மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.9.13

Astrology: 26.9.2013. இப்படி அலசுங்கள் கண்மணிகளா!

 

Astrology: 26.9.2013. இப்படி அலசுங்கள் கண்மணிகளா!

நேற்றைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள்:

ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரணப் பெண்மணிதான் என்று குறிப்பிட்டிருந்தேன்

கேள்விகள்:

1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது  உயர்கல்வி
பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?

ஜாதகி ஒரு கிராமத்தில் பிறந்தவர். செல்வந்தர் வீட்டுப் பெண். எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். அக்கால கிராம வழக்கப்படி, பூப்படைந்த
பிறகு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டு விட்டார்.வீட்டில் நிறுத்தி விட்டார்கள். அதோடு படிப்பும் கட்’டாகிவிட்டது.

நான்காம் வீட்டில் அமர்ந்த மாந்தி கல்விக்கு உலை வைத்தான். அந்த வீட்டு அதிபதி சுக்கிரன் சூரியன், மாந்தி மற்றும் ராகுவோடு கிரகயுத்ததில்
மாட்டிக்கொண்டு விட்டான். உடன் அமர்ந்த ராகுவும் அந்த வீட்டிற்குக் கேடாக அமைந்தான். 4ல் ராகு அமர்வது சுகக் கேடு. எல்லாவற்றையும் விட
முக்கியமாக வித்யாகாரகன் புதன் பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் ராகு, இன்னொரு பக்கம்  சனி. போதாதா? சுபக் கிரகமான சுக்கிரன்தான்  எட்டாம் வகுப்பு வரை ஜாதகியைக் கூட்டிக்கொண்டுபோனான்.இல்லையென்றால் அதுவும் நடந்திருக்காது. ஜாதகிக்குத் தாய் மொழியில் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுத்தான்.

ஜாதகிக்கு 11 வயதில் சனி மகாதிசை ஆரம்பித்தவுடன், அவன் ஆறாம் இடத்தில் வலுவாக இருந்ததால், அவன் லக்கினாதிபதி என்பதையும்
மறந்துவிட்டு, பரிவர்த்தனையான 6ஆம் இடத்துக்காரன் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்தான். 30 வயதுவரை ஜாதகியின்
வாழ்க்கையில் பல கஷ்டங்கள். ஜாதகியின் 22 வயதில் அவருடைய தந்தை இறந்துபோக எல்லாம் கோளாறானது.


2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

திருமணமாகவில்லை.

களத்திரகாரகன் சுக்கிரன் கெட்டுப் போனதாலும், ஏழாம் வீட்டுக்காரன் சூரியன் தீய கிரகமான ராகு மற்றும் மாந்தியின் கூட்டால் வலுவிழந்து போனதாலும், மேலும் 30 வயதுவரை நடந்த சனி திசையாலும் 30 வயதுவரை ஜாதகிக்குத் திருமணம் நடக்கவில்லை.அதற்குப் பிறகு வந்த புதன் திசையின் தசா நாதன் புதனும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி அடிபட்டுப் போனதால் ஜாதகிக்குத் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. பலர் முயற்சி செய்தும் அது கூடிவராமல் போய்விட்டது.


3. ஜாதகர் வேலைக்குச் செல்பவரா? அல்லது வீட்டிலேயே இருப்பவரா?

ஒரு நாள் கூட வேலைக்குச் சென்றதில்லை.

பத்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் அந்த வீட்டிற்கு ஆறில். தொழில்காரகன் சனீஷ்வரன் லக்கினத்திற்கு ஆறில். அதனால் வேலைக்குச் செல்ல வில்லை. அவர்கள் செல்ல விடவில்லை. வீட்டில் இருந்த செல்வம் அவரை ரோட்டி, கப்டா, மக்கான் என்று நல்ல அடிப்படை வசதிகளுடன் வாழ வைத்தது. 


4. இந்த ஜாதகத்தில் சனியும் சந்திரனும் பரிவர்த்தனையானதன் பலன் என்ன?

