மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.4.09

இருட்டான இடங்கள் - நிறைவுப்பகுதி


இருட்டான இடங்கள் - நிறைவுப்பகுதி

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்களை, அதைப் படித்து
விட்டு வந்து இதைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முன் பதிவிற்கான சுட்டி (URL link) இங்கே உள்ளது.

மூன்றாம் வீட்டில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்.

1.
மூன்றில் சூரியன் இருந்தால்.

இங்கே வந்தமரும் சூரியனால் ஜாதகத்திற்கு அதீத வலிமை கிடைக்கும்.
Sun's placement in the third is a strong point to any horoscope!
If the Sun is in the third, the native will be courageous and authoritative
ஜாதகன் அதீத துணிச்சல் மிக்கவன்.
ஜாதகன் சமயோசித புத்தியுள்ளவன்
எந்தக் கஷ்டத்தையும் சமாளிக்கும் ஆற்றல் மிக்கவன்.
எதிலும் வெற்றி பெறக்கூடியவன்.

இங்கே வந்தமரும் சூரியனின் மேல் சனி அல்லது ராகு அல்லது
கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பட்டால் அது ஜாதகனின்
உடன்பிறப்புக்களுக்கு நல்லதல்ல!
======================================================
2.
மூன்றில் சந்திரன் இருந்தால்.

இந்த இடம் பத்தாம் வீட்டிற்கு, அங்கிருந்து ஆறாம் வீடு. ஆகையால்
இங்கே அமரும் சந்திரனால், ஜாதகனின் வேலைகளுக்கு உபத்திரவம்.
மனமாற்றம் உடையவன். ஒரே வேலையில் ஒழுங்காக இருக்கமாட்டான்.
Jumping from one job to another job. அடிக்கடி வேலையை மாற்றுவான்
அல்லது ஊரை மாற்றுவான். சுறுசுறுப்பான மனதை உடையவன்.
துறுதுறுவென்று இருப்பான்.

ஜாதகனின் மனைவி மிகவும் அழகாக இருப்பாள். இந்த இடம் ஏழாம்
இடத்தில் இருந்து ஒன்பதாம் வீடு. அதை மனதில் கொள்க!

ஜாதகனுக்கு எல்லா விஷயங்களிலும் அறிவு இருக்கும்.

If the Moon is in the third, the younger siblings of the native
will be happy and prosperous

இங்கே வந்தமரும் சந்திரனின் மேல் சனி அல்லது ராகு அல்லது
கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை பட்டால் அது ஜாதகனுக்கு
நல்லதல்ல! மன அமைதி என்பது இல்லாமல் போய்விடும்.

அதேபோல இங்கே வந்தமரும் சந்திரன், தேய்பிறைச் சந்திரனாகவோ
அல்லது தனது சுயவர்க்கத்தில் பரல்கள் குறைந்த சந்திரனாகவோ
இருந்தாலும் நல்லதல்ல! கொடூர சிந்தனைகள் அவ்வப்போது வந்து
எட்டிப் பார்க்கும். பல பிரச்சினைகளைக் கொடுக்கும்!
====================================================
3.
மூன்றில் செவ்வாய் இருந்தால்.

காரகன் பாவ நாசம் என்பார்கள். செவ்வாய் உடன்பிறப்புக்களுக்குக்
காரகன். அவன் இங்கே வந்து அமர்ந்தால் அது ஜாதகனின் உடன்
பிறப்புக்களுக்கு நல்லதல்ல!
This position of Mars is bad for brothers and sisters of the native!
If Mars is exalted, it is bad for younger brothers.
If afflicted by Saturn the native may suffer with ear trouble

பொதுவாக ஜாதகன் துணிச்சல் மிக்கவனாகவும், நல்ல திறமைகள்
மிக்கவனாகவும் இருப்பான். சிலருக்குக் குடும்பக் கவலைகள்
சூழ்ந்திருக்கும். குடும்பத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை
இருக்கும்.

சிலருக்குப் பயணங்களில் விபத்துக்கள் ஏற்படலாம்.
(இது பொதுப்பலன் சாமிகளா)

இந்த அமைப்பின் மேல் தீய கிரகங்களின் பார்வை விழுந்தால்,
ஜாதகனுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்து
போகும் அல்லது உக்கிரமான அல்லது தீவிரமான மனப்பான்மை
மிகுந்திருக்கும்.

மூன்றாம் வீடு செவ்வாயின் சொந்த வீடாக இருந்து அதாவது
மேஷம் அல்லது விருச்சிகம் மூன்றாம் வீடாக இருந்து, அங்கே
செவ்வாய் ஆட்சி பலனுடன் இருந்தால் மேற் சொன்னவைகள்
எதுவும் இருக்காது. ஜாதகன் மகிச்சியுடன், பிரச்சினைகள்
எதுவுமின்றி இருப்பான். மகரத்திற்கும் இதே பலன். ஏனென்றால்
அங்கே செவ்வாய் உச்ச பலனுடன் இருப்பார்
=====================================================
4.
மூன்றில் புதன் இருந்தால்.

