+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Hide & Seek game by blogger.com
ப்ளாக்கரின் கண்ணாம்பூச்சி ஆட்டம்!
ப்ளாக்கர் அமைப்பு நேற்று தன் செல்வங்களுடன் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடியது.
நம்முடைய ப்ளாக்கர் தளத்தில் இருந்து பின்னூட்டங்களை (comments) பதிவிற்கு அனுப்பினால், போகாது. நீ செய்வது தவறு என்று சொல்லும். அத்துடன் கட்டிய கண்களை அவிழ்த்தும் விடாது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி சிரமப்பட்டு அனுப்பினால், முதலில் பின்னூட்டங்கள் பதிவிற்குச் செல்வது மாதிரிப் போய்விட்டுத் திரும்பவும் இங்கே வந்து அமர்ந்து கொண்டுவிடும். அல்லது வராது காணாமல் போய்விடும். நமது மின்னஞ்சல் பெட்டியில் போய் உட்கார்ந்து கொள்ளும். அங்கே போய் நடவடிக்கை எடுத்தால் மீண்டும் ஒரு கண்ணாம்பூச்சி ஆட்டம்
மாலையில் நமது முத்துராமகிருஷ்ணர் அவர்களும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் கலந்து கொண்டு, ஆட்டத்தில் இருக்கிறார் என்று தெரியவந்தது. நாங்கள் எல்லாம் ஆடும் வயதைத் தாண்டி விட்டோம் என்பதும், ஆடுவதற்கு வேண்டிட தொழில்நுட்ப அறிவு எங்களுக்கு இல்லை என்பதும் ப்ளாக்கருக்குத் தெரியாது. அதுதான் சோகம்
Error approving moderated comments - error code bx-03qgph என்பது மட்டுமே தெரியவரும். சுமார் 4 மணி நேர (இரண்டு பதிவுகளை எழுதும் நேரம்) போராட்டத்திற்குப் பிறகு, வேறு வழியில்லை என்று ப்ளாக்கர் உதவிக் குழுவிற்குச் சென்று பார்த்தால், அங்கே நூற்றுக் கணக்கான பேர்கள் நமக்கு முன்னால் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
கூகுள் ஆண்டவர், நேரடியாக அருள் பாலிக்காமல், இதற்கென்று, ப்ளாக்கர் அரங்கம், உதவிக்குழு என்று இரண்டு அமைப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
பத்து அல்லது நூறு பேர்கள் என்றால், அவரால் நேரடியாக உதவி செய்ய முடியும். இன்றையத் தேதியில் 20 கோடிப் பேர்கள் என்றால் அவரால் என்ன செய்ய முடியும்?
ஒரு புள்ளி விவரம்:
Technorati currently states it is tracking over 112.8 million blogs, a number which obviously does not include all the 72.82 million Chinese blogs as counted by The China Internet Network Information Center. Blog statistics often concern the English language blogosphere but we should not forget about the millions of other blogs that are not always included in estimations.
கடைசியாக உதவிக்குழுவிடம் என்னுடைய பிரச்சினையைப் பதிந்துவிட்டு வந்தேன். அதில் இருக்கும் யாரோ புண்ணியவான் சரி செய்து இருக்கிறார். இன்னும் முழுமையாகச் சரியாகவில்லை. இன்று சரியாகும் என்று நினைக்கிறேன்
ஆகவே அனைவரும் பொறுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்த பாடம் நாளைக்கு நடைபெறும். இன்றைக்கு வகுப்பறைக்கு வந்தவர்கள் நீங்களாகவே பழைய பாடங்களைப் புரட்டிப்பார்த்துவிட்டுச் செல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
7.7.10
6.7.10
பிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவிருக்கும்!
----------------------------------------------------------------------------
பிறப்பு என்றொரு கதையிருந்தால் இறப்பு என்றொரு முடிவிருக்கும்
“உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருளிருக்கும்”
என்றார் கவியரசர் கண்ணதாசன்
அதுபோல
“பிறப்பு என்றொரு கதையிருந்தால்
இறப்பு என்றொரு முடிவிருக்கும்”
முடிவில்லாத கதையே இல்லை. முடிவில்லாத மனித வாழ்க்கையும் இல்லை! எல்லோருடைய வாழ்க்கையும் முடிவை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக் கிறது. படம் எத்தனை ரீல்கள்? எப்போது முடியும் என்பது மட்டும் தெரியாது. அது தெரிந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. ஆகவே அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.
