மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.3.10

கண்ணதாசனின் சமூகப்பார்வை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணதாசனின் சமூகப்பார்வை!

3. சமூகப் பார்வை!

எழுதும் திறன் என்பது வரம்! எழுத்தில், கவிதைகள் எழுதுவது என்பது கேட்டுப் பெற்ற அல்லது பயிற்சியால் பெற்ற வரம் அல்ல! கொடுக்கப்பட்ட வரம் அது!

ஆமாம் இறைவனால் கொடுக்கப்பெற்ற வரம் அது

அந்த வரத்தைத் தவறில்லாமல் பயன்படுத்த வேண்டுமல்லவா?

கவியரசர் தவறில்லாமல் பயன்படுத்தினார். எப்படிப் பயன்படுத்தினார் என்பதைச் சொல்கிறேன்

"உள்ளத்து உள்ளது கவிதை - நெஞ்சில்
உருவெடுப்பது கவிதை!
தெள்ளத் தெளிந்த மொழியால் - நன்கு
தெரிந்துரைப்பது கவிதை!"

என்று என் நண்பர் ஒருவர், கவிதைக்கு விளக்கம் சொல்வார்

அவரும் ஒரு சிறந்த கவிஞர்தான். அதுவும் கவியரசரிடம் சான்றிதழ் பெற்ற கவிஞர். கவியரசருடன் நெருங்கிப் பழகிய கவிஞர்.

அவரைப் பற்றிப் பிறகு பேசுவோம். இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

கவிதை உள்ளத்தின் வெளிப்பாடு. நல்ல கவிதை என்றால் அது நல்ல உள்ளத்திலிருந்து வெளிப்பட்டதாக இருக்கும்!

முதலில் நல்ல உள்ளம் வேண்டும்.

நல்லது, கெட்டது, நியாயம், அநியாயம், வேண்டியது, வேண்டாதது என்று பலவற்றையும் பகுத்து அறியக்கூடிய உள்ளம்தான் நல்ல உள்ளம்.

நல்ல உள்ளத்திற்கு மனித நேயமும், சமூகப் பார்வையும் அத்தியாசமானவை

தொலைதூரப் பேருந்திற்கு இரண்டு வாகன ஓட்டிகள் இருந்து மாற்றி மாற்றி அந்தப் பேருந்தை இயக்குவதுபோல, ஒரு நல்ல உள்ளத்தை இயக்குவது
இவை இரண்டும்தான்.

சமூகம் என்பது பலதரப்பட்ட மக்களைக் கொண்ட அமைப்பு அல்லது அங்கம்.

சமூகப் பார்வை என்பது, சமூகத்திற்கு அது கடைப்பிடிக்க வேண்டிய செய்திகளைச் சொல்வது. நல்ல செய்திகளை மட்டுமே சொல்வது.
சமூகத்திற்கு ஒவ்வாததைச் சொல்வது அல்ல! சொல்லவும் கூடாது!

ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதி, இசையமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.

தாயாரிப்பாளர், இயக்குனர், கதை-வசனம் எழுதுபவர்,இசையமைப்பாளர், இவர்களோடு நமது கவியரசரும் அமர்ந்து, பணியைத் துவக்கினார்கள். இயக்குனர், பாடல் இடம் பெறும் சூழ்நிலையைச் சொன்னார்.

படத்தின் நாயகி தன் மனதைக் கவர்ந்துவிட்ட நாயகனை நினைத்துத் தன் கனவில் பாடுவது போன்ற காட்சி.

பத்தே நிமிடத்தில் கவிஞர், அந்தக் காட்சியைத் தன் மனதில் வாங்கிக் கொண்டு பாடலை எழுதிக் கொடுத்து விட்டார்.

