மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.10.07

JL 41. ஓசைசெல்லா உடனே வகுப்பிற்கு வரவும்!

ஓசைசெல்லா உடனே வகுப்பிற்கு வரவும்!

ஜோதிடப் பாடம் - பகுதி 41

அன்பையும், பண்பையும் இரு கண்களெனப் போற்றும்
நமது வகுப்பறை
மாணவர்கள் அனைவருக்கும், வாத்தி
யாரின் காலை வணக்கங்கள்.


நமது வகுப்பறையின் மாணவர் திலகம் திரு.செல்லா
அவர்கள்
மீண்டும் போஸ்டர் அடித்து ஒட்டி வாத்தியாரின்
புகழைப் பரப்பும் முயற்சியில்
இரண்டாவது முறையாகக்
களம் இறங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி
உரித்தாகுக!

போஸ்டரில் அவர் கேட்டிருக்கும் 'அற்புதமான' கேள்வி
களுக்குப் பதில்தான்
இந்தப் பதிவு!

சிவப்பு வண்ணத்தில் செல்லாவின் கேள்விகள்
கருப்பு வண்ணத்தில் எனது பதில்கள்

Over to Chella!
------------------------------------------------------------------------------
1*வானவியலுக்கும், சோதிடத்திற்கும் எவ்வளவு பகை
இருக்கின்றன என்று தாங்கள் சொல்ல இயலுமா?


பகையா? அதற்கெல்லாம் சான்சே கிடையாது! இரண்டும்
சேர்ந்துதான் கூட்டாட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன.
கூட்டணியை ஏற்படுத்தியவர்கள் ஆர்யபட்டாவும்

வாராஹிமிகிரரும், பாராசுரரும் ஆவார்கள். அவர்கள்
இந்தக் கூட்டணிக்காகப் பாடுபட்டது கி.பி ஐந்தாம்
நூற்றாண்டில். சுமார் 1,500 ஆண்டுகளாகக் கூட்டணியில்
எந்தப் பிரச்சினையும் இல்லை. சந்தேகம் இருந்தால்,
இளைஞர்களின் இதய தெய்வமானவரும், இன்றைய
எதிர்க்கட்சித் தலைவருமான கூகுள் அடிகளாரைக்
கேட்டுப்பாருங்கள். அவர் அருமையாக விளக்கம் சொல்வார்!


2* ஒரு மனிதன் நிலவில் குழந்தைபெற்றால் எப்படி
சாதகம் எழுதப் போகிறீர்கள்?முடியுமா? சாத்தியமா?
(அறிவியல் சாதிக்கும் காலம் தொலைவில் இல்லை!)


பெண்தானே குழந்தை பெற முடியும். மனிதன் எப்படி
குழந்தை பெற முடியும்? கேள்வியில் பெருந்தவறு உள்ளது!

மண்டபத்தில் இந்தக் கேள்வியை உங்களுக்கு எழுதிக்
கொடுத்து வகுப்பறையில் கேட்டுப் பரிசு ஏதாவது
கிடைத்தால் வாங்கிக்கொள்ளச் சொன்ன அந்த
மகாமேதையிடம் இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்று கேளூங்கள்


"அறிவியல் சாதிக்கும் காலம் தொலைவில் இல்லை! "
என்று வேறு எழுதியிருக்கிறீர்கள். ஓகோ இதற்கும் சேர்த்து
- அதாவது மனிதனைக் குழந்தை பெறவைப்பதையும் -
சேர்த்துத்தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களா?


வாழ்க அந்த விஞ்ஞானிகள்!

உயிரினங்களுக்குத் தேவையான ஆக்ஜிசன் நிலவில்
இல்லை. அதோடு சூரியக் கதிர் வீச்சில் இருந்து உயிரினங்
களைக்காக்கும் வளையமும் அங்கு இல்லை.

அங்கு மனிதன் சென்று குடும்பம் நடத்துவது இன்றைய
நிலையில் சாத்தியம் இல்லாதது. அப்படியே தேவையான
பாதுகாப்பு அம்சங்களுடன் சென்று குடும்பம் நடத்தினாலும்
குழந்தை எப்படி சாத்தியமாகும் என்று என் சிற்றறிவிற்குத்

தெரியவில்லை!

வான்வெளியில் செல்பவர்களுக்கு விசேசமாக
வடிவமைக்கப்பெற்ற உடைகள் உள்ளன. அதைக் கழற்றி
வைத்துவிட்டு, நீச்சல் உடை, பெர்முடா, பிகினி போன்ற

வேறு எந்த உடையையும் அங்கே சென்ற பெண்கள்
பயன்படுத்தியதாகத் தகவல் இல்லை! ஏனென்றால்
infra red rays களின் தாக்கம்.


