4. எனது இயற்பெயரின் எழுத்துக்கான எண்களைக் கூட்டினால் மொத்தம் 41 வரும். A என்ற initialஐ சேர்த்தால் 42. 26ம் தேதி பிறந்த எனக்கு பெயர் 5 அல்லது 6ம் எண்ணில் வந்தால் நல்லது என்று படித்தேன். அது இயற்கையாகவே அமைந்து விட்டது. இங்கே நான் பயன்படுத்தும் பெயர், வீட்டில் அழைக்கும் பெயர் அல்லது செல்ல பெயர் எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம்.

  ReplyDelete
 5. if someone was born on 8,17 26 and the total(year +month +date)also 8 and the total value of the name also comes to 8.IS that good or bad?

  ReplyDelete
 6. அய்யா இனிய காலை வணக்கம்.

  ஜோதிடத்தின் அனைத்த்து பரிவுகளையும் எங்களுக்கு அறிய தர நினைக்கும் நீங்கள் மனிதருள் மாணிக்கம் என்றால் மிகை இல்லை ....

  நன்றி வணக்கம்

  ReplyDelete
 7. வாத்தியரே,

  மிகவும் பயனுள்ள பதிவு இது.

  மேலும் கோவையில் (Coimbatore) நண்பகமான "Blue Sapphire" கிடைக்கும்
  நகை கடை சொல்ல முடியுமா? நான் வாங்க முடிவு செய்து உள்ளேன் அய்யா.

  நன்றி
  சரவணா
  கோவை

  ReplyDelete
 8. Dear Sir,

  Thanks for the lesson.

  There is we can download Numerology Calculator in the below link for the calculation but sure about correctness,
  Sir can tell about the correctness.

  http://www.free-numerology.org/numerology_calculator/free_name_numerology_calculator.php

  Thanks,
  VJ

  ReplyDelete
 9. நல்ல பதிவு, நன்றி அய்யா.

  ReplyDelete
 10. வழக்கம் போல் எளிமை, இனிமை, ஆழம்,பனுள்ள தகவல்கள்.எல்லோரும் தங்கள் பெயர் எண்ணைக் கணக்கிட்டுப்பார்த்து இருப்பார்கள்.

  ReplyDelete
 11. இனிய காலை வணக்கம் அய்யா தொடர் நன்றாக உள்ளது. நல்லது வாழ்த்துகள்

  ReplyDelete
 12. Good Morning Sir

  Thanks for your numerology class

  Please explain to as
  planet and related numbers


  Best Regards
  Murali

  ReplyDelete
 13. //////Shyam Prasad said...
  மிக்க நன்றி/////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 14. ////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  எண்ஜோதிடம் மிக பிரமாதம் . நன்றி
  வணக்கம்.
  தங்கள் அன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 15. //////sridhar said...
  சிறப்பான பதிவு அய்யா !
  நன்றி !
  by
  ஸ்ரீதர்//////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 16. /////kannan said...
  வாத்தியார் ஐயா!!!
  சிரசு தாழ்ந்த வணக்கம்.//////

  சிரசைத் தாழ்த்தி இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். சக மனிதனை அல்ல!
  எழுத்தறிவித்தவன் இறைவன் என்று பழைய பல்லவியைச் சொல்லாதீர்கள்:-)))

  ReplyDelete
 17. /////ananth said...
  எனது இயற்பெயரின் எழுத்துக்கான எண்களைக் கூட்டினால் மொத்தம் 41 வரும். A என்ற initialஐ சேர்த்தால் 42. 26ம் தேதி பிறந்த எனக்கு பெயர் 5 அல்லது 6ம் எண்ணில் வந்தால் நல்லது என்று படித்தேன். அது இயற்கையாகவே அமைந்து விட்டது. இங்கே நான் பயன்படுத்தும் பெயர், வீட்டில் அழைக்கும் பெயர் அல்லது செல்ல பெயர் எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம்.////

  உங்களுக்கு எல்லாமே இயற்கையாகவே அமைந்துள்ளது ஆனந்த்! பெயர் ஒன்று போதாதா?