பாடல் இப்படித் துவங்கும்:

படம் - பாத காணிக்கை (வருடம்1962)

"அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
எந்தன் மனதைத் தந்து செல்லவா
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா"

படத்தில் நாயகன், நாயகியின் தாய்மாமன் மகன். மாமாவை அம்மான் என்பார்கள். மாமாவின் மனைவியை அத்தை என்பார்கள். அம்மாவின் தம்பி - அம்மா + ன் = அம்மான். அதுதான் தூய தமிழ்ச் சொல். எங்கள் பகுதிகளில் அம்மாவின் சகோதரர்களை அப்படித்தான் அழைப்போம். அம்மாவிற்கு ஒரு தம்பிதான் என்றால் அம்மான். ஒருவர் அம்மாவின் மூத்தசகோதரர், மற்றொருவர் இளைய சகோதரர் என்றால், பெரியவர் பெரியஅம்மான், சின்னவர் சின்னஅம்மான்.

அந்த உறவு முறைகளை கொஞ்சம் மறந்து விட்டுப் பாட்டிற்கு வருவோம்.

காதலி எதைத் தருவதாகச் சொல்கிறாள். தன் மனதைத் தருவதாகச் சொல்கிறாள். எதை எடுத்துக் கொண்டு போக விரும்புவதாகச் சொல்கிறாள். நாயகனின் மனதை!

அடடா, இதைவிடப் பெரியதாக ஒரு ஆடவனுக்கு என்ன கிடைத்து விட முடியும்? அதுவும் ஒரு பெண்ணே சொல்லும் போது.!

மீண்டும் அந்த வரிகளைப் பாருங்கள்:

"எந்தன் மனதைத் தந்து செல்லவா
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா"

இங்கேதான் கவியரசரின் மேன்மை புலப்படும். அதோடு என்ன எளிமையான சொல் விளையட்டுப் பாருங்கள்

இப்போது அந்தப் பாடலில் உள்ள சமூக நோக்கிற்கு வருகிறேன்

"மல்லிகைமலர் சூடிக் காத்து நிற்கவா
மாலைஇளம் தென்றல்தனைத் தூது விடவா
நல்லதோர் நாள்பார்த்துச் சேதி சொல்லவா
நாட்டோரைச் சாட்சிவைத்து வந்து விடவா?"

அவள் மல்லிகை மலர்சூடி அவனுக்காக் காத்து நிற்கட்டும் அல்லது அவனை வரச் சொல்லி தென்றலைத் தூதாக அனுப்பட்டும். ஆனால் அவன் கரம் பிடித்து இல்வாழ்க்கைக்குப் போவதென்றால் நான்கு பேர்களைச் சாட்சி வைத்து, அதாவது அவனை முறைப்படி திருமணம் செய்து கொண்டுதான் போக வேண்டும். இதுதான் பாட்டிலுள்ள செய்தி!

இரவோடு இரவாக ஓடிப்போய் விடக்கூடாது. இது எல்லாப் பெண்களுக்குமே உள்ள நியதி.

காதல் திருமணமாக இருந்தால்கூட, நான்கு நண்பர்களை சாட்சியாக வைத்துக் கொண்டுதான், காதல் திருமணத்திற்கென்று உள்ள முறைப்படி திருமணம்
செய்து கொண்டுதான் பொகவேண்டும்!

திருட்டுத்தாலி என்பது கூடவே கூடாது!

கவியரசர் மறைந்து 27 வருடங்கள் ஆகிவிட்டன. அவருக்குப் பிறகு திரைக்கு வந்துள்ள இன்றைய கவிஞர்கள் எப்படிப் பாட்டெழுதுகிறார்கள்.?

இப்போது வரும் பாடல்களில் பல சமுதாயச் சீரழிவிற்கு வழி வகுப்பதாக உள்ளது. சமுதாய அக்கறையென்றால் சிலர் கிலோ என்ன விலை என்பார்கள்.

