ஓசைசெல்லா உடனே வகுப்பிற்கு வரவும்!
ஜோதிடப் பாடம் - பகுதி 41
அன்பையும், பண்பையும் இரு கண்களெனப் போற்றும்
நமது வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும், வாத்தி
யாரின் காலை வணக்கங்கள்.
நமது வகுப்பறையின் மாணவர் திலகம் திரு.செல்லா
அவர்கள் மீண்டும் போஸ்டர் அடித்து ஒட்டி வாத்தியாரின்
புகழைப் பரப்பும் முயற்சியில் இரண்டாவது முறையாகக்
களம் இறங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி உரித்தாகுக!
போஸ்டரில் அவர் கேட்டிருக்கும் 'அற்புதமான' கேள்வி
களுக்குப் பதில்தான் இந்தப் பதிவு!
சிவப்பு வண்ணத்தில் செல்லாவின் கேள்விகள்
கருப்பு வண்ணத்தில் எனது பதில்கள்
Over to Chella!
------------------------------------------------------------------------------
1*வானவியலுக்கும், சோதிடத்திற்கும் எவ்வளவு பகை
இருக்கின்றன என்று தாங்கள் சொல்ல இயலுமா?
பகையா? அதற்கெல்லாம் சான்சே கிடையாது! இரண்டும்
சேர்ந்துதான் கூட்டாட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன.
கூட்டணியை ஏற்படுத்தியவர்கள் ஆர்யபட்டாவும்
வாராஹிமிகிரரும், பாராசுரரும் ஆவார்கள். அவர்கள்
இந்தக் கூட்டணிக்காகப் பாடுபட்டது கி.பி ஐந்தாம்
நூற்றாண்டில். சுமார் 1,500 ஆண்டுகளாகக் கூட்டணியில்
எந்தப் பிரச்சினையும் இல்லை. சந்தேகம் இருந்தால்,
இளைஞர்களின் இதய தெய்வமானவரும், இன்றைய
எதிர்க்கட்சித் தலைவருமான கூகுள் அடிகளாரைக்
கேட்டுப்பாருங்கள். அவர் அருமையாக விளக்கம் சொல்வார்!
2* ஒரு மனிதன் நிலவில் குழந்தைபெற்றால் எப்படி
சாதகம் எழுதப் போகிறீர்கள்?முடியுமா? சாத்தியமா?
(அறிவியல் சாதிக்கும் காலம் தொலைவில் இல்லை!)
பெண்தானே குழந்தை பெற முடியும். மனிதன் எப்படி
குழந்தை பெற முடியும்? கேள்வியில் பெருந்தவறு உள்ளது!
மண்டபத்தில் இந்தக் கேள்வியை உங்களுக்கு எழுதிக்
கொடுத்து வகுப்பறையில் கேட்டுப் பரிசு ஏதாவது
கிடைத்தால் வாங்கிக்கொள்ளச் சொன்ன அந்த
மகாமேதையிடம் இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்று கேளூங்கள்
"அறிவியல் சாதிக்கும் காலம் தொலைவில் இல்லை! "
என்று வேறு எழுதியிருக்கிறீர்கள். ஓகோ இதற்கும் சேர்த்து
- அதாவது மனிதனைக் குழந்தை பெறவைப்பதையும் -
சேர்த்துத்தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களா?
வாழ்க அந்த விஞ்ஞானிகள்!
உயிரினங்களுக்குத் தேவையான ஆக்ஜிசன் நிலவில்
இல்லை. அதோடு சூரியக் கதிர் வீச்சில் இருந்து உயிரினங்
களைக்காக்கும் வளையமும் அங்கு இல்லை.
அங்கு மனிதன் சென்று குடும்பம் நடத்துவது இன்றைய
நிலையில் சாத்தியம் இல்லாதது. அப்படியே தேவையான
பாதுகாப்பு அம்சங்களுடன் சென்று குடும்பம் நடத்தினாலும்
குழந்தை எப்படி சாத்தியமாகும் என்று என் சிற்றறிவிற்குத்
தெரியவில்லை!