“ஆறிலும் சாவுண்டு.
நூறிலும் சாவுண்டு”
ஆறு ரீல்களில் முடிகிற படமும் உண்டு. நூறு ரீல்கள்வரை இழுத்தடித்துக்கொண்டு ஓடுகிற படமும் உண்டு.
பயத்திலேயே பெரிய பயம் மரண பயம்தான். அந்த பயம் இல்லாதவர்கள் ஞானிகள் மட்டுமே. அல்லது ஞானம் உள்ளவர்கள் மட்டுமே!
---------------------------------------------------------
எல்லாம் இருக்கிறவரைதான். அதாவது உன்னுடையது, என்னுடையது என்னும் உடைமைப் போராட்டம் எல்லாம் உயிர் உள்ளவரைதான்!
பட்டம், பதவி, சொத்து, சுகம், செல்வம் எதுவும் கூட வராது.
அதைத்தான் பட்டினத்தார் நெத்தியடியாக ஒற்றைவரியில் சொல்லிவிட்டுப் போனார். “ அடேய் நீ செத்துப்போனால் உன்னுடன் நீ போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கும் எதுவும் வராது!” என்னும் பொருள்பட இப்படிச் சொன்னார்:
“காதறுந்த ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே”
காதறுந்து ஒடிந்துபோய் எதற்கும் பயன்படாத ஊசிகூட உன்னுடன் வராது என்றார். அதையும் அவர் சொல்லவில்லை. அவருக்கு மகனாக
வந்துதித்த சிவபெருமான், எழுதிக்கொடுத்த சிற்றோலை மூலம்
உணர்ந்து கொண்டார். அது உங்களுக்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும்.
------------------------------------------------------------
ஆனால் நாம் கேட்டுக்கொள்வோமா? மாட்டோம்!
அதையெல்லாம் சாகிற அன்றைக்குப் பார்த்துக்கொள்வோம். இப்போது போய் இரண்டு ‘பெக்’ அடித்துக் கவலையை மறப்போம் என்று கிளம்பிவிடுகிறவர்கள் பலர் உண்டு.
“ஒன்றாம் தேதியானால், செல்போன் பில் கட்ட வேண்டும். பணம் வேண்டாமா? ஹவுஸிங் லோன் கட்ட வேண்டும் அல்லது வீட்டு வாடகையைக் கொடுக்க வேண்டும் பணம் வேண்டாமா? அரிசி
கிலோ 44 ரூபாய் விற்கிறது, பெட்ரோல் லிட்டர் 55 ரூபாய் விற்கிறது - பணம் வேண்டாமா? சில்லறைக் கவலைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் செல்வந்தனாக இருக்க வேண்டும். செல்வம் வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அல்லது செல்வத்தைத் தேடி அலையாமல் அல்லது உழைக்காமல் இருக்க முடியுமா? பட்டினத்தார் சொன்னதெல்லாம் பரதேசம் போகிற காலத்திற்கு; இன்றைய பொருளாதார சூழ்நிலைக்கு அதெல்லாம் ஒத்துவராது.
சும்மா வாயை மூடிக்கொண்டிருங்கள்!” என்று வியாக்கியானம் பேசுபவர்களே அதிகம். அவர்களிடம் வாயைக் கொடுத்தால் மாட்டிக்கொண்டு விடுவோம்.
அடியவன் சொல்வது இதுதான்: ஒருபக்கம் வாழ்வதற்குப் பொருளைத் தேடு. இன்னொரு பக்கம் போகிற காலத்திற்கு அருளைத் தேடு. இருளைப் போக்கு!
----------------------------------------------------------------
சரி பாடத்திற்கு வருகிறேன்.
