மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.12.08

எங்கிட்ட மோதாதே! நான் வீராதி வீரனடா!

கிராமங்களில்,"மாப்ளே அவன் தகிரியமான ஆள்டா. வம்பு கிம்பு
வச்சிக்காதேடா. சாத்திப்புடுவான்டா" என்று ஒருவனைப் பற்றி
சிலாகித்துச் சொன்னால், அவன் துணிச்சல் மிக்கவன் என்று பொருள்.

சிலருக்கு இயற்கையாகவே துணிச்சல் அதிகமாக இருக்கும். அதோடு
கோபமும் இருக்கும். ஒரு சின்னச் சலசலப்பிற்குக் கூட, இடுப்புப்
பெல்ட்டைக் கழற்றிக் கொண்டு, அல்லது கையில் கிடைக்கும்
எதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு சண்டையில் இறங்கி விடுவார்கள்.
பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அது ஒரு
வகைத் துணிவு.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு உடல் வலியையும்
அல்லது மன வலிகளையும் தாங்கிக் கொண்டு ஒன்றும் நடக்காதுபோல
இருப்பார்கள். முகத்தில் எதையும் காட்ட மாட்டார்கள். அது ஒருவகைத்
துணிவு

தேசிய பாதுகாப்பில் இருக்கும் வீரர்கள், காவல்துறையில் இருக்கும் பல
வீரர்களின் துணிவு ஒப்பிட்டுப் பார்க்க முடியாத ஒன்று!

அதுதான் அவர்களுக்கு ஆதாரம் அல்லது ஜீவாதாரம். அதுதான்
அவர்களின் வாழ்க்கை. அது ஒருவகைத் துணிவு

ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய்
.
ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருக்கும் ஆசாமிகள், அபாயச்சூழல்
நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள், ரிஸ்க்கான வேலைகள்
என்று எதையும் பிரித்துப் பார்க்காமல் துணிந்து செய்யக் கூடியவர்கள்.

அவர்களுக்கு மனபயம் இருக்காது. துக்கம், கஷ்டங்கள், மரணபயம்
போன்றவைகளை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்

சிலர் ஊழல் செவதற்கோ, அவமானத்திற்கோ, அல்லது தண்டனைக்கோ
பயப்படாமல் இருப்பார்கள். அதே செவ்வாய் வேறு ஒரு கிரகக் கூட்டணி
யால் அல்லது பார்வையால் அவர்களுக்கு அந்த வித்தியாசமான
துணிவைக் கொடுக்கும்.

செவ்வாய்தான் கிரகங்களில் ராணுவ அதிகாரியைப் போன்றவர். வீரர்களின்
நாயகன் அவர்தான். யுத்தத்தின் நாயகனும் அவர்தான்.

குணங்களில், துணிவு, பொறுமை, தன்னம்பிக்கை, தலைமை தாங்கிச்
செல்லும் தன்மை ஆகியவற்றை ஒரு ஜாதகனுக்குக் கொடுப்பவர் அவர்தான்.
சட்டென்ற கோபம் (short-tempered) அதிரடி, அடிதடி, வாக்குவாதம்,
விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி அவர்தான்.

ராணுவத் தளபதிகள், ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மற்றும்
காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு செவ்வாய்தான் நாயகன்!

தொழில்நுட்ப அறிவிற்கும், இயந்திரங்கங்களை வடிவமைத்தல் மற்றும்
இயந்திரங்களை லாவகமாகக் கையாளும் அறிவிற்கும், திறனுக்கும்
ஆற்றலிற்கும் அவரே அதிபதி.

நாட்டில் சட்டம், ஒழுங்கு, எரிபொருள் போன்றவற்றிற்குக்கான காரகன்
அவர்தான்.

மனஉறுதி, தன்முனைப்பு, ஆற்றல், நிவாகத்திறன், சுதந்திர மனப்பான்மை
ஆகிய அற்புத மனித குணங்களுக்கும் அவர்தான் அதிபதி.
---------------------------------------------------------------------------------
ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கும் அவர்தான் காரகன். உடன்
பிறப்புக்களுடான நல்ல உறவுகளுக்கும், அல்லது அவர்களோடு
ஏற்படும் மனக் கசப்புக்களுக்கும் அவரே காரகர் (Authority)

நெருப்பு, மற்றும் இரத்தத்திற்கும் அவரே காரகன்

செவ்வாயைக் குறிக்கும் மற்ற பெயர்கள். அங்காரகன், குஜன்
ஆங்கிலத்தில் Mars. செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு!
கடகம் மற்றும் சிம்ம லக்கினங்களுக்கு செவ்வாய் யோககாரகன்
நவரத்தினங்களில் செவ்வாய்க்கு உரியது பவளம்.
இந்திய எண் கணிதத்தில் செவ்வாய்க்கு உரிய எண் 9
செவ்வாய்க்கு உரிய தெய்வங்கள் சுப்பிரமணியர், பத்ரகாளி1
=============================================
1. ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1,4,9,10ஆம் வீடுகளில்
அமர்ந்திருந்து தனது சுய வர்க்கத்திலும் 8 பரல்களைப் பெற்றிருந்தால்
ஜாதகன் கோடீஸ்வரனாக உயர்வான். தன் திறமை மற்றும் செயல்
ஆற்றும் தன்மையால் பெரும் செல்வம் ஈட்டுவான்.

2. தனுசு, சிம்மம், மேஷம், கடகம், மகரம் ஆகிய ஏதாவது ஒன்று
லக்கினமாக இருந்து, அதில் செவ்வாயும் இருந்து, சுய வர்க்கப்பரல்
களும் 4ற்கு மேல் இருந்தால், ஜாதகன் ஆட்சியாளனாக இருப்பான்
அல்லது அதிகாரம் மிக்கவனாக இருப்பான்.

ஆட்சியாளன் என்றவுடன் இந்தியாவின் பிரதமர் பதவி வரும் என்று
நினைக்க வேண்டம். கிராம முன்சீப் பதவி அல்லது நகர சேர்மன்
பதவிகூட ஆட்சிப் பதவிதான் சுவாமி!

3. சுய வர்க்கத்தில் 8 பரல்களை உடையவர்கள், தாங்கள் பங்கு
பெற்றுள்ள துறையில் உச்சமான பதவியை அடைவார்கள்.

வங்கியில் குமாஸ்தாவாகச் சேருகிறவன், படிப்படியாக முன்னேறி
அதே வங்கியின் தலைமை அதிகாரியாக ஒருநாள் உயர்வான்.

துவக்கத்தில் ஒரு இசைக்குழுவில் ஆர்மோனியம் அல்லது கீ போர்டு
வாசித்துக் கொண்டிருப்பவன் திடீரென ஒரு நாள் நாடறிந்த இசை
அமைப்பாளனாக உயர்ந்து விடுவான், அதெல்லாம் செவ்வாயின்
உற்சாகமான சேட்டைகள்.

4, இரண்டாம் வீட்டிலோ அல்லது ஆறாம் வீட்டிலே செவ்வாய்
அமர்ந்திருந்து சுய வர்க்கத்திலும் ஆறு பரல்களைக் கொண்டிருந்தால்
ஜாதகனுக்கு வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும், சுகங்களும்
கிடைக்கும். அதே நேரத்தில் ஏராளமான விரோதிகளும் இருப்பார்கள்.

5. செவ்வாய் ஜாதகத்தில் நீசம் அடைந்ததுடன், 6ஆம் வீட்டிலோ
அல்லது 8ஆம் வீட்டிலோ அல்லது 12ஆம் வீட்டிலோ அமர்ந்திருந்து
உடன் வலுவில்லாத சந்திரனும் (waxing Moon) கூட்டணி போட்டிருந்தால்
ஜாதகனுக்கு உடன் பிறப்புக்கள் இருக்காது. அப்படியே ஒரிருவர்
இருந்தாலும் ஜாதகனுக்கு அவர்களுடன் நல்ல உறவு இருக்காது.
(அதற்கு இல்லாமலேயே இருக்கலாம்)

6. மூன்றாம் இடத்தில் செவ்வாயும், சனியும் கூட்டாக இருந்து, செவ்வாய்
சுயவர்க்கத்தில் முன்று பரல்களுடன் அல்லது அதற்குக் கீழான
பரல்களுடன் இருந்தால், ஜாதகன் தன் உடன் பிறப்பைப் பறிகொடுக்க
நேரிடும்.

