மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.11.15

ரேஷன் கார்டையும் ஆதார் அட்டையையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டாமா? இதைப் படியுங்கள்!


ரேஷன் கார்டையும் ஆதார் அட்டையையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டாமா? இதைப் படியுங்கள்!

நாட்டில் எந்த செயல்பாட்டிற்கும், அடையாள அட்டை (முக்கியமாக ஓட்டுனர் உரிமம் - அதாங்க டிரைவிங் லைசென்ஸ்) மற்றும் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆகியவற்றைக் கேட்கிறார்கள். பெண்களுக்குக் கழுத்தில் தாலியும், கால்களில் மெட்டியும் அடையாளச் சின்னங்கள். ஆண்களுக்கு நான் முதல் வரியில் குறிப்பிட்டுள்ள அட்டைகள் இரண்டும் அடையாளச் சின்னங்கள். கழுத்தில் கட்டித் தொங்க விட்டுக் கொண்டால் மறக்காது.

ஆனால் அவை எல்லாம் இல்லாத பிறவிக்கு என்ன செய்வது? முக்தி அடைவதைத் தவிர வேறு வழியில்லை. சரி, முக்திக்கு என்ன செய்வது? கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------

திருவண்ணாமலை: 

முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை - நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். ஆகவே அண்ணாமலையாரை தினமும் 3 முறைகளாவது நினையுங்கள். முக்தி அடைவீர்கள். அடுத்த
பிறவி இருக்காது. ரேஷன் கார்டையும் ஆதார் அட்டையையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதிருக்காது.

சொல்லிலக்கணம்
திருவண்ணாமலை -
அருணாச்சலம் -
அண்ணாமலை - அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும். பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர்.

காலம்
திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சைவர்களின் நம்பிக்கைப் படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.

அடடா, தங்க மலையாக இருந்த காலத்தில் நாம் இருந்தோமா என்பது தெரியவில்லையே!
========================================================
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற மகா தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. ஒரே நாளில் 5 தேர்கள் பவனி வந்ததை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


நவம்பர் 25ம் தேதி மகாதீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பஞ்ச ரதங்களுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

முதலில், விநாயகர் தேர் காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. அந்த தேர், நிலைக்கு வந்து சேர்ந்ததும் முருகன் தேர் புறப்பட்டுச் சென்றது. மாடவீதியில் சுமார் 3 மணி நேரம் வலம் வந்த தேர் பின்னர் நிலையை அடைந்தது. அதன்பிறகு, உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு பெரிய தேர் புறப்பட்டது. மாட வீதியான தேரடி வீதி, திருவூடல் தெரு, கோபுர வீதி வழியாக பவனி வந்து, 7 மணி நேரத்துக்குப் பிறகு நிலையை சென்றடைந்தது. 5 தேர்தர்கள் பவனி பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் தேரோட்டமும் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெற்றது. ஓரேநாளில், 5 தேர்கள் பவனி வருவது கூடுதல் சிறப்பாகும்.

மகா தேரோட்டத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின்போது குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் சுமந்த பக்தர்கள், மாட வீதியை சுற்றி வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். கொட்டும் மழையில் தேரோட்டம் மகா தேரோட்டம் நடைபெற்ற போது கனமழை பெய்தது. கொட்டும் மழையில் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று முழக்கமிட்டு ஒவ்வொரு தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

காலையில் தொடங்கிய மகா தேரோட்டம், நள்ளிரவில் நிறைவு பெற்றது.

மகாதீபம்: இதைத்தொடர்ந்து அண்ணா மலை கோயிலில் 25ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி (காடா துணி) ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீபக் கொப்பரை சென்றது இந்நிலையில் மகாதீபம் ஏற்றப்படும் தீபக் கொப்பரைக்கு இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை 15க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழை மலைக்கு உச்சிக்கு எடுத்து சென்றனர்.

இன்று அதிகாலை தீபம் ஏற்றுவதற்கான நெய் மற்றும் திரி ஆகியவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.

