மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.12.09

Kuttik kathai: எப்படியடா கடவுளுக்குத் தெரியும்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Kuttik kathai: எப்படியடா கடவுளுக்குத் தெரியும்?

சிறுவர்கள் படிக்கும் ஆரம்பப் பள்ளிக்கூட வளாகத்தில் இருக்கும் அரங்கம் அது.

ஒரு நாள் அந்தப் பள்ளிக்கூடத்தின் புரவலர்களில் ஒருவரான சச்சிதானந்த சுவாமிகள், தங்கள் ஆசிரமத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் விளைந்த ஆப்பிள் பழங்களை மாணவச் செல்வங்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துக்கொண்டு வந்திருந்தார். மொத்தம் பத்துக் கூடை ஆப்பிள்கள்.

மேடையில் சாமியார். மேடையின் கீழே ஆப்பிள் பழக் கூடைகள்.

மாணவர்கள் அனைவரும் அங்கே வரவழைக்கப்பட்டார்கள். அவர்களிடம் ஒரு பத்து நொடிகள் இறைவனைப் பற்றி உரை நிகழ்த்திய சாமியார், இறுதியில் சொன்னார்:

“கண்மணிகளா, உங்களுக்குகாக நிறைய ஆப்பிள் பழங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். வரிசையில் நின்று ஆளுக்கு ஒரு பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாகக் கேளுங்கள். ஆளுக்கு ஒரு பழம்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். திருட்டுத் தனமாக மீண்டும் வரிசையில் வந்து இரண்டாவது பழத்தை எடுக்க ஆசைப் படக்கூடாது. ஒன்று என்றால் ஒன்றுதான். இங்கே இறைவன் நம்முடன் இருக்கிறார். கண்ணுக்குத் தெரியமாட்டார். ஆனாலும் அவர் பார்த்துக் கொண்டிருப்பார். அந்தப் பயம் உங்களுக்கு வேண்டும். ஆகவே
ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்”

நான்கு வரிசைகள் ஏற்படுத்தப் பட்டது. மளமளவென்று மாணவக் கண்மணிகள் மகிழ்வுடன் வரிசையில் நின்று பழங்களை எடுத்துக் கொள்ளத் துவங்கினார்கள்.

அப்போதுதான் அது நடந்தது.

அரங்கத்தின் கடைசி வரிசையில் இருந்த மாணவன் ஒருவன் தன் நண்பனின் காதில் கிசுகிசுத்தான்.

“டேய் சாமியார் வந்த வேனில் கூடை கூடையாக எக்ளேர் மிட்டாய்கள் இருக்கின்றன. வா, போய் ஆளுக்கொரு கை அள்ளிக் கொண்டு வந்து விடுவோம்”

நண்பன் பதில் சொன்னான்:

“நான் வரவில்லை!”

”ஏன்டா?”

“இப்போதுதானே சுவாமிஜி சொன்னார். கடவுள் பார்த்துக்கொண்டிருப்பார் என்று”

நமுட்டுச் சிரிப்போடு அவன் கேட்டான்: “ கடவுள் இந்த ஹாலில் அல்லவா இருக்கிறார். நாம் வேனில் எடுப்பது, அவருக்கு எப்படித் தெரியப்போகிறது?”


வாழ்க வளமுடன்!

98 comments:

  1. Present today sir, the two beautiful quotes in the picture are so true & just lovley~~~

    Thanks
    Thanuja

    ReplyDelete
  2. இனிய காலை வணக்கம்,
    சிறு கதை அருமை ......
    நன்றிகள்

    ReplyDelete
  3. கடவுளுக்கு எப்படி தெரியும் என்று சொன்ன மாணவன் ஜாதகத்தில் புதன், 6,8,12 இருந்து பகை, நீசம் அல்லது அஸ்தங்கம் அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. >>>கடவுள் இந்த ஹாலில் அல்லவா இருக்கிறார். நாம் வேனில் எடுப்பது, அவருக்கு எப்படித் தெரியப்போகிறது?<<<

    இப்படி நினைத்துதான் நிறைய பேர் தப்பு மேல தப்பு செய்யிராங்க...

    ReplyDelete
  5. நல்ல பதிவு. அருமையான கருத்துக்கள். நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம்.

