மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.6.17

Astrology: பஞ்சமஹாபுருஷ யோகம். மாமனித யோகம்!

Astrology: பஞ்சமஹாபுருஷ யோகம். மாமனித யோகம்! 

யோகங்களைப் பற்றிய பாடங்கள்

மாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம்.

அதற்கான ஜாதக அமைப்பு என்ன?

பஞ்ச மகாபுருஷ யோகம்!

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்.

சார் இந்த ஐந்தில் 3 எனக்கு இருக்கிறது. ஆகவே இதில் பாதி எனக்குக் கிடைக்குமா என்று யாரும் கேட்காதீர்கள். இருந்தால் அந்த 5 கிரகங்களுமே வலுவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை!

கிணற்றின் விட்டம் 5 அடி, 3 அடி மட்டும் தாண்டினால் போதுமா என்று பாருங்கள். 5 அடிகளையும் தாண்டினால் மட்டுமே, நீங்கள் கிணற்றின் மறுபக்கம் குதிக்க முடியும். இல்லையென்றால் கிணற்றிற்குள்ளேதான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும். இதுவும் அப்படித்தான்
------------------------------------------------------
வலு என்றால் என்ன? அந்தக் கிரகங்கள் வலிமையாக (powerful) இருந்து தனித்தனியாக சில யோகங்களைக் கொடுக்கும்.அந்த ஐந்து யோகங்களும் ஜாதகனுக்கு இருக்கும் நிலைமைதான் மகா புருஷ யோகம்.

யோகப் படங்களின் துவக்கத்தில் முதல் 5 பாடங்கள் அவற்றைப் பற்றியது. அதைக் கடைசி பெஞ்ச் சிகாமணிகளுக்காகச் சுருக்கி மீண்டும் ஒருமுறை கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
ருச்சகா யோகம்:
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
2
பத்ரா யோகம்:
புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
3
ஹம்ஸ யோகம்:
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
4
மாளவ்ய யோகம்:
சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
5
சஷ்ய யோகம்:
சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Planetary combinations formed by Mars, Mercury, Jupiter, Venus, and Saturn in their own sign or in exaltation, occupying a cardinal house. Each of these planets forms the yoga singly, and each of them has a separate name and effect. Ruchaka yoga is formed by such a placement of Mars, Bhadra by Mercury, Hamsa by Jupiter, Malavya by Venus, and Sasa Yoga by Saturn.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பலன்:
இந்த யோகம் ஜாதகனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும். ஜாதகன் பெயரும்,புகழும் பெற்றுத் திகழ்வான். நாடே அறிந்த மனிதனாக இருப்பான்.ஏராளமான சொத்தும், செல்வமும் அவனைத் தேடிவரும்!
----------------------------------------------------------------
This yoga is known to give a lot of wealth, name and fame to the native of the horoscope!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

 1. Migavum arumaiyana pathivu iyya nandri vazhga valamudan

  ReplyDelete
 2. கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றாலும் தன் சுயவர்கத்தில் குறைவான பரல்களை பெறுவதன் கரணம் என்ன ஐயா.....? அதற்கான விளக்க பாடம் இருந்தால் இணைப்பு கிடைக்குமா ஐயா....

  ReplyDelete
 3. ////Blogger kmr.krishnan said...
  Very good Sir/////

  உங்களின் பின்னூட்டத்த்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

  ReplyDelete
 4. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Migavum arumaiyana pathivu iyya nandri vazhga valamudan/////

  நல்லது. நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 5. /////Blogger Ravi Raina said...
  கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றாலும் தன் சுயவர்கத்தில் குறைவான பரல்களை பெறுவதன் கரணம் என்ன ஐயா.....? அதற்கான விளக்க பாடம் இருந்தால் இணைப்பு கிடைக்குமா ஐயா..../////

  அஷ்டகவர்க்கப் பாடங்கள் புத்தகமாக வரவுள்ளது. அப்போது படியுங்கள் எல்லாம் தெளிவாகும்! நன்றி!!!!

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!

   தங்களிடம் இருந்து இந்த அறிவிப்பை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஐயா!

   வாழ்த்துக்களுடன்,
   மணிவண்ணன் நம்பியப்பன்.

   Delete
 6. In my reading list there is showing last two days lessons only, any reason for that sir

  ReplyDelete
 7. ////Blogger t.nagoji rao said...
  In my reading list there is showing last two days lessons only, any reason for that sir////

  இல்லை! 3 பதிவுகள் தெரியும். அதற்கு முந்தைய பதிவுகளைப் பார்ப்பதற்கு சைடு பாரில் லிங்க் இருக்கிறது!!!!

