மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.11.10

e class - தகாத பெண் உறவால் வந்த கேடு!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
e class - தகாத பெண் உறவால் வந்த கேடு!
துன்பங்களில் இரண்டு வகைகள் உண்டு. தாங்கக்கூடிய துன்பம், தாங்கமுடியாத துன்பம்..

தாங்க முடியாத, சமாளிக்க முடியாத துன்பங்கள் எல்லாம், கெட்ட சிநேகங்களாலும், கெட்ட நடவடிக்கைகளாலுமே  பெரும்பாலும் உண்டாகும். மனமில்லாத மனைவி, மனிதநேயம் இல்லாத சிநேகிதன், அடிப்படைப் பண்பில்லாத  கூட்டாளி அல்லது முதலாளி என்று அதை வகைப்படுத்திக்கொண்டே போகலாம்.

எல்லாவற்றிலும் மோசமானது தகாத பெண்ணுடன் கொள்ளும் தவறான உறவாகும்.

ஒரு பெண்ணுடன் முறையில்லாத சகவாசம் (உறவு) ஏற்பட்டால் அதில் வரும் கேடு, சாதாரணமாக வரும் கேட்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

பணம், பெயர், புகழ் என்று எல்லாம் கெடுவதுடன், சமயத்தில் சட்ட சிக்கலுக்கும் ஆளாக நேரிடும்.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.

ஜாதகத்தை அலசினால் வரப்பொகும் அவலம் தெரியும். எப்படி அலசுவது? அதற்கான விதிமுறைகள் என்ன? ஒரு உதாரண ஜாதகத்தை வைத்துப் பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++
தலைப்பு: பெண்ணின் சகவாசத்தால் வந்த கேடு!
குறிச்சொல்: அலசல் பாடங்கள்
-----------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகன் தன்னுடைய .........வது வயதில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் தகாத உறைவை ஏற்படுத்திக் கொண்டார். தகாத உறவில் சுகத்தைத் தந்த அந்தப் பெண், தான் வேலை செய்த அலுவலகத்தில் தில்லு முல்லு செய்து பெரும் பணத்தைச் சுருட்டினார்.

வேலையை விட்டு விலகி ஓடுவதற்குள் வசமாகச் சிக்கிக் கொண்டார். கள்ள உறவால் சுகம் கொடுத்த  பெண்ணிற்கு கண்ணை மூடிக்கொண்டு உதவி செய்த குற்றத்திற்காக இந்த ஜாதகரும் வசமாகச் சிக்கிக்கொண்டார்.

சட்டச் சிக்கலுக்கும் ஆளாகி நீதிமன்றத்திற்கு அலைந்து திரிந்தார். இறுதியில் எல்லாவற்றையும் இழந்து  தெருவிற்கு வர நேர்ந்தது.
-----------------------------------------------------------------------------------
1. லக்கினாதிபதி________  ______________ஆம் அதிபதியுடன் சேர்ந்ததால், பெண்ணின் சகவாசத்தால் சீரழிய  நேர்ந்தது.

2. லக்கினாதிபதி ___________ஆம் அதிபதியுடன் சேர்ந்தால், சொந்த விவகாரங்கள் கோளாறில் முடியும்.  இவருடைய கேஸில் ____________சம்பந்தப்பட்டதால் அது (கோளாறுகள்) பெண் மூலம் அரங்கேறியது.

3. அத்துடன் ஜாதகனுக்குப் _________ அதிபதி __________ திசையும் நடைபெற்றதால், எல்லாவற்றையும் இழக்க  நேரிட்டது.
_____________________________________________
இதுபோன்ற அலசல் பாடங்கள் முழு ஜாதகம், மற்றும் விவரங்களுடன் இணைய வகுப்பில் தொடர்ந்து வர உள்ளது. (திருட்டுப்போகும் வாய்ப்பு உள்ளதால் இங்கே கொடுக்கவில்லை) பொறுத்திருங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
பயணர் பெயர், கடவுச்சொல் வசதி, எழுத்துக்களைப் பிரதி எடுப்பதைத் தடுக்கும் வசதி, மற்றும் முழுக் காப்புரிமையுடன் நம் வகுப்பறைக்கென்று இணைய தளம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.

தை மாதம் ஒரு நன்னாளில் இணையதளம் உங்கள் பயன்பாட்டிற்கு வரும்.

