மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.4.07

அம்மாவின் ஜாதகம்!

=================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 29
ராசி பலன்கள்
தினசரிப் பத்திரிக்கைகள் எல்லாம் போட்டி போட்டுக்
கொண்டு அன்றைய ராசிபலன்களை எழுதிப் பிரசுரிப்
பதைப் பார்த்திருப்பீர்கள். பலர் தலைப்புச் செய்தி
என்ன என்று பார்த்தவுடன் அடுத்து விரைந்து
பார்ப்பது அந்த ராசிபலன் பகுதியைத்தான்.

இளைஞர்கள் எல்லாம் விளையாட்டுச் செய்திகளுக்கு
அல்லது சினிமாச் செய்திகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் நடுத்தரவயதுக்
காரர்களும், வயதான பெரிசுகளும் ராசிபலன்
பகுதியைத்தான் முதலில் விரும்பிப் பார்ப்பார்கள்
அதற்குப் பிறகுதான் மற்ற பகுதிகள்

சரி, தினமும் ஒரு பத்திரிக்கைக்கு ராசிபலன்களை
எழுதிக் கொடுக்கும் ஜோதிடர் எந்த அடிப்படையில்
அதை எழுதுகின்றார்?

சந்திர, சூரிய சுழற்சியை வைத்து அதை அவர் எழுதுவார்!

சூரியன் மாதம் ஒரு ராசி, சந்திரன் இரண்டேகால்
நாளைக்கு ஒரு ராசி (தினமும் ஒரு நட்சத்திரம்) ஆகவே
ஒவ்வொரு ராசிக்கும் உரிய தினசரிப் பலனை இந்த
இரண்டு கோள்களின் நிலைமையை வைத்து எழுதிக்
கொடுத்து விடுவார்.

அது 100% சரியாக இருக்குமா?

அது பொதுப்பலன்தான். ஆகவே பொதுவில் சரியாக
இருக்கும். உதாரணத்திற்குப் பணச் சிக்கல் என்று ஒரு
ராசிக்குச் சொல்லப்பட்டிருந்தால், பணத்தை வைத்து
எத்தனை விதமான சிக்கல்கள் இருக்கின்றனவோ
அததனை விதமான சிக்கல்களில் ஏதாவது ஒன்று
அவரவர் சொந்த ஜாதகம், நடப்பு திசை, நடப்பு
புக்திகளை வைத்து அன்றைக்கு வரும்!

பணத்தைத் தேடுவதிலும் (சம்பாதிப்பதிலும்) சிக்கல்
இருக்கிறது. கடனாகக் கொடுத்த பணத்தைத் திருப்பி
வாங்குவதிலும் சிக்கல் இருக்கிறது. பணப் பற்றாக்
குறையும் சிக்கல்தான். பணம் அதிகமாக இருந்தால்
அதைப் பாதுகாப்பதில் - முதலீடு செய்வதில்- சிக்கல்
உள்ளது!

செலவிற்குப் பணம் இல்லாமல் இருப்பதும் சிக்கல்
தான், கொடுத்த இடத்தில் வாங்கிக் கொண்டு போனவர்
சொன்னபடி பணத்தைத் திருப்பித்தராமல்
இழுத்தடிப்பதும் சிக்கல்தான்.

காரிய தாமதம் என்றால், Routine Workஐத் தவிர்த்து
நாம் செய்வதற்கு முனைப்படுகின்ற காரியம்
அன்றைக்கு நிறைவேறாமல் போய்விடும்.

சூரியன் 11-3-10-6 ம் இடங்களில் இருக்கும் மாதங்களும்,
சந்திரன் 7-1-6-11-10-3 ம் இடங்களிலும் இருக்கும்

நாட்களும் பொதுவில் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.
சந்திரன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்திலும்,
12ம் இடத்திலும் சஞ்சாரம் செய்யும் நாட்கள் மகிழ்ச்சி

யைத் தராது.
சரி அதை எப்படித் தெரிந்து கொள்வது?