7. பத்தில் செவ்வாய் இருந்து, அதன் சுயவர்க்கத்தில் 4 அல்லது
அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால், அதோடு அந்த
அமைப்பில் செவ்வாய் சனியின் பார்வையைப் பெற்றால் ஜாதகன்
ராணுவத்தில் பணி புரிவான்.

8. செவ்வாய் பதினொன்றாம் அதிபதியாக இருந்தால், அவருடைய
திசையில் ஜாதகனுக்கு ராஜ யோகங்கள் கிடைக்கும்.

9. லக்கினம் செவ்வாயின் வீடுகளில் ஒன்றாக இருந்து அதாவது
மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்து, லக்கினம் அதன் சுய
வர்க்கத்தில் 7 பரல்களைப் பெற்றிருப்பதோடு, 7ஆம் வீட்டில்
செவ்வாய் இருந்து அதன் பார்வை தன் சொந்த வீட்டில் விழுந்தால்
ஜாதகன் சர்வ அதிகாரியாக இருப்பான். உலகில் சில சர்வாதிகாரி
களின் ஜாதகம் இத்தகைய அமைப்பைக் கொண்டது.

10. பெண்களின் ஜாதகத்தில் மாதவிடாய்க்குக் காரகன் செவ்வாய்.
மாதவிடாய் சமயத்தில் இரத்தப் பெருக்கு, irregular periods, அடி
வயிற்றில் வலி, மற்றும் அந்த மூன்று நாட்கள் உபாதைகளுக்கு
செவ்வாய்தான் காரணகர்த்தா.

இருபத்தியேழு நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் வட்டமடிக்கும்போது
ஜாதகி புஷ்பவதியான அன்று செவ்வாய் இருந்த இடத்தைச் சந்திரன்
கடக்கும் நேரத்தில்தான் ஜாதகிக்கு மாதவிடாய் ஏற்படும்.

செவ்வாய் வலிமை இல்லாத ஜாதகிகளுக்குதான் irregular periods
மற்றும் மாதவிடாய் சமயத்தில் அடிவயிற்றில் அதீத வலி போன்ற
உபாதைகள் (pains)ஏற்படும். அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில்
விரதம் இருந்து முறைப்படி இறைவனை வணங்கினால் அந்தக்
குறைகள் நிவர்த்தியாகும்

இயற்கையாகவே பல பெண்கள் பவள மோதிரம் அணிந்திருப்பார்கள்
எதற்காக அதை அணிகிறோம் என்று தெரியாமலேயே அணிந்திருப்
பார்கள். வழி வழியாக அணியப் பட்டு வருவதால் (mere copying)
அணிந்திருப்பார்கள். அப்படி அணிந்திருப்பவர்களுக்கு இந்த
மாதவிடாய் உபத்திரவங்கள் குறைந்திருக்கும்.

அது எப்படி சார்? பவளத்திற்கும் மாதவிடாய்க்கும் என்ன சம்பந்தம்
என்று குடையாதீர்கள். சம்பந்தம் உண்டு. விவரித்தால் பத்துப்
பக்கங்களுக்கு எழுத வேண்டியதிருக்கும். அது தனி டிராக். பிறகு
ஒரு நாள் எழுதுகிறேன். நினைவு படுத்துங்கள்
=======================================================
ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு!

கடவுளின் சந்நிதானத்தில் கிரகங்கள் வடிவில் ஒன்பது அமைச்சர்கள்
ஊழல் இல்லாத அமைச்சர்கள். அவர்களில் செவ்வாய்தான் ராணுவ
அமைச்சர்.

நிவாகத் திறமைகளைக் கொடுக்கின்ற கிரகமும் செவ்வாய்தான்

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இல்லாவிட்டால், ஜாதகனுக்கு
வேற்றிகளைப் பெறக்கூடிய செயல் திறன் (ability) இருக்காது.
ஜாதகன் பல வேற்றிகளைப் பகற் கனவுகளில் காண்பவனாக இருப்பான்.

martial என்கின்ற ஆங்கிலச் சொல் Mars என்ற சொல்லில் இருந்து
வந்தது. martial arts என்கின்ற சொல்லிற்கும் அதுதான் அடிப்படை
------------------------------------------------------------------------------------------
Good temparament and skill in war are the tasks of Mars.
If he is exalted in one's horoscope, the native will become
cruel in his tendencies. Some people will be cruel rulers or
cruel administrators
=====================================================
ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான பலன்கள்!

1
லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்!
உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும்.
சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்)
குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும்.
ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு
உடனே வரும்!

ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான்
சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------

2
இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே
இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம்
செய்பவர்கள் (argumentative)

செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல!
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக்
கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது
அல்லது நிலைக்காது!
---------------------------------------------------------------------------------------

3
******மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை
அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும்
வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை
உடையவன்.

தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச்
சிலர் வாழ்வார்கள்.
---------------------------------------------------------------------------------------

4
நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி
போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக
ஜாதகன் இருப்பான்.

இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த
அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும்

ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர்
பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக
இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம்.

(பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?:-))))
--------------------------------------------------------------------------------------

5
ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில்
குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும்.
சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள்,
நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும்.

சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர்
எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக
இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
6
********ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும்
ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை
துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான்.

மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும்
அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம
சிந்தனைகள் மேலோங்கி இருக்கும்.

சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்
=======================================================
7
ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான்.
சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும்.

சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும்,
அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும்
அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால்
பாதிக்கப்படுவாள்.

சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம்
எட்டிபார்க்காது.

சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள்
நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான்.
தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.
--------------------------------------------------------------------------------------

9
ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம்
இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள்

ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக
இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.
--------------------------------------------------------------------------------------
10
*******பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம்.
ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வீரன். சூரன். வெற்றியாளன்
ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன்.

மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும்
ஜாதகன் தேடிப்பிடிப்பான்.
----------------------------------------------------------------------------------------
11
********பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும்
வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும்
மன உறுதி இருக்கும்.(அது இருந்தால் இது இருக்காதா என்ன?)

நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே
தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான்.

ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான்
=======================================================
12
பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள்
ஏற்படலாம். ஜாதகன்

சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி!:-)))

பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான்
துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும்

சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால்
கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள்
===========================================================
வெவ்வேறு ராசிகளில் செவ்வாய் இருக்கும் பலன்கள்:
(Since this portion is in simple english. I have given it as it is)
1
மேஷத்தில் செவ்வாய்:

The individual will be inspiring, generous and active
He will be powerful and will be good at Mathematics.
He will be blessed with a dark sensual body
-----------------------------------------------------------------------------
2
ரிஷபத்தில் செவ்வாய்:

The individual will be timid, stubborn and sensitive.
He will have a strong inclination towards sports and magic
He will have a strong animal instinct.
------------------------------------------------------------------------------
3
மிதுனத்தில் செவ்வாய்:

The individual will be ambitious, quick, rash, fearless and tactless.
He will be blessed with a loving family and children
He will be skilled in music.
------------------------------------------------------------------------------
4
கடகத்தில் செவ்வாய்:

The individual will be intelligent, wealthy, and fickle minded
He will be proficient in any one of following fields
Agriculture, Medical and surgical
------------------------------------------------------------------------------
5
சிம்மத்தில் செவ்வாய்:

