மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.8.09

மாயமான் வேட்டை!

மாயமான் வேட்டை!

“If money help a man to do good to others, it is of some value; but if not, it is simply a mass of evil, and the sooner it is got rid of, the better.” ---- Swami Vivekananda

பணம் மற்றவர்களுக்கு உதவுவதற்காக எனும்போது அதற்கு மதிப்புண்டு.
மகிச்சியுண்டு. தனக்கு மட்டுமே பணம் எனும்போது, தீமைகளின் கூட்டணியோடு
அது அவனுக்குக் கிடைக்கும் நல்லவற்றை எல்லாம் அழித்துவிடும்.
அழிவில் ஏது மகிழ்ச்சி?
------------------------------------------------------------------------
மாயமான் வேட்டை.
பணம் என்பது மாயமான். பணத்தைத் தேடி அலைந்தவன் எவனுமே அதைப்
பிடித்ததாக வரலாறு இல்லை. அதோடு பல மகிழ்ச்சியான தருணங்களைத்
தொடர்ந்து அவன் பறிகொடுக்க நேரிடும்.

மாயமானைத் தேடிப்போன ஸ்ரீராமனின் கதை உங்களுக்குத் தெரியும். தன்
அன்பு மனைவி சீதையை அவன் பறிகொடுத்தான். பல போராட்டாங்களுக்குப்
பிறகு அவளை மீட்டான் என்பது தனிக்கதை. இங்கே அவன் பறிகொடுத்ததை
மட்டும் கணக்கில் கொள்ளுங்கள்.

பணம் வேண்டாமா?
வேண்டும்!
எந்த அளவு?
அந்த அளவுதான் இங்கே மாயமான்!
பணத்திற்கு ஏது அளவு?
அதனால்தான் அது மாயமான் எனப்படுகின்றது!

இன்றையத் தேதியில் ஒரு தனி மனிதனுக்கு 100 கோடி என்பது போதுமானதா
இல்லையா? அந்த நூறு கோடி அல்லது அதற்கு அதிகமான பணம் உள்ளவர்கள்
நம் நாட்டிலேயே ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள். 100லட்சம் கோடிக்கும்
மேல் சொத்துள்ள உள்ள செல்வந்தர்களும் பலர் இருக்கிறார்கள். என்னால்
பட்டியல் இடமுடியும். அவர்களில் போதும் என்று சொல்பவர்கள் யாராவது
இருக்கிறார்களா - சொல்லுங்கள்?

அவர்கள் அததனை பேரும் இன்னும் பணத் தேடலில் உள்ளார்கள்.
மாயமானைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் Top பணக்காரகள் என்றில்லை, உலகின் Top பணக்காரர்களையும்
எடுத்துக் கொள்ளூங்கள் அவர்களில் யாரும் போதும் என்று சொன்னபாடில்லை.

குப்பனும் சுப்பனும் ஒன்று போட்டு பக்கத்தில் 3 சைபர்கள் போட்டால் என்ன தொகை
வருமோ அதற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். நான் சொல்லும் பணக்காரர்கள்
ஒன்று போட்டு பக்கத்தில் 7 சைபர்கள் அல்லது பத்து சைபர்கள் போட்டால் என்ன
தொகை வருமோ அதற்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

அலைச்சல் ஒன்றுதான். சைபர்கள் மட்டும் வேறுபடும்.
தேடுபவர்களுக்கெல்லாம்
பணம் கிடைக்குமா?
கிடைத்தால், இன்று நீங்களும் நானும் மட்டுமல்ல, இந்தியாவின் 110 கோடி
மக்களும் கோடீஸ்வரர்களாக அல்லவா இருக்க வேண்டும்?

தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்கிறார்களே,
இறைவனிடம் கேட்டால் கூட, வருந்திப் பிரார்த்தனை செய்தால்கூடக் கிடைக்காதா?

இறைவன் உங்கள் தேவைகளுக்கு உதவுவார். ஆசைகளுக்கு, உதவ மாட்டார்!

”நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்றார் கவியரசர்
கண்ணதாசன்.

நீ நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், அப்புறம் இறைவனுக்கு இங்கே என்ன
வேலை?
உன ஜாதகத்திற்கு இங்கே என்ன வேலை?
நீ வாங்கி வந்த வரம் என்ன ஆவது?

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும்.
உனக்குப் பணம் வரவேண்டும் என்றால் வரும். இல்லையென்றால் இல்லை.
உன் கையில் பணம் தங்க வேண்டுமென்றால் தங்கும்.
இல்லையென்றால் இல்லை!
உன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும் பணம் போய்விடும்!
வேலியிட்டுத் தடுத்தாலும் அது நிற்காது. கையில் AK47 உடன் காவலாளியை
போட்டுப் பாதுகாத்தாலும் அது நிற்காது. காவலாளியை ஒரே மிதியாக மிதித்துவிட்டு
அது போய்விடும்.