உடைகளையே கழற்ற முடியாத நிலையில் எப்படிக்
குழந்தை உண்டாகும்? எப்படி அது பிறக்கும்? :-)))))))


3*சோதிடத்திலும் புது கிரகங்கள், நட்சத்திரங்கள் என்று
ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?


ஆர்யபட்டா, வாராஹிமிகிரர், பாராசுரர் போன்ற
நம்து பேட்டை ஆசாமிகள், சாப்பிட்டு விட்டுத் தூக்கி
யெறிந்த பழக் கொட்டைகள் மட்டுமே வானத்தில்
எஞ்சி நிற்கின்றன.
அதைத்தான் இன்றைய விஞ்னானிகள் அந்த மூவருக்கும்
அன்று கிடைத்திராத Technology' வைத்துக் கண்டு பிடித்துப்
படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பொழுது போகாத
வர்கள் அதைப் பார்த்து மகிழலாம்.

*****************************
It is my turn now:
கேள்வி செல்லாவிற்கு! மற்ற மாணவர்களும் பதில் சொல்லலாம்

1.பூமியின் தட்பவெட்ப நிலை சராசரியாக 14 டிகிரி.
அது மைனஸ் 4ற்கும்
போகும் அதேபோல 42 டிகிரிக்கும்
எகிறி நின்று நம்மை வறுத்தெடுக்கவும்
செய்யும்.
அனைவரும் அறிந்ததே! இடத்திற்கு இடம், நேரத்திற்கு
நேரம்
தட்பவெட்ப நிலை ஏன் மாறுபடுகிறது?

2. பூமியில் ஆக்ஜிசனின் அளவு 21%. அது மாறாதது.
It is constant. இடத்தைப்
பொறுத்து தட்பவெட்ப நிலை
மாறுவதைப்போல இது ஏன் மாறுவதில்லை?


3. இந்த இரண்டையும் உலகில் உள்ள பல ஜீவராசி
களுக்காக ஏற்பாடு செய்த
அந்த விஞ்ஞானியின் பெயர் என்ன?

அன்புடன்,
நட்புடன்

வாத்தியார்.

3.10.07

ஜோதிடப் பாடம் - பகுதி 40




ஜோதிடப் பாடம் - பகுதி 40

இன்று கதை கிடையாது. வெறும் பாடம் மட்டும்தான்.
நேற்று பாதியில் இருக்கும் சஸ்பென்ஸ் கதையின்
தொடர்ச்சி இரண்டு நாட்கள் கழித்து வரும்.

உலகில் அனைவருடைய ஜாதமும் சமம்தான். அவனு
டையது உயர்வானது. இவனுடையது மட்டமானது
என்று எதுவும் கிடையாது. எவனும் கொம்புடன்
பிறக்கவில்லை!

அது எவ்வாறு என்பது அஷ்டவர்க்கம் என்னும்
ஜோதிடப் பாடம் நடத்தும்போது உங்களுக்குத் தெள்ளத்
தெளிவாக விளங்கும். அது சற்றுப் பெரிய பகுதி.

அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்த பிறகு
அந்தப் பகுதிக்கு வருவேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.

அஷ்டவர்க்கத்தில், எந்தவொரு ஜாதகத்திற்கும் மொத்த
மதிப்பெண் 337 பரல்கள் தான். ஜனாதிபதி பிரதீபா அம்மை
யாருக்கும் 337 பரல்கள்தான். தஞ்சாவூர்ப் பகுதியில் -
வயல் வரப்புகளில் தினக்கூலியாக வேலை பார்க்கும்
வெள்ளைச்சாமிக்கும் 337 பரல்கள்தான்.

முகேஷ் அம்பானிக்கும் 337 பரல்கள்தான். அவருடைய
கார் டிரைவருக்கும் 337 பரலகள்தான். நடிகை சிநேகா
விற்கும் 337 பரல்கள்தான். அவருடன் திரைப்
படத்தில் உடன் நடனமாடும் அததனை நடனப்
பெண்களுக்கும் (extra actresses) 337 பரல்கள்தான்.

