மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.3.09

பெண்களின் சகவாசமும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமும்!

பெண்களின் சகவாசமும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமும்!

நட்பு முறையில் ஒரு பெண்ணுடன் இருக்கும் சகவாசம் தவறல்ல. அதுவே
எல்லை தாண்டிய சகவாசம் என்றால் பிரச்சினைக்கு உரியதாகிவிடும்.

முன்பெல்லாம் பிரச்சினைகளை மூடி மறைத்து விடுவார்கள். இப்போது
அதற்கெல்லாம் நோ சான்ஸ்!

தவறான சகவாசம் எல்லாம் இப்போது மகளிர் காவல் நிலையத்தில்தான்
பைசல் செய்யப் படுகின்றன. அனுபவப்பட்டவர்களைக் கேட்டால் கதை
கதையாகச் சொல்வார்கள்.

அதேபோல முன்பெல்லாம் இருதாரம் என்பது சர்வ சாதாரணம். இப்போது
அதற்கு வாய்ப்பில்லை. தெரிந்தோ தெரியாமலோ ஒன்று அல்லது இரண்டு
கேஸ்கள் இருக்கலாம். மற்றபடி வாய்ப்பில்லை. மகளிர் காவல் நிலைய
உதவியுடன் முதல் மனைவி தன் கணவனைக் கட்டித் தொங்கவிட்டு விடுவாள்
-----------------------------------------------------------------------------------------------
அரட்டை போதும். இப்போது பாடம்

சனி, ஒரு ஜாதகத்தில் வெவ்வேறு வீடுகளில் இருப்பதற்கான பலாபலன்கள்
-----------------------------------------------------------------------------------------------
Warning:
கொடுக்கப்பட்டுள்ள அத்தனையும் ஒருவருக்கே இருக்கும் என்பதில்லை.
சிலருக்கு சில இருக்கும்
சிலருக்கு எல்லாம் இருக்கும்
சிலருக்கு அதில் ஒன்றோ அல்லது இரண்டோ இருக்கலாம்.
சிலருக்கு எதுவுமே இல்லாமல் இருக்கலாம்.
அது சனியின் வலிமையைப் பொறுத்தது.
அதோடு சனி இருக்கும் வீட்டின் அம்சத்தைப் பொறுத்தது.
உதாரணத்திற்கு சனி இருக்கும் வீட்டின் பரல் 30 அல்லது அதற்கு
மேற்பட்டு இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள தீய பலன்கள் இருக்காது
அதை மனதில் கொள்க!
ஆகவே பயம் கொள்ளாமல் ஜாதகத்தின் பிற அம்சங்களையும் கூட்டிக் கழித்து
பலனைப் பார்க்கவும்.
Don't jump to any conclusion without analyzing the other aspects of Saturn
and the house where he is occupying!
________________________________________________________________
1ல் அதாவது லக்கினத்தில் சனி

லக்கினத்தில் சனி இருப்பது பொதுவாக நல்லதல்ல. துரதிர்ஷ்டம் எனலாம்.
ஜாதகனின் உடல் நலத்திற்குக் கேடு. குழந்தைப் பருவத்தில் ஜாதகனுக்கு
உடல் நலமின்மை இருந்திருக்கும். சோம்பேறித்தனத்தை உண்டாக்கும்