  ReplyDelete
 18. /////govind said...
  if someone was born on 8,17 26 and the total(year +month +date)also 8 and the total value of the name also comes to 8.IS that good or bad?//////

  பழம் நழுவிப் பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்தது போன்று நல்லது!

  ReplyDelete
 19. /////astroadhi said...
  அய்யா இனிய காலை வணக்கம்.
  ஜோதிடத்தின் அனைத்து பிரிவுகளையும் எங்களுக்கு அறிய தர நினைக்கும் நீங்கள் மனிதருள் மாணிக்கம் என்றால் மிகை இல்லை ....
  நன்றி வணக்கம்////

  மாணிக்கம் என்று சொல்லாதீர்கள். யாராவது தூக்கிக்கொண்டு போய்விடப்போகிறார்கள். நான் எளியவன். தீவிர வாசகன். படித்ததை எல்லாம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான்!

  ReplyDelete
 20. /////Saravana said...
  வாத்தியரே,
  மிகவும் பயனுள்ள பதிவு இது.
  மேலும் கோவையில் (Coimbatore) நண்பகமான "Blue Sapphire" கிடைக்கும்
  நகை கடை சொல்ல முடியுமா? நான் வாங்க முடிவு செய்து உள்ளேன் அய்யா.
  நன்றி
  சரவணா
  கோவை////

  கீர்த்திலால் காளிதாஸ் நகைக்கடை, ராஜ வீதி, கோவை! அவர்களை எனக்குத் தெரியும். என்னை அவர்களுக்குத் தெரியாது!:-))))

  ReplyDelete
 21. /////vj said...
  Dear Sir,
  Thanks for the lesson. There is we can download Numerology Calculator in the below link for the calculation but sure about correctness, Sir can tell about the correctness.
  http://www.free-numerology.org/numerology_calculator/free_name_numerology_calculator.php
  Thanks,
  VJ//////

  பார்த்துவிட்டுச் சொல்கிறேன்!

  ReplyDelete
 22. //////பித்தனின் வாக்கு said...
  நல்ல பதிவு, நன்றி அய்யா.//////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

  ReplyDelete
 23. //////kmr.krishnan said...
  வழக்கம் போல் எளிமை, இனிமை, ஆழம்,பயனுள்ள தகவல்கள்.எல்லோரும் தங்கள் பெயர் எண்ணைக் கணக்கிட்டுப்பார்த்து இருப்பார்கள்.//////

  மற்றவர்களை விடுங்கள். நீங்கள் பார்த்துவிட்டீர்களா கிருஷ்ணன் சார்?

  ReplyDelete
 24. ////rajesh said...
  இனிய காலை வணக்கம் அய்யா தொடர் நன்றாக உள்ளது. நல்லது வாழ்த்துகள்/////


  வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 25. Dear Sir
  Numerology is a treasure and those who have discovered it would feel it.
  If Astrology is ocean then this is a sea.
  To easily memorize the sequence this can be tried

  AIJQY=1
  BKR=2
  CGLS=3
  DMT=4
  EHNX=5
  UVW=6
  OX=7
  FP=8

  Thanks

  ReplyDelete
 26. /////Murali said...
  Good Morning Sir
  Thanks for your numerology class
  Please explain to as
  planet and related numbers
  Best Regards
  Murali////

  அடுத்தடுத்த பாடங்கள் அவைதான். பொறுத்திருந்து படியுங்கள்!

  ReplyDelete
 27. //////CUMAR said...
  Dear Sir
  Numerology is a treasure and those who have discovered it would feel it.
  If Astrology is ocean then this is a sea.
  To easily memorize the sequence this can be tried
  AIJQY=1
  BKR=2
  CGLS=3
  DMT=4
  EHNX=5
  UVW=6
  OX=7
  FP=8
  Thanks///////

  நன்றி. என்னிடமும் உள்ளது. பதிவின் நீளம் கருதி அதைக் கொடுக்கவில்லை!