மரணத்தின் நிலைப்பாட்டைப் பட்டினத்தடிகள் ஒரு பாட்டில் - அதுவும் நான்கே வரிகளில் மிகவும் அழகாகச் சொன்னார். பாடலைப் பாருங்கள்.
“வீடிருக்க தாயிருக்க வேண்டுமனை யாளிருக்க
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”
“உன்னுடைய வீடு இங்கே இருக்கிறது. உன்னைப்பெற்ற தாயும், உனக்குக் கழுத்தை நீட்டிய மனைவியும் இங்கே இருக்கிறார்கள். நீ பெற்ற பட்டம், பதவி, பெருமைகள் எல்லாம் இருக்கிறது. உனக்கான அடுத்த வேளை அறுசுவை உணவு தயாராக இருக்கிறது. உன்னுடைய அருமைப் பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள். உன் வீட்டுக் கொள்ளையில் மாடுகளும், அவை ஈன்ற கன்றுக்குட்டிகளும் இருக்கின்றன. நீ தேடி வைத்த பொன், பொருள் எல்லாம் இருக்கிறன்றன. உன் உடல் இருக்கிறது. உன்னை மட்டும் காணவில்லையே - எங்கேயடா போனாய் நீ?” என்று கேட்டு உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துபோன நிலையை மிகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் அவர். உடம்பை விட்டு ஆன்மா நீங்கும் நிலைதான் மரணம்.
அதைச் சொல்வதுதான் எட்டாம் வீடு
----------------------------------------------------------------
வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்தவன் சொன்னான்:
ஓரெட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் பெறதா கல்வியும்
மூவெட்டில் பண்ணாத திருமணமும்
நாலெட்டில் பெறாத குழந்தையும்
ஐயெட்டில் தேடாத செல்வமும்
ஆறெட்டில் பெறாத புகழும்
ஏழெட்டில் சுற்றாத ஸ்தலமும்
எட்டெட்டில் கிடைக்காத மரணமும் வீணே!
ஆக எட்டெட்டில் - அதாவது 64 வயது வரைதான் - வாழ்க்கை அங்கீகாரம் உடையதாக, அதிகாரம் உடையதாக இருக்கும். அதற்குப் பிறகு உயிருடன் இருக்கும் வருடங்கள் எல்லாம் போனசாக வருவது.
அங்கீகரிக்கப்பட்ட காலத்தில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு விடுங்கள். ஆட்டம் பாட்டத்தை எல்லாம் முடித்துக்கொண்டு விடுங்கள்.
உயில் எழுதி வைக்க வேண்டுமென்றால் வைத்துவிடுங்கள்.
அதற்குப் பிறகு, எந்தக் கவலையும் இன்றி சிறுவர்களைப் போல, சிறுமிகளைப் போல அந்தக் கணங்களில் வாழ்ப் பழகிக்கொள்ளுங்கள். அந்தந்த நேரங்களில் வாழப் பழ்கிக்கொள்ளுங்கள்.
Try to live in a momentary world and enjoy momentary life (Momentary means lasting for only a moment. Occurring or present at every moment)
வாரியார் சுவாமிகள் சொல்வார்::
“ஒரு ஊருக்குப் போகிறோம் என்றால், அங்கே பயணிப்பதற்கான இரயில் அல்லது பேருந்து சீட்டிற்கு முன் பதிவு செய்து வைக்கிறோம். வேண்டிய பணத்தை எடுத்து வைத்துக்கொள்கிறோம். அங்கே தங்குவதற்கு
விடுதிகளில் முன் பதிவு செய்து வைக்கிறோம். எத்தனை நாட்கள் தங்க உள்ளோமோ அத்தனை நாட்களுக்குத் தேவையான உடைகளை எடுத்து வைத்துக்கொள்கிறோம். நம்மை அழகு படுத்துவதற்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொள்கிறோம். சூட்கேசைத் தயார்
செய்து வைக்கிறோம். ஆனால், போனால் திரும்ப முடியாத இறுதிப்
பயணம் ஒன்று இருக்கிறது. அதற்கு எதை எடுத்து வைத்திருக்கிறீர்கள்?”
என்று கேட்பார்.