ஜாதகன் நல்ல செயல்கள் பலவற்றைச் செய்து, மற்றவர்களுக்கு
மகிழ்ச்சியைக் கொடுப்பவனாக இருப்பான். ஆனால் அவன்
சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.

ஜாதகன் படு கெட்டிக்காரனாக இருப்பான்.
படிப்பிலும் வாசிப்பிலும் அதிக ஆர்வமுள்ளவனாக இருப்பான்.
எடுத்த வேலையைச் சிரத்தையோடு முடிப்பான். அதில் என்ன
இடர் வந்தாலும் பாதியில் விடாமல் செய்து முடிப்பான். அதற்கு
உரிய ஆற்றலும் துணிவும் மேலோங்கி இருக்கும்.

எதையும் புத்தியால் சமாளிக்கும் ஆற்றல் பெற்றிருப்பான்.

இந்த அமைப்பு உள்ளவர்கள் தொழில் அல்லது வியாபாரத்தில்
ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள் என்பது பொதுப்பலன்.
சிலர் பொருள் வணிகத்தில் அல்லது பங்குச் சந்தை வணிகத்தில்
ஈடுபட்டு அதீத செல்வத்தைச் சேர்ப்பார்கள். இந்த இடம் 11ஆம்
இடத்திற்கு ஐந்தாம் இடம் அதை மனதில் கொள்க!

இந்த அமைப்பினருக்குச் சராசரியைவிட அதிகமான உடன்பிறப்புக்கள்
இருக்கும். உடன்பிறப்புக்களும், நண்பர்களும் ஜாதகனின் மேல் உயிரை
வைத்திருப்பார்கள். அதாவது அந்த அளவிற்கு அவனை விரும்புவார்கள்.

இந்த அமைப்பில் குறையே இல்லையா? உண்டு!
இந்த அமைப்பின் மேல் சனி அல்லது ராகு அல்லது கேதுவின் பார்வை
பட்டால், ஜாதகனுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம்
உண்டு.
========================================================
5
மூன்றில் குரு இருந்தால்:
இது ஒரு நன்மைதரும் அமைப்பு. ஜாதகன் 'நடப்பது எல்லாம் நன்மைக்கே'
என்று நினைக்கும் பெருநோக்கோடு இருப்பான்.
நல்ல உடன்பிறப்புக்கள் கிடைப்பார்கள்.

Jupiter: The native will be victorious and endowed with high mental strength

இங்கே குரு பலவீனமாக இருந்தால், அதாவது தீய பார்வைகளுடன்
அல்லது சுயவர்க்கத்தில் குறைவான பரல்களுடன் இருந்தாலும் அல்லது
குரு வந்தமரும் வீடு, அவருக்குப் பகை அல்லது நீச வீடாக இருந்தாலும்
நன்மைகள் இருக்காது. ஜாதகனின் உடன்பிறப்புக்கள் நன்றிகெட்டவர்களாக
இருப்பார்கள். குறைவான நண்பர்களே இருப்பார்கள். நல்ல வாய்ப்புக்கள்
கை நழுவிப்போகும்.
=========================================================
6.
மூன்றில் சுக்கிரன் இருந்தால்:

ஜாதகனின் மனப்பாங்கு நல்ல விதமாக இருக்கும். ஆனால் உடல்
அரோக்கியம் மட்டும் சுமாராக இருக்கும். ஜாதகன் எப்போதும்
உற்சாகம் குன்றி இருப்பான்.

இசை, நடனம், நுண்கலைகள் போன்றவற்றில் ஜாதகன் ஆர்வமுடையவனாக
அல்லது ஈடுபாடு உடையவனாக இருப்பான்.

கொடுக்கல் வாங்கல் போன்ற பணவிவகாரங்கள் சுமூகமாக இருக்காது.
சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும்.

Venus Is not good in this place.
The native could get annoyed very easily.

இந்த இடத்துச் சுக்கிரன் பாதிக்கப்பெற்றிருந்தால், ஜாதகன் கருமியாக
இருப்பான். ஏழ்மை வாட்டும். அதிகமாக உணர்ச்சி வசப்படுவான்.
தொட்டாற்சிணுங்கி. சிலர் ஊழல் விவகாரங்களில் மாட்டிக் கொண்டு
அவதிப்பட நேரிடும்.

பொதுவாக இந்த அமைப்புக்காரர்களுக்குச் சகோதரர்கள் நல்லவர்களாக
இருப்பார்கள். தன் குழந்தைகளால் ஜாதகனுக்கு மகிழ்ச்சி இராது.
=========================================================
7
மூன்றில் சனி இருந்தால்:

ஜாதகன் தையமும், துணிச்சலான செயல்பாடுகளையும் உடையவன்.
செல்வந்தனாக இருப்பான். சிலர் உடன் பிறப்புக்களை இழக்க நேரிடும்.