இங்கே வலைப் பதிவில் எழுதுவதும் தொடரும். இதில் என்ன எழுதுவது, அதில் என்ன எழுதுவது என்பதை நான் முடிவு செய்து வைத்திருக்கிறேன். இரண்டுமே வழக்கம்போல படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.

உண்மையிலேயே ஜோதிடத்தின் மீது மதிப்பும், ஆர்வமும், கற்றுக் கொள்ள முனைப்பும் உள்ளவர்கள் மட்டும் இணையத்தில் சேரலாம். மற்றவர்கள். இதில் - அதாவது இந்த வலைப் பதிவில் எழுதுவதை மட்டும் படித்தால் போதும். இதுவரை எழுதியுள்ள பாடங்களைப் படித்தால் மட்டும் போதும். இணையதளம் பயன்பாட்டிற்கு வரும்வரை பாடங்கள் மின்னஞ்சல் மூலமாக நடத்தப்படும். மின்னஞ்சலில் எழுதப்படுபவைகள் அனைத்தும், இணையதளம் பயன்
பாட்டி ற்கு வந்தவுடன் அதில் சேர்க்கப்படும்.

மின்னஞ்சல் வகுப்பில் குறைந்த அளவு எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பழைய (சீனியர்) மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறுகிய காலம் மட்டுமே நடக்க இருப்பது என்றாலும், அதற்குச் சில விதிமுறைகள் உண்டு.

சேரவிருப்பமுள்ளவர்களும், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறேன் என்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். மற்ற அனைவரும் பொறுத்திருங்கள். தை மாதம் இணையதளம் துவங்கியவுடன் அனைவருக்கும் அதில் சேரும்
வாய்ப்பு அளிக்கப்படும். தொடர்ந்து பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

அன்புடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

27 comments:

  1. அருமையான முயற்சி.

    தங்களின் தொடர்ச்சியான உழைப்பால் , பதிவருக்கும், வாசகர்களூக்கும் தாங்கள் செய்யும் சேவை மெச்சதக்கது.

    வாழ்த்துக்கள் ஜயா..

    ReplyDelete
  2. நன்றி சார். என்னையும் மின்னஞ்சல் , இனையதள பாடங்களின் சேர்த்துக்கோள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. ஆட்டுக் குட்டிக்கு தழையைக் காண்பித்து அழைத்துச்செல்வது போல,படிக்கத் தூண்டும் தலைப்புகளைக் கொடுத்து ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள்.செவ்வனே செய்வீர்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

    ReplyDelete
  4. The lesson is fantastic; please provide me log-in ID for me on your E-class as i am new student of your class as on 01/07/2010.

    I love your lessons a lot, reading lessons on classroom blog’s. If get log-in for E-class it will be highly helpful for clarifying doubts on quality basis.

    Don't mistake me for asking you E-class log-in ID.

    Many thanks in advance,
    Thiyagarajan kandhaswamy
    chennai.

    ReplyDelete
  5. தை பிறக்க இன்னும் அதிக நாள் இருக்கே....

    ReplyDelete
  6. ஐயா,

    இப்போதே படிக்க ஆர்வம் பொங்குகிறது..டிரைலரே இப்படி என்றால் படம்...வழக்கம்போல் கலக்கல்தான்!!

    அன்புடன்
    செங்கோவி

    ReplyDelete
  7. ////காவேரி கணேஷ் said...
    அருமையான முயற்சி.
    தங்களின் தொடர்ச்சியான உழைப்பால் , பதிவருக்கும், வாசகர்களூக்கும் தாங்கள் செய்யும் சேவை மெச்சதக்கது. வாழ்த்துக்கள் ஜயா..////

    உங்களின் மெச்சுதலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Vinoth said...
    நன்றி சார். என்னையும் மின்னஞ்சல் , இனையதள பாடங்களின் சேர்த்துக்கோள்ள வேண்டுகிறேன்////

    நீங்கள் இல்லாமலா? உங்களுக்கு முதல் வரிசையில் இடம் உண்டு!

