மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.10.20

எலும்பு முறிவிற்கு நாட்டு முறையில் சிகிச்சை!!!


எலும்பு முறிவிற்கு நாட்டு முறையில் சிகிச்சை!!!

ஒரு வருடத்திற்கு முன்பு இரண்டு சக்கர வாகனத்தில் நண்பர் செந்தில்குமார் போய்க்கொண்டு  இருக்கும் போது ஒரு காட்டுப்பூனை குறுக்கே வந்து இவரோட வாகனத்தை சாய்த்துவிட்டது.. 

இவருடன் வந்தவருக்கு சாதாரண சிராய்ப்பு 

ஆனா நண்ரோட கால், முட்டிக்கு கீழே உடைந்தது அவரே உணர்ந்துவிட்டார்.

உதவிக்கு வந்தவங்க 108 அவசர ஊர்தி தகவல் சொல்ல அடுத்த அரை மணி நேரத்தில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தாச்சு..

அதன் பிறகு எனக்கு தகவல் வந்து அடுத்தநாள் காலையில் கோவை போனேன் திருப்பூர் தங்கவேல் அண்ணாவுடன்..

ஒரு மாவு கட்டை போட்டு படுக்க வச்சு இருந்தாங்க..

முழங்கால் வீக்கம்..

அறுவை சிகிச்சை செய்தால்தான் சரி செய்ய முடியும்னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க..

எவ்வளவு ஆகும்னு கேட்ட போது  2 லகரத்தை தாண்விடும்னு மருத்துவ நிர்வாகம் சொன்னவுடன்தான் நண்பருக்கு கால் வலியைவிட 
மனது வலித்திருக்கிறது..!

நடுத்தர குடும்பத்தை சார்ந்தவங்களுக்கு 2 லகரம் என்பது எட்டாக்கனி..!
அவ்வளவு எல்லாம் செலவு செய்ய முடியாதுனு சொல்லிவிட்டார்..

சரி என்ன செய்யலாம்னு யோசித்த போது எங்க ஊர் சத்தியமங்கலலத்திற்கும்
கோபிச்செட்டிபாளையத்திற்க்கும் இடையில் சிங்கிரிபாளையத்தில் எலும்புமுறிவுக்கு வைத்தியர்கள் இருப்பது நினைவு வந்தது..

மச்சினனை விசாரித்தேன்..பிரசாந்த் என்ற இளைஞர் இருக்காப்லங்க,
நல்ல அனுபவம்னு சொன்னார்..

அதோடு மருத்துவமனையில் எடுத்த எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பகிரியில் அனுப்ப சொல்லி எண் கொடுத்தார்..

அடுத்த நொடியிலேயே அனுப்பினேன்..

சில நிமிடங்களிலேயே பிரசாந்திடமிருந்து அழைப்பு வந்தது
"அண்ணா முட்டிக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது,
அதே மாதிரி முலங்கையிலும் ஒரு முறிவு இருக்குங்க ணா..
சரி எண்ணெய் கட்டுக்கு சரியாகுமாங்க பிரசாந்?
அண்ணா முதலில் தப்பை வைத்து ஒரு கட்டு,
அடுத்த பதினைந்தாவது நாளில் ஒரு கட்டு,
அதன் பிறகு மாவு கட்டு,
கடைசியாக முட்டை கட்டு போடும் போது எழுந்து நடந்திடுவாருங்க ..
இதுக்கு மொத்தமா 40 நாட்கள் அவர் ஓய்வில் கை கால் அசைக்காமல் இருக்கனும்
நீவும் போது வலியை பொருத்தக்கனும் என்றார்..
பழையபடி எழுந்து நடக்கவைப்பேனு
எந்த நவீன மருத்துவரும் சொல்லாத போது நாட்டு வைத்தியரின் பேச்சு தைரியம் தந்தது..

என்ன செய்யலாம்ங்க என்று நண்பரை கேட்டோம்..
இந்த 50 நாளில் நா இரண்டு லட்சம் சம்பாதிச்சிட போறதில்லை
அங்கேயே போயிடலாம்னு சொல்லாவிட்டர்..

சரி அப்போ மருத்துவமனையிலிருந்து அங்க அழைத்து வந்துவிடவா என்று வைத்தியரை கேட்டேன்..வந்திடுங்க என்றார்..

ஒரு வாடகை வாகனத்தை பிடித்து சிங்கிரிபாளையம் அருகே காசிபாளையத்தில் இருக்கும் வைத்தியசாலை வந்து சேரும் போது இரவு 10 மணி..

கீழே இறக்கி படுக்க வைத்து முறிந்த எலும்பை சரியாக எடுத்து போட்டு 
கை மற்றும் காலுக்கு தப்பை வைத்து கட்டும் போது 11 மணி ஆகிவிட்டது..

அடுத்த 15 ஆவது நாள் கட்டு மாற்றி போடனும்ங்க என்றார் பிரசாந்..

கோவையிலிருந்து இங்கே வாடகை வாகனம் வச்சு வருவது சிரமம்ங்க
வேறு ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்க என்றோம்..

சரிங்க அப்போ நானே கோவையில் உள்ள அவர் வீட்டுக்கு போய் கட்டிவிடுகிறேனு சொல்லிவிட்டார்..

இதுவும் நல்ல யோசனைதான் என்று சம்மதித்துவிட்டோம்..

ஒருமாதம் முழு ஓய்வு அசைவு இல்லாமல்..

கடைசியாக ஐம்பதாவது நாளில் முட்டை கட்டை பிரிக்கும் போது வாக்கர் வைத்து நண்பர் நடந்துவிட்டார்..