ஒரு நாயர் கடையில் அமர்ந்து, இரண்டு வாழைக்காய்
பஜ்ஜி, ஒரு மசாலா டீ சாப்பிட்டுவிட்டு, ஒரு சிகரெட்
டைப் பற்ற வைத்து வலித்துக் கொண்டு, "லே
ஜாயேங்கே, லே ஜாயேங்கே என்ற பாட்டைக் கேட்ட
வாறு, முகேஷ் அம்பானியின் டிரைவரால் ஆனந்தமாக
ஒரு மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியும்.
முகேஷ் அம்பாணியால் முடியுமா?

பிரதிபா அம்மையாருக்கு - ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
- Protocol கள் உணடு

தில்லி கனாட் பிளேஸ் சதுக்கம் பகுதிக்குத் தனியாகச்
சென்று ஒரு ரவுண்ட் அடித்துச் சுற்றி விட்டு, ஒரு சாட்
கடைமுன் நின்று ஒரு பிளேட் பேல்பூரி சாப்பிட்டு விட்டு
வரலாம் என்றால் அரசு இயந்திரங்கள் - அவருடைய
பாதுகாப்பை முன்னிட்டு - அதை அனுமதிக்காது.

வெள்ளைச் சாமிக்கு வேறு விதமான பிரச்சினை இருக்கும்.
தன் மனைவிக்கும், மகளுக்கும், தினசரி இரண்டு வேளை
சூடான அரிசிச் சோற்றிற்கு வழி பண்ணக் கூட வருமானம்
இருக்க்காது. அதற்காக அவன் கவலைப் படமாட்டான்.
இருக்கிற கஞ்சியைப் பகிர்ந்து குடித்து விட்டு, வீட்டு வாசலில்
இருக்கும் வேப்ப மரத்து நிழலில், கயிற்றுக் கட்டிலில்
படுத்து நிம்மதியாகத் தூங்குவான்.

ஒருவனுக்கு இருப்பது இன்னொருவனுக்குக் இருக்காது.
இல்லாதவனுக்குக் கிடைத்தது, பொருள் இருப்பவனுக்குக் கிடைக்காது

அதைத்தான் கண்ணதாசன்,
"பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது;
பஞ்சனையில் காற்றுவரும் தூக்கம்வராது" என்றார்.

ஒருவன் அழகை ஆராதிப்பவ்னாக இருப்பான். அவனுக்குக்
குரங்குபோன்ற மனைவி வந்து சேர்வாள் (தோற்றத்தில்
அல்லது குணத்தில்) ஒருவனுக்கு கிளி போன்ற மனைவி
கிடைப்பாள். அவன் அவளைப் புறக்கணித்து விட்டுக் குரங்கு
போன்ற பெண்ணோடு தொடர்பு வைத்து, மகிழ்ந்து
கொண்டிருப்பான்.

எல்லாம் அவனவன் வாங்கி வந்த வரம். முன் வினைப் பயன்.

கடவுள் அங்கேதான் தன்னுடைய கைவண்ணத்தைக்
காட்டியுள்ளார். அவருடைய படைப்பில் அனைவரும் சமம்.
ஆகவே மொத்தப் பரல்களும் சமம்.

பிரச்சினைகள், கவலைகள் எல்லோருக்கும் பொதுவானது.
அவை இரண்டும் இல்லாத மனிதனே கிடையாது.

நமக்கு ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்குப் பிரச்சினை
இருக்கும்.அம்பானி களுக்கு அது கோடிகளில் இருக்கும்.
பிரச்சினை பிரச்சினைதான்.

எல்லோருக்கும் ஒரு ஜான் வயிறுதான்.
உடலில் ஒன்பது வாசல்கள்தான்

பணம் இருப்பதற்காகத் தட்டில் தங்கத்தை வைத்துச் சாப்பிட முடியாது!

எல்லா உணவும் தொண்டைவரைக்கும் தான். ஐ.ஆர் 20
அரிசியானால் என்ன? பாசுமதி அரிசியானால் என்ன?
ருசி தொண்டை வரைக்கும்தான். அதற்குப் பிறகு
எல்லா உணவும் ஒன்றுதான்.

ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்ன? பாய் விரித்த
படுக்கை என்ன? தூக்கம் வரும்வரைதான் வித்தியாசம்.
துங்கிவிட்டால் எல்லா இடமும் ஒன்றுதான்.

பணக்காரன் பத்து லட்ச ரூபாய்க் காரில் பயணிப்பான்.
ஏழை இருபது லட்ச ரூபாய் பஸ்ஸில் பயணிப்பான்.
பயணம் ஒன்றுதான். இவனுக்காவது பஸ்ஸில்
உடன் 57 பேர்கள் துணையுண்டு. அவனுக்கு அவனே
துணை. அல்லது வண்டி ஓட்டும் டிரைவர் மட்டுமே துணை.

எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது.
சந்தோசம் முற்றிலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம்
அல்ல. அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்

ஜாதகத்தில் பணம் இரண்டாம் வீட்டை வைத்து.
சந்தோசம் ஐந்தாம் வீட்டை வைத்து.

ஆகவே ,ஒரு நாள் பாடத்தை மட்டும் படித்து விட்டு, தனியாக
உட்கார்ந்து குழம்பாதீர்கள். மொத்தப் பாடத்தையும் படித்து
விட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்

ஆகவே இந்தத் தொடர் முடிந்த பிறகு ஒரு முடிவிற்கு வாருங்கள்

ஜாதகப்படி மொத்தம் 36 பாக்கியங்கள் (12 கட்டங்கள்
x ஒரு கட்டத்திற்கு மூன்று பாக்கியங்கள் = 36 )
18 பாக்கியங்கள்தான் கிடைத்திருக்கும்.
18 கிடைத்திருக்காது. அவை என்னென்ன?

அதுதான் இனி வரப்போகும் பாடம். ஒவ்வொரு
கட்டமாகச் சொல்லித்தரப் போகிறேன்

இன்று லக்கினம் என்னும் முதல் கட்டம் அல்லது
முதல் வீட்டின் பலாபலன்கள்
-----------------------------------------------------------------
முதல் வீடு.

உடம்பில் தலைப் பகுதி எப்படியோ - அப்படித்தான்
ஜாதகத்தின் முதல்வீடு. அது லக்கினம் எனப்படும்.

1. லக்கினத்தின் அதிபதி யார்?

2. அவர் எங்கே சென்று அமர்ந்திருக்கிறார்.

3. லக்கினத்தின் பெயர் என்ன? அதனுடைய இயற்கைத் தன்மை என்ன?

4. லக்கினத்தில் வேறு எந்த கிரகம் வந்து குடியிருக்கிறது?

5. தனியாகக் குடியிருக்கிறதா? அல்லது வேறு
நல்ல/அல்லது தீயகிரகத்துடன் சேர்ந்து குடியிருக்கிறதா?

6. லக்கினம் எந்தெந்த கிரகங்களின் பார்வையைப் பெற்றுள்ளது?

7.லக்கினநாதன் நட்பு, உச்சம் பெற்று மேன்மை
அடைந்துள்ளாரா? அல்லது பகை நீசம் அடைந்து
கெட்டுப் போய் உள்ளாரா?

8.நவாம்சத்தில் லக்கினநாதன் ராசியில் உள்ளபடியான
வலுவுடன்தான் இருக்கிறாரா? அல்லது அங்கே
வலுவிழந்து இருக்கிறாரா?

9. லக்கினநாதனுக்கு திரிகோணம், கேந்திரம் ஆகிய
இடங்களில் அமரும் பாக்கியம் கிடைத்துள்ளதா?
அல்லது இல்லையா?

10. ஆறு, எட்டு, பன்னிரெண்டு ஆகிய மறைவிடங்
களுக்குரிய (தீய) கிரகங்களுடன் லக்கினாதிபதிக்கு
சேர்க்கை ஏற்பட்டுள்ளதா?

11. லக்கினாதிபதிக்கு அஸ்தமன சோகம் (combust)
ஏற்பட்டுள்ளதா?

12. லக்கினாதிபதியின் திசை நடை பெறுகிறதா?
அல்ல்து எப்போது அது வரும்?

13. லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளன?

14. லக்கினாதிபதி தனது ஆதிபத்தியமாகத் தனித்து
எத்தனை பரல்களுடன் உள்ளார்?

15. லக்கினத்திற்கு அதிபதியான கிரகம் natural benefic planetஆ
அல்லது malefic planet ஆ?

16. லக்கினாதிபதி - பொதுவில் - எதற்குக் காரகன் (authority)?

17.லக்கினத்திற்குரிய செயல் பாடுகள் என்னென்ன?

இப்படிப்பட்ட கேள்விகளுக்குரிய விடையைக் கண்டுபிடித்
தால்தான் லக்கினம் எப்படி உள்ளது என்று தெரிய வரும்.

அதேபோல 16 கேள்விகள் x 12 வீடுகள் = மொத்தம்
192 கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால்தான் ஒருவரின்
ஜாதகம் முழுமையாகத் தெரிய வரும்.

