மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.6.10

வீட்டிற்குள் எப்படி வந்தார்?

====================================================
வீட்டிற்குள் எப்படி வந்தார்?

கோவை விஜயா பதிப்பகத்தில் புத்தகம் வாங்கியபோது அதை ஒரு உறையில் (Craft Paper cover) வைத்துக் கொடுத்தார்கள். அந்த உறையில் அவர்கள் பதிப்பக முகவரிக்கு மேல் இருந்த இடத்தை வெற்றிடமாக விடாமல், சிந்தனைக்கு
என்று தலைப்பிட்டுக் கொடுத்திருந்த வரிகளைக் கீழே கொடுத்துளேன்:

அன்னையும் பிதாவும்
முன்னெறி தெய்வமாம்
முதியோர் இல்லத்தில்
- பரவை பாரதி


திண்ணையில் வசித்த தாத்தா
வீட்டுக்குள் - வந்தார்
புகைப்படமாக!
- சேது மாதவன்

--------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

4.6.10

பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்!

==================================================
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம்!

புகழ்பெற்ற பாடல்கள் - அதாவது இறைவனின் புகழைச் சொல்லும் பாடல்களின் வரிசையில் அடுத்த பாடலை இன்று பதிவாக இடுவதில் மகிழ்வு கொள்கிறேன்!
----------------------------------------------------------------------------------
குன்னக்குடி வைத்யநாதன் அவர்கள், தன்னுடைய தனிப்பாடல்கள் ஆல்பத்திற்காக இசையமைத்த பாடல் இது. பாடலைக் கேட்ட இயக்குனர் திரு. ஏபி. நாகராஜன், குன்னக்குடியாரிடம் அனுமதிபெற்றுத் தன்னுடைய கந்தன் கருணை படத்தில் இதை சேர்த்துப் பாடலுக்கும் பெருமை சேர்த்ததோடு, தன்னுடைய படத்திற்கும் பெருமை சேர்த்தார்.
-------------------------------------------------------------------------------

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்
(திருப்பரங்குன்றத்தில்)

பழநியிலே இருக்கும் கந்தப் பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் -
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
(திருப்பரங்குன்றத்தில்)

சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
(திருப்பரங்குன்றத்தில்)


வரிகள்: பூவை செங்குட்டுவன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி-பி.சுசீலா
படம்: கந்தன் கருணை
-----------------------------------------------------------------------------
வாத்தியார் 3 தினங்கள் வெளியூர்ப் பயணம். ஆகவே வகுப்பறைக்கு 3 நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு 8.6.2010 அன்று நடைபெறும். அனைவரும் பழைய பாடங்களைப் படியுங்கள். அதாவது ஒருமுறை புரட்டிப்பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

3.6.10

எதிலும் அவன் குரலே!

==================================================
எதிலும் அவன் குரலே!

கவியரசர் கண்ணதாசன்: கண்ணனைப் பாடியது (1)

நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரர் வீசப்படுகின்ற அத்தனை பந்துகளையுமே சிறப்பாக எதிர்கொண்டு ஆடுவார். பார்ப்பதற்கே ஆனந்தமாக இருக்கும். சச்சின் டெண்டூல்கர், வீரேன்ந்திர சேவாக், பிரையன் லாரா போன்ற முன்னனி வீரர்களுக்கெல்லாம் எண்ணிக்கையில்லாத அளவு ஏராளமான ரசிகர்கள் இருப்பதற்கு அவர்களின் சிறப்பான ஆட்டம்தான் காரணம்.

அதுபோல சிறந்த கவிஞர்களும் கிடைக்கின்ற சூழ்நிலையையும், அல்லது கொடுக்கப்படுகின்ற சூழ்நிலைக்கும் தகுந்தமாதிரி அற்புதமாகப் பாடல் எழுதி அசத்திவிடுவார்கள்.

கண்ணனின் பிள்ளைப் பிராயத்தை வர்ணித்துப் பாடல் எழுதிய பாரதியார்,

"தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை

தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்"

என்று அந்தப் பாடலை அனாசயமாக வாசகனின் மனதிலுள்ள பவுண்டரி லைனுக்கு அனுப்பி வைத்தார் என்றால் அதே கண்ணனை வேறு ஒரு பாடலில், கண்ணன் மேல் காதல் கொண்ட ஒரு இளம்பெண் பாடுவதாக எழுதும்போது,

"தூண்டிற் புழுவினைப் போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!

கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்ட தடீ!"

என்று எழுதி ஒரு சிக்ஸராக அடித்து வைத்தார்.

இதுபோல பலபாடல்களை உதரணமாகச் சொல்லலாம்.

கவியரசர் கண்ணதாசனும் அப்படித்தான் பல பாடல்களைப் பவுண்டரியாகவும், சிக்ஸராகவும் அடித்து, விடாது அவரைக் கவனிக்க வைத்ததோடு, ஒரு சிம்மாசனம் போட்டு நம் மனதிலும் உட்கார்ந்து கொண்டுவிட்டார்.

"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை!

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்!

பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை - அவள்
கவிஞன் ஆக்கினாள் என்னை!"

என்ரு ஒரு பெண்ணை வர்ணிப்பதற்கே இத்தனை ஒப்புவமைகளைச் சொன்னவர், மாயக்கண்ணனைப் பற்றி பாட்டெழுதும் வாய்ப்புக் கிடைத்தால் சும்மா விடுவாரா?

ஒரு பாட்டைப் பாருங்கள்
---------------------------------------------
கங்கைக் கரை தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
கண்ணன் நடுவினிலே

காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓஓஓஓஓஓ
எதிலும் அவன் குரலே!

கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்
கண்டவுடன் நாட்டம் கொண்டேன்
கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்
கண்டவுடன் நாட்டம் கொண்டேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாக நின்றேன்
கண் மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாக நின்றேன்
என்ன நினைந்தேனோ தன்னை மறந்தேனோ
கண்ணீர் பெருகியதே
ஓஓஓஓ
கண்ணீர் பெருகியதே!

கங்கைக் கரை தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
கண்ணன் நடுவினிலே

கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்
கண் திறந்து பார்த்தேன்
கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே
ஓஓஓஓஓஓஓ
கண்ணீர் பெருகியதே!

அன்று வந்த கண்ணன் இன்று வரவில்லை
என்றோ அவன் வருவான்
ஓஓஓஓஓஓஓஓஓ
என்றோ அவன் வருவான்

கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில்
கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ
ஓஓஓஓ
காற்றில் மறைவேனோ

நாடி வரும் கண்ணன் கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்
ஓஓஓஓ
நானே தவழ்ந்திருப்பேன்

கண்ணா....ஆஆஆஆஆஆஆஆஆ
கண்ணா.... ஆஆஆஆஆஆஆஆஆஆ
கண்ணா.... ஆஆஆஆஆஆஆஆ

திரைப் படம்: வானம்பாடி
பாடியவர்: பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: தேவிகா

'காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே' என்று எழுதியதோடு, கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை, கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை என்று முத்தாய்ப்பாகவும் எழுதினார் பாருங்கள் அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!

(கண்ணனின் பெருமைகள் தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!