உள்ளூர் விடுமுறை அண்ணாமலையார் கோவில் மகாதீப விழாவை முன்னிட்டு நவம்பர் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்றைய தினம் தமிழகம் முழுவதிலும் இருந்தும் திருவண்ணாமலைக்கு 2400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

செய்தி Source: http://tamil.oneindia.com/news/tamilnadu/karthigai-deepam Thanks to that people
----------------------------------------------------------

கார்த்திகை தீபத்தைக் காண திருவண்ணாமலைக்குப் போக முடியவில்லையா? கவலை வேண்டாம். தொலைக்காட்சியில் இன்று
மாலை நேரடி ஒளிபரப்பு இருக்கும். கண்டு இன்புறுங்கள்
============================================================
வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!

39 comments:

 1. Ayya vanakkam,

  Kaalai seythi arputham,,,,, Nandrigal kodana kodi....

  Annamalaiyarin arputhamana seythigal udan thuvangiyathu indraiya kaalai pozhuthu...

  Nandri,

  Anbudan, S,Kumanan

  ReplyDelete
 2. ஐயா வணக்கம்
  தொலைக்காட்சி யில் கண்டு மகிழ்கின்றோம்.
  நன்றி ஐயா
  கண்ணன்

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா
  திருவண்ணாமலை செல்லாமலை இங்கிருந்தே 5தேரோட்டங்களை பார்த்த திருப்பி ஐயா. மிக்க நன்றி

  ReplyDelete
 4. அண்ணாமலைக்கு அரோகரா!!

  ReplyDelete
 5. ஐயா,
  தங்களது 'facts of life' ஐ அண்மைக்காலமாக அவதானித்து வருகிறேன்.
  அருமையான தேர்வுகள்.
  ஜோதிட பாடங்களுடன் காலத்திற்கேற்ற ஆன்மிக விடயங்கள் சேர்ந்து வருவதும் மிகவும் சிறப்பாக உள்ளது.

  ReplyDelete
 6. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள்!
  அற்புதமான பதிவு!!!.
  அண்ணாமலையாருக்கு அரோகரா!!!!!
  அன்புடன்,
  -பொன்னுசாமி.

  ReplyDelete
 7. அண்ணாமலையாருக்கு அரோகரா. எங்கள் மாவட்டத்தில் தீபாவளியைவிட மிக பிரசித்தமான திருவிழா தான். அந்த நன்நாளான இன்று வகுப்பறையில் அருணாசல புகழ். அருமை ஐயா.

  ReplyDelete
 8. அண்ணாமலை தீபம் காண தங்களை அழைத்து மகிழ்கின்றோம்

  ReplyDelete
 9. திருமண மான பெண்கள் கூட
  திருடு போக கூடாது என

  தாலியை கழட்டி பீரோவில்
  தொங்க விட்டு விடுகின்றனர்.

  டெல்லி குர்கான் போன்ற இடங்களில்
  திரும்பி தமிழ் நாட்டிற்கு வரும் பொது

  இரயிலில் மா(க)ட்டி கொள்கின்றனர்.
  இனி இந்த உதாரணம் செல்லாது...

  ReplyDelete
 10. அண்ணாமலைக்கு
  அரஹரோஹரா .....

  ReplyDelete
 11. வணக்கம் குரு,

  நல்ல தகவல்களுக்கு நன்றி. சில வருடங்களுக்கு முன் ஒரு திருகார்த்திகைக்கு மலை உச்சியில் மகா தீபத்தை தொட்டு வணங்கி உள்ளேன்.

  நன்றி
  செல்வம்

  ReplyDelete
 12. ஸ்டார்ஸ் பாடம் வாவில்லியே...
  ஸ்டாரில் இன்று என்ன பாடம்...?

  பாடத்தை மொபைல் aap இல்
  பெற நாங்கள் என்ன செய்ய வேண்டும்.?

  ReplyDelete
 13. Respected Sir,

  Happy morning...Holy day... Annamalaiyanukki arokara!

  Have a great day.