வெரி சிம்ப்பிள். நீங்கள் திருவோண நட்சத்திரம்
என்றால், உங்களுடைய ராசி மகரம். அதிலிருந்து
எட்டாவது ராசி சிம்மம். சிம்மத்திற்குரிய நட்சத்
திரங்கள் -மகம் - பூரம் - உத்திரம் முதல் பாதம்
(First Six Hours of Uththiram Star). அந்த நட்சத்திரம்
உடைய நாட்கள் சிறப்பாக இராது.

அதுபோல அதே திருவோண நட்சத்திரத்திற்குப்
பன்னிரெண்டாம் இடம் என்னும்போது அது தனுசு
ராசி -அதற்குரிய நட்சத்திரங்கள் மூலம் - பூராடம்
- உத்தராடம் முதல் பாதம் (First Six Hours of
Uththiradam Star). அந்த நட்சத்திரம் உடைய நாட்களும்
சிறப்பாக இராது.

இதுபோல ஒவ்வொரு ராசிக்காரரும் தனக்குச்
சாதகமாக அல்லது பாதகமாக உள்ள நட்சத்திரங்களைக்
குறித்து வைத்துக் கொள்ளலாம்.

அந்த நாட்களில் என்ன செய்யலாம்?

கவுந்தடித்து வீட்டில் படுத்துக் கொண்டு விடலாமா?
கூடாது. அன்றாட வேலைகளைச் செய்யுங்கள்.
That is your routine work. அதற்கெல்லாம் ஆபிஸில்
லீவு கிடைக்குமா என்ன?

அன்றாட வேலைகளைச் (routine work) செய்வதற்கு
நாள், நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை!

விஷேசமாக அல்லது புதிதாகச் செய்யவுள்ள
வேலைகளை அன்று செய்யாமல் தவிர்க்கலாம்.
திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போகிறீர்கள்
என்றால அந்த நாட்களைத் தவிர்க்கலாம். புதிதாகக்
கார் வாங்கப் போகிறீர்கள் என்றால அந்த நாட்களைத்
தவிர்க்கலாம். என்ன, நீங்கள் தேடிப்போகும் மாடல்
அல்லது கலர் கிடைக்காது!
(இரண்டிற்கும் தான்:-))))

ஆண்டுப் பலன்களைச் சனி, மற்றும் குருவை வைத்தும்,
மாத பலன்களைச் சூரியனை வைத்தும், நாள் பலன்களைச்
சந்திரனை வைத்தும் பார்க்க வேண்டும்

சரி, அரட்டைபோதும்! ஓரளவிற்கு தினசரிப் பலன்களைப்
பற்றி உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்லியிருக்கிறேன்
என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் விளக்கம்
வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் கேளுங்கள்
-------------------------------------------------------------------------------

கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்காகக் கட்டம்கட்டி (அட்டவணை)
சூரியனின் கோச்சாரப் பலன்களைக் கொடுத்துள்ளேன்.

இதுபோல மற்ற கிரகங்களுக்குரிய கோச்சாரப் பலன்களும்
தொடர்ந்து வரும்.

பதிவின் நீளம், மற்றும் உங்களின் பொறுமை கருதி இன்று
இத்துடன் நிறைவு செய்கிறேன்

மற்றவை நாளை!
கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!


==========================================
Practical Test:

அம்மாவின் ஜாதகம்

அம்மாவின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
அதைப் பார்த்துக் கீழ்க்கணட கேள்விகளுக்குரிய
பதில்களை எழுதவும்.

மல்யுத்தப் பார்ட்டிகள் சாக்குபோக்குச் சொல்லாமல்
சரியான அல்லது தவறான (?) பதில்களை
எழுதும்படி பணிக்கப் படுகின்றார்கள்!

