மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.3.17

நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் - எப்படி? இதைப் படியுங்கள் தெரியும்!!!!

நீங்கள் அதிர்ஷ்டசாலிதான் - எப்படி?    இதைப் படியுங்கள் தெரியும்!!!!

இதை  சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள்.

இதைப் படிப்பதால், உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம்.

* உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும்
உனக்கு இருந்தால்,  உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.

* உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு
பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

*நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை
விட நீ பாக்கியசாலி.

* பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள
உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.

* போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்.

*கொடுமைகளுக்கு உள்ளாகாமல், நீ விரும்பும் தெய்வத்தை
தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு
கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால், நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர்
கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.உலகம் முழுதும், சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க
முடிந்தால், உலக அளவில் எழுத படிக்க இயலாத 80  கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.

* இணையத்தில் இந்த செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால்,
அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால்,
அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ கொடுத்து வைத்தவன்..!!

* நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும்.. தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய
அறிவு கூட இல்லாமல்,  கோடிக்கணக்கானோர் இவ்வுலகில்
இருக்க, ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா
பின்னே..??

* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!!

வீண் கவலைகளை விட்டு,அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதை பொருட்கள் என்பவற்றை
விட்டு விட்டு,  நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு
உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.
God is Great!

படித்ததில் சிறந்தது.
அன்புடன்
வாத்தியார்
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

 1. நன்றி ஐயா , தங்களின் அருமையான கருத்துகளுக்கு தலை வணங்குகிறேன்.

  ReplyDelete
 2. வணக்கம் குருவே!
  நிச்சயமாக நான் அதிர்ஷ்டசாலி தான்!
  அடிக்கடி இப்பதிவைப் படிப்பேன்!

  ReplyDelete
 3. Respected Sir,

  Pleasant morning... Nice to share...

  Have a great day.

  Thanks & Regards,
  Ravi-avn

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா
  உபயோகமான தகவல்
  நன்றி
  மூர்த்தி

  ReplyDelete
 5. வணக்கம் ஐயா,ஆஹா!.நானும் அதிர்ஷ்டசாலிதான்.நன்றி.

  ReplyDelete
 6. ////Blogger kmr.krishnan said...
  Nice Sir//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

  ReplyDelete
 7. /////Blogger C Jeevanantham said...
  நன்றி ஐயா , தங்களின் அருமையான கருத்துகளுக்கு தலை வணங்குகிறேன்./////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்!!!!

  ReplyDelete
 8. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  நிச்சயமாக நான் அதிர்ஷ்டசாலி தான்!
  அடிக்கடி இப்பதிவைப் படிப்பேன்!/////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

  ReplyDelete
 9. ////Blogger ravichandran said...
  Respected Sir,
  Pleasant morning... Nice to share...
  Have a great day.
  Thanks & Regards,
  Ravi-avn//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!!

  ReplyDelete
 10. ////Blogger moorthy krishnan said...
  வணக்கம் ஐயா
  உபயோகமான தகவல்
  நன்றி
  மூர்த்தி/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி மூர்த்தி!!!!

  ReplyDelete
 11. ////Blogger Ganapathy Subramanian said...
  Very very superp.//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 12. //////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,ஆஹா!.நானும் அதிர்ஷ்டசாலிதான்.நன்றி.//////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com