மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.5.20

*அப்புசாமியும் கொரோனாவும்...*


*அப்புசாமியும் கொரோனாவும்...*

*((இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது* நன்றாக இருக்கும் இரண்டு நிமிடம் ஒதுக்கி படித்து பாருங்கள்))

"சீதே.. சீதே.. சித்த வந்து பாரேன்.." என அபய குரல் கொடுத்து அலறினார் அப்புசாமி தாத்தா.

"இங்க வாசல்ல வந்து பாரு.. இந்த கார்ப்பரேஷன் காரா எதயோ ஓட்றாடீ கெயவீ.." என்றார்.

"இதோ பாருப்பா.. இது ஓண்ணும் கமல் வூடு இல்ல.. உம்பாட்டுக்கு ஏதேதோ ஒட்றே.." என்றவரிடம், "சாமீ.. நா இன்னா செய்ய ?!.. ஆபீஸ்ல ஒட்ட சொன்னத செய்யறேன்.." என்றான்.

"இந்த நேரம் பாத்து இந்த ரசகுண்டு கடங்காரனோ, பீமா ராவோ இல்ல.. எல்லாம் லாக் டவ்னுக்கு பயந்து ஆத்துக்குள்ளயே கடக்கானுங்க.." என புலம்பினார் அப்புசாமி தாத்தா.

"ஒய் யூ ஆர் ஷவுட்டிங்..?!" என்றபடியே சீதா பாட்டி ப்ரஸன்னமானாள். "யாருப்பா நீங்க..?! வாட் இஸ் திஸ்..?!" என்றாள்.

"கொரோனா நோட்டீஸ் மா.. உங்க வூட்ல விடாம தும்மல் சத்தம் கேக்குதுன்னு ஆபீஸ்ல ரிப்போட் ஆய்கிதும்மா.. அத்தொட்டுதான் தனிம நோட்டீஸ ஒட்டின்கிறோம்மா.." என்றான்.

"சரி.. இப்ப வாட் வீ  ஷுட் டூ..?!" என்ற சீதா பாட்டியிடம், "ஆஸ்பத்திரிலேந்து ஆளு வரும்மா.." என்றான்.

"ஓ காட்..! எனக்கு வேற ஜூம் ஆப்ல 'பாட்டிகள் முன்னேற்ற கழக' மீட்டிங் இருக்கே.. நீங்களே இத பாருங்கோ.." என உள்ளே பாய்ந்தாள்.

சரக்கென ஒரு ஆம்புலன்ஸ் வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து விண்வெளி வீரர் போல நாலுபேர் இறங்கினர்.

"சார்.. யாருக்கு இங்க தும்மல், சளி..?" என்றதும், "ஏன்..? எனக்குத்தான்..!" என தொடர்ந்து நாலைந்து முறை 'அஸ்க்'கினார் அப்புசாமி தாத்தா. நால்வரும் நாலா பக்கம் ஓடினர்.

"அவர பிடிப்பா.. ட்ரைவர்..!" என ஒருவர் கூவ,  அப்புசாமியை அலேக்காக மடக்கிப் பிடித்தனர்.

"வுடுய்யா.. வுடுய்யா.." என திமிறினார். மீண்டும் கஜேந்திர மோக்ஷ யானை போல "சீதே.. அடி சீதே.." என்று பிளிறினார்.

"ஒய் ஆர் யூ ஸ்கீரிமிங்..?" என்றபடி சீதா பாட்டி வந்தாள்.

"வாட் இஸ் ஹேப்பனிங்..? யாருப்பா நீங்க..?" என்றவளிடம், "மேடம்.. தாத்தாக்கு பயங்கர கொரோனா அறிகுறி இருக்கு.. இவர டெஸ்ட் பண்ணி க்வாரண்டைன் பண்ணணும்.. அதுக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போலாம்ண.. ஏக கலாட்டா பண்றார்.." என்றார் ஒருவர்.

"ஓகே..ஓகே.. இவாளோட போய் கோ-ஆப்ரேட் பண்ணுங்கோ.." என்றதும், "அடிப் பாவீ.. இது உனக்கு அடுக்குமோ.. என்ன இப்பிடி பிடிச்சுத் தறயே..! எனக்கு ஓண்ணுமில்லடீ கியவீ.. நா கோயம்பேடு கூட போகல்லியே.. ஒரு வேள டில்லி ரிட்டர்ன்னு நெனச்சானா..?! தெரிலயே எழவு..! சரி இருய்யா வரேன்.." என ஒரு மிடுக்குடன் வேன் ஏறினார் அப்புசாமி தாத்தா.
-------------------------------------------------------------------------------
கட் பண்ணா, வீட்டுக்குள்ள 'பாமுக' லைவ் மீட்டிங் ஆரம்பம்.