    ReplyDelete
  9. //////kmr.krishnan said...
    ஆட்டுக் குட்டிக்கு தழையைக் காண்பித்து அழைத்துச்செல்வது போல,படிக்கத் தூண்டும் தலைப்புகளைக் கொடுத்து ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள்.செவ்வனே செய்வீர்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?/////

    எல்லா ஆட்டுக்குட்டிகளும் வராது. பசியுள்ள குட்டிகள் மட்டுமே வரும். ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே வருவார்கள். தலைப்புக்களைத் துவக்கத்தில் இருந்தே அப்படித்தான் போட்டு வருகிறேன்

    “தலைப்பை நன்றாகப் போடு
    தானே வருவார்கள்
    எழுதுவதை நன்றாக எழுது
    எல்லோரும் படிப்பார்கள்”

    என்று நானே மற்றவர்களுக்கு யோசனை சொல்வேன். அந்த யோசனைகளை நானும் கடைப்பிடிக்க வேண்டாமா?

    ReplyDelete
  10. /////thiyagarajan said...
    The lesson is fantastic; please provide me log-in ID for me on your E-class as i am new student of your class as on 01/07/2010.
    I love your lessons a lot, reading lessons on classroom blog’s. If get log-in for E-class it will be highly helpful for clarifying doubts on quality basis.
    Don't mistake me for asking you E-class log-in ID.
    Many thanks in advance,
    Thiyagarajan kandhaswamy
    chennai.////

    உங்களுக்கு முதல் வரிசையில் இடம் உண்டு! அஞ்சல் வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  11. மதி said...
    தை பிறக்க இன்னும் அதிக நாள் இருக்கே....///

    14.1.2011ல் வகுப்பறைக்கு 4 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஐந்தாம் ஆண்டு துவங்குகிறது. முடிந்தால் அன்றைய தினமே துவங்கிவிடுவோம். அதுவரை மின்னஞ்சல் மூலம் பாடங்கள். கவலையை விடுங்கள்.

    ReplyDelete
  12. ////SHEN said...
    ஐயா,
    இப்போதே படிக்க ஆர்வம் பொங்குகிறது..டிரைலரே இப்படி என்றால் படம்...வழக்கம்போல் கலக்கல்தான்!!
    அன்புடன்
    செங்கோவி/////

    டிரைலர், நியூஸ் ரீல், போன்று எதுவும் இல்லை சுவாமி. பாடம்தான் அது. முக்கியமான பகுதிகள் மறைக்கப் பட்டுள்ளது. பாடத்தில் அது சேர்ந்துவரும்!

    ReplyDelete
  13. வணக்கம் அய்யா....
    கடந்த சில வாரமாக ஒய்வு கிடைப்பது அரிதாகி விட்டது....வந்ந்தாலும் பின்னூட்டம் இட முடிவதில்லை...இன்று தான் ஓய்வாக அமர்ந்தால் வகுப்பறை இல் புயலுக்கு பின்னான அமைதியை உணர முடிந்த்து...அதே நேரம் வகுப்பறை இனையதளம் ஆகும் செய்தி மகிழ்ச்சி அளித்துள்ளது....தற்க்காலிக மின்ன்ஞ்சல் வகுப்புக்கு அட்மிசன் பார்ம் வேணும் சார் ....அத பற்றிய ஒரு வரி சொல்லுங்க ...என்னை சேர்த்து கொள்ளுங்கள் .....உங்களுக்கு ஆதரவு தெரிவிச்சு ஒரு கூட்டம் போட்டு இனைய திருடர்களுக்கு கண்டனம் தெரிவிக்கலாம் பார்த்தா மைனர் அண்ணன் எற்கனவே பொன்னாடையே போர்த்திவிட்ருக்காரு...

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  14. //1. லக்கினாதிபதி________ ______________ஆம் அதிபதியுடன் சேர்ந்ததால், பெண்ணின் சகவாசத்தால் சீரழிய நேர்ந்தது.

    2. லக்கினாதிபதி ___________ஆம் அதிபதியுடன் சேர்ந்தால், சொந்த விவகாரங்கள் கோளாறில் முடியும். இவருடைய கேஸில் ____________சம்பந்தப்பட்டதால் அது (கோளாறுகள்) பெண் மூலம் அரங்கேறியது.