அம்மாவின் ஜாதகத்திலுள்ள சிறப்பு அம்சங்கள்
அடுத்த பதிவில் விரிவாக எழுதப்படும்!
================================


1. லக்கினாதிபதி அமர்ந்துள்ள இடம் எது?
அதன் பலனால அவருக்கு கிடைததது என்ன?
2. எந்த கிரகம் அவரை முதன் மந்திரிப் பதவிவரை
கொண்டு சென்றது?
3. எந்தக் கிரகத்தின் திசையில் அவர்
முதல் மந்திரியானார்? அதற்குரிய காரணம் என்ன?

(She had become the Chief Minister of Tamil Nadu on 24.06.1991)

(தொடரும்)
==================================================

17 comments:

 1. //"அம்மாவின் ஜாதகம்!" //

  சுப்பையா ஐயா,

  இதெல்லாம் சரிதான் ஐயா,

  எம்ஜி ஆருக்கு நல்ல ஜாதகம் இருந்ததால் தான் இந்த அம்மாவின் ஜாதகம் உயிர்பித்தது.

  இல்லை என்றால் சன் டிவி மெக சீரியலில் தான் அம்மா வந்து கொண்டு இருந்திருப்பார்கள்.

  //இதுபோல ஒவ்வொரு ராசிக்காரரும் தனக்குச்
  சாதகமாக அல்லது பாதகமாக உள்ள நட்சத்திரங்களைக்
  குறித்து வைத்துக் கொள்ளலாம்.//

  சிலர் தனக்கு சாதமானவற்றை மட்டும் ஜாதகத்தில் எழுதச் சொல்லி ஜோதிடர்களை கட்டாயப்படுத்துகிறார்களாமே, குறிப்பாக வரன் தேடுபவர்கள்.

  ReplyDelete
 2. உள்ளேன் ஐயா,

  மேலும் நீங்க கேட்கும் சில கேள்விகளுக்கு இன்னும் என்னால் சரியாக பதிலை கூற முடியவில்லையே.
  என்ன செய்வது?

  ReplyDelete
 3. இன்னைக்கு நான் உள்ளேன் ஐயா :)

  ReplyDelete
 4. //1. லக்கினாதிபதி அமர்ந்துள்ள இடம் எது?//

  அதன் பலனால அவருக்கு கிடைததது என்ன?
  மிதுனம், பலன் அவருக்கும் கூடே இருப்பவர்களுக்கும் கூட கிடைத்தது

  2. எந்த கிரகம் அவரை முதன் மந்திரிப் பதவிவரை
  கொண்டு சென்றது?

  தெரியலை. எம்ஜிஆரை பிடிச்ச கிரகமாக இருக்கும் என நினைக்கிறேன். :))))

  3. எந்தக் கிரகத்தின் திசையில் அவர்
  முதல் மந்திரியானார்? அதற்குரிய காரணம் என்ன?

  அவருக்கு சிம்ம ராசி எனவே குரு திசையில் தான் ஆகி இருப்பார்.
  :)

  தெரியலை.

  ReplyDelete
 5. ////கோவி.கண்ணன் said...
  சிலர் தனக்கு சாதமானவற்றை மட்டும் ஜாதகத்தில்
  எழுதச் சொல்லி ஜோதிடர்களை கட்டாயப்படுத்து
  கிறார்களாமே, குறிப்பாக வரன் தேடுபவர்கள்.////

  அடடா, உங்களுக்கென்று இப்படித் தப்புத்தப்பாய்
  எப்படித்தான் செய்திகள் கிடைக்கின்றதோ?

  ReplyDelete
 6. //////Sumathi said...
  மேலும் நீங்க கேட்கும் சில கேள்விகளுக்கு இன்னும்
  என்னால் சரியாக பதிலை கூற முடியவில்லையே.
  என்ன செய்வது?////

  அத்ற்கு எதற்குக் கவலை? தொடர்ந்து படியுங்கள்
  விடாமுயற்சியோடு படித்து வாருங்கள்
  பிடிபடாமலா போய்விடும்?

