மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.2.13

Astrology கண்ணா, உனக்குத் தெரியாத கள்ளத்தனமா?


Astrology கண்ணா, உனக்குத் தெரியாத கள்ளத்தனமா?
   

பஞ்சபாண்டவர்கள் ஐவரில் கடைசியில் பிறந்த சகாதேவன் பிறவி ஞானி. அனைத்து வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தவன். ஜோதிட
சாஸ்திரமும் அதில் அடக்கம். எப்போதும் உண்மையையே பேசுபவன் அவன்.

நாட்டின் உரிமையில் தங்கள் பங்கைக் கொடுக்க மறுத்த துரியோதனன், மற்றும் அவனுடைய சகோதரர்களுடன் யுத்தம் செய்துதான் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது, பஞ்சபாண்டவர்கள் தங்களை யுத்ததிற்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில், கிரகநிலைகளின்படி தாங்கள் வெற்றி பெறவேண்டும் என்ற ஆதங்கத்துடன் சகாதேவனைத் தேடிவந்த துரியோதனன், யுத்ததைத்
துவக்குவதற்கு ஒரு நல்ல நாளைக் குறித்துக் கொடுக்கும்படி கேட்டான்.

சகாதேவனும் மறுக்காமல், அடுத்து வரவிருந்த அமாவாசை நாளைக் குறித்துக் கொடுத்ததோடு, அந்த நாளில் நீங்கள் யுத்ததத்தை துவங்கினால், உங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று உறுதிமொழி சொல்லியும் அனுப்பினான்.

மார்கழி மாதம் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இருக்கும் அமாவாசைத் திதி நாளை அவன் தெரிவு செய்து சொல்லியனுப்பினான்

எப்படியிருக்கிறது பாருங்கள்?

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு கடும் கடும் ஏற்பட்டது. சகாதேவனைக் கடிந்து கொண்டார்

''அப்பனே, உன்னுடைய வெகுளித்தனத்திற்கு ஒரு அளவில்லையா? உன்னுடைய நேர்மைக்கு ஒரு எல்லையே இல்லையா? துரியோதனன், உங்களோடு யுத்தம் செய்து, உங்களைக் கொன்று குவிப்பதற்காகத்தான் நல்ல நாளைக் கேட்டு வந்தான். அதை முழுதாக உணராமல், நீயும் அவனுக்கு நல்ல நாளைப் பார்த்துச் சொல்லி அனுப்பியிருக்கிறாய். உன் செயலுக்கு எங்கே போய் முட்டிக் கொள்வது? நீ எப்ப்டி அவனுக்கு அந்த உதவியைச் செய்யலாம்? அல்லது உண்மையைச் சொல் அந்த நாள் பொய்யான நாள்தானே? தவறான நேரத்தைத்தானே குறித்துக்கொடுத்தாய் - உண்மையைச் சொல்!'' என்று கண்ணபிரான் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி சகாதேவனைக் கேட்கவும் செய்தார்.

சகாதேவன் கண்ண பரமாத்வைப் பார்த்து சிரித்துவிட்டுச் சொல்லலானான்:

“நம் வீட்டு வாசற்படி ஏறி உதவி கேட்டு வந்தவனை எப்படி உதாசீனப் படுத்த முடியும்? ஆகவே உதவினேன். ஜோதிட சாஸ்திரத்தை வைத்து ஒருவனுக்கு
பொய்யான பலனைச் சொல்வது பாவச் செயல். அத்துடன் அப்படிச் சொல்வது ஜோதிடத்தை அவமதிப்பதாகும். ஆகவே நான் உண்மையைத்தான் சொன்னேன். ஒருநாளும் நான் தவறு செய்யமாட்டேன். நான் குறித்துக் கொடுத்த தேதி சரியான தேதிதான். அமாவாசை திதியில் யுத்தம் செய்தால். துரியோதனனுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். நாங்கள் தோற்கலாம். வெற்றி, தோல்வி முக்கியமில்லை. தர்மம்தான் முக்கியம். பொய் சொல்வது எப்படி தர்மமாகும்? ஜோதிட சாஸ்திரத்தை நம்முடைய விருப்பு வெறுப்புக்களுக்குத் தகுந்த மாதிரி பயன்படுத்தக்கூடாது. ஜோதிட விதிகளுக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது. அந்த சாஸ்திரத்தில் இருந்து வழுக்கி விழுந்து அடிபடாமல் இருப்பதுதான் மேலானது. அதுதான் என்னுடைய வேலை. அதைத்தான் நான் செய்தேன்”

“உங்களுக்குத்தான் வெற்றி, உங்களை நான் ஜெயிக்க வைக்கிறேன் என்று உங்களுக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா? அதற்கு என்ன சமாதானம் சொல், அப்பனே?”