வித்தியாசமான பழக்க வழக்கங்களை உடையவர்
குறுகிய மனப்பன்மை உடையவர்; நெறிமுறைகள் தவறியவர்
நலமில்லாத சிந்தனை உடையவர்: கொடுர சிந்தனைகளை உடையவர்
சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்
கடின மனதை உடையவர்.
தந்திரமானவர்
கஞ்சத்தனம் மிக்கவர்
சுத்தமில்லாதவர்
குறுகுறுப்பானவர்
உடற்குறைபாடுடையவர்
கீழ்த்தரமான பெண்களின் சகவாசம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
2ல்
Saturn in the Second House
Saturn makes one not above want and prone to lying.
Will live in foreign lands.
Will be a lover of justice.
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணின் சகவாசம்
பிரபலமில்லாமை
தடைப்பட்ட கல்வி
கண்பார்வைக் குறைபாடு
சமூக அமைப்பிற்கு ஒத்துப்போகாதவர்
அதிரடியாகப் பேசுபவர்
சிலருக்கு திக்கிப் பேசும் குறைபாடு இருக்கும்
போதைப்பழக்கம், குறிப்பாகக் குடிப்பழக்கம் உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------
3ல்
++++Saturn in the Third House
Saturn in the 3rd makes one very intelligent & liberal minded.
Will have strength of character and will be adventurous.
Will have subordinates and all the comforts of life.
துணிச்சல் மிக்கவர்
தைரியம் மிக்கவர்
விநோத மனப்பான்மையுடையவர் (எக்சென்ட்ரிக்)
புத்திசாலித்தனம் மிக்கவர்
செல்வந்தர்
சாதனைகள் படைப்பவர்
சிலர் தங்களது சகோதரர்களைப் பறி கொடுக்க நேரிடும்
அடுத்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கூடியவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
--------------------------------------------------------------------------------------------------
4ல்
Saturn in the Fourth House
Affliction to the heart.
Will lack happiness and mental peace.
Will be crooked and will be a violator of social norms.
Will live in foreign lands.
மகிழ்ச்சி இல்லாதவர்
திடீர் இழப்புக்களை உடையவர்
குறுகிய மனப்பான்மை உடையவர்
நல்ல சிந்தனையாளர்
அரசியல் ஆதாயம் இல்லாதவர்
சிலருக்கு தடைகளை உடைய கல்வி அமையும்
இந்த அமைப்பினர் வெளிநாடுகளுக்குச் சென்றால் வெற்றி பெறுவார்கள்
தாய்க்குக் கண்டம்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
---------------------------------------------------------------------------------------------------
5ல்
Saturn in the Fifth House
Will lack happiness and pleasure from children if Saturn is in the fifth.
Will lack intelligence and will be fickle minded.
Will have high longevity.
குறுகிய மனதை உடையவர்
சகஜமாகப் பழகாதவர்
சிலருக்குக் குழந்தைகள் இருக்காது
விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்
எல்லாவற்றிற்கும் ஒரு கதை சொல்பவர்
அரசுக்கு எதிராக நடப்பவர்
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கையை உடையவர்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-----------------------------------------------------------------------------------------------------
6ல்
Saturn in the Sixth House
Saturn in the sixth is the destroyer of enemies.
Will love all the pleasures of the mundane.
Will be a voracious eater.
Wealth will grace the native in no uncertain measure.
பிடிவாதமான ஆசாமி
ஆரோக்கியம் இல்லாதவர்
சிலருக்குக் காது கேட்கும் குறைபாடுகள் இருக்கும்
வாக்குவாதம் செய்பவர்கள்
சிலருக்குப் பால்வினை நோய்கள் இருக்கும்
புத்திசாலி
சுறுசுறுப்பானவர்
சிலருக்குக் கடன் தொல்லைகள் இருக்கும்
(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
----------------------------------------------------------------------

7ல்
++++ஜாதகன் அரசனைப்போல வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும்
உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக்
கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும்
இல்லாமல் செய்துவிடுவார்.
அரசன் என்றாலே அது இரண்டும் போய்விடுமல்லவா?

அதோடு ஜாதகனை சோம்பேறியாக்கிவிடுவார்.
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி! டபுள் இஞ்சின்.
ஜாலியான ஆசாமி.
சிலருக்கு ஆரோக்கியம் மிஸ்ஸாகிவிடும்
சிலருக்குக் காதுக்கோளாறுகள் இருக்கும்
(இரண்டு மனைவிகள் எனும்போது காதுக்கோளாறு இருப்பது நல்லதுதான்.
அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளூம்போது தேமே என்று
ஒன்றும் கேட்காதவர்போல இருந்து விடலாம்)
நளினமானவர்
மன உறுதியானவர் (இல்லாவிட்டால் இரண்டு பெண்களைச் சமாளிக்க முடியுமா?)
ஆர்வமுள்ளவர்
அரசியலுக்குப் போனால் வெற்றிபெறுவார்.
சிலருக்கு வெளிநாட்டு விருதுகள் கிடைக்கும்
-----------------------------------------------------------------------
8ல்
இது சனிக்கு உகந்த இடம் அல்ல! ஜாதகனுக்கு அடிக்கடி நோய் நொடிகள்
உண்டாகும், ஜாதகனை நேர்மை தவறச் செய்யும். துன்பங்கள் நிறைந்திருக்கும்.
சிலரை உறவினர்கள் கைவிட்டுவிடுவார்கள்