If Mars is in Leo, the individual will be liberal, generous, noble and
successful. They will also have an interest in occult science, astrology,
astronomy and mathematics and will also have deep love and respect
for their parents.
-------------------------------------------------------------------------------
6
கன்னியில் செவ்வாய்:

If Mars is in Virgo, the individual will be self-confident,
conceited, boastful and materialistic. Their marriage will usually not be
successful and these individuals can also suffer from digestive disorders.
--------------------------------------------------------------------------------
7
துலா ராசியில் செவ்வாய்:

The individual will be ambitious, perceptive
He will be fond of adulation.
He will be blessed with a tall, symmetrically body and a fair complexion.
--------------------------------------------------------------------------------
8
விருச்சிகத்தில் செவ்வாய்:

The individual will be indulgent, clever and aggressive!
He will have a medium stature and make great progress in life.
----------------------------------------------------------------------------------
9
தனுசில் செவ்வாய்:

The individual will be conservative, indifferent, impatient and quarrel
some.
He can make a good minister or a statesman!
----------------------------------------------------------------------------------
10
மகரத்தில் செவ்வாய்:

The individual will be rich, brave, generous,bold and respected
He can easily attain a high political position and will usually be
blessed with many sons.
--------------------------------------------------------------------------------
11
கும்பத்தில் செவ்வாய்:

The individual will be unhappy, miserable, poor unwise, controversial
and will have a tendency to forget things.
These individuals will be in constant danger from water.
-----------------------------------------------------------------------------------
12
மீனத்தில் செவ்வாய்:

The individual will be passionate, restless, faithful and willful.
He will have a fair complexion, can have troubles in their love affairs
and will also have a few children.
-----------------------------------------------------------------------------------
செவ்வாயின் சொந்த வீடுகள்: மேஷம், விருச்சிகம் (2 இடங்கள்)
செவ்வாயின் உச்ச வீடு: மகரம்
செவ்வாயின் நீச வீடு: கடகம்
செவ்வாயின் நட்பு வீடுகள்: சிம்மம்,தனுசு, மீனம் (3 இடங்கள்)
செவ்வாயின் சம வீடுகள்: ரிஷபம், துலாம், கும்பம் (3 இடங்கள்)
செவ்வாயின் பகை வீடுகள்: மிதுனம், கன்னி, (2 இடங்கள்)

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் செவ்வாய்க்கு
100% வலிமை இருக்கும்.

சம வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 75% பலன் உண்டு!

நட்பு வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீசமடைந்த செவ்வாய்க்கு பலன் எதுவும் இல்லை

உச்சமடைந்த செவ்வாய்க்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளவுகள் ஒரு உத்தேச அளவுகளே!
===================================================
செவ்வாயின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்:
சுயவர்க்கத்தில் செவ்வாய் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்:
எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!

1, 2, 3 பரல்வரை : உயர்வாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உடல்
உபாதைகள். காய்ச்சல் போன்ற நோய்கள் அடிக்கடி வரும். எதற்கு
எடுத்தாலும் விவாதம் அல்லது சண்டை போடக்கூடிய அமைப்பு. உறவுகள்,
நெருங்கிய உறவுகளுடன் பிரிந்து வாழும் வாழ்க்கை அமையும்

4. பரல்கள்: சமமான அளவில் நன்மை மற்றும் சமமான அளவில் தீமைகள்
கொண்ட ஜாதகம்

5. பரல்கள்: அனைவரையும் ஈர்க்கக்கூடிய பழக்கவழக்கங்கள், நன்நடத்தை
உள்ள ஜாதகர்.

6. பரல்கள். அரசிடம் இருந்து ஆதரவும் சலுகைகளும் கிடைக்கக்கூடிய
ஜாதகர். அல்லது ஆட்சியில் உள்ளவர்களுடன் நெருக்கமான தொடர்பு உள்ள
ஜாதகர்

7. பரல்கள்: ஜாதகரால் அவருடைய உடன்பிறப்புக்களுக்கும், உடன்
பிறப்புக்களால் ஜாதகருக்கும் தொடர்ந்து நன்மைகள் கிடைக்கும்
பாசமலர்கள்.

8. பரல்கள்: எதிரிகளைத் துவம்சம் செய்யக்கூடிய ஜாதகர். இடங்களும்
சொத்துக்களும் ஆதாயமாகக் கிடைகக்கூடிய ஜாதகர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செவ்வாயின் கோச்சாரப் பலன்கள்:

குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரனில் இருந்து நடப்பில் செவ்வாய்
இருக்கும் ராசியை வைத்துப் பலன்கள்:

3ஆம் வீடு, 6ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்களில் கோச்சார
செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்கள் மட்டுமே நன்மையுள்ளதாகும்

மற்ற இடங்களில் அவர் சஞ்சாரிக்கும் காலங்களில் நன்மைகள்
இருக்காது
=======================================================
செவ்வாயின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள
வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு
ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிகக் குறைவானது!

அவர் வான வெளியில் ஒரு சுற்று சுற்றி முடிக்க எடுத்துக் கொள்ளும்
காலம் 18 மாதங்கள். ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை மாதங்கள்
இருப்பார்.

In short, Mars is the is significator of brothrhood, courage and
talents of a native
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செவ்வாய் எப்போதும் தீமைகளையே கொடுப்பார். செவ்வாய் திசை
வந்தால் துன்பங்களும், சிரமங்களும் விபத்துக்களும் வந்து சேரும்
என்று சிலர் நினைப்பதுண்டு. அது உண்மையல்ல!

தமிழகத்தில் ஒரு மாபெரும் தலைவி மிதுன லக்கினக்காரர். அவருடைய
பதினொன்றாம் வீட்டு அதிபதியான செவ்வாய்தான், தன்னுடைய தசா
புத்தியில் அவரை முதல் மந்திரி பதவியில் உட்கார வைத்து அழகு
பார்த்தது.

அதுபோல செவ்வாயால் நன்மைகள் பெற்ற பலர் உண்டு. ஜாதகனின்
ஜாதகத்தில் தான் எந்த வீட்டிற்கு அதிபதியோ, அதற்குரிய செயல்களை
செவ்வாய் சரியாக உரிய நேரத்தில் செய்து விடுவான்

எந்தக் கிரகமும், முழுவதும் நன்மைகளையோ அல்லது முழுவதும்
தீமைகளையோ அளிக்காது.

ஒவ்வொரு கிரகமும், அதன் இருப்பிடம், சம்பந்தம் கொண்டுள்ள
மற்ற கிரகங்கள், பார்வை ஆகியவற்றைப் பொறுத்தே நன்மையையும்
தீமையையும் வழங்கும்
------------------------------------------------------------------------------------------
செவ்வாய் தோஷம் பற்றி இங்கு எழுதவில்லை. அது விரிவான
பாடம். ஜாதகத்தில் தோஷங்கள் என்கின்ற topic ல் எழதும்போது
அதை விவரிக்கிறேன். பொறுத்துக் கொள்ளவும்

ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக அல்லது பகை வீட்டில் அமர்ந்து
படுத்திக் கொண்டிருந்தால், அல்லது கஷ்டங்களை அதிகமாக
அனுபவிப்பதாக நீங்கள் நினத்தால் அதற்குப் பரிகாரம் இருக்கிறது

செவ்வாய்க் கிழமை விரதம் இருங்கள். எழுந்தது முதல் மாலை
ஆறுமணி வரை உபவாசம் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும்
குடிக்கலாம். மாலையில் செவ்வாயின் நாயகர் சுப்பிரமணியரை
வணங்கி விட்டு இரண்டு வாழைப் பழங்கள் ஒரு டம்ளர் பால்
சாப்பிடலாம். அல்லது அரிசி வெல்லப் பாயாசத்தைப் பிரசாதமாக
வைத்து வணங்கிவிட்டு இரண்டு டம்ளர்கள் பாயாசத்தைக் குடிக்கலாம்

கோவிலுக்கு முடிந்தால் சென்று வணங்கி வரலாம். அல்லது வீட்டிலேயே
விளக்கு ஏற்றி வணங்கலாம். இறைவன் எங்கும் இருக்கிறான்

எத்தனை செவ்வாய்க் கிழமைகள் விரதம் இருக்க வேண்டும்?

ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் இருக்க வேண்டும். சிலர் இருபத்தோரு
செவ்வாய்க் கிழமைகள் விரதம் இருக்க வேண்டும் என்பார்கள்.

விரதம் எப்படி உங்கள் விருப்பமோ, நாட்களின் எண்ணிக்கையும் உங்கள்
விருப்பம்தான்

யார் யார் இருக்க வேண்டும்?

திருமணம் தள்ளிக்கொண்டே போகிறவர்களும், காரியத் தடைகள்
உள்ளவர்களும், மிகுந்த துன்பங்கள் மற்றும் கஷ்டங்களை அனுபவிப்பவர்களும்
செவ்வாய் விரதத்தை மேற் கொள்ளலாம்.வேலை இல்லாமல் இருப்பவர்களும்
மன அமைதியற்றவர்களும் மேற்கொள்ளலாம்.

என்ன பலன் கிடைக்கும்?

இருந்து பாருங்கள் தெரியும். படித்துப் பரிட்சை எழுதாமலேயே, என்ன
மதிப்பெண் வரும் என்று கேட்டால் எப்படி?

நான் அதைக் கண்கூடாகப் பார்த்தவன். என் இரண்டாவது சகோதரியின்
திருமணம் தள்ளிக்கொண்டே போனபோது. வள்ளுவர் இனத்தைச் சேர்ந்த
ஒரு அற்புதமான ஜோதிடர் ஒருவர், என் தந்தையிடம் கூறினார்.

"உங்கள் பெண்ணிற்கு கடுமையான மாங்கல்ய தோஷம். இரண்டாம் தாரமாகத்
தான் வாழ்க்கைப் பட நேரிடும். இல்லாவிட்டால் ஜாதகம் கணவனை எடுத்து
விடும். இந்தப் பெண் ஒன்பது வாரம் செவ்வாய்க் கிழமை விரதம் இருந்தால்
ஒன்பதாம் வாரம் முடியும் போது திருமணம் நிச்சயமாகும்!" என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு என் சகோதரி செவ்வாய்க் கிழமைகளில் விரதம்
இருக்க ஆரம்பித்தார்.

என்னவொரு ஆச்சரியம்!

எட்டாவது வாரமே திருமணம் நிச்சயமாகிவிட்டது. 25 வயது இளைஞர்
ஒருவர் எந்து சகோதரியைக் கரம் பிடிக்க வந்தார். அவருக்கு அது இரண்டாவது
மணம். அவருடைய முதல் மனைவி அதற்கு முன் வருடம் தலைப் பிரசவத்தில்
இறந்து போயிருந்தாள். அவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் சனி

வரன் கேட்டு வந்தவர்களுடைய குடும்பப் பிண்ணனி பிடித்துப்போக, அதோடு
அவரையும் பிடித்துப்போக அடுத்த மாதமே திருமணம் நிறைவேறியது.

அந்த சகோதரி ஹைதராபாத்தில் இருக்கிறார். அவர் மூலமாகத்தான் நான்
தெலுங்கு மொழியைக் கற்றுக் கொண்டேன்.

எந்த அளவிற்குத் தெலுங்கு வரும்?

மாட்லாடுதானிக்கு ஒஸ்ததண்டி! சதுவுதானிக்கு ராது!

நானும் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்திருக்கிறேன். முதலில் படும் சிரமங்கள்
போக வேண்டும் என்பதற்காக. ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் இருந்த பிறகு
அதுவே பழகிவிட தொடர்ந்து ஒரு வருட காலம் அதாவது 52 செவ்வாய்க்
கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்திருக்கிறேன். அது முருகன் மேற்கொண்ட
பக்தியினால் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதோடு உடம்பைக் குறைக்கும்
முகமாகவும் வாரம் ஒரு நாள் லங்கனம். அதாவது பட்டினி அல்லது விரதம்
(ஹி.ஹி)

ஆகவே எதையும் நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயம் பலன் உண்டு!

Prayer frees one from debts, poverty and illness afflicting the skin.
Mars bestows property and conveyance
Prayer to Mars can restore loss of eyesight.
Tuesdays are intended for the worship of Mars
If one observes the fast on Tuesday for 21 times, the unlucky influence
will be got rid off.
=============================================================
செவ்வாயைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது.

அடுத்த பதிவில் வேறு ஒரு கிரகத்தைக் கையில் எடுத்துத் துவைப்போம்,

அது என்ன கிரகம்?

ராகு சாமி ராகு!

அவரை இரக்கமற்றவர் என்று கூறுவார்கள். He is called as merciless planet.

சனிக்கும் ராகுவிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
சனி தண்டிக்க வேண்டிய நேரத்தில் தண்டிப்பார். ராகுவும் அப்படி தண்டிக்க
வேண்டிய நேரத்தில் தண்டிப்பார்.

என்ன வித்தியாசம்?

சனி நிற்க வைத்து அடிப்பார். ராகு தொங்க விட்டு அடிப்பார்!

அவரை நாம் துவைத்து அலசுவோம்

பொறுத்திருங்கள்
--------------------------------------------------------------------------------
இந்தப் பதிவில் உங்களுக்கான பகுதிகளை மட்டும் அல்லது வரிகளை
மட்டும் படித்து விட்டு வந்து, "சார், அடுத்தபாடம் எப்போது?" என்று
யாரும் கேட்க வேண்டாம். 'செய்வன திருந்தச் செய்' என்பது முதுமொழி.
ஆகவே அனைவரும் பாடத்தை முழுமையாகப் படியுங்கள்.

அதுதான் நீங்கள் இந்த வகுப்பறைக்கு தரும் மரியாதை!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

61 comments:

 1. செவ்வாய் பற்றிய தகவல்கள் அருமை. அதிலும் 27 நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் சுற்றிவரும் சமயம் ஜாதகி புஷ்பவதிஆன சமயம் செவ்வாய் இருந்த இடத்தை சந்திரன் கடக்கும் நேரத்தில் மாதவிடாய் ஏற்படும். இதுவரை கேள்விபடாத தகவல் அய்யா, தகவல் ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. ஜோதிடக்கடலில் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டியது எவ்வளவோ?
  எனக்கு 10-ல் செவ்வாய்.பலன்கள் சூப்பர்.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 2. எனது நண்பர் ஒருவருக்கு இரட்டைப் பிள்ளைகள்

  இருவருக்கும் ஒரே ஜாதகம்
  மகரம்-லக்ணத்தில் செவ்வாய்

  ஆனால் கோபம்,யோகம்,படிப்பு,பொருளாதார வசதி எல்லாம் ஏட்டிக்கு போட்டியாய் இருக்கிறதே.

  இருவருக்கும் ஒரே தசா புத்தி நடக்கும் போது இது எப்படி?

  வாழ்நாள் முழுமைக்கும் இது தானா?
  மாறுமா?

  நீரும் நெருப்பும்,குடியிருந்த கோவில்
  MGR1 mgr2 போல

  ReplyDelete
 3. "எதையும் நம்பிக்கையோடு செய்யுங்கள். பலன் உண்டு". உண்மை முற்றிலும் உண்மை. நம்பிக்கைத் தெளிவைக் கொடுக்கும். தெளிவான மனதோடு செய்யும் செயல்கள் அனைத்தும் இறையருளால் வெற்றியைக் கொடுக்கும்.

  அன்புடன்
  இராசகோபால்.

