மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.8.09

ஜோதிடப் பாடம்: வட்டமும், மாவட்டமும்!


ஜோதிடப் பாடம்: வட்டமும், மாவட்டமும்!

அரசியல் கட்சிகளில், வட்டம் , மாவட்டம் என்று செயலாளர்களும்,
பொருளாளர்களும், கமிட்டி உறுப்பினர்களும் இருப்பதுபோல,
பிரதேசங்கள், வட்டம், மாவட்டம், மாநிலம் (Taluk, District, State)
என்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதைப் போல, ஜாதகத்திலும்
திசைகள், புத்தி, அந்தரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் வாங்கியதற்குப் பிறகு அது பிரிக்கப்பட்டதல்ல.
நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பெற்றதாகும்

திசை என்பது Main Dasa
புத்தி என்பது Sub period
அந்தரம் என்பது புத்தியின் உட்பிரிவுகள் Divisions in the sub period

திசையில் புத்தி முக்கியம், புத்தியில் அந்தரம் முக்கியம்.
அந்த அந்தரத்தில்தான் உங்களுக்கு உரிய பலன்கள் வந்து சேரும்.
கிரகங்கள் தேடி வந்து கொடுத்து விட்டுப் போவார்கள்.

நல்லதையும் அப்போதுதான் கொடுப்பார்கள்.
தீமைகளையும் அப்போதுதான் கொடுப்பார்கள்.
நீங்கள் வேண்டாம் என்று சொல்ல முடியாது.:-))))
----------------------------------------------------------------------
உங்களுக்கு ராகு திசையில் சுக்கிர புத்தி நடைபெருகிறது என்றால்

முதலில் வருவது ராகு திசையில் ராகு புத்தி
அதன் கால அளவு 2 வருடம் 8 மாதங்கள் 12 நாட்கள்

அடுத்து ராகு திசையில் குரு புத்தி
அதன் கால அளவு 2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்

அடுத்து ராகு திசையில் சனி புத்தி
அதன் கால அளவு 2 வருடம் 10 மாதங்கள் 6 நாட்கள்

அடுத்து ராகு திசையில் புதன் புத்தி
அதன் கால அளவு 2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்

அடுத்து ராகு திசையில் கேது புத்தி
அதன் கால அளவு 1 வருடம் 0 மாதங்கள் 18 நாட்கள்

அடுத்து ராகு திசையில் சுக்கிர புத்தி
அதன் கால அளவு 3 வருடங்கள்

ஆக ராகு திசை துவங்கி 11 ஆண்டுகள் 6 மாதங்கள் 18 நாட்கள்
நிறைவான பிறகு அல்லது கழிந்த பிறகுதான் உங்களுக்கு
சுக்கிரபுத்தி துவங்கிறது.

ராகு திசை நடக்கும் ஒருவன் வந்து, ”சாமி, எனக்கு எப்போது
திருமணம் நடைபெறும்?” என்று கேட்டால், ஜோதிடர் பிறந்த தேதி
சென்ற இருப்புக்கள், திசைகள் ஆகியவற்றைக்கூட்டுவதோடு,
இந்த 11-6-18 ஆண்டுகள்/மாதங்கள்/நாட்கள் கணக்கையும் கூட்டி
அந்தத் தேதியில் இருந்து ஆறு மாத காலத்திற்குள் உனக்குத்
திருமணம் முடிந்துவிடும் என்பார்.

அந்த ஆறுமாதம் என்ன கணக்கு?

அட்டவனையில் பாருங்கள்: ராகு திசையில் சுக்கிர புத்தியில்,
சுக்கிரனின் அந்தரம் 6 மாதங்கள் என்று இருப்பதை!

சுக்கிரபுத்தியில், சுக்கிர அந்தரத்தில்தான் திருமணம் நடைபெறும்.
அதைவைத்து அவர் அந்தரத்தைத் தேடிப்பிடித்துச் சொல்வார்.

இப்படித்தான் ஒவ்வொரு மேட்டருக்கும், திசை, அதில் உள்ள புத்தி,
புத்தியின் உட்பிரிவான அந்தரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு,
துல்லியமாக ஜோதிடர் பதில் சொல்வார்!

கரெக்டாக இருக்குமா?

உங்கள் ஜாதகம் சரியானது என்றால் அதுவும் சரியாகத்தான் இருக்கும்!:-))))

ஓக்கே, கஷ்டங்கள் தீரும் நாளை எப்படிச் சொல்வார்?

அது உங்கள் கஷ்டத்தின் தன்மையைப் பொறுத்தது.
கஷ்டங்களில் பலவகை உள்ளன.
பணக்கஷ்டம், கடன் தொல்லை, நோய் நொடியால் அவதி,
குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தூர தேசத்தில் வாழும் நிலைமை,
அண்ணன் தம்பி சொத்துத் தகறாறு,
வேலையில் சுமை, வேலையில் திருப்தியின்மை....
இப்படிப் பத்துப் பக்கங்களுக்கு எழுதிக்கொண்டு போகலாம்.
கஷ்டத்தின் தன்மையை வைத்து, அதற்கு காரகனான, மற்றும்
அதிபனாக உள்ள கிரகத்தை வைத்து, அவர்களுடைய
அந்தரத்தைக் கணக்கிட்டு அதற்குப் பலன் சொல்வார்.
அந்தத் தேதியில் அது முடிவிற்கு வரும்!

சரியா?

சார், எதோ குறுக்கு வழி என்று சொன்னீர்களே?

