மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.4.14

Astrology: மலர் இல்லாத தோட்டமா, மகன் இல்லாத அன்னையா, மகனே நீ இல்லையா?

 
Astrology: மலர் இல்லாத தோட்டமா, மகன் இல்லாத அன்னையா, மகனே நீ இல்லையா?

Quiz: 50 புதிர் எண்.50

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

8.4.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி தான். அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஒரு பெண்ணிற்குத் திருமணமானவுடன் குழந்தை பிறக்க வேண்டும். அதுதான் அவளுக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சியையும், இருவீட்டாரிடமும் பரஸ்பரம் ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணும். திருமணமான அடுத்த ஆண்டே அது நிகழ வேண்டும். அல்லது குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளுக்குள்ளாவது அந்நிகழ்வு ஏற்பட வேண்டும்.

அம்மணிக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லையா? குழந்தை உண்டு என்றால் உடனே பிறந்ததா? அல்லது தாமதமாகப் பிறந்ததா? குழந்தை இல்லை என்றால், ஏன் இல்லை?

வழக்கமாக 2, 11, 4, 7 ஆம் வீடுகளை மட்டுமே அலசி வந்த உங்களுக்கு இன்று வித்தியாசமாக 5ஆம் வீட்டை அலசும் வாய்ப்பைக் கொடுத்துள்ளேன்



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.4.14

Astrology: Proof for Destiny: விதிக்கு வேண்டுமா சான்று?

 
Astrology: Proof for Destiny: விதிக்கு வேண்டுமா சான்று?

விதிக்குச் சான்று

"Everything is 'Prewritten' and nothing can be rewritten in our life. So live the best and leave the rest to The Almighty"  என்று நான் அடிக்கடி சொல்வேன்.

“எல்லாமே விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்டபடிதான் எதுவுமே நடக்கும் எனும்போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகபோகிறது. ஆகவே கவலையை விட்டொழி” என்பார் கவியரர் கண்ணதாசன்

விதியைப் பற்றி அதிரடியாக, விளக்கமாக, எளிமையாக, இரத்தினச் சுருக்கமாக இரண்டு இரண்டு வரிகளில் எழுதிவைத்து விட்டுப்போனவர் திருவள்ளுவர். திருக்குறளின் 38ஆவது அதிகாரத்தில் பத்துக் குறள்கள் உள்ளன. படித்துப் பாருங்கள். மனம் தெளிவடையும்

“என்ன செய்யும் விதி?”
“விதி என்று ஒன்று உண்டா?”

என்று கேட்பவர்களுக்கெல்லாம், நான் வள்ளுவரின் இந்தக் குறளைத்தான் அடையாளம் காட்டுவேன்:

  “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
     சூழினுந் தான்முந் நுறும்”


இந்தக் குறளுக்கு திரு மு.வரதராசனார் அவர்கள் எழுதிய விளக்க உரை

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் அது தானே முன் வந்து நிற்கும்.

பாதிரியார் ஜி.யு.போப் அவர்கள், இந்தக் குறளை மொழிமாற்றம் செய்யும்போது இப்படி எழுதினார்:

Nothing is stronger than destiny.If you try to forfeit destiny, It won't allow and it will come in your way again and again
-----------------------------------------------------------------------------
“அப்போது மனித முயற்சி என்று ஒன்றும் கிடையாதா? முயற்சிகளுக்குப் பலனே இருக்காதா?”

  “நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்று விதிக்கப் பட்டிருந்தால், மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்துவாய். ஆனால்  மாட்டின் எண்ணிக்கையை இறைவன் நிர்ணயிப்பது இல்லை. அது நான்கு மாடுகளா அல்லது நாற்பது மாடுகளா அல்லது நானூறு மாடுகளா என்பது உன் கையில்தான் இருக்கிறது.  அங்கேதான் நீ சொல்லும் அந்த முயற்சி வேலை செய்யும்!!!!!”
-----------------------------------------------------------------------------
இன்றையப் பாடம் பாடல் வடிவில் உள்ளது. இரவல் வாங்கியது. எழுதியவர் ஒரு மாபெரும் கவிஞர் கவியரசர் கண்ணதாசன்.
----------------------------------------------------------------------------
ஆறிலே பிள்ளைகள் ஆடலும் பாடலும்
    ஆனந்தக் கூத்துமாய் வாழும்
ஆறிரண் டானபின் பள்ளியும் பாடமும்
    ஆரவா ரங்களும் சூழும்
ஏறுமோர் வயதுதான் இருபதை எட்டினால்
    எண்ணிலாக் காதலில் ஆழும்
தாறுமா றானதோர் வாழ்க்கை வாழ்ந்தபின்
    தன்நினை வெண்ணியே வாடும்!

காலமாற் றங்களால் கணிதமாற் றங்களும்
    கவனமாற் றங்களும் நேரும்
கோலமாற் றம்வரும் குணத்தில்மாற் றம்வரும்
    கொள்கைமாற் றம்வந்து சேரும்
ஞாலமே பெரிதாய் சிறியதாய் மோசமாய்
    நல்லதாய்க் கெட்டதாய்த் தோன்றும்
வாலிலாக் குரங்குபோல் வாழ்ந்தநாள் வாழ்ந்தபின்
    வாழ்ந்ததை எண்ணியே வாடும்!

விதையிலே சிறியதாய் வளர்ந்ததும் பெரியதாய்
    விண்ணுயர் மரங்களைக் கண்டோம்
கதையிலே மரங்களின் வாழ்விலும் பல்வகை
    கவலைகள் உண்டெனக் கண்டோம்
முதலிலே பசுமையாய் முடிவிலே பட்டதாய்
    முழுமோர் விறகுமாய் மாறி
சிதையிலே அமர்ந்திடும் மரங்களும் மனிதனும்
    தேவனின் லீலைகள் அலவோ!

எண்ணுவோம் தேடுவோம் எண்ணுதல் தேடுதல்
    என்றும்நம் உரிமைகள் எனவே
நண்ணுமோர் நன்மைகள் தீமைகள் யாவையும்
    நாயகன் செய்கைவே றில்லையே
உண்ணுதல் ஈஸ்வரன் உறங்குதல் ஈஸ்வரன்
    உயர்வதும் தாழ்வதும் அவனே
விண்ணுயர் மாளிகைச் செல்வனும் வாழ்க்கையில்
    வேறென்ன செய்வதோ இதிலே!

தோன்றுவான் மானிடன் தோற்றிலான் நாயகன்
    தொடர்புண்டாம் இவைஇவை இடையே
ஊன்றுகோல் மானிடம் உள்விழும் பள்ளமே
    உயர்ந்ததோர் நாயகன் கதையே
சான்றுகேட் பார்க்கெலாம் ஒன்றைநான் காட்டுவேன்
    சாவினை வென்றவர் இலையே
ஈன்றவள் ஒருத்திபோல் எடுப்பவன் ஒருவனாம்
    இதன்பெயர் ஆண்டவன் விதியே!

           -கண்ணதாசன்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.4.14

Devotional: திருக்கைவேல் போற்றி! போற்றி!

 
Devotional:  திருக்கைவேல் போற்றி! போற்றி!

பக்தி மலர்

மூவிரு முகங்கள் போற்றி!
    முகம்பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
    ஈராறுதோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள்
    மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
    திருக்கைவேல் போற்றி! போற்றி!

           - கச்சியப்ப சிவாச்சாரியார் 
 ========================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!