மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.3.11

Short Story: தந்தி மீனி ஆச்சி

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Short Story: தந்தி மீனி ஆச்சி

தந்தி மீனி ஆச்சி வழக்கத்திற்கு மாறாக கலக்கத்துடன் காணப்பட்டார். என் தந்தையிடம் வந்ததும் வராததுமாகக் கடுகடுப்போடு சொல்லிக் கொண்டிருந்தார்.

“இராமசாமி அண்ணே, கேட்டீயளா இந்த அநியாயத்தை! இன்னிக்குச் சாயந்திரம் நடக்கப்போகும் மகாசபைக் கூட்டத்தில் அந்தக் கோடி வீட்டு ராமஞ்செட்டி தீர்மானம் கொண்டு வரப்போகிறாராம்.”

“என்ன தீர்மானம்? “ என் தந்தையார் நிதானமாகக் கேட்டார்.

“என்னை இந்த ஊரைவிட்டு இரண்டு வருஷமாவது தள்ளி வைக்க வேண்டுமாம்!”

“கவலைப்படாதே மீனா! நான் பார்த்துக் கொள்கிறேன். நீ யாரிடமும் ஒன்றும் பேசாதே. போய்ப் பேசாமல் வீட்டில் இரு.” என்று கண்டிப்புடனும், நம்பிக்கையுடனும் சொன்னவர், மீனி ஆச்சியை எங்கள் வளவில் உள்ள மற்றவர்கள் விசாரிக்கும் முன்பு அனுப்பி வைத்தார்.

அடுத்த வீடுதான் மீனி ஆச்சியின் வீடு. அவரும் உடனே போய் விட்டார்.

எங்கள் ஊரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாசபைக் கூட்டம் இன்று மாலை நகரச் சிவன் கோவிலில் நடக்க உள்ளது.

ராமஞ்செட்டியாரும் பேசப்போகின்றார், என் தந்தையாரும் பேசப் போகின்றார் என்றால் அது சுவாரசியமாக இருக்கும், நாமும் போக வேண்டும் என்று முடிவு செய்தேன்.

தந்தி மீனி ஆச்சி எங்கள் ஊரில் மிகவும் புகழ் பெற்றவர். அவரை ரேடியோ மீனி ஆச்சி என்பார்கள்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வரும் மனோரமாவை நினைத்துக் கொள்ளுங்கள் - மீனி ஆச்சியும் அசப்பில் அப்படியேதான் இருப்பார். அதே மாதிரிதான் பேசுவார். செட்டிநாட்டுத்தொனி சிறப்பாக இருக்கும்.

1960ம் ஆண்டு பாகப்பிரிவினை படம் வந்து சக்கைபோடு போட்டுக் கொண்டி ருந்த காலம்.

நான் அழகப்பாவில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது மீனி ஆச்சிக்கு வயது 45. ஆனாலும் முப்பது வயசுக்குள்ள கேலியும் கிண்டலும் அவரது பேச்சில் மிகுந்திருக்கும்.

“மீனி ஆச்சி ஏதாவது செய்தி உண்டா?” என்று வம்புக்கு இழுத்தால், உடனே பட்டென்று சொல்வார்.

“படிச்சுப் பாஸாகிற வேலையைப் பார் அப்பச்சி! நாட்டுச் செய்தியை எல்லாம் கேட்கிற வயசா உன் வயசு?”

ஒரு செய்தி மீனி ஆச்சிக்குத் தெரிந்தால் போதும் அன்று மாலைக்குள் ஊர் முழுக்கத் தெரிந்துவிடும். அதுவும் ‘யாரிடமும் சொல்லாதீர்கள்’ என்று சொல்லிவிட்டால் போதும். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அது ஊர் முழுக்கத் தெரிந்துவிடும்.

எங்கள் ஊரில் மொத்தம் எண்ணூறு புள்ளிகள். அத்தனை பேர்களைப் பற்றிய விபரங்களும் மீனி ஆச்சிக்கு அத்துபடி. அதுமட்டுமல்ல எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மற்ற நகரத்தார் ஊர்களிலும் மீனி ஆச்சியைத் தேரியாதவர்களே இருக்கமாட்டார்கள்.