அப்படி மனதை அதிர வைக்கும் பல பாடல்களை என்னால் சுட்டிக் காட்ட முடியும். இருந்தாலும் பதிவின் நீளம் கருதி (உங்களின், நேரம் மற்றும்
பொறுமை கருதி) மாதிரிக்கு இரண்டு பாடல்களை மட்டும் கோடிட்டுக்
காட்டுகிறேன்.

பாட்டைப் பாருங்கள்:

"கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா - இல்லை
ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலமா?
தாலியைத்தான் கட்டிக்கிட்டுப் பெத்துக்கலாமா
பெத்துக்கிட்டுத் தாலியைத்தான் கட்டிக்கலாமா?"

எப்படி இருக்கிறது பாட்டு?

இந்தப் பாடலை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, அதிகமாக மனனம்செய்து பாடியது சிறுவர்களும், சிறுமியர்களும் என்பது வருந்தக்கூடிய விஷயம்.

சரி, இன்னொரு பாடலையும் தருகிறேன்.

"சிரிச்சுவந்தான் சிரிச்சுவந்தான் சீனாதானா டோய்
சிறுக்கிமகள் சிறுக்கிமகள் தானாப்போனா டோய்!"

ஆகா இவற்றை எழுதியவர்கள் பல்லாண்டு வாழ்ந்து, தமிழ் சமூகத்தை மேம்படுத்தட்டும்!!!

வேறு என்ன சொல்ல முடியும் என்னால்?

(தொடரும்)வாழ்க வளமுடன்!

26 comments:

 1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

  கவியரசர் கண்ணதாசன் அவர்களின் சமூகப்பார்வை

  தங்களால் நினைவூட்டப்பெற்று மேலும் மேலும்

  சிறப்புப் பெற்றுள்ளது.

  நன்றி!

  வணக்கம்.

  தங்களன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-03-25

  ReplyDelete
 2. ஆசிரியருக்கு வணக்கம், தங்களின் ஆதங்கமே எனக்கும்....
  தமிழ் அன்னைக்கு செய்யப்பட்ட அலங்காரம்களாக ஐம்பெருங் காபியங்களைச் சொல்வார்கள், அதற்குப் பின் வந்த கவிஞர்கள் இன்னும் பல அலங்காரங்களை செய்தார்கள்: ஆனால் இன்று...., அம்மா உனது திருக்கரங்களிலே இருக்கும் ஓலைச்சுவடியையும் திருக்குறளையும் கீழே வைத்துவிட்டு உனது கூரைப் புடவையை இறுகப் பிடித்துக் கொள்..... அதோ இங்கே பல துர்ச்சாதனர்கள் ஓடிவருகிறார்கள்...... உன்னை வைத்து பணம் செய்ய....
  மனிதர்களை மட்டும் அல்ல மொழியையும் பலர் இன்று கொலை, கற்பழிப்பு, ஆபாசம் என்ற நிலைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதே உண்மை. தாய், தாய்மொழி, தாய்நாடு இவைகள் அனைத்தும் போற்றப்பட வேண்டிய ஓன்று அதை இன்று காக்கவேண்டியவர்களே சீரழிக்கிறார்கள் என்பதே உண்மை....
  "எப்படி எப்படி சமஞ்சது எப்படி?" சக்கரவள்ளிக் கிழங்கு.......... இங்கே பணத்திற்காக பிரபல கவிஞர் தடம் புரண்டிருக்கிறார். அரசியல்,கலை,இலக்கியச் சீரழிவுகள்: இன்னும் ஒருசில பெருந்தலைகள் உயிரோடு இருப்பதால் சற்று தாமதப் படுத்தப்பட்டுள்ளது அவ்வளவே........ நன்றிகள் குருவே!

  ReplyDelete
 3. அன்பு வாத்தியார் சார்,
  உங்கள் எண்ணத்தை என்னால் & எங்களால் 100% உணரமுடிகிறது. இன்றைய பாடல்களில் சமூக நோக்கம்
  இல்லவேயில்லை.

  கண்ணதாசனின் வரிகளை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார். என் தந்தையும் அவர் பாடல்களின் மீது மிக்க
  ஈடுபாடு கொண்டவர்.