ஏமாற்றங்கள் மிகுந்த வாழ்க்கை
குடிப்பழக்கம் இருக்கும்.
பிறவர்க்கப் பெண்களுடன் தொடர்பு இருக்கும்
கண் பார்வைக் கோளாறு இருக்கும்.
தவறான உடல் உறவுகளில் ஈடுபாடு உண்டாகும்
ஆஸ்த்மா போன்ற நோய்கள் இருக்கும்
சனியுடன் மற்றும் ஒரு தீய கிரகம் இந்த இடத்தில் கைகோர்த்தால்
ஜாதகன் நேர்மையற்றவனாக இருப்பான்,
விசுவாசம் இல்லாத குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பான்.
கொடூரமான சிந்தனைகள் உடையவன்
நீண்ட ஆயுளை உடையவன்

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
-------------------------------------------------------------------------
9ல்
ஜாதகன் தான் எனும் அகங்காராம் மிக்கவன். ஈகோவினால் பல பிரச்சினைகளைச்
சந்திக்க நேரிடும். அதிக செல்வம் சேராது. சிலருக்குத் தந்தையின் அன்பு மற்றும்
அரவணைப்புக் கிடைக்காது. பாவச் செயல்களைச் செய்ய நேரிடும்.
சிலர் மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களைப் போட்டுப் பார்க்கவும் செய்வார்கள்

வழக்குகளில் வெற்றி பெறுபவன். அறக்கட்டளைகளைத் தோற்றுவிப்பவன்
கருமி. இல்லற வாழ்க்கையிலும் அந்தக் கஞ்சத்தனம் இருக்கும்.
சிலருக்கு இறையுணர்வு அறவே இருக்காது.
சாமியாவது, பூதமாவது போடா என்பான்.
----------------------------------------------------------------------
10ல்
++++இது நன்மை அளிக்கும் அமைப்பு.. சிலருக்கு உபகாரச் சம்பளம்
கிடைக்கும். Saturn makes one have scholarship
புத்திசாலித்தனம் மிகுந்து இருக்கும். ஆண்மை அதிகம் உடையவர்களாக
இருப்பார்கள். வீர புருஷர்களாக இருப்பார்கள்.
சபைகளில் தலைமை ஏற்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில்
எல்லா வசதிகளும் தேடிவரும்.

ஒரே ஒரு கஷ்டம். செய்யும் தொழிலை அல்லது வேலையை அடிக்கடி
மாற்றிக்கொண்டே இருப்பார்கள்

நல்ல உழைப்பாளி
சிலர் விவசாயத்தில் ஈடுபடுவார்கள். பணம் சேரும்.
தீடீர் உயர்வு, திடீர் மன அழுத்தம் இரண்டும் இருக்கும்
-------------------------------------------------------------------------------
11ல்
+++++இதுதான் சனிக்கு மிகச் சிறந்த இடம்.
This is the best postion for Saturn.
Saturn well posited in the eleventh makes one highly determined, healthy,
wealthy and wise.
Will have royal favour.
Will be a good sculptor.
Will have a lot of subordinates.
சிலருக்கு அரசியல் ஆதாயம், வெற்றி கிடைக்கும்
சிலர் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள்
சிலர் மரியாதைக்கு உரியவர்களாக இருப்பார்கள்
சிலர் பிறருக்கு அச்சத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
சிலருக்கு ஏராளமான இடங்கள் சொத்தாக இருக்கும்
வண்டி வாகன வசதிகள் மிகுந்து இருக்கும்!
---------------------------------------------------------------------------------
12ல்
இந்த இடம் சனியின் அமர்விற்கு மோசமான இடம்
சனி நல்ல பார்வை அல்லது சுயவர்கத்தில் நல்ல பரல்களைப்
பெறவில்லையானால் ஜாதகனுக்குக் கஷ்டமோ கஷ்டம்
ஜாதகனுக்குத் தோல்விமேல் தோல்வி!
எங்கே சென்றாலும் எதைத் தொட்டாலும் தோல்விமேல் தோல்வி!
ஜாதகன் கடைசியில் பெரிய ஞானியாகிவிடுவான்.
"போனால் போகட்டும் போடா" என்று பாடுவான்