    கடவுள் இந்த ஹாலில் அல்லவா இருக்கிறார்.

    எங்கு தெரியுமா. Classroom2007 ல்

    நன்றி.

    ReplyDelete
  7. காலை வணக்கம் ஆசானே,
    கதை அருமை.

    ReplyDelete
  8. iyaa!!!!!!!!!!!!!11

    ullen iyaa!!!!!!!!!!!!!!!!!

    adhikaalai Muthal Vanakkam

    Gurunaatharukku

    uriththuaakuga..................................................

    ReplyDelete
  9. அந்தச் சிறுவன்தான் வருங்கால அரசியல்வியாதி.. வருங்கால எம்.எல்.ஏ., வருங்கால எம்.பி., வருங்கால மாண்புமிகு அமைச்சர், வருங்கால மேதகு முதல்வர்..!

    ReplyDelete
  10. Good morning,

    Lesson is paramount

    GOD is everywhere.

    ReplyDelete
  11. ஹாஹாஹாஹா.....

    நினைப்புதான்......

    ReplyDelete
  12. vaguparai vaathiyaruku vanakkangal naan sila kaalam udal nilai sariyillatha kaaranathaal ennaal vaguparaiku vara mutiyavillai padankalai tharpozhuthuthaan padikka aarambithirukiren ,

    paadankalai muzhuvathum padikka innum irandu naal pidikum pola irukee

    nam naattil pala periya manitharkal kadavuluku eptiyada theriyum endru thaan ippati pala kaariyankal seikiraar kal ,


    ithu varum ilam thalai muraiyinarukku mun udharanam aagi vidukirathu
    prabakar

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா!
    சிறுகதை நன்றாக உள்ளது நன்றி

    ReplyDelete
  14. ////Thanuja said...
    Present today sir, the two beautiful quotes in the picture are so true & just lovley~~~
    Thanks
    Thanuja////

    துவக்கப் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. /////astroadhi said...
    இனிய காலை வணக்கம்,
    சிறு கதை அருமை ......
    நன்றிகள்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////ananth said...
    கடவுளுக்கு எப்படி தெரியும் என்று சொன்ன மாணவன் ஜாதகத்தில் புதன், 6,8,12 இருந்து பகை, நீசம் அல்லது அஸ்தங்கம் அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்./////

    புதனுடன் சனி சேர்ந்திருந்தாலும், இந்தக் குணம் இருக்கும்!

    ReplyDelete
  17. /////மதி said...
    >>>கடவுள் இந்த ஹாலில் அல்லவா இருக்கிறார். நாம் வேனில் எடுப்பது, அவருக்கு எப்படித் தெரியப்போகிறது?<<<
    இப்படி நினைத்துதான் நிறைய பேர் தப்பு மேல தப்பு செய்யிராங்க.../////

    உண்மைதான். நன்றி, நண்பரே!

    ReplyDelete
  18. /////blogpaandi said...
    நல்ல பதிவு. அருமையான கருத்துக்கள். நன்றி.////

    நன்றி ப்ளாக் பாண்டி! பெயர் நன்றாக உள்ளது!

    ReplyDelete
  19. /////Success said...
    வணக்கம்.
    கடவுள் இந்த ஹாலில் அல்லவா இருக்கிறார்.
    எங்கு தெரியுமா. Classroom2007 ல்
    நன்றி./////

    அப்படியா? என் கண்ணில் படவில்லை. உங்கள் கண்ணில் பட்டிருக்கிறார். சந்தோஷம்!:-))))

    ReplyDelete
  20. /////சிங்கைசூரி said...
    காலை வணக்கம் ஆசானே,
    கதை அருமை.////

    நன்றி சிங்கைக்காரரே!

    ReplyDelete
  21. ////kannan said...
    iyaa!!!!!!!!!!!!!11
    ullen iyaa!!!!!!!!!!!!!!!!!
    adhikaalai Muthal Vanakkam Gurunaatharukku uriththuaakuga.!////

    வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  22. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    அந்தச் சிறுவன்தான் வருங்கால அரசியல்வியாதி.. வருங்கால எம்.எல்.ஏ., வருங்கால எம்.பி., வருங்கால மாண்புமிகு அமைச்சர், வருங்கால மேதகு முதல்வர்..!/////

    வாருங்கள் ஊனா தானா! நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

    ReplyDelete
  23. /////rama said...
    Good morning,
    Lesson is paramount
    GOD is everywhere.//////

    உருவாய், அருவாய் உளதாய், இலதாய் என்று அருணகிரியார் பாடிவைத்துவிட்டுப் போயிருக்கிறாரே!
    நன்றி!

