மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.11.18

நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்!!!!!


நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்!!!!!

சிவகெங்கைச் சீமை திரைப்படம்
#மருது பாண்டியர்

தமிழ் மண்ணைச் சேர்ந்த அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. படம் வெளிவந்து 59 வருடங்களுக்கு பிறகு இப்போது ஒரு ரிவ்யூ (review).

கண்ணதாசனே திரைக்கதை,வசனம், பாடல் வரிகள் எழுதி தயாரித்த சிவகெங்கைச் சீமை படம் 1959ல் வெளியாகியுள்ளது. கே. சங்கர் இயக்கியுள்ளார். பிளாக் அன்ட் ஒய்ட் படம் தான்.இது வெற்றிப்படமில்லை என்றபோதும் தமிழ் சினிமாவில் இன்றும்  ஒரு முன்மாதிரிப் படம்.

சரித்திரப்படம் என்றவுடனே பளபளக்கும் ஜிகினா ஆடைகள், பிரம்மாண்டமான அரண்மனை, டம்மி தங்க வைர நகைகள், அந்தப்புரம், விஷம் கொடுத்து கொலை செய்யும் சதிகாரர்கள் , பக்கம் பக்கமாக வசனம் பேசும் நடிகர்கள் என்ற பிம்பமே எப்போதுமிருக்கிறது. ஏன் இக்காலத்தில் வெளியான பாகுபலி படமே அப்படித் தானே?

அந்த வகையில் சிவகங்கை சீமை முன்னோடியான படம். இதில் தான் முதன்முறையாக மன்னர்கள் வேஷ்டி அணிந்து மேல்துண்டுடன் இருக்கிறார்கள்.  பகட்டான ஜிகினா ஆடைகள் கிடையாது.  சின்னமருது, பெரியமருது இருவரையும் பற்றிய படம். அது போலவே படத்தில் வரும் பெண்களும் கண்டாங்கி சேலைகள் கட்டி யதார்த்தமாக இருக்கிறார்கள்.

அன்றைய சிவகங்கை சீமை என்பது தெக்கூர்,ஒக்கூர், சிறாவயல், பூங்குடி, திருப்பத்தூர், நரிக்குடி திருமயம், முக்குளம், நாலுகோட்டை, நாட்டரசன் கோட்டை உள்ளடக்கியது. இதற்குள் தான் செட்டிநாடும் அடங்குகிறது. கண்ணதாசன் செட்டிநாட்டில் பிறந்ததால்   அவர் சிவகங்கை சீமையின் வரலாற்றினை ஆழ்ந்து அறிந்திருக்கிறார். படத்தில் வரைபடம் காட்டப்படுகிறது அதை பார்த்தால் நன்றாகவே புரியும்.

மருது சகோதர்களை பற்றிய  பாடல்களையும் கூட கண்ணதாசன் சிறப்பாக தனது படத்தில் எழுதியிருக்கிறார். படத்தில் வரும் வெல்ஷ் துரை ஆங்கிலத்தில் தான் பேசுகிறார். துபாஷி தான் அதை மொழிபெயர்த்து சொல்கிறார். கோட்டைகள், வீடு யாவும் அந்த நிலப்பகுதியின் யதார்த்தமான கட்டிடங்களாக உள்ளது. சாப்பிடுவது கூட தரையில் அமர்ந்து தான் சாப்பிடுகிறார்கள்  மேடைகள் பயன்படுத்தவில்லை அந்த அளவுக்கு யதார்த்தமாக எடுத்துள்ளார்கள்.

படத்தின் மிகப்பெரிய குறை கதைக்கு சற்றும் தொடர்பில்லாமல் திராவிடநாடு பற்றி பாடும் பாடல். இவை தவிர்க்கப் பட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க கூடும்.

கதைச் சுருக்கம்:

கட்டபொம்மனைப் பிடித்து வெள்யையர்கள் தூக்கிலிட்டதால் அவரது தம்பியான ஊமைத்துரை சிவகங்கை சீமையில் அடைக்கலமாகிறார். பெரிய மருதுவிற்கு தெரியாமல் சின்னமருது ஊமைத்துரைக்கு அடைக்கலம் தருகிறார். அது வெள்ளையர்களுக்கு கோபத்தை உருவாக்குகிறது. மருது சகோதர்களிடம் வெள்ளையர்கள்  ஊமைத்துரையை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நம்பிவந்தவரை காட்டி கொடுப்பது நட்பல்ல என்று வெள்ளையர்களை மருது சகோதரர்கள்  எதிர்க்கிறார்கள்.