மீனி ஆச்சி செய்தி சேகரிக்கும் விதமே அலாதியானது. பெரும்பாலும் நகரச்சிவன்கோவில், ஊருணிக்கரை, திருமண, சாந்திக்கார வீடுகள் போன்ற இடங்கள்தான் அவருடைய செய்திக்களங்கள். மாமியாரைப் போகவிட்டு மருமகளை மடக்குவார். அப்பச்சியைப் போகவிட்டு மகனை மடக்குவார். அண்ணனைப் போகவிட்டுத் தம்பியை மடக்கிப் பேசுவார். எப்படியோ அவருக்கு செய்திகள் கிடைத்துவிடும். சில இடங்களில் நேர்காணலும் செய்துவிடுவார்.

அவருக்குக் கல்யாணமாகி இரண்டாவது ஆண்டு அவருடைய கணவர் வெளியூர் போனவர் போனவர்தான். இன்றுவரை திரும்பவில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு பையன். அதைவிற்று, இதைவிற்று எப்படியோ அவனைப் பள்ளி இறுதி வகுப்புவரை படிக்க வைத்துவிட்டார். அவனுக்குச் சென்னையில் ஒரு பதிப்பகத்தில் வேலை. திருமணமாகிவிட்டது. கைக்கும் வாய்க்குமான சம்பளம். வாழ்க்கைப் போராட்டம். அவன் ஊருக்கே வருவதில்லை.

காலையில் எழுந்து குளித்துவிட்டுச் சிவன் கொவிலில் போய் ஒரு மணி நேரம் பொழுதைப் போக்கிவிட்டு, அங்கேயே அருகில் இருக்கும் கூடைக்காரப் பெண்களிடம் இரண்டு கட்டுக் கீரையை வாங்கிக் கொண்டு நகர்வலம் கிளம்பி விடுவார்.

முதல் கீரைக்கட்டை ஒரு வீட்டில் கொடுப்பார். அங்கே சாப்பிடச்சொல்வார்கள் - காலைப்பலகாரம் முடிந்துவிடும். அடுத்த கீரைக்கட்டிற்கு மதியம் ஒரு வீட்டைப் பிடித்து விடுவார். இரவிற்குச் சிவன் கொவில் கட்டளைக்காரர்கள் புளியோதரை, சர்க்கரைச்சாதம் என்று கொடுத்து விடுவார்கள். சமையல் வேலையெல்லாம் அவருக்கு இல்லை.

தேன் குழல், மாவுருண்டை, சீப்புச்சீடை என்று வீடுகளில் பலகாரம் செய்யும் ஆச்சிமார்கள் மீனிஆ ச்சியை உதவிக்குக் கூட்டிக் கொள்வார்கள். காரைக்குடிக்குச் சாமான்கள் வாங்கப்போகும் ஆச்சிமார்களும் இவரைத்தான் கூட்டிக் கொள்வார்கள். பத்து இருபது கொடுப்பார்கள். அதுதான் அவருடைய வருமானம்.

அவரால் பிரிந்த குடும்பங்களும் உண்டு.. ஒன்று சேர்ந்த குடும்பங்களும் உண்டு. திருமணமாகிப்போன பெண்களும் உண்டு. மருமகள்களாக வந்த பெண்களும் உண்டு.

ஒரே ஒரு அசத்தலான விஷயம்-இவ்வளவு கஷ்டத்திலும் அவர் மிகவும் நேர்மையானவர். நாணயமானவர். காசு விஷயத்தில் ஒரு பத்து பைசாக்கூட அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படமாட்டார்.

                                                     ****************************
நகரச்சிவன் கொவிலில் அலங்கார மண்டபம். மாலை மணி ஆறு. கூட்டம் தொடங்கியது. மொத்தம் முன்னூறு பேர் வந்திருந்தார்கள்.

