மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.9.09

வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்!

வெற்றி என்ற சொல்லிற்கு ஒரு வசீகரம் உண்டு.
வெற்றியை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
எல்லோராலும் விரும்பப்படுவதால் மட்டுமல்ல, வெற்றிக்கு
ஒரு உள்ளடங்கிய பயன் இருப்பதால் அதற்கு ஒரு வசீகரிக்கும்
தன்மை வந்துவிடுகிறது.

அது என்ன உள்ளடங்கிய பயன்?

எடுத்து செய்யும் செயல்களுக்குக் கிடைக்கும் சாதகமான முடிவுதான் உள்ளடங்கிய பயன்!

எடுத்த செயல் எல்லாமே 'வெற்றி பெறுமா?' என்றால் அது யோசிக்க வேண்டிய விஷயம்!

ஆனால் யோசிப்பதற்கே இடமில்லாமல் எடுத்த செயலைத் தன்முனைப்போடு செய்து வெற்றி பெற்றால், ஒரு உத்வேகம் ஏற்பட்டு அடுத்தடுத்து நாம் பல வெற்றிகளைக் காண முடியும். ஆகவே ஒரு வெற்றி, அடுத்த வெற்றிக்கு வழி வகுக்கும்.

சிலர் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள். சிலர் பெறுவதில்லை!
என்ன காரணம்?

முன் பத்தியில் சொன்ன அந்த உத்வேகம்தான் காரணம். ஆங்கிலத்தில் அதைக் killing instinct என்பார்கள்.

வெற்றி பல வடிவங்களைக் கொண்டது. பல அர்த்தங்களைக் கொண்டது. வாழ்க்கையில் தேடுவது ஒருவகை வெற்றி. வியாபாரத்தில் தேடுவது
ஒருவகை வெற்றி. விளையாட்டு வீரனின் வெற்றி ஒரு வகை என்றால், இசைக்கலைஞன் தேடுவது ஒருவகை வெற்றி.

ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் தேடுவது தினசரி வெற்றி. ஆமாம் அவர் தினசரி செய்யும் அறுவை சிகிச்சை வெற்றி பெற்றால் தானே சிகிச்சைக்கு வந்தவன் மீண்டும் நடமாட முடியும்?

ஆகவே எப்படிப்பட்ட வெற்றி என்பது அவரவர் தேடலைப் பொறுத்தது!

அதுபோல வெற்றியின் தன்மையும் வித்தியாசப்படும்.

பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவன் தேர்வு பெற்றால் அது செயல்.

அவனே நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினால் அது வெற்றி (success)

மாநில அளவில் முதல்மாணவனாக அவன் தேறினால் அது மிகப் பெரிய
வெற்றி! (Great Success)

'கரையை விட்டுப் பயணிக்காமல் நீங்கள் சமுத்திரங்களைப் பார்த்து வரமுடியாது' என்ற சொல்லடை உண்டு. அதுபோல இருக்கும் இடத்தை
விட்டு எழுந்து சிரமம் பார்க்காமல் செயல் பட்டால்தான் வெற்றியை
அடைய முடியும். எதுவும் நம்மைத் தேடி வராது. நாம் தான் தேடிப்போக
வேண்டும்

நம்மைத் தேடி எதுவுமே வராதா? சோம்பி இருந்தால் நம்மைத் தேடி
ஒன்றல்ல இரண்டு வரும். அவற்றின் பெயர்: நோய் மற்றும் கடன்

வெற்றியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா? வெகு இயல்பாகச் சொன்னால், சரியான நேரத்தில், சரியான வழியில், சரியான செயலைச் செய்வதுதான் வெற்றி!

Success is simple. Do what's right, the right way, at the right time.
- Arnold H. Glasow


உட்கார்ந்து யோசித்தோமென்றால், சரியான நேரத்தில் சரியான செயலைச் செய்யாததால் வாழ்க்கையில் எத்தனை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்ற எண்ணிக்கை தெரியவரும்.

வெற்றி என்பது போய்ச் சேர வேண்டிய இடமல்ல: வெற்றி என்பது பயணம் ஆகும். (Success is not a destination it is a journey)

கடவுள் நம் கண்முன்னே தோன்றி (ஒரு பேச்சுக்குத்தான்) "உனக்கு ஒரு வரம் தருகிறேன் - என்ன வேண்டும் கேள்" என்றால் என்ன கேட்போம்?

ஒவ்வொருவரும் ஒருவிதமாகக் கேட்போம்.

முருகப்பெருமானின் தீவிர பக்தரான வீரபாகுவிடம், முருகன் நேரில் காட்சி கொடுத்துக் கேட்ட போது, வீரபாகு சொன்னாராம்: "அப்பனே! என் வாழ்நாள் முழுவதும் உன்னைத் துதிக்கின்ற பாக்கியம் வேண்டும்"

"அதைத் தந்தேன்; இன்னொன்றும் தருகிறேன், அடுத்ததைக் கேள்" என்று முருகப்பெருமான் சொன்னபோது, வீரபாகு அடுத்ததாக என்ன கேட்டார் தெரியுமா?

