மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.6.17

Astrology: நாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்!

Astrology: நாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்!

நாடி ஜோதிடம்பற்றி எனக்கு படிப்பறிவு மட்டுமே. பட்டறிவு கிடையாது

அதைப் பற்றி எழுதும்படி சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.

எதற்கு சிரமம்?

முன்பொருமுறை  வலையில் தேடியபோது ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது. ஏனோ தானோ ஆள் எழுதியதல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காரர்கள் நடத்தும் பத்திரிக்கையில் வந்தது.

அப்படியே கட் & பேஸ்ட்டாக இங்கே அதைப் பதிவிட்டிருக்காலாம். விருப்பமில்லை. காப்பி ரைட் பிரச்சினை வரும்! ஆகவே அப்போது அதைச் செய்யவில்லை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்குடியில் ஒரு நாடி ஜோதிடர் முன்பு இருந்தார். என் சித்தப்பாவிற்குத் தெரிந்தவர். அவர் பெயர் சாரி (Chari)  காரைக்குடியில் உள்ள பெரிசுகளைக் கேட்டால் கதைகளைச் சொல்வார்கள்.

வருகிறவனின் கட்டை விரல் ரேகையை மட்டும் பதிவு செய்து கொண்டு ஆளை அனுப்பிவிடுவாராம். அரை மணி நேரம் கழித்து வரச்சொல்வாராம்  வேறு ஒரு தகவலும் கேட்க மாட்டாராம்.

அரை மணி நேரம் கழித்துப்போனால். ஜாதகனின் பிறந்த நாள், பிறந்த நேரம் ஆகியவற்றுடன் அச்சு அசலாக ஜாதகம் தயாராக இருக்குமாம்.

ஏட்டைப் படித்து பலன்களையும் சொல்வாராம்.

இப்போது அவர் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்.

அது அவருக்கு எப்படி சாத்தியப்பட்டது எனக்கு இன்றும் புதிராக இருக்கிறது.

அதுபோல என் உறவினர் ஒருவர் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்த்தபோது, அவர்கள் அவருடைய பெயர், அவருடைய பெற்றோரின் பெயர்கள் மற்றும் உடன் பிறந்த சகோதரிகளின் பெயர்கள் அனைத்தையும் எடுத்த ஏட்டின் மூலம் சொல்லி அசர வைத்திருக்கிறார்கள்

இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடரான திரு.பி.வி.ராமன் அவர்கள் நாடி ஜோதிடத்தைப் பற்றி ஒருமுறை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர்கள் நடந்த நிகழ்ச்சிகளை அசத்தலாக சொல்லி விடுகிறார்கள். எதிர்காலத்தைச் சொல்வதில் சற்றுத் திணறுகிறார்கள் என்று எழுதியிருந்தார்.

எது எப்படியோ, எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை! கிட்டினால் அவர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்து விடுவேன்:-))))))))

அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு பிறகு எழுதுகிறேன்!!!!

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

 1. இப்போது உள்ள சுவடிகள் அனைத்தும் உண்மையானவை அல்ல். படிப்பவர்களிலும் திறமையானவர்கள் இல்லை. பங்கு வைத்து காண்டம் காண்டமாக பிரித்து எடுத்துச் சென்று விட்டனர். நாடி சோதிட கோள்சார முறை ஓரளவு சரியாகப் பலிகிறது. பிறப்பு ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திற்கு ராகு வந்தால் விபத்து/மரணம் என்பது நாடி சோதிட கோள்சார விதி. 1992ல் பிறந்தவர்களுக்கு சிம்ம குரு. இப்போது அங்கே ராகு உலவுகிறார். ஸ்வாதி, ராம்குமர் 1992. அவகளுக்கு நட்ந்ததுதான் நாம் அறிவோமே.