அகா, உள்ளது. அது மேல் நிலைப்பாடம். மின்னஞ்சலில் வரும்.
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நாளை மாலை வரும்.
பொறுத்திருந்து படியுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
இத்துடன் தசா, புத்தி, அந்தரம் ஆகியவற்றைக் காட்டுக் அட்டவனையைக்
கொடுத்துள்ளேன். பார்த்துப் பயன் அடையுங்கள்.

அட்டவனைகள் மீது கர்சரை வைத்து அழுத்திப் பாருங்கள்.
அவைகள் பெரிதாகத் தெரியும்!


வாழ்க வளமுடன்!

84 comments:

 1. Present sir. The last lesson I received was on August 10th 2009. Have you sent any more lessons after that date, that I did not receive?

  ReplyDelete
 2. உள்ளேன் ஐயா.

  பா(ப)டங்கள் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது.

  ReplyDelete
 3. தாங்கள் கொடுத்த திசை விவரத்தை மூன்று படங்களில் லிங்க் பண்ண முடியவில்லை . சிறு விவரமாக கூரவும்.

  ReplyDelete
 4. அருமையான பதிவு..எனக்கிருந்த அந்திரம் பற்றிய ஐயம் நீங்கியது.நன்றி ஐயா!!

  ஒரு சிறிய சந்தேகம்..ராகு திசை புதன் புத்தியில் சுக்கிரன் அந்திரத்தில் திருமண வாய்ப்பு இருக்கிறதா?..இதுவே வேறு மாதிரி கேட்டால்..அனைத்து திசை,புத்தியிலும் சுக்கிரன் அந்திரத்தில் திருமண வாய்ப்பு கிட்டுமா?

  நன்றி,
  மோகன்

  ReplyDelete
 5. அழகாகச் சொன்னீர்கள்.

  இராகு தசை சுக்ர புக்திக்கு பின் வரும் இராகு தசை சூரிய புக்தி.. எவ்வளவு கஷ்டங்களைக் கொடுக்கின்றது. அப்பா தாங்க இயலாத கஷ்டங்களை அள்ளி கொடுத்துவிட்டது. கிட்டதட்ட 3 மாதங்களை என்னை படுக்கையில் தள்ளி, 6 மாதங்களுக்கு மருந்துகளை சாப்பிட வைத்துவிட்டது.

  மிதுன லக்னம், ரிஷபத்தில் ராகு, மகரத்தில் சூரியன், சந்திரன், சுக்ரன், புதன். நான் திருவோண நட்சத்திரம். சனி கும்பத்தில்.

  வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்களின் மொத்தத்திற்கும், அந்த 10 மாதங்கள் ஈடாகாது.

  ReplyDelete
 6. ஐயா பாடம் அவசியமான நேரத்தில் வந்திருக்கிறது. மிக நன்றி.

  அன்புடன்
  ஸ்ரீதர்

  ReplyDelete
 7. ////Blogger அமர பாரதி said...
  Present sir. The last lesson I received was on August 10th 2009. Have you sent any more lessons after that date, that I did not receive?///

  இங்கே வகுப்பறையில் தொடர்ந்து பாடங்கள் வந்து கொண்டிருப்பதைக் கவனித்தீர்களா? இங்கே சற்று நிறுத்திவிட்டுத்தான் அங்கே எழுத வேண்டும்.
  ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் எப்படி சவாரி செய்ய முடியும்?

  ReplyDelete
 8. ////Blogger முருகன் அடிமை said...
  உள்ளேன் ஐயா.
  பா(ப)டங்கள் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது.////

  இத்தோடு விட்டாயே முருகா - நன்றி!:-))))

  ReplyDelete
 9. /////Blogger Shyam Prasad said...
  தாங்கள் கொடுத்த திசை விவரத்தை மூன்று படங்களில் லிங்க் பண்ண முடியவில்லை . சிறு விவரமாக கூறவும்.////

  மூன்று படங்களையும் எதற்காக லிங்க் செய்ய வேண்டும்?
  அவரவர்க்கு வேண்டிய திசைகளைப் பற்றிய விவரங்களை சம்பந்தப் பட்ட படத்தில் பார்த்துக்கொள்ள வேண்டியதுதானே?

  ReplyDelete
 10. ////Blogger Mohan said...
  அருமையான பதிவு..எனக்கிருந்த அந்தரம் பற்றிய ஐயம் நீங்கியது.நன்றி ஐயா!!
  ஒரு சிறிய சந்தேகம்..ராகு திசை புதன் புத்தியில் சுக்கிரன் அந்திரத்தில் திருமண வாய்ப்பு இருக்கிறதா?..இதுவே வேறு மாதிரி கேட்டால்..அனைத்து திசை,புத்தியிலும் சுக்கிரன் அந்திரத்தில் திருமண வாய்ப்பு கிட்டுமா?
  நன்றி,
  மோகன்//////

  கிட்டும்.கிட்டும்.கிட்டும்! புத்திநாதனும் வலுவாக இருக்க வேண்டும்!