அடுத்த நான்காவது நாளில் எனக்கு அழைப்பு "தோழர் எங்க இருக்கீங்க?
தோட்டத்தில்தான் ங்க நாங்க சென்பகபுதூர் வாய்க்காலில் குளிச்சுட்டு இருக்கோம் அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கே வந்திடுவோம் என்று அதே போல வந்தும் விட்டார்.

ஆனால் நாங்க எதிர்பார்த்தது வாகனத்தில் வருவார் என்று..

ஆனா அவர் வந்ததோ மிதிவண்டியில்..!

தோழர் எப்படி ங்க என்றேன்..இவர் என்னோட நண்பர்
நேற்று இரவு திடீர்னு முடிவு சத்தியமங்கலம் சைக்கிளில் போறதுனு
அண்ணனை கேட்டேன் சரி என்றார்.
காலை நாலு மணிக்கு சைக்கிளை எடுத்தோம்.
ஒன்பது மணிக்கு வாய்க்கால் வந்து ஒரு குளியல் போட்டுட்டு 
11 மணிக்கு உங்க தோட்டமே வந்தாச்சு என்றார் அசால்டாக..!

அது தெரியுது தோழர் கிட்டத்தட்ட 80 கிலோ மீட்டர் வந்திருக்கீங்க
அதுவும் அக்னி வெயிலில்..இன்னும் 80 கி மீ போகனும்.
கால் வலியில்லையா என்றேன்..

சத்தியமா சொல்றேன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து
போல்ட், நட் வைத்திருந்தால் கண்டீப்பா இந்தளவுக்கு என்கால் பழைய நிலைக்கு வந்திருக்காது.."எல்லா புகழும் பிரசாந்துக்கே" என்று மதிய உணவை முடித்து விட்டு மதியம் மூன்று மணிக்கு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு 
கிளம்பியவர்கள் இரவு 10:45 க்கு கோவை வடவள்ளி போய் சேர்ந்துவிட்டதாக தகவல் அனுப்பினார்..

அதிலிருந்து உள்ளூரில் யாருக்காவது அடிபட்டால் உடனே நான் பரிந்துரைப்பது பிரசாந்தைதான்..

இப்போது வரை பத்துக்கு மேற்பட்டவங்களை எண்ணெய் கட்டு மூலமாகவே சரிசெய்துள்ளார்..

கிட்டத்தட்ட பத்து ஆண்டு அனுபவம் என்றாலும் கண்களால் பாத்தாலே
என்ன பிரச்சனையை சொல்லி சரியும் செய்துவிடுகிறார்..

இது இந்த பகுதியில் உள்ள பரம்பரை வைத்தியர்களில் எத்தனை பேர் இப்படி திறமையுடன் இருப்பாங்கனு சொல்ல முடியாது..

நண்பருக்கு மொத்த செலவே 11 ஆயிரம் ரூபாய்தான் எண்ணெய் கட்டு போட்ட வகையில்..

இவ்வளவு குறைந்த தொகை வாங்கினால் எப்படிங்க பிரசாந் என்றேன்..?

அண்ணா மாற்று மருத்துவம் தேடி மக்கள் வர ஆரம்பித்து இருக்காங்க..
அதில் 80 சதவீதம் பேர் வசதி இல்லாதவங்க..அலோபதி அளவுக்கே செலவு வைத்தால் எப்படி அவர்களால் தாங்க முடியும்..

எங்க பரம்பரையே வைத்திய பரம்பரைதான். அதனால பணம் முக்கியம் இல்லைங்க.பழையபடி அவர்கள் எழுந்து நடந்து என்னை வாழ்த்தினாலே போதும் பரம்பரையே செழிக்கும்னு சாதாரணமா முடிச்சுட்டாப்லங்க..

85 வயது மூதாட்டியை கூட எண்ணெய் கட்டு மூலமா எழுந்து நடக்க வச்சு இருக்கார் இந்த இளைஞர்..

அதோடு விபத்து ஏற்பட்டு எலும்பு முறிந்து வெளியேவே வந்தாலும் கட்டு மூலம் சரிசெய்துவிடுவதாக உறுதி சொல்கிறார்..

லட்சங்களை வாரி அள்ளும் ஆங்கில மருத்துவர்கள் சொல்லாத உத்திரவாதத்தை சில ஆயிரங்களையே கூலியாக பெறும் இந்த நாட்டுவைத்தியர் உறுதியாக சொல்கிறார்..

அதோடு 250 கிலோ மீட்டர் சுற்றவளவுக்கு எலும்பு முறிவு வைத்தியம் பார்க்க வேண்டும் என்றாலும் நேரிலேயே வந்து பார்ப்பதாகவும் சொல்கிறார் பிரசாந்த்..

அவருடைய விலாசம் மற்றும் தொடர்பு எண்,

Prasanth, 
s/o Selvan ,
mariyamman kovil street, 
karatupalayam road kasipalayam.
Gobichettipalayam (tk) 638454..
Contact:+91 78451 99659..

எளிய மக்கள் பயனுரவே இந்த அனுபவத்தை எழுத்தியுள்ளேன்..
முடிந்தவரை பகிர்ந்து மருத்துவ செலவை எளிதாக்க உதவுங்கள்..

நன்றி..
திருமூர்த்தி ..
சத்திமங்கலம்..
-------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Respected sir,
    Good morning sir. Thank you very much for your good and great message about Mr. Prashanth, Ayurveda Vaithiyar with low cost treatment. Really, Now-a-days Multi specialty hospitals are charging and grabbing more money from the patient. But Mr.Prashanth is for poor and financially backward class people. Continue to help poor people and grow with blessings from the good people.

    ReplyDelete
  2. Unbelievable experience. May God give Prasanth long and healthy life.

    ReplyDelete
  3. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!!

    ReplyDelete
  4. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  5. நன்றி சபரிநாதன்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com