Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக்கொண்டது ஏன்??
ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. அனுஷ நட்சத்திம். மிதுன லக்கினக்காரர். ஜாதகருக்கு அடுத்தடுத்து 2 முறைகள் திருமணம் செய்தும் 2 திருமணங்களுமே ஊற்றிக் கொண்டுவிட்டன. அதாவது பிரச்சினைகள் உண்டாகி விவாகரத்தில் முடிந்துவிட்டது. ஜாதகப்படி அத்தோல்விகளுக்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!
சரியான விடை 18-10-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வணக்கம்
ReplyDeleteகடந்த இரண்டு வாரங்களாக திருமண விவாகரத்து சம்பந்தமான கேள்விகளே வருகிறது. தலைவருக்கு என ஆயிற்று ?
தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில்
மிதுன லக்கின, அனுஷ நக்ஷத்திர விருச்சிக ராசி ஜாதகர் திருமண வாழ்வை நிலைக்க செய்வது, ஜாதகரின் ஏழு, இரண்டு மற்றும் பனிரெண்டாம் இடங்களாகும்.
இவரின் ஏழாம் இடத்தில் மிதுன லக்கினத்திற்கு பாதகாதிபதி குரு ஏழாம் இடத்தில் அதாவது களத்திர ஸ்தானத்திலேயே அமர்ந்து லக்கினத்தை தன் பார்வையில் வைத்து உள்ளார். மேலும் இவர் வர்கோத்தம மாக உள்ளதால் ஜாதகரின் திருமணம் நிலைக்க வில்லை. மேலும் லக்கின அதிபதி புதன் எட்டில் , பனிரெண்டாம் வீடு அதிபதி சுக்கிரனுடன் மறைந்து உள்ளார்.
மேலும் இரண்டாம் வீடு அதிபதி சந்திரன் ஆறில் மறைந்து திருமண வாழ்வை நிலைக்க நீடிக்க செய்யவில்லை. இரண்டாம் இடத்தில் இருந்த மாந்தி அதற்கு துணை போனது.
மேலும் பாக்கிய அதிபதியும் எட்டாம் வீட்டு அதிபதியு மான சனி பகை வீடான சிம்மத்தில் சூரியன் வீட்டில் அமர்ந்து சூரியன் மற்றும் செவ்வாய் போன்ற பகை கிரகங்களால் பார்க்க படுவதால் திருமண வாழ்வு நீடிக்க செய்ய இயலவில்லை .
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: 7 ஆம் அதிபதி குரு 7ல் ஆட்சி மற்றும் வர்கோத்தமம். பாப கிரகங்களின் தொடர்பு இல்லை. கேந்திராதிபத்ய தோஷம் மற்றும் பாதகாதிபதி வலு. ராசிக்கு 7 ஆம் இடத்திற்கு சனி செவ்வாய் பார்வை.
ReplyDeleteDear Sir,
ReplyDelete1. Maandhi in second place (family place)
2. 2nd lord neecham.
3. Sukiran in 8th hidden.
So his marriage did not stand for long time.
லக்னாதிபதி 1st house lord புதன் 8 இல் மறைந்து விட்டார்,மேலும் குடும்ப அதிபதி 2nd house lord moon 6 இல் நீசம் அடைந்து மறைந்து விட்டார்,மேலும் மாந்தி 2 இல் இருப்பது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கி பிரித்து வைத்து விட்டார்.5 ஆம் இடத்தில் கேது மற்றும் 5 ஆம் அதிபதி 8 இல் மறைந்து emotional and feelings... பாதிக்க பட்டு இருப்பதால் கருத்து வேறுபாடு வர காரணமாக அமைந்தது எனலாம்...
ReplyDeleteஜாதகர் 20 ஆகஸ்டு 1949 அன்று பிற்பகல் 3 மணி 25 நிமிடங்கள் போலப் பிற்ந்தவர்.பிறந்தைடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ReplyDelete1.லக்கினாதிபதி புதன் எட்டில் மறைந்தது.
2. களத்திரகாரகன் சுக்கிரகன் எட்டில் மறைந்தது.
3. சூரியன், சனி பரிவர்தனை இது தைன்ய பரிவர்தனை எனப்படும் மோசமான தீய விளைவுகளைத்தரும் பரிவர்தனை.செவ்வாய் சனி எதிர் எதிர் நின்றது.பகையைக்கிளப்பும் அமைப்பு.
4. குடுமபஸ்தானத்தில் மாந்தி.
5. 7ம் வீட்டில் 7ம் வீட்டுக்காரனே அமர்வது அவ்வளவு சிலாக்கியமில்லை.
6.12ம் இடம் என்னும் படுக்கை இன்ப ஸ்தானத்திற்கு சனி செவ்வாய் இருவர் பார்வையும்.
7.3,7,11 ஆகிய இடங்கள் திருமணத்திற்குப் பார்க்க வேண்டிய இடங்கள்.11ல் ராகுவும், 3ல் சனியும் அமர்ந்துள்ளனர்.