  நன்றி
  சரவணா
  கோவை

  ReplyDelete
 4. ஹி.. ஹி.. வாத்தியாரே.. இது தலைமுறை இடைவெளின்னு அவங்க சொல்றாங்க..!

  அப்ப தமிழ் இருக்க இருக்க தேய்ஞ்சுக்கிட்டே போகுதுன்னுதானே அர்த்தம்..!

  ம்.. நாம கொடுத்து வைச்சது அவ்ளோதான்..!

  ReplyDelete
 5. //////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  கவியரசர் கண்ணதாசன் அவர்களின் சமூகப்பார்வை
  தங்களால் நினைவூட்டப்பெற்று மேலும் மேலும்
  சிறப்புப் பெற்றுள்ளது.
  நன்றி!
  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி///////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!

  ReplyDelete
 6. //////Alasiam G said...
  ஆசிரியருக்கு வணக்கம், தங்களின் ஆதங்கமே எனக்கும்....
  தமிழ் அன்னைக்கு செய்யப்பட்ட அலங்காரம்களாக ஐம்பெருங் காபியங்களைச் சொல்வார்கள், அதற்குப் பின் வந்த கவிஞர்கள் இன்னும் பல அலங்காரங்களை செய்தார்கள்: ஆனால் இன்று...., அம்மா உனது திருக்கரங்களிலே இருக்கும் ஓலைச்சுவடியையும் திருக்குறளையும் கீழே வைத்துவிட்டு உனது கூரைப் புடவையை இறுகப் பிடித்துக் கொள்..... அதோ இங்கே பல துர்ச்சாதனர்கள் ஓடிவருகிறார்கள்...... உன்னை வைத்து பணம் செய்ய....
  மனிதர்களை மட்டும் அல்ல மொழியையும் பலர் இன்று கொலை, கற்பழிப்பு, ஆபாசம் என்ற நிலைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதே உண்மை. தாய், தாய்மொழி, தாய்நாடு இவைகள் அனைத்தும் போற்றப்பட வேண்டிய ஓன்று அதை இன்று காக்கவேண்டியவர்களே சீரழிக்கிறார்கள் என்பதே உண்மை....
  "எப்படி எப்படி சமஞ்சது எப்படி?" சக்கரவள்ளிக் கிழங்கு.......... இங்கே பணத்திற்காக பிரபல கவிஞர் தடம் புரண்டிருக்கிறார். அரசியல்,கலை,இலக்கியச் சீரழிவுகள்: இன்னும் ஒருசில பெருந்தலைகள் உயிரோடு இருப்பதால் சற்று தாமதப் படுத்தப்பட்டுள்ளது அவ்வளவே........ நன்றிகள் குருவே!//////

  "சட்டை போட்ட சாத்துக்குடி
  சரசம் பண்ண சேர்த்துக்கடி" என்றெல்லாம் பாடல்கள் வருகின்றன. அதுதான் வருத்தமாக இருக்கிறது. தமிழை ஒருவழி பண்ணாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.

  ReplyDelete
 7. ///////Saravana said...
  அன்பு வாத்தியார் சார்,
  உங்கள் எண்ணத்தை என்னால் & எங்களால் 100% உணரமுடிகிறது. இன்றைய பாடல்களில் சமூக நோக்கம்
  இல்லவேயில்லை. கண்ணதாசனின் வரிகளை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார். என் தந்தையும் அவர் பாடல்களின் மீது மிக்க ஈடுபாடு கொண்டவர்.
  நன்றி
  சரவணா
  கோவை/////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சரவணன்!