"உன்னைத் துதிக்கின்ற பாக்கியம் தவிர வேறு சிந்தனை இல்லாத மனம் வேண்டும்!" என்றாராம்.

நாம் அப்படிக் கேட்டிருப்போமா என்றால் - நிச்சயம் கேட்டிருக்க மாட்டோம். இன்றைய 13% பணவீக்கத்திலும், விலவாசி ஏற்றத்திலும் இயல்பை மறந்து
வரம் கேட்பது சாத்தியமில்லாதது.

அரசு சொல்லும் பணவீக்கம் 13%. ஆனால் உண்மையில் 20% இருக்கும்
போல் உள்ளது!

சரி, விஷயத்திற்கு வருகிறேன். இக்காலத்து அன்பர் ஒருவரின் கண்முன்னே இறைவன் தோன்றி, அதே போன்று சொல்ல, அவர் என்ன வரம் கேட்டார் தெரியுமா?

"ஆண்டவனே, நான் என்னுடைய நூறாவது வயதில், அழகான என் மனைவியோடு, என்னுடைய ஆயிரம் ஏக்கர் பண்ணைத் தோட்டத்தில்
உள்ள, பத்து மாடி மாளிகையில், சுயமாக படிகளில் கடகட வென்று
நானே ஏறி உச்சி மாடத்திற்குச் சென்று, கண்ணாடி அணியாத என்
கண்களால், கீழே தோட்டத்தில் அமர்ந்து தங்கத்தட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் என்னுடைய கொள்ளுப் பேரனை,
மனங்குளிரப் பார்த்து மகிழும் பாக்கியம் வேண்டும்."

ஜாதகத்தின் 36 பாக்கியங்களும் இதில் அடங்கியிருக்கும் படியாக .
அப்படியொரு வரனைக் கேட்டார் அந்த அன்பர். அதைக்கேட்கும் போது அவருக்கு வயது இருபத்தைந்துதான்.

ஜாதகத்துடன் ஒரு கேள்வி கேளுங்கள் என்று வாத்தியார் நிபந்தனை
விதித்தால், நீங்கள் ஒரு கேள்விக்குள் 36 கேள்விகளை உள்ளடக்கி
சிலர் கேட்பார்களே அதுபோல இது!

இன்றைய மனிதர்களின் தேவைகளும், ஆசைகளும் நாளுக்கு நாள்
விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

ஆசைப்படுவதை விட்டு விட்டு, தேவைப்படும் அளவிற்கு வாழ்க்கையில் வளமாக இருக்க வேண்டும் என்றால் எடுத்துச் செய்யும் செயல்களின்
வெற்றி முக்கியம்.

தொடர் வெற்றியைப் பெறுவதற்கு நம்க்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்.

1. எதையும் விடாது செய்து முடிக்கும் ஆர்வமுள்ள மனது
2. ஆரோக்கியமான உடல் நிலை
3. அலையக்கூடிய தெம்பு
4. எவரிடமும் அன்பு பாராட்டக்கூடிய மனப்பான்மை
5. தட்டுப்பாடு இன்றி தேவைக்குச் செலவழிக்கும் அளவிற்குக் கையில் காசு
6. அவன் செய்கிறான், நம்மால் ஏன் செய்யமுடியாது, என்று நம்மையே நாம் ஊக்குவிக்கக்கூடிய உணர்வு அல்லது தன்னம்பிக்கை.

இந்த ஆறு தகுதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு நீங்கள் செயல் பட்டால். நிச்சயம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றிதான்.

பிறகு வெற்றி மீது வெற்றி வந்து என்னை மட்டுமல்ல, உங்களை மட்டுமல்ல, நம் எல்லோரையும் வந்து சேரும்

வெற்றி என்பது ஒரு அற்புதமான சொல்! அதற்குப் பன்முகங்கள் உண்டு. என்னென்ன முகங்கள் உள்ளன என்பதை பின் ஒரு சமயம் விவரமாகப் பார்ப்போம்.

அன்புடன்
வாத்தியார்

Lebel:
1.மனவளக் கட்டுரை
2.ரம்ஜான் கொண்டாட்ட சீரீஸ்! ==============================================






வாழ்க வளமுடன்!

18.9.09

நகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்

ரம்ஜான் கொண்டாட்ட ஸ்பெஷல்!
மலேசிய மாணவர் ஆனந்திற்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

கண்ணாளன் என்றதும் தவறான முடிவிற்குப் போய்விடாதீர்கள்!
ஒரு அழகிய இளம் மனைவி, வெளியூர் சென்றிருக்கும் தன் கணவனுக்கு
எழுதிய மின்னஞ்சலின் தமிழாக்கம் இது.
------------------------------------------------------------------
கண்ணாளா,
எனதன்பே,
என் ஆரூயிரே!