சிலர் கடுமையான ஆசாமிகளாக இருப்பார்கள்.
விபரீதமான சிந்தனைகளுக்கு ஆட்படுபவர்களாக இருப்பார்கள்.
உடன் பிறப்புக்க்களால் துன்பம் ஏற்படும்.

அரசு மரியாதை, கெளரவம் கிடைக்கும்.
சிலருக்கு அவர்களுடைய ஊரில் உள்ள பொது அமைப்புக்களில்
தலைமை ஏற்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

ஆயுள்காரகன் சனி இங்கே இருப்பது நன்மை பயக்கும். ஜாதகனுக்கு
நீண்ட ஆயுள் இருக்கும். இந்த இடம் எட்டாம் இடத்திற்கு எட்டாம் இடம்
அதோடு சனியும் எட்டாம் பார்வையாக இங்கிருந்து ஆயுள் ஸ்தானத்தைப்
பார்ப்பார். அதை மனதில் கொள்க!

Saturn is good for longevity if he is placed in this house. Since 3rd house
is the eighth house from the eighth

பல ஏமாற்றங்களையும், சரிவுகளையும், சங்கடங்களையும் சந்தித்த பிறகே
ஜாதகன் வெற்றிகளை அடைவான். அது இந்த அமைப்பிற்குரிய விஷேசத்
தன்மையாகும்.

அவசரம், பரபரப்பு, தவறான அணுகுமுறை எனும் மனப்போக்கு
ஏற்படும். வயதாக வயதாக அதெல்லாம் மறைந்து ஒரு சீரான நிலைமை
ஏற்படும்.

இங்கே அமரும் சனி, பலவீனமாக இருந்தால். ஜாதகனுக்கு எப்போதும்
மனக்கஷ்டங்கள் இருந்துகொண்டே இருக்கும்
===============================================
8
மூன்றில் ராகு இருந்தால்:

ராகு சனியைப்போலவே பலனைத் தரக்கூடியவன்.
இங்கே ராகு இருப்பது இதற்கு முதல் பத்தியில் சனிக்குச்
சொன்னதுபோலவே சில பலன்கள் இருக்கும்
அதில் முக்கியமானது ராகு இங்கே அமையப்பெற்ற ஜாதகன்
நீண்ட நாட்கள் உயிர் வாழ்வான். தீர்க்காயுள்.

இந்த அமைப்பு சகோதர உறவுகளுக்கு நல்லதல்ல.
ஜாதகன் தோற்றத்தில் மட்டுமே தைரியசாலியாக இருப்பான்.
=================================================
9.
மூன்றில் கேது இருந்தால்:
இங்கே இருக்கும் கேது செவ்வாயைப் போல பலன்களைத்
தரக்கூடியவர்.
ஜாதகன் வலிமையானவனாகவும், துணிச்சலான சாதனைகளைச்
செய்யக்கூடியவனாகவும் இருப்பான்.

If ketu is placed in this house, the native will be courageous,
religious and wealthy
================================================
The 3rd house signifies courage, hence hands, shoulders and
chest The Ear, Nose and throat problems are also signified by
this house. Younger siblings of a person come under his house.
This house is also connected with printing, publishing,
short journeys and transport business.

இந்த மூன்றாம் வீட்டிற்கான பலன்கள் அதன் அதிபதியின்
தசா புத்திகளிலும், அதோடு அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின்
தசா புத்திகளிலும் கிடைக்கும்

மூன்றாம் வீட்டைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

---------------------------------------------------------------------------------------------
இரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணம். சமர்த்தாகப் பாடங்களைப்
படியுங்கள். மீண்டும் செவ்வாய்க்கிழமை காலையில் (14.4.2009)
சந்திப்போம்







வாழ்க வளமுடன்!

63 comments:

  1. ஹலோ சார்,
    எனக்கு என்ன பிரச்ச்னை னு கேட்டீங்களே, இது தான்.
    அதாவது எனக்கு 3ல் ஒருத்தருமே இல்ல.
    ஹா ஹா ஹா... என்ன பண்ணலாம்? அது தான் கேட்டேன் நேத்தே, 3ல் இருகறவரு 5ல் இருக்காரே னு.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா

    எனக்கு மூன்றில் எந்த கிரகமும் இல்லை,அதான் முதல் ஆளாக
    present போட்டு விட்டேன்.

    ReplyDelete
  3. I have Mars in 3rd house. Most of the results are agreeable in toto. Thanks for the lesson.

    ReplyDelete
  4. I have Mars in 3rd house. Most of the results are agreeable in toto. Thanks for the lesson.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. I have both Sani and Kethu in the third House! Emaatrangal, Sarivugal and Sangadangal then comes a win is spot on.