வான்வெளியில் செல்பவர்களுக்கு விசேசமாக
வடிவமைக்கப்பெற்ற உடைகள் உள்ளன. அதைக் கழற்றி
வைத்துவிட்டு, நீச்சல் உடை, பெர்முடா, பிகினி போன்ற
வேறு எந்த உடையையும் அங்கே சென்ற பெண்கள்
பயன்படுத்தியதாகத் தகவல் இல்லை! ஏனென்றால்
infra red rays களின் தாக்கம்.
உடைகளையே கழற்ற முடியாத நிலையில் எப்படிக்
குழந்தை உண்டாகும்? எப்படி அது பிறக்கும்? :-)))))))
3*சோதிடத்திலும் புது கிரகங்கள், நட்சத்திரங்கள் என்று
ஏதாவது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?
ஆர்யபட்டா, வாராஹிமிகிரர், பாராசுரர் போன்ற
நம்து பேட்டை ஆசாமிகள், சாப்பிட்டு விட்டுத் தூக்கி
யெறிந்த பழக் கொட்டைகள் மட்டுமே வானத்தில்
எஞ்சி நிற்கின்றன.
அதைத்தான் இன்றைய விஞ்னானிகள் அந்த மூவருக்கும்
அன்று கிடைத்திராத Technology' வைத்துக் கண்டு பிடித்துப்
படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பொழுது போகாத
வர்கள் அதைப் பார்த்து மகிழலாம்.
*****************************
It is my turn now:
கேள்வி செல்லாவிற்கு! மற்ற மாணவர்களும் பதில் சொல்லலாம்
1.பூமியின் தட்பவெட்ப நிலை சராசரியாக 14 டிகிரி.
அது மைனஸ் 4ற்கும் போகும் அதேபோல 42 டிகிரிக்கும்
எகிறி நின்று நம்மை வறுத்தெடுக்கவும் செய்யும்.
அனைவரும் அறிந்ததே! இடத்திற்கு இடம், நேரத்திற்கு
நேரம் தட்பவெட்ப நிலை ஏன் மாறுபடுகிறது?
2. பூமியில் ஆக்ஜிசனின் அளவு 21%. அது மாறாதது.
It is constant. இடத்தைப் பொறுத்து தட்பவெட்ப நிலை
மாறுவதைப்போல இது ஏன் மாறுவதில்லை?
3. இந்த இரண்டையும் உலகில் உள்ள பல ஜீவராசி
களுக்காக ஏற்பாடு செய்த அந்த விஞ்ஞானியின் பெயர் என்ன?
அன்புடன்,
நட்புடன்
வாத்தியார்.

நண்பரே !! - கேள்வி பதிலில் கலந்து கொள்ள ஆசை தான் - தெரியவில்லையே !! - எப்படியும் தாங்களே பதிலும் கூறிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.
ReplyDeleteSir my humble suggestions to you is please don't answer these kind of questions. Their intention is not to learn or understand about some new thing. They are asking these questions try to disprove the astrology and discredit India's own ancient science.
ReplyDeleteIt is not their problem and it our inherited British government machinery and our education system that always lookdown on our own achievements. It is better to overlook these ignorant people and may be one day they will understand.
It is very important not get distracted by these question and waste your precious time. I am really disappointed that one class is wasted to answer these kinds of silly questions.
Anyway thanks for your kind service
Sir my humble suggestions to you is please don't answer these kind of questions. Their intention is not to learn or understand about some new thing. They are asking these questions try to disprove the astrology and discredit India’s own ancient science. It is not their fault and it our inherited British government machinery and current education system that always lookdown on own achievements. It is better to overlook these ignorant people and may be one day they will understand.
ReplyDeleteIt is very important not get distracted by these question and waste your precious time. I am really disappointed that one class is wasted to answer these kinds of silly questions.
Anyway thanks for your kind service
சபாஷ் சரியான போட்டி
ReplyDeleteDear Sir, Probably you might be knowing this- I would like to bring the few interesting Correlations between science and astrology.
ReplyDeleteThe saturn takes 2.5 yrs in each house and hence it takes 30 years to make a complete rotation- (12X2.5)in astrology. Scientifically it takes 29.86- approximately 30 years to make one full orbital rotation.