  ReplyDelete
 2. ////Blogger kmr.krishnan said...
  இப்போது உள்ள சுவடிகள் அனைத்தும் உண்மையானவை அல்ல். படிப்பவர்களிலும் திறமையானவர்கள் இல்லை. பங்கு வைத்து காண்டம் காண்டமாக பிரித்து எடுத்துச் சென்று விட்டனர். நாடி சோதிட கோள்சார முறை ஓரளவு சரியாகப் பலிகிறது. பிறப்பு ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திற்கு ராகு வந்தால் விபத்து/மரணம் என்பது நாடி சோதிட கோள்சார விதி. 1992ல் பிறந்தவர்களுக்கு சிம்ம குரு. இப்போது அங்கே ராகு உலவுகிறார். ஸ்வாதி, ராம்குமர் 1992. அவகளுக்கு நட்ந்ததுதான் நாம் அறிவோமே.//////

  சொத்துக்களைப் பங்கு வைப்பதைப்போல ஓலைச்சுவடிகளையும் வாரிசுகள் பங்கு வைத்து எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள். எவரிடமும் முழுமையான ஓலைச் சுவடிகள் இருப்பதாகத் தெரியவில்லை. அதுதான் முக்கியமான காரணம். உங்களின் அதிகாலைப் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

  ReplyDelete
 3. Thangalathu nadaiyil naadi jothidam padika migavum avaludan vullen kaalam kaniyum varai kaathiruken nandri ayys

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா,நாடி ஜோதிடம் பற்றி திரைப்பட நடிகர் ராஜேஷ்,அவர் எழுதிய புத்தகத்தில் வியப்பான பல செய்திகளை தருகிறார்.பல செய்திகள் புதிராகத்தான் இருக்கின்றன.நன்றி.

  ReplyDelete
 5. I checked mine. Only thumb impression was given. They categorize your thumb, later will ask you to identify your suvadi by saying yes or no to the things (like bro/sis, father name mother name). It was when I was in college at 2002, when I don't believe but question everything to logical matching.
  After filtering around 15-20 suvadi they found a match which had exactly birth details of mine and my father mother names in indicative way.
  I was impressed. The person who was reading was just reading the pen and translated to current Tamil. That's all he did. He said if the chart is matching to my chart and if I need more future predictions, they have free who know astrology. Like bv Raman said past prediction was amazing. Future was giving hint on major timing of events only. Likely you would get knee issue at this age, you would be starting business at this...
  They don't read all kaandam in a same day unless you tell them satisfying stories. I went there many times, each time told them I forgot the previous transcripts and yet they found. I did see for another person in family, they said they couldn't find the suvadi and I need to be back after next full moon day.

  They rotate suvadi every fortnight with vaitheewarar temple folks (I don't know who they are).

  Kmr is right too, so many fake exists. And heard there are folks who need your thumb impression, birth details and reps prediction.

  In my opinion, the science is true about past and can only give hint to future not accurate prediction. If you go to people who had original or copy of original suvadi. After interactions with owner of the place I visited, they told me that the suvadi is been allied with many clans, only copies of some parts of suvadi exists. There were many folks sent back without suvadi. Also even if you are ready to pay, you can get to see all kaandam at same day if the main suvadi indicates parigaarams. Also even if you insist, unless you give them contending condition they don't see. I have not allowed to see my 8th house. The owner told it's not appropriate to see all kaandam palan without proper reason and denied. I went at various times and been told same. But for few, they did told them. No, they don't know my name or place and many people works there, no one would be remembering me.

  They took 150 for main+100 for sub. Now I think it increased to 200+150.

  Also my father did say he got his naadi prediction similar way 50 years back, but from a person near native just with thumb impression and no questions asked. But astrologer is no more. He said the same, accurate about past & present at that time but not future.

  I searched internet, found only about few. Thuruva naadi, meena naadi, Deva Keralam. The time to research or read is yet to come. So I only have end user experience, not text knowledge. If you are interested, I can send. Only digital copies though. So you or any Co interested people can tell us.

  Little humans can calculate, only Almighty knows what we can be. Fate prevails.

  ReplyDelete
 6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Thangalathu nadaiyil naadi jothidam padika migavum avaludan vullen kaalam kaniyum varai kaathiruken nandri ayys/////

  பார்க்கலாம். உங்களுடைய ஆர்வத்திற்கு நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 7. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,நாடி ஜோதிடம் பற்றி திரைப்பட நடிகர் ராஜேஷ்,அவர் எழுதிய புத்தகத்தில் வியப்பான பல செய்திகளை தருகிறார்.பல செய்திகள் புதிராகத்தான் இருக்கின்றன.நன்றி.////

  நான் படித்ததில்லை. தேடிப்பிடித்து படிக்கிறேன். நன்றி ஆதித்தன்!!!!!

