மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.7.21

Astrology: Pick up and Drop post 3 காலசர்ப்ப தோஷம்


Astrology: Pick up and  Drop post 3  காலசர்ப்ப தோஷம் 

ஜாதக தோஷங்களில் அதிகமான தொல்லை கொடுக்ககூடியது - அதாவது அதிகமாகப் படுத்தி எடுக்கக் கூடியது எது? 

காலசர்ப்ப தோஷம் தான் மிகவும் மோசமானது.

ஜாதகத்தில் ராகுவிற்கும் கேதுவிறகும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் சிக்கிக் கொண்டிருக்கும் நிலைப்பாடுதான் காலசர்ப்ப தோஷ்ம் ஆகும் 

அப்படி அமையப் பெற்ற ஜாதகர்கள் தங்களுடைய 33வது வயது வரை பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும். அதற்குப் பிறகு அந்த தோஷமே யோகமாக மாறி பல யோகங்களைக் கொடுத்து ஜாதகருக்கு பல நன்மைகளைச் செய்யும். உச்சமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.

Sandwiched between Rahu and Ketu 

உங்களுக்கு இருக்கிறதா பாருங்கள்! 

உதாரணத்திற்கு 3 பிரபலங்களின் பிறப்பு விபரங்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள் காலசர்ப்ப ஜாதகக்காரர்கள். சின்ன வயதில் பல கஷ்டங்களை அனுபவித்து, தங்களுடைய 33 வது வயதிற்கு மேல் மேன்மையான நிலைக்கு உயர்ந்தவர்கள் 

1. ஜவஹர்லால் நேரு அவர்கள்- 14-11-1889ல் பிறந்தவர். கடக லக்கினக்காரர். மிதுன ராகு துவங்கி வைத்தது

2.இசைஞானி இளையராஜா அவர்கள்- 2-6-1943ல் பிறந்தவர். ரிஷப லக்கினக்காரர் - கடக ராகு துவங்கி வைத்தது

3. திரைப்பட நடிகர் பாக்கியராஜ் அவர்கள் - 7-1-1951ல் பிறந்தவர். மிதுன லக்கினக்காரர் சிம்மத்தில் கேது அமர்ந்து ஆட்டத்தை துவங்கியது 

பின்னாளில்; இவர்கள் அனைவரும் பிரபலமானார்கள் 

இன்றைய பி அண்ட் டிராப் பதிவு அவ்வளவுதான் சாமிகளா!!!! 

அன்புடன் 

வாத்தியார்

====================================================== 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.21

Astrology: அலசல் பாடம் :எட்டே மாதங்களில் இறைவனடி சேர்ந்த குழந்தையின் ஜாதகம்!!!


Astrology: அலசல் பாடம் :எட்டே மாதங்களில் இறைவனடி சேர்ந்த 
குழந்தையின் ஜாதகம்!!!

ஒரு குழந்தையின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரம். பிறந்து 8 மாதங்கள்வரைதான் உயிரோடு இருந்தது. 

8வது மாத முடிவில் தன் பெற்றோர்களை  துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு, குழந்தை இறைவனடி சேர்ந்துவிட்டது.

எட்டு மாதத்தில் குழந்தையின் மறைவிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?

வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்!!!

மீன லக்கின ஜாதகம்.லக்கினகாரகன் குரு எட்டாம் இடத்தில் மாந்தியோடு கூட்டாக அமர்ந்து கடுமையான பாலரிஷ்ட தோஷத்தை உண்டாக்கியுள்ளான். 
அத்துடன் குரு பகவான் ராகுவின் நட்சத்திர சாரத்தில் இருப்பதோடு 6ம் அதிபதி சூரியன் மற்றும் 12ம் அதிபதி சனியின் பார்வைகளையும் பெற்று வலுவிழந்து உள்ளான். 

இவைதான் குழந்தையின் இறப்பிற்கு முக்கியமான காரணம்.

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.21

Astrology Pick up and Drop Post No.2 யாருக்கு அதிகம் பயப்பட வேண்டும் ?



Astrology Pick up and Drop Post No.2 யாருக்கு அதிகம் பயப்பட வேண்டும் ?

பிக்கப் அண்ட் டிராப் பதிவு எண் 2

சனியின் பாதிப்புகளுக்கு ஜாதகத்தில் உள்ள இயற்கையான கவசம் (shield) சனி வந்து அமரும் இடத்தில் அஷ்டவர்க்கப் பரல்கள் 30 இருந்தால் கவலைப்பட வேண்டாம். தீங்கு எதுவும் இருக்காது.

அவ்வாறு இல்லை என்றால் சனிக்கிழமை தோறும் கோவிலுக்குச் சென்று சனீஷ்வரனைப் பிரார்த்தித்து வந்தால் உபத்திரவம் குறையும்.

------------------------------------------------------------------------------------
அடுத்த பாடம்

சனி, ராகு மற்றும் கேது இவர்களில் யாருக்கு அதிகம் பயப்பட வேண்டும் ?
அவர்கள் மூவரையும் விட அதிகமாக பயப்பட வேண்டியது மாந்திக்குத்தான் சாமிகளா!!!

மாந்தி 12ல் அமர்ந்தால் தொல்லைதான். தேவையில்லாத விரையங்கள் (Losses) ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்

அதேபோல மாந்தி 2ம் வீட்டில் அமர்ந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

ஒரு வீட்டிற்கு மூன்று பாவங்கள் இல்லையா?

இரண்டாம் வீட்டில் வந்தமரும் மாந்தி கையில் காசைச் சேரவிடாது. ஒரு வேளை சேர்ந்தாலும் கையில் காசைத் தங்க விடாது. குடும்ப வாழ்க்கையிலும் பல பிரச்சினைகளை உண்டு பண்னும்

அதுபோல 9ம் வீட்டில் அமரும் மாந்தி பூர்வீகச் சொத்துக்களைக் கிடைக்க விடாது.

இன்றைய பிக்கப் அப் இவ்வளவுதான் சாமிகளா!!!

நாளை சந்திப்போம்
அன்புடன் 
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!