+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology உங்களுக்குப் பொருத்தமானவரைத்தான் காதலிக்கிறீர்களா?
காதல் என்பது அவச்சொல் அல்ல!
இனக்கவர்ச்சியின் அடிப்படையில் ஆண் பெண் இருவருக்குமிடையே ஏற்படும் அன்பு; நேசம். அதேபோல ஒன்றின் மேல் ஏற்பட்டும் ஆழ்ந்த பற்று, பிடிப்பு, விருப்பம் ஆகியவற்றிற்கும் காதல் என்றுதான்
பெயர். strong liking, love என்று சொல்லலாம். உதாரணம்: இசையின் மேல் கொண்ட காதல்; புத்தகங்களின் மேல் கொண்ட காதல்
--------------------------------------------------------------
ஆண், பெண் இருவருக்குமிடையே ஏற்படும் காதலைப் பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, நான் படித்த காலத்தில் எல்லாம், காதலுக்குச் சான்சே கிடையாது. அப்போதெல்லாம், இருபாலாரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளும் இல்லை. கல்லூரிகளும் இல்லை. அத்துடன் திருமணத்திற்கு முன் பெண்களை வேலைக்கு அனுப்பும் பழக்கமும் கிடையாது. பொது இடங்களில் ஒரு பெண்ணைத தனியாகப் பார்ப்பதே அரிது.
பெண்களும், முன்பின் பழக்கம் இல்லாதவர்களிடம் அறவே பேசமாட்டார்கள்.
கிராமங்களிலும், சிறு நகரங்களிலும், (அப்போதெல்லாம்) பெண் வயதிற்கு வந்தாலே போதும். படிப்பை நிறுத்திவிடுவார்கள்.
இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பக்கம் பக்கமாக
எழுதலாம். எழுதினால் கட்டுரையின் நோக்கம் திசை மாறிவிடும்.
அதுபோல பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம்
சிறந்ததா அல்லது காதல் திருமணம் சிறந்ததா? என்று ஒட்டியும்,
வெட்டியும் பக்கம் பக்கமாக எழுதலாம். அப்படி எழுதினாலும்
கட்டுரையின் நோக்கம் திசை மாறிவிடும். ஆகவே சொல்லவந்ததை
மட்டும் சொல்கிறேன்.
--------------------------------------------------------------
எனக்கு வரும் மின்னஞ்சல்களில் சரிபாதி, தங்கள் காதல்
குறித்துக் கேள்விகள் கேட்டு வரும். தங்கள் காதலன் அல்லது
காதலியின் ஜாதகத்தையும் உடன் அனுப்பி, இருவருக்கும்
பொருத்தம் உள்ளதா? எப்போது திருமணம் நடைபெறும்? வீட்டில்
அனுமதி அளிப்பார்களா? தயவு செய்து பார்த்துச் சொல்லுங்கள்
என்று வரும்.
பெரும்பாலும் இளம் பெண்களிடம் இருந்து வரும். உடன் எத்தனை வருடங்களாகக் காதலிக்கிறோம் என்ற விவரங்களும் இருக்கும்.
நான் அவறிற்கெல்லாம் என்ன பதில் அளித்தேன் அல்லது அளித்து
வருகிறேன் என்பதை இங்கே சொல்ல முடியாது. இது பொது இடம்.
ஒரு பெண் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தார். மேட்டர் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும். ஆகவே அதை மட்டும் சற்றுச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
அந்தப் பெண், தன்னுடன் வேலை பார்க்கும் சக இளைஞனை மூன்று ஆண்டுகளாகக் காதலித்துக் கொண்டிருந்தார்.
பையன் தீர்க்கமாகச் சொல்லிவிட்டான், “என் பெற்றோர்களிடம்
சொல்லி அவர்களை நம் திருமணத்திற்குச் சம்மதிக்க வைப்பது
ஒன்றும் பிரச்சினை இல்லை. நீ முதலில், உன்னுடைய
பெற்றோர்களிடம் அனுமதிவாங்கி வா. அல்லது அவர்களை
உதறிவிட்டு வா.”