  ReplyDelete
 8. ///Blogger selvaspk said...
  I checked mine. Only thumb impression was given. They categorize your thumb, later will ask you to identify your suvadi by saying yes or no to the things (like bro/sis, father name mother name). It was when I was in college at 2002, when I don't believe but question everything to logical matching.
  After filtering around 15-20 suvadi they found a match which had exactly birth details of mine and my father mother names in indicative way.
  I was impressed. The person who was reading was just reading the pen and translated to current Tamil. That's all he did. He said if the chart is matching to my chart and if I need more future predictions, they have free who know astrology. Like bv Raman said past prediction was amazing. Future was giving hint on major timing of events only. Likely you would get knee issue at this age, you would be starting business at this...
  They don't read all kaandam in a same day unless you tell them satisfying stories. I went there many times, each time told them I forgot the previous transcripts and yet they found. I did see for another person in family, they said they couldn't find the suvadi and I need to be back after next full moon day.
  They rotate suvadi every fortnight with vaitheewarar temple folks (I don't know who they are).
  Kmr is right too, so many fake exists. And heard there are folks who need your thumb impression, birth details and reps prediction.
  In my opinion, the science is true about past and can only give hint to future not accurate prediction. If you go to people who had original or copy of original suvadi. After interactions with owner of the place I visited, they told me that the suvadi is been allied with many clans, only copies of some parts of suvadi exists. There were many folks sent back without suvadi. Also even if you are ready to pay, you can get to see all kaandam at same day if the main suvadi indicates parigaarams. Also even if you insist, unless you give them contending condition they don't see. I have not allowed to see my 8th house. The owner told it's not appropriate to see all kaandam palan without proper reason and denied. I went at various times and been told same. But for few, they did told them. No, they don't know my name or place and many people works there, no one would be remembering me.
  They took 150 for main+100 for sub. Now I think it increased to 200+150.
  Also my father did say he got his naadi prediction similar way 50 years back, but from a person near native just with thumb impression and no questions asked. But astrologer is no more. He said the same, accurate about past & present at that time but not future.
  I searched internet, found only about few. Thuruva naadi, meena naadi, Deva Keralam. The time to research or read is yet to come. So I only have end user experience, not text knowledge. If you are interested, I can send. Only digital copies though. So you or any Co interested people can tell us.
  Little humans can calculate, only Almighty knows what we can be. Fate prevails./////

  உங்களுடைய அனுபவப் பகிர்விற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி செல்வா!!!!

  ReplyDelete
 9. ////Blogger vijay said...
  old post////

  ஆமாம். மறுபதிவு 6 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்டது. நிறைய புதுமுகங்கள் உள்ளதால் மீண்டும் வலையில் ஏற்றினேன். நன்றி!

  ReplyDelete
 10. அய்யா உங்கள் பதிவை நான் அவ்வப்போது பார்த்து வருகிறேன் . சுய ஜாதகம் சொல்ல மாட்டீர் கள் என்று தெரியும் . இருந்தாலும் எனக்கு இதை உங்கள்ளிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை எனக்கு ராகு திசை நடக்கிறது கடன் சுமை அதிகமாக உள்ளது. எனக்கு எப்போது நல்லநேரம் வரும் இல்லை இப்படியே கடைசி வரைக்கும் இருக்குமா எனக்கு பயமாக இருக்கிறது, எனக்கு 2 பெண் குழந்தைகள் இருகிறர்கள் கருணை உள்ளம் கொண்டு எனக்கு விடை தாருங்கள் 6.2.1987 காலை 4.30

  ReplyDelete
 11. /////Blogger aru mugam said...
  அய்யா உங்கள் பதிவை நான் அவ்வப்போது பார்த்து வருகிறேன் . சுய ஜாதகம் சொல்ல மாட்டீர் கள் என்று தெரியும் . இருந்தாலும் எனக்கு இதை உங்கள்ளிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை எனக்கு ராகு திசை நடக்கிறது கடன் சுமை அதிகமாக உள்ளது. எனக்கு எப்போது நல்லநேரம் வரும் இல்லை இப்படியே கடைசி வரைக்கும் இருக்குமா எனக்கு பயமாக இருக்கிறது, எனக்கு 2 பெண் குழந்தைகள் இருகிறர்கள் கருணை உள்ளம் கொண்டு எனக்கு விடை தாருங்கள் 6.2.1987 காலை 4.30/////

  பிறந்தது எந்த ஊர்? அது முக்கியமில்லையா?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com