காரியக்காரர் வரவேற்புரையாற்றி, நிதிக்கணக்கைச் சமர்ப்பித்தார். பிறகு ஆற்ற வேண்டிய பணிகளைப்பற்றி விவாதித்தார்கள்..முடிவு எடுத்தார்கள். தீர்மானங்களை எழுதிக்கொண்டார்கள்.

கடைசியாகக் காரியக்காரர் ’வேறு ஏதாவது உள்ளதா? ‘ என்று கேட்டதுதான் தாமதம், ராமஞ்செட்டியார் எழுந்து நின்று தீர்க்கமாகச் சொன்னார்.

“தந்தி மீனி ஆச்சியின் தொல்லை பெரிய தொல்லையாக உள்ளது. மகாசபை அதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டும்!”

‘ஆமாம், ஆமாம்’ என்று நான்கைந்து குரல்கள் ஒன்று சேர்ந்து ஒலித்தன.

காரியக்காரர் கேட்டார், “நாம் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?”

ராமஞ்செட்டியார் சொன்னார்., “ஒரு மூன்று ஆண்டுகளாவது ஆச்சியை ஊரைவிட்டுத் தள்ளி வைக்க வேண்டும்!

“எல்லோரும் ஒரு மனதாக ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார் காரியக்காரர்.

உடனே என் தந்தையார் எழுந்து சொன்னார்.

“தள்ளிவைப்பது என்பது மிகவும் கடுமையான செயல். ஒழுக்கமில்லாமல் நெறிகெட்டுப் போயிருந்தால் மட்டுமே அப்படிச் செய்யலாம். ஆ ச்சி மேல் உள்ள குற்றம் என்ன யோசித்துப் பாருங்கள். அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர் பேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா? அடுத்த வீட்டு விஷயங்களைக் கேட்பதில்லை, அவற்றில் நமக்கு ஆர்வமில்லை என்ற நிலை இருந்தால் அவர் எப்படிப் பேசுவார்? ஆகவே நாம் அவரிடம் சேதிகள் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும். இரண்டாவதாக அவர் பேச்சுக்களால் பாதிக்கப்படுவதை மட்டுமே சொல்கிறீர்கள். இருக்கலாம். ஆனால் அவரால் எவ்வளவு நன்மைகளை நாம் அடைந்திருக்கிறோம். எவ்வளவு திருமணங்கள் அவரால், அவர் கூறிய மேன்மையான பரிந்துரைகளால் முடிந்திருக்கிறது. அதை எல்லோரும் நினைத்து பாருங்கள்!

இப்போது ராமஞ்செட்டியார் குறுக்கிட்டார், “அவரால் நன்மையும் வேண்டாம். தீமையும் வேண்டாம். அவர் பேசாமல் இருக்க வேண்டும். அதற்கு ஏதாவது வழியிருக்கிறதா? சொல்லும்!”

என் தந்தையார் அதிரடியாகச் சொன்னார் “இருக்கிறது!”

சபையில் இருந்த அத்தனை தலைகளும் என் தந்தையாரை நோக்கித் திரும்பிப் பார்த்தன. பத்துப்பதினைந்து குரல்கள் ஒருமித்துக் கேட்டன, “ என்னவென்று சொல்லுங்கள்? “

என் தந்தையார் தொடர்ந்தார்.

“மீனா தன் வறுமை காரணமாகவே வீடுவீடாகச் செல்கின்றார். வலியப்போய் பேசுகின்றார். நம் ஊரில் எவ்வளவோ தொழில் அதிபர்கள், மேதைகள் இருக்கிறீர்கள். யாராவது ஒருவர் அவருக்கு ஏதாவது ஒரு வேலை போட்டுக்கொடுங்கள்.பிரச்னை தீர்ந்துவிடும்!”

“இப்போது நான்கைந்து பேர் எழுந்து நின்று, “ஆமாம் அதுதான் சரியான முடிவு என்றார்கள்”

என்ன ஆச்சர்யம் பாருங்கள். கூட்டத்திற்கு வந்திருந்த எங்கள் ஊரைச் சேர்ந்த நூற்பாலை அதிபர் ஒருவர் தான் அதைச்செய்வதாக ஒப்புக்கொள்ள பலத்த கைதட்டல்களுக்கிடையே கூட்டம் இனிதே முடிவுற்றது.