ஏன் அப்படி?

அதைச் சொல்லத்தான் இன்றைய பாடம்!

சரி, உங்களுக்கும் கோடீஸ்வரனுக்கும் என்ன வித்தியாசம்?

சரக்கடிக்கப் பையில் இருநூறு ரூபாயை வைத்துக் கொண்டு, பாருக்கு நீங்கள்
போக வேண்டும். அவன் வீட்டிலேயே பார் (Bar) வைத்திருப்பான்.
அவன் 40 லட்ச ருபாய் மதிப்புள்ள பென்ஸ் காரில் போவான். நீங்கள் 50 லட்ச
ரூபாய் மதிப்புள்ள வோல்வோ பஸ்சில் போவீர்கள்.

அவன் இரண்டாயிரம் செலவில் ஸ்டார் ஓட்டலில் இரவு டின்னரை வெட்டுவான்.
நீங்கள் ரோடுசைடு கையேந்தி பவனில் 50 ருபாய்க்கு வயிறு முட்டச்
சாப்பிடுவீர்கள்.

தொண்டையைக் கடந்துவிட்டால் எல்லா உணவும் ஒன்றுதான்.
அதை நினைவில் வையுங்கள்!

ஏஸி இல்லாமல் அவனுக்குத் தூக்கம் வராது. பாயின்றி, வெறும் தரையில் கூட
உங்களால் தூங்க முடியும். உங்களுக்குச் சேவை செய்ய அன்பான மனைவி
இருப்பாள். அவனுடைய மனைவியை மாதர் சங்கம், அரிமா சங்கம், லோனவானா
கிளப் போன்ற அமைப்புக்களில்தான் தேட வேண்டும்.

ஒன்றிருந்தால் ஒன்று இருக்காது.
அதுதான் வாழ்க்கை!
அதுதான் வாங்கி வந்த வரம்!

எல்லோருக்கும் 337 தான். அதை நினைவில் வையுங்கள்!
-------------------------------------------------------------------
பணம் கிடைக்குமா அல்லது கிடைக்காதா?
கையில் தங்குமா அல்லது தங்காதா?

மாயமான் வேண்டாம்.
மாங்கனி போதும்.
அதாவது கிடைக்குமா? அல்லது கிடைக்காதா?

வாழ்க்கையில் நல்ல தாய் கிடைக்கவில்லை.
நல்ல மனைவி கிடைக்கவில்லை.
நல்ல வேலையும் கிடைக்கவில்லை.
அது ஏன்?
அதை எப்படித் தெரிந்து கொள்வது?

ஜாதகத்தில் மாந்தியைப் பார்த்தால் பல விஷயங்கள் புலப்படும்.

”சரி, மாந்தியைப் பற்றி எழுதுங்கள்.”

எழுதுகிறேன். அதைச் சற்று விரிவாக எழுத வேண்டும். நாளை அல்லது
நாளை மறுநாள் அந்தப் பாடம் வெளிவரும். பொறுத்திருந்து படியுங்கள்.

பதிவின் நீளம் கருதி, உங்களின் பொறுமை கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்!
வாழ்க வளமுடன்!

26 comments:

 1. Dear Sir,

  Surely will wait for the lesson!!!

  -Shankar

  ReplyDelete
 2. எந்த கிரகத்தை பற்றி சொல்லவருகின்றீர்கள் என யோசித்துக்கொண்டுஇருந்தேன். கடைசியில் மாந்தி பற்றியா...வெரிகுட் வெரிகுட்...மாந்தியைப்பற்றி அறிந்தகொள்ள காத்திருக்கின்றோம்.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 3. நல்ல ஒரு கருத்து ஜயா. இது நம்ம்ட சம்பள விசயத்திலும் பொருந்தும் , சம்பளம் கூடிக்கிட்டே போகும் ஆனால் நமது மனம் இன்னும் கூடவில்லையே கூடவில்லையே என்டு அங்கலாய்க்கும். சரி மாந்தி பற்றி படிக்க ஆவலோடு இருக்கின்றோம் ஆசானே . நன்றி.

  ReplyDelete
 4. மாந்தியை பற்றி யாரும் அதிகம் சொல்லியதாகத் தெரியவில்லை.
  நீங்களாவது சொல்லுங்கள்.


  அறிய ஆவலாய் உள்ளேன்.


  நன்றி அய்யா.

  ReplyDelete
 5. வணக்கம்
  மாந்தியைப் பற்றி அறிய ஆவலாயுள்ளேன், சார்.

  ReplyDelete
 6. /////Blogger hotcat said...
  Dear Sir,
  Surely will wait for the lesson!!!
  -Shankar/////

  நன்றி சங்கர்!