  ReplyDelete
 11. ////Blogger இராகவன் நைஜிரியா said...
  அழகாகச் சொன்னீர்கள்.
  இராகு தசை சுக்ர புக்திக்கு பின் வரும் இராகு தசை சூரிய புக்தி.. எவ்வளவு கஷ்டங்களைக் கொடுக்கின்றது. அப்பா தாங்க இயலாத கஷ்டங்களை அள்ளி கொடுத்துவிட்டது. கிட்டதட்ட 3 மாதங்களை என்னை படுக்கையில் தள்ளி, 6 மாதங்களுக்கு மருந்துகளை சாப்பிட வைத்துவிட்டது.
  மிதுன லக்னம், ரிஷபத்தில் ராகு, மகரத்தில் சூரியன், சந்திரன், சுக்ரன், புதன். நான் திருவோண நட்சத்திரம். சனி கும்பத்தில்.
  வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்களின் மொத்தத்திற்கும், அந்த 10 மாதங்கள் ஈடாகாது.////

  தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. ////Blogger sridhar said...
  ஐயா பாடம் அவசியமான நேரத்தில் வந்திருக்கிறது. மிக நன்றி.
  அன்புடன்
  ஸ்ரீதர்////

  அவசியமா? அவசரமா?:-)))))

  ReplyDelete
 13. முருகனடிமையுடன் உங்கள் விளையாட்டு நல்ல comic relief :-))

  ReplyDelete
 14. Dear Sir.
  It will be of great help if you can post us what are the expected happenings of all the antharas.

  Thank you

  ReplyDelete
 15. Dear Sir,

  //இங்கே சற்று நிறுத்திவிட்டுத்தான் அங்கே எழுத வேண்டும்.// I agree. I am following lessons in blog and e-mails. I didnt want to miss anything and thats the reason for my last feedback.

  Thank you.

  ReplyDelete
 16. /////Blogger Ram said...
  Present Sir////

  நன்றி ராம்!

  ReplyDelete
 17. /////Blogger chaks said...
  முருகனடிமையுடன் உங்கள் விளையாட்டு நல்ல comic relief :-))/////

  மெல்லப் பேசுங்கள் அவர் கேட்கக்கூடாது
  சொல்லித்தாருங்கள் அவர் பார்க்கக்கூடாது!

  ReplyDelete
 18. /////Blogger Rathinavel.C said...
  Dear Sir.
  It will be of great help if you can post us what are the expected happenings of all the antharas.
  Thank you/////

  வாசகர்களாகிய நீங்கள் எழுதலாமே?

  ReplyDelete
 19. ////Blogger அமர பாரதி said...
  Dear Sir,
  //இங்கே சற்று நிறுத்திவிட்டுத்தான் அங்கே எழுத வேண்டும்.// I agree. I am following lessons in blog and e-mails. I didnt want to miss anything and thats the reason for my last feedback.
  Thank you./////

  That is why I am sending consolidated lessons once in a month!

  ReplyDelete
 20. Ayya.
  Neengal malai naan madu.....ennai pooi ezhutha sollureengalae.I still request you to write a post for the expexted happenings for all antharam.

  Thank you

  ReplyDelete
 21. வணக்கம்.
  நானும் ஒரு வட்டத்துல உள்ளேன் அய்யா.....
  வாழ்க்கையே ஒரு வட்டம் தானே அய்யா

  ReplyDelete
 22. திரு வாத்தியார் அவர்களுக்கு,

  அடியேனின் ஒரு சின்ன விண்ணப்பம்.

  பதிவில் “திசை” என குறிப்பிட்டு உள்ளீர்கள்.

  அதன் சரியான சொல்லாடல் “தசா”
  நீங்கள் இணைத்திருக்கும் வாசன் பஞ்சாங்கத்தில் கூட “தசா” என்று போடப்பட்டிருப்பதை கவனிக்கவும்.

  திசை என்றால் Direction
  தசா என்றால் Planetary period.

  தேவைபட்டால் ஏன் தசா என சொல்லுகிறார்கள் என கூறுகிறேன்.

  அதிகப்பிரசங்கிதனமாக இருந்தால் மன்னிக்கவும்.

  ReplyDelete
 23. இங்கே பின்னூட்டத்தில் எழுதியவர்கள் எல்லாருக்கும் அனேகமாக ராகு திசைதான் நடக்கிறது போலும். ஏனென்றால் எனக்கும் ராகு திசை தான். எனக்கும் ராகு பணிரண்டில் உள்ளார்.

  கன்னி லக்னம், லக்கினத்தில் சூரியன் ( இருபத்தியாறு வயதிலேயே தலை வழுக்கை) இரண்டில் புதனும் சுக்கிரனும், நான்கில் குரு, சந்திரன் சனி மூவரும், ஆறில் கேது, எழில் மாந்தி பத்தில் செவ்வாய். பணிரண்டில் ராகு மூல நட்சத்திரம்.

  ராகு திசையில் குரு புத்தி கிருஸ்துமஸ் வரை பிறகு சனி புத்தி இராகவன் நைஜிரியா சொல்வதை பார்த்தால் பயமாக இருக்கிறது

  பார்ப்போம்

  ReplyDelete
 24. கவனமாதான் படித்தேன்.ஆனாலும்,
  ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது.


  மன்னியுங்கள்! போக போக தெருஞ்சிக்குறேன் ஐயா.

  ReplyDelete
 25. உள்ளேன் ஐயா
  பாடம் படித்தேன். நன்று.