பெண்ணிற்குத்தான் சிக்கல். மிகவும் ஆச்சாரமான குடும்பம். கடவுளே வந்தாலும் அனுமதி கிடைக்காத நிலைமை. என்ன செய்வது?
அதானால்தான், தங்கள் காதல் திருமணத்தில் முடியுமா? அல்லது
முடியாதா? என்று கேட்டு மின்னஞ்சல் கடிதம்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து வந்த நச்சரிப்புத் தாங்காமல், நான் பதில் எழுதினேன்.
“பையனின் ஜாதகம் உனக்குப் பொருத்தமில்லை என்றால் என்ன
செய்வாய்? அவனை விட்டுவிடுவாயா? விட்டுவிடத்தான் முடியுமா?
ஆகவே இந்த நிலையில் (3 ஆண்டு காதலுக்குப் பிறகு) ஜாதகத்தை
எல்லாம் வைத்து நோண்டிக்கொண்டிருக்காமல், அவனையே மணந்து
கொள். உன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களின் சாபம் கூடாது.
ஆகவே அவர்களிடம் மட்டும் விஷயத்தைச் சொல்லி அனுமதி
வாங்கிவிடு.”
அந்தப் பெண், அடுத்த பத்தாவது நிமிடமே, எனக்குப் பதில் எழுதி இப்படிக்கேட்டாள்:
“ஜாதகப் பொருத்தம் இல்லை என்றால் நான் கவலைப்பட மாட்டேன். பின்னால் அவனால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அல்லது பிரச்சினையான சூழ்நிலைகள் ஏற்பட்டால், நான் பார்த்துக்
கொள்கிறேன். பிரச்சினை கையை மீறிப்போனால், மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லவும் தயங்க மாட்டேன். எனக்குத் தெரிய
வேண்டிய தெல்லாம், என் பெற்றோர்கள் ஒப்புதலுடனும் என்
திருமணம் நடைபெறுமா? ஜாதகத்தில் அதற்கான அமைப்பு உள்ளதா?
தயவு செய்து அதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள்!”
எப்படி இருக்கிறது கதை?
“துவக்கத்தில் அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், உள்ளிருப்புப்
போராட்டம் நடத்தி, அனுமதி வாங்குங்கள். அதுதான் சிறந்த வழி.
அவர்களைத் தவிக்க விட்டுவிட்டுப் போக வேண்டாம் தாயே” என்று
பதில் எழுதினேன்.
சமூகத்தில், மதம், மொழி, இனம், ஜாதி போன்று பல பிரச்சினைகள்
வேறூன்றி இருக்கும் இக்காலச் சூழ்நிலையில், பல காதலர்கள்
தீவிரமாகக் காதலித்த பின்புதான், அந்த அவதிக்கு உள்ளாகிறார்கள்.
ஜாதகத்தில் காதல் திருமணம் என்று இல்லாமல், பெற்றோர்கள்
பார்த்து செய்து வைக்கும் திருமணங்களும் நன்றாக நிறைவேறி,
தம்பதியர் அன்புடன், “உனக்கு நான், எனக்கு நீ” என்று மன
மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ஒத்த அமைப்பு இருக்க வேண்டும்.
இல்லை என்றால் திருமணம் ஊற்றிக் கொண்டுவிடும்.
ஆகவே ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்வது நல்லது. வரவிருக்கும்
பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். காதல் திருமணத்திலும் அதைச் செய்யலாம்.
பையன் அரவிந்தசாமி மாதிரி அல்லது அஜீத் மாதிரி அழகாக இருக்கிறானா என்று பெண்களும், பெண் நயந்தாரா மாதிரி அல்லது அனுஷ்கா சர்மா
மாதிரி அழகாக இருக்கிறாளா என்று ஆண்களும் பார்க்காமல்,
வேறு சில விஷயங்களையும் பார்க்க வேண்டும்
அதற்குச் சில வழிமுறைகள் உள்ளன.
