Astrology எப்போதுடா என் கஷ்டம் தீரும்?
அலசல் பாடம்
எனது கஷ்டங்கள் எப்பொது தீரும்? என்னும் தலைப்பில் முன் பாடங்களில் சூரியன், மற்றும் சந்திரனை வைத்துப் பலன்களை அலசுவதைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று குருவை வைத்து எப்படி அலசுவது என்று பார்ப்போம்!
குருதான் தனகாரகன்.Authority for finance (குழந்தை பாக்கியத்திற்குக் காரகனும் கூட)
இன்று பல பிரச்சினைகளுக்குக் காரணம் பணமின்மை அல்லது பணப் பற்றாக்குறை!
இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில், தேவைகளும் அதிகமாகிவிட்டன. செலவுகளும் அதிகமாகிவிட்டன. விலவாசிகளும் கட்டுப்படுத்த யாரும் இல்லாமல் தன்னிச்சையாக ஏறிக்கொண்டிருக்கிறது!
பணப்பற்றாக்குறை இல்லாதவரே இல்லை என்று சொல்லலாம்.
சம்பளக்காரனுக்கும் பணத்தேவை உள்ளது. செல்வந்தனுக்கும் பணத்தேவை உள்ளது. சைபர்களின் எண்ணிக்கை தான் வித்தியாசம். பத்தாயிரம் தேவை உள்ளவனும் இருக்கிறான். பத்து லட்சம் தேவை உள்ளவனும் இருக்கிறான்.
ஆசைப்படாதே. இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று வயதானவர்களுக்கு வேண்டுமென்றால் சமாதானம் சொல்லலாம். அதே சமாதானம் இளைஞர்களிடமும், நடுத்தர வயதுக்காரர்களிடமும் எடுபடாது!
_________________________________________________________________________
பணமின்மையில் இரண்டு விதம் உள்ளது.
ஒன்று ஏழ்மை அல்லது வறுமை! இன்னொன்று தற்காலிகப் பணமின்மை.
ஜாதகப்படி, இரண்டாம் வீடும், பதினொன்றம் வீடும் அடிபட்டுப் போயிருந்தால் அல்லது கெட்டுப்போய் இருந்தால், வாழ்க்கை முழுவதும் பணக்கஷ்டம் இருக்கும். submissive level என்பார்களே -
அதாவது கைக்கும் வாய்க்குமான நிலைமை என்பார்களே அந்த நிலையில் வாழ்க்கை நடத்த வேண்டியதிருக்கும். அதற்கு ஜாதகத்தை அலசி எப்போது பணம் வரும் என்று பார்க்கத் தேவையில்லை.
எப்போதுமே submissive level தான்!
தற்காலிக நிலைமையை இப்பொது அலசுவோம்!
1. ஜாதகத்தில் மாந்தி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியினுடைய தசா அல்லது புத்தி நடந்தால் பணக் கஷ்டம் உண்டாகும். கொடுத்த பணம் வராது. தொழிலில் அல்லது வியாபாரத்தில் சிக்கல்கள் உண்டாகி, பணம் எங்காவது முடங்கிப்போய்விடும்.
2. ஆறாம் அதிபதியின் திசை நடந்தாலும் அதே நிலைமைதான். குறிப்பாக வைத்தியச் செலவு, நம்பிக்கைத் துரோகம் போன்ற செயல்களால், நமது பணம் முடங்கிவிடும் அபாயம் உண்டாகும்
3. பன்னிரெண்டாம் அதிபதியின் திசை நடந்தால், எதிர்பாராத செலவுகள் உண்டாகி பணப் பற்றாக்குறை ஏற்படும். பங்குச் சந்தைபோன்ற இடங்களில் பணத்தை இழக்க நேரிடும். பொதுவாக விரையத்தால் பணத்தை இழக்க நேரிடும்.
4. எட்டாம் அதிபதியின் திசை நடந்தாலும் அதே நிலைமைதான்.
5. நடப்பு தசா அல்லது புத்தி நாதன் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருந்தாலும் தற்காலிகப் பணக் கஷ்டங்கள் உண்டாகும். அந்தக் குறிபிட்ட திசை முடிந்தவுடன் அது நிவர்த்தியாகும்.
6. அதே போல தீய கிரகங்களான, சனி, ராகு அல்லது கேது ஆகியவற்றின் திசை அல்லது புத்திகளிலும் பணக் கஷ்டங்கள் உண்டாகும். (அக்கிரகங்கள், உச்சம், கேந்திர, திரிகோணங்களில் இருந்தால், விதிவிலக்காகும்)
------------------------------------------------------------------------------------------------------------
சரி எப்போது பணம் அதுவாக வரும்? (That is free flow of money)
1. 2ஆம் அதிபதியின் திசை, பதினொன்றாம் அதிபதியின் திசை, பாக்கிய அதிபதியின் திசைகளில் பணம் அபரிதமாக வரும் (ஜாதகத்தில் அவர்கள், உச்சம், கேந்திர திரிகோணங்களில் இருக்க வேண்டும்)
2.. கோச்சாரக்குரு, இரண்டு, ஐந்து, ஏழு, பதினொன்றாம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பணம் வரும்
3. கோச்சார சனி, 30 பரல்களுக்கு மேல் உள்ள வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பணம் வரும்
------------------------------------------------------------------------------------------------------------
பணம் எப்போதும் ஒரே மாதிரியாக வந்து கோண்டிருக்காது. புத்திசாலித்தனமாக அது வரும் காலத்தில் அதைப் பிடித்துப் பத்திரப் படுத்திவைத்துக் கொள்ள வேண்டும்.
மழைகாலத்தில் குளத்தை நிரப்பி வைத்தால்தான் வெய்யில் காலத்தில் குடிக்கத் தண்ணீர்கிடைக்கும். அதுபோலத் தான் இதுவும்.
இது மேல்நிலைப் பாடங்களில் ஒன்று. அனைவருக்கும் (மற்றவர்களுக்கும்) பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டு உள்ளேன்
வாத்தியார் வெளியூர்ப் பயணம். அதனால் வகுப்பறைக்கு 9.10.2012 செவ்வாயன்று விடுமுறை. அடுத்த வகுப்பு புதன் கிழமை ( 10.10.2012) யன்று நடைபெறும். கிடைக்கும் நேரத்தில் பழைய பாடங்களைத் திரும்பப் படியுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++==





