மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.6.15

அடடா....’என்னங்க’ என்று சொல்லிற்கு இத்தனை அர்த்தம் உள்ளதா?


அடடா....’என்னங்க’ என்று சொல்லிற்கு இத்தனை அர்த்தம் உள்ளதா?

பாத்ரூமில் நின்று " என்னங்க " என்று அழைத்தால்
பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம்

சாப்பிடும் ஹோட்டலில் " என்னங்க " என்று அழைத்தால்
பில்லை கட்டு என்று அர்த்தம்.

வீட்டு வாசலில் நின்று யாருடனாவது கைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது
வீட்டின் உள்ளில் இருந்து " என்னங்க " என்று உச்சஸ்தாயியில்
சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம்.

கல்யாண வீட்டு கூட்டத்தில்
"என்னங்க " என்று சத்தம் வந்தால்
எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார்
அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம்

துணிக்கடையில் நின்று " என்னங்க " என்று அழைத்தால்
அவள் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம்

வண்டியில் செல்லும் போது " என்னங்க " என்றால்
பூக்கடை அவள் கண்ணில் பட்டதென்று அர்த்தம்.

மருத்துவமனை சென்று " என்னங்க " என்று அழைத்தால்
டாக்டரிடம் என்ன பேசவேண்டும் என்று கேட்கிறாள்
என்று அர்த்தம்.

வெளியே எட்டி பார்த்தவண்ணம் " என்னங்க " என்று
அழைத்தால் யாரோ அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம்.

பீரோவின் முன் நின்று " என்னங்க " என்று அழைத்தால்
பர்ஸுக்கு வேட்டு வைக்கிறாள் என்று அர்த்தம்.

சாப்பாட்டை எடுத்து வைத்து
" என்னங்க " என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தால்
இப்போ சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம் ........

இன்னும் உண்டு நிறைய பொருள்படும் " என்னங்க " எனும் சொல்..
======================================================
படித்ததில் பிடித்தது. அதை உங்களுக்கு இன்று அறியத் தந்துள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

 1. ஐயா வணக்கம்

  என்னங்க கக என்று அடித்தொண்டையில் கத்தி அழும் போது நம் காதுகளுக்கு கேட்காது.
  சரி தானே ஐயா !!!

  கண்ணன்

  ReplyDelete
 2. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ,,

  என்னாங்க ...??? [ இப்பிடி போட்டுட்டீங்களே ..???]

  ReplyDelete
 3. டிவி பார்க்கும் பொது 'என்னங்க' என்று சொன்னால், சேனலை மாத்தாதே என்று அர்த்தம்

  பசங்களை வைத்துக்கொண்டு 'என்னங்க' என்று சொன்னால், அவங்க செலவுக்குப் பணம் கொடுன்னு அர்த்தம்.

  கொட்டகையில சினிமா பாக்கறப்போ, 'என்னங்க' என்று சொன்னால், திங்க எதாச்சும் வாங்கிட்டு வான்னு அர்த்தம்

  ReplyDelete
 4. Respected Sir
  i am suresh and i have doubt which system is correct lahiri or Raman please clear my doubt sir

  ReplyDelete
 5. என்னங்க.... இப்படி
  என்னங்கன்ன கேட்க வைத்த விட்டிர்கள்

  இப்போ எல்லாம் என்னங்க என
  இப்படி kooppidhuvathillai

  இந்த oru வார்த்தைக்காக yeengum
  இளவல்கள் நிறையா உண்du

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com