ஒன்றாம் வீட்டுக்காரனும், ஆறாம் வீட்டுக்காரனும் பரிவர்த்தனை பெறுவது கடும் அவயோகம். தைன்ய யோகம் என்று அதற்குப் பெயர்(திருவாளர்
KMRK கண்ணில் மட்டும் அது பட்டுள்ளது. தன்னுடைய பின்னூட்டத்தில் அவர் அதைக் குறிப்பிட்டுள்ளார்). ஜாதகனுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை அழித்துவிடக் கூடியது அந்த அவயோகம்.

தைன்ய யோகத்திற்கான விளக்கத்தைக் கீழே கொடுத்துள்ளேன்:

தைன்ய பரிவர்த்தனை என்பது தீய இடங்களான 6,8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் (Ruler of 6,8, or 12th houses) பரிவர்த்தனை பெற்றால்,
பரிவர்த்தனையான அடுத்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகும்.

-------------------------------------------------------------------------
லக்கினாதிபதிதான் ஜாதகத்தில் முக்கியமானவர். அவர் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் விதி என்ற வெள்ள நீற்றில் எதிர் நீச்சல் போட வேண்டும். இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி வலுவிழந்து போய் விட்டதால், எதுவுமே நன்றாக அமையவில்லை.

கும்ப லக்கினம் நல்ல லக்கினம். அதனால்தான் அதற்குப் பூரண கும்பம் அடையாளமாகக் கொடுக்கப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் கும்ப
லகினத்திற்கு ஒரு சிக்கலும் கூடவே உள்ளது. கும்ப லக்கினத்திற்கு லக்கினாதிபதியும் சனிதான். பன்னிரெண்டாம் வீட்டுக்காரனும் (12Th Lord)
சனிதான். இந்த லக்கினக்காரகளுக்கு சனி வலுவாக (strong) இருந்தால் successful life இல்லையென்றால்,அதாவது வலுவிழந்து (weak) இருந்தால் எல்லாம் தோல்விதான் (failureதான்)

நான் அடிக்கடி சொல்வதைபோல இறைவன் நஷ்ட ஈட்டை வழங்கித்தான் உள்ளார். இல்லை என்றால் இவருக்கு எப்படி பொது நீதியான 337
பரல்கள் வரும்? என்ன நஷ்ட ஈடு? முக்கிய திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குருபகவான் அமர்ந்து ரட்சித்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் ஜாதகி எல்லாப் பிரச்சினைகளையும் உதறி விட்டு, உங்கள் மொழியில் சொன்னால் கடாசிவிட்டு, நிம்மதியாக இருக்கிறார்.

-------------------------------------------------------------------------
நான்கு கேள்விகளுக்கும் சரியான விடையை ஒருவரும் எழுதவில்லை. அதனால் என்ன? அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக்
காட்டுங்கள்!

பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கும் சிலர் 3 கேள்விகளுக்கும் பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++=======

38 comments:

  1. இந்த மாதிரி பாடங்கள் புரிகிறது. ஞாபகம் வைத்துக்கொள்ளவும் எளிதாக இருக்கிறது. நன்றி ஐயா.

    ReplyDelete
  2. அலசலுக்கு மிக்க நன்றி ஐயா!
    மிகவும் வித்தியாசமான ஜாதகம்!
    (தேச, கால, குடும்பச் சூழல்களும் ஜாதகரை பாதிக்கும் அம்சங்களாக இருப்பதைக் காண முடிகிறது)
    -நட்புடன்
    ஸ்ரீனிவாச ராஜுலு

    ReplyDelete
  3. Respected Sir,

    Guru is always guru... we are still in last bench... we will come first bench very soon.

    I have also answered about thainya parvarthanai..

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  5. ஹா! ஹா! ஹா! 'ஒன்றாம் வீட்டானும் ஆறாம் வீட்டானும் பரிவர்த்தனை பெறுவது தோஷம்' என்றெனக்குத் தெரியாது. ஒன்றாம் வீட்டதிபதியான சனி வலுவாக இருப்பதாக எடுத்துகொண்டேன். மிக்க நன்றி, அய்யா!

    ReplyDelete
  6. ஐயா,
    தைன்ய பரிவர்த்தனை என்பதை நானும் குறிப்பிட்டுள்ளேன்.நான் குறிப்பிட்டதில் அது மட்டும் தான் சரி மீதி 3பதில்களும் தவறு.
    ஐயா நீங்கள் முதலில் 6ல் சனி வலுவாக உள்ளார் எனவும் இறுதியில் சனி பலமிலந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள் விளக்கம் தேவை.