  ReplyDelete
 26. \\சுக்கிரபுத்தியில், சுக்கிர அந்தரத்தில்தான் திருமணம் நடைபெறும்.
  அதைவைத்து அவர் அந்தரத்தைத் தேடிப்பிடித்துச் சொல்வார்.\\

  எந்த திசையில் எந்த புத்தி எந்த அந்தரம் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ற அட்டவணை கொடுத்தால் என்னை போன்றவர்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

  ReplyDelete
 27. Dear Sir
  This Anthram gives good info. Could you explain about Kenthram also
  Ravikumar Rangasamy
  Bahrain

  ReplyDelete
 28. ////Rathinavel.C said...
  Ayya.
  Neengal malai naan madu.....ennai pooi ezhutha sollureengalae.I still request you to write a post for the expexted happenings for all antharam.
  Thank you/////

  மலையிலிருந்து உருண்டால் மடுவிற்குத்தான் வரவேண்டும்:-))))

  ReplyDelete
 29. ////பாலாஜி.ச.இமலாதித்தன் said...
  வணக்கம்.
  நானும் ஒரு வட்டத்துல உள்ளேன் அய்யா.....
  வாழ்க்கையே ஒரு வட்டம் தானே அய்யா/////

  சிலருக்கு அது முக்கோணம்!:-))))

  ReplyDelete
 30. /////ஸ்வாமி ஓம்கார் said...
  திரு வாத்தியார் அவர்களுக்கு,
  அடியேனின் ஒரு சின்ன விண்ணப்பம்.
  பதிவில் “திசை” என குறிப்பிட்டு உள்ளீர்கள்.
  அதன் சரியான சொல்லாடல் “தசா”
  நீங்கள் இணைத்திருக்கும் வாசன் பஞ்சாங்கத்தில் கூட “தசா” என்று போடப்பட்டிருப்பதை கவனிக்கவும்.
  திசை என்றால் Direction
  தசா என்றால் Planetary period.
  தேவைபட்டால் ஏன் தசா என சொல்லுகிறார்கள் என கூறுகிறேன்.
  அதிகப்பிரசங்கிதனமாக இருந்தால் மன்னிக்கவும்.////

  ஸ்வாமிஜி! உங்கள் வரவு நல்வரவாகுக!
  நன்றி
  எல்லாம் பழக்க தோஷம். புலிப்பாணி பாடல்களில் திசை என்று குறிப்பிடப்பெற்றிருக்கும்.
  அதைப் படித்துப் படித்து அப்படியே மனதில் பதிந்துவிட்டது.
  மாற்றிக் கொள்கிறேன்
  ஆங்கிலத்தில் எழுதும்போது Dasa என்றுதான் எழுதுகிறேன்.
  அதைத் தாங்கள் அன்புகூர்ந்து கவனிக்கவும்!

  ReplyDelete
 31. /////T K Arumugam said...
  இங்கே பின்னூட்டத்தில் எழுதியவர்கள் எல்லாருக்கும் அனேகமாக ராகு திசைதான் நடக்கிறது போலும். ஏனென்றால் எனக்கும் ராகு திசை தான். எனக்கும் ராகு பணிரண்டில் உள்ளார்.
  கன்னி லக்னம், லக்கினத்தில் சூரியன் ( இருபத்தியாறு வயதிலேயே தலை வழுக்கை) இரண்டில் புதனும் சுக்கிரனும், நான்கில் குரு, சந்திரன் சனி மூவரும், ஆறில் கேது, எழில் மாந்தி பத்தில் செவ்வாய். பணிரண்டில் ராகு மூல நட்சத்திரம்.
  ராகு திசையில் குரு புத்தி கிருஸ்துமஸ் வரை பிறகு சனி புத்தி இராகவன் நைஜிரியா சொல்வதை பார்த்தால் பயமாக இருக்கிறது
  பார்ப்போம்/////

  எதற்குக் கவலை?
  யாமிருக்க பயமேன்” என்று கை கொடுப்பவர் பழநியில் இருக்கிறார்.
  அவரை வழிபடுங்கள். எல்லாம் சரியாகிவிடும் ( உங்கள் தலை வ............கையைத்தவிர:-))))

  ReplyDelete
 32. //////Kesavan said...
  கவனமாதான் படித்தேன்.ஆனாலும்,
  ஒண்ணுமே புரியலே ஒலகத்திலே என்னமோ நடக்குது...மர்மமாய் இருக்குது.
  மன்னியுங்கள்! போக போக தெருஞ்சிக்குறேன் ஐயா.////

  நம்பிக்கையோடு படியுங்கள். வராமலா போய்விடும்?

  ReplyDelete
 33. /////தம்பி கிருஷ்ணா said...
  உள்ளேன் ஐயா
  பாடம் படித்தேன். நன்று./////

  நல்லது தம்பி!

  ReplyDelete
 34. //////குறும்பன் said...
  \\சுக்கிரபுத்தியில், சுக்கிர அந்தரத்தில்தான் திருமணம் நடைபெறும்.
  அதைவைத்து அவர் அந்தரத்தைத் தேடிப்பிடித்துச் சொல்வார்.\\
  எந்த திசையில் எந்த புத்தி எந்த அந்தரம் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ற அட்டவணை கொடுத்தால் என்னை போன்றவர்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்./////

  ஸிம்ப்பிள். சுக்கிரன் களத்திரகாரகன். அவனுடைய அந்தரத்தில் திருமணம் நடக்கும் என்பதுபோல,
  சனி கர்மகாரகன், அவனுடைய அந்தரத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு, அவன் வலுவாக இருந்தால் பதவி உயர்வு (ப்ரமோஷன்) கிடைக்கும். குரு குழந்தைக்குக் காரகன் அவனுடைய அந்தரத்தில் குழந்தை பிறக்கும் (எல்லோருக்கும் அல்ல! அந்த பாக்கியமும், நேரங்காலமும் உள்ளவர்களுக்கு)
  சிலருக்கு குரு அந்தரத்தில் கர்ப்பம் தரிக்கும் (இது பெண்களுக்கு மட்டும்:-))))))