  ReplyDelete
 8. //////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  ஹி.. ஹி.. வாத்தியாரே.. இது தலைமுறை இடைவெளின்னு அவங்க சொல்றாங்க..!
  அப்ப தமிழ் இருக்க இருக்க தேய்ஞ்சுக்கிட்டே போகுதுன்னுதானே அர்த்தம்..!
  ம்.. நாம கொடுத்து வைச்சது அவ்ளோதான்..!//////

  இடைவெளிகள் வந்து கொண்டே இருக்கும். அடுத்த இடைவெளி வரும்போது, இப்போது உள்ள அடுத்த தலைமுறைக்கு எல்லாம் உரைக்கும் ஊனாதானா! அது இதைவிட மோசமாக இருக்கும். அப்போது உணர்வார்கள்

  ReplyDelete
 9. ஆண்-நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே

  பெண்- அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே

  உடல் உறவையும் நளினமாய் சொன்னவர் கவியரசு

  ReplyDelete
 10. அன்று கவிதை எழுதியவர் மனிதன். அதனால்தான் காலம் கடந்தும் நம் நினைவினில் நிற்கின்றார். இனியும் நிற்பார்.

  இன்று கவிதை எழுதுபவன் 'money'தான் எல்லாம் என்று வாழும் 'money'தன்

  ReplyDelete
 11. கவிஞரைப் பற்றிய மிக நல்ல கட்டுரை. ஏற்கெனவே தங்களின் சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். சமீபமாய் நானும் வலைப்பூ ஆரம்பித்திருக்கிறேன்.அதன் விலாசம் இது;http://www.amudhavan.blogspot.com/இதில் கவிஞர் சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன்.கவிஞரைப்பற்றி எழுத நிறைய உள்ளது.சரியான கோணத்தில் அவரைப் படம் பிடிக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. வைர மனம்...வைர எழுத்துக்கள்...காரணம் பக்குவப்பட்ட மனசு..கவியரசர் க்கு ஈடு இணை யாரும் இல்லை

  ReplyDelete
 13. கவிஞரைப் பற்றிய தங்களின் கட்டுரை நன்றாக இருந்தது. ஏற்கெனவே தங்களின் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன்.நான் என்னுடைய வலைப்பூவிலும் கவிஞரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இன்னமும் எழுத நிறைய இருக்கிறது.தங்கள் எழுத்துக்கள் சரியான பாதையில் பயணிக்கவைக்கின்றன.வாழ்த்துக்கள்.எனது வலைப்பூவின் விலாசம்;http://www.amudhavan.blogspot.com/

  ReplyDelete
 14. /////T.V.ராதாகிருஷ்ணன் said...
  ஆண்-நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
  பெண்- அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
  உடல் உறவையும் நளினமாய் சொன்னவர் கவியரசு/////

  எடுத்துக்காட்டிற்கு நன்றி மிஸ்டர் ராதாகிருஷ்ணன்!

  ReplyDelete
 15. ///////Sreenivasan said...
  அன்று கவிதை எழுதியவர் மனிதன். அதனால்தான் காலம் கடந்தும் நம் நினைவினில் நிற்கின்றார். இனியும் நிற்பார். இன்று கவிதை எழுதுபவன் 'money'தான் எல்லாம் என்று வாழும் 'money'தன்/////

  நிலைமை அப்படியாகிவிட்டது. கேட்டால் மக்களின் விருப்பம் - நாங்கள் எழுதுகிறோம் என்பார்கள். trend என்பார்கள்.

  ReplyDelete
 16. /////Amudhavan said...
  கவிஞரைப் பற்றிய மிக நல்ல கட்டுரை. ஏற்கெனவே தங்களின் சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். சமீபமாய் நானும் வலைப்பூ ஆரம்பித்திருக்கிறேன்.அதன் விலாசம் இது;http://www.amudhavan.blogspot.com/இதில் கவிஞர் சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன்.கவிஞரைப்பற்றி எழுத நிறைய உள்ளது.சரியான கோணத்தில் அவரைப் படம் பிடிக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.//////

  உங்களுடைய பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி!