  ReplyDelete
 8. பழச்சாறு போன்ற பதிவு வாத்தியார் அவர்களே!!!

  அருமை...  அன்புள்ள மாணவன்,
  பா. லெக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.

  ReplyDelete
 9. ////Blogger Lakshmi Narayanan Balasubramanian said...
  பழச்சாறு போன்ற பதிவு வாத்தியார் அவர்களே!!!
  அருமை...
  அன்புள்ள மாணவன்,
  பா. லெக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.//////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி!!!!

  ReplyDelete
 10. காலசர்ப்ப தோஷத்தில் ராகு கொடி பிடித்து செல்வது 33 வயதுக்கு பின் நன்மை தரும் என்றும்...கேது கொடி பிடித்து முன் செல்வது நன்மை தராது என்று படித்தேன்.......
  தாங்கள் quiz பகுதியில் (QUIZ :102 )காலசர்ப்ப தோஷம் கேது முதல் செல்லும் ஜாதகம் தந்தீர்கள்....இளையராஜா, சிவகார்த்திகேயன் இவர்களுக்கு காலசர்ப்ப தோஷம் ராகு முன் செல்லும் அமைப்பு..
  ஆனால் ரஜினியின் ஜாதகத்தில் கேது முன் செல்லும் அமைப்பு இருந்து எப்படி தப்பித்தார்

  ReplyDelete
 11. வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்

  மேற்கூறிய அனைத்தும் என் ஜாதகத்தில் உள்ளது சார், தற்சமயம் மிகவும் வறுமையில் உள்ளேன், கன்னி லக்னம், கும்ப ராசி, புதன் சுக்கிரன், குரு மூவரும் கேந்திர ஸ்தானமான தனுசில் உள்ளனர், சனி துலாமிலும், செவ்வாய் மகரத்திலும் உள்ளனர்
  தொழில் இல்லை
  திருமணம் இல்லை
  நிம்மதி இல்லை

  ReplyDelete
 12. ////Blogger கார்த்திக் Sree Vadivel Tex said...
  காலசர்ப்ப தோஷத்தில் ராகு கொடி பிடித்து செல்வது 33 வயதுக்கு பின் நன்மை தரும் என்றும்...கேது கொடி பிடித்து முன் செல்வது நன்மை தராது என்று படித்தேன்.......
  தாங்கள் quiz பகுதியில் (QUIZ :102 )காலசர்ப்ப தோஷம் கேது முதல் செல்லும் ஜாதகம் தந்தீர்கள்....இளையராஜா, சிவகார்த்திகேயன் இவர்களுக்கு காலசர்ப்ப தோஷம் ராகு முன் செல்லும் அமைப்பு..
  ஆனால் ரஜினியின் ஜாதகத்தில் கேது முன் செல்லும் அமைப்பு இருந்து எப்படி தப்பித்தார்/////

  ரஜினிகாந்த் சிம்மலக்கினக்காரர். மீனத்தில் ராகு இருந்து கொடிபிடித்துச் செல்கிறார். நீங்கள் சொல்வது தவறு மீண்டும் ஒருமுறை ஜாதகத்தை நன்றாகப் பாருங்கள்!

  ReplyDelete
 13. /////Blogger senapathi siva said...
  வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்
  மேற்கூறிய அனைத்தும் என் ஜாதகத்தில் உள்ளது சார், தற்சமயம் மிகவும் வறுமையில் உள்ளேன், கன்னி லக்னம், கும்ப ராசி, புதன் சுக்கிரன், குரு மூவரும் கேந்திர ஸ்தானமான தனுசில் உள்ளனர், சனி துலாமிலும், செவ்வாய் மகரத்திலும் உள்ளனர்
  தொழில் இல்லை
  திருமணம் இல்லை
  நிம்மதி இல்லை//////

  நீங்களும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்புகிறீர்களே? புதன் சுக்கிரன் குரு ஆகிய மூவரும் ஒன்றாக தனுசுவில் இருந்தால், பத்ரா யோகம், மாளவ்ய யோகம், ஹம்ச யோகம் எல்லாம் எப்படி உண்டாகும்? அதைச் சொல்லுங்கள் முதலில்!!!! பழநி அப்பனை பிரார்த்தனை செய்யுங்கள். நிலைமை சீரடையும்!!!!

  ReplyDelete
 14. கிரகங்கள் பகை இடத்தில இருந்து கேந்திர இடமாக இருந்தால் யோகா செல்லுமா? சொல்லுங்க வாத்தியார் ஐயா.......

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com