ஜாதகனுக்கு செல்வமும் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது இரண்டும்
மறுக்கப்பட்டிருக்கும். பலவிதமான நோய்கள் வந்து இம்சைப் பட வைக்கும்
Saturn makes one devoid of happiness & wealth.
Will be tormented by many an illness
ஜாதகன் வெறுத்துப்போய் இரக்கமில்லாதவன் ஆகிவிடுவான்
தனிமைப்பட்டு விடுவான்.

(இவைகள் பொது விதிகள். சேர்க்கை, பார்வை, அஷ்டகவர்க்கப் பரல்கள்,
லக்கினாதிபதியின் மற்றும் சனியின் சுயவர்க்கப்பரல்களை வைத்து இவைகள்
மாறுபடும்)
------------------------------------------------------------------------------------
(அலசல் தொடரும்)

வாழ்க வளமுடன்!

51 comments:

  1. Today I come first. Put one present for me.

    ReplyDelete
  2. ஐயா,

    வணக்கம். எனக்கு மீன லக்கினம்- லக்கினத்தில் குரு. பதினொன்றில் சனி. பலன்கள் அருமை.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. பாடம் மிகவும் அருமை!!

    //Saturn in the Fifth House

    விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்//

    இது உண்மை ஐயா!!

    ReplyDelete
  4. ம்..

    எனக்கும் சனி 12லதான்.. ஆனா கூடவே மாந்தியும் குந்தியிருக்கு..!

    ReplyDelete
  5. பாடம் அருமை ஐயா. நன்றி.

    ReplyDelete
  6. அய்யா,

    எனக்கு ஏழில் சனி (தனுர் ராசி). நாலா வேளை, நான் டபுள் என்ஜின், அரசியல் அல்லது அரசாக இல்லை. சாதரண மனிதான தான் இருக்கிறேன்!

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  7. அய்யா,

    எனக்கு ஏழில் சனி (தனுர் ராசி). நல்ல வேளை, நான் டபுள் என்ஜின், அரசியல் அல்லது அரசராக இல்லை. சாதரண மனிதானa தான் இருக்கிறேன்!

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  8. வணக்கம் சாரே,
    பாடம் மிகவும் அருமை!!
    எனக்கு பத்தில் சனி , கன்னி லக்னம் , ரிசப ராசி .
    சனி 34 பரல்களுடன் , சென்ற பதின்நான்கு வருடங்களாக குருதசை நடக்கிறது .
    நீங்கள் சொல்லிஇருப்பது போல் , அடிக்கடி வேலை மாற்றம் நடைபெற்றது .
    அடுத்த சனி தசை மிகவும் நன்றாக இருக்கும் என்று சோதிடர் கூறிஉள்ளார் :-))
    இன்னும் இரண்டு வருடங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான் .

    ReplyDelete
  9. ஐய்யா வணக்கம்
    எனக்கு மகர லக்நம் சனி 11 ல் ஆனால் பகை கூட கேது ,புதன் இருக்கிறார்.

    ReplyDelete
  10. Dear Sir

    Arumayagavum Satru Surkkamvum diercta Padadhirku vandhadhu koncham Santhosam Sir..

    Enakku 9il Saturn(Kadakam - Already you told me 30 paralkal) - Virchiga Lagnam - Appavidam Alavu Kadandha Pasam, Ammavidamum...No ego .. Neengal Solvadhu pola Adhu Podhu palan endru ninankirean..

    Padangal Arumayaga poikondirukkindrana.
    ungal Eluthu Panikku Engal Nandri Ayya(Sir).

