மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.8.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 35

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 35

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 35

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
உத்திரட்டாதி நட்சத்திரம். இது மீன ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். அத்துடன் இந்த நட்சத்திரம் சனீஷ்வரனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. திருவாதிரை
2. புனர்பூசம்
3. ஆயில்யம்
4. மகம்
5. உத்திரம்
6. ஹஸ்தம்
7. சுவாதி
8. கேட்டை
9. மூலம்
10. உத்திராடம்
11. திருவோணம்
12. சதயம்
13. ரேவதி

ஆகிய 13 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் மீனத்திற்கு சிம்மம் 6/8 நிலைப்பாட்டில் வரும். மக  நட்சத்திரம் பொருந்தாது. மீன ராசிக்கு  கும்பம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே கும்ப  ராசிக்கு உரிய நட்சத்திரமான சதயம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் உத்திரட்டாதி நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தும். அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தும்!

கார்த்திகை, விசாகம் ஆகிய 2 நட்சத்திரங்களும் பொருந்தாது. (அதமக் கணக்கில் வரும்)

அஸ்விணி, ரோகிணி, மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

4 comments:

  1. காலை வணக்கம் ஐயா!பாடத்திற்கு நன்றி!

    ReplyDelete
  2. வணக்கம் அய்யா !

    வகுப்பறை படங்கள் மாற்றிவிடேர்கள்
    உங்கள் கண்மணிகள் வளர்ந்து விட்டதை போல இருக்கிறது ?

    ReplyDelete
  3. Vanakkam Ayya,
    Thank you for your email reply. Waiting for next post of this topic :)
    Mathy Ravi

    ReplyDelete
  4. பெரும்பாலும் ஏழு பொருத்தம் உள்ளது ,எட்டுபொருத்தம் உள்ளது என்று தசவிதப்பொருத்தத்தை மட்டும் பார்த்துவிட்டுக் கல்யாணம் செய்கிறார்கள்.
    தசாசந்திப்பு, தோஷ சாம்யம் ஆகியவற்றைப் பார்க்காமல் செய்கிறார்கள்.

    பத்து பொருத்தம் என்று பெயரே தவிர அது 11 பொருத்தமல்லவா?

    தசாசந்திப்பு என்றால் என்ன? ஒரே தசை ஏக காலத்தில் நடப்பதா? அல்லது இரு மகாதசைகள் வெவ்வேறாக இருப்பினும் ஒரே வருடத்தில் இருவருக்கும் மாறக் கூடாது என்பதா? எது சரி?

    வகுப்பறை புதுப் படத்தில் பச்சை கழத்துப் பட்டையுட்ன் இருகைகளாலும் தலையைப் பிடித்துக் கோண்டு கவிழ்ந்து இருப்பதுதான் வேப்பிலை சுவாமிகள். சரியா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com