Health care: ஒரு வேளை மருந்தில் ஓடிப் போகும் மஞ்சள் காமாலை நோய்!
ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
***********************
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை ஒருவர் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.
உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ இது அவசியம் பயன் படும்.
சென்ற ஆண்டு நண்பரின் மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காண தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தார்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது. ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான். சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.
எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.
அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.
மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன். கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.
மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,கீழாநெல்லி இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.
அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார். பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.
அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன். மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன். அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது. மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.
நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.
எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும் விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.
நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும் இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை வழக்கமான உணவு உண்ணலாம்.
பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர் வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம். பையன் முகத்தில் ஒருத் தெளிவு. மருந் துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.
அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.
எனக்கு ஆச்சர்யம் இன்றுவரை தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.
மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.
பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே வே ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.
விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம் கெங்கராயம்பாளையம் உள்ளது.
==========================================================
2
*எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் எந்தத் தகப்பனும்* *தன் மகனுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை* *இவ்வளவு தெளிவா சொன்னதில்ல...!!!*
*.*
*.*
*பரீட்சையில் நீ எழுதும் ஒவ்வொரு தவறான பதிலும்,* *உன் எதிர்கால வாழ்க்கையில் நடக்கப்போகும் தேனிலவை சுவிட்சர்லாந்திலிருந்து சைதாப்பேட்டைக்கு மாற்றும்...!!!*
===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அருமையான தகவல். இந்த மருத்துவர்கள் மருத்துவத்தை ரகசியமாக வைக்காமல் ஆய்வுக்கு உட்படுத்தினால் நல்லது.
ReplyDeleteஅருமையான தகவல்.
ReplyDeleteவாத்தியார் விரைவில் உடல் நலம் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்...
அப்போதானே எங்களுக்கு Quiz கிடைக்கும்...
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Respected sir,
ReplyDeleteThank q for the good post and useful for the needy.
with kind regards,
Visvanathan N
வணக்கம் குருவே!
ReplyDeleteஅற்புதம், எங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கட்குத் தெரியப்படுத்த வேண்டி உயிர்காக்கும் தகவல்! நன்றி!
இதுல நான் என்கிறது நீங்கதானா?
ReplyDeleteவணக்கம் ஐயா,மிகவும் அரிதான ஒரு தகவல்.முன்பே தெரிந்திருந்தால் நா.முத்துகுமார் நம்மிடையே இன்று இருந்திருப்பார்.பதிவை நண்பர்களுக்கு பகிர்ந்துவிட்டேன்.நன்றி.
ReplyDeleteThankyou for a useful and needy info.
ReplyDeleteCan you plz share the full address and contact details of the doctor along with his name!!