    ReplyDelete
  24. /////துளசி கோபால் said...
    ஹாஹாஹாஹா.....
    நினைப்புதான்......//////

    வாருங்கள் டீச்சர். நெடு நாட்களளுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். உங்கள் வரவு நல்வரவாகுக!
    உங்கள் வகுப்பு சட்டாம்பிள்ளை கொத்தனார் நலமாக இருக்கிறாரா? கேட்டதாகச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  25. /////prabakar.l.n said...
    vaguparai vaathiyaruku vanakkangal naan sila kaalam udal nilai sariyillatha kaaranathaal ennaal vaguparaiku vara mutiyavillai padankalai tharpozhuthuthaan padikka aarambithirukiren ,
    paadankalai muzhuvathum padikka innum irandu naal pidikum pola irukee
    nam naattil pala periya manitharkal kadavuluku eptiyada theriyum endru thaan ippati pala kaariyankal seikiraar kal , ithu varum ilam thalai muraiyinarukku mun udharanam aagi vidukirathu
    prabakar////

    உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். வகுப்பறை எங்கே போய்விடப் போகிறது? பாடங்களை ஆர அமர உட்கார்ந்து படித்துக்கொள்ளலாம்!

    ReplyDelete
  26. /////DHANA said...
    வணக்கம் ஐயா!
    சிறுகதை நன்றாக உள்ளது நன்றி/////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. Dear Sir,

    Thanks for the lessons,

    Balakumaran

    ReplyDelete
  28. அந்தக் க‌‌தைக்கு இசைவான வேறொரு கதை."கடவுள் எங்கும் எதிலும் நிறைந்துள்ளார். எல்லாவற்றையும் சாட்சியாகப் பார்த்துக்கொண்டு உள்ளார்"
    என்று சிறுவர்களுக்கு குரு போதித்தார்.பாடம் முடிந்தபின்னர் எல்லோர் கையிலும் லட்டு ஒன்றினைக் கொடுத்து "ஒருவர் சாப்பிடுவதை மற்றொருவர்
    காணாமல் ஒளிந்துகொண்டு சாப்பிடணும்" என்று கட்டளை இட்டார்.ஒரு மாணவனைத் தவிர ஏனையோர் அனைவரும் ஒளிந்து கொள்ள இடம் தேடி ஓடிவிட்டனர்.எஞ்சிய மாண‌வனைக் கூப்பிட்டு,"நீ மட்டும் ஏன் ஒளியச் செல்லவில்லை?" என வினவினார். அந்த உத்தம மாண‌வன் கூறினான்:
    "அய்யா! நீங்கள் இன்று காலை நடத்திய பாடத்தின்படி கடவுள் இல்லாத இடமே இல்லை. அவர் காணாத காட்சியே இல்லை என்னும் போது எங்கு சென்று நான் ஒளிவேன்? யாரும் கானாமல் எப்படி உண்பேன்? கடவுள் பார்த்துக்கொண்டு இருப்பாரே! உங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. மன்னிக்கவும்."
    பாடத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட மாணவனை குரு உச்சி முகர்ந்து பாராட்டினார்.

    ReplyDelete
  29. ஆசிரியரின் கதையும், கதையைப் படித்த மாணவர் கிருஷ்ணன் அவர்களின் கதையும் நன்றாய் இருந்தது. எளிய கதைகள்தான் பெரிய கருத்துக்களுக்கு அடித்தளமாக இருக்கின்றன. எங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்கி வரும் உங்களுக்கு எங்கள் நன்றி மலர்கள். (அட்டெனன்ஸ் போட்டுக்கங்க சார்.......)
    - அன்புடன்,
    லலித்

    ReplyDelete
  30. ஆசிரியருக்கு வணக்கம்,

    கதையும் கருத்தும் அருமை.