  ReplyDelete
 35. //////ravikumar said...
  Dear Sir
  This Anthram gives good info. Could you explain about Kenthram also
  Ravikumar Rangasamy
  Bahrain///////

  முதலிலேயே எழுதியிருக்கிறேனே சாமி. பழைய பாடங்களில் தேடிப்பிடியுங்கள்

  ReplyDelete
 36. ஐயா,

  பாடத்தை விட படம் அருமை..ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என அந்த ஏழை சிறுவன் முகத்தில் பூக்கும் புன்னகையை பாருங்கள்.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 37. antharam nan first time kelvip padaran. but thisa puthi nalla concept.

  ReplyDelete
 38. When I saw the picture of the kid, I felt when our country will be in good dasa.

  ReplyDelete
 39. ////வேலன். said...
  ஐயா,
  பாடத்தை விட படம் அருமை..ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என அந்த ஏழை சிறுவன் முகத்தில் பூக்கும் புன்னகையை பாருங்கள்.
  வாழ்க வளமுடன்,
  வேலன்.////

  பாடங்களைக் குறைத்துக் கொண்டு படங்களை அதிகமாகப் போடட்டுமா வேலன்?

  ReplyDelete
 40. /////PITTHAN said...
  antharam nan first time kelvip padaran. but thisa puthi nalla concept.//////

  ஜோதிடத்துடன் பின்னிப் பிணைந்தது அந்தரம்.கெட்டியாக அதைப் பிடித்துவைத்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 41. /////krish said...
  When I saw the picture of the kid, I felt when our country will be in good dasa.//////

  நல்ல தசாதான் நடந்து கொண்டிருக்கிறது!

  ReplyDelete
 42. /////krish said...
  When I saw the picture of the kid, I felt when our country will be in good dasa.//////

  நல்ல தசாதான் நடந்து கொண்டிருக்கிறது!

  ReplyDelete
 43. திசை, புத்தி, அந்தரம் இவற்றை மிகத் துல்லியமாக கணக்கிட்டு காட்டி விளக்கி இருக்கீங்க, ரொம்ப நன்றி,சார்.

  ReplyDelete
 44. Dear Sir,

  One astrologer said, the Yoni porutham is missing between the Star Chithirai (Bride) and Thiruvathirai (Groom). The reason is the combination Male Tiger & Male Dog will not work out.

  But few said the porutham is there? Sir, need suggestions from you?

  Thanks
  Saravana

  ReplyDelete
 45. தசாபுக்தி பற்றிய விரிவான விளக்கங்களுக்கு

  நன்றி அய்யா.

  ReplyDelete
 46. ////Blogger செல்லி said...
  திசை, புத்தி, அந்தரம் இவற்றை மிகத் துல்லியமாக கணக்கிட்டு காட்டி விளக்கி இருக்கீங்க, ரொம்ப நன்றி,சார்.///

  எல்லாம் உங்களைப் போன்ற மாணவக் கண்மணிகளுக்காகத்தான்!

  ReplyDelete
 47. ////Blogger Saravana said...
  Dear Sir,
  One astrologer said, the Yoni porutham is missing between the Star Chithirai (Bride) and Thiruvathirai (Groom). The reason is the combination Male Tiger & Male Dog will not work out.
  But few said the porutham is there? Sir, need suggestions from you?
  Thanks
  Saravana/////

  எல்லாப் பொருத்தங்களும் உள்ள பெண் கிடைப்பது ரெம்ப கஷ்டம்
  ரஜ்ஜுப் பொருத்தமும், மகேந்திர பொருத்தமும் சேர்ந்து ஆறு பொருத்தங்கள் இருந்தால் போதும்!

  ReplyDelete
 48. ////Blogger thirunarayanan said...
  தசாபுக்தி பற்றிய விரிவான விளக்கங்களுக்கு
  நன்றி அய்யா.////

  நன்றி நாராயணன்!

  ReplyDelete
 49. Dear Sir,

  இவ்வளவு நாட்களாக பாடம் படித்ததில் இன்னும் அந்தரம் பற்றி சார் எழுத வில்லையே என்று பொறுமையாக இருந்தேன், பொறுத்தவர் பூமி ஆழ்வார் கேற்ப பாடம் வந்துவிட்டது மிக்க மகிழ்ச்சி.

  Rgds
  Nainar

  ReplyDelete
 50. ////Blogger arumuga nainar said...
  Dear Sir,
  இவ்வளவு நாட்களாக பாடம் படித்ததில் இன்னும் அந்தரம் பற்றி சார் எழுத வில்லையே என்று பொறுமையாக இருந்தேன், பொறுத்தவர் பூமி ஆழ்வார் கேற்ப பாடம் வந்துவிட்டது மிக்க மகிழ்ச்சி.
  Rgds
  Nainar////

  உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான் நைனா(ர்)

  ReplyDelete
 51. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 52. Sir,

  Nice article,

  Ennakku rahu dasai,sukra buthi nadakkirathu...

  Lesson came in a rite time...