  ReplyDelete
 7. ////Blogger வேலன். said...
  எந்த கிரகத்தை பற்றி சொல்லவருகின்றீர்கள் என யோசித்துக்கொண்டுஇருந்தேன். கடைசியில் மாந்தி பற்றியா...வெரிகுட் வெரிகுட்...மாந்தியைப்பற்றி அறிந்தகொள்ள காத்திருக்கின்றோம்.
  வாழ்க வளமுடன்,
  வேலன்.////

  நாளை காலைவரை காத்திருங்கள் போதும்!

  ReplyDelete
 8. vanakkam aiyya

  mandhiyai patri ariya aavalaga irukirathu....

  ReplyDelete
 9. /////Blogger Emmanuel Arul Gobinath said...
  நல்ல ஒரு கருத்து ஜயா. இது நம்ம்ட சம்பள விசயத்திலும் பொருந்தும் , சம்பளம் கூடிக்கிட்டே போகும் ஆனால் நமது மனம் இன்னும் கூடவில்லையே கூடவில்லையே என்டு அங்கலாய்க்கும். சரி மாந்தி பற்றி படிக்க ஆவலோடு இருக்கின்றோம் ஆசானே . நன்றி./////

  நன்றி இமானுவேல்! உங்கள் ஆவல் நாளை பூர்த்தியாகும்!

  ReplyDelete
 10. ////Blogger thirunarayanan said...
  மாந்தியை பற்றி யாரும் அதிகம் சொல்லியதாகத் தெரியவில்லை.
  நீங்களாவது சொல்லுங்கள்.
  அறிய ஆவலாய் உள்ளேன்.
  நன்றி அய்யா.////

  தமிழக ஜோதிடர்களும், ஜோதிட நூல்களும் மாந்தியை ஏனோ கண்டுகொள்ளவில்லை!

  ReplyDelete
 11. ////Blogger செல்லி said...
  வணக்கம்
  மாந்தியைப் பற்றி அறிய ஆவலாயுள்ளேன், சார்.////

  நாளை வெளியாகும் சகோதரி!

  ReplyDelete
 12. ////Blogger sundar said...
  vanakkam aiyya
  mandhiyai patri ariya aavalaga irukirathu....////

  உங்கள் ஆவல் நாளை பூர்த்தியாகிவிடும் சுந்தர்!

  ReplyDelete
 13. மாந்தியை யாரும் கண்டு கொள்வதில்லை. ஜோதிடர்கள் பலரும் மாந்தியைப் பற்றி பெரிதும் கவலைப்படாமலேயே பலன் சொல்கிறார்கள். அதைப் ப்ற்றி அலசுவதில் ஆர்வமாக இருக்கிறேன். நன்றி

  ReplyDelete
 14. என் வேண்டுகோளை ஏற்று மாந்தி பற்றி எழுதத் துவங்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றி.

  ReplyDelete
 15. எனக்கு மாந்தி 11இல் இருப்பதால் ஆவலுடன் எதிர்பார்கிறேன் அய்யா:-)

  அப்படியே மாந்தியும் குளிகனும் ஒன்றா அல்லது வேறு வேறு உபக்ரகங்களா என்பதையும் தெளிவுபடுத்துங்கள்

  ReplyDelete
 16. In my horoscope maanthi occupied at 6th place(Libra). hence i am waiting eagerly
  by
  sridhar

  ReplyDelete
 17. பணம் மற்றும் அல்ல, எல்லா வித சொத்துகளும் சுகங்களும் இதேதான்! ஆயிரம் சதுர அடி வீட்டில் இருப்பவன் இரண்டாயிரம் சதுர அடி வீடிற்கு ஆசைபடுவான். ஆசை அடங்காது, அதற்காக மேலும் மேலும் உழைப்பான். உழைத்து உழைத்து வயதான பிறகு சந்தோசம் எங்கே என்று தேடுவான். சந்தோசம் எங்கும் இல்லை, இங்கு தான் இருக்கிறது. இப்போதுதான் இருக்கிறது. நாலு பேர் இருக்கும் குடும்பத்திற்கு ஆயிரம் சதுர அடி வீடு போதும். ஒரு சின்ன மாருதி கார் போதும். வாரம் ஒரு முறை சரவணா பவனில் சாப்பிட்டால் போதும். ஆகா மொத்தம் போதும் என்பதில் தான் சந்தோசம் இருக்கிறது. அருமையாக சொன்னிர்கள் அய்யா. இந்த சின்ன விஷயம் புரிவதற்கு மனிதனுக்கு பல வருஷம் ஆகிவிடுகிறது!