அந்த தொழில் அதிபர் தன் நூற்பாலையில் மீனி ஆச்சிக்கு மட்டும் இல்லை, அவருடைய மகனுக்கும் சேர்த்து வேலை போட்டுக்கொடுத்து விட்டார். அவர்கள் தங்குவதற்கு ஆலையின் குடியிருப்பில் இடமும் கொடுத்து விட்டார்.

அடுத்தநாள் காலை மீனி ஆச்சி ஊரைவிட்டுப் புறப்படும் முன்பு எங்கள் வீட்டிற்கு வந்து என் தந்தையாரின் காலில் விழுந்து வணங்கி எழுந்து - கண்ணில் நீர் பெருக்கெடுக்க - ஒன்றும் பேசாமல் - கைகூப்பி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றார் பாருங்கள் - நான் அசந்து விட்டேன்.

மௌனமும் ஒரு மொழி என்பதை அப்பொதுதான் தெரிந்து கொண்டேன்.

 - 16 மார்ச் 2005’ தேதியிட்ட மாத இதழ் ஒன்றில் அடியவன் எழுதி வெளிவந்த சிறுகதை இது.

வாழ்க வளமுடன்!

35 comments:

 1. என்ன கோடை விடுமுறை தொடங்கியாச்சா...
  வகுப்பில்
  நிறைய நீதி கதை வருகிறதே..

  கொஞ்சம் மனவியல் சம்பந்தப்பட்ட செய்தியும் ..
  வாத்தியாரின் பயணக் கட்டுரையும் வந்தால் ருசிக்கும் என எதிர்பாக்கிறோம்.

  கதை புத்தகம் வெளியிட்ட வாத்தியார்
  ஒரு
  பயணக் கட்டுரையை வெளியிட வேண்டும்..

  இதற்காக ஒரு வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ள வேண்டும்..

  அந்த பயணம் இலங்கையாக இருக்கலாமோ?


  வந்தாரை வாழ வைக்கும்
  வல்லக் கோட்டை முருகன்
  வழித்துணைக்கு வருவான்

  ReplyDelete
 2. நல்லது நன்றி ஆசிரியரே!....முன்பே வகுப்பறையில் படித்து இருந்தாலும் இதை மீண்டும் படிக்கும் போது.... இதை "எத்தனை முறைப் படித்தாலும் சலிப்பதில்லை" என்று சொல்லத் தான் வேண்டும்... அதோடு புதிதாக வருபவர்களுக்கு படித்து இன்புற இது ஒரு வாய்ப்பும் ஆகும். சமூகத்தில் / சமுதாயத்தில் உள்ள வசதி படைத்தவர்கள் இது போன்று சிரமப் படும் நல்லவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்றக் கருத்து அருமை.. மீண்டும் நன்றி.

  ReplyDelete
 3. கனிவான வாத்தியாரே,

  உண்மையிலேயே "மௌனம்" தூய்மையான மொழி தான் !

  தங்களது கதை மிகவும் இதமானவை!!

  தங்களது ஜோதிட புத்தகம் எந்த நிலையில் உள்ளது?
  ப்ரின்டிங்க் , பைண்டிங்க் முடந்ததா?
  ஆவலுடன்,
  இராசா

  ReplyDelete
 4. நல்ல சுவாரசியமான கதை.

  ReplyDelete
 5. நன்றாக இருந்தது.

  ReplyDelete
 6. Sir,I think I have read this here before.Are we going for second round here????


  Thanks
  Rathinavel.C

  ReplyDelete
 7. ஆசிரியருக்கு வணக்கம்.
  அய்யா,
  இந்த சிறுகதை ஏற்கெனவே இதே வகுப்பறையில் படித்திருந்தாலும், மறு முறை படிக்கும் போதும் சுவாரசியம் குறையாமல் இருப்பது ஆசிரியரின்
  எளிமையான எழுத்து நடையே காரணம். நன்றி அய்யா.
  அன்புடன், அரசு.

