மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.9.17

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!


உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!

அனில் அம்பானி, கரீனா கபூர் உட்பட பல்வேறு பிரபலங்களுக்குப் பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் *ருஜுதா திவேகர்* இந்தியாவின் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா உணவுமுறைகள் குறித்துப் பல புத்தங்களை எழுதியிருக்கிறார். இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் உணவியல் தொடர்பான புத்தகங்களில் ருஜிதாவின் புத்தகங்கள் முக்கியமானவை.

சமீபத்தில் இவர் எழுதியுள்ள*இந்தியன் சூப்பர் ஃபுட்ஸ் (Indian super foods)* புத்தகத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரங்கில் வாசகர்களோடு கலந்துரையாடினார்.  ஆரோக்கியமாக வாழ்வதற்காக அவர் சொன்ன ஏழு விதிகள் இங்கே.

☘உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அரிசியைக் குறையுங்கள் என யாராவது சொன்னால் தயவுசெய்து காது கொடுத்துக் கேட்காதீர்கள். அரிசி, நமது பாரம்பரிய உணவு. அரிசிதான் இங்கே அதிகம் பயிரிடப்படுகிறது, *“அந்தந்த மண்ணில் விளையும் உணவுதான் அந்த மக்களுக்கு” என்பதே ஹெல்த்தி சீக்ரெட்.* எனவே, அரிசியைத் தவிர்க்காதீர்கள். அரிசி எந்த விதத்திலும் கெடுதி விளைவிக்காது. மாவுச்சத்து உள்ளது போலவே அமினோஅமிலங்களும் இதில் நிரம்பியுள்ளன. அரிசி உணவுகள்தான் செரிமானத்துக்கு ஏற்றவை. எனவே, இட்லியோ சாதமோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.☘

☘நெய் நன்றாக ஊற்றிச் சாப்பிடுங்கள்.*
நெய்யின் கிளைசெமிக் எண் குறைவானது. இதனால், சர்க்கரை நோயாளிகள்கூட பயப்படாமல் நெய் ஊற்றிச் சாப்பிடலாம். நெய்யில் அதிகமான நல்ல கொழுப்பு உள்ளது. இது, இதயத்துக்கு நல்லது. எனவே, சாம்பார் சாதத்தில் நெய் ஊற்றிச் சாப்பிட நடுங்காதீர்கள்.☘

☘தேங்காயில் கொலஸ்ட்ரால் இருக்கிறது, முந்திரி சாப்பிட்டால் வெயிட் போடும் என்பதை நம்பி பலர் இதனைத் தவிர்த்துவிடுகின்றனர் இது தவறு. தேங்காயும், முந்திரியும் நம் ஊரில் அதிகம் விளைபவை.☘

☘தேங்காய், முந்திரி இரண்டிலும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது;* கொலஸ்ட்ரால் இல்லை. நமது உடல் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் அத்தியாவசியம். நமது கல்லீரல் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்துகொள்கிறது. தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால் உள்ளது என்பது தவறான செய்தி.☘

☘பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடுவதைவிட நம்மூர் நிலக்கடலை, முந்திரியைச் சாப்பிடுங்கள்.☘

☘கரும்பு நமது ஊரில் அதிகம் விளையக்கூடியது. கரும்பைக் கடித்துச் சாப்பிட்டால், பல்லுக்கும் நல்லது. உடலுக்கும் நல்லது. நாட்டுவெல்லத்தைப் பனிக்காலம் மற்றும் மழைக் காலத்திலும் சாப்பிடுங்கள். சர்க்கரையைக் கோடை காலத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலர், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு பிரவுன் சாக்லேட், செயற்கை இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள். இது தவறு. கரும்பில் இருந்து இயற்கையானமுறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையைச் சாப்பிடத் தயங்காதீர்கள். அளவான சர்க்கரையோடு காபியும், டீயும் தாராளமாக அருந்துங்கள்.☘

☘தைராய்டு பிரச்னை பலரை வாட்டி வதைக்கிறது. சிலர் எடையைக் குறைத்தால் தைராய்டு குறையும் என்பார்கள். ஆனால், எடையும் குறைக்க முடியாமல், தைராய்டையும் குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள். இதற்கு எளிய தீர்வு உண்டு.☘

☘முதலில், நீங்கள் மின்னணு கேட்ஜெட்டுகள் பயன்படுத்துவதைக் குறையுங்கள்.☘

 ☘குறைந்தபட்சம் இரவு படுக்கைக்குச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாவது டி.வி, செல்போன், லேப்டாப் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள்.☘

 ☘நன்றாக உறங்குங்கள். மனஅழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள். ☘

☘வாரம் 150 நிமிடங்கள் பிடித்த உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். ☘

☘இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரம் முன்பே முடித்துவிடுங்கள். இதைச் செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் இருக்கும்.☘

☘சிறுதானியங்களில் பல நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அதற்காக எப்போதும் சிறுதானியம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறுதானியத்தில்தான் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. எனவே, சிறுதானியமும் ஒரு நல்ல உணவு. அவ்வப்போது அதனை எடுத்துக்கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்☘