  ReplyDelete
 4. /////Blogger வேலன். said...
  செவ்வாய் பற்றிய தகவல்கள் அருமை. அதிலும் 27 நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் சுற்றிவரும் சமயம் ஜாதகி புஷ்பவதிஆன சமயம் செவ்வாய் இருந்த இடத்தை சந்திரன் கடக்கும் நேரத்தில் மாதவிடாய் ஏற்படும். இதுவரை கேள்விபடாத தகவல் அய்யா, தகவல் ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. ஜோதிடக்கடலில் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டியது எவ்வளவோ?
  எனக்கு 10-ல் செவ்வாய்.பலன்கள் சூப்பர்.
  வாழ்க வளமுடன்,
  வேலன்.///////

  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி வேலன்

  ReplyDelete
 5. Blogger புரட்சித் தமிழன் said...
  எனது நண்பர் ஒருவருக்கு இரட்டைப் பிள்ளைகள்
  இருவருக்கும் ஒரே ஜாதகம்
  மகரம்-லக்ணத்தில் செவ்வாய்
  ஆனால் கோபம்,யோகம்,படிப்பு,பொருளாதார வசதி எல்லாம் ஏட்டிக்கு போட்டியாய் இருக்கிறதே.
  இருவருக்கும் ஒரே தசா புத்தி நடக்கும் போது இது எப்படி?
  வாழ்நாள் முழுமைக்கும் இது தானா?
  மாறுமா?
  நீரும் நெருப்பும்,குடியிருந்த கோவில்/////
  MGR1 mgr2 போல//////

  இரு குழந்தைகளுக்கும் பிறப்பில் 4 அல்லது 5 நிமிடங்கள் வித்தியாசம் இருக்கும். அதை வைத்துப் பாவங்கள் மாறும்.
  அதனால் இந்த வேறு பாடுகள் ஏற்படும்!

  ReplyDelete
 6. ///////Blogger RAJA said...
  "எதையும் நம்பிக்கையோடு செய்யுங்கள். பலன் உண்டு". உண்மை முற்றிலும் உண்மை. நம்பிக்கைத் தெளிவைக் கொடுக்கும். தெளிவான மனதோடு செய்யும் செயல்கள் அனைத்தும் இறையருளால் வெற்றியைக் கொடுக்கும்.
  அன்புடன்
  இராசகோபால்.////

  நன்றி கோபால்!

  ReplyDelete
 7. Wish all classroom2007 readers and teacher a Merry Christmas and Happy New Year!!!!

  Mars lesson is super, he is in 11th house with jupiter and got 6 parals but in midhuna. He is exalted in navamsa.

  In this visit to India, going to tiruchendur whereas Murugan is adidevathai for Mars.


  Thanks for your efforts sir.

  -Shankar

  ReplyDelete
 8. //இரு குழந்தைகளுக்கும் பிறப்பில் 4 அல்லது 5 நிமிடங்கள் வித்தியாசம் இருக்கும். அதை வைத்துப் பாவங்கள் மாறும்.
  அதனால் இந்த வேறு பாடுகள் ஏற்படும்!//

  தகவலுக்கு நன்றி.

  பிறப்பில் 15 நிமிட வித்தியாசம் உள்ளது.

  இரட்டையர் பற்றிய பதிவு போடுவதாய் அறிவித்திருந்தீர்கள்.

  ReplyDelete
 9. sir,

  If second house has mars, saturn, ragu with Jupiter...Does jupiter conjuction will reduce the evil effects?

  Or whichever planet got stronger without combustion will workout? pls explain me.

  ReplyDelete
 10. அன்புள்ள ஐயா,

  செவ்வாய் பற்றிய பாடம் அருமை.

  செவ்வாய் கிழமை விரதம் பற்றிய தகவலுக்கு நன்றி.

  என்றும் அன்புடன்
  Sanjai

  ReplyDelete
 11. Sir,

  I happended to read your Class Room blog only from last week. It was really realy SUPER. (KALKITINGA SIR).

  I like your style of writing, information / message and ofcourse songs & stories which you are telling in between the lessons.

  Sir,
  My wife is a Twin.. My wife parents have given her twin sister to there realative(thathu koduthutanga) and she was brought in wealthy way and she is now in abroad.
  Whereas my wife was brought up in a different way. Whether this much different will happen due to time change.

  Both of there Birth Chart are identical. Please explain sir and i am really curious to hear from you sir.

  Thanks,
  Kamesh

  ReplyDelete
 12. ///////Blogger N.K.S.Anandhan. said...
  பாடம் அருமை./////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 13. //////Blogger hotcat said...
  Wish all classroom2007 readers and teacher a Merry Christmas and Happy New Year!!!!
  Mars lesson is super, he is in 11th house with jupiter and got 6 parals but in midhuna. He is exalted in navamsa.
  In this visit to India, going to tiruchendur whereas Murugan is adidevathai for Mars.
  Thanks for your efforts sir. -Shankar///////

  திருச்செந்தூர் செந்தில்நாதனின் அரசாங்கத்தைப் பார்த்து, மகிழ்ந்து வாருங்கள்!

  ReplyDelete
 14. ////Blogger புரட்சித் தமிழன் said...
  //இரு குழந்தைகளுக்கும் பிறப்பில் 4 அல்லது 5 நிமிடங்கள் வித்தியாசம் இருக்கும். அதை வைத்துப் பாவங்கள் மாறும்.
  அதனால் இந்த வேறு பாடுகள் ஏற்படும்!//
  தகவலுக்கு நன்றி.
  பிறப்பில் 15 நிமிட வித்தியாசம் உள்ளது.
  இரட்டையர் பற்றிய பதிவு போடுவதாய் அறிவித்திருந்தீர்கள்./////

  ஆமாம். அது பின்னால் வரும். நடுவில் வேறு முக்கியமான பாடங்கள் உள்ளன!

  ReplyDelete
 15. /////Blogger hotcat said...
  sir,
  If second house has mars, saturn, ragu with Jupiter...Does jupiter conjuction will reduce the evil effects?
  Or whichever planet got stronger without combustion will workout? pls explain me./////

  எல்லா தீய சக்திகளையும் மீறி குரு பகவான் நிச்சயமாக நன்மை செய்வார்!

  ReplyDelete
 16. /////Blogger SP Sanjay said...
  அன்புள்ள ஐயா,
  செவ்வாய் பற்றிய பாடம் அருமை.
  செவ்வாய் கிழமை விரதம் பற்றிய தகவலுக்கு நன்றி.
  என்றும் அன்புடன்
  Sanjai//////

  எல்லாம் உங்களைப் போன்ற அன்பர்களுக்காகத்தான்!

  ReplyDelete
 17. /////Blogger Kamesh said...
  Sir,
  I happended to read your Class Room blog only from last week. It was really realy SUPER. (KALKITINGA SIR).
  I like your style of writing, information / message and of course songs & stories which you are telling in between the lessons./////

  வெறும் பாடமென்றால் ஒருவரும் படிக்க மாட்டார்கள்!
  அதனால் மருந்துடன் தேனையும் கலந்து தருகிறேன்!
  ------------------------------------------------------------------------
  Sir,
  My wife is a Twin.. My wife parents have given her twin sister to there realative(thathu koduthutanga) and she was brought in wealthy way and she is now in abroad.
  Whereas my wife was brought up in a different way. Whether this much different will happen due to time change.
  Both of there Birth Chart are identical. Please explain sir and i am really curious to hear from you sir.
  Thanks,
  Kamesh///////

  இருவருக்கும் பிறப்பில் எத்தனை நிமிடங்கள் வித்தியாசம். அதைச் சொல்லவில்லையே நீங்கள்?

  ReplyDelete
 18. Sir,

  sorry, missed to mention the time difference. It is 6 min.

  D.o.B : 11-Feb-1982
  Time : 11.00 Am and 11.06 AM
  Place of Birth ; Chennai

  Thanks,
  Kamesh

  ReplyDelete
 19. செவ்வாய் பற்றிய செய்தி மிக்க அருமை ... நன்றிகள் பல :-)
  பொதுவாக ஒரு கேள்வி : தீய கிரகங்கள் உச்சம் அல்லது ஆட்சி பெற்றால் தீமை அதிகம் உண்டா ? நன்மை அதிகம் உண்டா? அதே சமயம் அந்த கிரகங்களின் பரல்கள் தான் பலன்களை முடிவு செய்யுமா ?