    3. அத்துடன் ஜாதகனுக்குப் _________ அதிபதி __________ திசையும் நடைபெற்றதால், எல்லாவற்றையும் இழக்க நேரிட்டது.//

    12 வீடுகளில் ஒரு வீட்டுக்காரர்தான் முதல் தர வில்லன். அவர் தருவது மற்ற வீட்டுக்காரர்கள் தருவதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மற்றவர்கள் வெறும் ஜூஜூபி என்று சொல்லலாம். யார் என்று உங்கள் பாடத்தில் நீங்கள் சொல்லும் வரை சஸ்பென்ஸாக இருக்கட்டும்.

    ReplyDelete
  15. ITS GREAT MOVE AT LAST, I AM WAITING TO JOIN THERE, KINDLY PROVIDE ME THE ID FOR THE SAME

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா,
    எனது சுய விபரங்களை இ‍ மெயில் செய்துள்ளேன். தங்களுடைய விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறேன். தயவு செய்து பாடங்களை மின்னஞ்சலில் அனுப்பவும்.

    by
    venkatesan

    ReplyDelete
  17. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    ///////14.1.2011ல் வகுப்பறைக்கு 4 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. ஐந்தாம் ஆண்டு துவங்குகிறது. முடிந்தால் அன்றைய தினமே துவங்கிவிடுவோம்.அதுவரை மின்னஞ்சல் மூலம் பாடங்கள். /////////
    ஐந்தாம் ஆண்டு துவக்கத்தில் இணையதளம் ஆரம்பம்..மிக்க மகிழ்ச்சியான தகவல்.
    இதுவரையில் வந்துள்ள தங்களின் ஜோதிட ஆக்கங்கள் புத்தகமாக வெளி
    வரும் தேதியை அறிவதற்கு ஆவலாக உள்ளது.
    நன்றி!
    தங்களன்புள்ள மாணவன்,
    வ.தட்சணாமூர்த்தி
    2010-11-26

    ReplyDelete
  18. வணக்கம் வாத்தியார் ஐயா

    கடைசி பெஞ்சு மாணவனுக்கு வகுப்பறையில் இடம் உண்டா ?

    ReplyDelete
  19. one small silly doubt. dhanus lagnathil guru vakramaga irundhu (6 paralodu irundhal) avar strongaga irukindraara aladhu ..dummy pieceaa?


    6paral irundhal strong endru soliuleergal..but vakram endru vandhuvitadhal confusion

    ReplyDelete
  20. நன்றி சார். என்னையும் மின்னஞ்சல் , இனையதள பாடங்களின் சேர்த்துக்கோள்ள வேண்டுகிறேன்////

    ReplyDelete
  21. ayya enakkum classil oru seat tara vendum. ungal badhilai noki aavaludan .. ulla oru chiriya maanavan.

    ReplyDelete
  22. சரியான நேரத்தில் தாங்கள் எடுத்த சரியான முடிவு

    ReplyDelete
  23. ///12 வீடுகளில் ஒரு வீட்டுக்காரர்தான் முதல் தர வில்லன். அவர் யார் என்று உங்கள் பாடத்தில் நீங்கள் சொல்லும் வரை சஸ்பென்ஸாக இருக்கட்டும். ///

    ஆறாமிட அதிபதி என பாடங்களை மனம் ஒன்றி படித்தவர்கள் உறக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்வார்களே ananth sir

    ReplyDelete
  24. நன்றி சார். என்னையும் மின்னஞ்சல் , இனையதள பாடங்களின் சேர்த்துக்கோள்ள வேண்டுகிறேன்.
    Chandrasekaran Suryanarayanan
    USA

    ReplyDelete
  25. \\மின்னஞ்சல் வகுப்பில் குறைந்த அளவு எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பழைய (சீனியர்) மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.\\

    இது புது மின்னஞ்சல் வகுப்பா? ஏன்னென்றால் பழைய மின்னஞ்சல் வகுப்பில் நான் இருக்கிறேன்.

    ReplyDelete
  26. உங்களுடைய உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதில் மனம் கொள்ளா வருத்தம் வாத்தியாரே..!

    ஆனால் என்ன செய்வது? இணையம் தரும் வசதிகளில் நமக்கு நல்லதும் உண்டு.. கெட்டதும் உண்டு என்பதாக இப்படியும் சில இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

    தங்களுடைய இந்த முயற்சிக்கு எனது முழு ஒத்துழைப்பை நல்குகிறேன்..!

    ReplyDelete
  27. HI, I WISH U YOUR AWRWNESS OF ASTROLOGY.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com