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaramn

    ReplyDelete
  11. ஐயா வணக்கம்

    நாளை தான் பாடம் வரும் வெளியூர் செல்வதால் வேலை இருக்கிறது
    என்று கூறினீர்கள்.ஆனால் எங்களுக்காக வேலைகளையும் பொருட்படுத்தாமல்
    இந்த பதிவினை எழுதியதற்கு மிக்க நன்றி!.....

    ReplyDelete
  12. If a planet is Kona lord or in case malefics if they are kendra lord they do good to you. If they (any malefic planet) become Kendra and kona lord as well then you can expect the best results from that planet. Most of the astrology books I read say this. If this is correct then Rishaba and Thula lagna people should get very goods results during sani dasa. I appreciate your comments.

    ReplyDelete
  13. hi,

    lagnam dhanushu

    ennakku 10 il sani & mars and 32 paralgal.

    What will be the effects?

    ReplyDelete
  14. //////Blogger ananth said...
    Today I come first. Put one present for me.//////

    Two presents!

    ReplyDelete
  15. //////Blogger வேலன். said...
    ஐயா,
    வணக்கம். எனக்கு மீன லக்கினம்- லக்கினத்தில் குரு. பதினொன்றில் சனி. பலன்கள் அருமை.
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  16. /////Blogger SP Sanjay said...
    பாடம் மிகவும் அருமை!!
    //Saturn in the Fifth House
    விநோதமான கண்ணோட்டங்களை உடையவர்//
    இது உண்மை ஐயா!!//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. //////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said..
    ம்..
    எனக்கும் சனி 12லதான்.. ஆனா கூடவே மாந்தியும் குந்தியிருக்கு..!////////

    யார் வேண்டுமென்றாலும் குந்தட்டும். உங்களுக்கு பழநி அப்பனின் அருள் உள்ளது. கவலை எதற்கு?

    ReplyDelete
  18. /////Blogger N.K.S.Anandhan. said...
    பாடம் அருமை ஐயா. நன்றி./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. //////Blogger Sridhar said...
    அய்யா,
    எனக்கு ஏழில் சனி (தனுர் ராசி). நாலா வேளை, நான் டபுள் என்ஜின், அரசியல் அல்லது அரசாக இல்லை. சாதரண மனிதான தான் இருக்கிறேன்!
    நன்றி,
    ஸ்ரீதர்/////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  20. ///////Blogger Geekay said...
    வணக்கம் சாரே,
    பாடம் மிகவும் அருமை!!
    எனக்கு பத்தில் சனி , கன்னி லக்னம் , ரிசப ராசி .
    சனி 34 பரல்களுடன் , சென்ற பதின்நான்கு வருடங்களாக குருதசை நடக்கிறது .
    நீங்கள் சொல்லிஇருப்பது போல் , அடிக்கடி வேலை மாற்றம் நடைபெற்றது .
    அடுத்த சனி தசை மிகவும் நன்றாக இருக்கும் என்று சோதிடர் கூறிஉள்ளார் :-))
    இன்னும் இரண்டு வருடங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான் .///////

    நம்பிக்கையோடு இருங்கள். நம்பிக்கை வீண் போகாது!

    ReplyDelete
  21. //////Blogger sundar said...
    ஐய்யா வணக்கம்
    எனக்கு மகர லக்னம் சனி 11 ல் ஆனால் பகை கூட கேது ,புதன் இருக்கிறார்.///////

    11ல் உச்சமான கேதுவும், சனியும் இருப்பது நல்லதுதானே! இருவரும் கம்பஸ்ட் ஆகாமல் இருந்தால் சரிதான்!