8.நவாம்சத்தில் லக்கினத்திலேயே 8ம் வீட்டுக்காரன் சனி. 7ம் இடத்தில் சூரியன் ,குரு மாந்தி.ராசி நவாம்சம் இரண்டிலும் சூரியனும் சனியும் எதிர் எதிர் நின்றது.
9.ஜாதகரின் திருமண வயதான் 21முதல் 28 வரை கேதுதசா நடந்தது.
இவையெல்லாம் ஜாதகருடைய இரண்டு திருமணங்களையும் செல்லாமல் ஆக்கியது.
ReplyDeletetwo main reason 1. kendradhipati dosha 2. Mandhi in 2nd house
யா ,கேள்விக்கான பதில்
ReplyDelete1 .லக்கினாதிபதி புதன் எட்டில் மறைவு காரகன் சுக்கிரனுடன்
௨.இரண்டில் மாந்தி
3.மேலும் விரயாதிபதி சுக்கிரனின் பார்வை இரண்டாம் வீட்டின் மேல்
ஜாதிக்கரின் திருமண முறிவிற்கு இரண்டில் அமர்ந்த மாந்தி யே
காரணமாக இருக்கும்
நன்றி ,
தங்களின் பதிலை ஆவலுடன்
The following reasons to mention
ReplyDeleteLagnathipathy in 8th place
Sukran in 8th place
Kudumba stanathipathy Chandran neesam
Maandi in 2nd place
7th athipathi guru in 7th place so 1st marriage spoiled
are the permanent spoiling reasons for family life.
Because guru looking 11th place rahu/lagnam/9th place 2 marriages happened.
Bhuthan sukran jointly means 2nd marriage
Kethu dasa also once of the reason (23 to 30 years) for conflict in family life
Sukran in 8th place subsequent dasa are the main reason (30 to 50 years)
வணக்கம் ஐயா,
ReplyDelete7ஆம் அதிபதி, 7ஆம் பாவத்தில் இருந்தாலும் , திரிகோணத்தில் ராகுவின் சேர்க்கை . திருமண வாழ்க்கை தொல்லை, பிரச்சனை.
இரண்டாம் பாவம் குடும்ப அமைப்பை குறிக்கும். அதன் அதிபதி சந்திரன், ராகுவின் சேர்க்கை (பிருகு நந்தி நாடி முறையில்).ராகுவின் பார்வை குரு பெற்று சந்திரன் மீது விழச்செய்வார்.
7ஆம் மற்றும் 2ஆம் அதிபதி ராகுவின் கட்டுப்பாட்டில்.
முதல் திருமணம் நிலைக்கவில்லை .
இங்கே சூரியன், சனி பரிவர்த்தனை. சூரியன் தனது சிம்ம வீட்டில் இருந்து, குரு மீது பார்வை. இரண்டாம் திருமணம் குறிக்கும் 11ஆம் பாவம் , அதன் அதிபதி செவ்வாய் 9இல்.
ஆகையால் இரண்டாம் திருமணம் வாய்ப்பும் வந்தது.
இருந்தும் கேதுவின் திரிகோணத்தில் பார்வை பெற்று செவ்வாய்
12க்கு உடைய சுக்கிரனும்,லக்கினாதிபதி புதன் 8இல்.
திருமண காலம் நடக்கும் போது சுக்கிர திசை , 5கும் 12கும் உடைய சுக்கிரன் 8இல் இருந்து தனது திசை நடத்துகிறார்.
திருமண வாழ்க்கை பிரிவினை, வம்பு,வழக்கு தந்தது. இரண்டு முறை திருமணம் நடந்தும் நிலைக்கவில்லை.
நன்றி ஐயா.
அன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்
ReplyDeleteஜாதகர் 20-02-1949ல் பிறந்துள்ளார்.
ஜாதகரின் 7ம் வீட்டில் 7ம் அதிபதி வக்கிர நிலையுள் இருந்து மிதுன லக்கினமாகி கேந்திராதிபதி தோசத்தை பெற்று பலனிளந்த நிலையிலுள்ளார். ஆகவேதான் முதலாம் திருமணம் விவாகரத்துள் முடிந்தது.
அட்டமாதிபதியின் வீட்டில் களஸ்திரானாதிபதி லக்னாதிபதியுடன் சேர்ந்துள்ளார். 2ம் கல்யாணத்தை நடத்துவருமான 11ம் வீட்டதிபதி செவ்வாயின் பார்வையில். எல்லாம் சிக்கலில். ஆகவேதான் இரண்டாம் திருமணமும் விவாகரத்துள் முடிந்தது.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
கலத்திற காரகன் சுக்கிரன் 8 இல் மறைவு
ReplyDelete1 மற்றும் 4 ஆம் அதிபதி புதன் 8 இல் மறைவு
குடும்ப ஸ்தானதில் மாந்தி
நவாம்சத்தில் செவ்வாய் பார்வையில் சுக்ரன் மற்றும் புதன்
மேற்கூறிய காரணங்களால் திருமண முறிவு ஏற்பட்டது