    ஐயா என்னுடைய ஜாதத்திலும் சனி ஆறாம் வீட்டுக்காரனுடன் பரிவர்த்தனை (மகர லக்னம்) ஆனால் சனி திசை தான் எனக்கு திருமணம்
    குழந்தைகள் வீடு வேலை தொழில் கார் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுத்தான்(நானே எதிர்பார்க்கவில்லை)
    இந்த ஜாதகத்தில் உள்ளது போல எனது ஜாதகத்திலும் பத்தாமதிபதி அந்த வீட்டிற்க்கு 6இல் மறைவு சனியும் லக்னத்திற்க்கு ஆறில் மறைவு. ஆனால் நான் வேலைக்கு சென்று தான்
    பொருளீட்டுகிறேன். சற்று விளக்கினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
    My DOB- 2 March 1975- 5.30 am -Bhavani

    ReplyDelete
    Replies
    1. பதில் தருவீர்களாக...

      Delete
  7. /////Blogger விசயக்குமார் said...
    இந்த மாதிரி பாடங்கள் புரிகிறது. ஞாபகம் வைத்துக்கொள்ளவும் எளிதாக இருக்கிறது. நன்றி ஐயா.//////

    ஒருமுறைக்கு இருமுறை படித்தால் எல்லா பாடங்களுமே புரியும் சாமி! நான் எப்போதுமே எளிமையாகத்தான் எழுதுகிறேன்.

    ReplyDelete
  8. ////Blogger Srinivasa Rajulu.M said...
    அலசலுக்கு மிக்க நன்றி ஐயா!
    மிகவும் வித்தியாசமான ஜாதகம்!
    (தேச, கால, குடும்பச் சூழல்களும் ஜாதகரை பாதிக்கும் அம்சங்களாக இருப்பதைக் காண முடிகிறது)
    - நட்புடன், ஸ்ரீனிவாச ராஜுலு/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger eswari sekar said...
    vanakam.sir ./////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  10. Blogger Raman Raman said...
    Nalla alasal paadam aiyaa. Nandri/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Guru is always guru... we are still in last bench... we will come first bench very soon.
    I have also answered about thainya parvarthanai..
    With kind regards,
    Ravichandran M./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  12. ////Blogger Sattur Karthi said...
    வணக்கம் அய்யா தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி !//////

    நல்லது. வாத்தியார் அதையும் செய்ய வேண்டுமல்லவா! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சாத்தூர்காரரே!

    ReplyDelete
  13. This test and the answers show that astrology is not an exact science and that more than intellectual analysis, it is intuition that will help in really understanding a horoscope.
    All rules have exceptions and sometimes exceptions become rules.

    ReplyDelete
  14. நான்காவது கேள்விக்கு வாத்தியார் பரிவர்த்தனைக்கான பலனை கேட்டிருக்கிறார். நான்தான் தவறாகப் புரிந்துக் கொண்டு விட்டேன். பதில் சொல்லிப் பார்ப்போம். எப்படி வருகிறது என்பதற்காக பதில் சொன்னேன். மற்றபடி வெறும் ராசிச் சக்கரத்தை மட்டும் வைத்துக் கொண்டு துள்ளியமாக பலன் சொல்ல முடியாது என்பது என் கருத்து.

    ஏன் சொல்கிறேன் என்றால் என்னிடம் இரட்டையருடைய ஜாதகம் இருக்கிறது. இருவருக்கும் ராசிச் சக்கரத்தில் திருக்கணித முறையிலும் சரி, வாக்கிய முறையிலும் சரி ஒரே மாதிரியான கிரக நிலைகள்தான். முதலில் இரட்டையரில் இளயவருக்கு திருமணம் நடந்தது. இன்றுவரை குழந்தை பாக்கியம் இல்லை. அதற்கு 5 வருடம் கழித்து மூத்தவருக்கு திருமணம் நடந்தது. ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம் கிட்டியது. மூத்தவர் பொறியியலாளர். இளையவர் computer aided designing செய்கிறார். இப்படி இருவருக்கும் பல வேறுபாடுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் இந்த வித்தியாசம் என்று மற்ற வர்கச் சக்கரங்களை ஆராய்ந்துப் பார்த்ததில் பதில் கிடைத்தது. என் தொழில் ஜோதிடம் பார்ப்பது அல்லவே. அதனால் முழுதுமாக ஆராயவில்லை.