  ReplyDelete
 28. ஒருவருடைய பெயர் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயர் 8 அல்லது
  26 என்று வந்தால் அது சிறப்பாக இருக்காது.
  Colgate (Paste)- 26
  Closeup (Paste)- 35

  ReplyDelete
 29. வணக்கம் ஐயா,
  வேலை காரணமாக கடந்த மூன்று நாட்களாக வகுப்புக்கு வர இயலவில்லை.
  வழக்கம் போலவே பதிவு மிகவும் அருமை.

  அது எப்படி எடுத்த எல்லா காரியத்தையும் சிறப்பாக செய்கிறீர்கள்?(ஜோதிடம், எண்கணதம்...)அதனினும் உங்கள் எழுத்தில் உள்ள ஒரு உயிரோட்டம்.
  சில நாட்கள் காலையில் 4 மணிக்கே பதிவு இடுகிறீர்கள்.
  உங்களின் இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
  உங்களை அருகில் பார்க்க ஆசை! முதல் பெஞ்சுக்கு வரட்டுமா? :-)))

  ReplyDelete
 30. ////நம் பெயர் நம்மைக்கேட்டு வைக்கப்படவில்லை. அதுதான் பரிதாபம். அதுதான் அவலம். நாம் ஆசைப்படும் பெயரை நாம் மாற்றிக்கொள்ளலாம் என்றால் முடியாது. Birth Certificate, College certificates, Employment order,
  Marriage certificate, Bank account, Bank Deposit, Share certificates, Property Deeds, Passport, Ration Card, Voters Card, PAN Card என்று பல விஷயங்கள் அதற்குத்
  தடையாக இருக்கும். குறுக்கே நின்று கழுத்தை அறுக்கும்

  ஒரு சகோதரி கேட்டுள்ளார். வைத்த பெயரை எப்படி சார் மாற்றிக்கொள்வது?/////


  என் கணிதத்தை எல்லோருமே அவ்வளவு சுலபமாக கைகொண்டு பெயர் மாற்றம் செய்து விடலாம் என்பது சற்று ஆபத்தாக கூட முடியலாம்..
  பல கோணங்களில் ஆராய்ந்து பெயரமைக்காவிடில் (விரும்பத்தகுந்ததா/விரும்பத்தகாததா) விளைவுகளை வேடிக்கை பார்க்கவேண்டியதாகிவிடும்..
  ஆசிரியர் சொல்லியிருக்கிற விஷயப்படி நமது பெயரை மாற்றி அமைக்க முடியாது என்பது அவலம் என்று குறிப்பிட்டதிலே சிறு மாற்றம்
  செய்வது சரியாகும் என்று நினைக்கிறேன்..
  பெயர் மாற்றம் செய்த பின் அதனை குறிப்பிட்ட காலம் தினமும் உச்சரித்த வண்ணம் எழுதி வருவோமேயானால் நமது உடல் அந்த ஒலியதிர்வுகளின் தாக்கத்தில் எண்ண அலைகளின் மாறுபாட்டை உணரலாம்..அதன் அடிப்படையில் சந்திக்கும் மனிதர்களுடனான சம்பவங்களும் மாறிடும்.. விளைவு விரும்பத்தகுந்ததாக அமையும் பட்சத்தில் TAMIL NADU. GOVERNMENT GAZETTE லே பெயர் மாற்றம் பற்றிய விவரத்தை வெளிட்டு நாளிதழ்களிலும் வெளிட்டு அதிகாரபூர்வமானதாக அறிவிக்கலாம்.(இந்த அலுவலகம் சென்னை மவுண்ட் ரோட்டிலே ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடையின் அருகிலே இருக்கிறது.)
  இந்த விவரங்களின் அடிப்படையில் நமக்கு வேண்டிய அனைத்து சான்றிதழ்களிலுமே புதிய பெயரை அச்சிடுமாறு கோரலாம்.

  ReplyDelete
 31. ////Jeevanantham said...
  Thank you sir.////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 32. Subbramaniabalaji said...
  ஒருவருடைய பெயர் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயர் 8 அல்லது
  26 என்று வந்தால் அது சிறப்பாக இருக்காது.
  Colgate (Paste)- 26
  Closeup (Paste)- 35/////

  கால்கேட்காரர்களே colgate cibaca, colgate salt, colgate total என்று பல உட்பெயரை வைத்து சந்தையில் தங்கள் பங்கைத் தக்க வைத்துக்கொள்ளப் படாதபாடு படுவது உங்களுக்குத் தெரியுமா?