  ReplyDelete
 8. நன்றிங்க ஐயா..!

  ReplyDelete
 9. சார்,

  ஏற்கனவே படித்து இருந்தாலும் , நெகிழ்ச்சி புதியதாக இருந்தது.

  நன்றி
  குமார்

  ReplyDelete
 10. அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர் பேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா? அடுத்த வீட்டு விஷயங்களைக் கேட்பதில்லை, அவற்றில் நமக்கு ஆர்வமில்லை என்ற நிலை இருந்தால் அவர் எப்படிப் பேசுவார்? ஆகவே நாம் அவரிடம் சேதிகள் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

  Its true...A good story...Thank you sir

  ReplyDelete
 11. ஐயா வணக்கம்.

  நல்ல தொரு கதை மூலம் எத்தனையோ முடிட்சுகளுக்கு விடைகளை தருகின்றீர்கள் நன்றி.

  தஞ்சாவூரில் உள்ள சாஸ்திர பல்கலை கழகத்தில் உள்ள மாணவர்கள் எவரேனும் வகுப்பறையில் இருப்பின் தங்களை அறிமுக படுத்தி கொள்ள வேண்டுகின்றேன்

  ReplyDelete
 12. ஐயா !

  ஒரு ஜோதிட ஆராட்சி மாணவரின் ஆராட்சிக்காக தங்களுடைய உதவி தேவைபடுகின்றது

  ReplyDelete
 13. ஐயா வணக்கம்.

  நல்ல தொரு கதை மூலம் எத்தனையோ முடிட்சுகளுக்கு விடைகளை தருகின்றீர்கள் நன்றி.--

  தஞ்சாவூரில் உள்ள சாஸ்திர பல்கலை கழகத்தில் உள்ள மாணவர்கள் எவரேனும் வகுப்பறையில் இருப்பின் தங்களை அறிமுக paduththi கொள்ள வேண்டுகின்றேன்


  ஒரு ஜோதிட ஆராட்சி மாணவரின் ஆராட்சிக்காக தங்களுடைய உதவி தேவைபடுகின்றது

  ReplyDelete
 14. வாத்தி!


  எல்லாம் சரி!

  நீங்க எந்த இராசா :-)


  *******

  ஆவலுடன்,
  இராசா

  Monday, March 07, 2011 10:26:00 AM

  ReplyDelete
 15. அருமையான கதை....
  கதையின் நுட்பமான உள்கருத்து அருமை ஐயா,.....

  ReplyDelete
 16. அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர் பேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா?

  மனித சமுதயாத்திற்கு தங்கள் தந்தையார் தந்த அற்புதமான சாட்டையடி
  இது போன்ற கதைகள் இரண்டாம் முறையல்ல பலமுறையும் பிரசுரமாகலாம் ...

  அப்போதாவது அடுத்தவீட்டு கதைகளை கேட்கும் காதுகள்
  அடங்குகிறதா என பார்க்கலாம் ...

  இந்த கதையை படிக்கும்போது நேரடியான சம்பந்தம் இல்லையென்றாலும் தொடர்புடைய ஒரு திருக்குறள் நினைவுக்கு வருகிறது..

  தினற் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் விலைபொருட்டால் ஊன் தருவார் இல் ..

  நாம் தின்கிறோம் என்பதால்தானே
  ஊனை ( புலால் ) விற்கிறார்கள் ..

  அதுபோல அடுத்தவரைப் பற்றி நாம்
  அறிய ஆசைப்படுவதாலேயே இத்தகைய அவலம் என்பதை இந்த
  கதையில் உள்ள நீதி உணர்த்துகிறது,

  நன்றி வாத்தியாரே ..

  ReplyDelete
 17. from browsing centre
  --------------------
  தொகுப்பில் இருக்கிறது என்று நினக்கிறேன். ஏற்கனவே படித்து இருந்தாலும் மீண்டும் படித்தபோது சுவை கூடியது.