எதையும் எடுத்துக்கொண்டு போகமுடியாது என்று அவருக்குத் தெரியும். எதை என்று அவர் கேட்பது புண்ணியக் கணக்கில் எதை எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதாகும்!
புண்ணியக் கணக்கில் நீங்களும் உங்களுக்கு வேண்டியதை எடுத்து வையுங்கள்.
---------------------------------------------------------------------
மனிதனின் ஆயுள் காலம் நான்கு வகைப்படும்
1. குழந்தைப் பருவத்தில் மரணம். இது எட்டு வயதிற்குள் நடப்பது.
2. அற்ப ஆயுளில் மரணம் - இது எட்டில் இருந்து 32 வயதிற்குள் நடப்பது.
3. மத்திம வயதில் மரணம் - இது 32ல் இருந்து 64 வயதிற்குள் நடப்பது.
4. தீர்க்கமான ஆயுள் அல்லது பூரண ஆயுள் - 64ற்கு மேல் 100 அல்லது 120 வயது வரை வாழ்ந்து மரணிப்பது.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்! இன்றல்ல - அடுத்தடுத்த நாட்களில்.
(தொடரும்)
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்.
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
பின் குறிப்பு: ப்ளாக்கர் சொதப்புகிறது. பின்னூட்டங்கள் பதிவிற்கு வருவதில்லை. என்னவென்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். பின்னூட்டம் இட்டவர்கள் பொறுத்திருக்கவும்
வாழ்க வளமுடன்!
லேபிள்கள்:
Astrology,
classroom,
Lessons 361 - 370
5.7.10
நீண்ட ஆயுள் நன்மையா அல்லது தீமையா?
நீண்ட ஆயுள் நன்மையா அல்லது தீமையா?
எட்டாம் இடத்தில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்:
1
சூரியன்
பொதுவிதி - ஒரு வரியில்
Sun- medium life, eye diseases, and altercations (often heated, in which a difference of opinion is expressed)
******************
சூரியனுக்குப் பொதுவாக 1,2,3,4,5, 8, 9 & 11 ஆகிய இடங்கள் உகந்த இடங்கள்: 6, 7, 10 &12 ஒவ்வாத இடங்கள். 8ஆம் இடத்தில் வந்தமரும் சூரியன், ஜாதகனுக்கு, சிக்கலான சூழ்நிலைகளில் கைகொடுப்பான்.
ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சூரியன் வந்தமர்ந்திருந்தால், அதுவும் உச்சம் பெற்றிருந்தால், ஜாதகனுக்குப் பூரண ஆயுள் உண்டு. அரவிந்தசாமியைப் போல கவர்ச்சிகரமாக இருப்பான். சிலர் சிறந்த மேடைப் பேச்சாளராக
உருவெடுப்பார்கள். பெண்ணாக இருந்தால் தமண்னாவைப்போல கவர்ச்சியாக இருப்பாள்.
எட்டாம் இடத்தில் சூரியனுடன் எட்டாம் அதிபதி அல்லது 11ஆம் அதிபதி சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குத் திடீர் பொருள் வரவுகள் உண்டாகும்
அதே நேரத்தில், எட்டாம் இடத்தில் வந்தமரும் சூரியன், பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது நீசம் பெற்றிருந்தால் அல்லது தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்றிருந்தால், அது ஜாதகனுக்குச் சாதகமானதல்ல.சிலருக்கு முகத்தில் தழும்புகள், வடுக்கள் ஏற்படும். வழ்க்கை சிலாக்கியமாக இருக்காது!
கண் பார்வைக் குறைவுகள் ஏற்படும்.
If the Sun occupies the 8th, the native will have deformed eyes, be devoid of wealth and happiness, be short- lived and will suffer separation from his relatives. - Saravali
-----------------------------------------------------
2.