அவற்றை அடுத்த பாடத்தில் சொல்கிறேன்
பொறுத்திருங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
======================================================
வாத்தியார் வெளியூர் செல்வதால், வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. அடுத்த பாடம் 16.12.2010 வியாழனன்று. அதுவரை பதிவில்
உள்ள பழைய பாடங்களைப் புரட்டிப் படியுங்கள்
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

//// “ஜாதகப் பொருத்தம் இல்லை என்றால் நான் கவலைப்பட மாட்டேன். பின்னால் அவனால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அல்லது பிரச்சினையான சூழ்நிலைகள் ஏற்பட்டால், நான் பார்த்துக்
ReplyDeleteகொள்கிறேன். பிரச்சினை கையை மீறிப்போனால், மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லவும் தயங்க மாட்டேன்.////
இன்னும் அந்தப் பையனை முழுதாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்பதால் தான் இது போன்ற ஒரு முன்யோசனை எல்லாம் வருகிறது!!!... தீர்க்கமாகச் சொல்லவேண்டாமா?...எந்த சூழ்நிலையிலும் அவன் கீழ்த்தரமாக நடக்க மாட்டான்.. அவ்வளவு நல்லவன்... அதனாலேத்தானே அவன்மீது எனக்கு நல்ல அபிப்ராயம்.... அதன்பின்பு ஒரு நட்பு... அன்பு... காதல் அனைத்தும் படிப் படியாக வந்தது என்று?.....
//////எனக்குத் தெரிய
ReplyDeleteவேண்டிய தெல்லாம், என் பெற்றோர்கள் ஒப்புதலுடனும் என்
திருமணம் நடைபெறுமா? ஜாதகத்தில் அதற்கான அமைப்பு உள்ளதா?/////
அந்தப் பெண் இங்கேயும் எந்த அளவுக்கு பெற்றோரைப் புரிந்து வைத்திருக்கிறாள்?! என்பது தான் பெரிய கேள்வி.... சம்மதம் வேண்டுமா?... வேண்டாமா?.... சம்மதம் இல்லாவிட்டாலும் கல்யாணம் நடக்கும் என்றால்.... ஏன் இந்த ஆராய்ச்சி எல்லாம்..... வந்தாவருது இல்லை என்றால் போகட்டும் என்று மோதவேண்டியது தானே..... வராவிட்டாலும் தான் கல்யாணம் நடக்குமே.....
நாங்கள் உயிருக்கு உயிரைக் காதலிக்கிறோம்.... அப்படி இருந்தும்.... பெற்றோர்களாகிய உங்கள் சம்மதத்துடன் தான் எங்கள் திருமணம் நடக்க வேண்டும்... அப்படியில்லாது போகின்.... நாங்கள் இப்படியே இருந்து விட்டுப்போகிறோம்.... ஆனால் நாங்கள் உங்களைமீறி உதறித்தள்ளிவிட்டு புதியதொரு வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பவில்லை.... என்று காதலை உயர்த்திப் பிடித்து.... வாத்தியார் சொன்னது போல் உள்ளிருப்பு போராட்டமே சிறந்தது....
போராடுவோம்! போராடுவோம்!! ஆசிர்வதிக்கும் வரைப் போராடுவோம்..... அதுவரைக்கும் கூட்டணி கூடவே இருக்குதான்னு பார்த்திறலாம்.... (நம்மக் கூட்டணிக்கும் நம்ம தாய்தந்தையரின் மேல் எவ்வளவு மரியாதை பாசம் என்றும் தெரிந்து விடும்)
அன்பும் அறனும் தான் எல்லா உறவுக்கும் ஆதாரம்.....
நன்றி...
