மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.5.14

கோடை விடுமுறை!

 

கோடை விடுமுறை!

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே மே 5, 6 & 7 ஆகிய தேதிகளில் வகுப்பறைக்கு விடுமுறை. ஜோதிடம், வகுப்பறை இத்தியாதிகளை மறந்துவிட்டு அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2.5.14

Devotional: தரணியைக் காத்தருளும் தவமணி!

 
Devotional: தரணியைக் காத்தருளும் தவமணி
பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை 'சூலமங்கலம்' சகோதரிகள்  பாடிய -  'சிவமணியால் வந்த தவமணி' என்ற பாடல் அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------
சிவமணியால் வந்த தவமணி
(சிவமணியால் வந்த தவமணி ... அவன்தான்
சிங்காரத் தேமதுரத் தமிழ்மணி)
(சிவமணியால் வந்த ... )
செங்கமலம் பூமேலே தவழ்ந்த மணி

அன்னை சேர்த்தணைத்த பின்னால்
ஒன்று சேர்ந்த மணி
ஆறுமுகமான மணி ... அழகு தெய்வமணி

(சிவமணியால் வந்த ... )

கரந்தன்னில் வேல்பிடித்த வேலுமணி ... அவன்தான்
கருணை முகங்கள் கொண்ட அருள் மணி

தந்தைக்கு ப்ரணவம் சொன்ன குருமணி
அவன்தான் ...
தரணியைக் காத்தருளும் தனயன் சுப்ரமணி
தரணியைக் காத்தருளும் தனயன் சிவசுப்ரமணி
(சிவமணியால் வந்த ... )

சூரனை வெற்றிக்கொண்ட வீரமணி ... உலகை
சுற்றி வந்து தண்டு கொண்டு நிற்கும் ஞானமணி
ஒளவையை சோதித்து பார்த்த செல்வமணி
அவன்தான் ...
அருமறைகள் போற்றும் ... உலகின் கண்மணி
(சிவமணியால் வந்த ... )

இசையோடு கலந்திருக்கும் இசைமாமணி
இருமங்கையரை மணந்த கலைமாமணி
திருப்புகழ் பாடியப் புலவனை ... திருத்திய திருமணி
திருச்செந்தில் விசாக ... திருவிழாவின் ஷண்முகமணி
(சிவமணியால் வந்த ... )
சிவமணியால் வந்த தவமணி.   

'சூலமங்கலம்' சகோதரிகள் - 'சிவமணியால் வந்த தவமணி'
------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.5.14

Humour: நகைச்சுவை: கஷ்டமர் கேர் 2020

 
Humour: நகைச்சுவை: கஷ்டமர் கேர் 2020

தலைப்பில் கஷ்டமர் கேர் என்றிருப்பதைப் பார்த்துப் பயந்து விடாதீர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவி என்பதை விட உபத்திரவம்தான் அதிகம்!
அதனால்தான் கஸ்டமர் கேர் என்பது கஷ்டமர் கேர் ஆகிவிட்டது.

வினையாகு பெயர்!

முதலில் உங்களுக்கு இணைப்புக் கிடைத்தவுடன் என்ன நடக்கிறது பாருங்கள்:

“வணக்கம், எங்கள் சேவையைத் தமிழில் பெற எண் ஒன்றை அழுத்தவும், ஆங்கிலத்தில் பெற எண் இரண்டை அழுத்தவும்”

“.....”

நீங்கள் புது வாடிக்கையாளர் என்றால் எண் ஒன்றை அழுத்தவும், இல்லை பழைய வாடிக்கையாளர் என்றால் எண் இரண்டை அழுத்தவும்”

“....”

உங்களுக்கு தகவல்கள் வேண்டுமென்றால் எண் ஒன்றை அழுத்தவும், பில்களுக்கு எண் இரண்டை அழுத்தவும். புகார்களுக்கு எண் மூன்றை
அழுத்தவும்

இப்படியே அவர்கள் சொல்கின்றபடி எழு கடல்கள், ஏழு மலைகளைக் கடந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் அதிஷ்டசாலி. இல்லை, ப்ளட் பிரசஷர் வந்தால் அவர்களைக் குறை சொல்ல முடியாது. விதியை நொந்துகொள்ள வேண்டியதுதான்!

பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் வேலைக்கு ஆட்கள் வைத்து அல்லாடாமல் இருக்க தங்கள் வேலைகள் எல்லாவற்றையும் கால் சென்ட்டர் சேவை மையங்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.

இப்படியே போய்க் கொண்டிருந்தால் 2,020ல் என்ன ஆகும்?

ஒரு கற்பனை!
-----------------------------------------------------------------------------------------------
பசியோடு இருக்கும் கஸ்டமர் ஒருவர் ஒரு பிஸ்ஸா உணவகத்திற்குப் போன் செய்கிறார்:

“வணக்கம் சார், பிஸ்ஸா பாயின்டை அழைத்ததற்கு நன்றி! உங்கள்.....”

“என்னுடைய ஆர்டரை எழுதிக் கொள்ளுங்கள்!”

“முதலில் உங்களுடைய என்.எம்.பி.ஐ.ஸி (National Multi Purpose Identity Card) எண்ணைச் சொல்லுங்கள் சார்!”

“ஹி, ஹி..இருங்கள்...ஒன் மினிட்...ம்...இதோ..910 025 001 43536375”

“ஓக்கே சார்..உங்கள் பெயர் சோகநாதன், முகவரி, 6090 வளசரவாக்கம் இரண்டாவது அவென்யூ, உங்கள் வீட்டுத் தொலைபேசி எண் 225 4099 2266, உங்கள் அலுவலக எண் 230 2131 3388 உங்களுடைய மொபைல் எண் 999440 55664, இப்போது எந்த எண்ணில் இருந்து அழைக்கிறீர்கள்?”

