மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.12.19

Astrology: Quiz: புதிர்: Quiz 20-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: Quiz 20-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, திருவோண நட்சத்திரக்காரர். வீட்டில் உள்ள பெரியவர்கள் படித்து
வாத்தியார் வேலைக்குப் போகச் சொன்னார்கள். ஆனால் ஜாதகர்
படித்துப் பட்டம் பெற்று வக்கீல் வேலை பார்க்கத்துவங்கினார். அதில் வெற்றியும் பெற்றார். நீதித்துறை அவருக்குப் பிடித்துப்போய் விட்டது.
அந்தத்துறையும் அவரைப் பிடித்துக் கொண்டு விட்டது. ஜாதகப்படி
அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் மகர லக்கினக்காரர். பத்தாம் வீட்டுக்காரர் சுக்கிரன். 6ம் வீட்டில் இருக்கிறார். 6ம் வீடு வழக்குகளுக்கான வீடு, The 10th Lord Venus is in the 6th representing litigation. நீதிமான் குரு பகவானின் பார்வை 10ம் வீட்டின் மேல்
தீர்க்கமாக விழுகிறதையும் கவனியுங்கள்!!!! ஆகவே வக்கீல் வேலையில் வெற்றி அடைந்தார்!!!!!

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 8 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 27-12-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே !!! கொடுக்க பட்டுள்ள ஜாதகத்தில் மகர லக்கனம் அதிபதி 2-இல் மூல திரிகோணத்தில் ஆட்சி பெற்று வலுவாக உள்ளார் .சனி நீதிமான் அவரே 1-க்கு 2-க்கு உடையவர் 2-அம் இடம் வாக்குஸ்தானம் ,வருமானம் ,அதேபோல் நவாம்சத்தில் மகர லக்கினம் வரதககோமம் பெற்று சனி மிக பலமாக உள்ளார் .மகரம் குறிக்க கூடிய இடம் நீதி அவரே சனி நீதிமான் என்பதால் அவர்க்கு அந்த தொழில் பிடித்து விட்டது .காரணம் சந்திரன் மனோகாரகன் இஷ்டம் ,ஆசைகள் அவரே 7-க்கு உடையவர் லகினதை தன்னோடு அதிகத்தில் வைத்து உள்ளார் .அதேபோல்
சனி 3-அம் பார்வையாக குரு -யை பார்க்கிறார் .குரு நீதி வழங்கும் இடம்
 ,6-அம் இடம் சிறைச்சாலை சம்பந்தம் ,எதிரி ,அங்கே சூரியன் ,ராகு, புதன் ,சுக்கிரன் முக்கூட்டு கிரக அமைபு .புதன் 6-இல் நல்ல பேச்சு திறமை
கொண்டு அவரை வழிநடத்தி சஞ்சித கர்மாவை அனுபவிக்க அவர் இப்பிறப்பில் வக்கீலாக உள்ளார். அதேபோல் ஏன் வாத்தியார் வேலையில் அவர் சேரவில்லை என்றல் 5-க்கு உடையவர் 6-இல் மறைவு பெற்று இருப்பதால் அவர்க்கு வாத்தியார் வேலை சரி பட விலை .. காரணம் குரு உபதேசம் பகை வீட்டில் உள்ளார் ..
நன்றி நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, December 20, 2019 8:43:00 AM
-------------------------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
மகர லக்கின , திருவோண நக்ஷத்திர மகர ராசி ஜாதகர் வக்கீல் படிப்பை
படித்து அதே துறையிலேயே இருந்ததற்கு காரணங்கள்
1 லக்கினம் அதிபதி ராசி அதிபதி சனி ஆவார். சனி யானவர் இரண்டாம் இடத்தில் சொந்த வீட்டில் உள்ளார். மேலும் வர்கோத்தம லக்கினம் , நவாம்சத்திலும் சனி சொந்த வீட்டில் உள்ளார்.
2 படிப்பு ஸ்தானமாகிய நான்காம் இடத்தில் குரு உள்ளார். இவர்
தன்னுடைய நேரடி பார்வையில் பத்தாம் இடத்தை வைத்து உள்ளார்.