அதைத் தெரிந்து சொல்ல குறைந்தது இரண்டு மணி
நேரமாமவது ஆகும் அப்படியெல்லாம் பார்த்துப் பலன்
சொல்ல இப்போது எந்த ஜோதிடருக்குப் பொறுமை
யிருக்கிறது. ஆகவே நீங்கள் கேட்கும் ஒன்று அல்லது
இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு
உங்களை ஒட்டி வீட்டு விடுவார்

அந்தப் பலன்களும் சரியாக நடக்கவேண்டுமென்றால்
அடுத்துள்ள இரண்டு முக்கியம்

1. உங்கள் ஜாதகம் சரியாகக் கணிக்கப்பெற்றிருக்க வேண்டும்
2. அந்த ஜோதிடன் திறமை மிக்கவனாகவும், நல்ல
ஜோதிட அறிவு பெற்றவனாகவும் இருக்க வேண்டும
்

அதைவிட முக்கியம், அந்த ஜோதிடனுக்கு, அவன்
ஜாதகப்படி நல்ல தசாபுத்தி நடைபெற்றால்தான், அவன்
சொன்னது பலிக்கும். இல்லையென்றால் ஊத்திக் கொண்டு
விடும் (அவன் சொன்னது நடக்காது)

(பாடம் நாளையும் தொடரும்)
பதிவின் நீளம் கருதி, வகுப்பு இன்று இத்துடன் நிறைவு பெறுகிறது!
--------------------------------------------------------
I want feed back. Please send your views about the lesson

1.10.07

ஜோதிடம் மதுவா? மருந்தா?

ஜோதிடம் மதுவா? மருந்தா?

ஜோதிடப் பாடம். பகுதி 39

என் தந்தையார் ஜோதிடத்தில் அபார நம்பிக்கை
கொண்டவர். அவரை வைத்துத்தான் எனக்கும்
ஜோதிடத்தில் நம்பிக்கை ஏற்பட்டது.

அதே போல் என் தாய்வழிப் பாட்டனாரும் ஜோதிடத்தில்
அபார நம்பிக்கை உள்ளவர். அவரிடமிருந்து சுமார் 300
ஜாதங்களும், அவற்றைப் பற்றிய குறிப்புக்கள் அடங்கிய
- கையால் எழுதப்பெற்ற புத்தகமும் கிடைத்தது.
கிடைத்தபோது, என் சேகரிப்புப் பழக்கத்தினால் அதை
மற்ற புத்தகங்களுடன் பத்திரமாக வைத்திருந்தேன்.
அது கிடைத்தபோது பிற்காலத்தில் அது உதவும்
என்று எனக்குத் தெரியாது

பிறகு ஜோதிடத்தை - சுயமாக நானே படித்துக் கற்ற
காலத்தில் பயிற்சிக்கு (Practical Class) அந்தப் புத்தகம்
பேருதவியாக இருந்தது.

என் தந்தையாருக்கு ஜோதிடத்தில் அரிச்சுவடிகூடத்
தெரியாது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில்
நிறைய ஜோதிடர்களின் தொடர்பும், நட்பும் அவருக்கு
இருந்தது.

அவர்களில் சிலர் எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள்.
முக்கியமாக மூன்று பேர்கள். அந்த மூவரில் இருவர்
கேரளாவைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்
ஒருவர் தஞ்சைக்காரர்.

அந்த மூவருமே அசத்தலாகப் பலன் சொல்லக்கூடியவர்கள்
(அதெல்லாம் பின்னால் வரும்)

கேரளாவில் பணிக்கர் இனத்தவரும், தஞ்சைப் பகுதியில்
வள்ளுவர் எனக்கூறப்படும் இனத்தவர்களும் ஜோதிடத்தில்
கரை கண்டவர்களாக இருந்தார்கள். முற்காலத்தில், அந்த
இனத்தவரில் பலர் முறைப்படி ஜோதிடம் கற்று, அதையே
தொழிலாகக் கொண்டு, அதிலேயே திளைத்தவர்களாக
இருந்தார்கள்.

ஆனால் இன்று அப்படியல்ல!

அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது. நல்ல ஜோதிடர்கள்
குறைந்து விட்டார்கள். தேடிப் பிடிக்க வேண்டிய நிலைமை.
சிலருக்குத் திருமணப் பொருத்தம் மட்டுமே பார்க்கத் தெரியும்

முன்பு கல்வி, மருத்துவம், ஜோதிடம் ஆகிய மூன்றுமே
தர்மத்தொழிலாகக் கருதப்பெற்றது. அந்த மூன்று துறைகளில்
இருந்தவர்களுமே மக்களுக்கு அதைச் சேவையாகச் செய்து
கொண்டிருந்தார்கள். மக்களின் துயரங்களைத் துடைத்துக்
கொண்டிருந்தார்கள். அது தர்மத் தொழில் என்று சொல்லப்
பட்டதால் யாரிடமும் கைநீட்டிக் காசு வாங்கமாட்டார்கள்.