  ReplyDelete
 7. ///////சென்ஷி said...
  இன்னைக்கு நான் உள்ளேன் ஐயா :)/////

  என்ன மல்யுத்த்ம் போடுவதற்கு ஆள் சேர்ந்து விட்டதா?

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. கிளாஸ் ரூம்ல எவண்டா அது சண்டைக்கு கெளம்புறது..

  முன்னாடி வாங்கப்பா..

  இதுதான் அமைதியான ஏரியான்னு வந்தா இங்கயும் கலவரபூமியா மாத்துறாங்கய்யா :))

  ReplyDelete
 10. 1. லக்கினாதிபதி அமர்ந்துள்ள இடம் எது?

  midunam rachi

  2. எந்த கிரகம் அவரை முதன் மந்திரிப் பதவிவரை
  கொண்டு சென்றது?
  sukuram uaacham in meena rachi, so raja yogam for her.

  ReplyDelete
 11. குருவே,

  லக்னாதிபதி புதன் - கும்பத்தில் 9-ம் இடத்தில் உள்ளார்.
  லக்னத்திற்கு - குருவின் 7-ம் இடத்து பார்வை
  சுக்கிரன் உச்சத்தில் உள்ளார்.
  முதல்வர் ஆனது - செவ்வாய் தசை - சுக்கிர புத்தி

  சசி மங்கள யோகம் ??

  இராசகோபால்

  ReplyDelete
 12. 3. எந்தக் கிரகத்தின் திசையில் அவர்
  முதல் மந்திரியானார்? அதற்குரிய காரணம் என்ன?

  Mahadasha of Mars and saturn puthi..

  ReplyDelete
 13. ////// மல்யுத்த பார்ட்டி said...கிளாஸ் ரூம்ல எவண்டா அது சண்டைக்கு கெளம்புறது..
  முன்னாடி வாங்கப்பா..
  இதுதான் அமைதியான ஏரியான்னு வந்தா இங்கயும் கலவரபூமியா மாத்துறாங்கய்யா :))////

  அடடா, சட்டாம்பிள்ளை, கோபப் படாதீர்கள்!
  எல்லாம் ந்ம் வகுப்புக்கண்மணிகள்தானே!
  சரியாகிவிடும்!
  ஆமாம் நீங்கள் படித்துவிட்டீர்களா - இல்லையா?
  அடுத்த வாரம் உங்களுக்கு மட்டும் தனியாக டெஸ்ட் உள்ளது!

  ReplyDelete
 14. ///// Monickam said... 1. லக்கினாதிபதி அமர்ந்துள்ள இடம் எது?
  midunam rachi. 2. எந்த கிரகம் அவரை முதன் மந்திரிப் பதவிவரை
  கொண்டு சென்றது? sukuram uaacham in meena rachi, so raja yogam for her. ///

  இல்லை தவறு .சரியான விடைகளுக்கு அடுத்த பதிவைப் பாருங்கள் நண்பரே!

  ReplyDelete
 15. ///// Rajagopal said...
  லக்னாதிபதி புதன் - கும்பத்தில் 9-ம் இடத்தில் உள்ளார்.
  லக்னத்திற்கு - குருவின் 7-ம் இடத்து பார்வை
  சுக்கிரன் உச்சத்தில் உள்ளார்.
  முதல்வர் ஆனது - செவ்வாய் தசை
  சசி மங்கள யோகம்
  இராசகோபால///

  அனைத்துமே சரியான விடைகள்!
  பாராட்டுக்கள் மிஸ்டர் ராஜகோபலன்!

  ReplyDelete
 16. ////// Monickam said... 3. எந்தக் கிரகத்தின் திசையில் அவர்
  முதல் மந்திரியானார்? அதற்குரிய காரணம் என்ன?
  Mahadasha of Mars and saturn puthi..///

  Mars Dasa ( செவ்வாய் திசை) என்று சொன்னால் போதும். சரியான் பதில்
  பாராட்டுக்கள் அன்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com