  With best regards,
  Ravi - Avn

  ReplyDelete
 14. ஐயா

  தீபத்தை இவ்வளவு அருகில் தரிசிக்கும் பாக்கியத்தை அளித்தமைக்கு நன்றி.

  எம்.திருமால்
  பவளத்தானூர்

  ReplyDelete
 15. வணக்கம்.

  பழைய பாடங்களில் தெளிவுபடுத்தக்கோரி தங்களுக்கு இரண்டு மின்னஞ்சல் (from: karty.iyer@gmail.com) அனுப்பியுள்ளேன். தங்களுக்கு வரும் பல மினஞ்சளுள் அது மறைந்து போயிருக்குமோ என்ற ஐயத்தால் தங்களது அண்மையில் பதிவுயன் பின்னூட்டத்தில் பதிவிக்கிறேன், மன்னிக்கவும்.

  நன்றி.
  இவண்
  கார்த்திகேயன்

  ReplyDelete
 16. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
  கார்த்திகை தீப திருவிழா பற்றிய பதிவு அண்ணாமலையானுக்கு அரோகரா..
  திரி துணி காடா ஒரு குடும்பம் பரம்பரை பரையாக ..மிகுந்த விரதமிருந்து நெய்து கொண்டு வருவார்கள் அந்த துணிதான் திரியாக ஆக்கப்பட்டு தீபத்திற்கு போடப்படும் .அந்த தீபம் ஏற்றப்படும் கொப்பரை செம்பினால் ஆனது சுமார் 1 டன் எடையுள்ளது .அதனின் வெப்பம் தணிய 3 நாட்கள் ஆகும் .சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை தீப ஒளி தெரியும் ...
  ஹர ஹர மகாதேவா

  ReplyDelete
 17. /////Blogger Kumanan Samidurai said...
  Ayya vanakkam,
  Kaalai seythi arputham,,,,, Nandrigal kodana kodi....
  Annamalaiyarin arputhamana seythigal udan thuvangiyathu indraiya kaalai pozhuthu...
  Nandri,
  Anbudan, S,Kumanan////

  நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி குமணன்!

  ReplyDelete
 18. /////Blogger lrk said...
  ஐயா வணக்கம்
  தொலைக்காட்சி யில் கண்டு மகிழ்கின்றோம்.
  நன்றி ஐயா
  கண்ணன்/////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 19. /////Blogger siva kumar said...
  வணக்கம் ஐயா
  திருவண்ணாமலை செல்லாமலை இங்கிருந்தே 5தேரோட்டங்களை பார்த்த திருப்தி ஐயா. மிக்க நன்றி/////

  ஆமாம் எழுதுவதன் நோக்கமும் அதுதான் நன்றி நண்பரே!

  ReplyDelete
 20. /////Blogger kmr.krishnan said...
  அண்ணாமலைக்கு அரோகரா!!/////

  அண்ணாமலையாருக்கு அரோகரா!!!!!

  ReplyDelete
 21. ////Blogger Mrs Anpalagan N said...
  ஐயா,
  தங்களது 'facts of life' ஐ அண்மைக்காலமாக அவதானித்து வருகிறேன்.
  அருமையான தேர்வுகள்.
  ஜோதிட பாடங்களுடன் காலத்திற்கேற்ற ஆன்மிக விடயங்கள் சேர்ந்து வருவதும் மிகவும் சிறப்பாக உள்ளது.//////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி.

  ReplyDelete
 22. /////Blogger GOWDA PONNUSAMY said...
  அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள்!
  அற்புதமான பதிவு!!!.
  அண்ணாமலையாருக்கு அரோகரா!!!!!
  அன்புடன்,
  -பொன்னுசாமி.////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!!

  ReplyDelete
 23. /////Blogger SELVARAJ said...
  அண்ணாமலையாருக்கு அரோகரா. எங்கள் மாவட்டத்தில் தீபாவளியைவிட மிக பிரசித்தமான திருவிழா தான். அந்த நன்நாளான இன்று வகுப்பறையில் அருணாசலா புகழ். அருமை ஐயா./////

  அந்த மாவட்டத்தில் பிறந்தமைக்காக மகிழ்ச்சி கொள்ளுங்கள்!

