மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.11.12

காண்பதற்கே கண் ஆயிரம் வேண்டும்!







 
காண்பதற்கே கண் ஆயிரம் வேண்டும்!

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும்  கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the video clipping!


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.11.12

இலக்கியச்சோலை: அவன் கல்லென்றால் நீ மரம்!


 இலக்கியச்சோலை: அவன் கல்லென்றால் நீ மரம்!

”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்' என்று பாடினான் ஸ்ரீரங்கத்துக் கவிஞன்.

”மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிச்சோலை மரமாவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்” என்று பாடல்
எழுதினான் இன்னொரு கவிஞன்

ஆனால் நமது கவியரசர், கடவுளைக் கல்லென்று சொல்பவர்களைச் சாடிச் சொல்கிறார்:

கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!

அதோடு விட்டாரா? அதற்கும் மேலே சொல்கின்றார்:

”பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!”

முழுக்கவிதையையும் நீங்கள் அறியத் தந்துள்ளேன்
--------------------------------------------------------
கடவுளை நம்புக கடவுளைப் பற்றிய
கவிதைக ளெல்லாம் கற்றுத் தேறுக!
நடமிடும் தெய்வம் ராமனின் காதை
நற்பா ரதத்து நன்னெறி யாவும்
ஆய்ந்து படித்து அறிக பொருள்களை!

சாத்திரம் வேதம் தர்மம் தத்துவம்
தமிழன் முருகன் தனைப்புகழ் புராணம்
அனைத்தும் அறிக! அறிந்தபின் னாலே
எடுபே னாவை; எழுதுக கவிதை!
ஊற்றுக் கேணியின் உட்புறம் சுரக்கும்
ஆற்றுச் சுவைநீர் ஆமதன் பெருக்கம்!

நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலாபுரமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!

நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
ஆண்டவன் தத்துவம் ஆயிரம் எழுதலாம்!
கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!

மரத்தின் பேனா மைசுரக் காது!
மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை
பலபொருள் தேடுக; பலவகை பாடுக!
பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!

செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு!
நம்பிக்கைதான் நற்பொருள் வளர்க்கும்
நம்பு கடவுளை நல்ல கவிஞன்நீ!

பல்பொருள் அறிந்த பாவலர் சில்லோர்
சில்பொருள் மட்டுமே தேறிய தெதனால்?
அளவிற் கவிதை அதிகமா காமல்
குறைவே யான குறைபா டெதனால்?
நாத்திக சிறையை நம்பிக் கிடந்ததால்
அகவே எனது அருமைத் தோழனே
கடவுளை நம்புக! கவிஞன் நீயே!


தலைப்பு: கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம்
ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.11.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 3

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 3
ஜோதிடத் தொடர் - பகுதி 3

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
3. கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதம் (மேஷ ராசி)

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

இது சூரியனின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்திற்கு,

1. அஸ்விணி
2. பூசம்
3. ஆயில்யம்
4. மகம்
5 ஹஸ்தம்
6. சுவாதி
7. அனுஷம்
8. கேட்டை
9. மூலம்
10. சதயம்
11. ரேவதி
ஆகிய 11 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் ஹஸ்தம் கன்னி ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு. கன்னிக்கு எட்டாம் வீடு மேஷ வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அனுஷம், கேட்டை நட்சத்திரங்களுக்கும் உண்டு. அது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு விருச்சிகம் எட்டாம் வீடு. விருச்சிகத்திற்கு மேஷம் ஆறாம் வீடு. (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு ரேவதி நட்சத்திற்கும் உண்டு. அது மீன ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு. மீனத்திற்கு மேஷம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் கார்த்திகை ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திம பொருத்தம் ஆகும் அதாவது சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேராவிட்டால் இதைத் தெரிவு செய்யலாம்!

மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள் (மிதுன ராசி) பொருந்தாது. மிருகசீரிஷம் 1 & 2ஆம் பாதங்கள் மத்திம பொருத்தம் ஆகும் அதாவது சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேறாவிட்டால் இதைத் தெரிவு செய்யலாம்!

1. பரணி
2. ரோஹிணி
3. திருவாதிரை
4. பூரம்
5. சித்திரை 1 & 2ஆம் பாதங்கள் (கன்னி ராசி) பொருந்தாது. சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் (துலாம் ராசி) மத்திம பொருத்தம்
6. திருவோணம்
7. அவிட்டம்
8. உத்திரட்டாதி
ஆகியவை மத்திம பொருத்தம் உடையவை. அதாவது சராசரி - average பொருத்தம் மத்திம பொருத்தம் உடையவை. சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திரங்களில் 8ல் ஒன்றைத் தெரிவு செய்யலாம்
-------------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

தேவையில்லை. விவரம் முன் பதிவில் உள்ளது  இன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!