  ReplyDelete
 33. /////Naresh said...
  வணக்கம் ஐயா,
  வேலை காரணமாக கடந்த மூன்று நாட்களாக வகுப்புக்கு வர இயலவில்லை.
  வழக்கம் போலவே பதிவு மிகவும் அருமை.
  அது எப்படி எடுத்த எல்லா காரியத்தையும் சிறப்பாக செய்கிறீர்கள்?(ஜோதிடம், எண்கணதம்...)அதனினும் உங்கள் எழுத்தில் உள்ள ஒரு உயிரோட்டம்.//////

  அடிப்படையாக எழுத்தின்மேல் காதல் உள்ளவன். நன்றாக இல்லையென்றால் நானே படிக்கமாட்டேன். பக்கங்களைத் தள்ளிவிடுவேன். அதனால் என் எழுத்துக்கள் படிக்கப்பட வேண்டும் எனும் ஆர்வத்தில் சுவாரசியமாக எழுதுகிறேன்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  சில நாட்கள் காலையில் 4 மணிக்கே பதிவு இடுகிறீர்கள்.
  உங்களின் இந்த பணி தொடர வாழ்த்துக்கள்.
  உங்களை அருகில் பார்க்க ஆசை! முதல் பெஞ்சுக்கு வரட்டுமா? :-)))/////////

  பதிவில்தான் என்னுடைய படம் உள்ளதே சாமி! நான் என்ன திரைப்பட நடிகரா - அருகில் பார்க்க?:-)))))
  இது இணைய வகுப்பு, இதில் முதலில் வருகிறவர்கள் எல்லாம் முதல் பென்ஞ்ச்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  ReplyDelete
 34. //////minorwall said...
  ////நம் பெயர் நம்மைக்கேட்டு வைக்கப்படவில்லை. அதுதான் பரிதாபம். அதுதான் அவலம். நாம் ஆசைப்படும் பெயரை நாம் மாற்றிக்கொள்ளலாம் என்றால் முடியாது. Birth Certificate, College certificates, Employment order, Marriage certificate, Bank account, Bank Deposit, Share certificates, Property Deeds, Passport, Ration Card, Voters Card, PAN Card என்று பல விஷயங்கள் அதற்குத்
  தடையாக இருக்கும். குறுக்கே நின்று கழுத்தை அறுக்கும்
  ஒரு சகோதரி கேட்டுள்ளார். வைத்த பெயரை எப்படி சார் மாற்றிக்கொள்வது?/////
  என் கணிதத்தை எல்லோருமே அவ்வளவு சுலபமாக கைகொண்டு பெயர் மாற்றம் செய்து விடலாம் என்பது சற்று ஆபத்தாக கூட முடியலாம்.. பல கோணங்களில் ஆராய்ந்து பெயரமைக்காவிடில் (விரும்பத்தகுந்ததா/விரும்பத்தகாததா) விளைவுகளை வேடிக்கை பார்க்கவேண்டியதாகிவிடும்..
  ஆசிரியர் சொல்லியிருக்கிற விஷயப்படி நமது பெயரை மாற்றி அமைக்க முடியாது என்பது அவலம் என்று குறிப்பிட்டதிலே சிறு மாற்றம் செய்வது சரியாகும் என்று நினைக்கிறேன்..
  பெயர் மாற்றம் செய்த பின் அதனை குறிப்பிட்ட காலம் தினமும் உச்சரித்த வண்ணம் எழுதி வருவோமேயானால் நமது உடல் அந்த ஒலியதிர்வுகளின் தாக்கத்தில் எண்ண அலைகளின் மாறுபாட்டை உணரலாம்..அதன் அடிப்படையில் சந்திக்கும் மனிதர்களுடனான சம்பவங்களும் மாறிடும்.. விளைவு விரும்பத்தகுந்ததாக அமையும் பட்சத்தில் TAMIL NADU. GOVERNMENT GAZETTE லே பெயர் மாற்றம் பற்றிய விவரத்தை வெளிட்டு நாளிதழ்களிலும் வெளிட்டு அதிகாரபூர்வமானதாக அறிவிக்கலாம்.(இந்த அலுவலகம் சென்னை மவுண்ட் ரோட்டிலே ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடையின் அருகிலே இருக்கிறது.)
  இந்த விவரங்களின் அடிப்படையில் நமக்கு வேண்டிய அனைத்து சான்றிதழ்களிலுமே புதிய பெயரை அச்சிடுமாறு கோரலாம்.//////