“அது உன்னுடைய வாக்கு. அதைக் காப்பாற்றுவது உன்னுடைய வேலை. உனக்குத் தெரியாத கள்ளத்தனமா? உனக்குத் தெரியாத தகிடுதத்தமா? உனக்குத் தெரியாத சேட்டையா? ஏதாவது ஒன்றைச் செய்து உன்னுடைய வாக்கை நீ காப்பாற்று. அதற்கு நான் எப்படி வழி சொல்ல முடியும்?” என்று சகாதேவன் தெளிவாகச் சொன்னான்.

கண்ண பரமாத்மா, தன்னுடைய கோபத்தை மறந்து புன்னகை செய்தார்

“என்னுடைய வேலை என்ன என்பதைச் சொல்லிவிட்டாய் அல்லவா? என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்னவர், அந்த இடத்தை விட்டு, புறப்பட்டுச் சென்று விட்டார்.

புறப்பட்டுச் சென்ற கண்ண பரமாத்மா என்ன செய்தார்?

அவர் தன் வேலையைச் செய்தார். அதுவும் சுவாரசியமாக இருக்கும். அந்தக்கதையை எழுதிப் பதிய வேண்டும். இன்னொரு நாள் அதை எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

ஜோதிடதர்மம் என்ன என்பதை உங்களுக்கு விளக்குவதற்காகவே சகாதேவனின் கதையை இன்று எழுதினேன்!
---------------------------------------------
என்றனும் அவனும் ஆங்கோர் இயந்திர எகினம் ஊர்ந்து
சென்றனன் அவனும் கேட்டுச் சிலையில் வெங்கதிரைத் திங்கள்
ஒன்றிய பகல் இராவில் களப்பலி யூட்டின் அல்லால்
வென்றிடல் அரிது என்றிட்டான் கிளைஞரை வேறிடாதான்

 ------- வில்லிபுத்தூரார் அருளிய ம்காபாரதத்தில் இருந்து

தெளிவுரை: துரியோதனன் அன்னப் பறவையின் வடிவம் உடைய இயந்திரத் தேரை ஊர்ந்து சென்று சகாதேவனை அடைந்து களப்பலிக்குரிய நாளைக்கூறுமாறு வேண்டினான். தனது சுற்றத்தாரைப் பகையாய்ப் பேதப் படுத்தாத அவனும் மார்கழி மாதத்தில் சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசை நாளின் இரவுப்பொழுதில் களப்பலி இட்டால் அல்லாது போரில் வெற்றி காண்பது அரிதாகும் என்று உரைத்தான்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++

19 comments:

  1. காலை வணக்கம் அய்யா .நல்ல சோதிடர்களுக்கு . சகாதேவன் ஒரு உதாரணம் .

    ReplyDelete
  2. குருவிற்கு வண்ணகம்,
    பொய்யுரைப்பது மனிததர்மத்திற்க்கு
    எதிரானது என்பதை சகாதேவன் வாயிலாக
    கண்ணன் நமக்கு எடுத்துரைத்துள்ளார்,
    தர்மம் தவறமல் நடப்பது கண்ணன் காட்டியவழியாகும் அதன் படி நடப்பதே
    நமது கடமையாகும்.
    நன்றி

    ReplyDelete
  3. இந்த சகாதேவன் நிகழ்ச்சி ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரத்தைச் சொல்கிறது ஐயா!

    அந்த நிமிடத்தில் சகாதேவன் ஒரு சோதிடனாகத் தான் செய்ய வேண்டிய பணியை விருப்பு வெறுப்பு இன்றி, உவத்தல் காய்தல் நீக்கி, பலனில் பற்று வைக்காமல் செய்தார். அவருக்கு நன்றாகத் தெரியும் தன் சோதிடத்தினை விட மேலானது இறைவனின் அருளே என்று.பாண்டவர்கள் தங்கள் உள்ளத்தில் பூரணமான இறை நம்பிக்கையுடன் போரிடப் போவதால் தங்கள் பக்கம் ஜெயம் என்று சகாதேவன் அறிவார்.தன் ஆற்றலிலும்,தன் படை வலிமையையும் மட்டுமே நம்பும் துரியோதன‌ன் சோதிடம் கேட்டபோது, சாஸ்திரத்திற்கு விரோதமில்லாமல் நல்ல நாள் குறித்தார்.'நாள் என் செயும்? வினைதான் என் செயும்? கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்?'என்பதை சகாதேவன் மனதில் பதித்துள்ள போது அவர் ஏன் துரியோதனனுக்குத் தவறான நாளைக் குறிக்க வேண்டும்?