    இப்படித்தானே இன்றும் பலரும்
    (வயதான சிறுவர்களும்) இருக்கிறார்கள்.

    இன்னும் சிலரோ!
    அந்தக் கடவுளுக்கே
    கையூட்டுக் கொடுத்து
    சரி செய்வதாக நினைத்து,
    பாவத்தையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள்!
    ஆமாம்,
    கடவுள் அம்சமான சத்திய தர்மத்தையேக் கொல்கிறார்கள்.

    உளி என்னவோ சிறிது
    ஆனால், தாங்கள் செதுக்கிய
    சிலையின் (கதையின்)
    பொருளோ மிகவும் பெரியது.

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  31. ////KUMARAN said...
    Dear Sir,
    Thanks for the lessons,
    Balakumaran////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  32. //kmr.krishnan said...
    அந்தக் க‌‌தைக்கு இசைவான வேறொரு கதை."கடவுள் எங்கும் எதிலும் நிறைந்துள்ளார். எல்லாவற்றையும் சாட்சியாகப் பார்த்துக்கொண்டு உள்ளார்"
    என்று சிறுவர்களுக்கு குரு போதித்தார்.பாடம் முடிந்தபின்னர் எல்லோர் கையிலும் லட்டு ஒன்றினைக் கொடுத்து "ஒருவர் சாப்பிடுவதை மற்றொருவர்
    காணாமல் ஒளிந்துகொண்டு சாப்பிடணும்" என்று கட்டளை இட்டார்.ஒரு மாணவனைத் தவிர ஏனையோர் அனைவரும் ஒளிந்து கொள்ள இடம் தேடி ஓடிவிட்டனர்.எஞ்சிய மாண‌வனைக் கூப்பிட்டு,"நீ மட்டும் ஏன் ஒளியச் செல்லவில்லை?" என வினவினார். அந்த உத்தம மாண‌வன் கூறினான்:
    "அய்யா! நீங்கள் இன்று காலை நடத்திய பாடத்தின்படி கடவுள் இல்லாத இடமே இல்லை. அவர் காணாத காட்சியே இல்லை என்னும் போது எங்கு சென்று நான் ஒளிவேன்? யாரும் கானாமல் எப்படி உண்பேன்? கடவுள் பார்த்துக்கொண்டு இருப்பாரே! உங்கள் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. மன்னிக்கவும்."
    பாடத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட மாணவனை குரு உச்சி முகர்ந்து பாராட்டினார்.////

    அருமையானதொரு பதில் கதைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  33. ////லலித் said...
    ஆசிரியரின் கதையும், கதையைப் படித்த மாணவர் கிருஷ்ணன் அவர்களின் கதையும் நன்றாய் இருந்தது. எளிய கதைகள்தான் பெரிய கருத்துக்களுக்கு அடித்தளமாக இருக்கின்றன. எங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக்கி வரும் உங்களுக்கு எங்கள் நன்றி மலர்கள். (அட்டெனன்ஸ் போட்டுக்கங்க சார்.......)
    - அன்புடன்,
    லலித்////

    ஆகா, போட்டாகிவிட்டது நண்பரே! மலர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  34. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    கதையும் கருத்தும் அருமை.
    இப்படித்தானே இன்றும் பலரும் (வயதான சிறுவர்களும்) இருக்கிறார்கள்.
    இன்னும் சிலரோ! அந்தக் கடவுளுக்கே கையூட்டுக் கொடுத்து சரி செய்வதாக நினைத்து,
    பாவத்தையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள்! ஆமாம், கடவுள் அம்சமான சத்திய தர்மத்தையேக் கொல்கிறார்கள். உளி என்னவோ சிறிது ஆனால், தாங்கள் செதுக்கிய சிலையின் (கதையின்)
    பொருளோ மிகவும் பெரியது.
    நன்றிகள் குருவே!////

    பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  35. ஆசிரியருடைய கதையைப் போல் திரு கிருஷ்னன் அவர்கள் சொன்ன கதையும் நன்று. பாடத்தைச் சரியாக புரிந்துக் கொண்ட மாணவன் ஜாதகத்தில் ஞான மோட்சகாரகன் கேதுவுடன் தேவகுரு இருக்க வேண்டும் அல்லது அவர் பார்வை பட வேண்டும்.