Dear Sir
ReplyDeleteArumayana Padhil. We are waiting for Lesson..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
ஆவலுடன் எதிர்பார்கிறேன் அய்யா :)))
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteஅய்யா,
சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து இரண்டு,பதினொன்றாம் இடத்திலோ,
கேந்திர திரிகோணங்களிலோ அமர்ந்து சுபர்களால் பார்க்கப்பட்டால் நிச்சயம்
காதல் திருமணம்தான் என்று சொல்லப்படுகிறது, இதைப்பற்றி தங்களின்
மேலான கருத்தை அறிய விழைகிறேன்.
அன்புடன்,அரசு.
நல்ல தொடர்..என் ஜாதகத்திற்கு பயன்படாவிட்டாலும் பிறருக்குப் ப்யன்படும்.
ReplyDeleteSir, You have started a very needed topic. But we need to wait for 2 days for you to come back. Sorry due to work was not able to login for these many days..
ReplyDelete//காதல் என்பது அவச்சொல் அல்ல!//
ReplyDeleteஆரம்பமே அசத்தல்.
வழக்கம்போல் பதிவு, விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது!
மிகவும் சந்தோசமாக உள்ளது.
வாழ்க நீவிர் இன்னும் நூறாண்டு.
அன்புடன்,
விபின்
//"நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, நான் படித்த காலத்தில் எல்லாம், காதலுக்குச் சான்சே கிடையாது. அப்போதெல்லாம், இருபாலாரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளும் இல்லை. கல்லூரிகளும் இல்லை.''//
ReplyDeleteநான் இளங்கலை வகுப்பில் சேர்ந்த போது, முதன் முதலாக எங்கள் கல்லூரி விதிகள் தளர்த்தப்பட்டு என்வகுப்பில் 3 பெண்கள் சேர்க்கப்பட்டனர்.பயந்த சுபாவத்துடன் இருந்த அவர்களை மேலும் பமுறுத்திச் சீண்டுவது பையன்களுக்குப் பொழுதுபோக்கு.அது ஒரு காலம்.
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDelete//////உங்களுக்குப் பொருத்தமானவரைத்தான் காதலிக்கிறீர்களா?//////
எத்தனை முறை படித்தாலும் புதியதாக படிப்பது போன்ற உணர்வை
ஏற்படுத்தும் தங்களின் எழுத்து நடை சிறப்பாக உள்ளது!
நன்றி!
தங்களன்புள்ள
வ.தட்சணாமூர்த்தி
2010 12 15
/////Alasiam G said...
ReplyDelete//// “ஜாதகப் பொருத்தம் இல்லை என்றால் நான் கவலைப்பட மாட்டேன். பின்னால் அவனால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அல்லது பிரச்சினையான சூழ்நிலைகள் ஏற்பட்டால், நான் பார்த்துக்
கொள்கிறேன். பிரச்சினை கையை மீறிப்போனால், மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லவும் தயங்க மாட்டேன்.////
இன்னும் அந்தப் பையனை முழுதாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்பதால் தான் இது போன்ற ஒரு முன்யோசனை எல்லாம் வருகிறது!!!... தீர்க்கமாகச் சொல்லவேண்டாமா?...எந்த சூழ்நிலையிலும் அவன் கீழ்த்தரமாக நடக்க மாட்டான்.. அவ்வளவு நல்லவன்... அதனாலேதானே அவன்மீது எனக்கு நல்ல அபிப்ராயம்.... அதன்பின்பு ஒரு நட்பு... அன்பு... காதல் அனைத்தும் படிப்படியாக வந்தது என்று?//////
காதலைப் பற்றி ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தி, அப்படிச் சொல்லவில்லை. ஆலாசியம்!
/////Alasiam G said...