  நன்றி,
  பிரகாஷ்.

  ReplyDelete
 20. Thanks for the lesson about Mars...My cousin has mars in 10 th house....He is such a courageous person and he became a crorepathi in singapore....I could understand how mars has helped him to raise in life and career....

  ReplyDelete
 21. SIR, VERY VALID INFORMATIONS ABOUT "CHEVVAI(MARS)"....EVERY BODY SHOULD PRESERVE IT...DEFINETELY, I NEED TO CLARIFY LOT OF DETAILS LATER....THANKS FOR THE INFORMATIONS, SIR...

  ReplyDelete
 22. ADVANCE WISHES FOR A GLORIOUS NEW YEAR 2009 FOR ALL THE READERS OF THIS BLOG....

  ReplyDelete
 23. வணக்கம் அய்யா !

  மிக அருமையான பாடம் தெளிவாக செவ்வாய் கிரகத்தின் தன்மை , வலிமை. ,இருக்கும் இடத்திற்கு தகுந்த பலன்கள் , வலிமை இல்லாமல் இருந்தால் வரும் துன்பங்கள் அதற்கு சரியான பரிகார வழிமுறைகள் போன்றவற்றை தெளிவாகவும் விளக்கமாகவும் உதரனத்துடனும் சொல்லிய விதம் மிக பிரமாதம் அய்யா " மீக்கு தெலுகு நச்சானே ஒட்சி" தொடர்ந்து இது போன்ற படங்களை எம் போன்ற மாணாக்கர்க்கு அளிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

  ReplyDelete
 24. //////Blogger Kamesh said...
  Sir,
  sorry, missed to mention the time difference. It is 6 min.
  D.o.B : 11-Feb-1982
  Time : 11.00 Am and 11.06 AM
  Place of Birth ; Chennai
  Thanks,
  Kamesh//////

  முதல் பெண்ணின் லக்கினம் - 39.35.58 நட்சத்திரம் பரணி 1ஆம் பாதம்
  இரண்டாவது பெண்ணின் லக்கினம் 41.15.42 நட்சத்திரம் பரணி 2ஆம் பாதம்
  இப்படி வித்தியாசங்களைக் காணலாம்.
  அதோடு இருவருக்கும் பூர்வபுண்ணியம் வித்தியாசப்படும். அதை யாராலும் கணிக்கமுடியாது.
  அதை வைத்தும் அமைப்புக்கள் மாறும்

  ReplyDelete
 25. Blogger PrakashMani said...
  செவ்வாய் பற்றிய செய்தி மிக்க அருமை ... நன்றிகள் பல :-)
  பொதுவாக ஒரு கேள்வி : தீய கிரகங்கள் உச்சம் அல்லது ஆட்சி பெற்றால் தீமை அதிகம் உண்டா ? நன்மை அதிகம் உண்டா? அதே சமயம் அந்த கிரகங்களின் பரல்கள் தான் பலன்களை முடிவு செய்யுமா ?
  நன்றி,
  பிரகாஷ்.//////

  தீயகிரகங்கள் என்று முத்திரை குத்தாதீர்கள். சனி தீயகிரகம்தான்.ஆனால் அவன்தான் கர்மகாரகன்.உங்களுக்கு நல்ல வேலையை வாங்கிக் கொடுப்பவன். அவன்தான் ஆயுள்காரககன். அவனுடைய அமைப்புத்தான் ஜாதகனின் ஆயுளை நிர்ணயம் செய்யும்.
  எல்லாம் இருந்து என்ன பயன்? ஆயுள் முக்கியமில்லையா?
  எந்த கிரகம் உச்சம் பெற்றாலும் ஜாதகனுக்குத் தன்னுடைய தசா புத்திகளில் நன்மைகளை வாரி வழங்கும்!

  ReplyDelete
 26. Blogger Ragu Sivanmalai said...
  Thanks for the lesson about Mars...My cousin has mars in 10 th house....He is such a courageous person and he became a crorepathi in singapore....I could understand how mars has helped him to raise in life and career..../////

  தகவலுக்கு நன்றி சிவன்மலையாரே!

  ReplyDelete
 27. //////Blogger RAMASUBRAMANIA SHARMA said...
  SIR, VERY VALID INFORMATIONS ABOUT "CHEVVAI(MARS)"....EVERY BODY SHOULD PRESERVE IT...DEFINETELY, I NEED TO CLARIFY LOT OF DETAILS LATER....THANKS FOR THE INFORMATIONS, SIR...////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 28. ////Blogger RAMASUBRAMANIA SHARMA said...
  ADVANCE WISHES FOR A GLORIOUS NEW YEAR 2009 FOR ALL THE READERS OF THIS BLOG..../////

  உங்களுக்கும் எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. ///////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
  வணக்கம் அய்யா !
  மிக அருமையான பாடம் தெளிவாக செவ்வாய் கிரகத்தின் தன்மை , வலிமை. ,இருக்கும் இடத்திற்கு தகுந்த பலன்கள் , வலிமை இல்லாமல் இருந்தால் வரும் துன்பங்கள் அதற்கு சரியான பரிகார வழிமுறைகள் போன்றவற்றை தெளிவாகவும் விளக்கமாகவும் உதரனத்துடனும் சொல்லிய விதம் மிக பிரமாதம் அய்யா " மீக்கு தெலுகு நச்சானே ஒட்சி" தொடர்ந்து இது போன்ற படங்களை எம் போன்ற மாணாக்கர்க்கு அளிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்/////

  நன்றி கார்த்திகேயன்! தாழ்மையெல்லாம் இங்கே வேண்டாம். ஆசியருக்கும் மாணவர்களுக்கும் இங்கே நிலவுவது நட்பு மட்டுமே. தாழ்மைக்கு இங்கே இடமில்லை!:-))))

  ReplyDelete
 30. Hello Sir

  For a long time, we could not see Namakkal Ciby Anna.....

  ReplyDelete
 31. Thanks for the lesson. I have mars in the third house of venus( Libra). Since third being an inmical house will the presence of Mars give Vipareetha rajayogam.I won a lottery in Venus dasa Mars bhuthi.

  ReplyDelete
 32. Thanks for the lesson. I have mars in the third house of venus( Libra). Since third being an inmical house will the presence of Mars give Vipareetha rajayogam.I won a lottery in Venus dasa Mars bhuthi.

  ReplyDelete
 33. அய்யா கோவையில் பிறந்து வளர்ந்து படித்து வேலை செய்து, 2007 வருடம் ஐதராபாத்தில் இருந்ததில் தொடங்கி (உங்கள் பதிவின் ) நீண்ட நாள் மாணவன். (Now, i am studying in germany) வழக்கம் போல் செவ்வாய் பற்றிய பதிவும் அருமை.
  என்னது அமைப்பு - அஸ்வினி நட்சத்திரம். லக்னம் மேஷம் சந்திரனுடன் , புதனும் சுகிரனும் 3 ஆம் இடம் , சூரியனும் ராகுவும் நான்காம் இடம். குரு 5 ஆம் இடத்தில். 10 ஆம் இடத்தில் கேது .

  கேது தசையில் பிறந்தேன் ..
  உங்கள் மேலான கருத்து படி (தற்போது 29 - (DOB-2.8.1980) வயதில்) சூரிய தசை 2009 ஆம் ஆண்டு நவம்பரில் முடிகிறது. பின்னர் சந்திர தசை.

  எனது ஐயம்: அதிபதி செவ்வாய் (5 பரல்களுடன் ) ஆறாம் இடத்தில் சனியுடன்(2 பரல்கள்) இருக்கிறார் பகை வீடான கன்னியில்.. இது நல்லதா கேட்டதா..??

  என்னை போல் எண்ணிலடங்கா பேர் பயனடையும் உங்கள் மன நிறைவான இவ் பதிவுலகப் பணிக்கு எனது வணக்கங்கள்..

  ReplyDelete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete
 35. மிக்க நன்றி அய்யா ..