  தகவலுக்கு நன்றி மைனர்!

  ReplyDelete
 35. Printing works required by the Government Departments in the State are being executed by this Department

  The Stationery and Printing Department at Door No.816, Anna Salai,Chennai-2
  இதுதான் சரியான முகவரி என்று நினைக்கிறேன்.. நேரடியாக செல்லும் முன் ஊர்ஜிதம் செய்துகொள்ளவும்..

  ReplyDelete
 36. ஐயா,
  என் பெயரின் எழுத்துக்கான எண்களைக் கூட்டினால் மொத்தம் 21 வரும்.
  பிறந்த எண் 3.
  இது நல்ல அமைப்பு தானா?

  நன்றி

  ReplyDelete
 37. Horlicks
  5+7+2+3+1+3+2+3=26
  (எவர்க்ரீன் மார்க்கெட்)

  k.R.Narayanan
  2+2+5+1+2+1+1+1+5+1+5=26
  பார்த்த உடனே இவர் ஒரு scholar என்ற வகையிலே அறியப்படுபவராக இருந்தாலும் ஒரு கிளிண்டனை போலே வசீகரத்துக்கு என்று சற்றும் சொல்ல முடியாது.எனினும் இந்த எண் 26 இவருக்கு எப்படி பலன் தந்தது என்பது புரியவில்லைதான்..
  இப்படி விஷயங்கள்தான் ஜோதிட சம்பந்தமான அடிப்படைகளிலான தீர்வை நோக்கி எண் கணித வாசிகள் நகர்வதற்கு காரணம்..
  பொதுவாக சனியின் ஆதிக்கத்தின் கீழ் வரும் எண்களில் பெயர் அமைந்து சிரமங்களை அனுபவிக்கும் நபர்கள் அல்லது பிறந்துவிட்டவ்ர்கள் புதனுடைய எண்ணான 5லே பெயர் அமையும் படி மாற்றிக்கொண்டால் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பது பொது விதி..(பண்டிட் சேதுராமன் அவர்கள் அனுபவ கணக்குப்படி.)எவ்வளவோ பேர் அரசியலில் உயரத்துக்கு வர சில முக்கிய எண்களை பெயராக வைத்து முயற்சித்து வருகின்ற போதும் (தற்சமயம் அரசியலில் இருப்பவர்கள் பலரும் அடக்கம்.) எல்லோருக்கும் ஏன் வெற்றி அமைவதில்லை என்பதும் எதிர்பாராத சிலருக்கு இப்படி எண்கணித விதிகளை மீறி புதிராக நிகழ்வுகள் சம்பவிப்பது யாராலுமே கணிக்கமுடியாததாகிவிடுகிறது.

  ReplyDelete
 38. ////minorwall said...
  Printing works required by the Government Departments in the State are being executed by this Department
  The Stationery and Printing Department at Door No.816, Anna Salai,Chennai-2
  இதுதான் சரியான முகவரி என்று நினைக்கிறேன்.. நேரடியாக செல்லும் முன் ஊர்ஜிதம் செய்துகொள்ளவும்../////

  கலக்குகிறீர்களே மைனர்.தகவலுக்கு நன்றி மைனர்!

  ReplyDelete
 39. /////Naresh said...
  ஐயா, என் பெயரின் எழுத்துக்கான எண்களைக் கூட்டினால் மொத்தம் 21 வரும்.
  பிறந்த எண் 3. இது நல்ல அமைப்பு தானா?
  நன்றி////////

  நல்ல அமைப்புத்தான்!