சந்திரன்
பொதுவிதி - ஒரு வரியில்
Moon- Affected by phlegm, trouble in left eye, danger of drowning and loss of wealth
******************
எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தமர்ந்திருந்தால் மனப்போராட்டங்கள் மிகுந்த ஜாதகம். மன நிம்மதி இருக்காது. உளவியல் பிரச்சினைகள் உண்டாகும். நிலையான பிடிப்புடையவனாக ஜாதகன் இருக்க மாட்டான். உடல்
நலமில்லாதவனாகவும் இருப்பான். சிலருக்கு தாய் அவனுடைய சின்ன வயதிலேயே, ஜாதகியாக இருந்தால், அவளுடைய சின்ன வயதிலேயே
இறந்து போயிருப்பாள். தாயில்லாக்குழந்தையாக வளர்ந்திருப்பான். அல்லது
வளர்ந்திருப்பாள். கண் பார்வைக்குறைகள் உண்டாகும்.
வம்சாவழிச் சொத்துக்கள் வந்து சேரும். எதையும் அனுபவித்து மகிழக்கூடிய தன்மை இருக்கும். போர்க்குணம் மிகுந்திருக்கும். பெருந்தன்மையும் உடன் இருக்கும். சந்திரன் எட்டில் இருக்க, ஜாதகத்தில் (வேறு எங்கேனும்)
சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் கண்பார்வைக் கோளாறுகள் உண்டாகும்.
If the Moon is in 8th, the native will be very intelligent, very splendourous and will suffer from diseases. If the Moon
be weak, he will be short-lived. - Saravali
-------------------------------------------------------
3.
செவ்வாய்
பொதுவிதி - ஒரு வரியில்
Mars-Short life, will kill wife, troubles from enemies
******************
ஜாதகத்தில் வேறு நல்ல அம்சங்கள் இல்லாமல், செவ்வாய் வந்து எட்டில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குறைந்த ஆயுள். சிலர் மனைவியை இழந்து துன்பப்பட நேரிடும். குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் இருக்கும்.
தங்களது சுயமகிழ்ச்சிக்காகச் சிலர், வேறு பெண்களைத் தொடுப்பாக வைத்திருப்பார்கள். தொடுப்பு என்றால் என்னவென்று தெரியுமல்லவா?. உறவுகளூடன் மோதல்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கை சண்டை சச்சரவுகளால் நிலை குலைந்து இருக்கும். அதாவது வெளியே சொல்லும்படியாக இருக்காது.
சிலருக்கு மூலநோய் (piles complaint) இருக்கும். மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்துவார்கள்.
If Mars occupies the 8th, the native will suffer from diseases, be short-lived, will possess an ugly, or deformed body, will do base acts and will suffer grief. - Saravali
-------------------------------------------------------
4.
புதன்
பொதுவிதி - ஒரு வரியில்
Mercury- Is always good in the 8th house. Learning of Scriptures and Long life.
*****************
எட்டாம் இடத்தில் புதன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு.
ஜாதகனுக்குப் பல விஷேச குணங்கள் இருக்கும்.எல்லோரையும் அனுசரித்துப்போகும் தன்மை இருக்கும். யாரையும் சமாளிக்கும் அல்லது வளைத்துப்போடும் தன்மை இருக்கும்.
செல்வம் பலவழிகளில் வந்து சேரும். ஜாதகனும் தன் சொந்த முயற்சியில் பொருள் ஈட்டுவான். சுருக்கமாகச் சொன்னால் செல்வந்தனாக இருப்பான் (பொதுவிதி)
அதிகம் கற்றவனாக இருப்பான். பண்டிதனாக இருப்பான். எல்லா விஷயங்களும் தெரிந்தவனாக இருப்பான். அதிக நாள் உயிரோடு இருப்பான். அதே நேரத்தில் ஆசாமி நோஞ்சான் வடிவத்தில் இருப்பான்.
If Mercury occupies the 8th, the native will win famous names (titles), be strong, long-lived, will support his family and be equal to a king, or will become a justice - Saravali
-----------------------------------------------------
5
குரு
பொதுவிதி - ஒரு வரியில்
Jupiter- long life but sadness on account of sons.