நீங்கள் இல்லாமல் இந்த இரண்டு நாட்களில் நான் எதெதை இழுந்து
தவிக்கிறேன் - தெரியுமா?

I am missing a lot!!!!!

வானம் வானமாகத் தெரியவில்லை!
நிலவும் எனக்குச் சுடுகிறது!
மலர்கள் எனக்கு மயக்கத்தைத் தரவில்லை!
உணவைக் கண்டால் வெறுப்பாக இருக்கிறது
பஞ்சனையில் படுத்தாலும் தூக்கம் வரவில்லை

எப்போது நீங்கள் திரும்பி வருவீர்கள்?
உங்கள் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறேன்.

நீங்கள் திரும்பிவந்து என்னை நேரில் பார்ப்பதற்குள், எனக்கு நேர்ந்த
ஒரு சிறு விபத்தை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

நமது பிக்கப் வண்டியில் (pickup truck) வெளியே சென்றுவிட்டுத்
திரும்பும்போது விபத்து நடந்து விட்டது.

அன்பே, மனம் பதறாதீர்கள்!

அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை! எனக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆகவே என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.

சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.
வீட்டில் உள்ள ஓடு பாதையில் (driveway) வாகனத்தைச் செலுத்தும்போது, பிரேக்கை மிதிப்பதற்குப் பதிலாக, தவறுதலாக, ஆக்க்ஸிலேட்டரை
ஓங்கி மிதித்து விட்டேன்.

நமது கார் ஷெட்டின் கதவில் சிறிது ஒடுக்கு விழுந்து விட்டது. ஆனால்
எனது நல்ல நேரம், நான் ஓட்டிக்கொண்டு வந்த வண்டி, உள்ளே நின்று கொண்டிருந்த உங்கள் காரின் மேல் தாவிக் குதித்ததோடு, தானாக
நின்று விட்டது.

நடந்த நிகழ்ச்சிகளுக்கு என்னை மன்னியுங்கள்.

யாருக்கும் கிடைக்காத பொக்கிஷமாக, எனக்குக் கிடைத்த நீங்கள், உங்கள்
அன்புக்குரியவளை மன்னித்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்!

உங்களின் இனிய உள்ளத்தை நான் எவ்வளவு நேசிக்கிறேன், உங்களுக்காக
எத்தனை தூரம் நான் உருகுவேன் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

உங்களுக்காக, படம் ஒன்றை அனுப்பியுள்ளேன்.

உங்களைக் கட்டித் தழுவ எனது கரங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இல்லை துடித்துக் கொண்டிருக்கின்றன!

இப்படிக்கு,
அன்பே உருவான உங்கள் மனைவி!
-----------------------------------------------------------------
படம் கிழே உள்ளது.
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

துவக்கமும், முடிவும்!


===========================================

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
துவக்கமும், முடிவும்!

கடந்த 17 நாட்களாக தொடர்ந்து ஜோதிடப்பாடங்கள்
மொத்த இடுகைகள் 14
மொத்த பின்னூட்டங்கள் சுமார் 1,000
இப்படியே போய்க் கொண்டிருந்தால், மனம் மற்றும் உடம்பின்
கெமிஸ்ட்ரி மாறிவிடலாம்.
அதைத்தவிர்ப்பதற்காக இன்று வேறு பாடம்
-------------------------------------------------------------
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை’ அனைவரும் அறிவோம்.
தொலைபேசியைக் கண்டுபிடித்த மேதை அவர்.
ஆனால் அவர் தன் குடும்பத்தினருடன் ஒருமுறைகூடத் தொலைபேசியில் பேசியதில்லை.
அவருடைய மனைவியும், மகளும் காது கேளாதவர்கள்.
அதுதான் வாழ்க்கை!
மற்றவர்களுக்காக வாழுங்கள்!


பற்றுடன் (attachment) இருப்பதுதான் மோசமான நிலை.
அதை இழக்க நேர்கையில் மனம் காயப்படும்.
பற்றில்லாமல் இருங்கள். அனைத்தையும் அறியும் வாய்ப்புக் கிடைக்கும்
அதை இழக்கும்போது (அந்தப் பற்றில்லாத நிலையை), எந்த இழப்பும் இல்லை!


உங்கள் முகத்திற்கு நேராக இனிக்கப் பேசும் மக்களை வைத்தது
உங்கள் வாழ்க்கையல்ல!
உங்களுக்குப் பின்னால், உண்மையான மனதோடு இருப்பவர்களை
வைத்துத்தான் உங்கள் வாழ்க்கை!


முட்டை வெளியில் இருந்து உடைபடும்போது, ஒரு ஜீவனின் வாழ்க்கை முடிவிற்கு வருகிறது.
அதே முட்டை, உள்புறமிருந்து உடைபடும்போது, ஒரு ஜீவனின் வாழ்க்கை துவங்குகிறது!.
எல்லா பெரிய செயல்களும் உள்ளிருந்திருந்துதான் துவக்கத்தைப் பெறும்

காலை வணக்கத்துடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!