Astrology: என் கேள்விக்கென்ன பதில்? உன் பார்வைக்கென்ன பொருள்?
Quiz No.33: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
தொடர் - பகுதி முப்பத்திமூன்று.
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!
இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்! (ஆண்டின் கடைசி நாள். அதனால் உங்களை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை)
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் ஒரு நடுத்தர வயது ஆண்மகனின் ஜாதகம். ஒரே ஒரு கேள்விதான்: ஜாதகர் படித்தவரா? அல்லது படிக்காதவரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? படிக்காதவர் என்றால் எதோடு படிப்பை விட்டவர்? ஜாதகப்படி என்ன காரணம்? அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.
அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================