    மேலும் சோதிடம் நற்செயலுக்கே பலிக்கும். தவறானவர்கள் நாள் பார்த்தால்
    நாள் சரியாக சோதிடர் சொன்னாலும், அவர்கள் செய்ய இருக்கும் தீச்செயலின்
    பளுவே அவர்களைத் தோல்வி அடையச் செய்யும். செய்வது தவறு என்று தெரிந்தே செய்யும் போது தோல்வி நிச்சயம். இதையெல்லாம் ஞானியாகிய
    சகாதேவன் அறிவார். அதனால்தான் எதிரிக்கு சோதிட பலன் சொல்ல அவர் தயக்கம் காட்டவில்லை.

    'பலதாதா'(பலனை அருளுபவர்)இறைவனே. சோதிடன் அல்ல.இதனை சோதிடம் சொல்பவர்கள் அறிந்து ஒவ்வொரு முறையும் 'இறையருள் இருந்தால் நான் சொல்வது போல் நடக்கும் ' என்று சேர்த்து சேர்த்துச் சொல்ல வேண்டும்.

    நல்ல பதிவு ஐயா!நன்றி!









    ReplyDelete
  4. பொய் சொல்ல விருப்பமில்லாவிட்டால் எதையும் சொல்லாமல் தவிர்த்திருக்கலாமே. எப்படியோ பாண்டவர்கள் அப்பழுக்கற்ற நல்லவர்கள் என்றும் கௌரவர்கள் 100% கெட்டவர்கள் என்றும் காட்ட வேண்டுமே.

    ReplyDelete
  5. நல்ல பதிவு.. மீண்டும் கர்ணன் படம் பார்த்த ஒரு உணர்வு.
    ‍-ஜவகர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  6. அது உன்னுடைய வாக்கு. அதைக் காப்பாற்றுவது உன்னுடைய வேலை. உனக்குத் தெரியாத கள்ளத்தனமா? உனக்குத் தெரியாத தகிடுதத்தமா? உனக்குத் தெரியாத சேட்டையா? ஏதாவது ஒன்றைச் செய்து உன்னுடைய வாக்கை நீ காப்பாற்று. அதற்கு நான் எப்படி வழி சொல்ல முடியும்?” என்று சகாதேவன் தெளிவாகச் சொன்னான்.

    தெளிவாக செய்ய வேண்டியவைகளைச்செய்து கண்ணனும் வெற்றிக்கனி பாண்டவர்கள் பறிக்க உதவினார் தானே ..!

    ReplyDelete
  7. அய்யருக்கு உடன்பாடில்லாத கருத்து
    அத்துடன் இதில் நியாமில்லா தர்மம்

    பல கருத்து மோதல்களை தரும்
    பதிவு என்பதினால் கருத்தேதுமில்லை

    பாடலை மட்டும் சுழல விடுகிறோம்
    படித்து பாடி மகிழுங்கள்..
    (தனுசுக்காரருக்கு பிடித்த வாத்தியார் பாட்டல்லவா)

    கண்ணை நம்பாதே
    உன்னை ஏமாற்றம்
    நீ காணும் தோற்றும்

    அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
    பொய்யே சொல்லாதது

    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
    வேற்றுருவில் கண் முன்னே தோன்றுவது சாத்தியமே

    காத்திருந்து கள்வருக்கு
    கை விலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்கு போடாத சத்தியமே

    போடும் பொய் திரையை கிழித்துவிடும் காலம் புரியும் அப்போது மெய்யான கோலம்

    பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை

    உண்மை எப்போதும்
    துங்குவதுமில்லை
    (மனதை தொடட்ட வரிகள்)

    ReplyDelete
  8. ஜோதிடத்தை தங்கள் உயிருக்கும் மேலாக நினைக்கும் அனைவர்க்கும் இது பொருந்தும். நான் ஜோதிடத்தை எனது உயிருக்கும் மேலாக நினைகிறேன். இது எனது உயிர் என்று சொல்வதற்கு கூட உரிமை இல்லை. ஏனென்றால் நாம் அனைவரும் பொம்மை தானே. நம்மை ஆட்டி படைப்பவன் ஈசன் !!!. இதை தான் பட்டினத்தார் ஒரு பாடலில் "பொம்மலாட்டம் என்றே இரு பொல்லா உடலை " என்று பாடி இருக்கிறார்.