    Often one has to remind himself that one gets wiser by these experiences. :(

    ReplyDelete
  7. அன்புள்ள ஐயா,
    7-க்கு 9-உம் , 8-க்கு 8-உம் என்று 3-ஆம் வீட்டை விளக்கியது அருமை.
    அடியேனுக்கு 3-ல் சனி ஆட்சியில் அன்னைப் பொறுத்தவரை சரியாக உள்ளது ... அடியேனின் அண்ணனின் ஜாதக அமைப்பும் நன்றாக இருப்பதால், இறைவன் அவரை நன்றாக வாழ வைப்பார் அன்று நம்பி அதற்காக பிரார்த்தனையும் செய்கிறேன் .
    மிக்க நன்றி ஐயா ,
    சிங்கப்பூர் சீனு

    ReplyDelete
  8. புதன் என்றால் பொருள் வணிகம் மற்றும் பங்கு வணிகம் என சொல்லி உள்ளிர்கள். மிக்க நன்றி.. ஆதிபத்தியத்தில் எந்த வீடுகள் இந்த பொருள் வணிகம் மற்றும் பங்கு வணிகத்தை குறிக்கும் வீடுகள் என எடுத்துகொள்ளலாம்.

    For example, 5th house can be attributed to Share trading...Likewise, which house can be attributed to Marketing..(பொருள் வணிகம் என்றால் மார்க்கெட்டிங் என்று நினைக்கிறேன் )

    ReplyDelete
  9. அய்யா,

    பாடம் நன்றாக புரிந்தது.

    எனக்கு மூன்றில் (சிம்ம ராசி) சூரியன் மற்றும் ராகு.

    1. சூரியன் 148 Degree
    2. ராகு 140 Degree

    ராகு அஸ்தமனம் ஆகுமா? முன்பு ஒரு முறை, ராகு மற்றும் கேது ஆகிய நிழல் கிரகங்களுக்கு அஸ்தமனம் கிடையாது என்று ஒரு மாணவர் குறிப்பிட்டு கேட்டதற்கு அவரவர் விருப்பம் என்று குறிப்புட்டு பதில் அளித்தீர்கள். ராகு மற்றும் கேதுவிற்கு அஸ்தமனம் உண்டா இல்லையா?

    (எனது சகோதரர்களோடு எந்த தகராறும் இல்லை அல்லது கெடுதியும் இல்லை, அவர்கள் நன்றாக உள்ளார்கள்)

    சூரியன் 7 பரல்களோடு சிம்மத்தில் அமர்து இருக்கிறார். சிம்ம ராசியில் சர்வ அஷ்டவர்க்க பரல்கள் 28 . எந்த ஆர்டரில் இரு கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் யாருக்கு அதிக பவர் என கண்டு பிடிப்பது?

    இந்த வகுப்பில் நான் கற்ற பாடங்கள் படி, சூரியனுக்கு (7 பரல்கள்) அதனால் சூரியனுக்கே அதிக பவர் என அர்த்தம். இது சரியா?

    (இந்த கேள்விக்கு பதில் கிரக சேர்கை மற்றும் கிரக யுத்தம் என்ற பாட பகுதியில் வருமா?)

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  10. சுருக்கமாக: சுபர் இருந்தால் சகோதர உறவுக்கு நல்லது. பாபர் இருந்தால் தைரிய, வீரிய, விஜயத்திற்கு நல்லது. சரியா ஆசிரியரே. 3ல் இருக்கும் சனி எப்படி ஐயா 8ம் பார்வையாக 8ஐப் பார்ப்பார். அதுவும் சனிக்குக்கு 8ம் இட பார்வையே கி்டையாதே.

    ReplyDelete
  11. ஓகே ஜயா பழைய பாடங்களை மீளவும் படிக்கிறம். புது வருடத்தில் மீண்டும் சந்திப்போம். :)

    ReplyDelete
  12. Dear Sir

    3rd lord lesson is good sir...


    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  13. 3ல் கிரகங்கள் இல்லாவிட்டால் எதாவது கிரகத்தைக் கொண்டு வந்து குடியமர்த்துங்கள். அவர்களுக்குதான் வாடகை பிரச்சினை இல்லையே. ஒரு ஸ்தானத்தில் கிரகம் இல்லாததற்கு பலன் எப்படி பார்ப்பது என்று பதில் சொல்லி சொல்லி ஆசிரியர் ஓய்ந்து போயிருப்பார். பாவம் ஆசிரியர். நைசர்கிக பலத்தில் சூரியன் மற்ற 6 கிரகங்களை விட பலமானவர். சூரியனை விட ராகுவும், கேதுவும் பலமானவர்கள். நிழல் கிரகங்கள். ஆகையால் அவர்களுக்கு மற்ற கிரகங்களுக்கு இருப்பதுபோல் அஸ்தமனமில்லை.

    ReplyDelete
  14. எனது மூன்றாம் வீடு காலியாக உள்ளது. விருப்பப்படும் கிரகங்கள் இங்கு குடியோறலாம்.

    வாழ்க வளமுடன்:,
    வேலன்.