  ReplyDelete
 17. ///////ஆர்.கே.சதீஷ்குமார் said...
  வைர மனம்...வைர எழுத்துக்கள்...காரணம் பக்குவப்பட்ட மனசு..கவியரசர் க்கு ஈடு இணை யாரும் இல்லை//////

  ஆமாம். உண்மை. நன்றி நண்பரே!

  ReplyDelete
 18. /////Amudhavan said...
  கவிஞரைப் பற்றிய தங்களின் கட்டுரை நன்றாக இருந்தது. ஏற்கெனவே தங்களின் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன்.நான் என்னுடைய வலைப்பூவிலும் கவிஞரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இன்னமும் எழுத நிறைய இருக்கிறது.தங்கள் எழுத்துக்கள் சரியான பாதையில் பயணிக்கவைக்கின்றன.வாழ்த்துக்கள்.எனது வலைப்பூவின் விலாசம்;http://www.amudhavan.blogspot.com//////

  உங்களுடைய பின்னூட்டத்திற்கும் தகவலுக்கும் நன்றி!

  ReplyDelete
 19. அன்று இருந்த மக்கள் அவாறு இரசிதனர் இப்பொழுது இப்படி பட்ட ரசிகர்கள் பாட்டும் அவ்வாறே குறை சொல்லி பயனில்லை யாருக்கு எதுவேண்டுமோ அதுவே. இதில் வாலி யின் போக்கே செரி துட்டுக்கு பாட்டு.

  ReplyDelete
 20. எழுதுபவர்கள் எதையும் சற்று நாசூக்காக சொல்ல வர வேண்டும். இப்படி மொத்தமாக துகிலுரிவது போல் சொல்லக் கூடாதுதான். கேட்டால் இப்படி எழுதுவதைத்தான் இப்போதைய ரசிகர்கள் கேட்கிறார்களாம். யார் இவர்களை இப்படி எழுத சொல்லி வீட்டின் முன்னோ ஒலிப்பதிவுக் கூடம் முன்னோ போராட்டம் நடத்தினார்கள். அல்லது எத்தனை பேர் கடித வாயிலாகவோ வேறு வழியிலோ இப்படி எழுத சொல்லி கேட்டார்கள். இப்படி பாடல் எழுதினால்தான் கேட்போம் இல்லவிட்டால் கேட்க மாட்டோம் என்று யாராவது சொன்னார்களா.

  ReplyDelete
 21. படிக்கப் படிக்க பரவசமூட்டும் அழகிய வரிகள் கவியரசருடையது. இன்றைய காலகட்டத்தையும் ஒரு குட்டு குட்டி விட்டீர்களே ஆசிரியரே.

  ReplyDelete
 22. //////prakavikar said...
  அன்று இருந்த மக்கள் அவ்வாறு இரசித்தனர் இப்பொழுது இப்படி பட்ட ரசிகர்கள் பாட்டும் அவ்வாறே குறை சொல்லிப் பயனில்லை யாருக்கு எதுவேண்டுமோ அதுவே. இதில் வாலி யின் போக்கே செரி துட்டுக்கு பாட்டு.//////

  சாராய வியாபாரிகள் கல்லூரிகளை நடத்துகிறார்கள். கல்லூரிகளை நடத்த வேண்டிய அரசு சாராயம் விற்கிறது. அதனால் இன்றையச் சூழ்நிலையில் எதுவுமே தவறில்லை!:-))))

  ReplyDelete
 23. /////ananth said...
  எழுதுபவர்கள் எதையும் சற்று நாசூக்காக சொல்ல வர வேண்டும். இப்படி மொத்தமாக துகிலுரிவது போல் சொல்லக் கூடாதுதான். கேட்டால் இப்படி எழுதுவதைத்தான் இப்போதைய ரசிகர்கள் கேட்கிறார்களாம். யார் இவர்களை இப்படி எழுத சொல்லி வீட்டின் முன்னோ ஒலிப்பதிவுக் கூடம் முன்னோ போராட்டம் நடத்தினார்கள். அல்லது எத்தனை பேர் கடித வாயிலாகவோ வேறு வழியிலோ இப்படி எழுத சொல்லி கேட்டார்கள். இப்படி பாடல் எழுதினால்தான் கேட்போம் இல்லவிட்டால் கேட்க மாட்டோம் என்று யாராவது சொன்னார்களா./////

  சொன்னால் மட்டும் கேட்கவா போகிறார்கள்? நன்றி ஆனந்த்!

