மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.9.15

வாழ்க்கையின் சுவாரசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா?


வாழ்க்கையின் சுவாரசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா?

கால்பந்தின் மீது இருந்த ஆர்வத்தால் மாதவனை அவனது அப்பா
மாவட்ட கால்பந்து அணியில் சேர்த்து விட்டார். அவனுக்கு கால்பந்து
விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் ஒரு வித சோம்பலும் அவனிடம் ஒட்டியிருந்ததால் அவனது அணியில் இருக்கும் சக வீரர்களோடு போட்டியிட்டு அணிக்குள் இடம்பெற முயற்சி செய்யாமலே இருந்தான். களத்தில் இறங்கும் 11 பேரில் ஒருவராக இடம்பெற முயற்சிக்காமல் ரிசர்விலே இருந்து  வந்தான்.

சில நேரங்களில் மாதவனின் அப்பா அவனது விளையாட்டை காண மைதானத்துக்கு வருவார். ஆனால் அவன் களத்தில் விளையாடாமல் அணியின் ரிசர்வ் வீரராக இருப்பது கண்டு மிகவும் வருந்துவார்.

அன்று தேசிய அளவில் நடைபெற வேண்டிய போட்டியில் கலந்துகொள்வதற்கான இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள வீரர்கள்
தயார் நிலையில் இருந்தனர். மாதவன் பயிற்சியாளரிடம் சென்று தன்னையும் களத்தில் விளையாடும் அணியில் சேர்த்துக் கொள்ள கெஞ்சினான்.

"இது இறுதிப் போட்டி. தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு. இதில் அனுபவம் உள்ள வீரர்களையே
களம் இறக்க வேண்டும். அப்போது தான் அணி வெற்றி பெற முடியும்"
என்றார் அணியின் பயிற்சியாளர்.

"எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். அணியின் வெற்றிக்காக
உயிரையும் கொடுக்க காத்திருக்கிறேன். உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்"

என மாதவன் பயிற்சியாளரிடம் மன்றாடினான்.

மாதவனின் செயலைப் பார்த்து பயிற்சியாளருக்கு வியப்பாக
இருந்தது. இதுவரை இப்படி எப்போதும் அவன் மன்றாடியதில்லை.
"இது இறுதிப் போட்டி. கவனமுடன் விளையாடு" என ஆடும்
11 வீரர்களில் ஒருவராக சேர்த்துக் கொண்டார்.

மாதவன் ஆட்டத்தில் அனல் பறந்தது. பந்தைக் கொண்டு
தனியொருவனாய் சீறிப்பாய்ந்தான். பந்தை லாவகமாக கடத்தி
தொடர்சியாக கோல் போட்டான். அணியினர் போட்ட 19 கோல்களில்
17 கோல்கள் மாதவனால் போடப்பட்டது. அவனுடைய அணி
இறுதிப் போட்டியில்  வெற்றிப்ப்பெற்றது.

இது எப்படி சாத்தியமாயிறு என்று பயிற்சியாளர் கேட்டார்.

" இன்று என் தந்தை எனது ஆட்டத்தைக் காணவந்தார்" என்று கூறினார்.

"வழக்கமாக அவர் அமரும் இடத்தில் இன்று இல்லையே? அவர் எங்கே அமர்ந்திருந்தார்? " என்று பயிற்சியாளர் கேட்டார்.

அதற்கு மாதவன்," நான்கு நாட்களுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார். இன்று அவர் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்" என்று கூறினான்.

அவன் கண்ணில் ஊற்றெடுத்த கண்ணீர் பயிற்சியாளர் கண்களில் அருவியாய் கொட்டியது.

மனமாற்றம் ஏற்படும் நொடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

சிலருக்கு மகிழ்ச்சியில். சிலருக்கு வேதனையில்.

அந்த நொடியை கண்டுபிடிப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரசியமே அடங்கியிருக்கிறது.
--------------------------------------------------------
2
யார் முட்டாள்?

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த
கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.

அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம்
சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம்
தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.

உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.

அதற்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன்
” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை
என்றால் வேண்டாம் என்றான்.

பிச்சைக்காரன், "அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.

வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.

அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம்
1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன்
“ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே!
நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்..?,
எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு
விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை
எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்
தெரிந்தும் வெறும் 50  பைசாவிற்காக அதை இழந்துவிட்டாய்
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “  என்றவாறே நடக்கலானான்.

ஓஷோ சொன்ன குட்டிக்கதை இது!
-------------------------------
இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

  1. அய்யா

    இரண்டும் அருமை. வாழ்க்கையை அணுகும் முறைகளை இவ்வளவு எளிதாக கூறிவிட்டீர்கள்.

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  2. 2வது வாத்தியாரே...


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  3. Respected sir,

    Happy morning... First one is the best one...

    Have a nice day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  4. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    அருமை 2 மே .....இன்றைய சம்ஷ்க்ரித்த மொழி ..அந்த வைர கல்லை போன்றது .இந்த கதை எங்களது போதகா ஆசிரியார் அடிகடி சொல்லுவார்கள் .....சமஷ்க்ரித்த மொழி அருமை பெருமை தெரிந்த வெளி நாட்டு காரன் .படிக்க வேண்டும் ...என்று படிக்கிறான் ..ஆனால் நம்மவர்கள் ..?????

    ReplyDelete
  5. ஐயா,
    இரண்டுமே டாப் கிளாஸ்! இருப்பதை இழப்பதால் ஏற்படும் மனமாற்றம் மிகவும் ஸ்ட்ராங் தான்.

    ReplyDelete
  6. Both are nice!


    One more:
    WHY DO COUPLES FIGHT!! 😂💕😂


    My wife sat down on the couch next to me as I was flipping channels.

    She asked, 'What's on TV?'

    I said, 'Dust.'

    And then the fight started....

    *************************


    My wife was hinting about what she wanted for our upcoming anniversary.

    She said, 'I want something shiny that goes from 0 to 100 in about 3 seconds.'

    I bought her a weighing scale.

    And then the fight started....

    ***************************


    When I got home last night, my wife demanded that I take her someplace expensive.

    So, I took her to a petrol pump

    And then the fight started....

    ***************************


    My wife is standing & looking in the bedroom mirror. She was not happy with what she saw and said to me,'I feel horrible; I look old, fat and ugly. I really need you to give me a compliment.'

    I replied, 'Your eyesight's perfect.'

    And then the fight started....

    ***************************


    I asked my wife, "Where do you want to go for our anniversary?"

    It warmed my heart to see her face melt in sweet appreciation.

    "Somewhere I've not been in a long time."

    So I took her to the kitchen.

    And then the fight started....

    ***************************


    Dedicated to all married .. But don't send to all

    I sent to my friend. He sent to his wife and then the fight started..😂👊😂

    ReplyDelete
  7. /////Blogger Nagendra Bharathi said...
    இரண்டும் அருமை/////

    நல்லது. நன்றி நாகேந்திர பாரதி!

    ReplyDelete
  8. /////Blogger Thirumal Muthusamy said...
    அய்யா
    இரண்டும் அருமை. வாழ்க்கையை அணுகும் முறைகளை இவ்வளவு எளிதாக கூறிவிட்டீர்கள்.
    எம்.திருமால்
    பவளத்தானூர்////

    நல்லது. நன்றி திருமால்!

    ReplyDelete
  9. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    2வது வாத்தியாரே...
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.////

    நல்லது. நன்றி லெட்சுமிநாராயணன்

    ReplyDelete
  10. /////Blogger ravichandran said...
    Respected sir,
    Happy morning... First one is the best one...
    Have a nice day.
    With kind regards,
    Ravichandran M./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    அருமை 2 மே .....இன்றைய சம்ஷ்க்ரித்த மொழி ..அந்த வைர கல்லை போன்றது .இந்த கதை எங்களது போதகா ஆசிரியார் அடிகடி சொல்லுவார்கள் .....சமஷ்க்ரித்த மொழி அருமை பெருமை தெரிந்த வெளி நாட்டு காரன் .படிக்க வேண்டும் ...என்று படிக்கிறான் ..ஆனால் நம்மவர்கள் ..?????/////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  12. ////Blogger SELVARAJ said...
    வணக்கம். வருகை.////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    இரண்டுமே டாப் கிளாஸ்! இருப்பதை இழப்பதால் ஏற்படும் மனமாற்றம் மிகவும் ஸ்ட்ராங் தான்.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com