வெள்ளையர்களுக்கும் மருது பாண்டியருக்கும் போர் ஆரம்பமானது. 2000 வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.
இறுதியில் வெல்ஷ் துரை மருது குடும்பத்தினரை சிறை பிடிக்கிறான். மருது சகோதரர்கள் இருவரும் திருப்பத்தூரில் வெல்ஷ் துரையால் தூக்கிலிடப் படுகிறார்கள். பெரிய மருதுவின் கடைசி ஆசை படி அவரின் தலையை துண்டித்து காளையார் கோவில் முன்பாக வைக்கிறார்கள். மருது குடும்பத்தில் எவரையும் விட்டுவைக்காமல் பழிதீர்த்தது கும்பினி அரசு (வெள்ளையர்கள்).
●●●●●●●●●●●●●

வீரபாண்டிய கட்டபொம்மனும் சிவகங்கை சீமையும் ஒரே நேரத்தில்(1959ல்) தயாரிக்க பட்டிருக்கின்றன. அரசியல் காரணங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கும் சிவகெங்கைச் சீமை படத்திற்கும் இடையே தேவையற்ற மோதல்கள், சர்ச்சைகள் உருவாகியுள்ளது.

கண்ணதாசனே இதைப் பற்றி தனது சுயசரிதையான வனவாசம் நூலில் சொல்கிறார் தான் செய்த ஒரே தவறு இந்த படத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு முன்பாக வெளியிட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பிறகு இது வெளியாகி இருந்தால் ஊமைத்துரையின்  காரணமாக மருது சகோதரர்கள் உயிர்விடும் போது பார்வையாளர்கள் மிகவும் வருந்தியிருப்பார்கள். ஆனால் தன் படம் முன்னாடியே வெளியானது தோல்விக்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்.

வெற்றி தோல்வியை தாண்டி சிவகங்கை சீமை படம் பல்வேறு வரலாற்று பதிவுகளை சொல்கிறது. குறிப்பாக வெள்ளையர்களை எதிர்க்க வேண்டும் என்ற சூழல் மருதுபாண்டியர்களுக்கு எப்படி உருவாகிறது என்பதை படம் அழகாக சித்தரிக்கிறது.

ஆக்கம் -Kailash PL
அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!!!
------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.11.18

பட்டேலுக்கு ஏன் சிலை என்று கேட்காதீர்கள்!!!


பட்டேலுக்கு ஏன் சிலை என்று கேட்காதீர்கள்!!!

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ஏன் சிலை வைக்க வேண்டும் என்று பலர் கேட்கிறார்கள்..?

சர்தார் வல்லபாய் பட்டேல் மட்டும் இல்லையென்றால் இன்று முகலாய நிஜாம் சமஸ்த்தானத்திற்க்கு விசா எடுத்து தான் செல்ல வேண்டிய நிலைமை இருந்திருக்கும்.....

முகலாய நிஜாம் சமஸ்தானம்  என்பது இன்றைய தெலுங்கானா மாநிலம். ஆந்திராவின் சில பகுதிகள், கர்நாடகா மாநிலத்தில் உள்ள இன்றைய  ஹைதராபாத்-கர்நாடக பகுதி, மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதி  ஆகியவற்றை உள்ளடக்கியது...

85% மேல் ஹிந்துக்களின் மக்கள் தொகை கொண்டது முகலாய நிஜாம்  ஹைதராபாத் சமஸ்தானம் ......

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு ஹைதராபாத் மகாணத்தை ஆண்ட நிஜாம்  இந்த பகுதியை இந்தியாவுடன் இணைக்க மறுத்து மக்களின் விருபத்திற்கு மாறாக  தனி நாடாக இருக்க போகிறோம் என்றார்.....

தனி நாடு என்று சொல்லி பாகிஸ்தானுடன் செல்ல தான் அவரின் உத்தேசமாக இருந்தது......

ஆனால் சில மாதங்கள் பொறுத்த அன்றைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல்  பிரதமர் நேரு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று இருந்த சமயத்தில் ராணுவத்தை அனுப்பி ஹைதராபாத் மகாணத்தை கைப்பற்றி இந்தியாவுடன் இணைத்தார்.....

இதற்கிடைய காஷ்மீர் போன்று சில ஒப்பந்தங்களை போட்டு ஹைதராபாத்தை தனி நாடாக இருக்க நேரு  சம்மதித்தார்....

ஆனால் நேரு நாட்டில் இல்லாத போது ராணுவத்தை வைத்து ஹைதராபாத்தை வெற்றிகரமாக இந்தியாவுடன் இணைந்தார் இந்தியாவின் இரும்பு மனிதர்  பட்டேல்...