    ReplyDelete
  9. /////Blogger Gnanam Sekar said...
    காலை வணக்கம் அய்யா .நல்ல சோதிடர்களுக்கு . சகாதேவன் ஒரு உதாரணம் /////.

    ஜோதிடர்களுக்கு மட்டும் அல்ல! எல்லா மனிதர்களுக்குமே சகாதேவன் ஒரு உதாரணம்!

    ReplyDelete
  10. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வண்ணகம்,
    பொய்யுரைப்பது மனிததர்மத்திற்க்கு
    எதிரானது என்பதை சகாதேவன் வாயிலாக
    கண்ணன் நமக்கு எடுத்துரைத்துள்ளார்,
    தர்மம் தவறமல் நடப்பது கண்ணன் காட்டியவழியாகும் அதன் படி நடப்பதே
    நமது கடமையாகும்.
    நன்றி/////

    நல்லது. உங்களின் புரிதலுக்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  11. ////Blogger eswari sekar said...
    vanakamsir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    இந்த சகாதேவன் நிகழ்ச்சி ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரத்தைச் சொல்கிறது ஐயா!
    அந்த நிமிடத்தில் சகாதேவன் ஒரு சோதிடனாகத் தான் செய்ய வேண்டிய பணியை விருப்பு வெறுப்பு இன்றி, உவத்தல் காய்தல் நீக்கி, பலனில் பற்று வைக்காமல் செய்தார். அவருக்கு நன்றாகத் தெரியும் தன் சோதிடத்தினை விட மேலானது இறைவனின் அருளே என்று.பாண்டவர்கள் தங்கள் உள்ளத்தில் பூரணமான இறை நம்பிக்கையுடன் போரிடப் போவதால் தங்கள் பக்கம் ஜெயம் என்று சகாதேவன் அறிவார்.தன் ஆற்றலிலும்,தன் படை வலிமையையும் மட்டுமே நம்பும் துரியோதன‌ன் சோதிடம் கேட்டபோது, சாஸ்திரத்திற்கு விரோதமில்லாமல் நல்ல நாள் குறித்தார்.'நாள் என் செயும்? வினைதான் என் செயும்? கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்?'என்பதை சகாதேவன் மனதில் பதித்துள்ள போது அவர் ஏன் துரியோதனனுக்குத் தவறான நாளைக் குறிக்க வேண்டும்?
    மேலும் சோதிடம் நற்செயலுக்கே பலிக்கும். தவறானவர்கள் நாள் பார்த்தால்
    நாள் சரியாக சோதிடர் சொன்னாலும், அவர்கள் செய்ய இருக்கும் தீச்செயலின்
    பளுவே அவர்களைத் தோல்வி அடையச் செய்யும். செய்வது தவறு என்று தெரிந்தே செய்யும் போது தோல்வி நிச்சயம். இதையெல்லாம் ஞானியாகிய
    சகாதேவன் அறிவார். அதனால்தான் எதிரிக்கு சோதிட பலன் சொல்ல அவர் தயக்கம் காட்டவில்லை.
    'பலதாதா'(பலனை அருளுபவர்)இறைவனே. சோதிடன் அல்ல.இதனை சோதிடம் சொல்பவர்கள் அறிந்து ஒவ்வொரு முறையும் 'இறையருள் இருந்தால் நான் சொல்வது போல் நடக்கும் ' என்று சேர்த்து சேர்த்துச் சொல்ல வேண்டும்.
    நல்ல பதிவு ஐயா!நன்றி!/////

    ஆமாம். உண்மைதான். உங்களுடைய மேன்மையான விளக்கத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. ////Blogger Ak Ananth said...
    பொய் சொல்ல விருப்பமில்லாவிட்டால் எதையும் சொல்லாமல் தவிர்த்திருக்கலாமே. எப்படியோ பாண்டவர்கள் அப்பழுக்கற்ற நல்லவர்கள் என்றும் கௌரவர்கள் 100% கெட்டவர்கள் என்றும் காட்ட வேண்டுமே.////

    உண்மையிலேயே துரியோதனன் & கோ கெட்டவர்கள்தான். பாஞ்சாலியைத் துகிலுரிய முற்பட்டது ஒன்று போதாதா அவர்களுடைய நீசத்தன்மையை எடுத்துச் சொல்ல!

