ரிஷப லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
இந்த லக்கினத்திற்கு சுக்கிரன் அதிபதி. ஆகவே இந்த லக்கினக்காரர்கள் மெல்லிய உணர்வுகள் மிக்கவர்கள். கற்பனை வளம் மிக்கவர்கள்: சட்டென்று எதிலும் ஈடுபாடு கொள்பவர்கள். சிலர் காதல் வசப்படுபவர்கள். ரசனை மிக்கவர்கள். எதையும் ரசித்து மகிழ்பவர்கள். சிலர் பெண்களின் மேல் பித்தாக இருப்பார்கள். இவை எல்லாம் பொதுப் பலன்.
1.
இந்த லக்கினக்காரர்களுக்கு சனீஷ்வரன் யோககாரகன் ஒரு திரிகோணவீடு மற்றும் ஒரு கேந்திர வீட்டிற்கு உரியவன். ஆகவே நன்மைகளைச் செய்யக்கூடியவன். ஆனால் அதே சனி லக்கினத்தில் அமர்ந்திருந்தால் அதிகமான யோகங்களைத் தருவான். அதே போல சூரியனும், புதனும் லக்கினத்தில் அமர்ந்திருந்தால் நன்மைகளைச் செய்வார்கள்
2
இந்த லக்கினக்காரர்களுக்கு செவ்வாயும் குருவும் கூட்டாக மகரத்தில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குப் பல புண்ணிய நதிகளில் தீர்த்தமாடும் வாய்ப்புக் கிடைக்கும்.
ராகு கும்பத்தில் அமர்ந்திருந்தாலும் அதே பலன் கிடைக்கும்
3.
இந்த லக்கினக்காரர்களுக்கு சந்திரன் சிம்ம வீட்டில் அமர்ந்திருப்பதோடு, குரு அல்லது புதனின் பார்வையைப் பெற்றிருந்தால் யோகத்தைக் கொடுப்பான்.
4.
இந்த லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் ஏழில் அமர்ந்திருந்தால் நன்மையான அமைப்பு அது.
5.
சூரியனும் குருவும் மீனத்தில் அமர்ந்திருந்தால், இந்த லக்கினக்காரகளுக்குப் பூரண ஆயுள் உண்டு. தீர்க்காயுள்.
6
ஜாதகத்தில் குருவும் புதனும் சேர்ந்திருந்தால் தன யோகம் உண்டாகும். அதீதமான பண வரவு உண்டாகும்.
7
மேற்கூரிய அமைப்பு செவ்வாயின் பார்வையைப் பெற்றிருந்தால், அந்த யோகம் காலாவதியாகிவிடும். அதாவது இல்லாமல் போய்விடும்
8.
இந்த லக்கினக்காரர்களுக்கு ஜாதகத்தில் புதன், செவ்வாய் மற்றும் குருவுடன் சேர்ந்திருந்தால், புதனுடைய திசையில் கைக்காசெல்லாம் கரைந்து ஜாதகன் கடனாளியாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
9.
இந்த லக்கினக்காரர்களுக்கு குரு மகா திசை கலவையான பலனைக் கொடுக்கும். அதாவது நன்மை மற்றும் தீமை கலந்த பலன்களைக் கொடுக்கும்.
10.
இந்த லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் திசை செல்வத்தைக் கொடுக்கும்.
அடுத்த பாடம்: மிதுன லக்கினத்திகு உரிய முக்கிய பலன்கள். அவற்றை எழுதிப் பதிவிட உள்ளேன். பொறுத்திருங்கள்
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com