“வீட்டிலிருந்து! என்னுடைய அத்தனை போன் நம்பர்களும் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“தேசிய இணைப்பின் மூலம் எங்களுக்கு அத்தனையும் தெரியும் சார்!”

“ஓஹோ..! எனக்கு ஃபாமிலி பேக் சீஃபுட் பிஸ்ஸா ஒன்று உடனே வேண்டும். அனுப்பி வையுங்கள்”

“ஸாரி சார், அது உங்களுக்கு உகந்தது அல்ல!”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“உங்களுடைய மருத்துவ ரிப்போர்ட்டின்படி உங்களுக்கு ஹை பிளட் பிரஷர் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆகவே அது உங்களுக்குச் சரிப் படாது!”

“சரி, வேறு என்ன சாப்பிடலாம் என்கிறீர்கள்? பசி உயிர் போகிறது.சீக்கிரம் சொல்லுங்கள்”

“அகத்திக்கீரை பொதினா லீஃப் மிக்ஸட் பிஸ்ஸா இருக்கிறது சார். அது உங்களைப்போன்றவர்களுக்கு மிகவும் நல்லது. அதுவும் இல்லாமல் அதை
நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்”

“இதை எப்படிச் சொல்கிறீர்கள்?”

“கன்னிமாரா நூலகத்தில் இருந்து The advantage of Herbal Foods என்ற புத்தகத்தைச் சென்ற வாரம் எடுத்துக்கொண்டு போய் உள்ளீர்கள். அதை வைத்துச் சொல்கிறேன்.

“சரி, சரி அதிலேயே இரண்டு ஃபாமிலி சைஸ் பேக் அனுப்பி வையுங்கள். விலை என்ன ஆகும்?”

“அது நான்கு பேர்கள் உள்ள குடும்பத்திற்குத் தாராளமாகப் போதும் சார். விலை, உள்ளூர் வரி, மற்றும் டெலிவரி சார்ஜ் எல்லாம் சேர்த்து ஆயிரத்து
அறுநூற்றைம்பது ரூபாய் ( ரூ1,650:00 ) ஆகும் சார்!”

“கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாமா?”

“இல்லை, முடியாது என்று நினைக்கிறேன், நீங்கள் பணமாகத்தான் கொடுக்க வேண்டியதிருக்கும். உங்கள் கிரிடிட் கார்டின் கடன் அளவான ரூபாய் இரண்டு லட்சத்தை நீங்கள் தாண்டிவிட்டீர்கள். மேலும் இரண்டு மாதங்களாகத் தவணைத் தொகையையும் நீங்கள் செலுத்தவில்லை! ஹவுஸிங் லோன் கணக்குத் தனியாக உள்ளது!”

“சரி, பரவாயில்லை. எங்கள் பகுதியில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணத்தை எடுத்து வைக்கிறேன். நீங்கள் பிஸ்ஸாவை அனுப்பி வையுங்கள்!”

“அது சாத்தியமில்லை. ஏ.டி.எம் மில் நம்பர் ஆஃப் வித்டிராயல் அளவை நீங்கள் தாண்டியுள்ளீர்கள்...”

“அதைப்பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள்! பணம் தயாராக இருக்கும். உங்கள் ஆசாமி வர எவ்வளவு நேரம் பிடிக்கும்?”

“நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும் சார். அதற்குள் அவசரம் என்றால் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் வந்து டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.”

“என்ன சொல்கிறீர்கள்?”

“இணைப்பில் உள்ள விவரப்படி உங்களிடம் மோட்டார் சைக்கிள் ஒன்று இருக்க வேண்டுமே? இருக்கிறதல்லவா? அதன் எண்கூட 1188”

“............................”

“வேறு ஏதாவது வேண்டுமா சார்?”

“ஒன்றுமில்லை. ஆர்டருடன், உங்கள் கம்பெனி விளம்பரப்படி மூன்று இலவச கோக் பாட்டில்களையும் கொடுப்பீர்கள் இல்லையா? அவற்றையும் எடுத்து வையுங்கள்!”

“வழக்கமாகக் கொடுப்போம் சார். ஆனால் உங்களுக்குத்தர இயலாது. உங்கள் மருத்துவ ரிப்போர்ட்டின் படி நீங்கள் டயாபெட்டிக் பேஷண்டாயிற்றே!”

“?? $$**??”

“சார், மரியாதைகயாகப் பேசுங்கள். தரத் தணிக்கைக்காக நமது உரையாடல் பதிவாகிக்கொண்டிருக்கிறது!.நான் புகார் கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா? சென்ற மாதம் இதுபோல பஸ் நடத்துனரிடம் தகாத வார்த்தைகள் பேசிச் சண்டை யிட்டதற்காக ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் சிறைப்பட்டதோடு, ரூபாய் ஐயாயிரம் வேறு அபராதமாகச் செலுத்தியுள்ளீர்கள். நினைவில் இருக்கிறதா?”

கஸ்டமர் இந்தப் பக்கம் தடால் என்ற பெருத்த ஓசையுடன் மயங்கிக் கீழே விழுகிறார். ஆனால் அது பசியினால் ஏற்பட்ட மயக்கம் அல்ல!

(மின்னஞ்சலில் வந்ததை மொழிமாற்றம் செய்து எனது நடையில் விரிவாக எழுதி, சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இன்னொரு பதிவான பல்சுவைப் பதிவில் வெளிவந்ததை, இப்போது நீங்கள் அறியத்தந்துள்ளேன்)

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!