  Thx for your lesson,

  Ungal student,
  Vineeth

  ReplyDelete
 53. திருமணம் 7ம் அதிபதியின் அந்தரத்திலும் நடக்கலாம். எனக்கு திருமணம் ஆகும் போது 7ம் அதிபதி குரு தசையில் சந்திர புத்தி குருவின் அந்தரம் நடந்தது. என் மனைவிக்கு ராகு தசையில் சனி புத்தி சனி அந்தரம். கடக லக்னகாரரான அவருக்கு சனிதான் 7ம் அதிபதி என்று சொல்ல தேவையில்லை. கோச்சார குரு ராசிக்கு 7ம் இடத்தைப் பார்வையிடுவது இதற்கு இன்னும் வலு சேர்க்கும். எங்கள் இருவருக்குமே திருமணம் நடக்கும் போது அப்படி இருந்தது.

  ReplyDelete
 54. Dear Sir,

  Wanted to know why you have not given importance to Dasanathan? you always pointing the Buddhi nathan?

  In indian astro books, I read Dasanathan is most powerfull and native will get good benifits if dasanathan is Yoga Graham to his lagna?

  Need your explanation?

  Thanks
  Saravana

  ReplyDelete
 55. ///vineeth said...
  Sir,
  Nice article,
  Ennakku rahu dasai,sukra buthi nadakkirathu...
  Lesson came in a rite time...
  Thx for your lesson,
  Ungal student,
  Vineeth/////

  சரி, சுப நிகழ்வா? மகிழ்ச்சி! பத்திரிக்கை அனுப்புங்கள்!

  ReplyDelete
 56. //ananth said...
  திருமணம் 7ம் அதிபதியின் அந்தரத்திலும் நடக்கலாம். எனக்கு திருமணம் ஆகும் போது 7ம் அதிபதி குரு தசையில் சந்திர புத்தி குருவின் அந்தரம் நடந்தது. என் மனைவிக்கு ராகு தசையில் சனி புத்தி சனி அந்தரம். கடக லக்னகாரரான அவருக்கு சனிதான் 7ம் அதிபதி என்று சொல்ல தேவையில்லை. கோச்சார குரு ராசிக்கு 7ம் இடத்தைப் பார்வையிடுவது இதற்கு இன்னும் வலு சேர்க்கும். எங்கள் இருவருக்குமே திருமணம் நடக்கும் போது அப்படி இருந்தது.////

  ஏழாம் அதிபதியின் அதிகாரத்தை, 7ஆம் வீட்டைப் பற்றிய பாடத்தில் சொல்லியிருக்கிறேனே ஸ்வாமி! களத்திரகாரகனுக்கு GMமின் அதிகாரம். & ஆம் அதிபதிக்கு AGMமின் அதிகாரம். ஜி.எம் இல்லாத நேரத்தில் அவர் வேலை செய்வார்:-)))))

  ReplyDelete
 57. ////Saravana said...
  Dear Sir,
  Wanted to know why you have not given importance to Dasanathan? you always pointing the Buddhi nathan?/////

  புத்திநாதனைத் துரத்திவிடுவோமா? சரி தசாநாதனையே வைத்துக் கொள்வோம்.
  ராகு தசையில் ராகுவைக் கட்டிக்கொண்டு 18 வருடங்களும், சனி தசையில் சனியைக் கட்டுகொண்டு 19 ஆண்டுகளும், கேது தசையில் கேதுவைக் கட்டிக்கொண்டு 7 ஆண்டுகளும் மகிழ்ச்சியோடு இருப்போம். யாரப்பா அங்கே? தசாநாதன் வந்தால் உள்ளே விடாதே!

  //// In indian astro books, I read Dasanathan is most powerfull and native will get good benifits if dasanathan is Yoga Graham to his lagna?/////

  அந்த இஃப் (if) ஐ எடுத்துக் கடாசி விட்டுவிட்டு, மறுபடியும் சொல்லுங்கள்

  IF, BUT என்று பொடிவைத்துப் பலன் சொல்வது எல்லோருக்கும் பொருந்துமா என்ன?

  ReplyDelete
 58. //////Blogger முருகன் அடிமை said...
  உள்ளேன் ஐயா.
  பா(ப)டங்கள் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது.////

  இத்தோடு விட்டாயே முருகா - நன்றி!:-))))//
  :-))))))

  ReplyDelete
 59. This comment has been removed by the author.

  ReplyDelete
 60. சார், அந்தரத்தை மேலும் பிரிப்பதற்குப் பெயர் "சூட்சுமம்" என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரியா? அப்ப‌டி ஏதேனும் இருக்கிற‌தா?

  M.N. Krushna Cumaar

  ReplyDelete
 61. களத்திரகாரகனுக்கு GMமின் அதிகாரம். & ஆம் அதிபதிக்கு AGMமின் அதிகாரம். ஜி.எம் இல்லாத நேரத்தில் அவர் வேலை செய்வார்:-)))))
  இதுதான் வாத்தியார்

  ReplyDelete
 62. இன்னும் பழைய பாடங்கள் நிறைய இருக்கிறது; எப்படியும் படித்து முடித்து இப்போது போய்க்கொண்டிருக்கும் வகுப்புடன் சேர்ந்துவிடலாம் என்று பார்கிறேன்.

