மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.7.20

Astrology: Quiz: புதிர்: அரசியல்வாதியின் ஜாதகம்!



Astrology: Quiz: புதிர்: அரசியல்வாதியின் ஜாதகம்!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஹஸ்த நட்சத்திரம் விருச்சிக லக்கினம் கன்னி ராசி. இது ஒரு அரசியல்வாதியின் ஜாதகம். அரசியலில் நுழைந்தவர் பெயரெடுத்து பிரபலமாக இருந்தார். ஜாதகப்படி அவரின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 12-7-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:



=======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.7.20

நாரதரும் அவருடைய வீணையும்!!!!


நாரதரும் அவருடைய வீணையும்!!!!

திரிலோக சஞ்சாரியான நாரதருக்கு, வீணை இசைப்பதில் தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற கர்வம். தேவலோகத்தில் வீணை இசை வாசிப்பதில் சிறந்தவர்கள் நாரதர் மற்றும் தும்புரு. தும்புரு கைலாயத்திலும் நாரதர் வைகுண்டத்திலும் தம்முடைய திறமையை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு சமயம் இவர்களுக்குள் தம்முள் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை வந்தது. 

இருவரும் தீர்மானித்து கைலாயம் நோக்கி புறப்பட்டனர். அப்படி செல்லும் வழியில் ஓர் அடர்ந்த வனம் குறுக்கிட்டது. அந்த வனத்தில் இருந்து ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்! என்ற ராம நாமம் ஒலித்தது. இது என்ன இந்த வனத்தில் ராமநாம ஜெபம் கேட்கிறதே? உள்ளே சென்று பார்ப்போம் என்று இருவரும் வனத்தினுள் நுழைந்தனர்.

அங்கே ஸ்ரீ ஆஞ்சநேயர் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து ராமநாம ஜெபம் செய்து கொண்டிருந்தார். இருவரும் அனுமனை வணங்கினர்.

 “யாழிசை வல்லுனர்களே! இருவரும் சேர்ந்து எங்கே பயணிக்கிறீர்கள்? என்றார் அனுமன். 

உடனே நாரதரும் தும்புருவும் தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியையும் சிவனை தரிசித்து தீர்வு காண இருப்பதையும் கூறினர்.

யாழ் இசை வல்லுநர்களுக்குள் யார் இசை சிறந்தது என்ற போட்டியா? சபாஷ் சரியான போட்டிதான்! எனக்காக உங்கள் இசையை கொஞ்சம் வாசித்துக் காட்ட முடியுமா? என்றார் அனுமன்.

இருவரும் தங்கள் யாழில் இசை மீட்டிக் காட்டினர். அருமையாக வாசிக்கிறீர்கள்! நானும் கொஞ்சம் உங்கள் யாழை மீட்டட்டுமா? என்று அவர்களிடமிருந்த வீணையை வாங்கி வாசிக்கத் தொடங்கினார் அனுமன்.

ஆஞ்சநேயர் வாசிக்க துவங்கியதும் அண்ட சராசரமும் அப்படியே உறைந்து நின்றுவிட்டது. நதிகளில் தண்ணீர் ஓடவில்லை! மரங்கள் கிளைகளை அசைக்கவில்லை! பறவைகள் அப்படியே பறந்தபடி நின்றன. உலகமே அந்த இசையில் மயங்கி அப்படியே நின்றுவிட்டது. 

ஆஞ்சநேயர் அமர்ந்திருந்த அந்தப் பாறை அப்படியே உருகி வழிந்து ஓடத்துவங்கியது.

நாரதரும் தும்புருவும் வெட்கம் அடைந்தனர். ஏதோ வாசித்து இதில் யார் சிறந்தவர் என்று போட்டியிட்டு கொள்கிறோமே? கல்லையும் கரைய வைக்கிறதே அனுமனின் இசை! இவரல்லவோ சிறந்தவர். இவர் இசையல்லவோ சிறந்தது! இத்தனை திறமை இருந்தும் அடக்கமுடன் வாழும் இவரை பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தனர்.

சிறிது நேரத்தில் ஆஞ்சநேயர் இசைப்பதை நிறுத்தி யாழை பாறையில் வைத்தார். உறுகிய பாறைக்குழம்பு கெட்டிபட்டு அதில் யாழ் ஒட்டிக்கொண்டது.