    ReplyDelete
  15. கிரக பலம் என்பதை தீர்மானிக்க பல விஷயங்களை ஆராய வேண்டும் ஒன்றை மட்டும் வைத்து சொல்ல முடியாது. கிரக யுத்தம் சம்பந்தமாக தீர்மானிக்க ஷட் பலம் (ஸ்தான பலம், கால பலம், அயன பலம், செஷ்ட பலம், நைசர்கிக பலம், திருக் பலம்) நிர்ணயிக்க வேண்டும் என்று முன்பொரு முறை படித்திருக்கிறேன். ஆசிரியர் இதற்கு முன் இதைப்பற்றி எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இதைப் பற்றி இதற்கு மேல் எழுதக்கூடாது. காரணம் தலை (ஆசிரியர்) இருக்க வால் (மாணவர்) அதிகமாக ஆடக்கூடாது. ஆசிரியர் பாடத்திற்கு போட்டி பாடம் நடத்துவது போல் ஆகிவிடும்.

    ReplyDelete
  16. Dear Sir,

    Present sir, My 3rd house venus is in 12th house with 12th house lord Moon. (venus and Moon) combination...I have heard that venus and moon is yoga. Is it true?

    Thanks
    Shankar

    ReplyDelete
  17. மாற்றாந்தாய்/தந்தை (1 தந்தை 2 தாய்/1 தாய் 2 தந்தை) பிள்ளைளுக்கும் 3ம் இடம்தானா அல்லது...
    சில ஜோதிடர்கள் மூத்த சகோதரத்திற்கு 11ம், இளைய சகோரத்திற்கு 3ம் இடம் என்கிறார்கள். தங்கள் அபிப்பிராயம் என்ன ஆசிரியரே. ஜோதிடம் அதிகம் படிக்க படிக்க கேள்விதான் அதிகமாகிறது.

    நான் கேட்கும் கேள்வி பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும், இருக்க வேண்டும். அதனால்தான் கேட்கிறேன். என் ஒருவனுக்காக மட்டும் கேட்கவில்லை. அப்படி கேட்பதில் விருப்பமும் இல்லை.

    ReplyDelete
  18. அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  19. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. ஆசிரியருக்கும், சக மாணவர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். அனைவரும் தங்கள் லட்சியங்கள் நிறைவேறி இனிதே வாழ இறைவன் அருள் புரிவாராக.

    ReplyDelete
  21. Wish you all happy & prosperous Tamil New Year (Virodhi - 23rd Year)

    ReplyDelete
  22. வாத்தியாருக்கும் மற்றும் சக மாணவர்களுக்கும் இணிய விரோதி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  23. Wish you all very Happy and Properous Tamil New Year

    -Shankar

    ReplyDelete
  24. வாத்தியாரே.....எங்கே காணும் ?

    ReplyDelete
  25. என்ன கோவியாரே
    காணவில்லை. வகுப்பறை ஆசிரியர் என்று விளம்பரம் கொடுத்து விடுவோமா. ஆசிரியர் மெதுவாகவே வரட்டுமே. என்ன கெட்டுவிட போகிறது. அவருக்கு பல வேலை பல கவலைகள் இருக்கும். அவர் வரும் வரை பழைய பாடங்களை மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டியதுதான். சிலர் கேள்வி கேட்பதைப் பார்த்தால் பாடங்களை ஒழுங்காக படிப்பதில்லை என்றெ தோன்றுகிறது.

    ReplyDelete
  26. Respected Sir,

    This is Dr.vinothkumar.My apologies to you as i could not continue reading your good work as i had to visit and train in USA for a period of 4 months.

    I am back now and i lost my previous blogger account.This is going to be my account hereafter

    I am reading the lessons which you took over the past few months and soon i will come up with follow up comments and questions

    Thanks for all the lessons

    Regards

    Dr.Vinothkumar

    ReplyDelete
  27. Sir

    How to find out the number of Brothers and sisters one has?And also how to find out how many are elder and how many are younger?

    I guess 3 rd and 11th house has a role

    Please clarify and explain.

    ReplyDelete
  28. வாத்தியார் இல்லாமல் வகுப்பறை அம் இடம் போல இருட்டிவிட்டது

    ReplyDelete
  29. வாத்தியார் இல்லாமல் வகுப்பறை3 அம் இடம் போல இருட்டிவிட்டது

    ReplyDelete
  30. kathirundhu kathirundhu kalangal ponathiyaa...

    ReplyDelete
  31. /////Blogger sundar said...
    present sir!today im first////

    நான் கடைசி. 4 நாட்கள் விடுப்பில் போனதால் நான் கடைசி -- பின்னூட்டப்பதில்களில்!

    ReplyDelete
  32. //////Blogger sumathi said...
    ஹலோ சார்,
    எனக்கு என்ன பிரச்ச்னை னு கேட்டீங்களே, இது தான்.
    அதாவது எனக்கு 3ல் ஒருத்தருமே இல்ல.
    ஹா ஹா ஹா... என்ன பண்ணலாம்? அது தான் கேட்டேன் நேற்றே, 3ல் இருக்கவேண்டியவர் 5ல் இருக்காரே னு.////

    ஐந்தாம் வீட்டில் இருந்தால் நல்லதுதானே சகோதரி. எதற்கு ஆதங்கம்?