ReplyDelete//////எனக்குத் தெரிய
வேண்டிய தெல்லாம், என் பெற்றோர்கள் ஒப்புதலுடனும் என்
திருமணம் நடைபெறுமா? ஜாதகத்தில் அதற்கான அமைப்பு உள்ளதா?/////
அந்தப் பெண் இங்கேயும் எந்த அளவுக்கு பெற்றோரைப் புரிந்து வைத்திருக்கிறாள்?! என்பது தான் பெரிய கேள்வி.... சம்மதம் வேண்டுமா?... வேண்டாமா?.... சம்மதம் இல்லாவிட்டாலும் கல்யாணம் நடக்கும் என்றால்.... ஏன் இந்த ஆராய்ச்சி எல்லாம்..... வந்தாவருது இல்லை என்றால் போகட்டும் என்று மோதவேண்டியது தானே..... வராவிட்டாலும் தான் கல்யாணம் நடக்குமே
நாங்கள் உயிருக்கு உயிரைக் காதலிக்கிறோம்.... அப்படி இருந்தும்.... பெற்றோர்களாகிய உங்கள் சம்மதத்துடன் தான் எங்கள் திருமணம் நடக்க வேண்டும்... அப்படியில்லாது போகின்.... நாங்கள் இப்படியே இருந்து விட்டுப்போகிறோம்.... ஆனால் நாங்கள் உங்களைமீறி உதறித்தள்ளிவிட்டு புதியதொரு வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பவில்லை.... என்று காதலை உயர்த்திப் பிடித்து.... வாத்தியார் சொன்னது போல் உள்ளிருப்பு போராட்டமே சிறந்தது
போராடுவோம்! போராடுவோம்!! ஆசிர்வதிக்கும் வரைப் போராடுவோம்..... அதுவரைக்கும் கூட்டணி கூடவே இருக்குதான்னு பார்த்திறலாம்.... (நம்மக் கூட்டணிக்கும் நம்ம தாய்தந்தையரின் மேல் எவ்வளவு மரியாதை பாசம் என்றும் தெரிந்து விடும்)
அன்பும் அறனும் தான் எல்லா உறவுக்கும் ஆதாரம்.....
நன்றி...//////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆலாசியம்!
/////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Arumayana Padhil. We are waiting for Lesson..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
நல்லது. நன்றி ராஜாராமன்!
////தமிழ்மணி said...
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்கிறேன் அய்யா :)))/////
உங்கள் ஆவல் வாழ்க!
/////ARASU said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து இரண்டு,பதினொன்றாம் இடத்திலோ,
கேந்திர திரிகோணங்களிலோ அமர்ந்து சுபர்களால் பார்க்கப்பட்டால் நிச்சயம்
காதல் திருமணம்தான் என்று சொல்லப்படுகிறது, இதைப்பற்றி தங்களின்
மேலான கருத்தை அறிய விழைகிறேன்.
அன்புடன்,அரசு.//////
காதல் திருமணத்திற்கு என்று ஜாதகத்தில் சிலவிதமான அமைப்புக்கள் உள்ளன. அதுபற்றி பின்னால் விவரமாக ஒரு தொடர் எழுத உள்ளேன். பொறுத்திருங்கள்.
/////SHEN said...
ReplyDeleteநல்ல தொடர்..என் ஜாதகத்திற்கு பயன்படாவிட்டாலும் பிறருக்குப் பயன்படும்.//////
ஆமாம். நன்றி!
//////Naveen said...
ReplyDeleteSir, You have started a very needed topic. But we need to wait for 2 days for you to come back. Sorry due to work was not able to login for these many days../////
அதனால் பரவாயில்லை. நேரம் கிடைக்கும்போது படியுங்கள்.
/////Vibin said...
ReplyDelete//காதல் என்பது அவச்சொல் அல்ல!//
ஆரம்பமே அசத்தல்.
வழக்கம்போல் பதிவு, விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது!
மிகவும் சந்தோசமாக உள்ளது.
வாழ்க நீவிர் இன்னும் நூறாண்டு.
அன்புடன்,
விபின்/////
உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி!
/////kmr.krishnan said...
