
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத் தொடர்: ராகு திசை,கேது திசை எனக்கில்லையா?
இரவு நேரம். வீட்டில் மின்சாரம் தடைப்படுகிறது. இருள் சூழ்கிறது!
என்ன செய்வீர்கள்?
முதலில் மின் இலாக்காவை அல்லது திருவாளர் ஆற்காட்டாரைத் திட்டி விட்டு,
கஷ்டப்பட்டு மேஜை மேலிருக்கும் டார்ச் லைட்டை எடுப்பீர்கள்.
இன்னும் சிலர் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டு, இரவுத்தூக்கம்
கெட்டுவிடுமே என்ற கவலையுடன், ஃப்யூஸ் கால் அலுவலகத்திற்குப் போன்
செய்து, “எப்போது மின்சாரம் மீண்டும் வரும்? என்று கேட்பீர்கள்
சரி, பொதுஜனக் குணம் என்ன?
“நம் வீட்டில் மட்டும்தான் போயிருக்கிறதா? அல்லது அக்கம் பக்கத்து வீடுகளிலும்
போயிருக்கிறதா?” என்று பார்த்து, தெருவோடு எல்லா வீடுகளிலும் போயிருந்தால்
நிம்மதி அடைவதுதான் இந்தியப் பொதுஜனக் குணம் என்பார்கள்.
எல்லா வீடுகளிலும் போயிருந்தால் எவனாவது போன் செய்து, உடனே வந்து விடும்
அல்லது சரி பண்ணி விடுவார்கள் என்ற நம்பிக்கை மேலிடுமாம்.
அதுபோல நம் மக்களுக்குப் பல வினோதமான குணங்கள் உண்டு!
கீழே உள்ள தசா விவரங்களைப் பாருங்கள்.
இதைப் பார்த்துவிட்டு, என் நண்பர் ஒருவர் சொன்னார்:
“நான் தப்பித்து விட்டேன், எனக்கு ராகு திசையே வராது!”
எனக்குச் சிரிப்பு வந்தது.
“எப்படிச் சொல்கிறீர்?” என்றேன்.
அவர் உடனே டக்கென்று சொன்னார்.
“நான் புனர்பூச நட்சத்திரம். ஆரம்ப திசை குரு திசைதான். அதில் இருப்பு
14 ஆண்டுகள் ஆகவே நான் நூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்தால்தான் ராகு திசை
வரும். அதற்கு சாத்தியம் இல்லை ஆகவேதான் ராகு திசை எனக்கு வராது. அதன்
சிரமங்களில் இருந்து தப்பித்து விட்டேன்” என்றார்
நான் விடவில்லை. தொடர்ந்து கேட்டேன். “சரி உங்களுடைய 50 வயதில்
கேது திசை வருமே அப்போது என்ன செய்வீர்கள் என்றேன்?”
”கேது திசை என்ன செய்யும்?” என்றார்
“ராகு திசை 18 வருடங்களில் அடிக்கும் அடியைக் கேது ஏழு வருடங்களிலேயே
செய்து விடும்” என்றேன்.
“எனக்கு ரிஷப கேது. நீசமடைந்தவன். அவனே நீசமடைந்ததால் - பலமிழந்து
இருப்பதால் பெரிதாக என்ன செய்து விடுவான்?”
“இங்கே பலம் முக்கியமில்லை. அவன் லக்கினத்திலிருந்து எந்த வீட்டில்
இருக்கிறானோ - அந்த வீட்டின் பலனை பக்காவாகக் கொடுத்து விடுவான். நீங்கள்
மிதுன லக்கினம், ஆகவே உங்களுடைய 12ஆம் வீட்டில் இருக்கும் கேதுவும்,
அதேபோல ஆறாம் வீட்டில் இருக்கும் ராகுவும் அவர்களுடைய
மேஜர் (மகா) திசை வரவேண்டும் என்றில்லாமல், அவர்களுக்குக் கிடைக்கும்
புக்திகளில் (Sub-periods) அந்த வேலையை நடத்தி விடுவார்கள். ஆகவே ஒன்பது
கிரகங்களும், திசை வரவேண்டும் என்ற கணக்குக் கிடையாது. ஒவ்வொரு கிரகத்தின்
மகா திசையிலும், மற்ற எட்டுக் கிரகங்களின் புக்தி வரும். அதது தனது புக்தியில்
நல்லதோ அல்லது கெட்டதோ - ஜாதகப் பலனைத் தவறாமல் கொடுத்து விடும்.”
என்றேன்.
ஒரு இசைக்குழுவில் பலர் சேர்ந்து மகிழ்ச்சி இசையையும் கொடுப்பார்கள். சோக
கீதத்தையும் கொடுப்பார்கள் இல்லையா? அதுபோல கிரகங்களும் உட்டணி போட்டு
அதே வேலையைச் செய்து விடும்.
அகவே எனக்கு அது வராது, இது வராது என்று சொல்லிக் கொண்டிராதீர்கள்
உங்களுக்காக மொத்த திசைகள், புக்திகளை அட்டவணையாக மாற்றிக் கொடுத்
திருக்கிறேன்.
மிகவும் நேரம் எடுத்துக் கொண்டு செய்த வேலையாகும் இது.
அட்டவனையை நன்றாகப் பாருங்கள். வேண்டும் என்றால் உங்கள் கணினியில்
சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் பல செய்திகள், பல விஷயங்கள் அதில் உள்ளன.
ராகு திசை மொத்தம் 6,480 நாட்கள். அதே ராகு மற்ற கிரகங்களின் திசையில்
புக்தியாக வந்தாலும் அதே 6,480 நாட்கள் உண்டு. இது எல்லா கிரகங்களுக்கும்
பொதுவானது.
நன்றாகப் பாருங்கள். ஒரு பெரிய செய்தியை அட்டவனையாக்கித் தந்துள்ளேன்.
அதன் மூலம் படைப்பின் பெருமையை உணர வேண்டுகிறேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------
சர்ட்டின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால், பெரியதாகத் தெரியும்!

-------------------------------------------------------