  ReplyDelete
 40. Dear Sir,
  The contents are very useful .
  My birth date is 8th and sais in exaltation in my horoscope in 8th place from lagna ( Meena Lagna).Pls tell me whether this combination support me.

  ReplyDelete
 41. Vanakam sir,
  Thanks a lot sir.....

  Thanuja

  ReplyDelete
 42. அன்பு அய்யாவுக்கு வணக்கம்,எண் கணிதம் மிகவும் பிரமாதம்,
  நான் பிறந்த தேதி -22, என் முழுபெயர் ச.ஜீவரெத்தினம்‍ கூட்டு எண் -48 வருகிறது
  இது சரியாக உள்ளதா அய்யா.தயவு செய்து சொல்லவும.
  என்னை வீட்டில் சிவா என்றும், நண்பர்கள் ஜீவா என்றும், சில பேர் ஜீவரெத்தினம் என்றும் அழைக்கிறார்கள்
  அன்புடன் ஜீவா,

  ReplyDelete
 43. அன்புடன் அசீரியருக்கு வணக்கம்
  எண்கணிதம் கீரோ என்ற மேல்நாட்டு அறிஞர் இந்திய வந்து பம்பாய் ஒரு ஜோதிட அறிஞரிடம் பயின்று அவர் உர்வகியது எண்கணிதம்
  இதற்கு மூலம் இந்தியனின் மூளைதான் .

  ReplyDelete
 44. //////minorwall said...
  Horlicks
  5+7+2+3+1+3+2+3=26
  (எவர்க்ரீன் மார்க்கெட்)
  k.R.Narayanan
  2+2+5+1+2+1+1+1+5+1+5=26
  பார்த்த உடனே இவர் ஒரு scholar என்ற வகையிலே அறியப்படுபவராக இருந்தாலும் ஒரு கிளிண்டனை போலே வசீகரத்துக்கு என்று சற்றும் சொல்ல முடியாது.எனினும் இந்த எண் 26 இவருக்கு எப்படி பலன் தந்தது என்பது புரியவில்லைதான்..
  இப்படி விஷயங்கள்தான் ஜோதிட சம்பந்தமான அடிப்படைகளிலான தீர்வை நோக்கி எண் கணித வாசிகள் நகர்வதற்கு காரணம்..
  பொதுவாக சனியின் ஆதிக்கத்தின் கீழ் வரும் எண்களில் பெயர் அமைந்து சிரமங்களை அனுபவிக்கும் நபர்கள் அல்லது பிறந்துவிட்டவர்கள் புதனுடைய எண்ணான 5லே பெயர் அமையும் படி மாற்றிக்கொண்டால் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பது பொது விதி..(பண்டிட் சேதுராமன் அவர்கள் அனுபவ கணக்குப்படி.)எவ்வளவோ பேர் அரசியலில் உயரத்துக்கு வர சில முக்கிய எண்களை பெயராக வைத்து முயற்சித்து வருகின்ற போதும் (தற்சமயம் அரசியலில் இருப்பவர்கள் பலரும் அடக்கம்.) எல்லோருக்கும் ஏன் வெற்றி அமைவதில்லை என்பதும் எதிர்பாராத சிலருக்கு இப்படி எண்கணித விதிகளை மீறி புதிராக நிகழ்வுகள் சம்பவிப்பது யாராலுமே கணிக்கமுடியாததாகிவிடுகிறது./////

  சில விஷயங்கள் புதிராகவே இருக்கும் மைனர். வெற்றிகரமான (branded washing powder) நிர்மா’ வும் ஒன்று. Nirma = 13. Exemptions will not become examples!:-))))

  ReplyDelete
 45. /////Ashok said...
  Dear Sir,
  The contents are very useful .
  My birth date is 8th and sais in exaltation in my horoscope in 8th place from lagna ( Meena Lagna).Pls tell me whether this combination support me./////

  Particulars are not sufficient to say anything~! And also the question is not specific!