  ReplyDelete
 24. ////V.Radhakrishnan said...
  படிக்கப் படிக்க பரவசமூட்டும் அழகிய வரிகள் கவியரசருடையது. இன்றைய காலகட்டத்தையும் ஒரு குட்டு குட்டி விட்டீர்களே ஆசிரியரே./////

  குட்டவில்லை சாமி! வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறேன். அவ்வளவுதான்!

  ReplyDelete
 25. ayya avargalukku vanakkam.

  indraya tamil cinema paadalgalai

  ketkum pothu ennudaya irandu

  sevigalium
  raththame varugirathu.

  arththamillatha padalgal. sevigalai

  sevidaakkum isai,aabasamaana

  kaatchi amaippugal endru. enge

  pogirathu tamil cinemavin

  kalachchaaram? ithai ellam parkka

  enathu manam migavum vethanai

  padugirathu.nammudaya varunkala

  santhathigalai ninaiththal bayamaga

  irukkirathu.kavignar kannadhasanin

  kalam thirai ulagilum sari,samooga

  ulagilum sari migap periya potkalam

  endruthan sollavendum.avarukku pin

  vantha entha oru kavignanume intha

  samoogaththitkaga entha oru

  muyartchiyaiyum edukkavillai

  enbathu unmai.indraya kavignargal

  ellorum panaththitku vilai poi

  vittargal enbathu unmai.

  en appa solvaar,muththamilil

  muthalidamana iyal,isai,nadagam

  muthalanavatril muthalidam,

  KAVIGNAR KANNADHASAN ukke kodukka

  vendum endru.

  isai endral T.M.Soundar rajan.

  nadagam endral Sivaji ganesan

  endrum en thanthaiyar solvargal.

  avar sonnathu migavum sari.

  bharathi sonnathu pol

  Tamil ini mella saagum enbathu

  100/100 unmai.

  vanakkam.
  A.Chandar singh.

  arjunchandarsingh@gmail.com

  ReplyDelete
 26. ///////cs said...
  ayya avargalukku vanakkam.indraya tamil cinema paadalgalai ketkum pothu ennudaya irandu sevigalium
  raththame varugirathu. arththamillatha padalgal. sevigalai sevidaakkum isai,aabasamaana kaatchi amaippugal endru. enge
  pogirathu tamil cinemavin kalachchaaram? ithai ellam parkka enathu manam migavum vethanai padugirathu.nammudaya varunkala santhathigalai ninaiththal bayamaga irukkirathu.kavignar kannadhasanin kalam thirai ulagilum sari,samooga ulagilum sari migap periya potkalam endruthan sollavendum.avarukku pin vantha entha oru kavignanume intha samoogaththitkaga entha oru muyartchiyaiyum edukkavillai enbathu unmai.indraya kavignargal
  ellorum panaththitku vilai poi vittargal enbathu unmai. en appa solvaar,muththamilil muthalidamana iyal,isai,nadagam
  muthalanavatril muthalidam, KAVIGNAR KANNADHASAN ukke kodukka vendum endru.
  isai endral T.M.Soundar rajan.
  nadagam endral Sivaji ganesan
  endrum en thanthaiyar solvargal.
  avar sonnathu migavum sari.
  bharathi sonnathu pol
  Tamil ini mella saagum enbathu
  100/100 unmai.
  vanakkam.
  A.Chandar singh.
  arjunchandarsingh@gmail.com/////

  உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com