3 . பத்தாம் இடத்து அதிபதி சுக்கிரனுடன் ஆறாம் இடத்தில் சூரியன்
மற்றும் புத்தி காரகன் புதன் ( சொந்த வீட்டில் ) சுக்கிரனுடன் இணைந்து அவருக்கு பிடித்த வேலையை பார்க்க செய்தார். மேலும் பத்தாம் அதிபதி சுக்கிரன் நவாம்ச கட்டத்திலும் பத்தில் அமர்ந்து நல்ல பலன்களை தந்தார்.
4 ஜாதகர் ராகு தசையில் தன் வக்கீல் படிப்பை முடித்து தனக்கு பிடித்த
வக்கீல் வேலையை செய்தார். இதற்கு சொந்த வீட்டில் உள்ள புதன்
மற்றும் பத்தாம் அதிபதி சுக்கிரனும் உதவினார். ஏனென்றால் லக்கின
அதிபதி சனிக்கு புதன் சுக்கிரன் சுப கிரகங்களாகும்.
இவர்கள் ராகுவுடன் கூட்டணியில் உள்ளனர்
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Friday, December 20, 2019 12:29:00 PM
------------------------------------------------------------
3
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 28 ஜூன் 1964 மாலை 7 மணி 53 நிமிடம் 30 நொடிக்குப் பிறந்தவர்.பிறந்தைடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகரின் வேலைக்கான இடத்தின் அதிபதி, 10ம் அதிபதி, சுக்ரன்
6ம் இடத்தில் சென்று அமர்ந்தார். அதனால் ஜாதகருக்கு வேலை
வழக்கு , வியாஜ்ஜியம் ஆகியவை நடைபெறும் நீதிமன்றத்தில்
அமைந்தது.
படிப்பிற்கான காரகன் மற்றும் 6ம் இடத்தின் அதிபதி புதன் மிதுனத்தில்
தன் வீட்டிலேயே அமர்ந்தது வக்கீல் படிப்பைக் கொடுத்தது.
எட்டாம் இடத்துகான அதிபதி சூரியன் 6ம் இடத்தில் அமர்ந்ததால்
ராஜ யோக பலன்கள் கொடுத்தது.எனவே வக்கீல் தொழில் நல்ல
புகழையும் பணத்தையும் கொடுத்தது.ராகு போன்ற கிரகங்கள் 6ல்
மறைவதும் நன்மையே.பொருள் கூடும்.
லக்கினாதிபதியும் இரண்டாம் இடத்திற்கு அதிபதியான சனைச்சரன் 2ம் இடத்திலேயே அமர்ந்தது வாக்கின் ஆற்றலைக் கொடுத்தது.
Friday, December 20, 2019 12:59:00 PM
-----------------------------------------------------------------
4
Blogger V Narayanan, Puducherry said...
10ம் வீட்டை குரு பார்க்கிறரே அது ஒன்று போதுமே வக்கீல் வேலைக்கு.
வெ. நாராயணன்
புதுச்சேரி
Friday, December 20, 2019 3:35:00 PM
-------------------------------------------------------
5
Blogger Krishna said...
குருவிற்கு தாழ் பணிந்து வணக்கத்தை தெரிவிக்கிறேன். தாங்கள் கற்று கொண்ட வித்தையை மற்றவர்களுக்கும் தெரியும்படி பாடம் நடத்தி வருகிறீர்கள். தங்களின் உயர்ந்த உள்ளத்துக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்றவர்களால் தான் எங்களை போன்ற இணையதள மாணவர்கள் ஜோதிடத்தை அறிய முடிகிறது. பல
மாதங்களாக  உங்கள் blog -யை படித்து வந்தாலும், இம்முறை ஜோதிட புதிருக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். ஏதேனும் தவறு

இருந்தால் என்னை திருத்தி கொள்ளும் படி பணிவுடன் வேண்டுகிறேன்.