    ReplyDelete
  36. வணக்கம் ஐயா!
    கடவுள் பாவம் ! கடவுள் வேலை ரொம்பதான் கஷ்டம்
    நாம் கொடுத்து வைத்தவர்கள் !

    ReplyDelete
  37. வணக்கம் ஆய்யா,
    பாடித்தவர் முதல் பாமரர்வரை
    ஒரு சிலரை தவிர பலபேர் இந்த‌
    நிலமைதான்,இதில் வயசு வித்தியம்
    கிடையாது.
    இன்ரைய பதிவில் ஆணந்தன் சார்
    வகுப்பில் மிகவும் கவனமாக இருக்கிரார்.
    துண்டடில் காரனுக்கு மிதப்பகட்டையில்
    கவனம் இருப்பது பொல்,வாழ்துக்கல்.
    நன்ரியுடன் அரிபாய்.
    வாழ்க வழமுடன்.

    ReplyDelete
  38. /////ananth said...
    ஆசிரியருடைய கதையைப் போல் திரு கிருஷ்ணன் அவர்கள் சொன்ன கதையும் நன்று. பாடத்தைச் சரியாக புரிந்துக் கொண்ட மாணவன் ஜாதகத்தில் ஞான மோட்சகாரகன் கேதுவுடன் தேவகுரு இருக்க வேண்டும் அல்லது அவர் பார்வை பட வேண்டும்.//////

    அத்துடன் ஐந்தாம் வீடும் (house for keen intelligence) நன்றாக இருக்க வேண்டும்!

    ReplyDelete
  39. /////maharaja said...
    வணக்கம் ஐயா!
    கடவுள் பாவம் ! கடவுள் வேலை ரொம்பதான் கஷ்டம்
    நாம் கொடுத்து வைத்தவர்கள் !/////

    ஆமாம்! விருப்பு வெறுப்பு இன்றி அனைவரின் மீது கருணைவைப்பது அவருக்கு மட்டுமே சாத்தியமானது. கஷ்டம்தான்!

    ReplyDelete
  40. /////aryboy said...
    வணக்கம் ஆய்யா, பாடித்தவர் முதல் பாமரர்வரை ஒரு சிலரை தவிர பலபேர் இந்த‌ நிலமைதான்,இதில் வயசு வித்தியம் கிடையாது. இன்றைய பதிவில் ஆனந்தன் சார் வகுப்பில் மிகவும் கவனமாக இருக்கிரார்.
    தூண்டடில்காரனுக்கு மிதப்பகட்டையில் கவனம் இருப்பதுபோல,வாழ்துக்கள்.
    நன்றியுடன் அரிபாய். வாழ்க வளமுடன்.//////

    அவர் என்ன வேலை பார்க்கிறார் என்று தெரிந்தால், அவருடைய கவனத்தைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்வீர்கள்!

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. /////ananth said...
    பாடத்தைச் சரியாக புரிந்துக் கொண்ட மாணவன் ஜாதகத்தில் ஞான மோட்சகாரகன் கேதுவுடன் தேவகுரு இருக்க வேண்டும் அல்லது அவர் பார்வை பட வேண்டும்.//////

    அத்துடன் ஐந்தாம் வீடும் (house for keen intelligence) நன்றாக இருக்க வேண்டும்!/////

    For me 5th house has 33 astavarga.
    And kethu in guru parvai (9th parvai).

    It is good for me.

    thanks for your comments...

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
  44. அய்யா..
    பதிவு வழக்கம்போல் சுவாரஸ்யம்.
    பகுத்தறிவுவாதிகளுக்கே உரிய நமுட்டுச் சிரிப்பு பையனிடம் தெரிவது கதையின் மெருகை கூட்டுகிறது.
    உங்கள் பேனா புகைப்படமும் எடுக்குமோ?மனதில் காட்சியை நிறுத்திருக்கிரீர்கள் மறுபடியும்.
    அப்புறம் ஆனந்த் அவர்களின் கணிப்பும் உங்கள் பதிலும் சரியானால் அந்த அமைப்புகளுடன் இருக்கும் அடியேன்தான் உதாரண ஜாதகமா?
    புதன் லக்கினத்தில்இருந்து சனி அவரை பார்க்கிறார்.
    குரு தனுசில் இருந்து கேதுவை பார்க்கிறார்.5ஆம் இடம் 33AV. குரு SAV5.
    வேறு பல கிரகங்களும் இணைந்து இருந்தாலும் காரம் மணம் என்று மசாலா களை கட்டினாலும் இந்த அமைப்புக்களின் effect
    இருக்கத்தான் செய்கிறது.
    அவ்வப்போது மனித முயற்சிதான் தெய்வத்தால் ஆகாததையும் முடிக்கும் மூலசூத்திரம் என்ற வள்ளுவனின் வாக்குதான் சரியோ என்று எண்ணமிடத் தோன்றுகிறது.
    பாடம் தெளிவாகப் புரிந்தது.