"குட் நூன்.. எல்லாரும் வந்தாச்சா..? ஸ்டார்ட் பண்ணலாமா..?" என சீதா பாட்டி கூவ.. பங்கஜம், அம்புஜம், மீனா, ராஜி, அபி பாட்டி, நங்கை தங்கம் மாமி உள்ளிட்ட எல்லாரும் ஆஜர்.

"கோமதியும், ஸ்ரீமதியும், எச்சுமி பாட்டியும் இன்னும் வரல..!" என்று பங்கஜம் கூவினாள்.

"டோண்ட் ஷவுட் ஐ ஸே..! நார்மலாவே பேசுங்கோ.." என மாடரேட் பண்ணினாள் சீதா பாட்டி.

"வம்ப அள்ளிப் போடுங்கோ.." என அம்புஜம் அலறினாள்.

ராஜி தான் ஆரம்பித்தாள், "நீ பீலா ராஜேஷ் காஸ்ட்யூம கவனிச்சியோ..?! கோவிட் நியூஸயே ட்ரண்டிங் ஆக்கிட்டா பாத்தேளா..?!" என்று.

"பாவம் அந்த மினிஸ்டர் நன்னா தானே பண்ணிண்டு இருந்தர்.. ஏன் இப்பல்லாம் காணமே..?!" என்றாள் பங்கஜம்.

"நம்ம சி.எம். கூட நன்னாவே ஹேண்டில் பண்றார்.. மீடியா கேக்கற கொணஷ்ட கேள்விக்கெல்லாம் சிரிச்ச முகமா சமாளிக்கறாரே..!" என நங்கை தங்கம் மாமி புகழ்ந்தாள்.

"அதெல்லாம் சரி.. நம்ம பி.எம். கூட என்ன சொல்வாரோன்னு எல்லாரும் பீதில இருக்கச்சே.. 'மித்ரோ'ன்னோ, 'மேரே தேஷ் வாசியோ'ன்னோ ஆரம்பிக்காம 'ஸாத்தியோ'ன்னு ஆரம்பிச்சுட்டாரே..! பாக்கிய நிம்மி மாமி சொல்வான்னாரே பாக்கணும்..!" என்றாள் லேட்டா ஜாயின் பண்ண எச்சுமி பாட்டி.

உடனே நங்கை தங்கம் மாமி "யாரு நம்ம மத்யமர் நிம்மி சுரேஷா..?! அவோ கூட ரீஸண்டா  மத்யமர்ல ஜெம்மினாளே..?! நன்னா ஆச்சு.." என்றாள்.

"அய்யோ..! நம்ம எஃப்.எம். நிர்மலா சீதாராமன் மாமிய சொன்னேன்.." என்றாள் எச்சுமி பாட்டி.

'ஓ'வென எல்லோரும் கூவினர். "ப்ளீஸ்.. ஒன் பை ஒன்னா பேசுங்கோ.." என்றாள் சீதா பாட்டி.

அபி பாட்டியோ தன் பங்குக்கு "இந்த எஃப்.பீல போனா சங்கீதக் காராளும் புதுசா கத்துக்கறவாளுமா பாடியே கொல்றா..! டிக்டாக்கெல்லாம் நாகர்கோயில் கடங்காரனால ஆஃப் ஆயிடுத்துகள்.. நாம யூஸ் பண்ற இந்த ஜூம் ஆப்ப கூட மத்யமர் சந்திரசேகரன் சார் சைனீஸ் ப்ராடக்ட்ன்னு அப்ஜக்ட் பண்ணுவர்" என்றாள்.

"ஓகே.. ஓகே.. நம்ம சிட்டியே கோவிட்ல அலறிண்டு இருக்கு.. ஹாஸ்பிடல் போன இந்த மனுஷன பத்தி நீயூஸே இல்ல.. ஸோ லெட்ஸ் வைண்ட் அப் நௌ.." என்றாள் சீதா பாட்டி.

"என்ன பேசவே விடல..!" என மீனா அங்கலாய்த்தாள். "சரி.. குய்க்கா சொல்லு" என்றாள் சீதா பாட்டி.