    ReplyDelete
  15. ரெட் ஃஃபோர்ட், உங்கள் கேள்விக்கு எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவிற்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நீங்கள் மகர இலக்னம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் சனி 2க்கு உரியவனாகவும் ஆகிறார் (கும்ப இலக்னத்திற்கு அவர் விரையாதிபதியும் ஆகிறார்). அதே போல் ஆறாம் அதிபதி புதன் அவரது சிறந்த நண்பர். அவரே பாக்கியாதிபதியும் ஆகிறார். அதனால் இதை தைன்ய பரிவர்த்தனை என்று கூற இயலாது.

    அது போல் பத்தாமதிபதி அந்த வீட்டிற்கு ஆறில் என்றால் சுக்கிரன் மீனத்தில் உச்சத்தில் இருக்கிறார். அதோடு அவரே மகர இலக்னத்திற்கு யோககாரகரும் ஆகிறார். 1975 மார்ச் என்றால் குரு பகவானும் மீனத்தில் இருந்திருப்பார். குரு சேர்க்கை பத்தாம் அதிபதிக்கு உதவி இருக்கும். கர்ம காரகன் சனி மிதுனத்தில் பத்தாம் வீட்டிற்கு திரிகோணத்தில், பத்தாம் அதிபதிக்கு கேந்திரத்தில். இவை எல்லாம்தான் உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி இருக்கும் என்று நினைக்கிறேன். அதோடு ஆனந்த் அவர்கள் கூறியது போல இராசி சக்கரத்தை மட்டும் வைத்து முழுவதுமாக ஒரு ஜாதகத்தை, நிச்சயமாக ஜோதிடத்தை படிக்க ஆரம்பித்திருக்கும் என் போன்றோரால், அலசி விட முடியாது என்பது உண்மை. வாத்தியார் அய்யா போன்ற ஜோதிடத்தை நன்கு அறிந்தவர்களும் இன்டியூஷன் சக்தி உள்ள‌வர்களாலும் வேண்டுமானால் முடியும்.

    வாத்தியார் அய்யாவும் மற்றவர்களும் பிழை இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. தோழர் அவர்களின் கணிப்பு சரியானதாகவே தெரிகிறது. சனிக்கும் புதனுக்கும் 1 6 பரிவர்த்தனையானாலும் அவர்களுக்கு இருக்கிற
      2 9 ஆதிபத்தியங்களினால் கலவையான பலன்கள் என எடுத்துக்கொள்ளலாம்.
      புதன் தனக்குரிய 9 ம் ஆதிபத்தியத்தினால் வீடு கட்டும் யோகத்தை பரிவர்த்தனையான சனி திசையில் கொடுத்தானென்றால் அதே புதன் தன்னுடைய இன்னொரு ஆதிபத்தியமான 6ம் ஆதிபத்தியத்தின் காரணமாக வங்கியில் கடன் பெற்று அந்த வீட்டை கட்ட வைத்தான் எனக் கொள்ளலாம்.
      நன்றி தோழரே.,

      Delete
  16. /////rajasundararajan said..
    ஹா! ஹா! ஹா! 'ஒன்றாம் வீட்டானும் ஆறாம் வீட்டானும் பரிவர்த்தனை பெறுவது தோஷம்' என்றெனக்குத் தெரியாது. ஒன்றாம் வீட்டதிபதியான சனி வலுவாக இருப்பதாக எடுத்துகொண்டேன். மிக்க நன்றி, அய்யா!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger redfort said...
    ஐயா,
    தைன்ய பரிவர்த்தனை என்பதை நானும் குறிப்பிட்டுள்ளேன்.நான் குறிப்பிட்டதில் அது மட்டும் தான் சரி மீதி 3பதில்களும் தவறு.
    ஐயா நீங்கள் முதலில் 6ல் சனி வலுவாக உள்ளார் எனவும் இறுதியில் சனி பலமிலந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள் விளக்கம் தேவை.
    ஐயா என்னுடைய ஜாதத்திலும் சனி ஆறாம் வீட்டுக்காரனுடன் பரிவர்த்தனை (மகர லக்னம்) ஆனால் சனி திசை தான் எனக்கு திருமணம்
    குழந்தைகள் வீடு வேலை தொழில் கார் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுத்தான்(நானே எதிர்பார்க்கவில்லை)
    இந்த ஜாதகத்தில் உள்ளது போல எனது ஜாதகத்திலும் பத்தாமதிபதி அந்த வீட்டிற்க்கு 6இல் மறைவு சனியும் லக்னத்திற்க்கு ஆறில் மறைவு. ஆனால் நான் வேலைக்கு சென்று தான்
    பொருளீட்டுகிறேன். சற்று விளக்கினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.
    My DOB- 2 March 1975- 5.30 am -Bhavani//////