மீறிக் கட்டாயப் படுத்திக் கொடுத்தால், வீட்டில் ஒரு
ஓரத்தில் வைத்திருக்கும் உண்டியலில் போட்டுவிட்டுப்
போகச் சொல்லி விடுவார்கள்.

சரி, அவர்களுடைய ஜீவனம் எப்படி நடந்தது?

சில இடங்களில் மன்னர்களும் (உதாரணம் மைசூர்,
புதுக்கோட்டை, இராமநாதபுரம்) சில இடங்களில்
ஜமீன்தார்களும், சில இடங்களில் பெரிய பண்ணையார்
களும், சில இடங்களில் மிட்டாமிராசுகளும் அவர்களுக்கு
வருடச் செலவிற்கு அரிசி, பருப்பு, எண்ணெய், விறகு
என்று பொருட்களாகவும், காசு பணமாகவும் மானியம்
அளித்துக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் பத்து
ஏக்கர் முதல் நூறு ஏக்கர் வரை அவர்களுக்கு நிலங்கள்
இலவசமாகக் கொடுக்கப்பட்டு - அதில் இருந்து கிடைத்த
குத்தகைப் பணத்தில் அவர்களுடைய வாழ்க்கை
நிம்மதியாக நடைபெற்றது. அவர்களும் ஊருக்கு உழைத்தார்கள்.

இதைச் சொன்னால இன்றைய இளைஞன் நமபமாட்டான்.
ஏனென்றால் காலம் காலமாக நம் திரைப்பட வல்லுனர்கள்
அவர்களையெல்லாம் வில்லன்களாகவே சித்தரித்துக்
கதைகளை ஓட்டி வந்ததால் இன்று யாருக்கும் ஜமீன்தார்கள்,
மற்றும் பண்னையார்களின் உண்மைக்கதைகள் எடுபடாது.

இரண்டொருவர் கொடுமைக்காரர்களாகவும் இருந்திருக்கலாம்
- இந்தத் திரைப்பட வில்லன்களால், ஒட்டு மொத்தமாக
அவர்கள் யாரையுமே நமக்குப் பிடிக்காமல் போய்விட்டது.

இன்று என்றால், குத்தகைக்காரனுடன் ஜோதிடர் கோர்ட்டிற்கு
அலைந்து கொண்டிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் அப்படி
எவனாது செய்தால், அவனை ஊர்மக்களே மரத்தில் கட்டி
வைத்துப் பின்னி எடுத்து விடுவார்கள். பணமும் வசூலாகிவிடும்.

பணக்காரன், ஏழை என்ற பாகுபாடின்றி அன்றைய மக்கள்
அனைவரும் தர்ம நியாயத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக
இருந்தார்கள்.

இன்றைய நிலைமையை நான் எழுத வேண்டியதில்லை
- உங்களுக்கே தெரியும்!

அப்போதெல்லாம் வாழ்க்கை மிக எளிமையாக இருந்தது.
மக்களும் பெரிய ஆசைகள் எதுவும் இல்லாதவர்களாக
இருந்தார்கள்.

ஒரு பவுன் தங்கம் ரூபாய் பதின்மூன்று என்ற நிலை
யிலும், ஒரு மூட்டை அரிசி ரூபாய் எட்டு என்ற
அளவிலும் இருந்திருக்கிறது. நான் கூறும் காலம்
1900 ம் ஆண்டு முதல் 1939ம் ஆண்டு வரை என்று
வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு முன்பு, விலவாசிகள் இன்னும் குறைவாக
இருந்திருக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் ஒரு கட்டிட மேஸ்திரியின்
தினக்கூலி நான்கு அணாதான் (0.25 பைசாதான்)
ஒரு சித்தாளின் தினச்சம்பளம் இரண்டு அணாதான்
(0.12 பைசாதான்) பஞ்சாலைக் கணக்காளரின் மாதச்
சம்பளம் மாதம் ரூபாய் 15.00 தான்

இப்போது அந்தப் பதினைந்து ரூபாயில் ஒரு மசால்
தோசைகூடச் சாப்பிட முடியாது.

1939 முதல் 1945ஆம் ஆண்டுவரை நடந்த இரண்டாவது
உலக யுத்தம்தான் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டி
ருக்கிறது.

அது கிடக்கட்டும், Main Storyக்கு வருகிறேன்.