அது மட்டுமல்லாமல் குஜராத் பகுதியில் உள்ள ஜூனாகட் சமஸ்தானம்  , கேரளா கன்னியாகுமரியை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானம் உட்பட 500 க்கு மேற்பட்ட சிறு மாகாணங்களை இந்தியாவுடன் இணைந்தவர் பட்டேல்........

நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட  பொறுப்பு காஷ்மீரை வெற்றிகரமாக இணைப்பது.... ஆனால் அந்த பிரச்சினை இன்று வரை தீர்ந்தபாடில்லை... காஷ்மீர் பிரச்சினையை ஐநா வரை எடுத்து சென்று ஆரம்பித்திலேயே தீராத  பிரச்சினையை உண்டாக்கியவர் நேரு.

ஆனால் வெறும் நான்கே நாட்களில் ராணுவத்தை வைத்து வெற்றிகரமாக பல மாகாணங்களை  இணைந்தவர் வல்லபாய்  பட்டேல்.

இப்படி  இந்தியாவை வெற்றிகரமாக இணைத்த வல்லபாய் பட்டேலுக்கு ஆயிரம் அடியில்  சிலை வைத்தாலும் தவறில்லை.

நேருவிற்கு பதில் பட்டேல் பிரதமர் ஆகியிருந்தால் இந்தியாவின் தலையெழுத்து ஆரம்பித்திலேயே மாறியிருக்கும்...

வங்காள பிரிவினை மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்.

அது போல் நடக்க விடாமல் முகாலய மன்னனிடம் இருந்து ஹைதராபாத்  சமஸ்தானத்தை எடுத்து இந்தியாவுடன் இணைத்து பல கோடி இந்துக்களை இஸ்லாமிய மதவெறி முகலாயனிடம் இருந்து  காப்பாற்றினார் பட்டேல்.....

அப்படி இணைத்திருக்கவில்லை என்றால் பாகிஸ்தான்  போன்று இருந்திருக்கும்  ஹைதராபாத் சமஸ்தானம்.....

*இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு குஜராத்தில் நர்மதை நதி கரையோரத்தில் பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியால் தேசத்திற்க்கு அற்பணிக்கப்படுகிற 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேலின் உலோகத்தால் ஆன திரு உருவ சிலை உலகிலேயே மிக உயரமான சிலை என்று சாதனை படைத்துள்ளது. அமேரிக்கா சுகந்திர தேவி சிலையை விட இருமடங்கு உயரமானது, சீனா புத்தர் சிலையை விட மூன்று மடங்கு உயரமானது*

*#STATUE OF UNITY*
-------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.11.18

Astrology: புதிர்களைப் பற்றிய ஒரு விளக்கம்!!!!


Astrology: புதிர்களைப் பற்றிய ஒரு விளக்கம்!!!!

2-11-2018ம் தேதி பதிவில் ஒரு ஜோதிடப் புதிரைக் கொடுத்து உங்களைப் பதில் எழுதச் சொல்லியிருந்தேன்.

”பதிவில் உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம் என்றும் ஜாதகிக்கு திருமணம் நடந்ததா- அல்லது நடக்கவில்லையா? நடந்தது என்றால் எந்த வயதில் நடந்தது? நடக்கவில்லை என்றால் என்ன காரணம் ? உங்கள் பதிலை பின்னூட்டத்தில் எழுதுங்கள்” என்றும் கேட்டிருந்தேன்.

நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான. K, முத்துராமகிருஷ்ணன் (KMRK) அவர்கள் கேள்வி இப்படி இருந்தால் நிறைய அன்பர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். கேள்வியை எளிமைப் படுத்தி அனைவரும் பங்கு கொள்ளுமாறு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு கேள்வியை எளிமைப் படுத்தியுள்ளேன்,

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம் உள்ளது. அவருக்கு தாமதமாக அவருடைய 40வது வயதில்தான் திருமணம் நடந்தது. அதீத தாமதமான திருமணத்திற்கு ஜாதகப்படி என்ன காரணம்? எழுதுங்கள். முடிந்தால் திருமணம் மறுக்கப்படாமல் நடந்ததற்கு என்ன காரணம் என்பதையும் எழுதுங்கள்.

அனைவரும் பங்கு பெற வேண்டும் என்பதற்காக மூன்று நாள் அவகாசம்! சரியான பதில் 10-11-2018 சனிக்கிழமை அன்று வெளியாகும்!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!