  ReplyDelete
 18. /////துளசி கோபால் said...
  அருமை.////

  வாருங்கள் துளசி டீச்சர். உங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

  ReplyDelete
 19. ////iyer said...
  என்ன கோடை விடுமுறை தொடங்கியாச்சா...
  வகுப்பில் நிறைய நீதி கதை வருகிறதே..
  கொஞ்சம் மனவியல் சம்பந்தப்பட்ட செய்தியும் ..
  வாத்தியாரின் பயணக் கட்டுரையும் வந்தால் ருசிக்கும் என எதிர்பாக்கிறோம்.
  கதை புத்தகம் வெளியிட்ட வாத்தியார்
  ஒரு பயணக் கட்டுரையை வெளியிட வேண்டும்..
  இதற்காக ஒரு வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ள வேண்டும்..
  அந்த பயணம் இலங்கையாக இருக்கலாமோ?
  வந்தாரை வாழ வைக்கும்
  வல்லக் கோட்டை முருகன்
  வழித்துணைக்கு வருவான்////

  உங்கள் வாக்கு பலிக்கட்டும் விஸ்வநாதன். நன்றி!

  ReplyDelete
 20. ////Alasiam G said...
  நல்லது நன்றி ஆசிரியரே!....முன்பே வகுப்பறையில் படித்து இருந்தாலும் இதை மீண்டும் படிக்கும் போது.... இதை "எத்தனை முறைப் படித்தாலும் சலிப்பதில்லை" என்று சொல்லத் தான் வேண்டும்... அதோடு புதிதாக வருபவர்களுக்கு படித்து இன்புற இது ஒரு வாய்ப்பும் ஆகும். சமூகத்தில் / சமுதாயத்தில் உள்ள வசதி படைத்தவர்கள் இது போன்று சிரமப் படும் நல்லவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தலையாயக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்து அருமை.. மீண்டும் நன்றி./////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

  ReplyDelete
 21. ////Rajah M E said...
  கனிவான வாத்தியாரே,
  உண்மையிலேயே "மௌனம்" தூய்மையான மொழி தான் !
  தங்களது கதை மிகவும் இதமானவை!!
  தங்களது ஜோதிட புத்தகம் எந்த நிலையில் உள்ளது?
  ப்ரின்டிங்க் , பைண்டிங்க் முடந்ததா?
  ஆவலுடன்,
  இராசா/////

  அணிந்துரைக்காகக் காத்துக்கொண்டுள்ளது. வந்தவுடன் அச்சாக வேண்டும்!

  ReplyDelete
 22. ///Uma said...
  நல்ல சுவாரசியமான கதை.////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 23. ////vprasanakumar said...
  நன்றாக இருந்தது./////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி பிரசன்னகுமார்!

  ReplyDelete
 24. ////Rathinavel.C said...
  Sir,I think I have read this here before.Are we going for second round here????
  Thanks
  Rathinavel.C/////

  ஐந்தாண்டுகளுக்கு முன்பு எனது பல்சுவைப் பதிவில் வந்தது. வகுப்பறையில் நிறைய புதியவர்கள் இருப்பதால் அவர்களும் படிக்கட்டும் என்று இதில் வலையேற்றினேன் நண்பரே!

  ReplyDelete
 25. ////ARASU said...
  ஆசிரியருக்கு வணக்கம்.
  அய்யா, இந்த சிறுகதை ஏற்கெனவே இதே வகுப்பறையில் படித்திருந்தாலும், மறு முறை படிக்கும் போதும் சுவாரசியம் குறையாமல் இருப்பது ஆசிரியரின்
  எளிமையான எழுத்து நடையே காரணம். நன்றி அய்யா.
  அன்புடன், அரசு./////

  உங்களின் பாராட்டிற்கு நன்றி அரசு!!

  ReplyDelete
 26. ////தங்கம்பழனி said...
  நன்றிங்க ஐயா..!////

  நல்லதுங்க சாமி!