    ReplyDelete
  45. ஆனால் புதன்11 ,8 க்கு அதிபதி.
    SAV7.வர்கோத்தமம்.
    11ஆம் இடம் 37AV.
    8க்கு அதிபதி லக்கினத்தில்
    இருந்தால் கொஞ்சம் கேள்வி மனப்பான்மை(அகராதித்தனம்-esp.in god belief)இருக்கும் என்று எங்கேயோ படித்த ஞாபகம்.அப்பிடியா?

    ReplyDelete
  46. எனக்கு தொழில் முறை ஜோதிடனாகும் எண்ணம் இல்லை. ஏனென்றால் போதிய வருமானம் வரும் முழு நேரத் தொழில் இருக்கிறது. செய்வதைச் திருந்த செய் என்பதற்கொப்ப ஜோதிடத்தை நன்றாக கற்றுக் கொள்ள விரும்புகிறேன். எல்லாம் சரியாக இருக்கிறது. எதையும் முறையாகக் கற்றுக் கொள்ள தேவைப்படும் consistencyதான் என்னிடம் குறைகிறது. அறிவு/அறிந்துக் கொள்வது இதற்கு உரிய ஸ்தானமான 5ல் செவ்வாயும் (2 பரல்) ராகுவும் (பரலே இல்லாதவர்) பாய் போட்டு படுத்திருக்கிறார்கள். ஒரு ஆறுதல். இந்த ஸ்தானத்திற்குரிய (கோணம்) சனி இன்னொரு கோணமான 9ல் (2 பரல்தான்) இருக்கிறார்.

    ReplyDelete
  47. very simple lessons.....expecting more and more from you sir

    ReplyDelete
  48. ////வால்பையன் said... எனக்கு தண்ணியில கண்டம்!///
    வால் பையன் சகோதர உங்களுக்கு நீரில் கண்டம் என்று தாங்கள் சொன்னதை அறிந்து நான் ரொம்பா கஷ்ட பட்டேன் நீங்க எங்க இருக்கிறீங்க கடல் கிட்ட போகதீங்க ரொம்ப மழை பொழிந்தால் வெளிய போகதீங்க அப்புறம் நவரத்தினகற்கள் போட்டு கொள்ளுங்கல் நான் சென்னையிலிருக்கிறேன் தி நகர்ல
    ஜெய்பூர் ஜேம்ஸ் இருக்கிறது சனிகிழமை பெருமாளை கூம்மிடுங்கள்
    சுந்தரி.

    ReplyDelete
  49. Good evening dear prabhakar brother,
    Take care your health. Go and consult doctor. Donot worry about anything. Now how is ur health.
    sundari.p

    ReplyDelete
  50. ஐயா வணக்கம்,
    கடவுள் எங்கும் இருக்கிறார் நாம் செய்யும் செயலைம்ட்டும் அவர் கவனிக்கவில்லை நம் மனதில தோன்றும் எண்ணங்களையும் அவ்ர் கவனித்து
    கொள்கிறார். நீங்க ரொம்பா நல்ல தத்துவ கதை சொல்லறீங்க எங்கப்ப இப்படியெல்லாம் சொல்லி தர மாட்டார் ரொம்ப நன்றி சார். ஐயா நம்ப கிருஷ்ண
    சாரும் ரொம்ப ந்ல்ல தத்துவ கதை சொல்லி த்ருகிறார் அவ்ருக்கும் ரொம்ப நன்றி.
    சுந்தரி