    ReplyDelete
  33. /////////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    எனக்கு மூன்றில் எந்த கிரகமும் இல்லை,அதான் முதல் ஆளாக
    present போட்டு விட்டேன்.////////

    நன்றி சுந்தர்!

    ReplyDelete
  34. /////////////Blogger krish said...
    I have Mars in 3rd house. Most of the results are agreeable in toto. Thanks for the lesson.////////////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  35. /////////////Blogger ராஜ் said..
    I have both Sani and Kethu in the third House! Emaatrangal, Sarivugal and Sangadangal then comes a win is spot on.
    Often one has to remind himself that one gets wiser by these experiences. :(//////////

    உண்மை! அனுபவம்தான் ஒருவித ஆறுதலைக் கொடுக்கும்!

    ReplyDelete
  36. /////////////Blogger Cheenu said...
    அன்புள்ள ஐயா,
    7-க்கு 9-உம் , 8-க்கு 8-உம் என்று 3-ஆம் வீட்டை விளக்கியது அருமை.
    அடியேனுக்கு 3-ல் சனி ஆட்சியில் அன்னைப் பொறுத்தவரை சரியாக உள்ளது ... அடியேனின் அண்ணனின் ஜாதக அமைப்பும் நன்றாக இருப்பதால், இறைவன் அவரை நன்றாக வாழ வைப்பார் அன்று நம்பி அதற்காக பிரார்த்தனையும் செய்கிறேன் .
    மிக்க நன்றி ஐயா ,
    சிங்கப்பூர் சீனு/////////

    இறைவனிடம் விட்டுவீட்டீர்கள் அல்லவா! நிம்மதியாக இருங்கள். அவர் பார்த்துக்கொள்வார்!

    ReplyDelete
  37. ////////////Blogger Ragu Sivanmalai said...
    புதன் என்றால் பொருள் வணிகம் மற்றும் பங்கு வணிகம் என சொல்லி உள்ளிர்கள். மிக்க நன்றி.. ஆதிபத்தியத்தில் எந்த வீடுகள் இந்த பொருள் வணிகம் மற்றும் பங்கு வணிகத்தை குறிக்கும் வீடுகள் என எடுத்துகொள்ளலாம்.
    For example, 5th house can be attributed to Share trading...Likewise, which house can be attributed to Marketing..(பொருள் வணிகம் என்றால் மார்க்கெட்டிங் என்று நினைக்கிறேன் )/////////

    பத்து & பதினொன்றாம் வீடுகள்!

    ReplyDelete
  38. ////////////Blogger Sridhar said...
    அய்யா,
    பாடம் நன்றாக புரிந்தது.
    எனக்கு மூன்றில் (சிம்ம ராசி) சூரியன் மற்றும் ராகு.
    1. சூரியன் 148 Degree
    2. ராகு 140 Degree
    ராகு அஸ்தமனம் ஆகுமா? முன்பு ஒரு முறை, ராகு மற்றும் கேது ஆகிய நிழல் கிரகங்களுக்கு அஸ்தமனம் கிடையாது என்று ஒரு மாணவர் குறிப்பிட்டு கேட்டதற்கு அவரவர் விருப்பம் என்று குறிப்புட்டு பதில் அளித்தீர்கள். ராகு மற்றும் கேதுவிற்கு அஸ்தமனம் உண்டா இல்லையா?
    (எனது சகோதரர்களோடு எந்த தகராறும் இல்லை அல்லது கெடுதியும் இல்லை, அவர்கள் நன்றாக உள்ளார்கள்)///////

    சூரியனுக்கு அருகில் 10 பாகைக்குள் இருக்கும் எந்த கிரகமும் அஸ்தமனக் கணக்கில் சேரும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    சூரியன் 7 பரல்களோடு சிம்மத்தில் அமர்து இருக்கிறார். சிம்ம ராசியில் சர்வ அஷ்டவர்க்க பரல்கள் 28 . எந்த ஆர்டரில் இரு கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் யாருக்கு அதிக பவர் என கண்டு பிடிப்பது?
    இந்த வகுப்பில் நான் கற்ற பாடங்கள் படி, சூரியனுக்கு (7 பரல்கள்) அதனால் சூரியனுக்கே அதிக பவர் என அர்த்தம். இது சரியா?//////

    சரிதான்!
    >>>>>>>>>>>>>>>>>
    (இந்த கேள்விக்கு பதில் கிரக சேர்கை மற்றும் கிரக யுத்தம் என்ற பாட பகுதியில் வருமா?)
    நன்றி,
    ஸ்ரீதர்///////////////

    வரும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  39. ///////Blogger அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா.//////

    நானே தாமதம். ஆனாலும் வருகைப் பதிவு போட்டாயிற்று!