இப்போது அனுமன் சொன்னார். நாரத தும்புரு முனிவர்களே! இதோ இந்த பாறையில் உங்கள் யாழ் ஒட்டிக் கொண்டுவிட்டது. நீங்கள் மீண்டும் இசை வாசியுங்கள்! உங்களில் யார் இசைக்கு இந்த பாறை உருகுகிறதோ அவரே சிறந்தவர். அவர் இந்த வீணையை எடுத்துக் கொள்ளலாம். இதற்குப் போய் எதற்கு சிவனை தொந்தரவு செய்ய வேண்டும் என்றார் குறும்புடன்.

இரு முனிவர்களும் ஆஞ்சநேயரின் பாதம் பணிந்தனர். சுவாமி உங்கள் இசை எங்கள் கண்களை திறந்துவிட்டது.
 
கல்லையும் கரைய வைக்கும் திறமை எங்களுக்கு இல்லை! எல்லாம் இறைவன் அருள். இறைவனே எல்லாவற்றையும் தருகிறார். எங்கள் இருவருக்குள்ளும் இருப்பது இறைவனே! இனி எங்களுக்குள் போட்டி வராது. எங்கள் கர்வம் ஒழிந்தது என்று வணங்கி நின்றனர்.

ஆஞ்ச நேய பெருமான் மீண்டும் இசைக்க  பாறை இளகி யாழ் கிடைத்தது. அதை இருவரிடம் கொடுத்த அனுமன், முனிவர்களே! வித்யா கர்வம் கூடாது! அது நம்மை அழித்துவிடும்! அடக்கமே சிறந்த குணம்! இதை உணர்ந்து இறைவனை பாடி வாருங்கள்! என்று கூறினார்.

ஆஞ்சநேயர் வாசிப்பில் ஒவ்வொரு ஸ்வரமும் ராம் ராம் என்று சொல்லுமாம் அவர் வீணையுடன் ஒன்றி வாசிக்க அந்த நாதத்தில் ஸ்ரீ ராமனும் ஒன்றி விடுவார்.  இவருக்க்குப்பிடித்த ராகத்தின் பெயர் #ஹனுமத்தோடி என்று இருக்கிறது.

நமது குடந்தை ராமஸ்வாமி கோவிலில் ஸ்ரீ ஹனுமான் வீணையுடன் காட்சி தருகின்றார்.
----------------------------------------------------------------------------
ப்டித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.7.20

காதில் நுழைந்த பூச்சியும் கொரோனாவும்!!!!




காதில் நுழைந்த பூச்சியும் கொரோனாவும்!!!!

ஒரு பெரிய நாட்டின் மன்னன் தனது நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான் .

ஒரு நாள் இரவு... தொலை தேசத்தில் ஒரு ராணுவப் பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது .

திடுக்கிட்டு எழுந்தான் .

காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள் 

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை

சில வீரர்களை அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பினான் மன்னன் .

ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் .

அவரும் எவ்வளவோ பாடுபட்டார் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன 

மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள். 

எதற்கும் பலன் இல்லை .

மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள் ,யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை .

மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால்,அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை 

உணவு சாப்பிடுவது  குறைந்து மன்னன் தன் பொலிவு இழந்தான் .

ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன், இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான் 

எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான் .

தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான் .

பதினான்கே வயதான அவனுடைய மூத்த மகனுக்கு அவசர கதியில் வாள்பயிற்சி, குதிரையேற்றம் எல்லாம் கற்பிக்கப்பட்டது .

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன .

பட்டத்து ராணி அந்தத் துறவியைப் பார்க்க சென்று அவருடைய காலில் விழுந்து கதறினாள்.

தன் கணவனை எப்படியாவது  காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள் 

அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார் .

பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார். 

அன்று மாலை அரசனையும் அரசியையும் தனியாகச் சந்தித்துப் பேசினார் 

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே!

நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது .

இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும் .

இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்.

அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி 

அவர்களுக்குக் குதிரையேற்றம் தெரியுமாதலால் அவர்கள் பயணத்திற்குச் சிறந்த அரபிக் குதிரைகளைக் கொடுத்து அனுப்பினான் மன்னன் .