☘பலர் என்னிடம் கேட்கும் கேள்வி, எப்படிச் சாப்பிடும் உணவு அளவைக் குறைப்பது என்பதுதான். நமது நாக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. குழந்தை, தேவைக்கு மீறி தாயிடம் இருந்து தாய்ப்பாலை எப்போதும் குடிக்காது. நமது வயிறு நிறைந்த பின் யாரவது சாதத்தை நம் வாய்க்குள் வைத்துத் திணித்தாலும் நம்மால் விழுங்க முடியாது; துப்பத்தான் முடியும்.☘

 ☘ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம் ஒரு ஜாங்கிரி சுவையாக இருக்கிறது என்றால் நம்மால் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டுதான் சாப்பிட முடியும். மூன்றாவது ஜாங்கிரியைச் சாப்பிடும்போது முதல் ஜாங்கிரியைச் சாப்பிட்ட அதே சுவை இருக்காது. ஆசையின் காரணமாகச் சாப்பிடுவது வேறு, சுவைக்காகச் சாப்பிடும்போது சாப்பிடுவது வேறு. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சுவைக்காகச் சாப்பிடுங்கள்.☘

 ☘சாப்பிடும்போது வேறு எந்த வேலையயும் செய்யாமல், வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், உணவை ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுங்கள்.☘

 ☘உங்களுக்கான உணவுத் தேவையை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் எனச் சொன்னால், நிச்சயம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிடலாமே என்றுதான் மனம் ஏங்கும். எனவே, உணவின் அளவும் சரி, ஆரோக்கியமும் சரி உங்கள் கையில்தான்.
https://en.wikipedia.org/wiki/Rujuta_Diwekar

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.9.17

Astrology: குருப் பெயர்ச்சிப் பலன்கள்


குருப் பெயர்ச்சிப் பலன்கள்

குருப்பெயர்ச்சி அன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்!

குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா...என்று பார்க்க வேண்டும்!!!

உதாரணமாக ஒவ்வொருவருக்கும் திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதையே முதலில் பார்ப்போம்.

2017-ம் ஆண்டுக்கான குருப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான  ஸ்ரீஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது ஆவணி மாதம் 17ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 02.09.2017 சுக்ல ஏகாதசியும் சனிக்கிழமையும் பூராட நக்ஷத்ரமும் சௌபாக்கியம் நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.20க்கு - காலை 9.21க்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்குப் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
-----------------------------------
வணங்க வேண்டிய ஸ்தலங்களைக் கீழே கொடுத்துள்ளேன் .

பலன்கள எங்கே என்கிறீர்களா?

பலன்கள் ஏ4 சைஸ் தாளில் 10 பக்கங்கள் உள்ளன. அவற்றை இங்கே பதிவிட்டால் அனுமார் வால் போல அவை நீண்டதாக இருக்கும். உண்மையில் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள். எனக்கு மின்னஞ்சலில் எழுதுங்கள். நீங்கள் படிக்கும் படியாக பி.டி.எஃப் வடிவத்தில் உங்களுக்கு உடனே அனுப்பி வைக்கிறேன்.  மறக்காமல் Subject Boxல் குருப் பெயர்ச்சி (Transit Jupiter)  என்று குறிப்பிடுங்கள். மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

நிறைய அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தத் திடீர்ப் பதிவு!!!!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------

குருப்பெயர்ச்சி அன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்....

#திருச்செந்தூர்

ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாகக் கருதப்படும் திருச்செந்தூர் குரு பகவானின் பரிகாரத்துக்கு ஏற்ற தலமாகும். கடலோரத்தில் அமைந்த இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானையும், குரு பகவானையும் வழிபட்டு பரிகாரம் செய்வது நல்ல பலனை அளிக்கும்.

#தென்குடி_திட்டை

இந்த குருஸ்தலம் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது இங்குள்ள குரு, ராஜயோக குருவாக தனிச்சந்நதியில் காட்சி அளிக்கிறார்.

#பட்டமங்கலம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில், குரு பகவான் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த கோலத்தோடு காட்சி தருகிறார்.

#திருவாலிதாயம்

சென்னையை அடுத்த பாடி, முகப்பேறு அருகில் உள்ளது. இங்குள்ள குருபகவான் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

#ஆலங்குடி

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் தெற்கு நோக்கி வீற்றிருந்து தனி சன்னிதியில் குரு பகவான் அருள்பாலிக்கிறார்.

#குருவித்துறை

மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ளது. இங்குள்ள பெருமாள் கோவிலில் சிறப்பாக காட்சி தருகிறார் குருபகவான்.

#தக்கோலம்

அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது ஜலநாதீசுவரர் கோயில். இங்குள்ள தட்சிணாமூர்த்தி கலைநயத்தோடு காணப்படுகிறார்.

#மயிலாடுதுறை

இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோயிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிர்வத்தியாகும்.

#அயப்பாக்கம்

சென்னை, அயப்பாக்கத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தியாகும். குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்கள் அனுபவம்.