  ReplyDelete
 36. செவ்வாயின் வலிமையைப்பொறுத்து உடலில் சில அம்சங்களைச்சொல்லுவார்கள்...உ.ம்: செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்களின் கண்கள் மிக சிவந்து இருக்கும். உடலில் சில தழும்புகள் இருக்கும்..உண்மையா ஐயா?

  ReplyDelete
 37. வாத்தியாரையா,

  அங்காரகனின் பதிவு அற்புதமாக அமைந்து விட்டது. பரிகாரங்களை சேர்த்து பதிவில் எழுதுவது பதிவின் பலனை இன்னும் கூட்டுகிறது. "லங்கணம் பரம ஒளஷதம்". வாரம் ஒரு நாள் விரதம் இருப்பது உடலின் உள் உறுப்புகள் ஓய்வெடுத்துக்கொண்டு நனு செயல்பட உதவும்.

  ReplyDelete
 38. //சனி நிற்க வைத்து அடிப்பார். ராகு தொங்க விட்டு அடிப்பார்!// முக்கியமான வேறுபாடு ராகு தோஷம் ஒரு முறை ஒரே ஒரு முறை தான் கெடுதலைச் செய்ய முடியும், இல்லையா வாத்தியாரையா?

  ReplyDelete
 39. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 40. /////Blogger Ragu Sivanmalai said...
  Hello Sir
  For a long time, we could not see Namakkal Ciby Anna.....////

  அவரை மட்டுமா? இன்னும் சிலரைக் காணவில்லை! (தமாம் பாலா) பின்னூட்டம் இல்லை என்பதற்காக அவர்கள் வரவில்லை என்று சொல்ல முடியாது. சிலர் படிப்பார்கள் பின்னூட்டமிட நேரமிருக்காது.

  ""ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி
  வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிசி"

  ReplyDelete
 41. ////Blogger krish said...
  Thanks for the lesson. I have mars in the third house of venus( Libra). Since third being an inmical house will the presence of Mars give Vipareetha rajayogam.I won a lottery in Venus dasa Mars bhuthi./////

  Thanks for the information!

  ReplyDelete
 42. //////Blogger BLUESPACE said..
  அய்யா கோவையில் பிறந்து வளர்ந்து படித்து வேலை செய்து, 2007 வருடம் ஐதராபாத்தில் இருந்ததில் தொடங்கி (உங்கள் பதிவின் ) நீண்ட நாள் மாணவன். (Now, i am studying in germany) வழக்கம் போல் செவ்வாய் பற்றிய பதிவும் அருமை.
  என்னது அமைப்பு - அஸ்வினி நட்சத்திரம். லக்னம் மேஷம் சந்திரனுடன் , புதனும் சுகிரனும் 3 ஆம் இடம் , சூரியனும் ராகுவும் நான்காம் இடம். குரு 5 ஆம் இடத்தில். 10 ஆம் இடத்தில் கேது .
  கேது தசையில் பிறந்தேன் ..
  உங்கள் மேலான கருத்து படி (தற்போது 29 - (DOB-2.8.1980) வயதில்) சூரிய தசை 2009 ஆம் ஆண்டு நவம்பரில் முடிகிறது. பின்னர் சந்திர தசை.
  எனது ஐயம்: அதிபதி செவ்வாய் (5 பரல்களுடன் ) ஆறாம் இடத்தில் சனியுடன்(2 பரல்கள்) இருக்கிறார் பகை வீடான கன்னியில்.. இது நல்லதா கேட்டதா..??
  என்னை போல் எண்ணிலடங்கா பேர் பயனடையும் உங்கள் மன நிறைவான இவ் பதிவுலகப் பணிக்கு எனது வணக்கங்கள்../////

  பொதுவாக செவ்வாயும், சனியும் சேர்ந்தால் ஜாதகர் மருத்துவத் துறையில் மேன்மையுறுவார். நீங்கள் எந்தத்துறை?
  இருவரும் சேர்ந்து ஆறில் இருப்பதால் Mixed Results!

  ReplyDelete
 43. Blogger தங்ஸ் said...
  செவ்வாயின் வலிமையைப்பொறுத்து உடலில் சில அம்சங்களைச்சொல்லுவார்கள்...உ.ம்: செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்களின் கண்கள் மிக சிவந்து இருக்கும். உடலில் சில தழும்புகள் இருக்கும்..உண்மையா ஐயா?//////

  அப்படியெல்லாம் தனிப்பட்டுக் கிடையாது!

  ReplyDelete
 44. Blogger அமர பாரதி said...
  வாத்தியாரையா,
  அங்காரகனின் பதிவு அற்புதமாக அமைந்து விட்டது. பரிகாரங்களை சேர்த்து பதிவில் எழுதுவது பதிவின் பலனை இன்னும் கூட்டுகிறது. "லங்கணம் பரம ஒளஷதம்". வாரம் ஒரு நாள் விரதம் இருப்பது உடலின் உள் உறுப்புகள் ஓய்வெடுத்துக்கொண்டு நன்று செயல்பட உதவும்./////

  நன்றி அமரபாரதி!

  ReplyDelete
 45. //////Blogger அமர பாரதி said..
  //சனி நிற்க வைத்து அடிப்பார். ராகு தொங்க விட்டு அடிப்பார்!// முக்கியமான வேறுபாடு ராகு தோஷம் ஒரு முறை ஒரே ஒரு முறை தான் கெடுதலைச் செய்ய முடியும், இல்லையா வாத்தியாரையா?//////

  தோஷங்கள் தடங்கலை ஏற்படுத்தும்!

  ReplyDelete
 46. //முதல் பெண்ணின் லக்கினம் - 39.35.58 நட்சத்திரம் பரணி 1ஆம் பாதம்
  இரண்டாவது பெண்ணின் லக்கினம் 41.15.42 நட்சத்திரம் பரணி 2ஆம் பாதம்
  இப்படி வித்தியாசங்களைக் காணலாம்.
  அதோடு இருவருக்கும் பூர்வபுண்ணியம் வித்தியாசப்படும். அதை யாராலும் கணிக்கமுடியாது.
  அதை வைத்தும் அமைப்புக்கள் மாறும்//

  ஐந்து நிமிட இடைவெளியால் மாறும் பாவங்கள் .அமசத்தில் ஏற்படுத்தும் கிரக மாற்றங்ககள்,இருவரின் குணாதிசியங்கள்,வாழ்க்கைமுறை,எதிர் காலம்,யோக பாவங்கள் இவைகளை புரட்டி போடுவது எப்படி.விளக்கவும்.

  ReplyDelete
 47. வணக்கம் அய்யா !
  மிக அருமையான பாடம்

  ReplyDelete
 48. Blogger ezhil arasu said...
  //முதல் பெண்ணின் லக்கினம் - 39.35.58 நட்சத்திரம் பரணி 1ஆம் பாதம்
  இரண்டாவது பெண்ணின் லக்கினம் 41.15.42 நட்சத்திரம் பரணி 2ஆம் பாதம்
  இப்படி வித்தியாசங்களைக் காணலாம்.
  அதோடு இருவருக்கும் பூர்வபுண்ணியம் வித்தியாசப்படும். அதை யாராலும் கணிக்கமுடியாது.
  அதை வைத்தும் அமைப்புக்கள் மாறும்//
  ஐந்து நிமிட இடைவெளியால் மாறும் பாவங்கள் .அமசத்தில் ஏற்படுத்தும் கிரக மாற்றங்ககள்,இருவரின் குணாதிசியங்கள்,வாழ்க்கைமுறை,எதிர் காலம்,யோக பாவங்கள் இவைகளை புரட்டி போடுவது எப்படி.விளக்கவும்.////

  இணையான ஜாதகங்கள், இரட்டைப் பிறவி ஜாதகங்கள் (Parallel Horoscopes & Twin Horoscopes) என்று இரண்டு தலைப்பில் (Topic) எழுத உள்ளேன். அப்போது விரிவாகப் பார்க்கலாம் சற்றுப் பொறுத்திருங்கள்

  ReplyDelete
 49. ////Blogger saravanan said...
  வணக்கம் அய்யா !
  மிக அருமையான பாடம்//////


  நன்றி நண்பரே!

