மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.7.24

Astrology: பாமர யோகம் Pamara Yogam

Astrology: பாமர யோகம் 
Pamara Yogam

ஐந்தாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருந்தால் அதற்கு, அந்த அமைப்பிற்குப் பாமர யோகம் என்று பெயர். அது ஒரு மோசமான யோகம். அவ யோகம்.

அந்த அமைப்பு உள்ளவர்கள் தங்களைச் சுற்றியுள்ள பலருக்கும் கேடாக இருப்பார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தேவையில்லாததைச் செய்து கொண்டிருப்பார்கள்.  செய்பவற்றை அலட்சியமாகவும், நல்ல வழியில் அல்லாமலும் செய்து கொண்டிருப்பார்கள். அது பலரையும் பாதிக்கும் வண்ணம், பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும். (affecting or harming many people) அவர்களிலும் சிலர் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும், பொய்யர்களாகவும் இருப்பார்கள். இறைநம்பிக்கை குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

தெரிந்தால், தெரிந்த பிறகு, அப்பாடா, தப்பித்தோம் என்று பலரையும் நினைக்க வைக்கும் அவயோகம் இது!

அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.24

AStrology: துஷ்கிரிதி யோகம் Dushkriti Yogam

Astrology: துஷ்கிரிதி யோகம் 
Dushkriti Yogam

களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் அதிபதி, லக்கினத்தில் இருந்து 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் அமைப்பிற்கு துஷ்கிரிதி யோகம் என்று பெயர். அதாவது 7ஆம் வீட்டுக்காரன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் நிலைமை என்று எடுத்துக்கொள்ளுங்கள்!

இந்த யோகம் மோசமான யோகம். அவ யோகம். இந்த யோகம் இல்லாமல் இருப்பது நல்லது.

பலன்:

ஜாதகனின் நடத்தையால், ஜாதகனின் மனைவிக்கு, ஜாதகனிடம் சுமூகமான, அன்பான உறவு இருக்காது!. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜாதகன், பிறன் மனைகளின் மேல் கண்ணாக இருப்பான். அதாவது சட்டத்திற்குப் புறம்பான பெண் உறவுகளூக்காக அலைந்து திரிந்து கொண்டிருப்பான்.
ஊர் சுற்றியாக இருப்பான். அவனுக்குப் பால்வினை நோய்கள் இருக்கும். உறவினர்களால் வெறுக்கப்பட்டவனாக இருப்பான். எப்போதும் மகிழ்ச்சியற்றவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.7.24

Astrology ஸ்திரமான வாழ்க்கை Stable Life Key point

Astrology: ஸ்திரமான வாழ்க்கை Stable Life Key points 

லக்கின அதிபதி திரிகோணம் ஏறி இருக்க வேண்டும். திரிகோணங்களில் அமர்ந்திருக்க வேண்டும். திரிகோணம் என்பது 1, 5, 9ஆம் வீடுகள். அம்மூன்றில் வீடு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீடு மிகவும் சிறப்பான திரிகோண வீடாகும். லக்கினாதிபதி ஒன்பதில் இருந்தால், ஜாதகன் மிகவும் அதிர்ஷ்டமானவன். பாக்கியசாலி. உங்கள் மொழியில் சொன்னால் கொடுத்துவைத்தவன். என் மொழியில் சொன்னால் வரத்துடன் வந்தவன்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!