திரு. ஆசான் என்பவர்தான் (பெயரே ஆசான் என்றுதான்
சொல்வார்கள்) என் தந்தையாரின் ஜோதிட நண்பர்களில்
முக்கியமானவர்.

தினமும் எங்கள் வீட்டில், மாலை நேரத்தில் நடக்கும் சீட்டுக்
கச்சேரிக்கு அவர் தவறாமல் வந்து விடுவார்.

அப்போது என் தந்தையார் தேவகோட்டையிலேயே -
எங்கள் உள்ளூரிலேயே வாழந்து கொண்டிருந்தார்.
எங்கள் வீடு வழக்கமான செட்டிநாட்டு வீடுகளைப்
போல பிரம்மாண்டமான வீடு. தேக்கு மரங்களாலேயே
இழைத்துக் கட்டப்பெற்ற வீடு.

அகலம் 80 அடிகள், நீளம் 160 அடிகள் என்ற அளவில்
முகப்பு, உள்கட்டு, நடுவாசல் (முற்றம்) 2 & 3 உள்கட்டு,
வளவு, மேல்மாடி, 20 அறைகள் என்று மொத்தம்
15,000 சதுரஅடிகள் கட்டிடப் பகுதியைக் கொண்ட வீடு

அது 1895ம் ஆண்டு கட்டப் பெற்றதாகும். கூட்டுக் குடும்ப
வாழ்க்கை. அய்யா, அப்பத்தா (தாத்தா & பாட்டி) பெரியப்பா,
சித்தப்பா அவர்களுடைய குழந்தைகள், சமையல்காரர்,
வண்டிக்காரர் என்றும் மொத்தம் நாற்பது முதல் ஐம்பது
தலைகள் ஒருமித்து ஒற்றுமையுடன் வாழந்த காலம்.

மாலை நேரங்களில் முகப்பில் உள்ள அறையில் வீட்டு
இளைஞர்களும், அவர்களுடைய நண்பர்களூம் பொழுது
போக்காக சீட்டு (Playing Cards) விளையாடுவது சர்வ
சாதாரணம் (அந்தச் சிற்றுரில் வேறு பொழுது போக்கு
இல்லை) இளைஞர்களுடன் பெரியவர்களும் சேர்ந்து
விளையாடுவார்கள். கலகலப்பாக இருக்கும்

Point ற்கு காலணா அல்லது அறையணா, அல்லது
ஒரு அணா வைத்து விளையாடுவார்கள். ரூபாய்க்கு
பதிணாறு அணாக்கள் என்பதை நினைவில் கொள்க

அப்போது ஒரு பெரிய அளவு இட்லியின் விலை
காலணாதான். நான்கு இட்லிகளுக்குமேல் சாப்பிட
முடியாது. விடுதிகளில் சாப்பிடுபவர்கள் ஒரு அணாவில்
காலைப் பலகாரத்தை முடித்துக் கொண்டு விடலாம்.

இந்தத் தசாம்சப் பணமெல்லாம் (பத்து பைசா, இருபது
பைசாவெல்லாம்) 1957ம் ஆண்டுதான் அறிமுகப் படுத்தப்
பெற்றது.

நான் சொல்வதெல்லாம் 1941ம் ஆண்டு முதல் 1947ம்
ஆண்டு வரையான காலம். அப்போது என் தந்தையார்
இளைஞர். இந்தக் கதைகளெல்லாம் அவர் வர்ணனையுடன்
சொல்லச் சொல்ல - பல முறைகள் கேட்கக் கேட்க
என் மனதில் பதிந்து விட்ட பழைய நிகழ்வுகளாகும்

அப்போது என் தந்தையின் நண்பர் ஆசான்,
கேரளாவில் இருந்து தேவகோட்டைக்கு வந்து ஒரு
பெரிய வீட்டின் முகப்புப் பகுதியில் தங்கிக் கொண்டு
ஜோதிடத் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்.

உள்ளூர், மற்றும் சுற்றுப் பகுதிக் கிராம மக்கள் என்று
கூட்டம் அலை மோதும்.

காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி
வரை மட்டுமே ஜாதகங்களைப் பார்த்துப் பலன் சொல்லுவார்.