  - அன்புடன்
  லலித்

  ReplyDelete
 63. /////Blogger Krushna Cumaar said...
  சார், அந்தரத்தை மேலும் பிரிப்பதற்குப் பெயர் "சூட்சுமம்" என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சரியா? அப்ப‌டி ஏதேனும் இருக்கிற‌தா?
  M.N. Krushna Cumaar/////

  நீங்கள் சொல்லும்படி பிரிக்கலாம்
  Divisions: mahadasas > bukthi > antardasas > pratyantardasas > sookshma-antardasas > prana-antardasas and deha-antardasas
  அப்படியெல்லாம் நமக்கு வேண்டாம்.
  mahadasas > bukthi > antardasas ஆகியவற்றோடு நிறுத்திக் கொள்வோம்! அதுதான் நமக்கு நல்லது:-))))

  ReplyDelete
 64. ////Blogger krish said...
  களத்திரகாரகனுக்கு GMமின் அதிகாரம். & ஆம் அதிபதிக்கு AGMமின் அதிகாரம். ஜி.எம் இல்லாத நேரத்தில் அவர் வேலை செய்வார்:-)))))
  இதுதான் வாத்தியார்////

  நன்றி க்ரீஷ்!

  ReplyDelete
 65. /////Blogger லலித் said...
  இன்னும் பழைய பாடங்கள் நிறைய இருக்கிறது; எப்படியும் படித்து முடித்து இப்போது போய்க்கொண்டிருக்கும் வகுப்புடன் சேர்ந்துவிடலாம் என்று பார்கிறேன்.
  - அன்புடன்
  லலித்/////

  நடந்தே வந்து சேர்ந்து கொள்ளுங்கள். ஓடிவரவேண்டாம்!

  ReplyDelete
 66. சூர்ய தசை நடக்கிற‌து.கடகலக்னம், கட‌க ராசிக்காரன். ஆவணி மாதம் ஜனனம். எனவே சூர்யன் சிம்ம்த்தில்.2,7க்கு உடைய சூர்யன், சனி மாரகர்கள் என்றால் 60 யதுக்காரனான நான் கொஞச‌ம் ஜாக்கிரதை உண்ர்வோடு இருக்கணுமா, அய்யா?‌

  ReplyDelete
 67. /////Blogger kmr.krishnan said...
  சூர்ய தசை நடக்கிற‌து.கடகலக்னம், கட‌க ராசிக்காரன். ஆவணி மாதம் ஜனனம். எனவே சூர்யன் சிம்ம்த்தில்.2,7க்கு உடைய சூர்யன், சனி மாரகர்கள் என்றால் 60 யதுக்காரனான நான் கொஞச‌ம் ஜாக்கிரதை உண்ர்வோடு இருக்கணுமா, அய்யா?‌/////

  நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு ஒரு குறுக்கு வழி உள்ளது. அதை நான் பதிவில்/மின்னஞ்சல் பாடத்தில் எழுத முடியாது.
  உங்களுக்கு மட்டும் பார்த்துப் பதில் எழுதுகிறேன். உங்களுடைய பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் ஆகியவற்றை எனக்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள்.
  பதில் மின்னஞ்சல் மூலமாக ஒற்றைவரியில் வரும்!

  ReplyDelete
 68. அய்யா,
  ஒவ்வொரு லக்னத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்ய கூடிய கிரகம் உள்ளது . நன்மை செய்ய கூடிய கிரக அஷ்டவர்க்க பரல் அதிகம் எனில் அந்த புத்தி & அந்தரம் நன்மை செய்யும். தீமை செய்ய கூடிய கிரக அஷ்டவர்க்க பரல் அதிகம் எனில் அந்த புத்தி & அந்தரம் நன்மை செய்யுமா ? அல்லது தீமை செய்யுமா ? வர்கோர்தமம் அடைந்த கிரக அஷ்டவர்க்க பரல் குறைவு எனில் அந்த புத்தி & அந்தரம் நன்மை செய்யுமா ? அல்லது தீமை செய்யுமா ?

  ReplyDelete
 69. Daer sir,

  Astrologers are palying with CHEVVAI DOSAM and stopping marriages by saying CHEVVAI from Lagna, Chandra Rasi, Sukira Rasi and all.

  It seems it is very difficult to palce a CHEVVAI from the above 3 places :-))))))

  We request you to give a short notes to follow the same? Could you sir!!!

  Thanks
  Saravaba

  ReplyDelete
 70. Not sure why there are no much entries today in "Vaguppu Arai".

  It seems Vathiyaar also busy.

  எமாட்ரிவிடாதீந்க vathiyare please!!!

  Obidient Student
  Saravana

  ReplyDelete
 71. ////Blogger k subraa said...
  அய்யா,
  ஒவ்வொரு லக்னத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்ய கூடிய கிரகம் உள்ளது . நன்மை செய்ய கூடிய கிரக அஷ்டவர்க்க பரல் அதிகம் எனில் அந்த புத்தி & அந்தரம் நன்மை செய்யும். தீமை செய்ய கூடிய கிரக அஷ்டவர்க்க பரல் அதிகம் எனில் அந்த புத்தி & அந்தரம் நன்மை செய்யுமா ? அல்லது தீமை செய்யுமா ? /////

  தீமை செய்யஊடிய கிரகம் பரல் அதிகமாக உள்ள காரணத்திற்காக எப்படி நன்மை செய்யும்?
  அதில் சனீஷ்வரனுக்கு மட்டும் விதிவிலக்கு. அவர் ஆயுள் மற்றும் கர்ம காரகன்.
  அவர் அதிகப் பரல்களுடன் இருந்தால், அந்த சம்பந்தப்பட்ட காரகங்களுக்கு உயர்வு அளிப்பார்.

