Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 25
ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 25
இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானது தான். அதை மனதில் வையுங்கள்.
நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?
மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?
தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!!
-----------------------------------------------------
24. மூலம்
இது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் கேதுவிற்கு உரிய நட்சத்திரம்!
இந்த நட்சத்திரத்திற்கு
1. பூசம்
2. ஹஸ்தம்
3. சித்திரை
4. சுவாதி
5. விசாகம்
6. திருவோணம்
7. சதயம்
ஆகிய 7 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். தனுசு ராசிக்குக் கடகம் எட்டாம் வீடு. கடகத்திற்கு தனுசு ஆறாம் வீடு.. பூச நட்சத்திரம் கடகத்திற்கு உரியது. ஆகவே அதை விலக்கி விடுவது நல்லது.
தனுசு ராசிக்கு விருச்சிகம் 12ம் வீடு. விருச்சிகத்திற்கு இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே விருச்சிக ராசிக்கு உரிய அனுஷ நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.
ஆக மொத்தத்தில் 5 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
அஸ்விணி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய 6 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் மூலம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருத்தம் கிடையாது!.
உத்திராட நட்சத்திரம் பொருந்தாது.
பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், உத்திரம், அனுஷம், பூராடம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 13 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவற்றையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?
வேண்டாம். பார்த்து என்ன ஆகிறப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும். நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