    ReplyDelete
  40. ///////////Blogger ananth said...
    சுருக்கமாக: சுபர் இருந்தால் சகோதர உறவுக்கு நல்லது. பாபர் இருந்தால் தைரிய, வீரிய, விஜயத்திற்கு நல்லது. சரியா ஆசிரியரே. 3ல் இருக்கும் சனி எப்படி ஐயா 8ம் பார்வையாக 8ஐப் பார்ப்பார். அதுவும் சனிக்குக்கு 8ம் இட பார்வையே கி்டையாதே.////////////

    உண்மை! அவசரப்பிழை அது. திருத்திக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  41. ////////////Blogger Emmanuel Arul Gobinath said...
    ஓகே ஜயா பழைய பாடங்களை மீண்டும் படிக்கிறோம். புது வருடத்தில் மீண்டும் சந்திப்போம். :)////////

    நன்றி!

    ReplyDelete
  42. ////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    3rd lord lesson is good sir...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////////////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  43. ///////////Blogger ananth said...
    3ல் கிரகங்கள் இல்லாவிட்டால் எதாவது கிரகத்தைக் கொண்டு வந்து குடியமர்த்துங்கள். அவர்களுக்குதான் வாடகை பிரச்சினை இல்லையே. ஒரு ஸ்தானத்தில் கிரகம் இல்லாததற்கு பலன் எப்படி பார்ப்பது என்று பதில் சொல்லி சொல்லி ஆசிரியர் ஓய்ந்து போயிருப்பார். பாவம் ஆசிரியர். நைசர்கிக பலத்தில் சூரியன் மற்ற 6 கிரகங்களை விட பலமானவர். சூரியனை விட ராகுவும், கேதுவும் பலமானவர்கள். நிழல் கிரகங்கள். ஆகையால் அவர்களுக்கு மற்ற கிரகங்களுக்கு இருப்பதுபோல் அஸ்தமனமில்லை.///////

    அப்படியொரு கோணத்தில் சொல்பவர்கள் உண்டு. ஆனாலும் சூரியனுக்கு அருகில் வருவதால் வலுவிழந்துவிடுவார்கள். கிரகயுத்தக் கணக்கில் அது வரும், கிரக யுத்தப்பாடத்தில் அதைப் பார்ப்போம் நண்பரே!

    ReplyDelete
  44. /////////Blogger வேலன். said..
    எனது மூன்றாம் வீடு காலியாக உள்ளது. விருப்பப்படும் கிரகங்கள் இங்கு குடியோறலாம்.
    வாழ்க வளமுடன்:,
    வேலன்.///////////

    அப்படியெல்லாம் அறிவிக்க முடியாது. உங்கள் விருப்பத்திற்கு இங்கே இடமில்லை!

    ReplyDelete
  45. /////////Blogger ananth said...
    கிரக பலம் என்பதை தீர்மானிக்க பல விஷயங்களை ஆராய வேண்டும் ஒன்றை மட்டும் வைத்து சொல்ல முடியாது. கிரக யுத்தம் சம்பந்தமாக தீர்மானிக்க ஷட் பலம் (ஸ்தான பலம், கால பலம், அயன பலம், செஷ்ட பலம், நைசர்கிக பலம், திருக் பலம்) நிர்ணயிக்க வேண்டும் என்று முன்பொரு முறை படித்திருக்கிறேன். ஆசிரியர் இதற்கு முன் இதைப்பற்றி எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இதைப் பற்றி இதற்கு மேல் எழுதக்கூடாது. காரணம் தலை (ஆசிரியர்) இருக்க வால் (மாணவர்) அதிகமாக ஆடக்கூடாது. ஆசிரியர் பாடத்திற்கு போட்டி பாடம் நடத்துவது போல் ஆகிவிடும்.////////////

    கிரகயுத்தம் பற்றிய பாடம் பின்னால் வரவுள்ளது நண்பரே. சற்றுப் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  46. //////Blogger hotcat said...
    Dear Sir,
    Present sir, My 3rd house venus is in 12th house with 12th house lord Moon. (venus and Moon) combination...I have heard that venus and moon is yoga. Is it true?
    Thanks
    Shankar////////

    யோகங்களைப் பற்றிய பாடம் பின்னால் வரவுள்ளது. சற்றுப்பொறுத்திருங்கள் சங்கர்!

    ReplyDelete
  47. //////////////Blogger ananth said...
    மாற்றாந்தாய்/தந்தை (1 தந்தை 2 தாய்/1 தாய் 2 தந்தை) பிள்ளைளுக்கும் 3ம் இடம்தானா அல்லது...
    சில ஜோதிடர்கள் மூத்த சகோதரத்திற்கு 11ம், இளைய சகோரத்திற்கு 3ம் இடம் என்கிறார்கள். தங்கள் அபிப்பிராயம் என்ன ஆசிரியரே. ஜோதிடம் அதிகம் படிக்க படிக்க கேள்விதான் அதிகமாகிறது.
    நான் கேட்கும் கேள்வி பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும், இருக்க வேண்டும். அதனால்தான் கேட்கிறேன். என் ஒருவனுக்காக மட்டும் கேட்கவில்லை. அப்படி கேட்பதில் விருப்பமும் இல்லை.////////////

    விரிவான பலன்களுக்கு - மூத்த சகோதரத்திற்கு 11ம் இளைய சகோரத்திற்கு 3ம் இடம் உரியது என்பது உண்மை.
    அதற்கான விரிவான பலன்கள் மேல் நிலைப் பாடத்தில் வரும்.