    ReplyDelete
  51. /////minorwall said...
    அய்யா..
    பதிவு வழக்கம்போல் சுவாரஸ்யம்.
    பகுத்தறிவுவாதிகளுக்கே உரிய நமுட்டுச் சிரிப்பு பையனிடம் தெரிவது கதையின் மெருகை கூட்டுகிறது.
    உங்கள் பேனா புகைப்படமும் எடுக்குமோ?மனதில் காட்சியை நிறுத்திருக்கிரீர்கள் மறுபடியும்.
    அப்புறம் ஆனந்த் அவர்களின் கணிப்பும் உங்கள் பதிலும் சரியானால் அந்த அமைப்புகளுடன் இருக்கும் அடியேன்தான் உதாரண ஜாதகமா?
    புதன் லக்கினத்தில்இருந்து சனி அவரை பார்க்கிறார்.
    குரு தனுசில் இருந்து கேதுவை பார்க்கிறார்.5ஆம் இடம் 33AV. குரு SAV5.
    வேறு பல கிரகங்களும் இணைந்து இருந்தாலும் காரம் மணம் என்று மசாலா களை கட்டினாலும் இந்த அமைப்புக்களின் effect இருக்கத்தான் செய்கிறது.
    அவ்வப்போது மனித முயற்சிதான் தெய்வத்தால் ஆகாததையும் முடிக்கும் மூலசூத்திரம் என்ற வள்ளுவனின் வாக்குதான் சரியோ என்று எண்ணமிடத் தோன்றுகிறது.
    பாடம் தெளிவாகப் புரிந்தது.//////

    உங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரிதான் முக்கியம். நன்றி மைனர்!

    ReplyDelete
  52. ///minorwall said...
    ஆனால் புதன்11 ,8 க்கு அதிபதி.
    SAV7.வர்கோத்தமம்.
    11ஆம் இடம் 37AV.
    8க்கு அதிபதி லக்கினத்தில்
    இருந்தால் கொஞ்சம் கேள்வி மனப்பான்மை(அகராதித்தனம்-esp.in god belief)இருக்கும் என்று எங்கேயோ படித்த ஞாபகம்.அப்பிடியா?/////

    லக்கினத்தில் மாந்தி இருந்தால் குணக்கேடாக இருக்கும். உங்களுக்குப் பதினொன்றாம் அதிபதி புதன் லக்கினத்தில் இருப்பது நல்லதுதான்.

    ReplyDelete
  53. /////ananth said...
    எனக்கு தொழில் முறை ஜோதிடனாகும் எண்ணம் இல்லை. ஏனென்றால் போதிய வருமானம் வரும் முழு நேரத் தொழில் இருக்கிறது. செய்வதைச் திருந்த செய் என்பதற்கொப்ப ஜோதிடத்தை நன்றாக கற்றுக் கொள்ள விரும்புகிறேன். எல்லாம் சரியாக இருக்கிறது. எதையும் முறையாகக் கற்றுக் கொள்ள தேவைப்படும் consistencyதான் என்னிடம் குறைகிறது. அறிவு/அறிந்துக் கொள்வது இதற்கு உரிய ஸ்தானமான 5ல் செவ்வாயும் (2 பரல்) ராகுவும் (பரலே இல்லாதவர்) பாய் போட்டு படுத்திருக்கிறார்கள். ஒரு ஆறுதல். இந்த ஸ்தானத்திற்குரிய (கோணம்) சனி இன்னொரு கோணமான 9ல் (2 பரல்தான்) இருக்கிறார்.///////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  54. /////Priya said...
    very simple lessons.....expecting more and more from you sir/////

    தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேனே சகோதரி!

    ReplyDelete
  55. ////sundari said...
    ஐயா வணக்கம்,
    கடவுள் எங்கும் இருக்கிறார் நாம் செய்யும் செயலைம்ட்டும் அவர் கவனிக்கவில்லை நம் மனதில தோன்றும் எண்ணங்களையும் அவர் கவனித்துக் கொள்கிறார். நீங்க ரொம்பா நல்ல தத்துவ கதை சொல்லறீங்க எங்கப்ப இப்படியெல்லாம் சொல்லி தர மாட்டார் ரொம்ப நன்றி சார். ஐயா நம்ப கிருஷ்ணன் சாரும் ரொம்ப நல்ல தத்துவ கதை சொல்லி தருகிறார் அவ்ருக்கும் ரொம்ப நன்றி.
    சுந்தரி////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  56. கடவுள் கதை,,ரசித்தேன்,,மகிழ்ச்சி அய்யா,,

    ReplyDelete
  57. ///அப்பன் said...
    கடவுள் கதை,,ரசித்தேன்,,மகிழ்ச்சி அய்யா,,////

    உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சியே. நன்றி!

