மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.12.19

Astrology: Quiz: புதிர்: 27-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

Astrology: Quiz: புதிர்: 27-12-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான்." ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து ஜாதகர் விசாக நட்சத்திரக்காரர். தன்னுடைய மரணம் எப்போது நிகழலாம் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பி தன்னுடைய 65வது வயதில் ஒரு பெரிய ஜோதிடரைச் சந்தித்துப் பேசினார். ஜோதிடர் உங்களுக்கு இப்போது மரணம் நிகழாது. உங்களுடைய ஜாதகம் நீண்ட ஆயுள் ஜாதகம். இன்னும் 20 ஆண்டு காலம்  வரை உங்கள் ஆயுள் நீடிக்கும் என்றார். அவர் சொன்னபடிதான் நடந்தது. நீண்ட ஆயுளுக்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகர் ரிஷப லக்கினக்காரர். 2 மற்றும் 7ம் இடங்கள்தான் மாரக ஸ்தானம். அந்த இடங்களின் அதிபதிகளான புதனும், செவ்வாயும் 12ல் அமர்ந்திருக்கிறார்கள். லக்கினாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று 11ல் அமர்ந்திருப்பதாலும், ஆயுள்காரகன் சனீஷ்வரன் சச யோக அமைப்பில் கேந்திர ஸ்தானமான 10ம் வீட்டில் (சொந்த வீடு) வலுவாக
அமர்ந்திருப்பதாலும் நீண்ட ஆயுள் ஜாதகம் இது.