  ReplyDelete
 24. ///Blogger SELVARAJ said...
  அண்ணாமலை தீபம் காண தங்களை அழைத்து மகிழ்கின்றோம்////

  நல்லது. அழைப்பிற்கு நன்றி!

  ReplyDelete
 25. ////Blogger வேப்பிலை said...
  திருமண மான பெண்கள் கூட
  திருடு போக கூடாது என
  தாலியை கழட்டி பீரோவில்
  தொங்க விட்டு விடுகின்றனர்.
  டெல்லி குர்கான் போன்ற இடங்களில்
  திரும்பி தமிழ் நாட்டிற்கு வரும் பொது
  இரயிலில் மா(க)ட்டி கொள்கின்றனர்.
  இனி இந்த உதாரணம் செல்லாது.../ ////

  செல்லும் செல்லாது என்று பார்த்து எழுத முடியுமா என்ன? நீங்களே சொல்லுங்கள் வேப்பிலையாரே!!

  ReplyDelete
 26. Blogger வேப்பிலை said...
  அண்ணாமலைக்கு
  அரஹரோஹரா .....////

  அண்ணாமலையாருக்கு அரோஹரா!!

  ReplyDelete
 27. ////Blogger selvam velusamy said...
  வணக்கம் குரு,
  நல்ல தகவல்களுக்கு நன்றி. சில வருடங்களுக்கு முன் ஒரு திருகார்த்திகைக்கு மலை உச்சியில் மகா தீபத்தை தொட்டு வணங்கி உள்ளேன்.
  நன்றி
  செல்வம்/////

  அப்படியா? மிக்க மகிழ்ச்சி!!!

  ReplyDelete
 28. /////Blogger வேப்பிலை said...
  ஸ்டார்ஸ் பாடம் வாவில்லியே...
  ஸ்டாரில் இன்று என்ன பாடம்...?
  பாடத்தை மொபைல் aap இல்
  பெற நாங்கள் என்ன செய்ய வேண்டும்.?/////

  வகுப்பறையில் வாரத்திற்கு 5 நாட்கள் பாடங்கள். ஸ்டார்ஸ் வகுப்பில் வாரத்திற்கு 3 பாடங்கள்
  மொபைலில் இன்டெர்னெட் கனெக்‌ஷன் இருந்தால் போதும். அதிலும் பார்க்கலாம்

  ReplyDelete
 29. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning...Holy day... Annamalaiyanukki arokara!
  Have a great day.
  With best regards,
  Ravi - Avn////

  நல்லது. நன்றி அவனாசிக்காரரே!

  ReplyDelete
 30. ////Blogger Nagendra Bharathi said...
  அருமை/////

  நல்லது. நன்றி நாகேந்திர பாரதி!

  ReplyDelete
 31. /////Blogger Thirumal Muthusamy said...
  ஐயா
  தீபத்தை இவ்வளவு அருகில் தரிசிக்கும் பாக்கியத்தை அளித்தமைக்கு நன்றி.
  எம்.திருமால்
  பவளத்தானூர்////

  நல்லது. நன்றி திருமால்!!!!!

  ReplyDelete
 32. /////Blogger Karthigeyan Srinivasan said...
  வணக்கம்.
  பழைய பாடங்களில் தெளிவுபடுத்தக்கோரி தங்களுக்கு இரண்டு மின்னஞ்சல் (from: karty.iyer@gmail.com) அனுப்பியுள்ளேன். தங்களுக்கு வரும் பல மினஞ்சளுள் அது மறைந்து போயிருக்குமோ என்ற ஐயத்தால் தங்களது அண்மையில் பதிவுயன் பின்னூட்டத்தில் பதிவிக்கிறேன், மன்னிக்கவும்.
  நன்றி.
  இவண்
  கார்த்திகேயன்/////

  அதெல்லாம் மறைந்து போகாது. தினமும் 25ற்கும் மேற்பட்ட தனி மின்னஞ்சல்கள் வருகின்றன. அவை அனைத்தையும் படித்து உடனுக்குடன் பதில் எழுத ஆசைதான். ஆனால் நேரமின்மையால் அது சாத்தியப் படவில்லை. உங்களைப் போல எனக்கும் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்தான் உள்ளது.