******************
ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. மனதில் மகிழ்ச்சி இருக்காது. ஆனால் பெருந்தன்மை உடையவனாக இருப்பான். அறங்கள் செய்பவனாக இருப்பான். பேச்சுத்திறமை இருக்காது. மறைமுகமாகப் பல தகாத செயல்களைச் செய்வான். ஆனால் அவைகள் வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வான். சிலருக்கு விதவைப் பெண்களுடன் அல்லது தகாத பெண்களுடன் தொடர்பு இருக்கும். உடல் உபாதைகள், வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். மரணம் ஏற்படும் சமயத்தில், வலியில்லாத மரணம் உடையவனாக இருப்பான்.
குரு நீசமடைந்திருந்தால், வாழ்க்கை சுத்தமாக மகிழ்ச்சியற்றதாக இருக்கும்
If Jupiter occupies the 8th, the native will be insulted, long-lived, be a servant, will serve his own people, be pitiable and will have union with dirty women - Saravali
-----------------------------------------------------
6
சுக்கிரன்
பொதுவிதி - ஒரு வரியில்
Venus - long life, inheritance, scriptural knowledge.
******************
எட்டாம் இடத்தில் சுக்கிரன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு. பல வரங்களுடன் பிறந்த அமைப்பு.(It is a blessed position) ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். வசதியான வாழ்க்கை அமையும்.
சிலருக்கு, அவர்களுடைய சின்ன வயது வாழ்க்கை ஏமாற்றங்களும், உணர்ச்சிப் போராட்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கும். அதன்காரணமாக வயதான காலத்தில் ஆன்மிகச் சிந்தனைகளும், தர்மச் சிந்தனைகளும் உடையவர்களாக இருப்பார்கள். தங்கள் பெற்றோர்கள் மீது அதீத அன்பையும் பாசத்தையும் வைத்திருப்பார்கள். எட்டாம் இடத்து சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால், அதீதமான செல்வம் சேரும்.
(சார் எனக்கு எட்டில் உச்சம் பெற்ற சுக்கிரன், அதீத செல்வம் சேரவில்லையே என்று யாரும் கேட்க வேண்டாம். நான் சிம்ம லக்கினக்காரன் எனக்கும் எட்டில் உச்சமான சுக்கிரன். செல்வம் வந்தது. அத்தனையும் காணாமல் போய்விட்டது. செலவாகிவிட்டது. அதற்குக் காரணம் இரண்டாம் வீட்டில் பாப கிரகம் அமைந்துள்ளது. ஓட்டை அண்டா. தண்ணீர் எப்படித் தேங்கும்? இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், பொதுவிதிகளை நம் ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்களுடனும் சேர்த்துப் பரிசீலிக்க வேண்டும்)
எட்டில் அமரும் சுக்கிரன் நீசமடைந்திருப்பதோடு, சனியின் பார்வையைப் பெற்றிருந்தால், ஜாதகன் மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை வாழ நேரிடும்.
If Venus is in the 8th, the native will be long-lived, will enjoy incomparable happiness, be very rich, be equal to a king and moment after moment will feel delighted - Saravali
--------------------------------------------------------------
7
சனீஷ்வரன்
பொதுவிதி - ஒரு வரியில்
Saturn- Long life but sad life due to inadequate earnings
******************
எட்டாம் இடத்தில் சனீஷ்வரன் வந்து அமர்வது நன்மையான அமைப்பு. ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.நீண்ட ஆயுள் நன்மையான அமைப்பு என்று எடுத்துக்கொள்வோம்.
ஜாதகனுக்குப் பல பொறுப்புக்கள் வந்து சேரும். அனைத்தையும் அவன் அசத்தலாகக் கையாள்வான். அதாவது சங்கடமின்றி முழுமனதுடன் செய்வான். இடையூறுகள், தடைகள் என்று எது வந்தாலும் அவற்றை உடைத்து செய்ல்புரிவான்.