    ReplyDelete
  22. ///////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Arumayagavum Satru Surkkamvum diercta Padadhirku vandhadhu koncham Santhosam Sir..
    Enakku 9il Saturn(Kadakam - Already you told me 30 paralkal) - Virchiga Lagnam - Appavidam Alavu Kadandha Pasam, Ammavidamum...No ego .. Neengal Solvadhu pola Adhu Podhu palan endru ninankirean..
    Padangal Arumayaga poikondirukkindrana.
    ungal Eluthu Panikku Engal Nandri Ayya(Sir). Thank you
    Loving Student
    Arulkumar Rajaramn//////

    பாராட்டிற்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  23. //////Blogger sundar said...
    ஐயா வணக்கம்
    நாளை தான் பாடம் வரும் வெளியூர் செல்வதால் வேலை இருக்கிறது
    என்று கூறினீர்கள்.ஆனால் எங்களுக்காக வேலைகளையும் பொருட்படுத்தாமல்
    இந்த பதிவினை எழுதியதற்கு மிக்க நன்றி!.....////////

    நேரம் கிடைக்கும்போது எழுத வேண்டியதுதானே! அதனால் எழுதினேன்!

    ReplyDelete
  24. //////Blogger ananth said...
    If a planet is Kona lord or in case malefics if they are kendra lord they do good to you. If they (any malefic planet) become Kendra and kona lord as well then you can expect the best results from that planet. Most of the astrology books I read say this. If this is correct then Rishaba and Thula lagna people should get very goods results during sani dasa. I appreciate your comments.//////

    Saturn is the lord for 9th & 10th for Rishaba lagna and 4th & 5th lord for Thula lagna. He is yogakarakan for both of the lagna.So he will bring good resluts

    ReplyDelete
  25. //////Blogger YOGANANDAM M said...
    hi,
    lagnam dhanushu
    ennakku 10 il sani & mars and 32 paralgal.
    What will be the effects?///////

    Mars is 5th & 12th lord for Dhanusu. His association with Saturn in 10th house will bring mixed results.

    ReplyDelete
  26. எனக்கு சந்திரனின் சொந்த வீடான கடகத்தில்(லக்கினத்தில்) சனியும், சனியின் சொந்த வீடான மகரத்தில் சந்திரனும் பரிவர்த்தனை யோகம் அடைகிறார்கள்!

    ReplyDelete
  27. ஹலோ சார்,

    சனியின் துவக்கமே படு ஜோராக உள்ளது. ஆமாம், எனக்கும் மகர ராசி தான், 4ல் சனி வக்ரமாகி கூடவே சந்திரனோடும் கேதுவோடும் . பலன்கள்
    சில பொருந்துது.பாப்போம் மீதியையும். நன்றாக சொல்லிட்டீர்கள் நன்றி.

    ReplyDelete
  28. வணக்கம் சார்
    பாடத்தை ஒரு நாள் முன்னதாக பதிவு செய்ததற்கு நன்றி .என் ஜாதகத்தில் ஏழில் சனி இருக்கிறார் . அனால் அவர் தனுடைய பகை வீடான கடகத்தில் இருக்கிறார் .இதனால் பலன்கள் ஏதும் மாறுபடுமா .என்னுடைய ராசி கும்பம் லக்கினம் மகரம். ஆனால் நீங்கள் சொல்லி இருப்பது போன்று எல்லாமும் எனக்கு ஒத்து வருகிறது .
    நன்றி
    கணேசன்

    ReplyDelete
  29. Dear Sir

    I Send my son birth details with one question to your mail.

    please reply sir.

    Thank you

    Regards
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  30. //////Blogger நாமக்கல் சிபி said...
    எனக்கு சந்திரனின் சொந்த வீடான கடகத்தில்(லக்கினத்தில்) சனியும், சனியின் சொந்த வீடான மகரத்தில் சந்திரனும் பரிவர்த்தனை யோகம் அடைகிறார்கள்!/////