The jupiter takes a year in each house and hence 12 yeas to complete one full round astrologically. In astronomy it takes 11.9 years (~12 years) for completion of one orbital rotation.
The other planets that affect the human life are only considered and among them others have comparitively very less orbital rotation time and hence they were insignificant and in astrology there are no peyarchi like sani and guru peyarchi for them.
The ragu and kethu are called chaya graha( shadow plantes) in astrology. In astrology the raghu and kethu symbollically are told to swallow the sun and moon. Science says the shadow of earth and sun cause the eclipse.( here it is the shadow- which is also denoted as chaya graha in the astrology)
Also as you know the Guru is supposed to be the mightiest graha - since its association can nullify the malific effects of other grahas- In astronomy its the most biggest and the planet has highest gravity.
These are just I could think of now and I am sure you shd be aware of these facts and much more. The wonder is now scientists were able to tell all these thing using the high tech telescopes and computer simulations (galileo also used telescopes still he could not tell the finer details like this except gross details like stars are fixed). Hw our people were able to see- identify which is jupiter or saturn and its might like gravity and its orbit length and the time taken for the orbital rotation.
its also recorded that there are innumerable planets and stars in the space- those considerd in astrology are the ones which are close enough to earth and affect the life on earth (may be by radiation). Even moon- called manaskaraga is known to affect the mind- you can see the effects on mentally ill people on full moon or no moon days.. OOPs going long.
to cut short- whats the technology used by our people to decode all these things? There are lots of examples like this even in tamil literature like avvayar padals. (If you like you can use these to stress your point and you can also translate and publish- )
ஐயா, உங்களின் அசாத்திய பொறுமை வியக்க வைக்கிறது. அழகான பதிவு!
ReplyDelete1. தட்பவெட்ப மாறுதலுக்கு காரணம், பூமியின் 23.5 டிகிரி சாய்தலும், சூரியனிடமிருந்து அந்த இடத்தின் தூரமும்.
2. இந்த இரண்டு காரணங்களும் ஆக்ஸிஜனை பாதிப்பதில்லை. அது காற்று மண்டலத்தைச் சார்ந்தது.
3. ஹி..ஹி. அந்த விஞ்ஞானிக்கு எத்தனை ஆயிரம் பெயர்கள், எதை என்று சொல்லுவேன்? இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் என்கிறார் வள்ளுவர்!
அன்புடன்,
ஏகலைவன்
////cheena (சீனா) said...
ReplyDeleteநண்பரே !! - கேள்வி பதிலில் கலந்து கொள்ள ஆசை தான் - தெரியவில்லையே !! - எப்படியும் தாங்களே பதிலும் கூறிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.///
அதெல்லாம் ஒன்றும் இல்லை. செல்லாவே சொல்லி விடுவார் - இல்லையென்றாலும் நம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் நிச்சயம் சொல்லிவிடுவார். பொறுத்திருந்து பாருங்கள்
///Monickam said...
ReplyDeleteIt is very important not get distracted by these question and waste your precious time. I am really disappointed that one class is wasted to answer these kinds of silly questions.///
நான் வேறு மாதிரி நினைக்கிறேன் நண்பரே. இது போன்ற கெள்விகளால்தான்.
புதிய சிந்தனை, புதிய தேடல், புதிய செய்தி எல்லாம் கிடைக்கும்
பதிவில் சொல்லியுள்ள செய்திகளைப் பாருங்கள்.
நான் பிராமணன் அல்லன். இன்றுவரை ஜோதிடம்,வாஸ்து போன்றவைகளை ஆராய்ந்து வருகிறேன். என்னை நாடி வருவோருக்கு "இது என் ஆராய்ச்சியின் இடைக்கால முடிவு" என்று குறிப்பிட்டே ஆலோசனை வழங்குகிறேன்.
ReplyDeleteதெருக்குத்து என்ற ஒரே ஒரு அம்சத்தைப் பற்றி மட்டும் கூறி என் கருத்தை முடிக்கிறேன். தெருக்குத்து என்றால் கட்டிடத்தின் நேர் எதிரில் சாலை இருப்பதாகும். இது தீமை தரும் என்பது வாஸ்து.