  ReplyDelete
 33. /////Blogger hamaragana said...
  அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
  கார்த்திகை தீப திருவிழா பற்றிய பதிவு அண்ணாமலையானுக்கு அரோகரா..
  திரி துணி காடா ஒரு குடும்பம் பரம்பரை பரையாக ..மிகுந்த விரதமிருந்து நெய்து கொண்டு வருவார்கள் அந்த துணிதான் திரியாக ஆக்கப்பட்டு தீபத்திற்கு போடப்படும் .அந்த தீபம் ஏற்றப்படும் கொப்பரை செம்பினால் ஆனது சுமார் 1 டன் எடையுள்ளது .அதனின் வெப்பம் தணிய 3 நாட்கள் ஆகும் .சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை தீப ஒளி தெரியும் ...
  ஹர ஹர மகாதேவா////

  மேலதிகத் தகவலுக்கு நன்றி கணபதியாரே!

  ReplyDelete
 34. அண்ணாமலையாருக்கு அரோஹரா .
  இங்கிருந்தே நினைகக்ககூடிய பாக்கியம் பெரும்பாக்கியம் .
  சிந்தனை கொடுத்ததிற்கு இறைவனுக்கு நன்றி .
  இங்கேயும் (அமெரிக்காவிலும்) நாங்கள் கார்த்திகை பண்டிகை கொண்டாடுகிறோம் .
  தீபம் எற்றி சிவனை பூசித்து வழிபடுகிறோம் .
  நீங்கள் கொண்டடிய பிறகு +10.30 மணி நேரம் கழித்து நாங்கள் கொண்டாடுகிறோம்.
  அது ஒன்று தான் வித்தியாசம் .

  ReplyDelete
 35. குருவே வணக்கம்.
  அண்ணாமலையார் பற்றிய தகவல்கள், தங்களிடமிருந்தும் மற்றும் தொலைக்காட்சி மூலம் தீப தரிசனமும் கார்த்திகைத் திருநாளில் நல்விருந்து.
  அண்ணாமலையாருக்கு அரோகரா!

  ReplyDelete
 36. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
  அண்ணாமலையாருக்கு அரோஹரா .
  இங்கிருந்தே நினைகக்ககூடிய பாக்கியம் பெரும்பாக்கியம் .
  சிந்தனை கொடுத்ததிற்கு இறைவனுக்கு நன்றி .
  இங்கேயும் (அமெரிக்காவிலும்) நாங்கள் கார்த்திகை பண்டிகை கொண்டாடுகிறோம் .
  தீபம் எற்றி சிவனை பூசித்து வழிபடுகிறோம் .
  நீங்கள் கொண்டடிய பிறகு +10.30 மணி நேரம் கழித்து நாங்கள் கொண்டாடுகிறோம்.
  அது ஒன்று தான் வித்தியாசம் .//////

  நல்லது. தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 37. /////Blogger வரதராஜன் said...
  குருவே வணக்கம்.
  அண்ணாமலையார் பற்றிய தகவல்கள், தங்களிடமிருந்தும் மற்றும் தொலைக்காட்சி மூலம் தீப தரிசனமும் கார்த்திகைத் திருநாளில் நல்விருந்து.
  அண்ணாமலையாருக்கு அரோகரா!//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 38. அண்ணாமலையானுக்கு அரோகரா!!!!

  "ஓம் தத்புருஷாய வித்மஹே அர்த்தநாரீஸ்வர தேவாய தீமஹி
  தன்னோ அருணாச்சல தேவ ப்ரசோதயாத்"

  "சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய "

  "கற்பூர கௌரம் கருணாவதாரம்
  சம்சாரசாரம் புஜகேந்திரஹாரம்
  தாவசந்தம் ஹிருதயாரவிந்தம்
  பவம் பவாமி சஹிதம் நமாமி"

  சோமசுந்தரம் பழனியப்பன்
  மஸ்கட்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com