    1
    பரிவர்த்தனை யோகத்தால் பெற்ற வலைமை, அது தைன்ய பரிவர்த்தனை என்னும் தன்மையால் பயனில்லாமல் போய்விட்டது. இரண்டையும் பாருங்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்னும் நிலைமை!
    2
    சுபக்கிரகங்களின் placement and aspectஐ வைத்துத்தான் பலனைச் சொல்ல முடியும். சொல்ல வேண்டும். உங்கள் ஜாதகத்தில் லாபாதிபதி செவ்வாய் உச்சம் பெற்றதுடன் லக்கினத்தில் வந்து அமர்ந்துள்ளான். அத்துடன் பரிவர்த்தனையான புதனுடன் கூட்டணி. குரு ஆட்சி பலத்துடன். 10ல் எழாம் வீட்டுக்காரன் சந்திரன் அமர்ந்துள்ளான். எடுத்துச் செய்யும் வேலைகளில் அவன் மேன்மையைக் கொடுப்பான். அத்துடன் கோள்சாரப்படி தற்சமயம் பொங்குசனி. இவைதான் காரணம். 10ஆம் அதிபதி சுக்கிரன் நீசம். ஆகவே வேலைக்குச் செல்வதுதான் நல்லது.
    --------------------------------------------------------

    ReplyDelete
    Replies
    1. தைன்ய பரிவத்தனை யால் வீட்டுக்கடன் பெற்று வீட்டைக்கட்டியுள்ளேன் கடனை அடைக்கும் வரை வேதனைதானே ஐயா. கோள்களின் பலன் களை அனுபவித்துத்தானே ஆகவேண்டும் ஐயா.
      மிக்க நன்றிகள் ஐயா.

      Delete
  18. /////Blogger Kaven said...
    This test and the answers show that astrology is not an exact science and that more than intellectual analysis, it is intuition that will help in
    really understanding a horoscope.
    All rules have exceptions and sometimes exceptions become rules./////

    ஆமாம். நல்லது. புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  19. /////Blogger Ak Ananth said...
    நான்காவது கேள்விக்கு வாத்தியார் பரிவர்த்தனைக்கான பலனை கேட்டிருக்கிறார். நான்தான் தவறாகப் புரிந்துக் கொண்டு விட்டேன். பதில் சொல்லிப் பார்ப்போம். எப்படி வருகிறது என்பதற்காக பதில் சொன்னேன். மற்றபடி வெறும் ராசிச் சக்கரத்தை மட்டும் வைத்துக் கொண்டு துள்ளியமாக பலன் சொல்ல முடியாது என்பது என் கருத்து.
    ஏன் சொல்கிறேன் என்றால் என்னிடம் இரட்டையருடைய ஜாதகம் இருக்கிறது. இருவருக்கும் ராசிச் சக்கரத்தில் திருக்கணித முறையிலும் சரி, வாக்கிய முறையிலும் சரி ஒரே மாதிரியான கிரக நிலைகள்தான். முதலில் இரட்டையரில் இளயவருக்கு திருமணம் நடந்தது. இன்றுவரை குழந்தை பாக்கியம் இல்லை. அதற்கு 5 வருடம் கழித்து மூத்தவருக்கு திருமணம் நடந்தது. ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம் கிட்டியது. மூத்தவர் பொறியியலாளர். இளையவர் computer aided designing செய்கிறார். இப்படி இருவருக்கும் பல வேறுபாடுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் இந்த வித்தியாசம் என்று மற்ற வர்கச் சக்கரங்களை ஆராய்ந்துப் பார்த்ததில் பதில் கிடைத்தது. என் தொழில் ஜோதிடம் பார்ப்பது அல்லவே. அதனால் முழுதுமாக ஆராயவில்லை.//////