  ReplyDelete
 50. அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு (2009)வாழ்த்துக்கள்.
  இந்த புத்தாண்டில் நமது ஆசிரியரை இன்னும் நிறைய பாடங்கள் எழுதுமாறு அனைவரின் சார்பில் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  ReplyDelete
 51. ஐயா
  ஒரு சிறிய சந்தேகம்
  எனது தனுசு ராசி,கும்ப லக்னத்திற்கு
  செவ்வாய் மூன்றாம் இடத்தில் ஆட்சி,(4)paralgal ,10 ம் இடம் செவ்வாயின் பார்வை
  செவ்வாய் திசை குரு புத்தி நடக்கிறது
  தொழில் தொடங்க எவ்வளவோ முயற்சி செய்தும் அனைத்தும் தோல்வி தான்

  ReplyDelete
 52. //பொதுவாக செவ்வாயும், சனியும் சேர்ந்தால் ஜாதகர் மருத்துவத் துறையில் மேன்மையுறுவார். நீங்கள் எந்தத்துறை?
  இருவரும் சேர்ந்து ஆறில் இருப்பதால் Mixed Results!///

  Ayya,
  My studies –
  1995- 10 th std.,
  1998 - Diploma in Mechanical Engg.(DME),

  1998-2002- I worked in a private company as engineer (Trainee to senior Engineer - cum team leader) –in Dept Design & Development – (my clients were Ordnance factories & Ammunition factories – Indian Ministry of Defense, & Automobile industries) - 4 years..

  2002-2005 – B.E. (in Mechanical Engineering)
  2005-2007 –worked in other private ltd. (as a Product Development Engineer in Department of Research & Development Engineering) Automobile & industrial application based product company – one of the big company in Coimbatore).


  2007-2008 – not working (higher studies preparation)

  2008 – 2010 doing M.S. in NANO MATERIAL SCIENCE. (got the high valued scholarship provided by European Union Commission for Masters Programs in academic world).

  For ur note,
  Many of people have asked me and me too read in many books that as per my structure i have to be in a medicine field.. But from my childhood i never like the medicine, biology related subjects, because of some hesitation on it...(Is there any reason, plz inform?)..

  (DOB – 02.08.1980 at 23:28pm in coimbatore. )

  Ayya, sorry for many data - i wrote in order to provide you accurate information.

  ReplyDelete
 53. ///Blogger Sunitha said...
  அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு (2009)வாழ்த்துக்கள்.
  இந்த புத்தாண்டில் நமது ஆசிரியரை இன்னும் நிறைய பாடங்கள் எழுதுமாறு அனைவரின் சார்பில் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.//////

  புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி சகோதரி!
  ஆகா, எழுதினால் போயிற்று!

  ReplyDelete
 54. ///////Blogger saravanan said...
  ஐயா
  ஒரு சிறிய சந்தேகம்
  எனது தனுசு ராசி,கும்ப லக்னத்திற்கு
  செவ்வாய் மூன்றாம் இடத்தில் ஆட்சி,(4)paralgal ,10 ம் இடம் செவ்வாயின் பார்வை
  செவ்வாய் திசை குரு புத்தி நடக்கிறது
  தொழில் தொடங்க எவ்வளவோ முயற்சி செய்தும் அனைத்தும் தோல்வி தான்//////

  தொழிலுக்குப் பத்தாம் இடம், அதன் அதிபதி, காரகன் சனி ஆகியவற்றைப் பாருங்கள்
  நண்பரே! அவைகள் வலுவாக இல்லையென்றால் வேலைக்குச் செல்லக்கூடிய ஜாதகம்.

  ReplyDelete
 55. ///////Blogger BLUESPACE said...
  //பொதுவாக செவ்வாயும், சனியும் சேர்ந்தால் ஜாதகர் மருத்துவத் துறையில் மேன்மையுறுவார். நீங்கள் எந்தத்துறை?
  இருவரும் சேர்ந்து ஆறில் இருப்பதால் Mixed Results!///
  Ayya,
  My studies –
  1995- 10 th std.,
  1998 - Diploma in Mechanical Engg.(DME),
  1998-2002- I worked in a private company as engineer (Trainee to senior Engineer - cum team leader) –in Dept Design & Development – (my clients were Ordnance factories & Ammunition factories – Indian Ministry of Defense, & Automobile industries) - 4 years..
  2002-2005 – B.E. (in Mechanical Engineering)
  2005-2007 –worked in other private ltd. (as a Product Development Engineer in Department of Research & Development Engineering) Automobile & industrial application based product company – one of the big company in Coimbatore).
  2007-2008 – not working (higher studies preparation)
  2008 – 2010 doing M.S. in NANO MATERIAL SCIENCE. (got the high valued scholarship provided by European Union Commission for Masters Programs in academic world)
  For ur note,
  Many of people have asked me and me too read in many books that as per my structure i have to be in a medicine field.. But from my childhood i never like the medicine, biology related subjects, because of some hesitation on it...(Is there any reason, plz inform?).
  (DOB – 02.08.1980 at 23:28pm in coimbatore. )
  Ayya, sorry for many data - i wrote in order to provide you accurate information.//////

  கல்வியின்மேல் நீங்கள் கொண்ட காதல் வாழ்க1 வளர்க!
  நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 56. லக்னாதிபதி சனி களத்திர ஸ்தானம் 7ல்,
  10 ற்கு செவ்வாய் தான் அதிபதி
  அதனால் தான் கேட்டேன் ஐயா
  10ம இடம் 27 பரல்கள்

  ReplyDelete
 57. Sir
  Really very good article.

  For me
  My Lagnam is Simham

  Mars is in the 3rd house (TULA RASI)

  mars is sitting in in TUla rasi alongwith 'VENUS'. Is it good? or do I have to do some Pariharam?

  ReplyDelete
 58. Blogger saravanan said...
  லக்னாதிபதி சனி களத்திர ஸ்தானம் 7ல்,
  10 ற்கு செவ்வாய் தான் அதிபதி
  அதனால் தான் கேட்டேன் ஐயா
  10ம இடம் 27 பரல்கள்///////

  சொந்தத் தொழில் செய்யவேண்டுமென்றால் 10ஆம் வீட்டில் 30 பரல்களுக்குமேல் இருக்க வேண்டும்
  அதோடு அந்த் வீட்டின் அதிபதி ஜாதகத்தில் மறையக்கூடாது. தன் சுயவர்க்கத்தில் வலுவாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கவேண்டும்

  உங்கள் 10ஆம் வீட்டு அதிபதி அந்த இடத்தில் இருந்து அதற்கு ஆறாம் வீட்டில் இருக்கிறார் (அது மறைவிடம்)
  அதோடு பரல்களும் 4 மட்டுமே.

  உங்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய ஜாதகம் முயற்சி செய்யுங்கள். கிடைக்கும்
  ராசி நாதன் குரு இப்போது கோச்சாரத்தில் 2ஆம் இடத்திற்கு வந்துள்ளார். முயற்சி செய்யுங்கள். கிடைக்கும்

  ReplyDelete
 59. Blogger MarmaYogi said...
  Sir
  Really very good article.
  For me
  My Lagnam is Simham
  Mars is in the 3rd house (TULA RASI)
  mars is sitting in in TUla rasi alongwith 'VENUS'. Is it good? or do I have to do some Pariharam?/////

  சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். சுக்கிரன் யோகமில்லாதவன். இருவரும் இடத்தில்.
  இருவருக்கும் இடைவெளி எவ்வளவு?

  ReplyDelete
 60. //ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
  ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக
  இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.//

  ஐயா,
  கண்களுக்குப் புலப்படாத கலைகள் - இதை பற்றி சற்று விளக்குங்கள்.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com