  ////////வர்கோர்தமம் அடைந்த கிரக அஷ்டவர்க்க பரல் குறைவு எனில் அந்த புத்தி & அந்தரம் நன்மை செய்யுமா ? அல்லது தீமை செய்யுமா ?///////

  அது அந்த கிரகம் சுபக்கிரகமா அல்லது தீய கிரகமா என்பதைப் பொறுத்தது.

  ReplyDelete
 72. ////Blogger Saravana said...
  Daer sir,
  Astrologers are palying with CHEVVAI DOSAM and stopping marriages by saying CHEVVAI from Lagna, Chandra Rasi, Sukira Rasi and all.
  It seems it is very difficult to palce a CHEVVAI from the above 3 places :-))))))
  We request you to give a short notes to follow the same? Could you sir!!!
  Thanks
  Saravana/////

  நீங்கள் ஏன் ஜோதிடம்போய் வந்துவிட்டு, அவர்களைத் திட்டுகிறீர்கள்?
  இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, கிடைக்கிற பெண்ணைத் திருமணம்
  செய்து கொள்ளுங்கள். பெண் கிடைப்பதே கஷ்டமாக இருக்கிற காலத்தில் இந்த செவ்வாய்க் கருமத்தை எல்லாம் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?:-))))

  பெண் வீட்டில் உங்கள் ஜாதகத்தைக் கொடுத்துவிட்டு, நீங்கள் ஜாலியா இருங்கள்.
  அவர்களுக்கு அக்கறை இருந்தால் அவர்கள் பார்த்து, சம்மதம் தெரிவிப்பார்கள்!

  ReplyDelete
 73. ////Blogger Saravana said...
  Not sure why there are no much entries today in "Vaguppu Arai".
  It seems Vathiyaar also busy.
  எமாற்றி விடாதீங்க vathiyare please!!!
  Obidient Student
  Saravana////

  ஒரு நாளைக்கு குறைந்தது 5 கேள்விகளாவது கேட்கிறீர்கள். பிறகு சார், ஏமாற்றாதீர்கள் என்று பல்லவி வேறு பாடுகிறீர்கள். உங்களுக்கு இன்றுமுதல் கோட்டா ஒரு கேள்வி மட்டும்தான்!

  ReplyDelete
 74. வாத்தியார் அவர்களக்கு வணக்கம் உங்கள் பாடம் & விளக்கங்கள் உபயோகமாக உள்ளது .

  1)எலும்பு & எலும்பு மஜ்ஜை உரிய கிரகம் எது

  2)நரம்பு (நரம்புகுள்) வரும் பிரச்சனைகள் உரிய கிரகம் எது

  3)வாதநோய்க்கு பிரச்சனைகள் உரிய கிரகம் எது


  அன்புடன் நன்றி

  நடராஜ்

  ReplyDelete
 75. ஐயா

  பாடங்களை படித்தேன்.. எனது தசாபுத்தியை தெரிந்து கொண்டு புத்தி கெட்டுப் போயுள்ளேன்..!

  நன்றிகள்..!

  ReplyDelete
 76. ///Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  ஐயா
  பாடங்களை படித்தேன்.. எனது தசாபுத்தியை தெரிந்து கொண்டு புத்தி கெட்டுப் போயுள்ளேன்..!
  நன்றிகள்..!////

  உங்களுக்குத்தான் பழநி அப்பனின் அருள் இருக்கிறதே! புத்தி எப்படிக் கெடும்?

  ReplyDelete
 77. அப்பப்பா, இந்த பதிவில் ஏகப்பட்ட கமெண்ட்ஸ்... எல்லோரும் சேர்ந்து என்னை குழப்பி விட்டனர். எனது பங்கிற்கு, எனக்கு குரு தசை முடிந்து சனி தசை, ரகு புக்தி வரை வந்துஆகிவிடது. (19 இல் ரகு 2வருடம் 4 மாதம் & குரு புக்தி 2 வருடம் 4 மாதம் பாக்ஹி உள்ளது)

  எனக்கான பதிவு போல உள்ளது - தொடர்ந்து படிகின்றேன், மிக்க நன்றி ஆசிரியர் அவர்களுக்கு.
  நன்றிகள் அய்யா

  ReplyDelete
 78. ////Sabarinathan TA said...
  அப்பப்பா, இந்த பதிவில் ஏகப்பட்ட கமெண்ட்ஸ்... எல்லோரும் சேர்ந்து என்னை குழப்பி விட்டனர். எனது பங்கிற்கு, எனக்கு குரு தசை முடிந்து சனி தசை, ராகு புக்தி வரை வந்துஆகிவிடது. (19 இல் ராகு 2வருடம் 4 மாதம் & குரு புக்தி 2 வருடம் 4 மாதம் பாக்கி உள்ளது)
  எனக்கான பதிவு போல உள்ளது - தொடர்ந்து படிகின்றேன், மிக்க நன்றி ஆசிரியர் அவர்களுக்கு.
  நன்றிகள் அய்யா/////

  ஆகா, படியுங்கள். நன்கு புரியும்வரை படியுங்கள்!

  ReplyDelete
 79. Sir,
  Could you please explain how to find out the dasa, puthi and anthram in the given tabular column. Its confusing.

  Thanks.
  Krish.

  ReplyDelete
 80. Dear sir,

  The basic details are very informative and understandable. Thanks for sharing information with us all. As you mentioned when we can get this as a book. Awaiting for your reply. Thanks in advance.

  T. Gouthaman.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com