    ReplyDelete
  48. ////////////Blogger Emmanuel Arul Gobinath said...
    அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !///////////

    நன்றி! உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  49. //////////Blogger sundar said...
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்./////////

    நன்றி! உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  50. ///////////Blogger ananth said...
    ஆசிரியருக்கும், சக மாணவர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். அனைவரும் தங்கள் லட்சியங்கள் நிறைவேறி இனிதே வாழ இறைவன் அருள் புரிவாராக.

    நன்றி! உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  51. ///////////////Blogger Senthil Murugan said...
    Wish you all happy & prosperous Tamil New Year (Virodhi - 23rd Year)///////////

    நன்றி! உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  52. //////////////Blogger VA P RAJAGOPAL said...
    வாத்தியாருக்கும் மற்றும் சக மாணவர்களுக்கும் இனிய விரோதி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்......////////////

    நன்றி! உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  53. /////////Blogger hotcat said...
    Wish you all very Happy and Properous Tamil New Year
    -Shankar////////

    நன்றி! உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  54. ///////////Blogger கோவி.கண்ணன் said...
    வாத்தியாரே.....எங்கே காணோம் ?

    இதோ வந்துவிட்டேன் கோவியாரே!
    உங்கள் தேடுதலுக்கு நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  55. //////////Blogger ananth said...
    என்ன கோவியாரே
    காணவில்லை. வகுப்பறை ஆசிரியர் என்று விளம்பரம் கொடுத்து விடுவோமா. ஆசிரியர் மெதுவாகவே வரட்டுமே. என்ன கெட்டுவிட போகிறது. அவருக்கு பல வேலை பல கவலைகள் இருக்கும். அவர் வரும் வரை பழைய பாடங்களை மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டியதுதான். சிலர் கேள்வி கேட்பதைப் பார்த்தால் பாடங்களை ஒழுங்காக படிப்பதில்லை என்றே தோன்றுகிறது.////////////

    இதோ வந்துவிட்டேன் ஆனந்த்!
    உங்கள் புரிதலுக்கு நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  56. ////////////Blogger Dr.Vinoth Kumar said...
    Respected Sir,
    This is Dr.vinothkumar.My apologies to you as i could not continue reading your good work as i had to visit and train in USA for a period of 4 months.
    I am back now and i lost my previous blogger account.This is going to be my account hereafter
    I am reading the lessons which you took over the past few months and soon i will come up with follow up comments and questions
    Thanks for all the lessons
    Regards
    Dr.Vinothkumar////////////

    அவசரம் ஒன்றுமில்லை. நேரம் கிடைக்கும்போது படியுங்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  57. /////////Blogger Dr.Vinoth Kumar said...
    Sir
    How to find out the number of Brothers and sisters one has?And also how to find out how many are elder and how many are younger?
    I guess 3 rd and 11th house has a role
    Please clarify and explain./////////////////

    ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் என்று பார்ப்பதற்கும் அல்லது எத்தனை உடன்பிறப்புக்கள் என்று பார்ப்பதற்கும் ஜோதிடத்தில் வழிமுறைகள் உள்ளன. அது மேல்நிலைப் பாடத்தில் வரும்.(It will come in advanced lessons) விரிவான பாடம். பின்னால் எழுதுகிறேன். பொறுத்திருங்கள் டாக்டர்!

    ReplyDelete
  58. ///////Blogger sundar said...
    வாத்தியார் இல்லாமல் வகுப்பறை 3 ஆம் இடம் போல இருட்டிவிட்டது////////

    இதோ வந்துவிட்டேன். ஸ்விட்சைப் போட்டுவிட்டேன். ஒளி வந்துவிட்டது!

    ReplyDelete
  59. /////////////Blogger Ragu Sivanmalai said...
    kathirundhu kathirundhu kalangal ponathiyaa...///////

    நான் உனை நீங்க மாட்டேன்
    நீங்கினால் தூங்க மாட்டேன்!

    ReplyDelete
  60. aiya...

    in thire place i have Sani and Rahu...

    so am i get long life ?

    (sorry i dont have tamil type in this browsing center.)

    ReplyDelete
  61. ////Blogger கூடுதுறை said...
    aiya...
    in this place i have Sani and Rahu...
    so am i get long life ?
    (sorry i dont have tamil type in this browsing center.)////

    சங்கமேஷ்வரர் அருளால் நீங்கள் நீண்ட ஆயுளைப் பெறுவீர்கள். வாழ்க வளமுடன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com