#கும்பகோணம்

கும்பகோணத்தில், கோபேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

#குச்சனூர்

தேனி மாவட்டம் குச்சனூரில் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

#திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கு தனிக்கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல் அமைந்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களிலும் குருபகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரகத்தில் குரு வீற்றிருப்பார்.  அது மட்டுமில்லாமல் தனி சந்நதியில் தட்சிணாமூர்த்தியாகவும் இடம் பெற்றிருப்பார். : குரு எனப்படும் வியாழ பகவான் நவக்ரஹங்களில் ஒருவர். தேவர்களின் குரு. சுமாராக வருஷத்திற்கு ஒரு முறை zodiac எனப்படும் ராசி மண்டலத்தில் மாற்றம் அடைவார். தக்ஷிணாமூர்த்தி தெற்கே பார்த்து அமர்நதுள்ள ஞான ஸ்வரூபி. பரமேஷ்வரனின் அம்சம்
-------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.9.17

Humour: நகைச்சுவை: சிக்கலும் அதற்கான சிறந்த தீர்வும்!!!


Humour: நகைச்சுவை: சிக்கலும் அதற்கான சிறந்த தீர்வும்!!!

வேண்டுகோள்: நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!!!
--------------------------------------------------------------------------------------------
1
எல்லா டெஸ்ட்-க்கும்
படிச்சிட்டு🙄 போகணும்...!

ஐ 👁 டெஸ்ட்-க்கு
மட்டும் போயி படிச்சா போதும்🤓..!!

இப்ப தான்
கண்டுபுடிச்சேன்😉
--------------------------------------------------
2
நீதானேடி கடைக்கு போவ...என்னை ஏன் போக சொல்ற?

-லூசுங்க வாங்கினா ஜி எஸ் டி கிடையாதாம்.. நீங்க போய் வாஙகுங்க

-அடிப்பாவி... லூஸ்ல வாங்குனாத்தான் ஜி எஸ் டி கிடையாது...
------------------------------------------------------
3
மிக சுவையாக பேசக்கூடிய ஒரு பேச்சாளர் ஒருமுறை உரையாற்றும்போது....

"என் வாழ்வின் சிறந்த நாட்கள்...இன்னொருவரின் மனைவியோடு செலவழித்த நாட்களே"

பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துப்போனார்கள்

பேச்சாளர் தொடர்ந்து சொன்னது: "அது வேறு யாருமல்ல என் அம்மாதான்.....!

கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது.                

இந்த சொற்பொழிவை கேட்ட ஒருவர் இதை தன்வீட்டில் பரிசோதிக்கவிரும்பி தன் மனைவிடம் இரவு

சாப்பாட்டின்போது இப்படி சொன்னார்
.
 அன்பே நான் வாழ்க்கையில் செலவழித்த சிறந்தநாட்கள்; இன்னொருவரின் மனைவியுடன்.........  
..
கொஞ்ச நேரத்தில் அடுத்த வரியை சொல்ல அவர் நினைத்தபோது அவருக்கு நினைவு திரும்பி தான் ஒரு

மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தார்

அவரது உடல் முழுவதும் கொதிக்கும் சாம்பார் ஊற்றப்பட்டதால் ஏற்பட்ட தீக்காயத்தில் வெந்து போயிருந்ததை

புரிந்துக்கொண்டார்....
     
MORAL LESSON: Don't 'copy' others,  if you cannot 'paste' correctly!
--------------------------------------------------------
4
சிக்கலும் அதற்கான சிறந்த தீர்வும்!!!

ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார்:

பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும் கணவனே , ஏழு

ஜென்மத்துக்கும்  கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் , ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது .

என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார் .

பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள் ,

ஆனால் ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள், அதுதான் சிக்கல் . இருவரையும் திருப்தி செய்ய,

என்ன செய்ய வேண்டும் ..??

இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் ,பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் ,அவர் பெயர்

சாணக்கியர், அவரைப் பாருங்கள் , இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் .

சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் .

சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை .கடைசியாக , அந்த

கணவன்களிடமே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து ,அவர்களிடம் பேசினார்கள் .

கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர் அவரை கட்டிப்பிடித்து

வாழ்த்து கூறிவிட்டு இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறிவிட்டு இதை அந்த

பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார் .

இந்த தீர்வை , சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் கூறினார் . அதற்கு அந்த பெண்கள் சித்திரகுப்தனை

கையெடுத்து கும்பிட்டுவிட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் .

அப்படி என்னதான் தீர்வு .." அது " ..??

V
V
V
V
V
V
V
V
V
V
V
V

சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் , பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற கோரிக்கையை
ஏற்றுக்கொண்டார் , ஆனால்
ஒரு நிபந்தனை , ஏழு ஜென்மத்திற்கும் அதே மாமியார்தான் இருப்பார் , அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார் ....
---------------------------------------------------------
இந்த நான்கில் எது மிகவும் நன்றாக உள்ளது? அதைச் சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!