Astrology: சொந்த ஊரில் வசிக்கும் பாக்கியம்
தலைப்பு: சொந்த ஊர்
சொந்த ஊர் என்றாலே எல்லோருக்கும் ஒரு மயக்கம்தான். சொந்த ஊரில் வசிப்பதே ஒரு பாக்கியம்தான்
ஆனாலும் அது நம் கையிலா இருக்கிறது? படித்து முடித்தவுடன், பலர் வேலை வாய்ப்பின் காரணமாக வெளியூருக்குச் சென்று வசிக்க நேரிடுகிறது. சிலருக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கும்படியான சூழ்நிலை உண்டாகிவிடுகிறது.
அங்கே சென்று, அதாவது வெளியூர் அல்லது வெளி நாடுகளுக்குச் சென்று, எவ்வள்வு பொருள் ஈட்டினாலும் அல்லது எத்தனை வசதிமிக்க வாழ்க்கை வாழ்ந்தாலும், மனதிற்குள் சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் இருக்கத்தான் செய்யும். சிலர் அதை வெளிப்படுத்துவார்கள். சிலர் தங்கள் உள்ள உணர்வுகளை வெளிப் படுத்தாமல் கமுக்கமாக இருப்பார்கள்.
“சொர்க்கமே என்றாலும் அது நம்மஊரைப் போலவருமா
அடஎந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக் கீடாகுமா ”
என்று ஒரு அற்புதமான பாடல் மூலம் இளையராஜா அதை பலரும் அறியப் பாடலாகச் சொன்னார்.
மத்திய வயதில் வெளி நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள சொகுசான வாழ்க்கையால் பலர் தங்களை மறந்து அங்கே இருந்தாலும், வயதான காலத்தில், சொந்த ஊர் ஏக்கம் பலருக்கும் வந்து விடும்.
தங்கள் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், மாதம் ஒருமுறையாவது தங்கள் ஊருக்கு வந்து விட்டுப் போவார்கள். வட மாநிலங்களில் இருப்பவர்கள் வருடம் ஒருமுறையாவது வந்து விட்டுப்போவார்கள். சிங்கப்பூர், துபாய், அல்லது அமெரிக்கா போன்ற தூர தேசங்களில் இருப்பவர்கள், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வந்து விட்டுப் போவார்கள்.
ஆனால் வயதானவர்கள், அதாவது 60 அல்லது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் நாட்டை விட்டு அல்லது வசிக்கும் ஊரை விட்டுத் திரும்பி வந்து, தங்கள் சொந்த ஊரிலேயே செட்டில் ஆகும் விருப்பம் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைக்கும். பலருக்கும் அது கிடைக்காமல் போய்விடும்.
வயதான காலத்தில், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள், அதாவது மனைவி மற்றும் மக்கள் (பிள்ளைகள்) அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?
ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அதைச் சற்று அலசுவோம்
-------------------------------------------------------------
லக்கினாதிபதி, 12ல் இருந்தால் ஜாதகனை வெளியூருக்குத் தள்ளிக் கொண்டு போய் விடுவார். நம்ம ஜாதகரும், தில்லியில் அரசு வேலையில் பல்லாண்டுகள் இருந்தவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். 1996ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றதும், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்து செட்டிலாக முயன்றார். அது உடனடியாக நடக்கவில்லை. அவருடைய மனைவியும் மக்களும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களுடன் அவரும் தொடர்ந்து தில்லியிலேயே இருக்கும்படி ஆயிற்று. அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு அவரது ஏக்கம் தீர்ந்தது. சொந்த ஊருக்குத் திரும்பிவந்து செட்டிலானார்.
1. லக்கினாதிபதி செவ்வாய் 12ல் உடன் பூர்வ புண்ணியாதிபதி சூரியன். செவ்வாய் ஜாதகத்தில் வர்கோத்தமம் பெற்றுள்ளார்.
2. பூர்வபுண்ணிய அதிபதி சூரியனும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில்
அந்த அமைப்பால், அவர் சொந்த ஊரைவிட்டு தூரமான இடத்திற்குச் சென்று ஜீவிக்க வேண்டியதாயிற்று. அதே அமைப்பு அப்படித் தள்ளிக்கொண்டு சென்றவனைச் சட்டென்று சொந்த் மண்ணிற்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்காது. அவன் ஜீவனம் செய்த ஊரிலேயே இருக்கும்படியாகிவிடும்.
ராகு கொடி காட்டினால்தான் இடமாற்றங்கள் ஏற்படும். Jupiter is the ruling planet for distant places. இந்த ஜாதகத்தில் குரு 9ற்கு உரியவர். அத்துடன் அவர் ஒன்பதாம் வீட்டிலேயே இருக்கிறார். ஆனால் அவருடன் கூட்டாக இருக்கும் ராகு, (குரு திசை ராகு புத்தியில்) தன்னுடைய புத்தியில் அவருக்கு இட மாற்றம் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தான்
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்