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 3-1-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே !!! ரிஷிப லக்கினம் ஸ்திர ராசி ,அதிபதி உச்சம் குரு வீட்டில் ,கூடவே குரு நேரடி பார்வை லகினத்தின் அதிபதி மீதி ,அதேபோல் 9-அம் பார்வையாக லகினத்தை குரு பார்க்கிறார் . லக்கனம் வலுப்பெற்று உள்ளது .அதேபோல் 8-க்கு உடையவன் குரு 5-இல் சுக்கிரன் பார்வை ,சந்திரன் 6-இல் மறந்தாலும் லக்கனம் வலு பெற்று உள்ளது அதுவே நீண்ட ஆயுள் காரணம் .
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, December 27, 2019 8:25:00 AM
-----------------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிருக்கான பதில் :
1. ஜாதகர் ரிஷப லக்கினம் , விசாக நக்ஷத்திரம், துலா ராசி ராசி ஜாதகரின் நீண்ட ஆயுளிற்கான காரணங்கள்
2. பொதுவாக நீண்ட ஆயுளிற்கு எட்டாம் இடத்தையும் , ஆயுள் காரகன் சனியின் நிலையையும் பார்க்க வேண்டும்.
3. இவறின் எட்டாம் இடத்து அதிபதி குரு , லக்கின அதிபதியின் அதாவது உச்ச சுக்கிரனின் பாரவையோடு ஐந்தாம் இடத்தில் உள்ளது. நன்றாக உள்ளது.
4. மேலும் எட்டாம் இடத்து அதிபதி குரு நவாம்சத்திலும் உச்ச நிலையில் நன்றாக உள்ளார்.
5. ஆயுள் காரகன் சனி தனது சொந்த வீட்டில் பத்தாம் இடத்தில் நன்றாக பலமாக உள்ளார். மேலும் சனி நவாம்ச கட்டத்திலும் எட்டில் ஆயுள் ஸ்தானத்தில் பலமாக உள்ளார். இதுதான் ஜாதகரின் நீண்ட ஆயுளிற்கான காரணங்களாகும்.
6. இதனால் ஜாதகர் தனது சந்திரா தசை வரை தனது ஆயுளை
85 வயது வரை கழித்தார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Friday, December 27, 2019 9:45:00 AM
------------------------------------------------
3
Blogger adithan said...
வணக்கம் ஐயா, 1) லக்னாதிபதி சுக்கிரன் உச்சம் 2) 8ம் அதிபதி குரு திரி கோணத்தில் அமர்ந்து, லக்னாதிபதியை, தன் பார்வையில் வைத்துள்ளார். 3) காரகன் சனி, 8ம் இடத்திற்கு மூன்றில் ஆட்சி பெற்றுள்ளார்.அவர் ரிஷப லக்ன யோககாரகர்.4) கர்ம காரகன் பார்வையில் உள்ள சூரிய தசை வரை ஆயுள் பலன் சொல்லிவிட்டார்.நன்றி.
Friday, December 27, 2019 11:40:00 AM
-----------------------------------------------
4
Blogger Muthuganesan said...
Sir,
My detailed prediction is given below
1 - Vrichiga lagnam, lagnathipathi in 11th house / uccham
2 - Jupiter/guru in 5th house, looking at 9th house(5th vision), 11th house(7th vision) and 1st house lagnam (9th vision)
3 - Lagnam /labasthanam / bakyasthanam are getting guru's sight, so all the 3 are benefited
4 - Laganam & Lagnathipathi are strong
5 - Ayul karakan sani is in 10 house at his own house which is very good.
6 - So the ascendant will have long blessed life
7 - Thisa of marakaathipathi Chandran (Moon) in 6th house and the thisa comes at 74 year on 19/02/2015.
8 - Marakathipathy is full moon (Pournami) which is a suba graham so, marakathipathy might have given death to this ascendant at the age of 84 years between 23/03/2018 to 09/06/2018 which is the period of Chandra thisai (marakathipathi) Guru pukthi (Astamathipathi) and Sani andaram(Ayulkarakan)
Please correct me if my prediction is wrong.
With Reagrds
Muthuganesh
8825958041
Friday, December 27, 2019 2:46:00 PM
----------------------------------------------
5
Blogger C Jeevanantham said...
Dear Sir,
The horoscope person lagna lord sukiran is uccham in 11th place. And Saturn in own place. Mars is in own place. Besides, Sun is uccham.
Since most of the planets are in own or uccham, the native live long life.
Thanking you sir,
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, December 27, 2019 5:44:00 PM
---------------------------------------------
6
Blogger Krishna said...
குருவிற்கு தாழ் பணிந்து வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
1) லக்னாதிபதியும் ராசிக்கு எட்டாம் அதிபதியுமான சுக்ரன் உச்சம் பெற்று, குருவின் பார்வையில் அமைந்திருப்பது
2) குருவின் பார்வையில் லக்கினம் இருப்பது
3) ரிஷப லக்கினத்திற்கும் எட்டாம் அதிபதி, தன்னுடைய எட்டாம் வீட்டிற்கு பெரும் கேந்திர வீடான (10-ல்), ஐந்தாம் வீட்டில். குரு சுபராதலால், திரிகோண வீட்டில் அமர்ந்தது பலம்.
4) நவாம்சத்தில் எட்டாம் வீட்டு அதிபதி குரு பகவான் உச்சம் வாங்கியது.
5) ஆயுள் காரகனும், ரிஷப லக்கினத்திற்கு ஒரே யோகாதிபதியுமான சனீஸ்வர பகவான், அவரது திரிகோண வீடான கும்பத்தில் ஆட்சி பலத்தில் அமர்ந்தது.
6) சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்ராபௌர்ணமியில் பிறந்து, ஜாதகம் சூரிய சந்திர பகவானின் (மதி, கதி) வலிமையை பெற்றது.
7) நவாம்சத்தில் சந்திரன் உச்சம், சூரியன் ஆட்சி, குரு உச்சம் என ஆயுள் தீர்க்கம் பெற்ற ஜாதகம்.
நன்றி ஐயா!
Friday, December 27, 2019 6:16:00 PM
-----------------------------------------------------
7
Blogger kmr.krishnan said...
எட்டாம் அதிபதியான குரு 5ல் அமர்ந்தது.ஆயுள் காரகன் 10ல் அமர்ந்து ஆட்சி பெற்றது லக்னாதிபதி சுக்ரன் 11ல் உச்சம் பெற்று 8ம் அதிபதி குரு பார்வை பெற்றது
Saturday, December 28, 2019 8:45:00 PM
---------------------------------------------------------
8
Blogger Ram Venkat said...
ரிசப லக்கினம், துலா ராசி ஜாதகர்.
அவரின் நீண்ட ஆயுளுக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
லக்கினாதிபதி சுக்கிரன், 11ல் உச்சமடைந்து அட்டமாதிபதி குருவின் நேர் பார்வையிலுள்ளார்.
குருவின் 9ம் பார்வை லக்கினத்தின் மேலுள்ளது.
ஆயுள் காரகன் சனி 10மிடமான கும்ப ராசியில் தன் மூலத்திரிகோணத்திலுள்ளார்.
ஜாதகரின் நீண்ட ஆயுளுக்கு மேற்கண்ட கிரகங்களின் நிலையே காரணம்.
Saturday, December 28, 2019 10:08:00 PM
----------------------------------------------------------
9
Blogger seethalrajan said...
லக்கின அதிபதி உச்சம், அஷ்டாமதிபதி சுபர்ஆகி திரிகோணம் ஏறி உச்சனனின் பார்வையில், சனி ஆட்சியில் 10ல் பலமாக உள்ளார். ஆக லக்கினம்,அஷ்டம அதிபதி, ஆயுள்காரகன் பலம் பெற்றாதால் நீண்ட ஆயுள். நன்றி.
Sunday, December 29, 2019 12:44:00 AM
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com