கூடவே, அவர்கள் பாதுகாப்பிற்காகச் சில வாளேந்திய வீரர்களையும் அனுப்பி வைத்தான் .

மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள். 

அது 'ராஜ மூலிகை' என்பதால் அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார் .

மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது 

அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது .

மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி .

துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன். 

சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருந்தார் துறவி 

மன்னன்இப்போது நிம்மதியாகத் தூங்கினான் .

நன்றாக உண்டான்,பழைய பொலிவு திரும்பி விட்டது 

துறவி விடை பெற்றுக்கொண்டார் .

அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன் 

அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் ,துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான் 

""குருதேவா...!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!''

மற்றொரு சீடனின் கேள்வி வேறு விதமாக இருந்தது .

"மூலிகையைவிட அந்தப் பூச்சி இன்னும் அற்புதமாகத் தோன்றுகிறது .

ஒரு மனிதனின் காதிற்குள் புகுந்து அத்தனை நாள் உயிருடன் இருந்து அவனைப் பாடாய்ப் படுத்தி வைத்தது என்றால் ,அது மிகவும் விசேஷமான பூச்சியாக இருக்க வேண்டும்.. 

அதைப் பற்றிச் சொல்லுங்களேன்  என்றான்

'துறவி புன்னகை பூத்தார் !

"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?

மன்னனின் செவிக்குள் .

அதுதான் இல்லை 

மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம் .

போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும் ,இல்லை வெளியே வந்திருக்கும் 

அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது .

அது மன்னனின் மனதில் அது  குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது 

எனவே அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான் 

"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''

மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!! 

பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக்  கொண்டிருந்தான் .

அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன் .

அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான் .

ஆனால் அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன் 

பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன் .

மன்னன் நம்பி விட்டான் 

அவன் நோயும் தீர்ந்தது.

சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.

இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன. 

காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது

பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது 

.''இது நகைச்சுவை அல்ல; 

இது வாழ்வியல் கருத்தை நச்சென்று சொல்லும்  விளக்கம் .

காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்ட மன்னன் போல

இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு,நம்மில் பலபேர் தவித்துக் கொண்டிருக்கிறோம்!

("கொரோனா, இல்லவே யில்லை", என்று சொல்லவில்லை. அது கொடுக்கும் தொல்லையை விட, 

"அதைப் பற்றி ஏற்படுத்தப்  பட்டிருக்கிற பயமே", அதிக தொல்லை கொடுக்கிது!

அவரவர்கள் " கொரோனா தொற்றை" -   "கொரோனாவை" அல்ல!  "தொற்றை"- கட்டுப்படுத்துவதிலேயே "போட்டி போட்டுக் கொண்டு" - பந்தயத்தில் ஓடுவது போல், ஓடிக்கொண் டிருக்கிறார்கள்! ஆச்சர்யமாக இருக் கிறது!

இத்தனைக்கும் - இது , "கொல்லும் நோய் அல்ல"! இதனால் பாதிக்கப் பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் சாதாரண சிகிச்சையில் குணம் அடைகிறார்கள். 15 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது, மற்றவர்களுக்கு தான் பிளாஸ்மா தெரபி முதலியவை செய்யவேண்டி வரும்!", என்றெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது!

"தொற்றை கண்டுபிடிப்பதில் காட்டும் .முயற்சியை" விட

"எல்லோருக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சி", அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா?

Immunity to be increased - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

ஏழு கோடி பேருக்கு, பதினாலு கோடி மாஸ்க் கொடுப்பதை விட,

ஏழு கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் கப சுர சூரணமும் கொடுப்பது சிறந்தது!

மாஸ்க் கொடுப்து - நோய்க்கு பயப்படுவது - பயந்துகொண்டே இருக்க வேண்டியது தான்!

நோய் எதிர்ப்பு மருந்தைக் கொடுப்பது - நோயை (நம்மிடம்  வருவதற்கு) - அஞ்சும்படி செய்வது!

இதில் எது சரி? நாம் , கொரோனாவிற்கு அஞ்சிக் கொண்டே யிருப்பதா?

அல்லது

கொரோனாவை, நம்மிடம் வருவதற்கு, அஞ்சும்படி செய்வதா?
----------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!