  ReplyDelete
 27. ///KUMAR said...
  சார்,
  ஏற்கனவே படித்து இருந்தாலும் , நெகிழ்ச்சி புதியதாக இருந்தது.
  நன்றி
  குமார்////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 28. ////Arul said...
  அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர் பேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா? அடுத்த வீட்டு விஷயங்களைக் கேட்பதில்லை, அவற்றில் நமக்கு ஆர்வமில்லை என்ற நிலை இருந்தால் அவர் எப்படிப் பேசுவார்? ஆகவே நாம் அவரிடம் சேதிகள் கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
  Its true...A good story...Thank you sir////

  ஆமாம். அதைச் செய்தால் போதும். பிரச்சினைகள் இருக்காது!

  ReplyDelete
 29. /////kannan said...
  ஐயா வணக்கம்.
  நல்ல தொரு கதை மூலம் எத்தனையோ முடிச்சுகளுக்கு விடைகளை தருகின்றீர்கள் நன்றி.
  தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலை கழகத்தில் உள்ள மாணவர்கள் எவரேனும் வகுப்பறையில் இருப்பின் தங்களை அறிமுக படுத்தி கொள்ள வேண்டுகின்றேன்////

  இருக்கிறார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு முன்பு பதிவில் பதில் சொல்லியும் இருக்கிறேன்!

  ReplyDelete
 30. ///kannan said...
  ஐயா !
  ஒரு ஜோதிட ஆராய்ச்சி மாணவரின் ஆராய்ச்சிக்காக தங்களுடைய உதவி தேவைபடுகின்றது//////

  ஆராய்ச்சியா? அதற்கெல்லாம் நேரமில்லையே சுவாமி!

  ReplyDelete
 31. ////தமிழ்மணி said...
  அருமையான கதை....
  கதையின் நுட்பமான உள்கருத்து அருமை ஐயா,.....////

  நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 32. ////எடப்பாடி சிவம் said...
  அடுத்தவர் வீட்டு விஷயங்களை அவர் பேசிக்கொண்டு திரிவது குற்றம் என்றால் ஊரில் உள்ள நாம் அனைவரும் காலம் காலமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே - அது குற்றமில்லையா?
  மனித சமுதயாத்திற்கு தங்கள் தந்தையார் தந்த அற்புதமான சாட்டையடி
  இது போன்ற கதைகள் இரண்டாம் முறையல்ல பலமுறையும் பிரசுரமாகலாம் ...
  அப்போதாவது அடுத்தவீட்டு கதைகளை கேட்கும் காதுகள்
  அடங்குகிறதா என பார்க்கலாம் ...
  இந்த கதையை படிக்கும்போது நேரடியான சம்பந்தம் இல்லையென்றாலும் தொடர்புடைய ஒரு திருக்குறள் நினைவுக்கு வருகிறது..
  தினற் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் விலைபொருட்டால் ஊன் தருவார் இல் ..
  நாம் தின்கிறோம் என்பதால்தானே
  ஊனை ( புலால் ) விற்கிறார்கள்
  அதுபோல அடுத்தவரைப் பற்றி நாம்
  அறிய ஆசைப்படுவதாலேயே இத்தகைய அவலம் என்பதை இந்த
  கதையில் உள்ள நீதி உணர்த்துகிறது,
  நன்றி வாத்தியாரே ../////

  நல்லது. நன்றி இடைப்பாடியாரே!

  ReplyDelete
 33. ////kmr.krishnan said...
  from browsing centre --------------------
  தொகுப்பில் இருக்கிறது என்று நினக்கிறேன். ஏற்கனவே படித்து இருந்தாலும் மீண்டும் படித்தபோது சுவை கூடியது.////

  ஆமாம். உங்களுக்கு அனுப்பிய புத்தகத் தொகுப்பில், முதல் பாகத்தில் இந்தக் கதை உள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 34. I am astonished to see your dad s intelligence... You are blessed and gifted with a good hearted and intelligent father... May his service continue to the society...

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com