"என்னத்த சொல்ல.. டி.வில கூட அழறத்துக்கு இப்போ சீரியல் கூட இல்ல.. ஒரே தெலுங்கு படத்த தமிழ்ல டப்பி போடறான்.. இல்ல ஜெயம் ரவி, சூர்யா படத்தயே ரிபீட் பண்றான் கடங்காரன்.." என்றாள் மீனா.

"இந்த கமலஹாசனும் ஏதோ ஒளறிட்டு வசவு வாங்கிக் கட்டிண்டது.. அப்பறமா டாஸ்மாக் கேஸ போட்டு தப்பிச்சிருக்கு தத்தி.." என்றாள் அம்புஜம்.

"மத்யமர்ல அட்மின் சங்கர் சார் என்ன போட்டாலுமே லைக்கும், கமண்ட்ஸும் ச்சும்மா பிச்சிண்டு போறத நம்ம ராம்ஜீ கூட மென்ஷன் பண்ணாரே.." என்றாள் சீதா பாட்டி.

"இப்ப கூட மத்யமர்ல ராதா, ஸ்ரீராம், அகிலா, ராதை ஸாய்ராம் எல்லாரும் கலக்கறா.." என்றாள் பங்கஜம்.

"ஓகே.. எல்லார்க்கும் பை.. சீ யூ ஆல்.." என சீதா பாட்டியும் ஜூமை விட்டு பையினாள்..

திடீரென வாசலில் ஓரே ரகளை.

"யம்மா.. இந்தூட்டு ஐய்யா ஓடியாந்துட்டாரும்மா" என ஒரு ஆம்ஸ்ட்ராங் கூவினான்.

சீதா பாட்டி, "வாட் இஸ் திஸ்..? எங்க இருக்கேள்..? வெளிய வாங்கோ.. ஐ வில் ஹேண்டில் திஸ்" என்றதும், "சீதே.. சீதே.. காப்பாத்துடீ.. அங்க போனா மூக்க நோண்ட்றான், நாக்க நோண்ட்றான்.. பயம்மா இருக்குடீ.. மாஸ்க்குல பொடி போட கூட ஓட்டை  போடக் கூடாதாம்.. நான் என்ன சானிடைசர தீர்த்தம் மாதிரி குடிச்ச முட்டாளா..?!" என்றார் அப்புசாமி தாத்தா.

"ஐய்யா டெஸ்ட் ரிஜல்ட்ட வாங்காதய்க்கு வண்ட்டார்மா.. ஐய்யாக்கு கொரோனா கிரோனா ஒண்ணுமில்லன்னு வந்துகிதும்மா.. ஆனாலும் 30 நாளைக்கு ஐய்யாவ தனியா இருக்க சொல்லுங்கம்மா.. நான் வர்றேன்.. பக்கத்துத் தெருவில எனக்கு பாத பூச கீதும்மா..!" என்றான் அவன்.

"ரொம்ப தேங்க்ஸ்ப்பா.. அவர நான் பாத்துக்கறேன்.. பை.. பை.." என்றாள் சீதா பாட்டி.

"ஹலோ..! மரியாதயா உங்கம்மா எனக்காக வாசல்ல நின்னுண்டே தூங்கற மாதிரி ஒரு ரூம தந்தாளே.. அதுல 30 டேஸ்  நீங்க இருங்கோ" என்றதும், "அநியாயம் பண்ணாதடீ கெயவீ.. வெர்ஜின் தாத்தா சாபம் உன்ன சும்மா விடாதுடீ" என்றார் அப்புசாமி தாத்தா.

"ஷட் அப்.. நீங்க மூக்கு பொடி தீர்ந்ததும் என்னோட 'தாஸநாதி ஸ்நான பௌடர' ஸ்னஃப்பா யூஸ் பண்ணி தீத்ததால தானே இந்த பீரங்கித் தும்மல் போட்டு மாட்னேள்.. நானும் யூ ஸஃபர்ன்னு விட்டுட்டேன்.. டோண்ட் டூ திஸ் அகய்ன்.." என்றாள் சீதா பாட்டி.

"சீதே ஒழிக..! சீதே ஒழிக..!" என்றபடியே வாசல் ரூமை நோக்கி நகர்ந்தார் அப்புசாமி தாத்தா.
😊svsபடித்ததில் பிடித்தது ........அதனால் பகிர்வு sVs...pdkt... எண்ணம் போல் வாழ்வு:::
-----------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com