வழக்கறிஞராக வேண்டுமெனில், சனியும், குருவும் ஏதேனும் ஒருவகையில் வாக்கு ஸ்தானத்திலோ, பத்தாம் வீட்டிற்க்கோ சம்மந்தம் கொள்ள வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கும் ஜாதகத்தில், சனீஸ்வராக பகவான் லக்கினாதிபதியாகி, வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பதோடு,
தனது மூன்றாம் பார்வையாக நான்காம் வீட்டில் இருக்கும் குரு பகவானை
பார்க்கிறார். குரு பகவான் தனது நண்பரின் வீட்டில் இருப்பதோடு அல்லாமல், தனது ஏழாம் பார்வையாக பத்தாம் வீட்டை பார்க்கிறார். மேலும் மேஷத்தில் இருக்கும் குரு நிச்சயமாக பரணி நட்சத்திர சாரம் வாங்கி இருக்க வேண்டும். ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிர பகவான் பத்தாம் வீட்டுக்கு திரிகோண வீடான ஆறாம்வீட்டில், ஆட்சி பெற்ற புதனோடு  இருக்கிறார். தர்ம கர்மாதி பதிகளோடு சேர்ந்த ராகு பகவன் ஆறாம் வீட்டில் உடன் இருந்து செய்யும் பலனை விருத்தி செய்ய கடமை பட்டுள்ளார். இருப்பினும் இவருக்கு குரு பகவான் திசையே வழக்கறிஞர் தொழிலில் ஈடுபாடு காட்ட வைத்திருக்கும். வெற்றியையும் கொடுத்திருக்கும். பத்தாம் அதிபதி சுக்கிர பகவான் நவாம்சத்தில் ஆட்சி பெற்று இருப்பது தொழில் விருத்தி அடைவார்
என்பதற்கு சான்று. லக்கினத்திற்கு யோகர்களான சனீஸ்வர பகவான், புதன் பகவான் மற்றும் சுக்கிர பகவான் பத்தாம் வீட்டுக்கு திரிகோண வீடுகளில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி அய்யா!
Friday, December 20, 2019 6:47:00 PM Delete
----------------------------------------------------------
6
Blogger Gowda Ponnusamy said...
ஜாதகர் மகர லக்கினம் ராசிக்கார ஜூன் 28, 1964 அன்று இரவு 8-00 மணியளவில் பிறந்தவர்.
லக்கினாதிபதி சனி தனது மூலத்திரிகோணவீடான கும்பத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார்.2ம் வீடான வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்று மாந்தியுடன் கூட்டணி போட்டு அமந்த சனி பொய்யை மெய்யாக்கும், மெய்யை பொய்யாக்கும் வல்லமை படைத்தவர். நீதி நேர்மைக்கு காரகனான சனி அவரை நீதி துறையில் சாதிக்க வைத்துள்ளது.41 வயதில் ஆரம்பித்த சனி மஹா தசை தொடர்ந்து வரும் புதன் (கேது மற்றும் சுக்கிரன்) மஹா தசைகள் வாழ்க்கையின் உச்சிக்கே உயர்த்தி விடும்.
அன்புடன்
-பொன்னுசாமி.
Friday, December 20, 2019 8:23:00 PM
--------------------------------------------------
7
Blogger Jayakumar said...
Good Day sir,
Simple aga sonnal, neethiman in second house sir. shortcut :)
Saturday, December 21, 2019 4:04:00 PM
--------------------------------------------------------
8
Blogger adithan said...
வணக்கம் ஐயா,1)6ம் அதிபதி, வலுப்பெற்று, 6ல் ஆட்சி. உடன் 10ம் அதிபதி சுக்ரன். எனவே ஜீவனத்துக்கு தொழில்தான். உடன் அரசாங்கத்தை குறிக்கும் சூரியன் எனவே அரசாங்கம் சம்பந்தபட்ட வேலை 2)10ம் இடத்தை பார்க்கும் குரு, நீதித்துறைக்கு காரகர். 3) லக்னம், 5,11ம் அதிபதி வர்கோத்தமம். தன ஸ்தானஅதிபதி சனி, 2ல்ஆட்சி பெற்று,தன காரகன்  குருவை பார்வையில் வைத்திருக்கிறார். குரு 10ம் இடத்தை பார்த்து, தொழில் மூலம் நல்ல வருமானத்தை கொடுத்தார்.லாபாதிபதி செவ்வாய், கேந்திரத்தில் அமர்ந்து,
11ம் இடமான சொந்த வீட்டைப் பார்ப்பதால் அதீத வருமானம்.
4) 10ம் அதிபருடன் ராகு சேர்க்கையினால், நீதி துறையில் வக்கீல் வேலை
என நினைக்கிறேன். ராகுவின் குணத்தில்
திரித்து கூறுவதும் ஒரு குணமே. நன்றி.
Saturday, December 21, 2019 10:21:00 PM
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com