    என்னிடமும் இரட்டையர்களின் ஜாதகம் சில உள்ளன. விரிவாக ஆராய்வதற்கு நீங்கள் சொல்வது வேண்டும். உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  20. ////////Blogger thozhar pandian said...
    ரெட் ஃஃபோர்ட், உங்கள் கேள்விக்கு எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவிற்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நீங்கள் மகர இலக்னம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் சனி 2க்கு உரியவனாகவும் ஆகிறார் (கும்ப இலக்னத்திற்கு அவர் விரையாதிபதியும் ஆகிறார்). அதே போல் ஆறாம் அதிபதி புதன் அவரது சிறந்த நண்பர். அவரே பாக்கியாதிபதியும் ஆகிறார். அதனால் இதை தைன்ய பரிவர்த்தனை என்று கூற இயலாது.
    அது போல் பத்தாமதிபதி அந்த வீட்டிற்கு ஆறில் என்றால் சுக்கிரன் மீனத்தில் உச்சத்தில் இருக்கிறார். அதோடு அவரே மகர இலக்னத்திற்கு
    யோககாரகரும் ஆகிறார். 1975 மார்ச் என்றால் குரு பகவானும் மீனத்தில் இருந்திருப்பார். குரு சேர்க்கை பத்தாம் அதிபதிக்கு உதவி இருக்கும். கர்ம காரகன் சனி மிதுனத்தில் பத்தாம் வீட்டிற்கு திரிகோணத்தில், பத்தாம் அதிபதிக்கு கேந்திரத்தில். இவை எல்லாம்தான் உங்களுக்கு ஒரு நல்லவேலை கிடைக்க உதவி இருக்கும் என்று நினைக்கிறேன். அதோடு ஆனந்த் அவர்கள் கூறியது போல இராசி சக்கரத்தை மட்டும் வைத்து முழுவதுமாக ஒரு ஜாதகத்தை, நிச்சயமாக ஜோதிடத்தை படிக்க ஆரம்பித்திருக்கும் என் போன்றோரால், அலசி விட முடியாது என்பது உண்மை.
    வாத்தியார் அய்யா போன்ற ஜோதிடத்தை நன்கு அறிந்தவர்களும் இன்டியூஷன் சக்தி உள்ள‌வர்களாலும் வேண்டுமானால் முடியும்.
    வாத்தியார் அய்யாவும் மற்றவர்களும் பிழை இருப்பின் மன்னிக்கவும்.///////

    முழு ஜாதகமும் இருந்தால்தான் நன்றாக அலச முடியும். வாத்தியாரும் அதற்கு விதிவிலக்கல்ல! நன்றி பாண்டியரே!

    ReplyDelete
  21. //////Blogger வேப்பிலை said...
    ஆஹா./////

    எதற்கு இந்த ஆஹா? சொன்னால் நாங்களும் ஆஹாசப் படுவோமில்லையா?

    ReplyDelete
  22. /////Blogger redfort said...
    பதில் தருவீர்களாக.../////

    தராமல் இருப்பேனா? தந்துள்ளேன். பாருங்கள்!

    ReplyDelete
  23. ////Blogger சே. குமார் said...
    நல்ல அலசல் ஐயா.////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  24. "10ஆம் அதிபதி சுக்கிரன் நீசம்."

    அய்யா, 10ம் அதிபதி அந்த வீட்டிற்கு ஆறில் என்றால், சுக்கிரன் மீனத்தில் அல்லவா இருக்க வேண்டும்? மீனம் சுக்கிரனுக்கு உச்ச வீடு தானே?

    ReplyDelete
  25. /////Blogger thozhar pandian said...
    "10ஆம் அதிபதி சுக்கிரன் நீசம்."
    அய்யா, 10ம் அதிபதி அந்த வீட்டிற்கு ஆறில் என்றால், சுக்கிரன் மீனத்தில் அல்லவா இருக்க வேண்டும்? மீனம் சுக்கிரனுக்கு உச்ச வீடு தானே?////

    10ஆம் அதிபதி ஆறில் இருப்பதை மட்டும் எழுதியிருக்க வேண்டும். சுக்கிரன் உச்சம்தான். கவனச் சிதறலில் ஏற்பட்ட தவறு. சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete
  26. 'அஷ்டவர்கம் அஷ்டவர்கம்' என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு
    இருந்தேன்.இந்த ஜாத‌கியின் உண்மை வாழ்க்கை அஷ்டவர்கத்தையும் கவிழ்த்து விட்டது.