ஒருவன் மற்றொருவனை கொல்ல விரட்டி வருகிறான் என்று வைய்யுங்கள். அவன் நேர் எதிரில் உள்ள நம் வீட்டுக்குள் தான் நுழைவான். அட ஒரு லாரி ப்ரேக் ஃபெயில் ஆகி அந்த சாலையில் வந்தால் அது நம் வீட்டுக்குள் தான் நுழையும்.
இந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.
ஜோதிடம் குறித்த என் கருத்துக்களை மேலும் அறிய:
www.tamilvasam.blogspot.com
www.kavithai.blogspot.com
//கூட்டணியை ஏற்படுத்தியவர்கள் ஆர்யபட்டாவும் வாராஹிமிகிரரும், பாராசுரரும் ஆவார்கள்.//
ReplyDeleteவாத்தியாரே, இதில் ஆர்யபட்டாவைப் பற்றித் தெரியும்.. மீதியிருக்கும் இருவர் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்..
அப்புறம்,
நம்ம செல்லா இன்னும் நிறைய கேள்விகள் கேக்கணும்.. நீங்களும் நிறைய பதில்களைச் சொல்லணும்.. நானும் நிறைய தெரிஞ்சுக்கணும்னு எல்லாம் வல்ல என் அப்பன் அந்த மருதமலை முருகனை வேண்டிக்கிறேன்..
///எம்.என்.நம்பியார் said...
ReplyDeleteசபாஷ் சரியான போட்டி///
யாரைய்யா அது எம்.என்.நம்பியார் வேடத்தில்?
எனக்குப் பிடித்த வில்லன் நடிகர்.பி.எஸ்.வீரப்பா.
இனிமேல் அந்த வேடத்தில் வாரும்.
///Anonymous said...
ReplyDeleteto cut short- whats the technology used by our people to decode all these things? There are lots of examples like this even in tamil literature like avvayar padals. (If you like you can use these to stress your point and you can also translate and publish- )////
உங்களூடைய நீண்ட பின்னூட்டத்திற்கும், செய்திகளுக்கும் நன்றி அனானி நண்பரே !
////Anonymous said...
ReplyDelete3. ஹி..ஹி. அந்த விஞ்ஞானிக்கு எத்தனை ஆயிரம் பெயர்கள், எதை என்று சொல்லுவேன்? இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் என்கிறார் வள்ளுவர்!
அன்புடன்,
ஏகலைவன் ///
நீங்கள் இறைவன் என்று சொல்வதை - இறை மறுப்பாளர்கள் இயற்கை என்கிறார்கள் - ஆகவே இறைவனுக்கு இயற்கை என்ற பெயரும் உண்டு!
நன்றி, ஏகலைவன். நீங்கள் உங்கள் சொந்தப் பெயரில் வந்திருக்கலாமே?
அடுத்த முறை வாருங்கள். அல்லது தனி மடலில் மின்னஜ்சல்மூலம் வாருங்கள்
///chittoor.S.Murugeshan said...
ReplyDeleteநான் பிராமணன் அல்லன். இன்றுவரை ஜோதிடம்,வாஸ்து போன்றவைகளை ஆராய்ந்து வருகிறேன்.
இந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.///
இட்டுக்கட்டுதல் என்பது மனிதனுடைய பொதுக் குணம். ஜாதி மதம் பேதமின்றி அனைவரிடமுமே உள்ளதாகும். இதில் பிராமணர்களை மட்டும் தனித்துச் சொல்வது ஏற்புடையதல்ல! எனக்கும் ஏராளமான நண்பர்கள் உண்டு.நான் என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்
///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே, இதில் ஆர்யபட்டாவைப் பற்றித் தெரியும்.. மீதியிருக்கும் இருவர் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்..///
ஆகா உங்களுக்குச் சொல்லாமலா? பின்னால் பதிவில் அவர்களுக்கென்று தனிதனிப் பதிவுகள் உண்டு
/// நம்ம செல்லா இன்னும் நிறைய கேள்விகள் கேக்கணும்.. நீங்களும் நிறைய பதில்களைச் சொல்லணும்.. நானும் நிறைய தெரிஞ்சுக்கணும்னு எல்லாம் வல்ல என் அப்பன் அந்த மருதமலை முருகனை வேண்டிக்கிறேன்..///
நானும் வேண்டிக்கிறேன்.