  ReplyDelete
 46. //////Thanuja said...
  Vanakam sir,
  Thanks a lot sir.....
  Thanuja////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 47. /////ஜீவா said...
  அன்பு அய்யாவுக்கு வணக்கம்,எண் கணிதம் மிகவும் பிரமாதம்,
  நான் பிறந்த தேதி -22, என் முழுபெயர் ச.ஜீவரெத்தினம்‍ கூட்டு எண் -48 வருகிறது
  இது சரியாக உள்ளதா அய்யா.தயவு செய்து சொல்லவும.
  என்னை வீட்டில் சிவா என்றும், நண்பர்கள் ஜீவா என்றும், சில பேர் ஜீவரெத்தினம் என்றும் அழைக்கிறார்கள்
  அன்புடன் ஜீவா/////

  சரியாக இல்லை! பிறந்த தேதி எண் 4 பெயரின் கூட்டு எண் (48 = 12 = 3) 3 அல்லவா வருகிறது!
  எப்படி சரியாக இருக்கும்?

  ReplyDelete
 48. Good evening sir,
  Thanks for ur lesson sir
  i have lot of confuse due to name
  my name is not match for birth no sir
  fate no(total no) 1
  birth no (birth date)2
  name number 3
  what to do. how will i change name but i read brother minor wall comments.
  sundari.p

  ReplyDelete
 49. /////hamaragana said...
  அன்புடன் அசீரியருக்கு வணக்கம்
  எண்கணிதம் கீரோ என்ற மேல்நாட்டு அறிஞர் இந்திய வந்து பம்பாய் ஒரு ஜோதிட அறிஞரிடம் பயின்று அவர் உர்வகியது எண்கணிதம்
  இதற்கு மூலம் இந்தியனின் மூளைதான்.///////

  உண்மைதான். இதை அவரே தன்னுடைய நூலில் சொல்லியுள்ளார்!

  ReplyDelete
 50. ///////sundari said...
  Good evening sir,
  Thanks for ur lesson sir
  i have lot of confuse due to name
  my name is not match for birth no sir
  fate no(total no) 1
  birth no (birth date)2
  name number 3
  what to do. how will i change name but i read brother minor wall comments.
  sundari.p///////

  பிறந்த எண் இரண்டிற்கு மட்டும் பொருந்துமாறு பாருங்கள். குழப்பம் இருக்காது!

  ReplyDelete
 51. k.r.narayanan==26
  அன்புடன் வணக்கம் மேற்கண்ட இந்த பெயரில் பேரின் ஆரம்பம் கே என்று ஆரம்பிக்கிறது ( 1) இது R (2)அடுத்து ARA (3) என்று வருகிறது அது போக ஆங்கில எழுத்துகளில் A ,K, R ,H ,N ,M இரண்டு காலில் நிற்கும் எழுத்துகள் என்று கேள்விபட்டேன் அதிலும் A,R,K,. இவைகளுக்கு அதிக பலன் உண்டு ..ஆகவேதான் இவருக்கு 26 என இருந்தாலும் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் மட்டும் பிரபலமாக இருந்து விட்டு போய்விட்டார் ...

  ReplyDelete
 52. /////hamaragana said...
  k.r.narayanan==26
  அன்புடன் வணக்கம் மேற்கண்ட இந்த பெயரில் பேரின் ஆரம்பம் கே என்று ஆரம்பிக்கிறது ( 1) இது R (2)அடுத்து ARA (3) என்று வருகிறது அது போக ஆங்கில எழுத்துகளில் A ,K, R ,H ,N ,M இரண்டு காலில் நிற்கும் எழுத்துகள் என்று கேள்விபட்டேன் அதிலும் A,R,K,. இவைகளுக்கு அதிக பலன் உண்டு ..ஆகவேதான் இவருக்கு 26 என இருந்தாலும் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் மட்டும் பிரபலமாக இருந்து விட்டு போய்விட்டார் .../////

  இரண்டு காலில் நிற்கும் எழுத்துகள் பற்றிய செய்தி, எனக்குப் புதிய செய்தி. அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com