    4 ம் அதிபதி சுக்ரனுக்கு சுய வர்க பரல் 5. நான்காம் இடத்திற்கு 30 பரல் அப்புறம் ஏன் படிப்பு குறைந்தது? (இங்கே அஷ்டவர்கத்தை விட மாந்தி நாலாம் அதிபனை அடித்துப் போட்டதும் ராகு துணை நின்ற‌தும் வேலை செய்கிறது போலும். அஷ்ட வர்கம் ஊற்றிக் கொண்டது.)

    சரி. ஏழாம் அதிபன் சூரியனுக்கு சுய வர்க பரல் 5. ஏழாம் இடத்திற்கு 26 பரல்.
    19 பரல் உள்ளவர்கள் எல்லாம் கல்யாண வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கும் போது 26 பரல் பெற்றவருக்கு ஏன் திருமணமே ஆக‌வில்லை? அஷ்டவர்கம்
    அவ்வளவுதானா?

    அதுவும் போகட்டும், பததாம் இடத்திற்கு பரல் 30. பத்தாம் அதிபதி செவ்வாய்க்கு சுய வர்க பரல் 6. ஏன் வேலையில்லை? அஷ்டவர்கமும்
    காலை வாருகிறதே!அஷ்டவர்கமுமா கஷ்டவர்கமா?

    ஜோதிடத்தில் 'தம்ப் ரூல்' ஒன்றும் இல்லை.

    குரு பார்வை லக்னத்திற்கு, 6ம் அதிபதிக்கு, 10ம் அதிபதிக்கு, 5ம் அதிபதிக்கு குரு நின்ற இடமோ பக்கிய ஸ்தானமான ஒன்பது குருவிற்கோ சுயவர்க பரல் 6.9ம் இடத்திற்கு 27 பரல் அப்புறம் ஏன் குருவின் பார்வைக்கு மதிப்பு இல்லை?

    ஏதோ பகவானாகப் பார்த்து பலன்க‌ளைப் பலிக்க வைக்க வேண்டுமே அல்லாது கணக்கெல்லாம் பிணக்குதான்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உணர்வை புரிந்து கொள்ளமுடிகிறது.
      உண்மை தான் ஐயா.

      Delete
  27. /// kmr.krishnan said...ஏதோ பகவானாகப் பார்த்து பலன்க‌ளைப் பலிக்க வைக்க வேண்டுமே அல்லாது கணக்கெல்லாம் பிணக்குதான்.////

    அப்படி வாங்க வழிக்கு..

    ReplyDelete
  28. திரு.கே.எம்.கே.ஆர், அஷ்டகவர்க்கம் பொதுவாக வாழ்க்கை விதிகளை தீர்மானிப்பதற்கு உதவுவதை விட, கோள்சாரத்தில் ஒரு கிரகம் இருக்கும் இடத்தை பொறுத்து அந்த பெயர்ச்சியால் நன்மைகள்/தீமைகள் அதிகரிக்குமா என்பதை அறிந்து கொள்ளவே பெரிதும் உதவும் என்று படித்திருக்கிறேன். உதாரணமாக, சந்திர இராசியில் இருந்து 12, 1, 2 இடங்களில் சனி உலவும் காலங்களில் அந்த வீடுகளில் அதிக பரல்கள் இருந்தால் ஏழரை சனியால் உபத்திரவம் அதிகம் இருக்காது என்றும், அதே போல் சந்திர இராசியில் இருந்து 6ம் இடத்தில் சனி உலவும் காலங்களில் அந்த வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தால் நன்மைகள் அதிகரிக்கும் என்றும் படித்திருக்கிறேன். ஆனால் பொதுவாக ஒரு வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் அந்த வீட்டின் காரகத்துவம் அதிகரிக்குமா என்று வாத்தியார் அய்யா தான் கூற வேண்டும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com