சிலருக்குக் கண் பார்வைக்கோளாறுகள் ஏற்படும். குறைந்த எண்ணிக்கை யிலேயே குழந்தைகள் இருக்கும். பெண்கள் மேல் மயக்கம் கொண்டவனாக இருப்பான். பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். என்ன விதமான தொடர்பு என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்:-))))
உடல் உபாதைகள் மற்றும் தீராத பிணிகள் இருக்கும். நோய் என்றால் திர்க்கஊடியது. பிணி என்றால் தீர்க்க முடியாதது என்று பொருள் கொள்க! சிலருக்குத் தீராத வயிற்றுக்கோளாறுகள், வாய்த்தொல்லைகள் கூடவே
இருந்து கழுத்தறுக்கும்
இங்கே வேறு தீய கிரகம் வந்து சனியுடன் சேர்ந்துகொண்டால், ஜாதகனுக்கு, அவனுடைய குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்காது. சிலர் நேர்மையில்லாதவர் களாக இருப்பார்கள். (பல பெண்களின் தொடர்பு இருக்கும் என்று முன்பே சொல்லிவிட்ட பிறகு, இதைச் சொல்ல வேண்டுமா என்ன?)
If Saturn occupies the 8th, the native will suffer from leprosy and fistula in the anus, or pudendum and will fail in his undertakings - Saravali
----------------------------------------------------------------
8
ராகு
பொதுவிதி - ஒரு வரியில்
Rahu- Danger by poison
******************
எட்டாம் இடத்தில் ராகு வந்து அமர்வது நன்மையான அமைப்பு அல்ல!
ஜாதகனுக்குப் பலவிதமான நோய்கள் தேடிவந்து படுத்தி எடுக்கும். சமூகத்தில் உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்காது. அல்லது அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும். நல்லது எது கெட்டது எது என்று ஆராயாமல் எதையும் எடுத்தேன், செய்தேன் என்று இருப்பான். தர்க்கம் செய்பவனாக இருப்பான். தகராறு செய்பவனாக இருப்பான்.
உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் கைகலப்பில் இறங்குபவனாக இருப்பான் (பொதுவிதி) ஜாதகத்தில் சந்திரன் ஒரு தீய கிரகத்துடன் கூட்டாக இருந்து, அதே ஜாதகத்தில் ராகு 8, 12 அல்லது 5ஆம் இடங்களில் இருந்தால் ஜாதகனுக்கு மன நோய் உண்டாகும்!
--------------------------------------------------------------------
9
கேது
பொதுவிதி - ஒரு வரியில்
Ketu- Health of Spouse will be affected
******************
எட்டாம் வீட்டில் கேது இருந்து, ஒரு சுபக்கிரகத்தின் பார்வையும் இருந்தால், ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான். பூரண ஆயுள் உண்டு. அத்துடன் அதீத செல்வமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்கும்.
அதே கேது எட்டாம் வீட்டில் இருப்பதுடன் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றால், ஜாதகன் அடுத்தவர்களின் சொத்தையும், சமயத்தில் பெண்களையும் அபகரித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவான்.
பலவிதமான நோகளுக்கும் ஆளாவான்
------------------------------------------------------------------------
எட்டாம் வீடு துன்பங்களுக்கும் உரிய வீடு. எட்டாம் வீடு கெட்டிருந்தால், ஜாதகனுக்கு உடல் நோய்கள் இருக்கும் அல்லது மனநோய் இருக்கும். எட்டாம் வீடு கெட்டிருக்கும் அளவை வைத்து நோய்களின் அளவும் மாறுபடும்.
சாதாரண நோயாகவும் இருக்கலாம். அல்லது புற்றுநோய் (cancer) போன்ற கொடிய நோயாகவும் இருக்கலாம்.
எல்லாம் வாங்கிவந்த வரம். அதை மனதில் கொள்க!
If malefics occupy various Bhavas (other than 6th, 8th and 12th), they bring harm to the Bhavas, while benefics increase their potence. Malefics are auspicious in evil Houses, i.e. 6th, 8th and 12th, while benefics prove adverse in these Bhavas. According the strength of Yogakaraka planets, their beneficial
relationship, friendly/inimical aspects etc. and position in exaltation/debilitation, the (good, or bad) results of Bhavas
can vary (i.e. be maximum, medium, or nil).- 30th Ch. entitled Effects of Planets in Bhavas in Kalyana Varma's Saravali.
-----------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சி நாளை வரும். பொறுத்திருந்து படிக்கவும்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
லேபிள்கள்:
Astrology,
classroom,
Lessons 361 - 370
Subscribe to:
Posts (Atom)