    பரிவர்த்தனை என்பது உச்சத்திற்குச் சமம். அந்த இரண்டு கிரகங்களும் உச்சமானதற்கு உரிய பலனைத் தத்தம் தசாபுத்திகளில் செய்வார்கள். மறைவிடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  31. //////Blogger Sumathi. said...
    ஹலோ சார்,
    சனியின் துவக்கமே படு ஜோராக உள்ளது. ஆமாம், எனக்கும் மகர ராசி தான், 4ல் சனி வக்ரமாகி கூடவே சந்திரனோடும் கேதுவோடும் . பலன்கள்
    சில பொருந்துது.பாப்போம் மீதியையும். நன்றாக சொல்லிட்டீர்கள் நன்றி.//////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  32. //////Blogger krish said...
    Thanks for the lesson.//////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  33. ////////Blogger choli ganesan said...
    வணக்கம் சார்
    பாடத்தை ஒரு நாள் முன்னதாக பதிவு செய்ததற்கு நன்றி .என் ஜாதகத்தில் ஏழில் சனி இருக்கிறார் . அனால் அவர் தனுடைய பகை வீடான கடகத்தில் இருக்கிறார் .இதனால் பலன்கள் ஏதும் மாறுபடுமா .என்னுடைய ராசி கும்பம் லக்கினம் மகரம். ஆனால் நீங்கள் சொல்லி இருப்பது போன்று எல்லாமும் எனக்கு ஒத்து வருகிறது .
    நன்றி
    கணேசன்//////

    பகைவீட்டில் இருந்தால் பலன்கள் பாதியாகக குறைந்துவிடும்!

    ReplyDelete
  34. ////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    I Send my son birth details with one question to your mail.
    please reply sir.
    Thank you
    Regards
    Arulkumar Rajaraman///////

    நேரம் கிடைக்கும்போது பதில் எழுதுகிறேன்.பொறுத்திருக்கவும்!

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. Ayya... Sani Lagnathuku yooga karakanaga irundhalum adhae balan dhana a? Enaku Thula lagnam, lagnathil sani ucham... Elil Budhhan.. Budhan sani yai parkirar. Enna balan ayya ?

    ReplyDelete
  37. தலைப்பைப் பார்த்ததும் அரசியல் சில தலைவர்களும், ஒரு கவிஞரும் நினைவுக்கு வந்தார்கள். அப்பறம் தான் தெரிந்தது இது ஜோதிடம் தொடர்பில் எழுதி இருப்பது.

    ReplyDelete
  38. பாடம் அருமை. ஆனால், 2-ல் ஆயுள் காரகன் சுய வர்கத்தில் 2 பரல்களுடன் இருந்த நம் தேச பிதாவுக்கு பலன்கள் பொருந்தவில்லையே?

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  39. மன்னிக்கவும் ௦ பரல்கள் என்று எழுத நினைத்தேன்.

    இராசகோபால்

    ReplyDelete
  40. ////Blogger Prabhu said...
    Ayya... Sani Lagnathuku yooga karakanaga irundhalum adhae balan dhanaa?///////

    பிறகு யோககாரகனாக இருந்து என்ன பிரயோஜனம்? யோகமான பலன்களைத்தருவார். தன் தசாபுத்திகளில் தருவார்.

    Enaku Thula lagnam, lagnathil sani ucham... Elil Budhhan.. Budhan sani yai parkirar. Enna balan ayya?

    உங்கள் லக்கினத்திற்கு புதன் விரைய வீட்டிற்கும் அதிபதி. அவர் 7ல் இருந்து லக்கினத்தைப் பார்ப்பதால் உங்கள் செயல்களில் பல குறுக்கீடுகளும், தாமதங்களும், விரயங்களும் ஏற்படும்!

    ReplyDelete
  41. //////Blogger கோவி.கண்ணன் said...
    தலைப்பைப் பார்த்ததும் அரசியல் சில தலைவர்களும், ஒரு கவிஞரும் நினைவுக்கு வந்தார்கள். அப்பறம் தான் தெரிந்தது இது ஜோதிடம் தொடர்பில் எழுதி இருப்பது./////

    ஜோதிட வகுப்பிற்கு வருகிறவர்கள் எல்லாம் Book Mark செய்து வைத்திருக்கிறார்கள். என்ன தலைப்புப் போட்டாலும் அவர்கள் வருவார்கள். இந்த மாதிரி சுண்டி இழுக்கும் தலைப்பு எல்லாம் உங்களைப்போன்று அடிக்கடி வராதவர்களை உள்ளே இழுத்து வருவதற்காகவே:-)))))))

    "தலைப்பை நன்றாகப் போடு
    தானாக வருவார்கள்" என்று முன்பு எழுதினேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா?