    ReplyDelete
  58. /////கல்யாணி சுரேஷ் said...
    Nice & necessary Story./////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  59. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  60. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  61. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  62. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  63. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  64. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  65. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  66. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  67. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  68. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  69. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  70. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  71. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  72. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  73. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  74. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  75. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  76. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  77. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  78. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  79. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  80. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  81. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  82. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  83. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  84. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  85. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  86. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  87. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  88. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  89. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  90. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  91. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  92. /////bala said...
    Good story

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  93. 4 .02 PM to 5 . 59 PM வரை
    கமெண்ட் deletion மட்டுமே என்றால் கஷ்டம்தான்.பின்னூட்டங்களில் எடிட்டிங் கூட பண்றீங்க போலருக்கே.?
    அப்பிடி என்னதான் சார் வருது?அபிடியே உட்டால் நாங்களும் பார்த்துட்டு பதில் கொடுப்போம்லே?

    ReplyDelete
  94. /////minorwall said...
    4 .02 PM to 5 . 59 PM வரை
    கமெண்ட் deletion மட்டுமே என்றால் கஷ்டம்தான்.பின்னூட்டங்களில் எடிட்டிங் கூட பண்றீங்க போலருக்கே.?
    அப்பிடி என்னதான் சார் வருது?அபிடியே உட்டால் நாங்களும் பார்த்துட்டு பதில் கொடுப்போம்லே?////

    மொத்தம் 33 பின்னூட்டங்கள். அனைத்தையும் ஒவ்வொன்றாக அழித்தேன்.நமது வகுப்பறை மாணவர்கள் கண்ணில் பட்டால், குழாயடிச் சண்டையாகிவிடும். அதானால்தான், யார் கண்ணிலும் படுவதற்கு முன் வேகமாகச் சுத்தம் செய்தேன். தொலைகிறது. விட்டு விடுவோம்.

    ReplyDelete
  95. அய்யா வணக்கம், நான் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன்.இருப்பினும் ஜோதிடத்தை கற்கவேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன்.தொழில்முறையாக இல்லாமல் அதிலுள்ள ஈடுபாட்டால் மட்டுமே விரும்புகிறேன்.நான் இணையத்தில் அம்மாஎன்தெய்வம்வல்லம்தமிழ் என்கிற பெயரில் 3 வலைப்பதிவுகளில் எழுதி வருகிறேன்.சிறு வயதில் இருந்தே ந்ல்ல குருவிற்காய் ஏங்குகிறேன்.அருள்கூர்ந்து எனக்கு வழிகாட்டவும்.என்பிறந்த தேதி 31.08.1967,திருவாதிரை,மிதுன ராசி,கடக லக்கினம்

    ReplyDelete
  96. ////Blogger தமிழ்ச் செல்வன்ஜீ said...
    அய்யா வணக்கம், நான் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன்.இருப்பினும் ஜோதிடத்தை கற்கவேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன்.தொழில்முறையாக இல்லாமல் அதிலுள்ள ஈடுபாட்டால் மட்டுமே விரும்புகிறேன்.நான் இணையத்தில் அம்மாஎன்தெய்வம்வல்லம்தமிழ் என்கிற பெயரில் 3 வலைப்பதிவுகளில் எழுதி வருகிறேன்.சிறு வயதில் இருந்தே ந்ல்ல குருவிற்காய் ஏங்குகிறேன்.அருள்கூர்ந்து எனக்கு வழிகாட்டவும்.என்பிறந்த தேதி 31.08.1967,திருவாதிரை,மிதுன ராசி,கடக லக்கினம்/////

    இறைவன்தான் உண்மையான வழிகட்டி. அனுதினமும் அவரைப் பிரார்த்தனை செய்யுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com