சூரிய அஸ்தமனத்திற்கு மேல் கிரகங்களைக் கழித்துப்
பார்க்கக்கூடாது என்ற தன் கொள்கையால், எங்கள்
வீட்டிற்குச் சீட்டாடக் கிளம்பி வந்து விடுவார்

மாதத்தில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை
நாட்டுக்குப் போய் வருகிறேன் என்று தன் சொந்த ஊரான
பாலக்காட்டிற்குப் போய்வருவார். அவருடைய
குடும்பமெல்லாம் அங்கேதான் இருந்தது.
அசத்தலாகத் தமிழில் பேசவும், எழுதவும் செய்வார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை என் பெரியப்பா
விற்கும், மற்றும் வீட்டிள்ள இதர உறுப்பினர்களுக்கும்,
அவருக்கும் இடையே கலந்துரையாடல்
நடைபெற்றது.

பேச்சு மலையாள மாந்திரீகத்தைப் பற்றித் திரும்பும்போது,
என் பெரியப்பா, "ஆசான் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை
இருக்கிறது - ஆனால் மாந்திரீகத்தில் நம்பிக்கை இல்லை" என்று சொல்லப்போக, ஆசான் பிடித்துக்கொண்டு விட்டார்

"மாணிக்க அண்ணே (என் பெரியப்பாவின் பெயர்)
உங்களுக்கு மாந்திரீகம் உண்மையா? அல்லது இல்லையா?
என்று தெரியவேண்டும் அவ்வளவுதானே! இப்போதே -
இன்றே நிருபித்துக் காட்டுகிறென் - அதற்கு வேண்டிய பூஜை
சாமான்களை எழுதித் தருகிறேன். உங்கள் வீட்டு
வேலக்காரரை விட்டு வாங்கி வரச்சொல்லுங்கள்!"
என்று சொன்னவர் அடுத்த பத்து நிமிடங்களில்
ஒரு சிறிய சீட்டையும் எழுதிக் கொடுத்து விட்டார்.

அப்புறம்?

அப்புறம் நடந்ததுதான் மிகவும் சுவாரசியமான விஷயம்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
மற்றவை நாளை!
----------------------------------------
இந்தப் பதிவிற்குத் தொடர்பான படங்கள்
கீழே உள்ளன. அதையும் பாருங்கள்

எங்கள் வீட்டின் வீடியோ படம் உள்ளது.
அதை ஒரு வேறு ஒரு சமயத்தில் வலை
ஏற்றுகிறேன்.

இப்போது இரண்டு படங்களைப் பதிவிட்டிருக்கிறேன்.
அது எங்கள் வீட்டுப் படங்கள் அல்ல!
ஆனால் அது மாதிரி அமைப்புள்ள படங்கள்
அவை. பொதுவாக எல்லா வீடுகளும் இந்த
அமைப்பில்தான் இருக்கும். நீங்கள் பல
திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.
ஆகவே ஒரு பார்வைக்காக அவற்றைக்
கொடுத்துள்ளேன்
-------------------------------------------------





படத்தில் உள்ளது காலணா, அரையணா,
ஒரு அணா, இரண்டு அணா




மன்னர்கள் கால்த்துக் காசுகள்.
1.புதுக்கோட்டை அரசர் காலம்,

2. திருவாங்கூர் அரசர் ரவி வர்மா காலம், 3.
மன்னர் ஜார்ஜ் 5th

காலம்



படத்தைப் பெரிதாக்கிப் பாருங்கள்
1917, 1935, 1944, 1946 என்று காசுகள்

வெளிவந்த வருடம் கண்ணில் படும்
படத்தில் என் தந்தையாருடன் நின்று
கொண்டிருப்பவர் தான் (ஜிப்பாவுடன்)

ஜோதிட மேதை திரு. ஆசான்.
உட்கார்ந்திருக்கும் அன்ப்ர்கள்
என் தந்தையாரின்

நண்பர்கள். சுமார் 50 ஆண்டுக்ளுக்கு
முன்பு எடுக்கப்பெற்ற படம்




எங்கள் பகுதி வீடு ஒன்றின் முகப்புப் பகுதி

ஒரு வீட்ட்டின் வளவு - நடுவாசல்
பகுதி (Court Yard)
(தொடரும்)
----------------------------------
வெறும் பாடம் மட்டும் நடத்தினால் சுவாரசியமாக
இருக்காது. அதனால் பாடம், பயிற்சிவகுப்பு, மாதிரி
ஜாதகங்கள், ஜோதிடக்கதைகள், அனுபவக் கதைகள்
என்று பலவும் கலந்து இனிமேல் பதிவுகள் வரும்.
தொடர்ந்து படித்துப் இன்புறுங்கள்.
வாரம் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் வரும்
தினமும் பதிவு போட எனக்கு ஆசைதான்.
எழுதி தட்டச்ச வேண்டாமா?
----------------------------------------------