    ReplyDelete
  42. ///////Blogger இராசகோபால் said...
    பாடம் அருமை. ஆனால், 2-ல் ஆயுள் காரகன் சுய வர்கத்தில் 2 பரல்களுடன் இருந்த நம் தேச பிதாவுக்கு பலன்கள் பொருந்தவில்லையே?
    அன்புடன்
    இராசகோபால்//////

    தேசப்பிதாவின் லக்கினம் துலாம். வலுவான குரு பார்வையுடன். குரு அவரை பல வழிகளிலும் நெறிப்படுத்தினான். அதோடு சனி துலா லக்கினத்திற்கு யோககாரகன். அவனும் மோசமான பெயரை காந்தீஜிக்குப் பெற்றுத்தரவில்லை! அதோடு 11ல் 37 பரல்கள். அந்த் வீட்டின் அமைப்பு அவருக்கு எல்லாப் புகழையும் பெற்றுத்தந்தது.

    ReplyDelete
  43. //////Blogger இராசகோபால் said...
    மன்னிக்கவும் ௦ பரல்கள் என்று எழுத நினைத்தேன்.
    இராசகோபால்//////

    அதனால் பரவாயில்லை!

    ReplyDelete
  44. //"தலைப்பை நன்றாகப் போடு
    தானாக வருவார்கள்" என்று முன்பு எழுதினேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா?//

    :) ச்சே தலைப்பு மட்டும் இல்லை, பதிவும் ஓரளவு எதிர்பார்ப்பை முழுமை செய்யும் படித்தான் எழுதுகிறீர்கள். 144 Followers பெற்ற ஒரே (மூத்த 50+) பதிவர் நீங்கள் மட்டும் தான்.

    வாத்தியார் ஐயாவுக்கு பாராட்டுகள் !

    ReplyDelete
  45. nice post sir, as im running short of time ill post my doubts on this entry sometime tomorrow.

    but at this momoment im wondering "whats the point of all this ?" (evrything)

    ReplyDelete
  46. //////Blogger கோவி.கண்ணன் said...
    //"தலைப்பை நன்றாகப் போடு
    தானாக வருவார்கள்" என்று முன்பு எழுதினேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா?//
    :) ச்சே தலைப்பு மட்டும் இல்லை, பதிவும் ஓரளவு எதிர்பார்ப்பை முழுமை செய்யும் படித்தான் எழுதுகிறீர்கள். 144 Followers பெற்ற ஒரே (மூத்த 50+) பதிவர் நீங்கள் மட்டும் தான்.
    வாத்தியார் ஐயாவுக்கு பாராட்டுகள் !///////

    நீங்கள் சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான் மறுப்புச் சொல்ல மனம் வராது!
    இருந்தாலும் என்னை நீங்கள் முதியோர் லிஸ்ட்டில் சேர்த்ததில் எனக்கு சற்று வருத்தம்தான்:-)))))))
    மனதளவில் எனக்கு வயது 25 மட்டுமே!

    ReplyDelete
  47. ////Blogger mike said...
    nice post sir, as im running short of time ill post my doubts on this entry sometime tomorrow.
    but at this momoment im wondering "whats the point of all this ?" (evrything)//////

    ஆகா, நேரம் கிடைக்கையில் எழுதுங்கள்!

    ReplyDelete
  48. //மனதளவில் எனக்கு வயது 25 மட்டுமே!//

    சரி சரி அதுக்காக இளைஞர்களுக்கு போட்டியா பஸ்டாண்டு, காலேஜ் வாசல் அப்படி இப்படி சைட் அடிக்க கிளம்பிடாதிங்க

    ReplyDelete
  49. ////Blogger கோவி.கண்ணன் said...
    //மனதளவில் எனக்கு வயது 25 மட்டுமே!//
    சரி சரி அதுக்காக இளைஞர்களுக்கு போட்டியா பஸ்டாண்டு, காலேஜ் வாசல் அப்படி இப்படி சைட் அடிக்க கிளம்பிடாதிங்க/////

    உத்தரவு இளவரசரே!!

    ReplyDelete
  50. 6 la sani magara rasi varkoththamam eppadi irukkum

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com