  ReplyDelete
 18. ////Blogger Krushna Cumaar said...
  மாந்தியை யாரும் கண்டு கொள்வதில்லை. ஜோதிடர்கள் பலரும் மாந்தியைப் பற்றி பெரிதும் கவலைப்படாமலேயே பலன் சொல்கிறார்கள். அதைப் பற்றி அலசுவதில் ஆர்வமாக இருக்கிறேன். நன்றி////

  உங்கள் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 19. //////Blogger நேசன்..., said...
  என் வேண்டுகோளை ஏற்று மாந்தி பற்றி எழுதத் துவங்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றி./////

  மாணவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதுதானே ஆசிரியரின் முதல் பணி!

  ReplyDelete
 20. /////Blogger chaks said...
  எனக்கு மாந்தி 11இல் இருப்பதால் ஆவலுடன் எதிர்பார்கிறேன் அய்யா:-)
  அப்படியே மாந்தியும் குளிகனும் ஒன்றா அல்லது வேறு வேறு உபகரகங்களா என்பதையும் தெளிவுபடுத்துங்கள்/////

  ஆகா, எழுதுகிறேன். பொறுத்திருந்து படியுங்கள்!

  ReplyDelete
 21. /////////Blogger sridhar said...
  In my horoscope maanthi occupied at 6th place(Libra). hence i am waiting eagerly
  by
  sridhar//////

  நன்றி ஸ்ரீதர்!

  ReplyDelete
 22. Blogger Dinesh babu said...
  பணம் மற்றும் அல்ல, எல்லா வித சொத்துகளும் சுகங்களும் இதேதான்! ஆயிரம் சதுர அடி வீட்டில் இருப்பவன் இரண்டாயிரம் சதுர அடி வீடிற்கு ஆசைபடுவான். ஆசை அடங்காது, அதற்காக மேலும் மேலும் உழைப்பான். உழைத்து உழைத்து வயதான பிறகு சந்தோசம் எங்கே என்று தேடுவான். சந்தோசம் எங்கும் இல்லை, இங்கு தான் இருக்கிறது. இப்போதுதான் இருக்கிறது. நாலு பேர் இருக்கும் குடும்பத்திற்கு ஆயிரம் சதுர அடி வீடு போதும். ஒரு சின்ன மாருதி கார் போதும். வாரம் ஒரு முறை சரவணா பவனில் சாப்பிட்டால் போதும். ஆகா மொத்தம் போதும் என்பதில் தான் சந்தோசம் இருக்கிறது. அருமையாக சொன்னிர்கள் அய்யா. இந்த சின்ன விஷயம் புரிவதற்கு மனிதனுக்கு பல வருஷம் ஆகிவிடுகிறது!////////

  சிலருக்குக் கடைசிவரை புரியாமல் போய்விடுவதும் உண்டு!:-))))

  ReplyDelete
 23. மாந்தி, குளிகன் எல்லாம் தெனபாண்டிச்சீமை வழக்கம் அல்லவா?மலையாள‌
  வழக்கமும் கூட!!‌

  KMR.KRISHNAN
  http://parppu.blogspot.com
  -----------------------------------
  I have made this announcement in my blog which has a counter rating of 250 per day:

  Subbaiah Vaathiyaar!!
  தமிழ் அன்பர்களே!!ஜோதிடம் படிக்க சுப்பையா வாத்தியாரின் ப்ளாக் படிக்கலாம்
  GO TO :classroom2007.blogspot.com

  ReplyDelete
 24. ////Blogger kmr.krishnan said...
  மாந்தி, குளிகன் எல்லாம் தெனபாண்டிச்சீமை வழக்கம் அல்லவா?மலையாள‌
  வழக்கமும் கூட!!‌
  KMR.KRISHNAN
  http://parppu.blogspot.com
  -----------------------------------
  I have made this announcement in my blog which has a counter rating of 250 per day:
  Subbaiah Vaathiyaar!!
  தமிழ் அன்பர்களே!!ஜோதிடம் படிக்க சுப்பையா வாத்தியாரின் ப்ளாக் படிக்கலாம்
  GO TO :classroom2007.blogspot.com////

  உங்கள் பதிவில் பரிந்துரை செய்ததற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 25. அடுத்து உப வில்லன் மாந்தியைப் பற்றியை பாடம். பொறுத்திருந்து படிக்கிறேன். வேறு சில அலுவல்களால் வகுப்பறை பக்கம் சில நாட்கள் வர முடியாமல் போய் விட்டது.

  ReplyDelete
 26. ///Blogger ananth said...
  அடுத்து உப வில்லன் மாந்தியைப் பற்றியை பாடம். பொறுத்திருந்து படிக்கிறேன். வேறு சில அலுவல்களால் வகுப்பறை பக்கம் சில நாட்கள் வர முடியாமல் போய் விட்டது.////

  அது உண்மைதான். எனக்கும் சில சமயம் அப்படி நேர்வதுண்டு!
  Take your own time in reading the postings!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com