ஐயா,
ReplyDeleteவெகுஅழகான கேள்விகள். இந்தக் கேள்விகளையும் சேர்த்தே கேட்டுவிடுங்கள்.. பார்க்கலாம் என்ன பதில் வருகிறது என்று..
1) கடல் நீர் 70% இருக்க ஏன் அது இன்னமும் தரைப் பரப்பை மூழ்கடிக்கவில்லை.
2) நாம் நடக்கும் போது தரையோடு ஒட்டி நடக்கவைக்கிறதே அந்த புவியீர்ப்பு சக்தியைக் கொடுத்த சக்தி எது.
3) உலகத்தின் சிறந்த பம்ப் ஆன இதயத்தை வடிவமைத்த விஞ்ஞானி யார்.
இவற்றுக்கெல்லாம் "தெரியாது" என்று மழுப்ப சிலர் முற்படலாம்.. அவர்கள் இது தான் கடவுள் என்று நம்பும்வரை நாம் போராடுவோம்.
வணக்கங்கள்
////இவற்றுக்கெல்லாம் "தெரியாது" என்று மழுப்ப சிலர் முற்படலாம்.. அவர்கள் இது தான் கடவுள் என்று நம்பும்வரை நாம் போராடுவோம்.////
ReplyDeleteயாரையும் நம்ப வைப்பது நம் வேலையல்ல!
நம்ப வைக்கவும் முடியாது!
இறைவன் இல்லையென்று வாதிடுபவர்களுக்கு
அவன் இல்லாமலே போகட்டும்!
அதனால் யாருக்கு என்ன நஷ்டம்?
இளம் கன்று பயமறியாது.
சின்ன வயதில் எதையும் இல்லையென்று சொல்பவன்
ஒரு காலகட்டத்தில் நான்தான் தவறு செய்துவிட்டேன்
அது உண்டு என்பான்.
அதற்கு நானே உதாரணம்!
சின்ன வயதில் நானும் நாத்திகம் பேசும் அன்பர்களுடன்
ஒன்றாகச் சுற்றியவன்தான்
நாத்திகவாதத்திற்கு வலுசேர்க்க அலைந்தபோதுதான்
நான் வசமாக இறைவனிடம் மாட்டிக் கொண்டுவிட்டேன்
அது பெரிய கதை!
சார்,
ReplyDeleteசில பல சமயங்களில் நம் வார்த்தைகள் அவற்ருக்கு உரிமையான பலனை இழப்பதோடு, நேர்மாறான புரிதலையும் தந்து விடுகின்றன.
இது ஏன் எண்று சொல்ல முடியுமா?
அய்யா, ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். கடவுள் எங்கும் நிலைத்து நிற்கிறார் என்பதற்கு உங்கள் ஒரு கேள்வி போதும். ஏற்கனவே அதுவாக நடக்கிறதை விஞானிகள் கண்டுபிடுத்து, இதுதான் இது என்று சொல்லிவிட்டு போய் விடுகிறார்கள். ஆனால் என்/எப்படி அது அப்படி உள்ளது என்பதை ஆராய மறுக்கிறார்கள்.
ReplyDeleteThe latest theory to explain the universe is String theory. In which the basic elements are tiny strings and particles are formed by vibrations of these strings. The strings are same, but their way of vibrations make it an electron or proton. You and me are the same, we just vibrate differently. Our ancient scriptures deals very deep into mantras that cause good vibrations in us. It is all about these vibrations and I believe this also in a way indicates the presence of God, the Power which makes these vibrations to go on.
செல்லா- பெரிய கருத்துப் பிரளயத்தயே செஞ்சிட்டீர்.
ReplyDeleteநிறைய கருத்துகளைத் தெரிந்து கொண்டேன்.
நன்றி வாத்தியார் அவர்களே!