    ReplyDelete
  14. /////Blogger Jawahar Govindaraj said...
    நல்ல பதிவு.. மீண்டும் கர்ணன் படம் பார்த்த ஒரு உணர்வு.
    ‍-ஜவகர் கோவிந்தராஜ்/////

    உங்களுடைய பாராட்டிற்கு நன்றி ஜவஹர்!

    ReplyDelete
  15. /////Blogger இராஜராஜேஸ்வரி said...
    அது உன்னுடைய வாக்கு. அதைக் காப்பாற்றுவது உன்னுடைய வேலை. உனக்குத் தெரியாத கள்ளத்தனமா? உனக்குத் தெரியாத தகிடுதத்தமா? உனக்குத் தெரியாத சேட்டையா? ஏதாவது ஒன்றைச் செய்து உன்னுடைய வாக்கை நீ காப்பாற்று. அதற்கு நான் எப்படி வழி சொல்ல முடியும்?” என்று சகாதேவன் தெளிவாகச் சொன்னான்.
    தெளிவாக செய்ய வேண்டியவைகளைச்செய்து கண்ணனும் வெற்றிக்கனி பாண்டவர்கள் பறிக்க உதவினார் தானே ..!/////

    ஆமாம் சகோதரி! கண்ணன் செய்த உதவிகளால்தான் பாண்டவர்கள் யுத்தத்தில் வெற்றி கண்டார்கள். நாட்டையும் மீட்டார்கள்!

    ReplyDelete
  16. Blogger visu iyer said...
    அய்யருக்கு உடன்பாடில்லாத கருத்து
    அத்துடன் இதில் நியாமில்லா தர்மம்
    பல கருத்து மோதல்களை தரும்
    பதிவு என்பதினால் கருத்தேதுமில்லை
    பாடலை மட்டும் சுழல விடுகிறோம்
    படித்து பாடி மகிழுங்கள்..
    (தனுசுக்காரருக்கு பிடித்த வாத்தியார் பாட்டல்லவா)

    ////உண்மை எப்போதும்
    துங்குவதுமில்லை
    (மனதை தொடட்ட வரிகள்)////

    நல்லது. சுழன்ற பாடலில் இந்த வரிகள் பிடித்த வரிகள் விசுவநாதன்!

    ReplyDelete
  17. /////Blogger C.Senthil said...
    ஜோதிடத்தை தங்கள் உயிருக்கும் மேலாக நினைக்கும் அனைவர்க்கும் இது பொருந்தும். நான் ஜோதிடத்தை எனது உயிருக்கும் மேலாக நினைகிறேன். இது எனது உயிர் என்று சொல்வதற்கு கூட உரிமை இல்லை. ஏனென்றால் நாம் அனைவரும் பொம்மை தானே. நம்மை ஆட்டி படைப்பவன் ஈசன் !!!. இதை தான் பட்டினத்தார் ஒரு பாடலில் "பொம்மலாட்டம் என்றே இரு பொல்லா உடலை " என்று பாடி இருக்கிறார்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. SP.VR. SUBBAIYA said...
    ///உண்மையிலேயே துரியோதனன் & கோ கெட்டவர்கள்தான். பாஞ்சாலியைத் துகிலுரிய முற்பட்டது ஒன்று போதாதா அவர்களுடைய நீசத்தன்மையை எடுத்துச் சொல்ல!///

    Panchaliyai
    panayam vaithathu nalladha?

    piditha muyalukku kal 3; ungalai
    pidithiruppadhal.. sari sollava?

    Sorry.. SollamattOMe..!!

    ReplyDelete
  19. /////Blogger அய்யர் said...
    SP.VR. SUBBAIYA said...
    ///உண்மையிலேயே துரியோதனன் & கோ கெட்டவர்கள்தான். பாஞ்சாலியைத் துகிலுரிய முற்பட்டது ஒன்று போதாதா அவர்களுடைய நீசத்தன்மையை எடுத்துச் சொல்ல!///
    Panchaliyai
    panayam vaithathu nalladha?
    piditha muyalukku kal 3; ungalai
    pidithiruppadhal.. sari sollava?
    Sorry.. SollamattOMe..!!/////

    பணயம் வைத்து ஆடினது தவறு. சபையில் பலர் முன்பாக ஒரு மங்கை நல்லாளை மானபங்கம் செய்ய முயற்சித்தது அயோக்கியத்தனம். தவறுக்கும் அயோக்கியத்தனத்திற்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com