ReplyDelete//"நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, நான் படித்த காலத்தில் எல்லாம், காதலுக்குச் சான்சே கிடையாது. அப்போதெல்லாம், இருபாலாரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளும் இல்லை. கல்லூரிகளும் இல்லை.''//
நான் இளங்கலை வகுப்பில் சேர்ந்த போது, முதன் முதலாக எங்கள் கல்லூரி விதிகள் தளர்த்தப்பட்டு என்வகுப்பில் 3 பெண்கள் சேர்க்கப்பட்டனர்.பயந்த சுபாவத்துடன் இருந்த அவர்களை மேலும் பமுறுத்திச் சீண்டுவது பையன்களுக்குப் பொழுதுபோக்கு.அது ஒரு காலம்./////
ஆமாம் அதெல்லாம் ஒரு காலம் என்று ஆதங்கப்பட்டுக்கொள்ளலாம்! நன்றி கிருஷ்ணன் சார்!
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
//////உங்களுக்குப் பொருத்தமானவரைத்தான் காதலிக்கிறீர்களா?//////
எத்தனை முறை படித்தாலும் புதியதாக படிப்பது போன்ற உணர்வை
ஏற்படுத்தும் தங்களின் எழுத்து நடை சிறப்பாக உள்ளது!
நன்றி!
தங்களன்புள்ள
வ.தட்சணாமூர்த்தி//////
உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!
அண்ணா...ம்ம்ம் ...கலக்குங்கள்...என்னுடைய தமிழ் ஆசிரியர் காதலில்(காதல் பாடத்தில்) Ph .d பண்ணியவர்...நான் அவரிடம் முடிவாக காதலை பற்றி என்ன ரிப்போர்ட் கொடுத்தீர்கள் என்று கேட்டேன்...அவர் காதல் என்று ஒன்று உண்டு ஆனா காதலிப்பவர்கள் தான் இல்லை...இப்பொழுது செய்யும் காதல் எல்லாம் காதலில் எடுத்து கொள்ள முடியாது என்று கூறினார்....
ReplyDeleteநீங்கள் நடத்துங்கள்...பாப்போம் அதிர்ஷ்டம் இருகிறதா என்று...
Dear Sir,
ReplyDeleteWhen is the next lesson? please write asap.
Thanks
Manikandan
ஐயா!
ReplyDeleteஎனக்கு இதைப் பற்றிய பாடம் வரவில்லை....தயவு செய்த்ய் மின்னஞ்சலில் அனுப்பவும்...
நன்றி
Nattu said..
ReplyDeleteஅண்ணா...ம்ம்ம் ...கலக்குங்கள்...என்னுடைய தமிழ் ஆசிரியர் காதலில்(காதல் பாடத்தில்) Ph .d பண்ணியவர்...நான் அவரிடம் முடிவாக காதலை பற்றி என்ன ரிப்போர்ட் கொடுத்தீர்கள் என்று கேட்டேன்...அவர் காதல் என்று ஒன்று உண்டு ஆனா காதலிப்பவர்கள் தான் இல்லை...இப்பொழுது செய்யும் காதல் எல்லாம் காதலில் எடுத்து கொள்ள முடியாது என்று கூறினார்....
நீங்கள் நடத்துங்கள்...பாப்போம் அதிர்ஷ்டம் இருகிறதா என்று...
G.Nandagopal says.////
நட்டு சார்
யாரை சொல்லுகிறீர்கள் ..நடத்தச் சொல்லி
இவ்வளவு வயதிர்கப்புறம் KMRK அவர்களை ஏன் தூண்டிவிடுகிறீர்கள்..
ஆனாலும் எனக்கு நம்பிக்கையிருக்கிறது
நல்லதே நடக்கும் என்று
நந்தகோபால்
Nalakuraivaal sariyaaga vara mudiyavillai.
ReplyDeleteAlasiam sir, comments ellam super.
Nattu sir, neenga appappa spannerrodathaan vareenga onnu tight pannanum illati loose pannanumnu.
Nandhagopaal sir, neengal ethai nallathu ena nambugindreergalnu vilakkamaga sollunga sir.